Skip to main content

விடை 3265

இன்று (02/04/2018) காலை வெளியான வெடி
மெழுகு உள்ளே வர மஞ்சளாய் மலரும் மரம் (4)
இதற்கான விடை:  பூவரசு = பூசு + வர ; பூசு = மெழுகு (வினைச் சொல்லாய்)

அரசமரத்தின் இலைகளைபோன்ற அமைப்புடன் ஆனால் அழகான மஞ்சள் நிறப் பூக்கள் கொண்டதால் இம்மரம் பூவரசு என்று சொல்லப்படுகிறது.
சிறுவயதில் கிராமத்திற்கு விடுமுறைகளில் சித்தப்பா வீட்டிற்குச் செல்லும்போதெல்லாம் கொல்லைப் பக்கத்தில் இதன் இலைகளைப் பறித்து ஊதல் செய்து விளையாடுவோம்.

விசேஷம் வந்தால் அக்கா, அண்ணி எல்லாம் எங்களையெல்லாம் கூப்பிட்டு  தம்பிகளா நெறைய பூவரச எலை பறிச்சிட்டு வாங்கப்பா கொழுக்கட்டை சுடுவோம் என்று சொல்லுவோர்கள். அதிக உயரமில்லாத மரமாதலால்  எளிதில் பறித்துவிடுவோம். ஒவ்வொரு இலையிலும் எள்ளு பூரணமும் பருப்பு பூரணமும் வைத்து மடித்து இட்லிப்பானையில் வேக வைத்து கொழுக்கட்டையை சுடுவார்கள். பச்சையான இலை வெந்தபின் திட்டுதிட்டாய் சாம்பல் நிறமாகி  அதைப் பிரித்து நாங்களும் ஆவலாய் இலை வாசனை கொண்ட கொழுக்கட்டையைச் சாப்பிடுவோம்.

 நான் பணிபுரியும் பல்கலைக் கழக வளாகத்தில் பூவரச மரம்.

பின்வரும் காணொளியில் முதல் 10-12 வினாடிகள் அழகான நிறத்தில் பார்க்கலாம்:  https://www.youtube.com/watch?v=3FQWrc80nL0

மற்ற பூக்களைவிட இதில் வித்தியாசமான குணம் ஒன்று. வாடும்போது அதன் மஞ்சள் தன்மை குறைந்து சிவக்க ஆரம்பித்து இன்னமும் அழகாகி  சில நாட்கள் மரத்தில் இருந்த பின்தான் உதிரும்! 

இப்படிப்பட்டப்  பூவரசை வியந்து ஓர் அறுசீர் ஆசிரிய விருத்தம் (டக்கு டக்கு கடிகாரம் என்ற அழ. வள்ளியப்பாவின் பாப்பாப் பாட்டு நினைவிருக்கிறதா? அதே சந்தத்தில்)

புசித்து மகிழுங் கொழுக்கட்டைப்
        பூரணந் தாங்கத் தந்திடுவாய்
பசிய இலைகள் நடுவினிலே
        பார்த்துச் சிரிக்கும் மஞ்சட்பூ
வசியம் செய்து  கவர்ந்திடுமே
        வாடிய போதும் பொலிவுறுமே
ஒசிந்து கவிழ்ந்து செவ்விதழால்
        உலகை மயக்கும் வனப்புடையாய்




( வாடிய பூவரசம்பூ! இந்த படம் வலையில் சுட்டது).







Comments

Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (37):

1) 6:02:30 எஸ்.பார்த்தசாரதி
2) 6:02:42 மீனாக்ஷி கணபதி
3) 6:04:29 ராமராவ்
4) 6:06:00 ரமணி பாலகிருஷ்ணன்
5) 6:08:54 சாந்திநாராயணன்
6) 6:13:17 இரா.செகு
7) 6:13:54 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
8) 6:16:43 சுபா ஸ்ரீநிவாசன்
9) 6:17:12 கி. பாலசுப்ரமணியன்
10) 6:17:50 சங்கரசுப்பிரமணியன்
11) 6:23:47 வி ன் கிருஷ்ணன்
12) 6:25:02 ரவி சுப்ரமணியன்
13) 6:28:30 மு.க.இராகவன்.
14) 6:33:22 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
15) 6:36:00 லக்ஷ்மி ஷங்கர்
16) 6:44:43 லக்ஷ்மி ஷங்கர்
17) 6:45:07 பானுமதி
18) 6:45:51 முத்துசுப்ரமண்யம்
19) 6:50:52 கு.கனகசபாபதி, மும்பை
20) 6:59:21 லட்சுமி மீனாட்சி
21) 7:39:28 மைத்ரேயி சிவகுமார்
22) 7:41:58 ராஜி ஹரிஹரன்
23) 7:54:39 Thi Po Ramanathan
24) 7:56:58 கேசவன்
25) 8:46:08 ராஜா ரங்கராஜன்
26) 8:56:39 சதீஷ்பாலமுருகன்
27) 9:19:34 அம்பிகா
28) 9:25:54 மீனாக்ஷி
29) 10:33:58 விஜயா ரவிஷங்கர்
30) 11:08:25 ஆர். பத்மா
31) 11:10:43 மீ பாலு
32) 12:11:27 நங்கநல்லூர் சித்தானந்தம்
33) 14:54:50 மீ கண்ணன்
34) 15:01:00 சித்தன்
35) 16:15:50 கோவிந்தராஜன்
36) 17:41:30 வானதி
37) 20:34:37 ரா. ரவிஷங்கர்
************************
பூவரசங்காயை ஒரு ஈர்க்குச்சியில் செருகி பம்பரம் ஆக்கலாம்
விளையாடலாம் --ஹி ஹி
எங்கள் கிராமத்து வீட்டின் பின்புறம் வாய்க்கால் ஓரத்தில் வரிசையாக பூவரச மரங்கள் நாளைக்கு ஒரு நிறமாக பூக்களை பார்ப்பது கண் கொள்ளாக்காட்சி.

https://plus.google.com/115856975959973507894/posts/JCGmzv1jv2W

இளமை ஞாபகங்கள் பற்றிய பாட்டில் இப்பம்பரம் இடம்பெற்றுள்ளது

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்