உதிரிவெடி 3286 (23/04/2018)
வாஞ்சிநாதன்
*******************
உதிரிவெடியின் பிறந்த நாளான இன்று முதல் நாள் வீசப்பட்ட வெடியை மீண்டும் கொளுத்திப் போடுகிறேன். அன்று 20 உறுப்பினர்கள்தான் இருந்ததால் புதியவர்களுக்காக இது:சுழி தொடர்ந்த சுடர் படர்ந்த கொடி எதனோடும் சேராத் தனி (3)
சரி இன்றைய வெடி
தோண்டுபவர் அவர் கால் வெட்டிப் புதைத்தார் சிதைத்தார் வாழ்க (5)
Comments
Happy anniversary to all.
It has been an exciting experience.
Thanks for making people like me again a student of Tamil.
Regards,
KSabapathy
சுழி மட்டுமா போட்டிருக்கு, மங்கலகரமாக சுடரும்தான்!
இதை எல்லாம் எதற்கு சொல்கிறேன் என்றால், நமக்கு வெறும் ஒரு சொல்லாக தெரிவது, இவருக்கு பல சொற்களாக தெரிகின்றன. அந்த சொற்கள் ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ளவையே இல்லை என்று என்னும்போதே , அதை வைத்து ஒரு வாக்கியம் அமைத்து விடுகிறார். அந்த வாக்கியமும் ஒரு தனி அர்த்தத்தை தருகிறது. இலக்கணம், செய்யுள், கர்நாடக ராகம், மஹாபாரதம், பழைய கருப்பு வெள்ளை படம் , அபூர்வ மலர்கள், செடி இவை எல்லாவற்றையும் கலந்து சில சமயம் ஸ்டான்போர்ட் கணித மேதைகளும் , தமிழ் பேராசிரியர்களும் கூடி நம்மை யோசிக்க வைக்கிறார்கள்.
அல்லியிடம் பொலிவு குறைய டக்டக் டக்டக் , ஊர் கண்டித்த முதல் குற்றம், குருவம்சம் ஒன்றுகூடி அழகியை எதிர்த்து , வெளிறிய/வெளியேரிய
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.
நான் குழுவில் சேர்ந்த அன்று, பூம்புகார் வணிகர் கையில் இருப்பது என்ற புதிர். கரும்புள் என்பது தான் விடை. அன்று 5-6 பேர் தான் விடை சரியாக சொல்லி இருந்தார்கள். கரும்புள் என்ற வார்த்தையில் க,கரு,கரும்,கரும்பு,கரும்புள் என ஒவ்வொரு சொல்லுக்கும் பொருள் உண்டு என்று சொன்ன போது, "அட! நம்ம தமிழ்" என்று குதூகலிக்க தோன்றியது.
முன்னாடியும் தமிழ் பிடிக்கும். ஆனா இப்போ எல்லாம் ரொம்ப பிடிக்கறது, அதற்க்கு கட்டாயம் வாஞ்சி சாரோட உதிரிவெடி முக்கியமான காரணம். "கல்லிலே கலைவண்ணம் கண்டார்" போல "சொல்லிலே சொக்கப்பானை வைத்தார்" என்று சொன்னால் மிகை ஆகாது. மிக்க நன்றி சார்.
நேற்று கணிதம் பற்றி உரையாற்றும்போது எனக்குப் பிடித்த டென்னிஸ் துணுக்கை மேற்கோள் காட்டினேன்: (ஒரு சிற்பி வேலை செய்யும்போது வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்) டென்னிஸ் ஜோயியிடம் சொன்னது: ஜோயி, ஒரு குதிரை சிலை செய்றது கஷ்டமே இல்லை. ஒரு பெரிய கல்லை எடுத்துக்கிட்டு எந்த எடமெல்லாம் குதிரை மாதிரி இல்லையோ அதெல்லாம் வெட்டி எடுத்துடணும் அவ்வளவுதான்.
அந்த வேலைதான் நான் செய்கிறேன். ஒரு வார்த்தையை எடுத்து அப்படி சரியா இல்லாததை வெட்டி எடுக்கிறேன். கொஞ்சம் மசாலா சேர்க்கிறேன்.