காலை வெளியான வெடி
ஊர் தண்டிக்க முதல் பாண்டியன் வாலறுப்பு (3)
அதற்கான விடை:
தவழு = த + வழு த = தண்டிக்க, என்பதன் முதலெழுத்து வழு = வழுதி (பாண்டிய மன்னர்களுக்கான பெயர்),"தி" என்ற வாலின்றி வந்துள்ளது. ஏதோ சாண்டில்யன் கதைகளில் பெருவழுதி, இளவழுதி என்று படித்த ஞாபகம். ஊர்தல் என்றால் தவழுதல் (குழந்தை ஊர்ந்து சென்றது) இன்றைய வெடி எப்போதோ செய்திருந்த பழம்புதிரைச் சற்று மாற்றியமைத்தது. இதே சொல்லுக்கு அப்போது ஊர் தண்டித்த முதல் குற்றம் (3) என்று குறிப்பை எழுதியிருந்தேன். வழு = குற்றம்; சிறையிலடைக்கும்படியான குற்றமில்லை, இலக்கணப் பிழையெனும் குற்றங்களை வழு என்பார்கள்).
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
ஊர் தண்டிக்க முதல் பாண்டியன் வாலறுப்பு (3)
அதற்கான விடை:
தவழு = த + வழு த = தண்டிக்க, என்பதன் முதலெழுத்து வழு = வழுதி (பாண்டிய மன்னர்களுக்கான பெயர்),"தி" என்ற வாலின்றி வந்துள்ளது. ஏதோ சாண்டில்யன் கதைகளில் பெருவழுதி, இளவழுதி என்று படித்த ஞாபகம். ஊர்தல் என்றால் தவழுதல் (குழந்தை ஊர்ந்து சென்றது) இன்றைய வெடி எப்போதோ செய்திருந்த பழம்புதிரைச் சற்று மாற்றியமைத்தது. இதே சொல்லுக்கு அப்போது ஊர் தண்டித்த முதல் குற்றம் (3) என்று குறிப்பை எழுதியிருந்தேன். வழு = குற்றம்; சிறையிலடைக்கும்படியான குற்றமில்லை, இலக்கணப் பிழையெனும் குற்றங்களை வழு என்பார்கள்).
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
********************
*பெயர், வினை பொதுச் சொற்கள்*
ஒரே சொல், பெயராகவும் பயன்படும்; வினைஆகவும்
பயன்படும். அந்தச் சொல் தொடரில் எப்படி வந்துள்ளது
என்பதை வைத்துத்தான் அது பெயர்ச்சொல்லா, வினைச்சொல்லா
என்று தீர்மானிக்க முடியும்.
அப்படி வரும் சில பொதுச் சொற்கள் தமிழில் உள்ளன.
அவை,
*அடி*
நீட்டல்அளவு, கால் -பெயர்
அடிப்பாய்-வினை
*அணி*
நகை -பெயர்
அணிந்துகொள்-வினை
*இசை*
பாடல் ஒலி-பெயர்
இணங்கு-வினை
*இறை*
கடவுள்- பெயர்
சிதறு-வினை
*ஊர்*
பதி, நகரம் - பெயர்
ஊர்தல், *தவழு* - வினை
********************
_ஊர் தண்டிக்க முதல் பாண்டியன் வாலறுப்பு (3)_
_தண்டிக்க முதல்_ = *த*
_பாண்டியன்_
= *வழுதி*
_வாலறுப்பு_
= *வழுதி-தி*
= *வழு*
_ஊர்_ = *த+வழு*
= *தவழு*
********************
*வழுதி என்னும் சொல் பாண்டிய அரசர்களின் பெயர்களில் ஒன்று.*
********************
*புறநானூறு 59*
*****************
பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறனை மதுரைக் கூல வாணிகன் சீத்தலைச் சாத்தனார் பாடியது.
*****************
பொன்மாலை உன் மார்புக்கு அழகு செய்கிறது. கால் அடியைத் தொடும் உன் கைகள் உனக்குத் தோற்றத்தைத் தருகின்றன. அழகிய தோற்றம் உடைய *வழுதியே!*
நீ யாவர்க்கும் உவந்து அளிப்பதில் பெருமகிழ்வு கொள்கிறாய்.
நீ மற்றவர்கள் யாவர் எத்தகையர் என்பதை ஆராய்ந்து அறிக: எது பொய் எது மெய் என்பது ஆராய்ந்து அறிக: பிறர் கூறும் பொய்மைக்கு அடி பணியாதே.
நீ பகைவர் மாட்டுச் சினத்தோடு எதிர்க்கவும்; கடலில் காலையில் எழும் ஞாயிறுபோல் அவர்களைக் காய்வாயாக; எம்மைப் போன்றவர்க்கு நீ திங்களைப் போல் அருள் செய்வாயாக.
*பாடல்:*
ஆரம் தாழ்ந்த அணி கிளர் மார்பின், தாள் தோய் தடக் கைத் தகை மாண் வழுதி! வல்லை மன்ற, நீ நயந்து அளித்தல்; தேற்றாய், பெரும பொய்யே; என்றும் காய் சினம் தவிராது கடல் ஊர்பு எழுதரும் ஞாயிறு அனையை, நின் பகைவர்க்குத் திங்கள் அனையை, எம்மனோர்க்கே.
*****************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 09-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஏகப்பட்ட மேலாடை நாடகத்தளம் நீங்கிய முன்னே நினைத்து இருப்பது (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் ,
காணாத கண்களை காண வந்தாள்
பேசாத மொழியெல்லாம் பேச வந்தாள் ,
பெண் பாவை நெஞ்சிலே ஆட வந்தாள்.....
*மேலாடை* தென்றலில் ஆஹா ஹா ,
பூவாடை வந்ததே ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
கையோடு வளையலும் ஜல் ஜல் ஜல் ,
கண்ணோடு பேசவா சொல் சொல் சொல்...
பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள்
(வீரத் திருமகன் 1962)
**********************
_ஏகப்பட்ட மேலாடை நாடகத்தளம் நீங்கிய முன்னே நினைத்து இருப்பது (4)_
_நாடகத்தளம்_
= *மேடை*
_நாடகத்தளம் நீங்கிய மேலாடை_
= *மேலாடை-மேடை*
= *லா*
_நினைத்து இருப்பது_
= *எண்ணி*
_முன்னே_
= indicator to place *எண்ணி* before *லா*
= *எண்ணிலா*
= _ஏகப்பட்ட_
**********************
*ஏகப்பட்ட மேலாடை*
😂😂
_“விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்”_
உவமை கவிஞர் சுரதாவின் வரிகளில் ; வி.குமாரின் தேனிசையில் பாடல்.
ஆள் பாதி ஆடை பாதி என்பது பழமொழி. கவிஞர் சொன்ன *மேலாடை* வரிகளை கேட்டால் பல விஷயங்களை புதிய கோணத்தில் பார்க்க தோன்றும்.
_மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு_ என்பதும்,
_மனதிற்கு மேலாடை வளர்ந்து வரும் நினைவு_
என்பதும் நயமான கற்பனை!
பாடியவர்கள் இருவருமே ஒவ்வொரு வரிகளையும் ரசித்து பாடியிருப்பார்கள். _பத்துக்கு மேலாடை_ என்ற இடத்தில் விடை தெரியாமல் சுசீலாம்மா செய்யும் ஆலாபனை சூப்பர்.
எளிய பின்னணி இசை. வயலினையும் குழலையும் இணைப்பிசையில் அளவோடும் கற்பனை வளமோடும் பயன்படுத்தி இருப்பார் வி.குமார்.
வானை எட்டும் தொழில்நுட்ப வசதிகளை வைத்துக் கொண்டும் இப்படி ஒரு இனிய பாடலை தற்போதைய இசையமைப்பாளர்களால் கொடுக்க முடியாதது துரதிர்ஷ்டவசமானது😟
பாடல் வரிகள்:
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
கண்ணுக்கு மேலாடை காக்கும் இரு இமைகள்
கனவுக்கு மேலாடை தொடர்ந்து வரும் தூக்கம்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
மண்ணுக்கு மேலாடை
ம் ம் ம் ..மண்ணுக்கு மேலாடை ரா ரா ரா
மண்ணுக்கு மேலாடை மரத்தின் நிழலாகும்
ஹையே
மண்ணுக்கு மேலாடை வண்ண மயில் இருட்டு
மனதிற்கு மேலாடை
வளர்ந்து வரும் நினைவு
பத்துக்கு மேலாடை
பத்துக்கு மேலாடை..ஆ ஆ ஆ ஆ ஆ
ஆஹா
ஆ ஆ ஆ ஆ
நிறுத்து..ராகம் பாடாதே..பதிலைச் சொல்லு
பத்துக்கு மேலாடை
தெரியலையா? ம் சொல்லட்டுமா?
பத்துக்கு மேலாடை பதினொன்றேயாகும்
பக்கத்தில் நீ இருந்தால் பல கதை உருவாகும்
விண்ணுக்கு மேலாடை பருவ மழை மேகம்
வீணைக்கு மேலாடை நரம்புகளின் கூட்டம்
படம்: நாணல் (1965)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[11/9, 07:01] திரைக்கதம்பம் Ramarao: எண்ணிலா
[11/9, 07:04] balakrishnan: 🙏எண்ணிலா
[11/9, 07:08]
எண்ணிலா-------கி.பா( KB)
[11/9, 07:11] மீ.கண்ணண்.: எண்ணிலா
[11/9, 07:15] sankara subramaiam: எண்ணிலா
[11/9, 07:15] chithanandam: எண்ணிலா
[
[11/9, 07:17] Meenakshi: விடை:எண்ணிலா
[11/9, 07:28] Dr. Ramakrishna Easwaran: *எண்ணிலா*
[11/9, 07:37] மாலதி: எண்ணிலா
[11/9, 07:44] akila sridharan: எண்ணிலா
[11/9, 07:50] nagarajan: *எண்ணிலா*
[
[11/9, 07:51] ஆர். நாராயணன்.: எண்ணிலா
[11/9, 09:02] பாலூ மீ.: எண்ணிலா
[11/9, 09:52] Bhanu Sridhar: அளவிலா
[11/9, 10:50] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:எண்ணிலா
[
[11/9, 11:52] shanthi narayanan: எண்ணிலா
[11/9, 12:29] Viji - Kovai: எண்ணிலா
[11/9, 12:39] Dhayanandan: எண்ணிலா
[11/9, 14:02] sathish: எண்ணிலா
[11/9, 14:29] பானுமதி: எண்ணிலா
[
[11/9, 16:03] ஆர்.பத்மா: எண்ணிலா
[
[11/9, 19:10] கு.கனகசபாபதி, மும்பை: எண்ணிலா
[11/9, 19:30] Ramki Krishnan: எண்ணிலா
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
குயில் இசைக்க கடைசியாக வெள்ளம் பாய்ந்த ஆறு (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
********************
*இன்றைய உதிரிவெடி!*( 10-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*மரபுச்சொற்கள்*
மரபுச்சொற்கள் மரபு ரீதியாக வழங்கிவரும் சொற்களைக் குறிக்கும்.
உதாரணமாக, பறவைகள், விலங்குகள் முதலான உயிரினங்களின் ஒலிகளையும் அவை ஒலிக்கும் முறைகளையும் இவ்வாறு கூற வேண்டுமென, முன்னோர் கூறிய மரபினைத் தொன்றுதொட்டுப் பின்பற்றி வருகின்றனர். “நாய் கத்தியது” எனக் கூறுவது வழக்கம். அவ்வாறு கூறுதல் கூடாது. “நாய் குரைத்தது” என்பதே உரிய மரபுத் தொடர்ச் சொல் ஆகும். இவ்வாறு வரும் சில மரபுகள் கீழே உள்ளன.
*உயிரினம் ஒலி(மரபு)*
ஆடு கத்தும்
எருது எக்காளமிடும்
குதிரை கனைக்கும்
குரங்கு அலப்பும்
சிங்கம் முழங்கும்
நரி ஊளையிடும்
புலி உறுமும்
பூனை சீறும்
யானை பிளிறும்
எலி கீச்சிடும்
ஆந்தை அலறும்
காகம் கரையும்
கிளி பேசும்
*குயில் கூவும்*
கூகை குழறும்
கோழி கொக்கரிக்கும்
சேவல் கூவும்
புறா குனுகும்
மயில் அகவும்
வண்டு முரலும்
பசு கதறும்
**********************
_குயில் இசைக்க கடைசியாக வெள்ளம் பாய்ந்த ஆறு (3)_
_குயில் இசைக்க_
= *கூவ*
_கடைசியாக வெள்ளம்_ = *ம்*
_பாய்ந்த ஆறு_
= *கூவ+ம்*
= *கூவம்*
**********************
*கூவம் நதி உயிரோடுதான் இருக்கிறது...*
*‘கூவம்’* என்றாலே சாக்கடை, அழுக்கின் அடையாளச் சொல் என்ற நிலை இருக்கிறது. ஆனால், _‘தேம்ஸ் ஆஃப் மெட்ராஸ்’_ என லண்டன் தேம்ஸ் நதிக்கு இணையாக இதே கூவத்தை ஆராதித்தவர்கள் ஆங்கிலேயர்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். 1950-ம் ஆண்டுக்கு முன்னர் படகு போக்குவரத்துக்கும், மக்கள் மீன் பிடித்து உண்ணும் சுற்றுலாதலமாகவும் இருந்த கூவம், மனிதத் தவறுகளால் இன்றைக்கு மரணத்தை நோக்கி நகர்ந்து வருகிறது.
*‘கூவம் இன்னும் சாகவில்லை. உயிரோடுதான் இருக்கிறது. அதைக் காப்பாற்றுவது நமது கையில்தான் இருக்கிறது’*
(Vikatan Correspondent)
*************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[11/10, 07:00] sathish: கூவம்
[11/10, 07:00] chithanandam: கூவம்
[11/10, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கூவம்
[11/10, 07:01] thiru subramanian: கூவம்
[
[11/10, 07:01] Sucharithra: கூவம்
[11/10, 07:03] Dhayanandan: கூவம்
[11/10, 07:03] மீ.கண்ணண்.: கூவம்
[
[11/10, 07:06] A D வேதாந்தம்: விடை= கூவம்/ வேதாந்தம்.
[11/10, 07:07] பாலூ மீ.: கூவம்.
[
[11/10, 07:09] balakrishnan: கூவம். 👍🙏
[11/10, 07:11] sankara subramaiam: கூவம்
[
[11/10, 07:12] V N Krishnan.: கூவம்
[11/10, 07:14] Meenakshi: விடை :கூவம்
[11/10, 07:17] akila sridharan: கூவம்
[
[11/10, 07:18] Bhanu Sridhar: கூவம்
[11/10, 07:28] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கூவம்.
[11/10, 07:34] stat senthil: கூவம்
[11/10, 07:46] Viji - Kovai: கூவம்
[11/10, 07:47] nagarajan: *கூவம்*
[
[11/10, 07:52] கு.கனகசபாபதி, மும்பை: கூவம்
[11/10, 08:03] siddhan subramanian: கூவம்
[
[11/10, 08:04] Ramki Krishnan: கூவம்
[11/10, 08:20] ஆர். நாராயணன்.: கூவம்
[11/10, 10:00] G Venkataraman: கூவம்
[
[11/10, 10:20] வானதி: கூவம்
[11/10, 11:42] பானுமதி: கூவம்
[11/10, 07:43] Dr. Ramakrishna Easwaran: கூவம்
I found interesting info on Cooum river https://www.indiawaterportal.org/articles/muck-tale-how-cooum-lost-its-holy-status
info on Cooum river
[11/10, 11:48] shanthi narayanan: கூவம்
[11/10, 12:10] ஆர்.பத்மா: கூவம்
[11/10, 12:24] N T Nathan: கூவம்
[11/10, 18:51] bala: கூவம்
-பாலா
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
வீங்கு அல்லது கழி (2)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
J.P.Fabricius Tamil and English Dictionary
*தடி* :
taṭi VI v. i. grow thick, thicken, congeal, உறை; 2. swell (as the body from strokes) *வீங்கு* ; 3. become heavy and fat (as men and animals) பரு; 4. delay, linger, தாமதி.
**********************
தமிழ் தமிழ் அகரமுதலி
*தடி* :
*கழி* ; தண்டாயுதம்; தடிக்கொம்பு;
**********************
*” கலி – களி – கழி ”*
இந்தக் கலியில்
அயோக்கியர் எலாம் களித்திருக்கின்றார்
நன்மாந்தர் களி தின்கிறார்
ஆனால்
யாரும் வினை கழியும் வகை அறிந்திலார்
(வெங்கடேஷ்)
**********************
*வீங்கு அல்லது கழி (2)*
Double definition type of clue
வீங்குதல் = தடித்தல்
வீங்கு = தடி
கழி = தடி
**********************
_தணந்தமை சால அறிவிப்ப போலும்_
_மணந்தநாள் *வீங்கிய* தோள்_
(அதிகாரம்:உறுப்புநலனழிதல் குறள் எண்:1233)
*பொழிப்புரை:*
கூடியிருந்த காலத்தில் மகிழ்ந்து பூரித்திருந்த தோள்கள், (இப்போது மெலிந்து) காதலருடைய பிரிவை நன்றாக அறிவிப்பவைபோல் உள்ளன.
**********
கணவரோடு கூடியிருந்த நாளில் பருத்திருந்த தோள்கள், இப்போது மெலிவடைந்தமையால், அவர் நீங்கிச் சென்றுள்ளமையை நன்றாகச் சொல்பவை போலும்.
தணந்தமை என்ற சொல் காதலர் பிரிந்து சென்றுள்ளது குறித்தது.
சால அறிவிப்ப போலும் என்ற தொடர் மிகவும் தெரிவிப்பன போலும் என்ற பொருள் தரும்.
வீங்கிய தோள் என்ற தொடர் (மகிழ்ச்சியால்) பூரித்த தோள்கள் என்ற பொருள் தரும்.
பணி காரணமாகப் பிரிந்து சென்றுள்ளார் தலைவர். காதலிக்கு அப்பிரிவு ஆற்றொண்ணாத் துயர் தருகிறது. ஊணும் உறக்கமும் இழந்து உடல் மெலிந்து வாடுகிறாள். அவள் தன் தோள்களைப் பார்க்கிறாள். காதலரின் உறவு ஏற்பட்ட பொழுதில் அவை மகிழ்ச்சியால் பெருத்திருந்தன. அந்தப் பூரித்த நிலையைக் கண்ட அவள் இப்போது தோள்கள் வாடியிருப்பதைக் கண்டதும், 'கணவர் இன்று நாளிடையிட்டு நின்ற பிரிவையும் குறித்த பருவத்து வாராமையையும் இந்தத் தோள்கள் நன்றாக அறிவித்துவிடும் போல' என்கிறாள்.
**********************
💐👇🏽💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[11/11, 07:03] balakrishnan: தடி. 👌🙏
[11/11, 07:04] திரைக்கதம்பம் Ramarao: தடி
[11/11, 07:04] A D வேதாந்தம்: விடை= புடை/ வேதாந்தம்.
[
[11/11, 07:06] V N Krishnan.: தடி(வீங்கு) கழி
[11/11, 07:07] prasath venugopal: தடி
[11/11, 07:10] பாலூ மீ.: விடை: தடி
[11/11, 07:10] Meenakshi: விடை:தடி
[11/11, 07:11] மீ.கண்ணண்.: தடி
[11/11, 07:16] sathish: தடி
[11/11, 07:18] sankara subramaiam: தடி
[11/11, 07:32] கு.கனகசபாபதி, மும்பை: தடி
[
[11/11, 07:36] மாலதி: தடி
[
[11/11, 07:38] Sucharithra: தடி
[11/11, 07:44] Ramki Krishnan: தடி
[11/11, 07:54] siddhan subramanian: தடி
[11/11, 08:06] வானதி: புடை
[11/11, 08:11] nagarajan: *தடி*
[
[11/11, 08:22] ஆர். நாராயணன்.: தடி
[
[11/11, 08:46] Viji - Kovai: 11.11.20 விடை
தடி
[11/11, 08:52] Bhanu Sridhar: தடி
[11/11, 09:10] Dhayanandan: பரு
[11/11, 09:28] Dr. Ramakrishna Easwaran: *மிக* ?
சால, உறு, தவ, நனி, கூர், *கழி* என்னும் ஆறு உரிச்சொற்கள் ‘மிகுதி’ என்னும் ஒருகுணத்தை (பொருளை) உணர்த்தும் சொற்களாகும்.
சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் பாடுகின்றார்:-
‘ *வீங்கு* நீர் அருவி வேங்கடம் என்னும்
ஓங்கு உயர் மலயத்து உச்சி மீமிசை
மின்னும் கோடி உடுத்து, விளங்கு விற்பூண்டு
நன்னிற மேகம் நின்றது போலப்
பகையணங்கு ஆழியும், பால்வெண் சங்கமும்
தகைபெறு தாமரைக் கையில் ஏந்தி
நலம் கிளர் ஆரம் மார்பிற் பூண்டு
பொலம் பூ ஆடையிற் பொலிந்து தோன்றிய
செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும்’
[11/11, 10:01] Bharathi: மிகு
[11/11, 11:25] ஆர்.பத்மா: தடி
[11/11, 11:41] akila sridharan: தடி
[11/11, 12:10] shanthi narayanan: தடி
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
நீரில்லாமல் பூச்சி இறகை இடையே செருகியது (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
அழகு சிரிக்கின்றது………. ஆசை துடிக்கின்றது
பழக நினைக்கின்றது…….. பக்கம் வருகின்றது
பக்கம் வருகின்றது………. வெட்கம் தடுக்கின்றது
காதல் கனிகின்றது………. கையில் விழுகின்றது (அழகு)
*வண்டு வருகின்றது மலரில் அமர்கின்றது*
உண்டு சுவைகின்றது உறங்கி விழுகின்றது
வானம் பொழிகின்றது பூமி நனைகின்றது
மேனி குளிர்கின்றது வெள்ளம் வழிகின்றது (அழகு)
படம்:
இருவர் உள்ளம்(1963)
**********************
_நீரில்லாமல் பூச்சி இறகை இடையே செருகியது (4)_
_பூச்சி_ = _வண்டு_
_இறகை இடையே_
= *[இ]ற[கை]*
= *ற*
_செருகியது_ = indicator for placing *ற* inside *வண்டு*
= *வறண்டு*
= _நீரில்லாமல்_
**********************
*பரிபாடல் Paripadal 10*
_இது வையை நீராட்டு விழாவைப் பாடும் அகப்பொருள் பாடல்._
மதி மாலை மால் இருள் கால் சீப்ப, கூடல்
வதி மாலை, மாறும் தொழிலான், புதுமாலை
நாள் அணி நீக்கி, நகை மாலைப் பூவேய்ந்து,
தோள் அணி, தோடு, சுடர் இழை, நித்திலம்; 115
பாடுவார் பாடல், பரவல், பழிச்சுதல்,
ஆடுவார் ஆடல், அமர்ந்த சீர்ப் பாணி,
நல்ல கமழ் தேன் அளி வழக்கம், எல்லாமும்,
பண் தொடர்
*வண்டு* பரிய எதிர் வந்துஊத,
கொண்டிய *வண்டு* கதுப்பின் குரல்ஊத, 120
தென் திசை நோக்கித் திரிதர்வாய்; மண்டு கால் சார்வா,
நளிர் மலைப் பூங்கொடித் தங்குபுஉகக்கும்
பனி வளர் ஆவியும் போன்ம், மணிமாடத்து
உள் நின்று தூய பனிநீருடன் கலந்து,
கால் திரிய ஆர்க்கும் புகை. 125
*******
மாலை வேளையில் மதியம் வானில் புறப்பட்டது.
கூடல் நகரில் பல்வேறு தொழில்கள் நடைபெற்றன. புதிய மாலைப் பொழுது. மக்கள் பகலில் அணியும் அணிகலன்களைக் களைந்தெறிந்தனர். மலரும் பூமாலைகளை அணிந்துகொடனர். தோள்-அணி, தோடு, சுடரும் அணிகலன், முத்துமாலை முதலானவற்றை அணிந்துகொண்டனர். பாடுபவர் பாடல், கடவுளைப் போற்றுதல், மக்களைப் போற்றுதல், ஆடுபவர்களின் ஆட்டம், அமர்ந்துகொண்டு பாடுபவர்களின் இசைப்பாட்டு முதலானவை நிகழ்ந்தன.
மகளிர்தங் கூந்தலிலே ஆரவாரிக்கின்ற நறுமணங்
*கமழாநின்ற தேனைச் செய்யும் வண்டுகள்* வழங்கும் வழக்கமும் ஆகிய
இவற்றால் எழுந்த ஓசையோடே, *பண் தொடர் வண்டு -* பாடுகின்ற
பண்ணொலியைக் கேட்டுத் தம்மினம் என்று கருதி ஊரினின்று வருகின்ற
வண்டுகள், பரிய எதிர்வந்து ஊத - அங்ஙனம் பாடுபவர் வருந்தும்படி
அவரெதிரே மொய்த்துப் பாடாநிற்ப, கதுப்பின் கொண்டிய *வண்டு* இன்
குரல் ஊத - முன்னர் முல்லை முதலியவற்றை அணிந்தனர் எனக்
கூறப்பட்ட மகளிருடைய கூந்தலில் அம் மலர்களிற் றேனைக் கொள்ளை
கொண்டுண்டிருந்த *வண்டுகளும்* அவற்றோடே கூடி இன்குரலானே
ஆரவாரிப்ப,
தென்திசையில் திரிந்த காற்று சன்னலாகிய காலதர் வழியே வீசிற்று. இதனை மாலைப்பொழுது என்னும் பெண் பெரிதும் விரும்பினாள். எங்கும் பனியானது வளர்க்கும் மூடுபனி ஆவி போல் மாடங்களில் மணப்புகை மண்டலம்.
************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[11/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வறண்டு
[
[11/12, 07:01] sathish: வறண்டு
[
[11/12, 07:02] balakrishnan: வறண்டு
[
[11/12, 07:09] V N Krishnan.: வறண்டு
[11/12, 07:13] stat senthil: வறண்டு
[11/12, 07:15] Meenakshi: விடை:வறட்சி
[
[/12, 07:17] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:வறண்டு
[
[11/12, 07:21] பாலூ மீ.: விடை வ( ற)ண்டு வறண்டு
[11/12, 07:22] siddhan subramanian: வறண்டு (வண்டு + ற)
[11/12, 07:28] A Balasubramanian: வறண்டு
A.Balasubramanian
[
[11/12, 07:39] ஆர். நாராயணன்.: வறண்டு
[
[11/12, 07:45] A D வேதாந்தம்: விடை= வறண்டு/, வேதாந்தம்.
[
[11/12, 07:54] மீ.கண்ணண்.: வறண்டு
[11/12, 08:04] nagarajan: *வறண்டு*
[11/12, 08:10] கு.கனகசபாபதி, மும்பை: வறண்டு
[
[11/12, 08:15] N T Nathan: வறண்டு
[11/12, 08:15] மாலதி: Varanndu. வறண்டு
[
[11/12, 08:40] akila sridharan: வறண்டு
[11/12, 09:14] Ramki Krishnan: வறண்டு
[11/12, 09:24] ஆர்.பத்மா: வறண்டு
[11/12, 11:34] G Venkataraman: வறட்சி
[11/12, 11:47] shanthi narayanan: வறண்டு
[
[11/12, 13:56] வானதி: வறண்டு
[11/12, 15:57] sankara subramaiam: வறண்டு
[11/12, 07:06] Dr. Ramakrishna Easwaran: *வறண்டு*
இறகை இடையே= ற
பூச்சி= வண்டு
நீரில்லாமல்= பொருள்
[
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 13-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
போரில் விரும்பிய முடிவு இல்லை இறுதியாகச் சுண்ணாம்போடு செல்லும் (4)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது?*
ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார். மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.
சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி,""இதன் பெயர் என்ன?'' என்று கேட்டார். மாணவனும் " *வெற்றிலை* ' என்றான்.
""அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.
*மகா சுவாமிகள் கூறினார், ""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும்.* *அதனால் அது வெற்று இலை ஆயிற்று'' என்று கூறினார்*
**********************
வெற்றிலை மூன்று ரகத்தில் பயிர் செய்யப்படுகிறது. . கருப்பு நிறம் இல்லாத தளிர் நிறம் உள்ள வெற்றிலைக்கு வெள்ளை வெற்றிலை என்று பெயர்.இது மணமாக இருக்கும். கருப்பு நிறத்தில் உள்ள வெற்றிலைக்கு கருப்பு வெற்றிலை அல்லது கம்மாறு வெற்றிலை என்று பெயர். கற்பூர மணம் உள்ள வெற்றிலை தாமரை இலை போன்று பெரியதாகவும் நல்ல நிறத்தோடும் இருக்கும்.இதற்கு கற்பூர வெற்றிலை என்று பெயர். இந்த மூன்று விதமான வெற்றிலைகளும் சுவையில் விறுவிறுப்பு பொருந்திய கார்ப்புத்தன்மை உடையதாகும்.
**********************
_போரில் விரும்பிய முடிவு இல்லை இறுதியாகச் சுண்ணாம்போடு செல்லும் (4)_
_போரில் விரும்பிய முடிவு_
= *வெற்றி*
_இல்லை இறுதியாக_
= *(இல்)லை = லை*
_சுண்ணாம்போடு செல்லும்_
= *வெற்றி+ லை*
= *வெற்றிலை*
**********************
*வெற்றிலை ஒரு மருத்துவ மூலிகையாகும்.* வெற்றிலை பசியை தூண்டக் கூடியது. கோழை இளக, வயிற்றுக் கோளாறு நீக்க, அஜீரணத்தை போக்க வெற்றிலை பயன்படுத்தலாம். பொதுவாக இருமல் - சளி, ஆஸ்துமா, மூச்சுக்குழல் அலர்ஜி, வாத நோய், நுரையீரல் மற்றும் அல்சர் போன்ற நோய்களை போக்கக்கூடிய மருத்துவ குணங்கள் கொண்டது வெற்றிலை. வெற்றிலையுடன் பாக்கு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.
வெற்றிலை உடன் பாக்கு குறைவாகவும், சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும் சேர்த்து சாப்பிட்டால் பசி எடுக்காதவர்களுக்கு பசி எடுக்கும்.
**********************
_கொட்டா பாக்கும் கொழுந்து வெத்தலையும் போட்டா வாய் சிவக்கும்_
_மச்சான் நீயும்_
_மச்சினி நானும்_
_தொட்டா தூள் பறக்கும்__
_ஹே நாக்கு செவக்க சுண்ணாம்பு வேணும்_
(படம் : நாட்டாமை 1994)
**********************
_வெத்திலை போட்ட பத்தினிப் பொன்னு_
_சுத்துது முன்னாலே_
_வெட்டுது கண்ணு சொக்குது பொண்ணு_
_கட்டிக்க மாப்பிள்ளே! - இந்த...._ ( _வெத்திலை_ )
(படம்: வீரத்திருமகன்: 1962)
**********************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
************************
[11/13, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வெற்றிலை
[11/13, 07:01] sankara subramaiam: வெற்றிலை
[11/13, 07:04] மீ.கண்ணண்.: வெற்றிலை
[
[11/13, 07:09] A D வேதாந்தம்: விடை= வெற்றிலை/ வேதாந்தம்
[11/13, 07:10] balakrishnan: வெற்றிலை👍🙏
[11/13, 07:10] மாலதி: வெற்றிலை
[11/13, 07:17] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:வெற்றிலை
[
[11/13, 07:21] Sucharithra: வெற்றிலை
[11/13, 07:21] chithanandam: வெற்றிலை
[11/13, 07:22] Ramki Krishnan: வெற்றிலை
[11/13, 07:24] கு.கனகசபாபதி, மும்பை: வெற்றிலை
[11/13, 07:31] prasath venugopal: வெற்றிலை
[
[11/13, 07:31] ஆர்.பத்மா: வெற்றிலை
[11/13, 07:33] A Balasubramanian: வெற்றிலை
A.Balasubramanian
[11/13, 07:33] வானதி: வெற்றிலை
[11/13, 07:46] ஆர். நாராயணன்.: வெற்றிலை
[
[11/13, 07:54] stat senthil: வெற்றிலை
[11/13, 07:56] nagarajan: *வெற்றிலை*
[11/13, 08:13] siddhan subramanian: வெற்றிலை
[11/13, 08:33] Viji - Kovai: 13.11.20 விடை
வெற்றிலை
[11/13, 08:49] Dr. Ramakrishna Easwaran: *வெற்றிலை*
!
அசோக வனத்தில் சீதை அனுமனை வெற்றி பெற வாழ்த்தி, பறித்துப் போட்டதால் வெற்றி இலை. வெற்றி பெற நாம் மாலையாக் கட்டி மாருதிக்கு சாற்றும் இலை- வெற்றிலை!
[11/13, 09:21] V N Krishnan.: வெற்றிலை
[
[11/13, 09:25] Dhayanandan: வெற்றிலை
[11/13, 09:42] G Venkataraman: வெற்றிலை
[[11/13, 09:52] பாலூ மீ.: வெற்றிலை.
[11/13, 10:47] Meenakshi: விடை: வெற்றிலை.
[11/13, 15:18] shanthi narayanan: வெற்றிலை
[11/13, 17:17] N T Nathan: வெற்றிலை
****************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
அத்திசையிலுள்ள மரம் என்றாவது மலரும் (3)
**********************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*அத்தி*
**********************
*காணாமல் பூ பூக்கும் கண்டு காய்காய்க்கும் அது எது?*
விடை தெரியுமா? சிறு வயதில் நாம் போட்ட விடுகதைகளில் இதுவும் ஒன்று... ஆம் அது அத்தி மரம் தான். இதன் பூங்கொத்து வெளிப்படையாகத் தெரியாது ஆனால் அடி முதல் கிளை எல்லாவற்றிலும் கொத்துக் கொத்தாகக் காய் காய்க்கும். பழத்தின் சுவையை பொறுத்தவரை துவர்ப்பும் இனிப்பும் கொண்டது.
**********************
தமிழர் வரலாற்றில் *அத்தி* மரத்திற்கு மிகப்பெரிய முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். அத்தி மரத்தில் செய்யப்பட்ட *அத்திவரதர்* சிலை இன்றைக்கும் காஞ்சி வரதராஜ பெருமாள் கோயில் திருக்குளத்தில் உள்ளது.
**********************
அடுத்து, மதுரையில் கம்ப ராமாயத்ணதை அரங்கேற்றம் செய்தார்களே, அது இந்த அத்தி மரத்தில் வைத்துதான் செய்தது. சரியானதா, தகுதியானதா, தரமானதா இருந்தால் அந்த ஓலைச் சுவடி கட்டு அத்தி மரப் பலகையில் நீடிக்கும், இல்லையென்றால் மூழ்கிவிடும். இதுபோன்ற *தெய்வீகச் சக்தி உடையதும் இந்த அத்தி.*
**********************
*அத்தி பழமொழிகள்*
1.அத்தி மரத்தில் தொத்திய கனிபோல்.
2.அத்திக்காயைப் புட்டுப்பார்த்தால் அங்கும் இங்கும் பொள்ளல்.
3.அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு.
4.அத்திப்பழத்தைப் பிட்டால் அத்தனையும் சொத்தை.
5.அத்திப்பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அதற்குள்ளும் விதை இருக்கும்.
6.அத்திப்பூ பூத்தாற்போல்.
7.அத்திப்பூவை ஆர் அறிவார்.
8.அத்திப்பூவைக் கண்டவர் உண்டா?
9.அத்தி போல் துளிர்த்து,ஆலம் போல் வாழ்ந்திருப்பர்.
**********************
_அத்திசையிலுள்ள மரம் என்றாவது மலரும் (3)_
_அத்திசையிலுள்ள மரம்_
= _அத்திசையில் உள்ள மரம்_
= _அத்தி[சையில்]_
= *அத்தி*
_என்றாவது மலரும்_
= *அத்தி*
**********************
பயிரினங்கள் பூத்துக் காய்த்துக் கனிவதே வழக்கம் என்றாலும் பூக்காமல் காய்க்கும் மரங்களும் உள்ளன. இவற்றைக் *கோளி* என்பர் பழந்தமிழர்.
**கொழு மென் சினைய கோளியுள்ளும்*
*பழம் மீக் கூறும் பலாஅப் போல*
*
-பெரும்பாணாற்றுப்படை :407-408
* *கோடு பல முரஞ்சிய கோளி ஆலத்து* -மலைபடுகடாம் : 268
* *முழுமுதல் தொலைத்த கோளி ஆலத்து* -புறநானூறு : 58.2
* *முன்ஊர்ப் புழுனிய கோளி ஆலத்து -* புறநானூறு : 254.7
******************
_பூவாதே காய்க்கும் மரமுள மக்களும்_
_ஏவாதே நின்றுணர்வார் தாமுளரே_
என ஔவையார், நல்வழியில் (35) பிறர் சொல்லாமல் தாமே பணி செய்வாரைக் குறிப்பிடுகையில் பூவாமல் காய்க்கும் மரத்தை எடுத்துக்காட்டாகக் கூறுகின்றார். இதற்கு விளக்கும் தருவோர் *அத்தி* , ஆல், பலா, அரசு போன்ற பூவாமல் காய்க்கும் மரங்கள் என்கின்றனர். இவற்றுள் அத்தியைச் சங்கப் பாடல்களில் *அதவம்* என்றே குறிப்பிட்டுள்ளனர்
_ஆற்றயல் எழுந்த வெண்கோட்டு அதவத்து_
என்னும் குறுந்தொகை (24.3) பாடலடி மூலம் அதமாகிய _அத்தி_ , ஆற்றங்கரையோரம் முளைத்து வளரும், அதன் கிளைகள் வெண்மையான நிறம் கொண்டவை என்னும் அறிவியல் செய்திகள் கூறப்படுகின்றன.
******************
💐🙏🏼💐
*விடையளித்தோர் பட்டியல்*
************************
[11/14, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அத்தி
[11/14, 07:03] A Balasubramanian: அத்தி
A.Balasubramanian
[11/14, 07:02] *Dr. Ramakrishna Easwaran:* *அத்தி*
*: Wealth of info on aththi in literature*
*http://panrutipanchavarnam.blogspot.com/2013/06/9-athavam.html?m=1*
[11/14, 07:09] akila sridharan: அத்தி
[11/14, 07:10] மீ.கண்ணண்.: அத்தி
[11/14, 07:12] balakrishnan: அத்தி🙏
[11/14, 07:16] A D வேதாந்தம்: விடை= அத்தி/ வேதாந்தம்.
[11/14, 07:19] பாலூ மீ.: அத்தி.
[11/14, 07:20] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:அத்தி.
[11/14, 07:20] பானுமதி: அத்தி
[
[11/14, 07:26] மாலதி: அத்தி
[11/14, 07:28] *ஆர். நாராயணன்.:*
*அத்தி*
*.: அத்தி பூத்தார்ப்போல**
[11/14, 07:31] nagarajan: *அத்தி*
[11/14, 07:31] Meenakshi: விடை:அத்தி
[11/14, 07:36] கு.கனகசபாபதி, மும்பை: அத்தி
[
[11/14, 07:51] stat senthil: அத்தி
[11/14, 07:54] N T Nathan: அத்தி
[
[11/14, 07:56] Sucharithra: அத்தி
[
[11/14, 08:09] sathish: அகில்
[11/14, 08:23] prasath venugopal: அத்தி
[
[11/14, 08:23] siddhan subramanian: அத்தி
[
[11/14, 08:41] chithanandam: அத்தி
[
[11/14, 08:50] Dhayanandan: அத்தி
[
[11/14, 09:35] Bhanu Sridhar: Athi
[
[11/14, 09:39] Ramki Krishnan: அத்தி
[11/14, 09:49] *V N Krishnan* .: *அத்தி* . *(அத்தி பூத்தாற்போல் சொல் வழக்கு) எப்போதாவது*
[11/14, 10:03] *வானதி* : *அத்தி*
*அத்தி பூத்தாற்போல*
[
[11/14, 11:05] ஆர்.பத்மா: அத்தி
[11/14, 11:38] shanthi narayanan: அத்தி
[11/14, 12:53] sankara subramaiam: அத்தி
[11/14, 13:01] *G Venkataraman* : *அத்தி* ! *அட ஆத்தீ!!!!*
[
[11/14, 14:39] Bharathi: அத்தி
[
[11/14, 19:59] balagopal: விடை.அத்தி.
*************************