Skip to main content

விடை 3184

இன்று (12/01/2018) காலை வெளியான வெடி:
 ஒரு கணக்கைப் போட கணினி, பழத்தைப் பிடுங்க பல கட்சிகள் (4)
இதற்கான விடை: கூட்டணி =  கூட்ட + ணி

ஒரு கணக்கு போட = கூட்ட
கணினி, பழத்தைப் பிடுங்க = கணினி - கனி = ணி

கூட்டணி ஆட்சி என்றால் பல கட்சிகளின் ஆட்சி

தேர்தலில்   வென்றிடத் தெளிப்பார் பணக்கட்டை
நாற்காலி பெற்றதும் நம்மை மறப்பார்
பழுத்த  பழங்கள் பறித்திடும்  பண்பால்
கொழுத்துப் பெருகினார்  கொல்

Comments

Raghavan MK said…

விடையுடன் கூடிய வெண்பா மிகவும் அருமை! 😊
Ambika said…
விடை அளித்தவர்கள் (35):

1/12/2018 6:04:39 எஸ்.பார்த்தசாரதி
1/12/2018 6:16:32 ஆர்.நாராயணன்.
1/12/2018 6:16:36 வீ.ஆர். பாலகிருஷ்ணன்
1/12/2018 6:17:06 சங்கரசுப்பிரமணியன்
1/12/2018 6:17:47 கி.பாலசுப்ரமணியன்
1/12/2018 6:19:15 சித்தன்
1/12/2018 6:26:33 கி மூ சுரேஷ்
1/12/2018 6:28:32 ரவி சுப்ரமணியன்
1/12/2018 6:40:26 லக்ஷ்மி ஷங்கர்
1/12/2018 6:45:46 மு.க.இராகவன்
1/12/2018 7:15:36 எஸ் பி சுரேஷ்
1/12/2018 7:19:09 ரவி சுந்தரம்
1/12/2018 7:26:35 சுந்தர் வேதாந்தம்
1/12/2018 7:32:00 நங்கநல்லூர் சித்தானந்தம்
1/12/2018 7:47:35 கேசவன்
1/12/2018 7:50:57 நாகராஜன் அப்பிச்சிக்கவுண்டர்
1/12/2018 7:57:52 நாதன் நா தோ
1/12/2018 8:13:28 முத்துசுப்ரமண்யம்
1/12/2018 8:22:34 ராஜி ஹரிஹரன்
1/12/2018 8:58:36 பினாத்தல் சுரேஷ்
1/12/2018 9:21:41 ராஜா ரங்கராஜன்
1/12/2018 9:22:56 ஆர். பத்மா
1/12/2018 9:45:44 ரா. ரவிஷங்கர்
1/12/2018 9:57:25 ஶ்ரீவிநா
1/12/2018 11:58:38 ஜீவமோகன்
1/12/2018 13:18:02 ராதா தேசிகன்
1/12/2018 13:21:09 எஸ்.ஆர்.பாலசுப்ரமணியன்
1/12/2018 13:40:03 ரமணி பாலகிருஷ்ணன்
1/12/2018 16:55:20 கு. கனகசபாபதி, மும்பை
1/12/2018 18:01:03 இரா.செகு
1/12/2018 18:52:11 ஏ.டி.வேதாந்தம்
1/12/2018 18:52:45 பத்மாசனி
1/12/2018 18:53:35 அனுராதா ஜயந்த்
1/12/2018 18:53:43 சதீஷ்பாலமுருகன்
1/12/2018 20:41:42 அம்பிகா

Raghavan MK said…

*கூட்டணி* தர்மம்

"சென்ற தேர்தலைப் போலவே *கூட்டணி* தர்மத்தை மதித்து எங்களை தொகுதிப் பங்கீடிற்கு அழைக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன் "


உன் கட்சிக் கூட வைக்கிறதே பிரயோசனமில்லாத தர்மக் கூட்டணி , இதுல கூட்டணி தர்மம் வேறையா?
Raghavan MK said…

*மனதைக் கவர்ந்த பாடல்*

காலம் கடந்தும் தென்னகத்தில் ஒரு சில பாடல்க ளே காதில் கேட்டவுடன், மக்களால் முனுமுனுக்கப் படுகின்றன.

தமிழகம் என்று கூறாமல் தென்னகம் என்று கூறுவதற்கு காரணம் உண்டு. தமிழகத்தில் பிறந்து தென்னகத்தின் மற்ற மொழிகளை தாய் மொழியாய் கொண்டவர்களையும் இப்பாடல்கள் சேர்ந்து பாட வைப்பதுண்டு. இவ்வகையான பாடலை எழுத ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். அதற்கு உயிர் கொடுத்து ஐம்பது வருடங்கள் கடந்தும் கேட்ட வைக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். வசீகரிக்கும் குரலில் பாடி மனதில் இடம் பிடிக்கவும் ஒரு சிலரால் மட்டும் தான் முடியும். எதுவுமே பலர் தொடங்கினாலும், கடைசியில் ஒரு சிலரில் தான் முடியும். அதற்கு  முயற்சி, நம்பிக்கை, ஆற்றல் என காரணங்களை பலர் அடுக்கினாலும், ஒரு சிலரிடம் சென்று கேட்டால் எல்லாம் அவன் அருள் என்று சாதாரணமாக சொல்லிவிட்டு சென்று கொண்டிருக்கிறார்கள். அவன் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமகாக தெரிந்து இருக்ககூடும், யார் கண்டது?

தொடர்ந்து, பல வருடங்களாக இவர்கள் *கூட்டணி* அமைத்து மிரட்டிய காலம் அது. ஒருவர் பாட்டெழுத, இருவர் இசையமைக்க, மூவர் பாட, படத்தில் நால்வர் ஆட, மொத்தத்தில் அட்டகாசமான *கூட்டணி*
அது.
அதற்கு அப்புறம் 1980 களில் மீண்டும் சில காலம் இதே போல் ஒரு *கூட்டணி* அமைந்தது. யார் கண்பட்டதோ தெரியவில்லை, *கூட்டணி* நீடிக்கவில்லை. இனி யாருக்கு வாய்க்குமோ இத்தகைய *கூட்டணி* , தெரியவில்லை.



*_பாடல்: ஆறோடும் மண்ணில் எங்கும்_*

திரைப்படம்: பழனி


பாடியவர்கள்: டி.எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், பி.பி. ஸ்ரீநிவாஸ்


இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்

இசை: எம்.எஸ். விஸ்வநாதன், டி.கே. ராமமூர்த்தி

ஆண்டு: 1965


ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்
போராடும் வேலை இல்லை யாரோடும் பேதம் இல்லை
ஊரோடும் சேர்ந்துண்ணலாம்

ஆறோடும் மண்ணில் எங்கும் நீரோடும்
ஏரோடும் என்றும் நம்ம தேரோடும்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

உதிரிவெடியின் வலையுலக அவதாரம்

வலையில் ஆரம்பித்து விட்டது உதிரி வெடி. தினம் நான் ஒரு வெடியை வீசப்போகிறேன். நீங்கள் அதை வெடித்துக் கொண்டாடுங்கள். இந்த வெடி வகைகள் உங்களுக்குப் புதிது என்றால் எப்படி விடை காண்பது என்றறிந்து கொள்ள இத்தளத்தில் இன்னொரு கட்டுரை இருக்கிறது. குடிப்போர்க்கு  போதை விடிந்தால் குறையும் வெடிதரும் இன்பமோ வேரிட்டு  நின்றிடும் பாங்கான ஆட்டம்  படித்தறிந்த மாந்தர்க்கு நீங்கா நினைவாம் புதிர் கொஞ்சம் பழங்கதை என்னுடைய முதல் குறுக்கெழுத்துப் புதிரை 1988 ஆம் ஆண்டில் கையாலே எழுதி  7x7 அளவிலான  கட்டங்களில் அமைத்து நான்கைந்து  நண்பர்களுக்கு அதை ஜெராக்ஸ் பிரதி எடுத்துக் கொடுத்தேன். இரண்டு வருடங்களில் அது போல் பத்து, பன்னிரண்டு புதிர்கள் உருவாக்கியிருப்பேன்.  சென்னை ஆன்லைன் நிறுவனத்தினர் முன்னோடியாகத் தமிழில்  ஒரு மின்னிதழை (ஆறாம்திணை என்ற பெயரில்)  1998 டிசம்பரில் தொடங்கினர்.  அப்போது வாராவாரம் புதன்கிழமைதோறும் அந்த மின்னதிழில் புதிர்களை உருவாக்கி வெளியிட்டு வந்தேன். அது நூறு வாரங்களுக்கு மேல் ஓடியது. பிறகு கலிபோர்னியாவிலிருந்து வெளிவரும் அச்சு...