Skip to main content

கருத்துரைகள், விவாதங்கள்

கருத்துரைகள், விவாதங்கள்
 
இதன் நோக்கம் வாட்சப் போல் ஓரளவு கருத்துகளைப் பரிமாற, பேச.  இதே இழையைப் (ஒரு மாதத்திற்காவது) பயன்படுத்தினால் எங்கேயும் புதியதாய் கருத்துகள் இட வேண்டாம்.
இந்த இழைக்கான தொடுப்பை  நான் இரவில் விடையளிக்கும்போது கொடுத்துவிடுகிறேன். விடைப் பட்டியல் பார்த்த பின்னர்  ஆர்வமுள்ள‌ர்கள்  அங்கேயிருந்து இங்கே தாவி வந்து பேசலாம். கருத்துரையில் ஆடியோ, வீடியோ எல்லாம் அனுப்பமுடியாது.  இந்த ஆலோசனை கூறிய ரவி சுந்தரத்துக்கு நன்றி.

Comments

Vanchinathan said…
கடை திறந்தாச்சு. மரியா பற்றிய கருத்துரையை இங்கே எழுதுங்கள்
Raghavan MK said…
மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.
Raghavan MK said…
மரியா அல்லது மரியாள் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்துவின் தாயாவார். அன்னை மரியாள் உருவில்லா இறைவனுக்கு உருகொடுத்து இறைவனின் தாயாகி பேறுபெற்றவள்.

தமிழில் கிறித்துவப் பெயர்களின் உச்சரிப்பு பெரும்பாலும் போர்த்துகீசிய/இத்தாலிய மொழிகளைப் பின்பற்றியே உள்ளன. வீரமாமுனிவரின் தாக்கமோ?
Ramarao said…
உங்களது குறிப்பில் "இறவாத" என்பதற்கு பதிலாக "இறவா" என்று கொடுத்திருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். மரியா = இறவா; ஈறு கேட்ட எதிர்மறை பெயரெச்சம் (இறவா) என்பதே சரியாக இருந்திருக்கும்.
முதல் உதிரி வெடி மறு வெளியீடு செய்த திரியில் சில விவரங்களை மறு பதிப்பு செய்ய இருக்கிறேன்.
This comment has been removed by the author.
சொல்லபோனால் தமிழ் லத்தீனிலிருந்து நேரடியாக கிருத்துவ பெயர்களின் ஒலி வடிவம் பெற்றது. ஆங்கிலம், ஜெர்மானியம் வழியாக மருவிய ஒலிவடிவங்கள் பெற்றது. தூய கிருத்துவ பெயர் ஒலிவடிவங்கள் தமிழ்தான், ஆங்கிலம் அல்ல. இயேசு, யோவான், யோசேப்பு, மரியாள், தாவீது ஆகியவை தான் தூய பழைமையான உச்சரிப்புகள்

லத்தீனுக்கு முன்னர், கிறித்துவப் கிரேக்க அராமிய மொழிகளில் ஆரம்பித்தது அன்றோ?
அம்மொழிகளில் இச்சொற்களின் ஒலி வடிவம் என்னவோ?
யூதம் கிருத்துவத்தின் மூலம். கிறிஸ்து பேசிய அராமியம் வழக்கொழிந்தாலும், ஈப்ரு மொழி வழக்கில் உள்ளது பின் வந்த அரபு மொழி யும் நெருங்கியது. ஆகவே அரபு உச்சரிப்புகள் மற்றும் ஈப்ரு உச்சரிப்புகள் தான் மிகவும் நெருங்கியது. மரியம் இட்சாக் (ஐசாக்கு) இப்ராகீம் தாவூது புற்றோஸ் (பீட்டர் ) ஆகிய அரபு உச்சரிப்புகள் அசல் ஆக இருக்க வாய்ப்புகள் அதிகம்.
முதல் உதிரிவெடி பிள்ளையார் சுழியுடன் மங்களகரமாக தொடங்கியதை கவனித்தேன். பிறகு வாஞ்சி சுட்டிகாட்டியபின், மங்களகரமாக சுடரும் இருந்ததை கவனித்தேன். அப்புறம் தெரிந்தது எல்லாவற்றுக்கும் மேலாக விடை "உதிரி" புதிர் வகையின் தலைப்பாக கண்ணெதிரே இருந்ததது. (வெடி 3286 திரியிலிருந்து )
ஈப்ருவில் உயிர் எழுத்துக்களை எழுதுவது கிடையாது, ஒரு புள்ளி மட்டுமே. இறைவனின் பெயரை YWH ஆகிய எழுத்துக்களால் குறிக்கின்றனர் அவர்களின் வேதமான தோரா வில். இறைவன் பெயரை உச்சரிப்பது அவமரியாதை என்பதால் பல்லாயிரம் ஆண்டுகளாக சொல்லப்படாமல் இருந்து அப்பெயரின் உயிர் எழுத்துக்கள் மறக்கப்பட்டுவிட்டன. யூத இறைவனின் பெயர் யாவே என்று சரித்திர வல்லுனர்கள் யூகிகின்றனர். ஆனால் நிச்சயமாக சொல்ல முடியாது.
போஷாக்கு எந்த மொழி? வடமொழி மூலமா?
Sundar said…
புதிதாக பதியப்பட்ட கருத்துக்களை மேலே/முதலில் காட்டினால் (Reverse chronological order) வசதியாக இருக்கும். அப்புறம் மாதா மாதம் புதிய விவாத திரியை தொடங்க வேண்டிய தேவையும் இருக்காது. :-)
Raghavan MK said…

போஷாக்கு

புறமொழிச்சொல்---சமசுகிருதம்--पोषक--போ1ஷக1--வேர்ச்சொல்
பொருள் தொகு

போஷாக்கு, பெயர்ச்சொல்.
(உள்ளூர் பயன்பாடு)
ஊட்டம்
ஊட்டச்சத்து
போஷனை
(எ. கா.) உனக்கு போஷாக்குப் போராது
ஜாக்கிரதை
Raghavan MK said…


Good suggestion! No idea whether it is feasible!
விடை அனுப்பும்போதே சந்தேகம்தான். பூச்சி பேரு கரையான், இரத்தக்கறை வல்லினம். பாசோ பெயிலோ மொதல்ல ஒரு விடை போட்டு வெக்கலாம் அப்புறம் கூகுள் ஆச்சாரியார் கிட்ட கேட்டு சரி செய்யலாம் ன்னு போட்டேன். அப்புறம் வல்லினம் மெல்லினம் ன்ன ஒடனே, "சோழக்குயில் பாடுகையில் சோலைக்குயில் ஓய்வெடுக்கும், மெல்லினங்கள் பாடு கண்ணே வல்லினங்கள் வாய் வலிக்கும் " ன்னு ஞாபகம் வந்ததா, அப்படியே யூ டியுப் போயி விடை சரி செய்ய மறந்துட்டேன். எதோ வாத்தியார் பாவப்பட்டு கிரேஸ் மார்க் போட்டுட்டார்.
https://www.youtube.com/watch?v=jF0I_Bw4jWQ&list=PLUVI59frFPfMODCMFwB03qhaeW5WndQ8E
புதிராசிரியர் முன் கறை படியவேண்டாம் என்று எண்ணினேன்.
வேறு வழியில்லையே! அதுவும் ரத்தக்கறை !!
Vanchinathan said…
நீண்ட நாட்களாக நான் எதிர்பார்த்தத் கேள்வி. ஏன் யாரும் கேட்கவில்லையே என்று கூட அவ்வப்போது நினைத்ததுண்டு. நா தோ நாதன் இப்போது விடை 3286 இல் அதாவது இரண்டாமாண்டு தொடக்கப் புதிரில் கேட்டுள்ளார்.

ஆரம்பித்து புதிர் எப்படி ஒரே ஆண்டிலேயே 3200ஐ எட்டியது என்பதுதான் அக்கேள்வி.
இது ஒரு சின்ன தில்லுமுல்லு பண்ணி செய்த கணக்கு. உதிரியாய் வெடிகள் ஏப்ரல் 2017இல்தான் தொடங்கின. நாளுக்கு ஒன்றுதான். சில நாட்கள் யாராவது தவறுதலாக எல்லோருக்கும் தெரியும்படி பொதுவில் விடையை கேட்ட சில நிமிடங்களிலேயே அளித்தபோது மீண்டும் ஒரு புதிர் என்று ஏழெட்டு நாட்கள் இரண்டு புதிர்கள் அளித்துள்ளேன்.

தில்லுமுல்லு என்னவென்றால் தென்றலில் மாதந்தோறும் ஒன்று என்று 9 வருடங்கள், அதற்கு முன் ஆறாம்திணையில் வாரத்திற்கு ஒன்று என்று நூற்றுக்கு மேற்பட்ட புதிர்கள் கட்டவலையுடன் அமைத்து வெளியிட்டிருந்தேன். அந்த சரங்களில் எல்லாம் 12‍‍--17 வெடிகள் இருப்பதை வைத்து குத்து மதிப்பாகக் கணக்கிட்டதுதான்.

எனக்கும் வல்லின/இடையினக் குழப்பம் வந்தது. கறையை நம்பி கரை சேர்ந்தேன்.
Muthu said…
http://www.tamilvu.org/slet/pmdictionary/ldttamtse.jsp?editor=கரையான்:

கரையான் கடற்கரைப் பக்கத்து வாழும் வலைஞன் .;
கறையான் செல்லு , சிதல்

என்னைப் பொறுத்த வரை சென்னைப் பல்கலை அகராதிதான் அதிகார பூர்வமாக எடுத்துக்கொள்ளப் பட வேண்டியது; அடுத்த படியாக
சிக்ககோ பலகலை வெளியிட்டதை எடுத்துக் கொள்வேன். குறைகள் தெரிந்தாலும், சென்னைப் பல்கலை சொல்வதை எடுத்துக் கொள்வதே தகும் என்பது என் தாழ்மையான கருத்து.
Nathan NT said…
அட்சர லட்சம் போல உதிரி நூறு பெறுமோ வென்று நினைத்தேன்! வண்டவாளம் வெட்டவெளிச்சமாக அடியேன் காரணமானதற்கு வருந்துகிறேன்!!
Raghavan MK said…

மேதினியில் மேதினம் இன்று!

உதிரிவெடியுடன் வாழ்த்துவோம், நன்று!!

தேவாரம் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டே
சென்றபோது,

விடை காண ஔவையின் நல்வழி அருள் புரிந்தது.

தேவாரம்:-
பொன்னார் *மேனி* யனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே!


நல்வழி :-

*மேதினி* யில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்!

-- -- -- - -ஒளவையார்

ஒரு அருமையான வெடி, இன்று!
Raghavan MK said…

மேதினியில் மேதினம் இன்று!

உதிரிவெடியுடன் வாழ்த்துவோம், நன்று!!

தேவாரம் பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டே
சென்றபோது,

விடை காண ஔவையின் நல்வழி அருள் புரிந்தது.

தேவாரம்:-
பொன்னார் *மேனி* யனே புலித்
தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல் மிளிர்
கொன்றை யணிந்தவனே
மன்னே மாமணியே மழ
பாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனி
யாரை நினைக்கேனே!


நல்வழி :-

*மேதினி* யில் இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர்!

-- -- -- - -ஒளவையார்

ஒரு அருமையான வெடி, இன்று!
Raghavan MK said…


A peak into today's riddle!

காஞ்சியில் சேனாதிபதி...

காஞ்சியை ஆண்ட நரசிம்மபல்லவனின் சேனாதிபதி *பரஞ்சோதி* , வாதாபி போரில் வெற்றி வாகை சூடியவர்.

போர் முடிந்த பின், ஈசன் மீதுள்ள அளவற்ற பற்றால், தளபதி பரஞ்சோதியார் , இறை தொண்டாற்ற விழைந்தார்.

நாள்தோறும் சிவனடியார்களுக்குத் திருவமுது செய்வித்துப் பின் தாம் உண்ணலை வழக்கமாகக் கொண்டிருந்தார், பரஞ்சோதியார். சிவனடியார்களின் முன்பு அவர் மிகச் சிறியராகப் பணிந்து ஒழுகியமையால் சிறுத்தொண்டர் என அழைக்கப்பட்டார்.


சிறுத்தொண்ட நாயனார் சைவ சமயத்தவர்களால் பெரிதும் மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவர் ஆவார்
Raghavan MK said…

"சுரத்துடன்" ....இச்சொல்லுக்குதான் எத்தனை பொருள், நம்மை குழப்ப! 😃

விருப்பம்
ஈடுபாடு
ஆர்வம்
உற்சாகம்
காய்ச்சல்
ஜுரம்
ச ரி க ம ப த நி சுரம்
கடைசியில் வென்றது சரிகமபதநி.....

உடலும் சோடை போகவில்லை!

மெய்
உடம்பு
மேனி
தேகம்
திரேகம்
யாக்கை
காயம்

கடைசியில் காயமே சகாயம் புரிந்தது.!☺
Muthu said…
This comment has been removed by the author.
Raghavan MK said…

[05/05, 19:35] raghavanmk31: A peak into today's Riddle! 👇🏽

" *_About a friend indeed_*"

About = regarding =Re (abbr)

A friend = ally

Indeed = Re + ally = *Really*

Indeed a nice riddle! very short, yet nice!
Raghavan MK said…

A peak into today's riddle.....! 👇🏽

_முழுமையானது பூப்பறித்ததால் உண்டான காயம்_

பூரண நிலவொளியில்
சுடச்சுட எடுத்த கொழுக்கட்டையின் பூரணத்தில், பூ விழுந்திருந்தது!!

பூவை எடுக்கப்போய் சூடு பட்டு விரல் ரணமாயிற்று!!

பூரண நிலவொளியின் குளிர்ச்சியில் *ரணம்* ஆறி விடை தந்தது!
"பூரண" என்பது ஒரே வார்த்தையில் "முழுமையான' தையும் பூவினால் ஏற்பட்ட காயத்தையும் குறிக்காதா?
Raghavan MK said…


About Yesterday 's riddle!

*கோரை* ப் பல்லால்

*கோரை* ப் புல்லை

கிழித்தெடுத்து

விடை கண்டேன்.
Raghavan MK said…


இறையனார் சங்ககாலப் புலவர்களில் ஒருவர். இவரது பாடலாகச் சங்கநூல் தொகுப்பில் ஒன்றே ஒன்று உள்ளது. அது குறுந்தொகை பாடல் எண் 2. குறிஞ்சித் திணைப் பாடல் இது.

பாடல் - மூலம்

கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே.


தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உண்ணும் காம ஆசையால் சொல்லாமல் உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா? - என்கிறான்.




இறையனார் என்னும் புலவர்,
கடவுள்-சிவபெருமானே என்பது நம்பிக்கை.

அவர், அரசன் அவையில் பரிசு பெறத் தருமி எனபவனுக்கு இப்பாடலைச் எழுதிக் கொடுத்தார் என்னும் கதையை திருவிளையாடற் புராணம் வடித்துள்ளது. புறப்பாடல் திரட்டு என்னும் நூலும் (15ஆம் நூற்றாண்டு) இந்தக் கதைக்குத் துணையாக அமைந்துள்ளது. 'திருவிளையாடல்' என்னும் திரைப்படத்தில் இந்தக் கதை சுவையேற்றப்பட்டுள்ளது

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்