Skip to main content

விடை 4111

காலை வெளியான வெடி
உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்தபவன் (7)
அதற்கான விடை:
ஆதரித்தவன் = ஆதவன் + தரித்
ஞாயிறு = ஆதவன் உரித்ததை என்ற சொல்லை உரிக்க (வெளிப்புறமுள்ள எழுத்துகளை நீக்கக்) கிடைப்பது "ரித்த".
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's (yesterday's )riddle!
********************
The puzzle was posted thrice with corrections. This is quiet unusual for us ad well as the setter.
First
உரித்து உரித்து ஞாயிறில் பண உதவி செய்பவன் (7) 
Second
உரித்து உரித்து ஞாயிறில் பண உதவி செய்தவன் (7) 
Third
உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்தவன் (7) 

********************
உரித்ததை உரித்து ஞாயிறில் பண உதவி செய்தவன் (7) 

உரித்ததை உரித்து
= [உ]ரித்த[து]
= ரித்த

ஞாயிறு = ஆதவன்
உரித்து ஞாயிறில்
= ரித்த inside ஆதவன்
= ஆதரித்தவன்

பண உதவி செய்தவன்
= ஆதரித்தவன்
********************
ஆதரித்தவன்

கபிலரை ஆதரித்தவன் பாரி, ஒளவையாரை ஆதரித்தவன்
அதியமான், பெருஞ்சித்திரனாரை ஆதரித்தவன் குமணன்,
மாங்குடி மருதனாரை ஆதரித்தவன் நெடுஞ்செழியன்,
பிசிராந்தையாரிடம் நட்பு கொண்டவன் கோப்பெருஞ்சோழன்
போன்ற விவரங்களையும் புறநானூறு குறிப்பிடுகிறது.
*******************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மந்திக்கு ஜோடி வடுகன் சரியில்லை (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 03-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*நாலாயிர திவ்ய பிரபந்தம்.*
*பேயாழ்வார்.*

_தெளிந்த சிலாதலத்தின் மேலிருந்த மந்தி,_

_அளிந்த *கடுவனையே* நோக்கி, - விளங்கிய_

_வெண்மதியம் தாவென்னும்_ _வேங்கடமே, மேலொருநாள்_

_மண்மதியில் கொண்டுகந்தான் வாழ்வு_

🐒🐒🐒🐒🐒🐒
ஒரு குரங்கின் செயல்களைக் காட்டி மகிழ்கின்றார், பேயாழ்வார்.
தெளிவான கற்பாறையின் மீது உட்கார்ந்து கொண்டுள்ளது பெண் குரங்கொன்று. அது தனக்கு நட்பாகவுள்ள ஆண் குரங்கொன்றை நோக்கி விண்ணில் வெண்மையாகத் தோன்றும் திங்களைப் பிடித்துத் தருமாறு வேண்டுகின்றது.

(சிலா தலம் - கற்பாறை: மந்தி . பெண் குரங்கு: *கடுவன்* . ஆண் குரங்கு; மதியம் - திங்கள்; என்பது பேயாழ்வாரின் சொல்லோவியம்.)

இப்பாடலால் திருமலையின் உயர்ச்சியை அறிகின்றோம்
**********************
_மந்திக்கு ஜோடி வடுகன் சரியில்லை (4)_

_வடுகன் சரியில்லை_
= _சரியில்லை_ is an indicator to rearrange the word _வடுகன்_
= _வடுகன்--->_ *_கடுவன்_*

_மந்திக்கு ஜோடி_
= *_கடுவன்_*

[மந்தி --> பெண் குரங்கு
*கடுவன்* --> ஆண் குரங்கு]
****************
*பேயாழ்வாரின் பாட்டிற்கு,*
*ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம்* *அண்ணங்கராசாரியார் எழுதிய*
*விளக்க உரை*
இப்பாட்டில் கருடன் மேற்கொண்ட கரியானாய் ஸேவை தந்தருளினவன் ‘என்னைத் திருவேங்கடமலையிலே நித்யமாகக் கண்டுகொண்டிரும்‘ என்று சொல்லி மறைந்திடவே திருமலையிலே மண்டுகிறார். திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கி யிருக்கின்றதென்ற அதிசயோக்திக்காக ஒரு வர்ணனை கூறுகின்றார்.

திருமலையில் கற்பாறையின்மீது பெண்குரங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றது, அதனருகில் ஆண்குரங்கும் ‘நமது பேடை நம்மை ஏவிக் காரியங்கொள்வது எப்போதோ‘ என்று அதன் கட்டளையை எதிர்பார்த்துக் கொண்டு இராநின்றது, அதனை நோக்கிப் பெண்குரங்கானது _‘முகத்தினழகைப் பார்த்துக் கொள்வதற்குக் கண்ணாடி கொண்டுவந்து தா‘_ என்பாரைப்போலே _‘பூர்ண சந்திரனைப் பறித்துத் தா‘_ என்கிறதாம்.
இங்ஙனே சொல்லும்படியாக ஓங்கியிருந்துள்ள திருமலையே ஓங்கியுலகளந்த வுத்தமன் வாழுமிடம் என்றாராயிற்று.
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[11/3, 07:03] திரைக்கதம்பம் Ramarao: கடுவன்
[
[11/3, 07:07] A D வேதாந்தம்: விடை= கடுவன்/ வேதாந்தம்.

[11/3, 07:07] balakrishnan: கடுவன். 🙏

[11/3, 07:07] Meenakshi: இன்றைய விடை: கடுவன்

[11/3, 07:08] siddhan subramanian: கடுவன்

[11/3, 07:11] பானுமதி: கடுவன்

[11/3, 07:11] மாலதி: கடுவன்

[11/3, 07:12] மீ.கண்ணண்.: கடுவன்

[11/3, 07:16] பாலூ மீ.: கடுவன்.

[11/3, 07:21] V N Krishnan.: கடுவன் ஆண் குரங்கு

[11/3, 07:24] akila sridharan: கடுவன்

[11/3, 07:35] sankara subramaiam: கடுவன்

[11/3, 07:39] chithanandam: கடுவன்

[11/3, 07:43] N T Nathan: கடுவன்

[11/3, 07:43] ஆர். நாராயணன்.: கடுவன்

[11/3, 07:47] Ramki Krishnan: கடுவன்

[11/3, 07:59] குன்னூர் லக்ஷ்மிமணியன்: விடை:கடுவன்

[11/3, 07:59]
கடுவன்----- கி.பா(KB)

[11/3, 08:14] A Balasubramanian: கடுவன்
A.Balasubramanian

[11/3, 08:26] Bharathi: கடுவன்

[11/3, 08:48] Viji - Kovai: 3.10.20 விடை
கடுவன்

[11/3, 09:05] stat senthil: கடுவன்

[11/3, 09:05] Dr. Ramakrishna Easwaran: *கடுவன்*

[11/3, 09:17] balagopal: Good morning sir. விடை.
கடுவன்

[11/3, 09:28] Bhanu Sridhar: வானரன் or வானரம்
From Varan or varam
Tirikooda Rasappa kavirayar in Kutrala Kuravanchi refers vanarangal kani koduthu mandhiyodu konjum ..

[11/3, 10:12] வானதி: கடுவன்😁😁😁

[11/3, 10:32] Dhayanandan: கடுவன்

[11/3, 14:43] கு.கனகசபாபதி, மும்பை: கடுவன்

[11/3, 16:31] nagarajan: *கடுவன்*

[11/3, 18:20] Usha Chennai: கடுவன்
****************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
மன்றத்தில் இருப்பவன் இளவரசி கன்னியென்று கொள்வான் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
*ரசிகன்*

என்னை தெரியுமா என்னை தெரியுமா
நான் சிரித்து பழகி கருத்தை கவரும் *ரசிகன்* என்னை தெரியுமா
உங்கள் கவலை மறக்க கவிதை பாடும் கவிஞன் என்னை தெரியுமா
என்னை தெரியுமா
ஆஹா ரசிகன் ஆஹா ரசிகன்
நல்ல ரசிகன் நல்ல ரசிகன்
உங்கள் ரசிகன் உங்கள் ரசிகன்

படம்:குடியிருந்த கோயில் (1968)
**********************
*வானவில் ரசிகன்*

அழகிய மஞ்சள் நிற வெளிச்சத்தில் திசை மாறி
அடித்த காற்றோடு கரைந்து தான் போனேன்
நான் வானவில்லை ரசித்த படி !!!

By Jano 
**********************
_மன்றத்தில் இருப்பவன் இளவரசி கன்னியென்று கொள்வான் (4)_

_இளவரசி கன்னியென்று கொள்வான்_
= hidden clue in
_இளவ (ரசிகன்) னியென்று_
= *ரசிகன்*

_மன்றத்தில் இருப்பவன்_
= *ரசிகன்*
[ரசிகர் மன்றத்தில் இருப்பவன்]
**********************
*கவிஞன்..! ரசிகன்...! கவிதை ...!*

By கவிப்புயல் இனியவன்


ஒரு 
கவிஞன் தன் வலிகளை....
வரிகளாய் எழுதுகிறான் ....

ஒரு 
ரசிகன் அதை ஆத்மா ...
உணர்வோடு ரசிக்கிறான் .....

ஒரு 
கவிதை அப்போதுதான் ...
உயிர் பெறுகிறது .....!!!
*******
பள்ளி 
பருவத்தில் மாறு வேடபோட்டியில் .....
பைத்திய காரன் வேஷத்தில் முதலிடம் ....

காதலியால் வாழ் நாள் முழுவதும் ....
முதலிடம் அருமையான வேஷம்.....!

பிடித்தது கிடைக்கவில்லை என்றால் ....
கிடைத்ததை பிடித்ததாக வாழ்வோம் ...

ரசிகனே நீ எனக்கு கிடைத்த வரம் - வா....
வலிகளில் இன்பம் காண்போம் .....!!!
********
என் 
காதலுக்கு காதலியின் முகவரி ...
இன்னும் தெரியவில்லை ...
அதனால்தான் இதுவரை .....
என்னவளில் பதில் வரவில்லை ...

வெறுத்தவள் மறுத்தவளாகவே....
வாழ்கிறாள் - ரசிகனே உன்னிடம் ...
என் கவலையை சொல்லாமல் ....
யாரிடம் சொல்வேன் .....?

என் வாழ்வில் ரசிகனே நிஜம் ....!!!
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[11/4, 07:01] திரைக்கதம்பம் Ramarao: ரசிகன்

[11/4, 07:10] prasath venugopal: ரசிகன்

[11/4, 07:13] பாலூ மீ.: ரசிகன்.

[11/4, 07:15] Dr. Ramakrishna Easwaran: *ரசிகன்*
ரசிகன்

[11/4, 07:19] A Balasubramanian: ரசிகன்
A.Balasubramanian

[11/4, 07:19] Meenakshi: விடை:ரசிகன்.

[11/4, 07:41]
ரசிகன்------கி.பா(KB)

[11/4, 07:47] balakrishnan: ரசிகன். 🤣🙏

[11/4, 07:48] chithanandam: ரசிகன்

[11/4, 07:53] siddhan subramanian: ரசிகன்

[11/4, 07:54] nagarajan: *ரசிகன்*

[11/4, 08:44] மீ.கண்ணண்.: ரசிகன்

[11/4, 08:50] மாலதி: ரசிகன்

[11/4, 08:51] ஆர். நாராயணன்.: ரசிகன்

[11/4, 08:51] கு.கனகசபாபதி, மும்பை: ரசிகன்

[11/4, 10:53] Bhanu Sridhar: ரசிகன்

[11/4, 12:02] Sucharithra: ரசிகன்

[11/4, 12:46] akila sridharan: ரசிகன்

[11/4, 13:00] Viji - Kovai: 4.10.20 விடை ரசிகன்

[11/4, 16:02] sathish: ரசிகன்

****************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஊர் நடுவில் குற்றவாளி தலை சிக்கிய இடம் (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-11-20)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-* 2010)
**********************
*இடம்* 
விளக்கம்
1.நிலை,2.குறிப்பிட்ட
*நிலப்பகுதி* ,3.தற்போதைய நிலை,4.பதவி
**********************
*இடம்-பொருள்- ஏவல்!*
' _இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுக'_
என்பது பேச்சு வழக்கில் உள்ள தொடர்.
அப்படிச் சொல்வதன் பொருள் என்ன? 

கற்பனைக் களஞ்சியம்' துறைமங்கலம் சிவப்பிரகாசர் இயற்றிய நன்னெறியில் _"அன்பற்ற செல்வம் பயனற்றது'_ என்பது பற்றி விளக்குமிடத்து,

_இல்லானுக்கு அன்பிங்கு இடம் பொருள் ஏவல் மற்று_
_எல்லாம் யிருந்து _மவர்க்கென் செய்யும் நல்லாய்_
_மொழியிலார்க் கேது முதுநூல் தெரியும்_
_விழியிலார்க்கு ஏது விளக்கு_
(நன்னெறி.15)
என்று இடம்பெற்றுள்ளது.

இப்பாடலின் பொருள்:

நற்குணம் உடையவளே,
அன்பில்லாதவன் *இடம் பொருள் ஏவல்* என எல்லாம் இருந்தும் அவற்றால் தருமத்தையும் புகழையும் அடைய மாட்டான்.
*பேசமுடியாத ஊமைகளுக்குப் பழைமையான சாத்திரம் என்ன பயனைச் செய்யும்? பார்க்கும் கண்பார்வை இல்லாதவர்க்கு எரியும் விளக்கு என்ன பயனைச் செய்யும்?* 
************************
_ஊர் நடுவில் குற்றவாளி தலை சிக்கிய இடம் (3)_

_ஊர்_ = *பதி*
_குற்றவாளி தலை_
= *கு*

_நடுவில் சிக்கிய_
= *பதி*
_நடுவில் சிக்கிய_ *கு*
= *பகுதி*
= _இடம்_
**********************
அடுத்து, வள்ளலார் வழி *"இடம் பொருள் ஏவல்* ' பற்றிய பொருளை அறிவோம். 

_"இடமே பொருளே ஏவலே_ _என்றென்றெண்ணி_
_இடர்ப் படுமோர்_
_மடமே உடையேன்__ _தனக்கருள் நீவழங்கல் அழகோஆனந்த_
_நடமே உடையோய் நினைஅன்றி_ _வேற்றுத்தெய்வம் நயவேற்குத்_
_திடமே அருள்தான் வழங்காது தீர்த்தல்_ _அழகோதெரிப்பாயே'_

(திருவருட்பா,கருணைவிண்ணப்பம். 572)

இவையெல்லாம் என் இடமா, இவையெல்லாம் என் பொருளா, இவரெல்லோரும் என் ஏவல் ஆட்களா என்று எண்ணி துன்பப்படும் மடமை பொருந்தியவனுக்கு நீ அருள் செய்வது அழகோ? 

இப்படியான பொருள்களை எல்லாம் கடந்து அம்பலத்தில் ஆனந்த நடனம் புரிதலே தனக்குக் கடமையாய் உடையவனே, உன்னையன்றி வேறு தெய்வம் உண்டு என்று விருப்பப்படுவோர் வியக்கும்படியான அருளை வழங்காது விடுவது அழகா? தெரிவிப்பாய். 

*நீயே எல்லாம் என்பதை உணர்த்தி நிற்பாய் என்கின்றார் வள்ளலார்.*
********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[11/5, 06:59] திரைக்கதம்பம் Ramarao: பகுதி

[11/5, 07:09] Meenakshi: விடை: பகுதி.

[11/5, 07:19] பாலூ மீ.: இடம் = ஒரு பகுதி
விடை பகுதி.

[11/5, 07:19] A Balasubramanian: பகுதி
A.Balasubramanian

[11/5, 07:23] balakrishnan: பகுதி. 🙏
[
[11/5, 07:27] உஷா, கோவை: பகுதி

[11/5, 07:36] மீ.கண்ணண்.: பகுதி

[11/5, 07:41] prasath venugopal: பகுதி

[11/5, 07:50] ஆர். நாராயணன்.: பகுதி

[11/5, 07:52]
பகுதி------கி.பா(KB)

[11/5, 08:12] nagarajan: *பகுதி*

[11/5, 09:57] கு.கனகசபாபதி, மும்பை: பகுதி

[11/5, 10:23] Bhanu Sridhar: குறடி

[11/5, 11:14] shanthi narayanan: பகுதி

[11/5, 14:32] siddhan subramanian: பகுதி (பதி +கு)

[11/5, 14:33] ஆர்.பத்மா: பகுதி

[11/5, 16:23] வானதி: பகுதி

[11/5, 18:55] N T Nathan: பகுதி

[11/5, 19:35] V N Krishnan.: ஊர்=பதி +கு=பகுதி =இடம்

****************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
ஒருவனைத் தொடக்கத்தில் துத்தூ என்று குதறி பின்னர் இசைந்து செய் (4)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
_ஒருவனைத் தொடக்கத்தில் துத்தூ என்று குதறி பின்னர் இசைந்து செய் (4)_

_ஒருவனைத் தொடக்கத்தில்_
= *ஒ[ருவனைத்] = ஒ*

_துத்தூ என்று குதறி_
= *துத்தூ ---> த்தூது*

_பின்னர்_ = *ஒ* எழுத்துக்கு பின் *த்தூது*

= *ஒத்தூது*

= _இசைந்து செய்_
*********************
*வள்ளல் தன்மை*

வள்ளல்கள் தங்களிடம் இருக்கும் செல்வத்தைப் பொருள் இல்லாதவர்களுக்கு வாரி வழங்குவார்கள். இவ்வாறு வழங்கும் வள்ளல் குணம் கொண்டவர்கள் தங்களிடம் பொருள் குறைந்து விட்டாலும், தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் பொருள் கொடுக்காமல் இருக்க மாட்டார்கள்.

_ஆற்றுப் பெருக்குஅற்று அடிசுடும் அந்நாளும்_ 

_ஊற்றுப் பெருக்கால் உலகுஊட்டும்; ஏற்றவர்க்கு_

_நல்ல குடிப்பிறந்தார் நல்கூர்ந்தார் ஆனாலும்_

_‘இல்லை’என மாட்டார் *இசைந்து*_

(நல்வழி :9)

(*பெருக்கு* = வெள்ளப்பெருக்கு, 
*அற்று* = இல்லாமல், 
*அடி* = பாதம், 
*ஊற்று* = நீரூற்று, 
*உலகு* = உலக மக்களுக்கு, 
*ஊட்டும்* = தண்ணீரைக் கொடுக்கும்,
*ஏற்றவர்க்கு* = தேடி வந்தவர்களுக்கு, 
*நல்கூர்ந்தார்* = வறுமை நிலையை அடைந்தார், 
*இசைந்து* = மனமார)

வழி வழியாகப் பிறருக்குப் பொருளை வழங்கும் நல்ல குடியில் பிறந்தவர்களை ‘வள்ளல் குடியினர்’ என்று சிறப்பித்துக் கூறுவார்கள். அத்தகைய வள்ளல் குடியில் பிறந்தவர்கள் வறுமை  நிலையை அடைந்தாலும், தங்களைத் தேடி வந்தவர்களுக்குப் ‘பொருள் இல்லை’ என்று சொல்ல மாட்டார்கள். அவ்வாறு சொல்வதற்கு அவர்களது உள்ளம் விரும்பாது.

இதை விளக்குவதற்கு *ஒளவையார்* ஆற்றை உவமைப் படுத்தியுள்ளார். ஆற்றிலே வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது அந்த நீரை ஊர்மக்கள் பயன்படுத்துவார்கள். அந்த ஆற்றிலே நீர் வற்றிப் போன கோடைகாலத்தில் அதில் தோண்டப்பட்ட சிறிய ஊற்றுகளின் வாயிலாக அது ஊர்மக்களுக்கு நீர் வழங்கும். அதைப் போன்று, வள்ளல் குடியில் பிறந்தவர்கள் செல்வம் இருக்கும் போதும் வழங்குவார்கள்; வறுமை நிலையை அடைந்துவிட்டாலும் பிறருக்கு வழங்குவார்கள் என்று வள்ளல்களின் தன்மையை நல்வழி தெரிவிக்கிறது. 
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************

[11/6, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ஒத்தூது

[11/6, 07:01] Dr. Ramakrishna Easwaran: *ஒத்தூது*

[11/6, 07:01] balakrishnan: ஒத்தூது. 🙏

[11/6, 07:02] V N Krishnan.: ஒத்தூது

[11/6, 07:03] A Balasubramanian: ஒத்தூது
A.Balasubramanian

[11/6, 07:04] மீ.கண்ணண்.: ஒத்தூது

[11/6, 07:04] Meenakshi: விடை:ஒத்தூது.

[11/6, 07:05] Sucharithra: ஒத்தூது

[11/6, 07:10] akila sridharan: ஒத்தூது

[11/6, 07:14] chithanandam: ஒத்தூது

[11/6, 07:17] பாலூ மீ.: ஒத்தூது.

[11/6, 07:21] stat senthil: ஒத்தூது

[11/6, 07:23] N T Nathan: ஒத்தூது

[11/6, 07:24] G Venkataraman: ஒத்தூது

[11/6, 07:28] sankara subramaiam: ஒத்தூது

[11/6, 07:34]
ஒத்தூது--------கி.பா( KB)

[11/6, 07:38] Bharathi: ஒத்தூது

[11/6, 07:40] ஆர். நாராயணன்.: ஒத்தூது

[11/6, 07:48] prasath venugopal: ஒத்தூது

[11/6, 07:51] nagarajan: *ஒத்தூது*

[11/6, 08:24] கு.கனகசபாபதி, மும்பை: ஒத்தூது

[11/6, 08:34] A D வேதாந்தம்: விடை= ஒத்தூது/ வேதாந்தம்.

[11/6, 08:43] balagopal: Good morning sir.
ஒருவனை முதலில்: ஒ
துத்தூ குதறி.த்தூது
இசையச் செய்: ஒத்தூது.

[11/6, 08:43] Ramki Krishnan: ஒத்தூது

[11/6, 08:49] siddhan subramanian: ஓத்தூது

[11/6, 08:53] Bhanu Sridhar: ஓத்தூது

[11/6, 09:05] Usha Chennai: ஒத்தூது

[11/6, 09:13] ஆர்.பத்மா: ஒத்தூது

[11/6, 09:25] Dhayanandan: ஒத்தூது

[11/6, 11:36] Viji - Kovai: 6.10.20 விடை
ஒத்தூது

[11/6, 11:50] shanthi narayanan: ஒத்தூதி

[11/6, 12:44] வானதி: ஒத்தூது

[11/6, 12:53] sathish: ஒத்தூது

[11/6, 14:37] பானுமதி: ஒத்தூது

****************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************
பிர்லா பத்திற்கும் உட்பட்ட முதலீட்டுக்கு மேலே வருமானம் கிட்டுமாறு செய்வார் (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-11-20)
From *Vanchinathan's* archive-
(தென்றல்-2010)
**********************

*லாபம் என்றால் என்ன?*

லாபம் என்பது காலத்திற்கான செலவுகளை மீறும் வருவாயின் அளவு. வணிகம் மற்றும் நிதி ஆகியவற்றில் மிக முக்கியமான சொற்களில் ஒன்று லாபம். லாபம் நிகர வருமானம் என்றும் அழைக்கப்படுகிறது. தேவையான மற்றும் பொருந்தக்கூடிய செலவுகள் அனைத்தும் பதவிக்காலத்திற்குக் கழித்தபின் மீதமுள்ள தொகை இது.

நிகர லாபம் என்பது நாம் எல்லா செலவுகளையும் சேர்த்து மொத்தத்தை அதன் விற்பனை வருவாயிலிருந்து கழித்தபின் எஞ்சியிருக்கும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், நிறுவனம் அதன் வரிகளை செலுத்திய பிறகு இலாபங்கள் கணக்கிடப்படுகின்றன.
**********************
_பிர்லா பத்திற்கும் உட்பட்ட முதலீட்டுக்கு மேலே வருமானம் கிட்டுமாறு செய்வார் (6)_

_உட்பட்ட_
= indicator to denote *hidden clue* in
_"பிர்[லா பத்திற்கு]ம்"_
= *லாபத்திற்கு*

_முதலீட்டுக்கு மேலே வருமானம் கிட்டுமாறு_
= *லாபத்திற்கு*
**********************
*நினைவில் நிற்கும் வரிகள்*

_கண் போன போக்கிலே கால் போகலாமா_
_கால் போன போக்கிலே மனம் போகலாமா_
_மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா_
_மனிதன் போன பாதையை மறந்து போகலாமா_

_(கண் போன)_

*_திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்_*
*_வருந்தாத உருவங்கள் பிறந்தென்ன லாபம்_*
_இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்_
_இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்_
_இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்_
_(கண் போன)_
*படம் : பணம் படைத்தவன் (1965)*
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
************************
விடையளித்தோர் பட்டியல்
************************
[
[11/7, 07:00] திரைக்கதம்பம் Ramarao: லாபத்திற்கு

[11/7, 07:00] V N Krishnan.: லாபத்திற்கு

[11/7, 07:03] மீ.கண்ணண்.: லாபத்திற்கு

[11/7, 07:04] N T Nathan: லாபத்திற்கு

[11/7, 07:08] balakrishnan: லாபத்திற்கு. 🙏
[
[11/7, 07:08] பாலூ மீ.: விடை: லாபத்திற்கு.
[
[11/7, 07:09] Dhayanandan: லாபத்திற்கு
[
[11/7, 07:12] stat senthil: லாபத்திற்கு
[
[11/7, 07:15] ஆர்.பத்மா: லாபத்திற்கு
[
[11/7, 07:17] A Balasubramanian: லாபத்திற்கு
A.Balasubramanian
[
[11/7, 07:18] Meenakshi: விடை:லாபத்திற்கு

[11/7, 07:20]
[லாபத்திற்கு---------கி.பா(KB)

[11/7, 07:28] Viji - Kovai: லாபத்திற்கு
[
[11/7, 07:29] akila sridharan: லாபத்திற்கு

[11/7, 07:34] A D வேதாந்தம்: விடை=லாபத்திற்கு/ வேதாந்தம்.
[
[11/7, 07:39] prasath venugopal: லாபத்திற்கு
[
[11/7, 07:42] கு.கனகசபாபதி, மும்பை: லாபத்திற்கு
[
[11/7, 07:42] வானதி: லாபத்திற்கு
[
[11/7, 07:47] மாலதி: லாபத்திற்கு
[
[11/7, 07:50] ஆர். நாராயணன்.: லாபத்திற்கு

[11/7, 07:55] nagarajan: **லாபத்திற்கு**

[11/7, 07:56] Bhanu Sridhar: லாபத்திற்கு
[
[11/7, 08:04] பானுமதி: லாபத்திற்கு

[11/7, 08:12] sathish: 6hலாபத்திற்கு
[
[11/7, 08:15] Sucharithra: லாபத்திற்கு

[11/7, 08:16] Ramki Krishnan: லாபத்திற்கு

[11/7, 08:30] Dr. Ramakrishna Easwaran: *லாபத்திற்கு*

[11/7, 11:28] shanthi narayanan: லாபத்திற்கு
[
[11/7, 11:30] G Venkataraman: லாபத்திற்கு

[11/7, 12:45] Usha Chennai: லாபத்திற்கு

[11/7, 12:57] குன்னூர் லக்ஷ்மிமணியன்: லாபம்கிட்ட

[11/7, 19:26] sankara subramaiam: லாபத்திற்கு


****************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்