Skip to main content

விடை 3279

இன்று காலை வெளியான வெடி:

 நூலின் தொடக்கத்தில் இருப்பது முழுமையடையாத பூண்டு (4)

முழுமையடையாத நூலின் தொடக்கத்தில் இருப்பது பூண்டு (4)


இதற்கான விடை:  அணிந்து. ஒரு நூலின் தொடக்கத்தின் இருப்பது அணிந்துரை, முழுதாக வராத போது அணிந்து அதாவது பூண்டு.

இந்த அணிந்துரை என்ற சொல் யாரோ அரைகுறை சென்ற நூற்றாண்டில் செய்ததாக இருக்கவேண்டும். முன்னுரை அல்லது முகவுரை சரி. வேறொருவர் அந்நூலைப் பற்றி எழுதுவதை
அணிந்துரை என்கிறார். அது அந்நூலுக்கு அணி போல் என்றால் அணியுரை என்றுதானிருக்க வேண்டும். நானும் எனக்குத் தெரிந்த பகுபத இலக்கணவிதிகளை எல்லாம் கொண்டு அலசினேன் எதற்கும் பொருந்தவில்லை. அணிந்துரை என்பது சரியென்றால், வாழ்த்துரை என்பதை வாழ்த்தியுரை என்று மாற்ற வேண்டும். இதே போல்தான் தூய்மை இந்தியா என்று அரசு விளம்பரத்தில் வருகிற‌து. தூய இந்தியா என்று ஏன் அதைச் சொல்ல மாட்டேனென்கிறார்கள்?
அவர்கள் இளமைப்பையனாக இருக்கும்போது, வெண்மை நிலவில் நனைந்து  இனிமைப் பண்டத்தை அதிகம் சாப்பிட்டு தனிமை மனிதனாக இருந்திருப்பார்களோ?

விடையளித்தவர்கள்:
  6:13:11        கி. பாலசுப்ரமணியன்      
  6:41:47        மீனாக்ஷி கணபதி   
  6:46:26        கே.ஆர்.சந்தானம்      
  7:05:53        ரவி சுப்ரமணியன்    
  7:16:33        எஸ் பி சுரேஷ்     
  7:20:31        எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்   
  10:50:33    லதா   
  11:09:01    வித்யா ஹரி   
  11:09:33    ரமணி பாலகிருஷ்ணன்    
  11:30:48    கேசவன்   
  12:38:10    வானதி   
  13:45:23    தி பொ இராமநாதன்   
  15:45:11    ஏ.டி.வேதாந்தம்   
  15:45:43    பத்மாசனி   
  15:47:19    அனுராதா ஜெயந்த்   
  16:09:43    சங்கரசுப்பிரமணியன்   
  17:00:36    சுந்தர் வேதாந்தம்    

Comments

Unknown said…
பூண்டு = அணிந்து என்று தெரிந்தும், புதிருடன் இணைக்கத் தெரியவில்லை.
புதிரை பாதியில் மாற்றினால் பார்த்துக்கொண்டே இருப்பர்களா என்ன?
மாற்று முன் இருந்த புதிருக்கு இது சரியான விடை இல்லை. முடியாத பூண்டு என்றால் "அணிந்து" முடியவில்லை என்று பொருள்படும்.
பூண்நூல் என்பது தர்க்க ரீதியாக சரியாகிறது. நூலுக்கு முன் முடியாத பூண்டு = பூண்
தயவு செய்து விதண்டாவாதம் என்று நினைக்க வேண்டாம்
Vanchinathan said…
சரிதான். தொடர்ந்து பார்ப்பது சாத்தியமில்லை. ஒரு திருத்தம். ஒருமுறை மாற்றினேன். எனக்கு தினமும்வாசகர்கள் மூன்று நான்கு பேராவது இரண்டு முறையோ மேலுமோ விடையை மாற்றி அனுப்புகிறார்கள்
The whole day, I was away in a meeting; returned only at about 9 pm. I did'nt have a chance to check again.
Unknown said…
அதே அதே ... சுபா பதே 🤣
I learnt in the process the significance of பூண்நூல். நன்றி
Muthu said…
<> அதாவது, அது துணிந்துரை (நூலைப் பற்றிய கருத்தைத் துணிவுடன் எழுதப்பட்ட உரை); அச்சுக் கோர்க்கும் பையன் அதை அணிந்துரை என்று படித்துக் கோர்த்து விட்டார்.
https://annaiyogacenter.wordpress.com/2016/09/14/%E2%80%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-107/

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்