இந்து ஆங்கில நாளேட்டில் சுமார் பதினைந்து புதிராளிகள் தினம் ஆங்கிலத்தில் மாறி மாறி புதிர்களை வெளியிட்டு வருகின்றனர். அதில் Afterdark என்ற பெயரில் புதிரை வெளியிடுபவர் தமிழில் முதன் முறையாக ஆக்கியிருக்கிறார்.
சினிமாவில் கடைசி ஆண் பாத்திரம் (4) என்று என்று அழகாகத் தொடங்கி
சுமார் 32 குறிப்புகள் கொண்ட அப்புதிரில் இன்னமும் நான்கைந்துக்கு விடைகள் வராமல் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.
நமக்குப் பரிச்சயமான ஹரி பாலகிருஷ்ணனின் செயலி மூலம் வடிவமைக்கப் பட்ட புதிர் என்பதால் இங்கு வருவோர்க்கு வசதியாக இருக்கும்.
அந்த சுவாரசியமான புதிரைக் காண
இங்கே செல்லுங்கள்.
இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை: முற்றம் = முறம் + ற்
Comments