Skip to main content

விடை 3269

இன்று (06/04/2018) காலை வெளியான வெடி

இவ்விடத்திலிருக்காத பேருந்து பாதி போன நாடு ஒன்று (6)
இதற்கான விடை: இங்கிலாந்து = இங்கு + இலா +   (பேரு) ந்து

பாரதியார் சிங்களத் தீவுக்கோர் பாலம் அமைப்போம் என்றார். நம் புதிருலகில் பல படிகள் மேலே சென்று தொலைவிலுள்ள இங்கிலாந்து தீவுக்கு ஒரு, இல்லை, அரைப் பேருந்தையே போக விட்டோம். இப்பேருந்து ஏர்பஸ் வகையென்பதால் பாலமே தேவையில்லை.

இதைத்தான் அன்றே சொன்னான் வள்ளுவன்:

எண்ணி நடக்காத(து)   ஏதுமிலை பேருந்தில்
கண்ணயர்ந்தால் இங்கிலாந்து காண்

(அதிகாரம்: 135: பிறன்நாடு விழைதல்,  குறள்: 1342)

நரிமேற்கிழார் உரை:

 நம் மனம் தீவிரமாக ஒன்றை விழைந்தால் அதை அடைவதை  எதுவும் தடுக்க முடியாது.  பெரிய உந்து சக்தி (பேருந்து) இருக்கையில் கண்மூடி தியானித்தால்    இங்கிலாத, அதாவது பூவுலகில் இல்லாத, மேலுலகில் உள்ளோரைக் காணலாம்.  கண்மூடி ஆழ்ந்த தியானத்தில் ஈடுபடும்போது காரியம் கைகூடும்.   (குறிப்பு: கண்ணயர்ந்தால் என்பதைத் தூங்கிக் கொண்டிருக்கும்போது என்று சில உரையாசிரியர்கள் சொல்வது பொருந்தாது.  வள்ளுவப் பெருந்தகை, உலகை ஆழ்ந்து நோக்கிய அவர் இத்தகைய நகைப்புக்கிடமான விஷயத்தைக் கூறுவாரா?  கண்மூடி தியானத்தில் இருக்கும்போது என்று பொருள் கொள்வதே  சாலச் சிறந்தது. )

Comments

Ambika said…
This comment has been removed by the author.
Ambika said…
சரியான‌ விடை அளித்தவர்கள் (61):

1) 6:01:20 லட்சுமி சங்கர்
2) 6:02:50 முத்துசுப்ரமண்யம்
3) 6:02:51 எஸ்.பார்த்தசாரதி
4) 6:03:29 ராமராவ்
5) 6:03:51 கேசவன்
6) 6:04:50 எஸ் பி சுரேஷ்
7) 6:05:24 சங்கரசுப்பிரமணியன்
8) 6:05:56 ரா. ரவிஷங்கர்..
9) 6:07:34 கி. பாலசுப்ரமணியன்
10) 6:11:28 கு.கனகசபாபதி , மும்பை
11) 6:13:06 ரரங்கராஜன் யமுனாச்சாரி
12) 6:14:21 ஶ்ரீவிநா
13) 6:49:44 நங்கநல்லூர் சித்தானந்தம்
14) 6:56:25 மு.க.இராகவன்.
15) 6:58:27 அம்பிகா
16) 7:02:54 மைத்ரேயி சிவகுமார்
17) 7:04:03 லதா
18) 7:05:05 சுபா ஸ்ரீநிவாசன்
19) 7:05:27 சித்தன்
20) 7:09:26 வி ன் கிருஷ்ணன்
21) 7:10:19 ரவி சுந்தரம்
22) 7:10:36 சுந்தர் வேதாந்தம்
23) 7:10:51 ருக்மணி கோபாலன்
24) 7:15:15 விஜயா ரவிஷங்கர்
25) 7:17:00 இரா.செகு
26) 7:18:41 சதீஷ்பாலமுருகன்
27) 7:19:11 ஏ.டி.வேதாந்தம்
28) 7:19:39 பத்மாசனி
29) 7:20:53 ஆர். பத்மா
30) 7:23:07 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
31) 7:24:09 ராஜா ரங்கராஜன்
32) 7:24:46 வீ.ஆர் பாலகிருஷ்ணன்
33) 7:25:12 வானதி
34) 7:28:19 வி சீ சந்திரமௌலி
35) 7:28:21 ஆர்.நாராயணன்.
36) 7:29:05 லக்ஷ்மி ஷங்கர்
37) 7:31:21 கோவிந்தராஜன்
38) 7:33:27 மீனாக்ஷி கணபதி
39) 7:39:02 லட்சுமி மீனாட்சி
40) 7:42:52 ரமணி பாலகிருஷ்ணன்
41) 7:46:18 ரவி சுப்ரமணியன்
42) 7:46:43 நங்கநல்லூர் சித்தானந்தம்
43) 7:49:21 மீ பாலு
44) 8:00:07 பானுபாலு
45) 8:00:25 அனந்தா
46) 8:02:59 எஸ் பி சுரேஷ்
47) 8:40:21 பா நிரஞ்சன்
48) 8:43:21 மு க பாரதி
49) 9:14:09 மீனாக்ஷி
50) 9:21:24 நாதன் நா தோ
51) 10:04:28 ராதா தேசிகன்
52) 10:26:15 மீ கண்ணன்
53) 10:56:47 பானுமதி
54) 11:48:25 தி பாெ இராமநாதன்
55) 11:58:18 வித்யா ஹரி
56) 12:29:20 ராஜி ஹரிஹரன்
57) 14:25:12 கல்பனா
58) 17:08:08 கல்யாணி தேசிகன்
59) 18:17:06 சாந்திநாராயணன்
60) 19:15:09 கே.ஆர்.சந்தானம்
61) 20:17:50 பாலா
************************
Sundar said…
அட..! இன்பத்துப்பாலின் இறுதியில் பகையடக்கல், பிறன்நாடு விழைதல் என்றெல்லாம் அதிகாரங்கள் ஒளிந்திருந்தது இதுவரை தெரியாமல் போய் விட்டதே! சபாஷ்!
Vanchinathan said…
தமிழ்த் தாத்தா உ வே சா பதிப்பிக்காமல் வைத்திருந்த ஓலைச் சுவடிகளில் கிளியனூர் திருக்குறள் என்று வைத்திருந்தார். கிளியனூரில் கிடைத்த மூலப்பிரதிகளில் 170 அதிகாரங்கள் இருந்தன. அதிலிருந்துதான் இங்கே வெளியிடுகிறேன்!
என்ன நூத்தி எழுபதே நூத்தி எழுபது தானா, இன்னும் அதிகம் இருந்திருக்கலாமே என்று தோன்றுகிறது.
உரையாசிரியரும் திருவிளையாடல் செய்கிறார், பரி யை நரியாக்கிய சொக்கநாதர் போல.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 3621

இன்று காலை வெளியான வெடி திருமகளே  பரம்பரையில் வாய்த்திருப்பதால்    ஏற்பாடுகளில்  ஒரு பரபரப்பு  (5) இதற்கான விடை:  களேபரம் இன்று காலை கேசவன் இவ்விடை பற்றியும் "களேபரம்" என்ற சொல்லின் பொருள் பற்றியும் (எனக்குத் தெரியாத) விவரங்களை அனுப்பியிருக்கிறார். அதை அப்படியே இங்கே வெளியிடுகிறேன்: I was also of the opinion that களேபரம் meant something like chaos till my wife learnt a song on Ganesha where the line சுத்த களேபரம் சோம  கலாதரம் appeared and confused me. Later I discovered that the word meant body. So I suppose our popular usage came from a description of a chaotic situation like mayhem, with bodies strewn about! For instance the year when the wooden idols of Puri are to be remade is called nabakalebar (new body). இன்று அனுப்பப்பட்ட விடைகள் அனைத்தும் பார்க்க இங்கே செல்லவும்.