Skip to main content

விடை 4113

இன்று காலை வெளியான வெடி:
கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4)
அதற்கான விடை: விரட்டு = ர + விட்டு ர = கௌரவர்களில் இரண்டாவதெழுத்து.


இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle
*********************
_கௌரவர்களில் இரண்டாமவரை வெளியே விட்டு உள்ளே வர விடாதே (4)_

_கௌரவர்களில் இரண்டாமவரை_
= _second letter in கௌரவர்களில்_
= *ர*

_வெளியே விட்டு_
= "" *ர* "" _க்கு வெளியே _ *விட்டு*
= *விரட்டு*
= _உள்ளே வர விடாதே_
*********************
*விநாயகர் அவதாரம்:*

விநாயகர் அவதாரம் விசித்திரமாக நிகழ்ந்த ஒன்று. பார்வதிதேவி தான் நீராடச் செல்லும் முன், தான் பூசும் மஞ்சளைப் பிடித்து உயிர் கொடுத்து, யாரையும் *உள்ளே வர விடாதே* என்று கூறிச்சென்றாள். அப்போது சிவன் வர, காப்பாளன் தடுக்க, பரசுவால் அவன் தலையைத் துண்டித்து உள்ளே சென்றார் சிவன். தேவி வெகுண்டாள். நிலையை உணர்ந்த சிவன் முதலில் தென்பட்ட உயிரினமான யானையின் தலையைப் பொருத்தி உயிர்ப்பித்து, உன்னை வணங்காமல் எவரும் எது செய்தாலும் அது விக்னம் அடையும். நீயே யாவருக்கும் தலைவன். எனவே விநாயகன் என்றார். விக்னத்தை ஏற்படுத்துபவனும் அவன்; நிவாரணம் செய்பவனும் அவன்; காரிய ஜயம் தருபவனும் அவன்.

*_ஸர்வ விக்னஹரம் தேவம்_*
*_ஸர்வ விக்ன விவர்ஜிதம்_*
*_ஸர்வ ஸத்தி ப்ரதாதாரம்_*
*_வந்தே அஹம் கணநாயகம்_*
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
இப்போதுதான் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிர் முடியாமல் அன்னை (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************

Raghavan MK said…
A peek into today's riddle
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 30-11-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*இன்று புதிதாய் பிறந்தோம்!*

இன்று *புதிதாய்* பிறந்தோம் என்று, நாம் எண்ணியதை தீர்க்கமாகச் செய்து இன்புற்று வாழ்வோம்

- *பாரதி*
🌹🌹🌹🌹🌹
*_சென்றது மீளாது – பாரதியார் கவிதை_*


சென்றதினி மீளாது,மூடரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
*இன்றுபுதி தாய்ப்பிறந்தோம்* என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.
🌹🌹🌹🌹🌹🌹
நடந்து போனதை நினைத்து வருந்துவதும், நடக்கப் போவதை எண்ணி மயங்குவதுமே சாதாரண மனிதனின் இயல்புகள். இவ்விரு இயல்புகளிலிருந்து விடுபட்டு, ‘ *இன்று புதிதாய்ப் பிறந்தோம்* ’ என்ற உணர்வோடு – நம்பிக்கையோடு – வாழ்க்கையைத் தொடங்கி மகிழ்வோடு நடத்த வேண்டும் என்பதே பாரதியாரின் கருத்து

“ _இன்று புதிதாய் பிறந்தோம் என்று_ _நெஞ்சில்_
_எண்ணமதைத்_ _திண்ணமுற இசைத்துக் கொண்டு_
_தின்று விளையாடி இன்புற்றிருந்து_ _வாழ்வீர்_ ” (ப.248)

என்பது கவியரசர் மனித குலத்திற்கு அறிவுறுத்தும் ஓர் அடிப்படையான வாழ்க்கைப் பாடம் ஆகும்.
**********************
_இப்போதுதான் தயாரிக்கப்பட்டிருக்கும் புதிர் முடியாமல் அன்னை (4)_

_புதிர் முடியாமல்_
= *புதி[ர்] = புதி*

_அன்னை_ = *தாய்*

_இப்போதுதான் தயாரிக்கப்பட்டிருக்கும்_
= *புதி+தாய்*
= *புதிதாய்*

**********************
*இன்று நாம் புதிதாய் பிறந்தோம்...* 

உலகமே திரும்பி பார்த்திட
உன்னத சாதனை படைத்திட

பெற்ற நாடு புத்துயிர் பெற்றிட
புண்ணியம் தரணியில் பெருகிட

நச்சாய் கலந்த மாசினை களைந்திட
நல்லதொரு மாற்றத்தை தந்திட

*இன்று நாம் புதிதாய் பிறந்தோம்...*

(ஜெப மலர்)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[11/30, 07:04] திரைக்கதம்பம் Ramarao: புதிதாய்

[11/30, 07:05] A Balasubramanian: புதிதாய்
A.Balasubramanian

[11/30, 07:06] Sucharithra: புதிதாய்

[11/30, 07:07] balakrishnan: புதிதாய்🙏

[11/30, 07:08] மீ.கண்ணண்.: புதிதாய்
[11/30, 07:09] sankara subramaiam: புதிதாய்

[11/30, 07:10] பாலூ மீ.: புதிதாய்.

[11/30, 07:14] akila sridharan: புதிதாய்

[11/30, 07:21] V N Krishnan.: புதிதாய்

[11/30, 07:22] siddhan subramanian: புதிதாய்

[11/30, 07:25] A D வேதாந்தம்: விடை= புதிதாய்/ வேதாந்தம்.

[11/30, 07:30] Dr. Ramakrishna Easwaran: *புதிதாய்*
[
[11/30, 07:33] Dhayanandan: புதிதாய்

[11/30, 07:40] Meenakshi: விடை:புதிதாய்
[
[11/30, 07:54] nagarajan: *புதிதாய்*
[
[11/30, 08:27] பானுமதி: புதிதாய்

[11/30, 08:30] N T Nathan: புதிதாய்
[
[11/30, 08:39] sathish: புதிதாய்

[11/30, 09:28] ஆர். நாராயணன்.: புதிதாய்

[11/30, 09:43] Ramki Krishnan: புதிதாய்

[11/30, 10:08] Revathi Nataraj: From Revathi Nataraj: புதிதாய்

[11/30, 10:11] Bharathi: *புதிதாய்*
[
[11/30, 10:26] chithanandam: புதிதாய்
[
[11/30, 10:30] G Venkataraman: புதிதாய்
[
[11/30, 12:18] shanthi narayanan: புதிதாய்

[11/30, 12:30] Bhanu Sridhar: புதிதாய்
[
[11/30, 15:02] Viji - Kovai: புதிதாய்

[11/30, 17:46] balagopal: தயாராக.
தாயாராக முடியாமல் அன்னை.

[11/30, 19:47] கு.கனகசபாபதி, மும்பை: புதிதாய்

***************************

Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-12-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
இனிய பருவம் பாதி மிச்சம் வந்த கோளாறு (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************




Raghavan MK said…
A peek into today's riddle
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 01-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
_வாழ்நாளின் *இனிய பருவம்* இளமை !அதை நாம் முதுமையில்தான் உணர்கிறோம்!_
**********************
மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்
வண்ண மை இட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள்

காதல் மழை பொழியும் கார் முகிலா- இவள்
காதலன் நான் இருக்க பேரெழிலாய்

வானில் விழும் வில்போல் புருவம் கொண்டாள்
இளம் வயதுடையாள் *இனிய பருவம்* கண்டாள்

கூனல் பிறை நெற்றியில் குழலாட
கொஞ்சும் குளிர் முகத்தில் நிலவில் நிழலாட
கலை மானின் இனம் கொடுத்த விழியாட
அந்த விழி வழி ஆசைகள் வழிந்தோட

நல்ல மாதவிப்பொன் மயிலாள் தோகை விரித்தாள்

(இருமலர்கள்-1967)
*********************
_இனிய பருவம் பாதி மிச்சம் வந்த கோளாறு (5)_

_பாதி மிச்சம்_
= *[மிச்]சம் = சம்*

_கோளாறு_ = anagram indicator for *வந்த+ சம்*
= *வசந்தம்*

= _இனிய பருவம்_
**********************
*நீ வராவிட்டால்*

குளிர் கடந்து சென்றுவிட்டால் 
*வசந்தம் வரும்* 

குயில்கள் கூவத் தொடங்கிவிட்டால் 
பூக்கள் மலரும் 

மாலையும் கவிந்து விட்டால் 
வான்நிலவும் வந்துவிடும் 

இவைகள் எல்லாம் வந்தும் நீ வராவிட்டால் 
இங்கே எனக்கென்ன வேலை ?

எழுதியவர் : கவின் சாரலன் 
**********************
*வந்தது வசந்தம்* -

துகில் களைந்தெறிந்து
துறவறம் போன
சிறுபெரு மரங்களெல்லாம்
இல்லறம் நடத்த
திரும்பிய  தேனோ?

பனியிருள் போர்வையுள்
தனை மறைத்துறங்கிய
சூரியன் கண்திறந்து
தம்மையே நோக்குதல் கண்டு

துளிரிலை கொண்டு
வளர்ந்து வளர்ந்து
வாகான உடம்பையும்
கொடியிடை கொம்பையும்

கால்வரை மூடி
பச்சைப் படுதாவுள்
தலையினை நுழைத்து
குமரிகள் அன்ன
நாணிக் கோணி

தங்களுள் வளர்ந்த
*வசந்த கால* மரங்களெல்லாம்
வயதுக்கு வந்தனவோ?
வண்ண வண்ணப் பூக்கள்
வாய்விட்டுச் சிரிக்கின்றனவே.

வானம் என்ன
முறை மாமனோ?
முகில் மழையாகி
குடம்குடமாய்க் காவி வந்து
தலைக்குத் தண்ணீர் வார்க்கிறதே!

பச்சை மரங்கள் பருவமாகிய செய்தி
பதமான வாசனையாகி
தென்றல் காற்றில்
விரைந்து கரைந்ததுவோ?

பட்டாம் பூச்சிகளும் தேன் வண்டுகளும்
சுற்றிச் சுற்றி வருகின்றனவே!
சொர்க்கம் நீ என மகிழ்ந்து
சொக்கிப் போகின்றனவே! 

(இராஜகாந்தன்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[12/1, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வசந்தம்

[12/1, 07:01] N T Nathan: வசந்தம்

[12/1, 07:04] balakrishnan: வசந்தம்🙏
[
[12/1, 07:07] sankara subramaiam: வசந்தம்

[12/1, 07:13] prasath venugopal: வசந்தம்
[
[12/1, 07:16] siddhan subramanian: வசந்தம்
மிச்(சம் + வந்த)
[
[12/1, 07:22] மீ.கண்ணண்.: வசந்தம்
[
[12/1, 07:23] Dhayanandan: வசந்தம்

[12/1, 07:24] Ramki Krishnan: வசந்தம்
[
[12/1, 07:27] பாலூ மீ.: வசந்தம். வந்த + பாதி மிச் சம்
[
[12/1, 07:36] V N Krishnan.: வசந்தம்
[
[12/1, 07:37] Meenakshi: விடை;வசந்தம்
[
[12/1, 07:52] Sucharithra: வசந்தம்

[12/1, 07:53] nagarajan: *வசந்தம்*

[12/1, 07:55] ஆர். நாராயணன்.: வசந்தம்

[12/1, 08:33] Bharathi: *வசந்தம்*

[12/1, 09:01] Bhanu Sridhar: வசந்தம்

[12/1, 12:16] மாலதி: வசந்தம்
[
[12/1, 13:18] G Venkataraman: வசந்தம்

[12/1, 16:03] வானதி: வசந்தம்

***************************
Raghavan MK said…
[12/1, 20:52] sathish: வசந்தம்

[12/1, 20:53] கு.கனகசபாபதி, மும்பை: வசந்தம்
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-12-20)
From *Vanchinathan's* archive-
(*தென்றல்-2010*)
**********************
காதில் அணிவதற்கேற்ற தங்கம் மல்யுத்தத்தில் பெற்றது (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 02-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*காதணிகள் பலவிதம்! ஒவ்வொன்றும் தனிரகம்!*



எத்தனை திருத்தமாக உடை உடுத்தியிருந்தாலும், காதில் *கம்மல்* இல்லை என்றால் அந்த உடையலங்காரமே வீண். ஏழை முதல் பணம் படைத்த பெண் வரை அனைவரும் அவரவர் வசதிக்கேற்ப தோடுடையவர் தான். கல் கம்மல், தொங்கட்டான், ஜிமிக்கி, காது வளையம் ….. இன்னும் விதவிதமாக கம்மல் வகைகள் உண்டு. ஆடைகளின் நிறத்திற்கேற்ப கம்மல்கள் அணியும் பெண்கள் உண்டு.
**********************
*கம்மல்!* 
கொடுத்து வைத்ததடி உன் 
காதோர கம்மல் ஒவ்வொரு அசைவிலும் 
உன் கன்னத்தை தீண்டுதே!
**********************
*கம்மல்*

அவளின் 
காதணிந்த 
கம்மல் 
என் 
காதலையும் 
சேர்த்து 
ஆடிக்கொண்டு 
இருக்கிறது 
அவள் 
தலையசைக்க 
என் 
மனங்கலங்க.....
(இராகுல் கலையரசன்)
**********************
_காதில் அணிவதற்கேற்ற தங்கம் மல்யுத்தத்தில் பெற்றது (4)_

Its a hidden clue in
_தங்கம் மல்யுத்தத்தில்_
= தங் [ *கம்மல்* ] யுத்தத்தில்
= *கம்மல்*

= _காதில் அணிவதற்கேற்ற_
**********************
*ஜிமிக்கி கம்மல்*

_பாடல்_ : _எண்டம்மேடெ ஜிமிக்கி கம்மல்_
_மொழி : மலையாளம்_

*பொருள்* : என் அம்மாவின் ஜிமிக்கி கம்மலை என் அப்பா திருடிக்கொண்டு போய்விட்டார். பதிலுக்கு என் அம்மா, அப்பாவின் பிராந்தியை குடித்துவிட்டாள்.


_என்றம்மேடெ *ஜிமிக்கி கம்மல்*_
_என்றப்பன் கட்டோண்டு போயே.._

_என்றப்பன்றெ பிராந்திக்குப்பி_
_என்றம்ம குடிச்சு தீர்த்தே... (2)_
😂
**********************
*கம்மல்*
உன் மல்லிகையின் வாசம் 
பிடிக்கவோ 
இல்லை உன் புன்னகையின் 
வாசம் பிடிக்கவோ 
உன் *கம்மல்*
அலையாய் அலைகிறது

(சுதாகர் ராமகிருஷ்ணன்)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[12/2, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கம்மல்

[12/2, 07:01] balakrishnan: 🙏கம்மல்
[
[12/2, 07:03] V N Krishnan.: கம்மல்!
[
[12/2, 07:05] பாலூ மீ.: கம்மல்.
[
[12/2, 07:06] மீ.கண்ணண்.: கம்மல்
[
[12/2, 07:15] A Balasubramanian: கம்மல்
A.Balasubramanian
[
[12/2, 07:15] sankara subramaiam: கம்மல்
[
[12/2, 07:23] sathish: கம்மல்

[12/2, 07:32] Sucharithra: கம்மல்

[12/2, 07:38] Meenakshi: விடை:கம்மல்
[
[12/2, 07:48] G Venkataraman: கம்மல்

[12/2, 08:00] nagarajan: *கம்மல்*

[12/2, 08:11] Bhanu Sridhar: கம்மல்

[12/2, 08:39] N T Nathan: கம்மல்

[12/2, 08:49] Viji - Kovai: வளையம்

[12/2, 08:51] akila sridharan: கம்மல்
[
[12/2, 09:04] ஆர். நாராயணன்.: கம்மல்

[12/2, 09:12] மாலதி: கம்மல்
[
[12/2, 09:28] Dhayanandan: கம்மல்

[12/2, 09:45] Dr. Ramakrishna Easwaran: *கம்மல்*

[12/2, 07:21] chithanandam: கம்மல்

[12/2, 12:13] A D வேதாந்தம்: விடை= கம்மல்/ வேதாந்தம்.

[12/2, 12:21] வானதி: கம்மல்
[
[12/2, 14:42] ஆர்.பத்மா: கம்மல்
[
[12/2, 14:48] siddhan subramanian: காதில் அணிவதற்கேற்ற தங்கம் மல்யுத்தத்தில் பெற்றது (4) கம்மல்

[12/2, 17:53] கு.கனகசபாபதி, மும்பை: கம்மல்
[
[12/2, 17:55] balagopal: கம்மல்.🙏
************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-12-20)
From *Vanchinathan's* archive-
(*தென்றல்-2010*)
**********************
_இழுக்குந் தளையாம் இரும்பினில் பொன்னோ
கழுத்தினில் ஆடிடுங் காண் (4)_
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
சில சமயம் புதிரில் வேறு வழியின்றி சில சொற்களை நிரப்பும்படி அமைந்துவிடுகிறது.
சென்றமாதம் "விண்ணைத்தொட" ஓர் உதாரணம். கொஞ்சம் கற்பனை வறட்சியால், நேரடியான விளக்கத்தைத் தந்ததால் சுவாரசியமின்றிப் போய் வழக்கமாக எளிதாக விடை கண்டுபிடிப்பவரில் சிலர் தவறிவிட்டார்கள். இம்முறை அதுபோல் இன்னொன்று வரும்போலிருந்தது, அதைச் சரிக்கட்ட குறளாக ஒரு குறிப்பை  அமைத்துள்ளேன்.

வாஞ்சிநாதன்
*********************
Raghavan MK said…
A peek into today's riddle
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010*)
**********************
*சங்கிலி*

பொதுவாகப் பெரிய சங்கிலிகள்  *இரும்பினால்* 
செய்யப்படுகின்றன. இவை பாரமான பொருட்களைக் கட்டி உயர்த்துவது, கட்டி *இழுப்பது* போன்ற வலு தேவைப்படும் இடங்களில் பயன்படுகிறது.

அணிகலன்களாகப் பயன்படுபவை சிறிய சங்கிலிகள் ஆகும். இவை பெரும்பாலும் 
பிளாட்டினம்,  *பொன்* , வெள்ளி 
முதலிய விலை உயர்ந்த உலோகங்களினால் செய்யப்படுகின்றன.
**********************
_இழுக்குந் தளையாம் இரும்பினில் பொன்னோ_

_கழுத்தினில் ஆடிடுங் காண் (4)_

_It's a double definition clue for_ *சங்கிலி*

_இழுக்குந் தளையாம் இரும்பினில்_
= *சங்கிலி*
(தளையிட உதவும் இரும்பு சங்கிலி )

_பொன்னோ கழுத்தினில் ஆடிடுங் காண்_
= *சங்கிலி*
(மகளிர் கழுத்தினில் அணியும் தங்கச் சங்கிலி)
**********************
*சங்கிலி விளையாட்டு*
என்பது சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்.

சிறுவர் சிறுமியர் சேர்ந்து கைகளைக் கோத்துக்கொண்டு சங்கிலி வட்டம் அமைப்பர். வேறு இருவரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் வேங்கைப்புலி. மற்றொருவர் ஆடு. இலங்கையில் இதனைப் பசு என வைத்துக்கொண்டு விளையாடுவர். ஆடாக விளையாடுபவர் சங்கிலி வட்டத்துக்குள்ளேயும், வேங்கைப்புலியாக விளையாடுபவர் வெளியேயும் இருப்பார்கள். வேங்கைப்புலி ஆட்டைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டால் அடுத்த ஆட்டம். சங்கிலி வட்டத்தில் இருப்பவர் வேங்கைப்புலியை உள்ளேயோ வெளியேயோ விடாமல் தடுப்பர். தன் வலிமையால் சங்கிலியை அறுத்துக்கொண்டுதான் நுழைந்து பிடிக்க வேண்டும். ஆனால் கைகளை உயர்த்தி ஆட்டைத் தப்பியோட விட்டுவிடுவர். ஒத்துழைக்கும் மனப்பான்மையை வளர்க்கும் திளைப்பு விளையாட்டாக இது காணப்படுகின்றது.

இலங்கை விளையாட்டில் பாடும் பாடல்

*சங்கிலி புங்கிலி கதவைத் திற* (வேங்கைப்புலி கேட்கும்)
*நான் மாட்டேன் வேங்கைப்புலி* (சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)
*பசு நிற்குதோ?* (வேங்கைப்புலி கேட்கும்)
*இல்லை* (சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)
*பால்மணக்குதே...* (வேங்கைப்புலி கேட்கும்)
*பக்கத்து வீட்ட...* (சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)
*புல்லு போட்டு பாக்கட்டுமோ?* (வேங்கைப்புலி கேட்கும்)

பாட்டு நிறைவுபெற புலி சங்கிலியை உடைத்து பசுவைப்பிடிக்க முயற்சி செய்யும்.
🐄🐅🐄🐅🐄🐅
********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
*விடையளித்தோர் பட்டியல்*
************************

[12/3, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சங்கிலி

[12/3, 07:02] V N Krishnan.: சங்கிலி

[12/3, 07:04] Bhanu Sridhar: குந்தளை
[
[12/3, 07:04] பாலூ மீ.: நேற்று கம்மல். இன்று சங்கிலி.👌

[12/3, 07:15] chithanandam: சங்கிலி

[12/3, 07:17] akila sridharan: சங்கிலி
[
[12/3, 07:27] A D வேதாந்தம்: விடை= சங்கிலி/ வேதாந்தம்

[12/3, 07:45] Dhayanandan: சங்கிலி
[
[12/3, 07:50] Meenakshi: விடை:சங்கிலி

[12/3, 07:55] nagarajan: *சங்கிலி*
[
[12/3, 09:04] Dr. Ramakrishna Easwaran: *சங்கிலி*
[
[12/3, 12:01] siddhan subramanian: சங்கிலி

[12/3, 13:30] G Venkataraman: சங்கிலி

[12/3, 16:30] வானதி: சங்கிலி
Raghavan MK said…
அணித் தலைவரைத் தடுத்து மாற்றியதில் உடனே தொடர்வது (5)
Raghavan MK said…
இன்றைய உதிரிவெடி!*( 04-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
அணித் தலைவரைத் தடுத்து மாற்றியதில் உடனே தொடர்வது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
Raghavan MK said…
A peek into today's riddle
*********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
*மூதுரை* 
ஔவையார்

_*அடுத்து* முயன்றாலும் ஆகும் நாள் அன்றி_
_எடுத்த கருமங்கள் ஆகா-தொடுத்த_
_உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்_
_பருவத்தால் அன்றிப் பழா._ 

*பொருள்:*
கிளைகளோடு கூடிய நீண்ட மரங்கள் பருவத்தில் 
மட்டுமே பழங்களைத் தரும்.  அது போல அடுத்தடுத்து முயன்றாலும் 
நாம் செய்யும் காரியங்கள் தகுந்த காலம் கூடினால் மட்டுமே பயன் 
தரும்.
**********************
_அணித் தலைவரைத் தடுத்து மாற்றியதில் உடனே தொடர்வது (5)_

_அணித் தலைவரைத்_
= first letter in _அணி_
= *அ*
_மாற்றியதில்_
= anagram for *அ+தடுத்து*
= *அடுத்தது*

= _உடனே தொடர்வது_
**********************
*குறள் எண்:706*
அதிகாரம்:குறிப்பறிதல்

_*அடுத்தது* காட்டும் பளிங்குபோல் நெஞ்சம்_

_கடுத்தது காட்டும் முகம்_ 

பொழிப்பு
(மு வரதராசன்): 
தன்னை அடுத்த பொருளைத் தன்னிடம் காட்டும் பளிங்கு போல், ஒருவனுடைய நெஞ்சத்தில் மிகுந்துள்ளதை அவனுடைய முகம் காட்டும்.
*********************
தன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம் என்பது பாடலின் பொருள்.
' *அடுத்தது* காட்டும் பளிங்கு' என்றால் என்ன?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
தன்னை நெருங்கியுள்ள பொருளைக் காட்டவல்ல பளிங்குபோல ஒருவனுடைய நெஞ்சில் மிகுந்துள்ள குணத்தை முகமானது வெளிப்படுத்திவிடும்

கண்ணாடி தன்னை நெருங்கி இருக்கும் பொருளைக் காட்டும், அதுபோல ஒருவனது உள்ளத்தில் படும் உணர்ச்சிகளை அவன் முகம் காட்டிவிடும். முகத்தைப் பார்த்தே ஒருவன் மனஓட்டத்தை அறிந்துகொள்ளலாம். பிறரது மனநிலையைக் குறிப்பால் உணர்ந்து கொண்டு அதற்கேற்ற வகையில் தம் கருத்துக்களைத் தலைவனிடம் தெரிவித்து அறிவுரையாளர்கள் தம் குறிக்கோளை நிறைவேற்றுவர். அகக்குறிப்பறிந்து செயல்படுவதின் மூலம் ஆக்கமான செயல்களைச் செய்யமுடியும் என்பதோடு கேடான நிகழ்வுகளையும் தடுக்க முடியும். இது இப்பாடல் தரும் செய்தி.

' *அடுத்தது காட்டும் பளிங்கு* ' என்றதற்குத் தன்னை நெருங்கி இருக்கும் பொருளைக் காட்டும் பளிங்கு/கண்ணாடி என்பது பொருள்.

தன்னை நெருங்கிய பொருளைக் காட்டும் பளிங்கினைப் போல் உள்ளத்தில் உள்ள மிக்க உணர்ச்சிகளை வெளிக் காட்டும் முகம்
என்பது இக்குறட்கருத்து.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
Solvers list will be posted later pl
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[12/4, 07:05] திரைக்கதம்பம் Ramarao: அடுத்தது
[
[12/4, 07:06] மீ.கண்ணண்.: அடுத்தது
[
[12/4, 07:06] balakrishnan: அடுத்தது🙏
[
[12/4, 07:07] A Balasubramanian: அடுத்தது
A.Balasubramanian
[
[12/4, 07:11] பாலூ மீ.: அடுத்தது..
[
[12/4, 07:13] sankara subramaiam: அடுத்தது

[12/4, 07:16] Dr. Ramakrishna Easwaran: *அடுத்தது*

[12/4, 07:23] V N Krishnan.: அடுத்தது

[12/4, 07:26] sathish: அடுத்தது

[12/4, 07:26] akila sridharan: அடுத்தது
[
[12/4, 07:35] Dhayanandan: அடுத்தது

[12/4, 07:46] Meenakshi: அடுத்தது.
[
[12/4, 07:48] stat senthil: அடுத்தது

[12/4, 07:50] prasath venugopal: அடுத்தது

[12/4, 07:59] N T Nathan: அடுத்தது

[12/4, 08:00] nagarajan: *அடுத்தது*

[12/4, 08:13] Sucharithra: அடுத்தது
[
[12/4, 08:32] chithanandam: அடுத்தது

[12/4, 08:43] Bharathi: *அடுத்தது*

[12/4, 09:31] G Venkataraman: அடுத்தது

[12/4, 09:40] A D வேதாந்தம்: விடை= அடுத்தது/ வேதாந்தம்

[12/4, 10:18] ஆர். நாராயணன்.: அடுத்தது

[12/4, 10:41] Bhanu Sridhar: அடுத்தது

[12/4, 12:23] +91 94452 02463: Hi! This is Meenakshi Ganapathi. இன்றைய புதிரின் விடை: அடுத்தது

[12/4, 12:50] siddhan subramanian: அடுத்தது
[
[12/4, 13:14] ஆர்.பத்மா: அடுத்தது

[12/4, 13:50] Ramki Krishnan: அடுத்தது
[
[12/4, 17:47] கு.கனகசபாபதி, மும்பை: அடுத்தது

[12/4, 17:50] மாலதி: அடுத்தது

[12/4, 17:54] வானதி: அடுத்தது
**************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
தனது மாமி வேறுபாட்டால் தீவிரமற்றது (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
!A peek into today's riddle
********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-12-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2010* )
**********************
உடல்

மெல்லிய இசை இழையும்
ஒரு பின்னிரவில்
நீரோடு மிதந்து செல்லும்
உதிர்ந்த சருகு
*மிதமான* காற்றில்
தன் நகர்தலின் வலி அறியாது
அசைகிறது காகிதம்
மெல்லக் கேட்கும் மூச்சொலியில்
பொதிந்து கிடக்கும் வேகத்தை
பேரிரைச்சலாக்கிக் காட்டுகிறது
தத்தித் தத்தி நகரும் கடிகார முள்
பெரும் உறக்கத்துடன்
திறந்து கிடக்கும் விழிகளில்
சத்தமின்றி
தோன்றித் தோன்றி மறையும்
தொலைக்காட்சி வெளிச்சம்
ஏதோ கனவு கண்டு
தானறியாமல் அவள் சிரித்த மின்னலுடன்
மலரும் தாழம்பூ வாசமதில்
அடுத்த கட்டம் நோக்கி நகர்கிறது
ஆறுதலை நாகம்

(ஹரன்பிரசன்னா)
**********************
_தனது மாமி வேறுபாட்டால் தீவிரமற்றது (5)_

_வேறுபாட்டால்_
= anagram indicator for _தனது மாமி_
= *மிதமானது*

= _தீவிரமற்றது_
**********************
*மிதமான* வெயில்..
இதமான காற்று..
எங்கோ செல்ல நினைத்து 
தொடரப்பட்ட பயணம்..
இங்கே போக 
ஒரு முடிவு..
முடிவுக்கு ஏற்றவாறு 
வண்டியின் போக்கு..
சாலையின் இரைச்சல் 
அதிலும் அவள் 
சொல்லும் ம்ம்ம்..
வெட்கம் பிரதிபலிக்கும்
பக்க கண்ணாடிகள்..
சாலையின் வளைவுகளுக்கு
இணங்கிய கம்மலாட்டம்..
காதலை சொல்லாது
தொட்டு செல்லும்
அவள் விரல்கள்..
எனது தோளில்
சாய்ந்து கொண்டு
காதில் காதலை சொல்கிறாள்.

என்னை மறந்து
மேகங்களை பார்த்து 
கண்களை மூடிய
நான் முடிவற்ற 
இந்த பயணம் 
வாழ் நாள் 
முழுவதும் தொடர்வதற்குள்..

கன்னத்தை தட்டுகிறாள்..
கண்களை விழித்து 
பார்த்தால்...

அம்மா சொல்கிறாள்
மணி 8 ஆச்சு 
இன்னமும் தூங்கிகிட்டு
ஆபிஸ் கிளம்பு...

(முகநூல் பதிவு)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[12/5, 06:59] திரைக்கதம்பம் Ramarao: மிதமானது

[12/5, 07:01] A Balasubramanian: மிதமானது
A.Balasubramanian

[12/5, 07:03] balakrishnan: மிதமானது🙏

[12/5, 07:06] G Venkataraman: மிதமானது
[
[12/5, 07:06] மீ.கண்ணண்.: மிதமானது

[12/5, 07:08] பாலூ மீ.: மிதமானது
[
[12/5, 07:08] மாலதி: மிதமானது
[
[12/5, 07:13] sankara subramaiam: மிதமானது

[12/5, 07:14] akila sridharan: மிதமானது
[
[12/5, 07:14] Meenakshi: விடை:மிதமானது
[
[12/5, 07:26] Dr. Ramakrishna Easwaran: மிதமானது
[
[12/5, 07:28] chithanandam: மிதமானது
[
[12/5, 07:37] prasath venugopal: மிதமானது

[12/5, 07:54] N T Nathan: மிதமானது
[
[12/5, 07:58] Ramki Krishnan: மிதமானது

[[12/5, 07:59] ஆர். நாராயணன்.: மிதமானது
[
[12/5, 08:01] nagarajan: * மிதமானது*
[
[12/5, 08:23] stat senthil: மிதமானது
[
[12/5, 08:27] கு.கனகசபாபதி, மும்பை: மிதமானது
[
[12/5, 08:28] siddhan subramanian: மிதமானது
[
[12/5, 08:34] Bharathi: மிதமானது
[
[12/5, 08:41] ஆர்.பத்மா: மிதமானது
[
[12/5, 08:46] Bhanu Sridhar: மிதமானது
[
[12/5, 08:57] Sucharithra: மிதமானது
[
[12/5, 10:02] Dhayanandan: மிதமானது
[
[12/5, 10:28] shanthi narayanan: மிதமானது
[
[12/5, 10:35] வானதி: மிதமானது

[12/5, 12:33] balagopal: Anagram of தனதுமாமி. மிதமானது..
[
[12/5, 18:37] +91 94452 02463: மீனாக்ஷி கணபதி- மிதமானது
*******************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்