விடை 4092
இன்று காலை வெளியான வெடி:
உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)
அதற்கான விடை: காவியம் = காயம் (உடல்) + வி (விற்பவளை என்பதன் முதலெழுத்து)
மஹாகவி என்ற பட்டம் ஒரு காவியம் படைத்தவர்க்கே உரியது என்பது மரபு. அதனால் கல்கி, பாரதியாரை, தேசிய கவிதான், மஹாகவி என்று அழைப்பது சரியில்லை என்று வாதிட்டார். அதைப் பற்றிய நூல் இதோ . பின்னர் பாரதியாருக்கு எட்டயபுரத்தில் மணி மண்டபம் கட்டும் எண்ணத்தை ஆதரித்து, திட்டமிட்டதற்கு மேலாக நிதி சேர்த்தவரும் கல்கியே என்பதை இங்கே சுட்டப்பட்டுள்ள தினமணி கட்டுரையில் காணலாம்.
இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
இன்று காலை வெளியான வெடி:
உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)
அதற்கான விடை: காவியம் = காயம் (உடல்) + வி (விற்பவளை என்பதன் முதலெழுத்து)
மஹாகவி என்ற பட்டம் ஒரு காவியம் படைத்தவர்க்கே உரியது என்பது மரபு. அதனால் கல்கி, பாரதியாரை, தேசிய கவிதான், மஹாகவி என்று அழைப்பது சரியில்லை என்று வாதிட்டார். அதைப் பற்றிய நூல் இதோ . பின்னர் பாரதியாருக்கு எட்டயபுரத்தில் மணி மண்டபம் கட்டும் எண்ணத்தை ஆதரித்து, திட்டமிட்டதற்கு மேலாக நிதி சேர்த்தவரும் கல்கியே என்பதை இங்கே சுட்டப்பட்டுள்ள தினமணி கட்டுரையில் காணலாம்.
இன்றைய புதிருக்கு அளிக்கப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments
********************
உடல் விற்பவளை முதன்மையாகக் கொண்டு மஹாகவி படைத்தது (4)
உடல் = காயம்
விற்பவளை முதன்மையாக
= வி(ற்பவளை) = வி
கொண்டு = indicator for (காயம்+வி)
= காவியம்
= மஹாகவி படைத்தது
********************
காப்பியம் என்பதன் பெயர்க்காரணம் குறித்து அறிஞர்களிடையே பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன.
காவியம் என்பது 'கவி' என்ற சொல்லின் அடியாகப் பிறந்தது. கவிஞர்களிடமிருந்து தோன்றியது என்பது இதன் பொருள். இதுவே காப்பியம் என்று தமிழில் திரிந்து வரலாயிற்று.
'கவி' என்ற வடசொல், செய்யுளையும் செய்யுள் செய்பவனாகிய கவிஞனையும் குறிக்கும் ; தமிழிலும் அப்படியே கூறும் மரபு உண்டு. கவியால் செய்யப்படுவது காவியம் ; காவியம் காப்பியமாயிற்று.
காப்பியம் என்பது தமிழ்ச் சொல்லேயாகும். இது காவியம் என்ற வடமொழிச் சொல்லின் திரிபு அன்று; காப்பு + இயம் என்னும் தமிழ்ச் சொற்சேர்க்கையே காப்பியம் எனப்பட்டது.
காப்பியாறு, காப்பியக்குடி, தொல்காப்பியம் என்ற சொற்களில் தொன்று தொட்டு வழங்கப் பெற்ற *காப்பியம்* என்னும் சொல், வடமொழியில் இடம் பெறும் *காவியம்* என்பதற்கு இணையான சொல்லாகக் கருதப்பெற்றுப் பிற்கால வழக்கில் நிலைபெறலானது எனக் கொள்வது பொருத்த முடையதாகும்.
**************************
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
உள்குத்து எல்லாம் தேவையில்லை, சிந்தி (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
(புதிராடுகளத்தில் இனைய post your msg in whatsapp)
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*இன்றைய புதிர்!*( 22-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
*************************
*மாதவியும் கண்ணகியும்*
இது இந்திர விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று; இந்நிலையில் மாதவியின் நிலை யாது? *செங்கழு நீர்ப்பு தேன்சிந்தி உகுகிறது.* அது போல் இவள் சிவந்த கண்கள் உவந்த காரணத்தால்
மகிழ்வக் கண்ணீர் சொரிந்தன.
கண்ணகி அவள் கருங்கண்கள் எந்த மாற்றமும் அடையவில்லை; தனிமையில் உழந்து தளர்ந்த நிலையில் *அவள் கண்ணீர் உகுத்தாள்.*
மாதவியின் வலக்கண் துடித்தது: கண்ணகியின் இடக்கண் துடித்தது. இருவர் நிலைகள் முரண்பாடு கொண்டவை; ஒருத்தி மகிழ்ச்சியில் திளைத்தாள்: மற்றொருத்தி தனிமையில் தவித்தாள். இந்த மாறுபட்ட நிலைகளில் இருவரும் மகிழ்வும் துயரமும் காட்டினர்.
********************
_உள்குத்து எல்லாம் தேவையில்லை, சிந்தி (4)_
_உள்குத்து எல்லாம் தேவையில்லை_
= *உள்குத்து----* >இதில்
எல்லா எழுத்துகளும் தேவையில்லை
= Naturally by removing " *ள்* " , we get " *உகுத்து* "
_சிந்தி_ = *உகுத்து*
**********************
*தேவாரம்*
இரண்டாம் திருமுறை
*****
_கலவ மாமயி லாளொர் பங்கனைக்_
_கண்டு கண்மிசை நீர்நெ கிழ்த்திசை_ _குலவு மாறுவல்லார்_
_குடிகொண்ட__ _கோட்டாற்றில்_
_நிலவு மாமதி சேர்ச_ _டையுடை_
_நின்ம லாவென_
_வுன்னு வாரவர்__
_உலவு வானவரின்_
_உயர்வாகுவ_ _துண்மையதே._
*பொ-ரை:*
தோகையை உடைய மயில் போன்றவளாகிய
பார்வதிதேவியின் பங்கனைக் கண்டு கண்ணீர் நெகிழ்ந்து இசையோடு
தோத்திரம் சொல்லுவார் குடி கொண்டுள்ள கோட்டாற்றில், நில
வொளி வீசும் பிறைமதிபோன்ற சடையை உடைய நின்மலனே! என
அவனை நினைவார் வானில் உலவுகின்ற வானவர்களினும்
உயர்வாகுவது உண்மை.
*கு-ரை* :
கலவம்-தோகை: மயிலாள்-மயில்போலும் சாயலுடைய
உமாதேவியார். *கண்மிசை நீர் நெகிழ்த்து-கண்ணீர் உகுத்து.*
நிலவம்
-நிலாவைத்தரும். உன்னுவார்-தியானம் செய்பவர். வானவரின்-
தேவரினும். உண்மையது-சத்தியமானது. ஆசிரியர் ஆணையிட்டுக்
கூறுதலை நோக்கின், உயிர்களைச் சிவவழிபாட்டில் ஈடு
படுத்தக்
கொண்டிருக்கும் பேரன்பு விளங்கும்
**********************
*விடையளித்தோர் பட்டியல்!*
[6/22, 07:01] Ramarao உகுத்து
[6/22, 07:04] V N Krishnan.: V anchi Puthir. உகுத்து
[6/22, 07:13] sankara subramaiam: உகுத்து
[6/22, 07:19] Meenkshi: விடை:உகுத்து
உகுத்து=சிந்தி?
[6/22, 07:34] nagarajan: *உகுத்து*
[6/22, 07:40] ஆர். நாராயணன்.: உகுத்து = சிந்தி , உள்குத்து - ள்
[6/22, 07:47] Dr. Ramakrishna Easwaran: *உகுத்து*
உள்குத்து என்ற சொல்லில் எல்லா எழுத்துகளும் இல்லாது உ, கு, த், து என்ற எழுத்துகள் மட்டும் எடுத்து வருவது. (கீழே) சிந்தி என்று பொருள். (உ-ம்) கண்ணீர் சிந்தி / உகுத்து
[6/22, 08:17] Dhayanandan: உகுத்து
[6/22, 08:42] balakrishnan: Theliththu🙏🏻
[6/22, 09:23] siddhan submn: உகுத்து உதிர்த்து
[6/22, 10:42] sathish: உகுத்து!
[6/22, 12:46] பாலூ மீ.: உகு = சிந்து
விடை உகுத்து.
[6/22, 18:44] கு.கனகசபாபதி, மும்பை: உகுத்து
[6/22, 19:16] Viji - Kovai: 22.6.2020 விடை
உகுத்து
[6/22, 19:19] N T Nathan: உகுத்து
*************************
*இன்றைய புதிர்!*( 23-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
இப்போதே பயன்படுத்தும் நிலையில் உதயா ராகவனைப் பிடித்துவிட்டாள் (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 23-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
_"எதற்கும் *தயாராக* இருக்க வேண்டும், ஒரு நாள் நமக்கான வாய்ப்பு வரும்!"_
*ஆபிரகாம் லிங்கன்*
*************************
_இப்போதே பயன்படுத்தும் நிலையில் உதயா ராகவனைப் பிடித்துவிட்டாள் (4)_
_உதயா ராகவனைப் பிடித்துவிட்டாள்_😟
= *உதயா ராகவனுக்குள்* _விடையை நாமும் பிடித்துவிடலாம்_
= [உ] தயா ராக [வனை]
= *தயாராக*
= _இப்போதே பயன்படுத்தும் நிலையில்_
**********************
*படித்ததில் பிடித்தது!*
என்னை உன் காதலால் அழ வைத்து பார்ப்பதில் தான் உனக்கு பிரியம் என்றால் அதையும் ஏற்று கொள்ள நான் *தயாராக* தான் உள்ளேன் உன் சந்தோஷம் தான் எனக்கு முக்கியம்.
***********
_எதையும் உனக்காக விட்டு கொடுக்க *தயாராக* இருக்கிறேன்_
_அதற்காக நீ என் காதலை மட்டும் கேட்டு விடாதே._
***********
உன் பிரிவு தற்காலிகமானதோ
நிரந்தரமானதோ
தெரியவில்லை எனக்கு....
ஆனால் உன்னோடு
நான் வாழ்ந்த நினைவுகள்
எனக்கு மட்டுமே சொந்தம் ..
உன்னை எப்பொழுதும்
நான் நினைத்துக் கொண்டிருக்க
என் தனிமை உடனிருந்தால் போதும் ..
என்றும் உன் நினைவுகளோடே
வாழ விரும்புவதால்தான்
சொல்கிறேன் .....
என் தனிமையை விட்டுக்கொடுக்க
*தயாராக* இல்லை ...........
**********************
*தயாராக வந்து விடையளித்தோர்!*
💐👏🏼💐
[6/23, 07:04] Ramarao : தயாராக
[6/23, 07:04] Dhayanandan: தயாராக
[6/23, 07:04] ஆர். நாராயணன்.: தயாராக
[6/23, 07:04] sathish: தயாராக
[6/23, 07:05] V N Krishnan.: தயாராக
[6/23, 07:06] sankara subramaiam: தயாராக
[6/23, 07:07] balakrishnan: Thayaraaga
🙏🏻
[6/23, 07:09] மீ.கண்ணண்.: தயாராக
[6/23, 07:13] Dr. Ramakrishna Easwaran: *தயாராக*
Telescopic
[6/23, 07:15] Meenkshi: விடை:தயாராக
[6/23, 07:21] chithanandam: தயாராக
[6/23, 07:23] N T Nathan: தயாராக
[6/23, 07:23] balagopal: தயாராக.
[6/23, 07:27] stat senthil: தயாராக
[6/23, 07:37] பாலூ மீ.: தயாராக.
[6/23, 07:46] கு.கனகசபாபதி, மும்பை: தயாராக
[6/23, 07:47] prasath venugopal: தயாராக
[6/23, 08:03] Ramki Krishnan: Thayaaraaga
[6/23, 08:27] Rajalakshmi Krishnan: Thayaaraaga
[6/23, 08:28] nagarajan: *தயாராக*
[6/23, 08:29] akila sridharan: தயாராக
[6/23, 10:31] shanthi narayanan: தயாராக
[6/23, 12:11] Viji - Kovai: 23.6.2020 விடை
தயாராக
[6/23, 14:42] A D வேதாந்தம்: விடை= தயாராக/ வேதாந்தம்
[6/23, 16:27] Venkat UV: தயாராக 🙏🏽
**********************
*இன்றைய புதிர்!*( 24-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
ருது சியாமளா பாதியும் மேனகை இடையும் கொண்டால் நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும்தான் (5)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
**************************
*இன்றைய புதிர்!*( 23-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*மூடனாயிருந்த காளிதாசனை மகாகவியாக்கிய சியாமளா தேவி*
தேவியின் ஒன்பதாவது வடிவமான சியாமளா தேவியை உஜ்ஜயினியில் வணங்கியதால் மூடனாயிருந்த காளிதாசன் மகாகவியானான் என்கிறது புராணம். மூடமாய் முடங்கிக் கிடந்த காளிதாசனுக்கு அன்னை சியாமளா தேவியின் பெருங்கருனை மகாகவியாக மாற்றியது. மதங்க முனிவரின் மகளாகப் பிறந்ததால் மாதங்கி என்றும் அழைக்கப்படுகிறாள்.
*********************
ருது சியாமளா பாதியும் மேனகை இடையும் கொண்டால் நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும்தான் (5)
சியாமளா பாதியும்
= சியா [மளா] = சியா
மேனகை இடையும்
= [மே]ன[கை] = ன
ருது கொண்டால்
= சியா and ன inside ருது
= ருசியானது
= நாக்கைச் சப்பு கொட்ட வைக்கும்தான்
**********************
இந்த தோல்வியே ருசியானது......
உன்னிடம் போட்டியிடக் கூட தகுதி இல்லாத ஒருவனிடம் போட்டியிட்டு எளிதில் வெற்றி அடைந்தாலும் அந்த வெற்றியில் பெரிய இன்பம் இருக்காது . ஆனால், உன்னைவிட பல மடங்கு வலிமையானவனிடம் போட்டியிட்டு போராடி பல முறை தோற்றாலும் , அந்த தோல்வி மிகவும் ருசியானது!
*********************
ருசியான விடையளித்தவர்கள்!
**********************
[6/24, 07:01] Ramarao : ருசியானது
6/24, 07:02] V N Krishnan.: ருசியானது!
[6/24, 07:04] chithanandam: ருசியானது.
[6/24, 07:06] மீ.கண்ணண்.: ருசியானது
[6/24, 07:11] Ramki Krishnan: Ruchiyaanathu
[6/24, 07:13] Meenkshi: விடை: ருசியானது
[6/24, 07:13] Dhayanandan: ருசியானது
[6/24, 07:18] sathish: ருசியானது
[6/24, 07:20] balakrishnan: 🙏🏻 Rusiyaanadhu
🤣👌
[6/24, 07:28] akila sridharan: ருசியானது
[6/24, 07:35] ஆர். நாராயணன்.: ருசியானது
[6/24, 07:36] prasath venugopal: ருசியானது
[6/24, 07:39] பாலூ மீ.: ருசியானது.
[6/24, 07:41] கு.கனகசபாபதி, மும்பை: ருசியானது
[6/24, 07:41] A D வேதாந்தம்: விடை= ருசியானது/ வேதாந்தம்
[6/24, 07:54] balagopal: ருசியானது.
[6/24, 07:55] nagarajan: *ருசியானது*
[6/24, 08:05] stat senthil: ருசியானது
[6/24, 08:22] Dr. Ramakrishna Easwaran: *ருசியானது*
சியாமளா பாதி= சியா
மேனகை இடை= ன
(ருது+சியா+ன)*
[6/24, 12:16] Viji - Kovai: 24.6.2020 விடை
ருசியானது
[6/24, 08:35] Bharathi: ருசியானது
[
[6/24, 09:37] siddhan submn: ருசியானது
[
[6/24, 09:52] shanthi narayanan: ருசியானது
[[6/24, 12:16] Viji - Kovai: 24.6.2020 விடை
ருசியானது
[6/24, 12:32] N T Nathan: ருசியானது
[6/24, 13:27] sankara subramaiam: ருசியானது
[6/24, 20:10] Venkat UV: ருசியான 🙏🏽
[6/24, 20:12] Venkat UV: மன்னிக்கவும் - ருசியானது 🙏🏽
***************************
*இன்றைய புதிர்!*( 25-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
சபாபதி தேக்கும் பாகும் வழிந்தோட கொடியில் நாட்டம் (2, 3)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 25-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*சபாபதி*
=அவைத்தலைவன்
=சிதம்பர சபையின் தலைவனாகிய நடராச மூர்த்தி
*************************
*சபாபதி*
பம்மல் சம்பந்த முதலியார் எழுதிய, சபாபதி என்ற நாடகம், அதே பெயரில் திரைப்படமானது. ஏ.டி.கிருஷ்ணசாமியும், ஏ.வி.மெய்யப்ப செட்டியாரும் இணைந்து, இயக்கினர். தமிழில் வெளிவந்த முதல், முழுநீள காமெடி படம். பள்ளிக்கூட குறும்பு காட்சிகளுக்கும், உடல் மொழிக்கும் ஆத்திச்சூடி எழுதியதே, சபாபதி படம் தான் என்று கூறலாம்.
முழு நீள காமெடி படமாக இருந்தாலும், அந்த காலத்தில், தமிழ் ஆசிரியர்களின் நிலை, பணக்காரர்களுக்கான மதிப்பு, ஏழை, பணக்காரன் வித்தியாசம், ஆங்கில மொழியின் தாக்கம் என, ஒரு சமூகப் படத்திற்கான அந்தஸ்து, இப்படத்திற்கு இருந்தது.
*************************
_சபாபதி தேக்கும் பாகும் வழிந்தோட கொடியில் நாட்டம் (2, 3)_
_பாகும் வழிந்தோட_
= indicator to remove *பாகும்* from *சபாபதி தேக்கும்*
= ச[பா[பதி தேக்[கும்]
= _anagram of_ *சபதிதேக்*
= *தேசபக்தி*
= _கொடியில் நாட்டம்_
**********************
_பாரதியின் பாடல்கள் அதிகம் தேசப்பற்றை சார்ந்ததே._
அவைகளில் ஒன்று!
பாரத தேசமென்று பெயர்சொல்லு வார் - மிடிப்
பயங்கொல்லு வார்துயர்ப் பகைவெல்லு வார்.
வெள்ளிப் பனிமலையின் மீதுலவு வோம் - அடி
மேலைக் கடல்முழுதும் கப்பல் விடுவோம்
பள்ளித் தலமனைத்தும் கோயில் செய்கு வோம், எங்கள்
பாரத தேசமென்று தோள்கொட்டுவோம். (பாரத)
சிங்களத் தீவினுக்கோர் பாலம் அமைப்போம்,
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்
வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால்
மையத்து நாடுகளில் பயிர்செய்குவோம். (பாரத)
பாரதியார்
**********************
*விடையளித்தோர் பட்டியல்!*
**********************
[6/25, 07:00] Ramarao : தேச பக்தி
[6/25, 07:01] chithanandam: தேசபக்தி.
[6/25, 07:02] V N Krishnan.: தேச பக்தி!
[6/25, 07:11] prasath venugopal: தேச பக்தி
[6/25, 07:15] balakrishnan: Dhesa bakthi
🙏🏻👌🤣
[6/25, 07:18] Meenkshi: விடை:தேச பக்தி
[6/25, 07:29] பாலூ மீ.: தேச பக்தி.
[6/25, 07:30] nagarajan: *தேச பக்தி*
[6/25, 07:36] N T Nathan: தேச பக்தி
[6/25, 08:41] Ramki Krishnan: Desa bakthi
[6/25, 08:46] Dr. Ramakrishna Easwaran: *தேச பக்தி*
[6/25, 09:20] siddhan submn: தேச பக்தி (சபதி + தேக்)
[6/25, 10:35] Dhayanandan: தேச பக்தி
[6/25, 11:26] sridharan: தேச பக்தி.
[6/25, 12:24] Rajalakshmi Krishnan: DhEsa bhakthi
[6/25, 15:08] sankara subramaiam: தேச பக்தி
**********************
*இன்றைய புதிர்!*( 26-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
எட்டு துணியைத் துவைக்க ஈட்டி முனை (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 26-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*எட்டில் நட!எட்டுத்திக்கும் நட!!*
பொதுவாக *_எட்டு_* என்ற எண் என்றாலே நாம் அனைவரும் ஒரு நிமிடம் யோசிக்கத்தான் செய்கிறோம். பெரியவர்கள் ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்றால் *'ஒரு எட்டு போயிட்டு வர்றேன்'* என்று சொல்வார்கள்.எட்டு போட்டால் இருசக்கர வாகனம் ஓட்ட உரிமம் கிடைக்கும் என்பது தெரியும்.
அதேபோல், தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும்,' “எட்டு போட்டா எமன் எட்டிப் போவான்” என்ற பழமொழிக்கேற்ப முயற்சி மற்றும் வெற்றிக்கு இந்த எட்டு என்ற எண் உறுதுணையாக இருக்கிறது.
சித்தர்கள் தங்கள் சுவாசத்தையே எட்டு வடிவில் பயிற்சி செய்து அதற்குரிய பலனையும் அடைந்தனர். அதேபோல் எட்டு என்ற எண்ணும் எட்டு வடிவ நடைப்பயிற்சியும் சில நல்ல பலன்களை தரக்கூடியது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
எட்டு நடை பயிற்சிஎட்டு வடிவ நடை பயிற்சி என்பது சித்தர்களால் கண்டுபிடிக்கப் பட்டதாகும்.
*எட்டில் நட! எட்டுத்திக்கும் நட!* என்பதை போல எட்டில் நடப்பதால் மனித உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் தீர்வு கிடைக்கும் என்றும் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றும் சித்தர்கள் குறிப்பில் சொல்லப்பட்டுள்ளது
_எட்டில் நடப்பவனுக்கு நோய் எட்டிப்போகும்_ என்பது போல எட்டு நடை பயிற்சி செய்வதால் உடலளவிலும், மனதளவிலும் ஆரோக்கியமாக வாழமுடியும்.-
(dinamalar.com)
**********************
_எட்டு துணியைத் துவைக்க ஈட்டி முனை (4)_
_துணியைத் துவைக்க_ = *தப்ப*
_ஈட்டி முனை_
= *[ஈட்]டி = டி*
_எட்டு_
= *தப்ப+டி*
= *தப்படி*
**********************
*_தப்படி_* (பெ)
தவறான செய்கை
_ஐந்தடி அல்லது மூன்றடிகொண்ட கால்வைப்பு_
***********
*தப்படி* --- DDSA பதிப்பு + வின்சுலோ +
சொல் வளப்பகுதி
அடி, காலடி, *எட்டு* , முழம்
**********************
*தப்பு*
தவறு என்பது தவறிச் செய்வது. தப்பு என்பது தெரிந்து செய்வது என்பர். தப்பு என்பது வழக்கத்தில் சொல்லப்பட்டாலும் *தப்புதல் என்பது துணி துவைத்தல்* , தப்பித்தல் என்று பொருள் உடையது. எனவே, தெரிந்து செய்வதை தப்பு என்பதைவிட குற்றம் என்பதே சரி. தப்பு என்பது சரியென்பதன் எதிர்ச்சொல் என்று கொள்ளலாம்.
**********************
_கடினமான இன்றைய புதிருக்கு எட்டி அடியெடுத்து வைத்து விடையளித்தோருக்கு பாராட்டுகள்!_ 💐🙏🏼💐
**********************
[6/26, 07:11] *Ramarao* : தப்படி.
தப்பல் (துவைத்தல்).
தப்ப + டி = தப்படி
[6/26, 07:21] *பாலூ மீ.:* தப்படி.?
[6/26, 08:14] *nagarajan* : தப்படி
[6/26, 08:42] *siddhan submn* : தப்ப + ஈட்(டி) தப்படி
[6/26, 09:29] *sankara subramaiam* : தப்படி
[6/26, 10:06] *ஆர். நாராயணன்* .: தப்படி
[6/26, 11:00] *கு.கனகசபாபதி, மும்பை* : தப்படி
[6/26, 17:19] *balagopal* : அடித்து.
[6/26, 18:50] *balakrishnan* : Thappadi
🙏🏻🤣
**********************
*இன்றைய புதிர்!*( 27-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
ஒரு மண்டலத்தின் மத்தி இல்லாமல் தடுமாறிய நகரம் (4)
**********************
உங்கள் விடைகளை பதிவிட
புதிராடுகளம் - whatsapp 9008746624 .
இரவு 9.00 மணிக்குமேல் இங்கு உங்கள் விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
**********************
*************************
*இன்றைய புதிர்!*( 27-06-20)
from
*Vanchinathan's archive-2009*
(தென்றல்)
**********************
*மண்டலம்* என்ற சொல்லானது சங்க காலத்தின் போது கூட, தமிழக பிராந்தியத்தியங்களான சேர,சோழ, பாண்டிய மண்டலங்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டது
மண்டலம் என்பது சோழ அரசின் மிகப்பெரிய பிராந்தியப் பிரிவு ஆகும். சோழநாடு அதன் உச்சத்தின்போது, அதன் ஆட்சிப் பகுதிகளை ஒன்பது மண்டலங்களாக பிரித்திருந்தது, இதில் இலங்கையும், வெற்றிகொள்ளப்பட்ட பிற பகுதிகளும் அடங்கும்.இதில் இரண்டு முக்கிய மண்டல்கள் சோழ மண்டலம் மற்றும் ஜெயங்கொண்டசோழ மண்டலமும் ஆகும்.
தொண்டை நாடு அல்லது தொண்டை மண்டலம் என்பது சங்ககால நாடுகளில் ஒன்று. தொண்டைமான் இளந்திரையன்இந்நாட்டின் சங்ககால அரசன். பிற்காலச் சோழர்கள் தொண்டை நாட்டைக் கைப்பற்றியபிறகு அதற்கு ஜெயங்கொண்ட சோழமண்டலம் என்று பெயர் சூட்டப்பட்டது. (அதாவது சோழ நாட்டால் வெற்றிகொள்ளப்பட்ட நிலம்) .
**********************
_ஒரு மண்டலத்தின் மத்தி இல்லாமல் தடுமாறிய நகரம் (4)_
_மண்டலத்தின் மத்தி இல்லாமல்_
= _மண்டலத்தின் - மத்தி_
= *ண்டலன்*
_தடுமாறிய_
= anagram indicator for *ண்டலன்*
= *லண்டன்*
= _ஒரு நகரம்_
**********************
சபரிமலைக்கு மாலை அணிந்து செல்லும்போது ஒரு *மண்டலம்* விரதம் இருக்க வேண்டும் என்று சொல்கிறார்களே.. ஒரு மண்டலம் என்பது எத்தனை நாட்கள்? 41, 45, 48 என்று ஒவ்வொருவர் ஒவ்வொரு கணக்கினைச் சொல்கிறார்கள்.
ஒரு மண்டலம் என்று அழைக்கப்படுகின்ற காலத்தின் அளவும் விரதம் இருக்கின்ற மாதத்திற்கு ஏற்றாற்போல் மாறுபடுகிறது. ஆலயங்களில் கும்பாபிஷேகம் நடைபெற்ற பின் 48 நாட்கள் தொடர்ந்து சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து 48வது நாளில் மண்டலாபிஷேக நிறைவு விழாவினைச் செய்யக் கண்டிருப்பீர்கள். இந்த கால அளவு கூட விழா நடைபெறுகின்ற மாதத்திற்கு
ஏற்றாற்போல் மாறுபடும்.
சித்த மருத்துவ முறையில் இயற்கை மருந்தை ஒரு மண்டலம் சாப்பிட சொல்வது வழக்கம். அப்படி செய்தால் நோய் நிரந்தரமாக குணமடையும் என்பது ஐதீகம். குறிப்பாக, ஆன்மிக ரீதியாக தொடர்ந்து 48 நாட்கள் செய்யும் இறைவழி பாடுகள் அல்லது வேண்டுதல்கள் நிறைவேறுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது
ஒரு மண்டலம் என்பதும் அது இடம்பிடிக்கின்ற காலத்திற்கு ஏற்றவாறு அதன் அளவும் மாறுபடுகிறது. இந்த அளவானது 42 முதல் 48 நாட்கள் வரை வரக்கூடும். சராசரியாக கணக்கில் எடுத்துக் கொண்டால் ஒரு மண்டலம் என்பது 45 நாட்கள் ஆகும்.
***********************
இங்கிலாந்து நாட்டின் தலைநகராக விளங்கும் லண்டன் மாநகரின் இதயப் பகுதியாக விளங்குவது நீஸ்டன் என்ற இடம். இங்கு சுவாமி நாராயணா கோவில் அமைந்துள்ளது. இது ஐரோப்பா கண்டத்திலேயே மிகப் பெரிய இந்து ஆலயம் என்ற புகழுக்குரியது. முழுவதும் வட இந்திய பாணியில், கூரான உயர்ந்த கோபுரங்களைக் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ஆலயம், இங்கிலாந்து நாட்டினரை மட்டுமல்லாது உலகெங்கும் உள்ள மக்களைக் கவர்ந்து ஒரு சுற்றுலாத் தலமாக பரிணமிக்கிறது.
பல்கேரிய வெண் கற்களையும், இத்தாலி மற்றும் இந்திய பளிங்குக் கற்களையும் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ள பிரமாண்டமான இந்தக் கலைக் கோவிலில் காணும் இடமெல்லாம் கண்கவர் சிற்பங்கள் நம் விழிகளை விரியச் செய்கின்றன. வெள்ளைக் கற்களால் வளைந்து நெளிந்து உயர்ந்து நிற்கும் தோரணவாயில் நம்மை வரவேற்கிறது.
💐🙏🏼💐
*************************
************************
6/27, 07:01] Ramarao திரைக்கதம்பம்: லண்டன்
[6/27, 07:02] A D வேதாந்தம்: விடை= லண்டன்/ வேதாந்தம்
[6/27, 07:02] V N Krishnan.: லண்டன்
[6/27, 07:05] chithanandam: லண்டன்
[6/27, 07:06] மீ.கண்ணண்.: லண்டன்
[6/27, 07:07] பாலூ மீ.: லண்டன்.
[6/27, 07:10] Meenkshi: இன்றைய விடை:லண்டன்.
[6/27, 07:12] Dhayanandan: லண்டன்
[6/27, 07:22] balakrishnan: LONDON🤣👌🙏🏻
[6/27, 07:26] nagarajan: *லண்டன்*
[6/27, 08:24] N T Nathan: லண்டன்
[6/27, 08:24] கு.கனகசபாபதி, மும்பை: லண்டன்
[6/27, 08:33] Viji - Kovai: 27.6.2020 விடை
லண்டன்
[6/27, 08:47] ஆர். நாராயணன்.: லண்டன்
[6/27, 09:24] sridharan: லண்டன்
[6/27, 09:58] sankara subramaiam: லண்டன்
[6/27, 07:25] akila sridharan: லண்டன்
[6/27, 11:13] உஷா, கோவை: லண்டன்
[6/27, 13:12] shanthi narayanan: லண்டன்
[6/27, 15:39] Dr. Ramakrishna Easwaran: *லண்டன்*
மண்டலத்தின் minus மத்தி= ண்டலன் anagram
************************