இன்று காலை வெளியான வெடி:
இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5)
அதற்கான விடை: பாம்பாட்டி = பாம் + பாட்டி
பாம் = பாரம் - ர
காளமேகம் எள்ளுக்கும் பாம்புக்கும் பொருந்துமாறு எழுதிய சிலேடை:
ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5)
அதற்கான விடை: பாம்பாட்டி = பாம் + பாட்டி
பாம் = பாரம் - ர
காளமேகம் எள்ளுக்கும் பாம்புக்கும் பொருந்துமாறு எழுதிய சிலேடை:
ஆடிக் குடத்தடையும் ஆடும்போதே இரையும்
மூடித்திறக்கின் முகம்காட்டும் -ஓடிமண்டை
பற்றிப் பரபரெனும் பாரிற்பிண் ணாக்குமுண்டாம்
உற்றிடுபாம் பெள்ளெனவே யோது
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
*உதிரிவெடி 4149*
***********************
_நான் மிகமிக ரசிக்கும் புலவர்களில் அவ்வையாரும் காளமேகமும் முதன்மையானவர்கள்._
காளமேகம் கவிதைகளில் சொல்லாடலும் இலக்கிய நயமும் படிக்கும்போது நம்மை வியப்பிலாழ்த்தும். அதுவும் அவரது சிலேடைப் பாடல்களைப் படித்தால் நாம் சொக்கிப் போவோம். உதாரணமாக:
பாம்பையும் எள்ளையும் குறித்து ஒரு வெண்பா:-
*பாடல்*
*_ஆடிக்குடத்தடையும்_*_ஆடும்போதேயிரையும்_
_மூடித் திறக்கின் முகங்காட்டும் –ஓடிமண்டை_
_பற்றின் பரபரெனும் பாரிற்பிண்ணாக்குமுண்டாம்_
_உற்றிடுபாம் பெள்ளெனவே யோது .(5)_
*பிரித்துப் படிக்க:*
*ஆடிக் குடத்தை அடையும்* ஆடும் போதே இரையும்
மூடித் திறக்கின் முகம் காட்டும். ஓடி மண்டை
பற்றி பரபர எனும் பாரிர் பிண்ணாக்கும் உண்டாம்
உற்றிடு பாம்பு எள் எனவே ஓது
*விளக்க உரை:*
*பாம்பானது* படமெடுத்து ஆடியபிறகு அருகிலுள்ள பானை அல்லது குடத்தினில் புகுந்து கொள்ளும். படமெடுத்து ஆடும்போது சீற்றமுடன் ஒலியெழுப்பும். பாம்பு உள்ள பெட்டி அல்லது கூடையைத் திறந்தால் சட்டென்று தலையை உயர்த்திக் காட்டும். அதன் தலையைப் பிடித்தாலோ பரபரவென்று கையைச் சுற்றிக் கொள்ளும். அது கடித்துவிட்டாலோ அதன் விஷம் மண்டைக்கேறி உடலெங்கும் பரபரவென்று ஊரல் உண்டாக்கும். அதனுடைய நாக்கோ பிளவுபட்டதாக இருக்கும்.
*எள்* , செக்கிலிட்டு ஆட்டப்பட்டு அதன் எண்ணையானது குடத்தில் சேமிக்கப்படும். அதைச் செக்கிலிட்டு ஆட்டும்போது கரகரவென்ற ஓசை ஏற்படும். எண்ணைக் குடத்தை சிறிது நேரம் மூடிவைத்து நுரை அடங்கியபின் திறந்து பார்த்தால்... திறந்து பார்ப்பவரின் முகத்தைத் தெளிவாகக் காட்டும். எள் எண்ணையை மண்டையில் தேய்த்துக்கொண்டால் பரபரவெனக் குளிர்ச்சி உண்டாக்கும். அல்லது உச்சியில் தேய்த்தால் பரவியோடி மண்டையில் பரபரவென்று ஊரலெடுக்கும். எள்ளிலிருந்து பிண்ணாக்கும் கிடைக்கும்.
_இப்படி அருமையாக பல சிலேடைப் பாடல்களைப் பாடியுள்ளார் கவி காளமேகப்புலவர்._
***********************
_இடையொடிய சுமை கொண்டு முதியவள் ஆடிக் குடத்தடைய வைப்பவள் (5)_
_இடையொடிய சுமை_
= *பா(ர)ம்*
= *பாம்*
_முதியவள்_ = *பாட்டி*
_ஆடிக்குடத்தடைய வைப்பவள்_
= *பாம்+பாட்டி*
= *பாம்பாட்டி*
***********************
_பாம்பாட்டி சித்தர்_
என்பவர் பதினெண் சித்தர்களுள் ஒருவராவார். பாம்புகளை கையாளுவதில் திறன் கொண்டவர் என்பதால் *பாம்பாட்டிச் சித்தர்* என்று பெயர் பெற்றதாகக் கூறுவர்.
_மனம் என்னும் பாம்பை ஆட்டிவைக்க வேண்டும் ௭ன பாடல்களைப் பாடியவர் பாம்பாட்டிச்சித்தர்_ .
எளிய தமிழில் கருத்தைச் சொல்லி... அந்தக் கருத்தின் நிமித்தம் மகிழ்ந்து ஆடுபாம்பே... என்று அவர், தன் எதிரில் இருக்கும் பாம்புக்குச் சொல்வதுபோலவே, மனதுக்குள் இருக்கும் பாம்புக்கும் உபதேசம் செய்தார்.
*_இருவர் மண் சேர்த்திட, ஒருவர் பண்ண_*
*_ஈரைந்து மாதமாய் வைத்த சூளை_*
*_அருமையாய் இருப்பினும் அந்த சூளை_*
*_அரைக் காசுக்கு ஆகாதென்று ஆடுபாம்பே!_*
என்று,
உலகத்துப் பாம்புகள், ஒன்றுமில்லாதவை; உள்ளிருக்கும் பாம்போ, சுகத்தின் மூலம்; என்று, தானறிந்த உண்மையை உரக்கச் சொல்லத் தொடங்கினார்.
*************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 16-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வருடம் மூன்று போதுமென்பான் விவசாயி, தினமும் வேண்டுமென்பான் காமுகன் (3)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*_போகம் சுகபோகம் சிவபோகம் அதுநித்தியம்_*
*_ஏகம் சிவம்ஏகம் சிவம்ஏகம் இதுசத்தியம்_*
(திருஅருட்பா)
***********************
_திருமூலர் அருளிய திருமந்திரம்_
அன்பே சிவம்
பாடல் #639
(அட்டாங்க யோகத்தால் அடையும் சிறப்புகள்)
*பாடல்*
_காரிய மான உபாதியைத் தான்கடந்_
_தாரிய காரணம் ஏழுந்தன் பாலுற_
_வாரிய காரண மாயத் தவத்திடைத்_
_தாரியல் தற்பரஞ் சேர்தல் சமாதியே._
*விளக்கம்* :
இந்த உலகத்தில் துன்பம் தரக்கூடிய காரணங்களாகிய தனு, கரணம், புவனம், *போகம்* ஆகிய பந்தங்களைக் கடந்து சென்று ஏழுவகையான சிவ தத்துவங்களையும் தன் அறிவாலேயே உணர்ந்து பெற்று ஜென்ம ஜென்மமாய்த் தொடர்ந்து வரும் மாயையைத் தவத்தால் வெற்றி பெற்று இறைவனின் திருவடியைச் சேருதல் சமாதியால் பெறும் பயனாகும்.
*நான்கு வகை பந்தங்கள்* :
தனு – தன் உடலின் மேல் இருக்கும் பற்று
கரணம் – ஆசைப்படும் மனது
புவனம் – உலகப் பற்று
*போகம்* – உலகப் பொருள்களை அனுபவித்தல்
***********************
_வருடம் மூன்று போதுமென்பான் விவசாயி, தினமும் வேண்டுமென்பான் காமுகன் (3)_
_வருடம் மூன்று போதுமென்பான் விவசாயி_
= *போகம்*
_தினமும் வேண்டுமென்பான் காமுகன்_
= *போகம்*
*************************
ஆத்திசூடி
*பருவத்தே பயிர் செய்.*
_எச்செயலையும் அதற்குரிய காலத்திலேயே செய்ய வேண்டும்_
பருவநிலை மாற்றங்களை அறிந்து எந்த பருவத்தில் எதை பயிர் செய்தால் விளைச்சல் கைகூடி வரும் உழைப்புக்கு பலன் கிட்டும் என்பதை தெரிந்து பயிர் செய்ய வேண்டும் என்கிறது இந்த பாடல்.
இதற்கு நெற்பயிரை ஒரு சிறந்த உதாரணமாக கொள்ளலாம். நெற்பயிரில் பல ரகங்கள் உள்ளன. இப்பயிரை விளைவிக்க, ரகத்திற்கு ஏற்றாற்போல் மூன்று முதல் ஆறு மாதங்கள் தேவைப்படுகிறது. பருவநிலைக்கு ஏற்றாற்போல், ஒரு வருடத்தை *மூன்று போகங்களாக* பிரிக்கப்பட்டு பயிர் செய்யப்படுகிறது. சித்திரையில் நாற்று நடுதல் சொர்ணவாரி என்றும், ஆவணியில் ஆரம்பித்தல் *சம்பா போகம்* என்றும், தையில் நடவு செய்தல் *கார் போகம்* என்றும் பிரித்து சிறப்பாக தமிழகத்தில் காலம் காலமாக பயிர் செய்யப்படுகிறது. இச்சிறப்பிற்கு முத்தாய்ப்பாக சம்பா போகத்தில் பயிரிட்ட நெல்லை அறுவடை செய்தே பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
*************************
💐🙏🏼💐
****************************
[8/16, 07:01] stat senthil: போகம்
[8/16, 07:01] திரைக்கதம்பம் Ramarao: போகம்
[
[8/16, 07:01] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏போகம்
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[8/16, 07:01] A Balasubramanian: போகம்
A.Balasubramanian
[
[8/16, 07:02] sridharan: போகம்
[
[8/16, 07:03] மீ.கண்ணண்.: போகம்
[
[8/16, 07:03] Dhayanandan: *போகம்*
[
[8/16, 07:06] ஆர். நாராயணன்.: போகம்
[
[8/16, 07:06] G Venkataraman: போகம்
*( அற்புதம் புதிர்)*
[8/16, 07:10] Meenakshi: விடை:போகம்
[8/16, 07:13] Dr. Ramakrishna Easwaran: போகம்
[8/16, 07:23] akila sridharan: போகம்
[
[8/16, 07:25] மாலதி: போகன்
[8/16, 07:39] பாலூ மீ.: போகம்.
[8/16, 07:40] Rohini Ramachandran: போகம்
[8/16, 07:40] prasath venugopal: போகம்
[
[8/16, 07:40] chithanandam: போகம்
[8/16, 07:55] sankara subramaiam: போகம்
[8/16, 08:11] nagarajan: *போகம்*
[
[8/16, 08:13] siddhan subramanian: போகம்
[8/16, 08:18] A D வேதாந்தம்: விடை= போகம் ( வேதாந்தம்)
[
[8/16, 08:30] Usha Chennai: போகம்
[
[8/16, 08:35] Bharathi: போகம்
[8/16, 08:55] Bhanu Sridhar: போகம்
[8/16, 09:40] ஆர்.பத்மா: போகம்
[
[8/16, 11:55] வானதி: *போகம்*
[8/16, 12:25] shanthi narayanan: போகம்
[8/16, 13:41] N T Nathan: போகம்
[8/16, 16:37] joseph amirtharaj: போகம்
[
[8/16, 17:07] Venkat: போகம் 🙏🏾
[8/16, 18:32] Viji - Kovai: போகம்
[
[8/16, 19:32] V N Krishnan.: போகம்
[8/16, 19:36] sathish: போகம்
[8/17, 00:35] Revathi Natraj: போகம்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஓவியர் வைகைக்குள் மூழ்கி இதைப் போக்கலாம்! (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
என்றும் விலை போகாத முத்துக்கள் உழைப்பவன் நெற்றியில் இருக்கும் *வியர்வை* துளி.
********
வெற்றி எனும் மரம் வளர *வியர்வை* எனும் நீர் ஊற்றித்தான் ஆக வேண்டும்
********
*வியர்வை* சிந்தாத உன்னாலும், மை சிந்தாத பேனாவாலும், எதையும் சாதித்திட முடியாது..!
********
*வியர்வை* துளிகளும் கண்ணீர் துளிகளும் உப்பாக இருக்கலாம். ஆனால், அவைதான் வாழ்க்கையை இனிப்பாக மாற்றும்.
*************************
ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே
என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே
நெற்றி *வேர்வை* சிந்தினோமே முத்து முத்தாக
அது நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக
பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக அடிச்சுப்
பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக
(திரைப்படம்: பிள்ளைக் கனியமுது 1958)
***********************
_ஓவியர் வைகைக்குள் மூழ்கி இதைப் போக்கலாம்! (4)_
_மூழ்கி_ = _double definition ciue word_
_ஓவியர் வைகைக்குள் மூழ்கி_
= _விடை (ஓவியர் வைகைக்குள்) மூழ்கியுள்ளது_ = _ஓ[வியர்வை]கைக்குள்_
= *வியர்வை*
_மூழ்கி இதைப் போக்கலாம்_
= _( நீரீல் )மூழ்கி இதைப் போக்கலாம்_
= *வியர்வை*
*************************
*வியர்வை மாற்றம்*
நாம் உழைக்கிறோம் என்பதற்கான குறியீடுதான் வியர்வை. வியர்வையை அருவெறுப்பாக எண்ணும் நம்மில் பலர் ஒரு செயலில் வெற்றி அடையும் முன்னர் வியர்வைதான் அதன் முதல் அறிகுறி என்பதினை அறியாதவர்.
வியர்வையைக் குறித்த ஒரு சில கருத்துக்களையும் அதற்கேற்ற ஒரு கவிதையையும் இப்பொழுது பார்ப்போம்.
**********
*வியர்வையைக் குறித்த சில தகவல்கள்:*
மனித உடலானது ஒரு மணி நேரத்திற்கு இரண்டு முதல் நான்கு லிட்டர் வரை வியர்வையை வெளியேற்றுகிறது. இதுவே ஒரு நாளைக்கு பத்து முதல் பதினைந்து லிட்டர் வரை கணக்கிடப்படுகிறது.
*****
எந்தெந்தக் காரணங்களால் வியர்வை வெளியேற்றப்படுகிறது என்று பார்த்தால் நம்மை வியப்புக்குள் கொண்டுச் செல்லும். சுற்றுச் சூழல் வெப்பநிலை அதிகரிக்கும் போது, உடல்நிலை சரியில்லாத போது, மாதவிடாய் நிரந்தரமாக நிற்கும் பொழுது, கோபம் வரும் பொழுது, அச்சம் வரும் பொழுது, குழப்பம் வரும் பொழுது ஆகிய நேரங்களில் வியர்வை சுரக்கிறது.
******
வியர்வை ஏன் நாற்றம் அடிக்கிறது? வியர்வைக்கு என்று தனியாக வாசம் கிடையாது. நமக்கு வியர்வை வரும் பொழுது நமது தோலின் மேற்பகுதியில் உள்ள சில பாக்டீரியாக்களால் வியர்வை நாற்றம் எடுக்கிறது.
******
கவிதை:
சிலர் ஓடி வியர்வையை வரவைப்பர்
சிலர் ஆடி வியர்வையை வரவைப்பார்
சிலர் பேசி வியர்வையை வரவைப்பர்
பலர் உழைத்து வியர்வையை வரவைப்பர்
(Kannan Periyanayagam)
*************************
💐🙏🏼💐
****************************
[8/17, 07:04] திரைக்கதம்பம் Ramarao: வியர்வை
[8/17, 07:04] A Balasubramanian: வியர்வை
A.Balasubramanian
[8/17, 07:04] Dr. Ramakrishna Easwaran: *வியர்வை*
[8/17, 07:08] பாலூ மீ.: வியர்வை.
[8/17, 07:09] மீ.கண்ணண்.: வியர்வை
[8/17, 07:17] stat senthil: வியர்வை
[8/17, 07:36] prasath venugopal: வியர்வை
[
[8/17, 07:42] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வியïfர்வை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/17, 07:44] chithanandam: வியர்வை
[8/17, 07:47] nagarajan: *வியர்வை*
[8/17, 07:47] ஆர். நாராயணன்.: வியர்வை
[8/17, 07:49] Meenakshi: விடை:வியர்வை.
[8/17, 07:49] sridharan: வியர்வை
[8/17, 07:51] மாலதி: வியர்வை
[8/17, 08:38] siddhan subramanian: வியர்வை
[8/17, 10:26] Dhayanandan: *வியர்வை*
[8/17, 12:11] shanthi narayanan: வியர்வை
[8/17, 13:07] கு.கனகசபாபதி, மும்பை: வியர்வை
[8/17, 15:05] வானதி: *வியர்வை*
[
[8/17, 15:21] Viji - Kovai: வியர்வை
[8/17, 19:54] Revathi Natraj: வியர்வை
[8/17, 20:53] Bhanu Sridhar: வியர்வை
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஒரு பக்கம் இடமில்லை (3)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_நரி வலம் போனால் என்ன, இடம் போனால் என்ன, மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி என்பார்கள்._
*பழமொழி*
***********************
*தயக்கம்*
பலர் கீறி காயப்படுத்த முடியாத
என் மனதை உன்னால் மட்டுமே
உடைக்க முடிந்தது
என்னை
காதலித்து விடுவோமோ என்றுனக்கும்
காதலிக்க முடியாமல் போய்விடுவேனோ
என்றெனக்கும் தயக்கம்
நமக்கு இடையில்
யார் யாரோ வந்து போகிறார்கள்
காதல் என்னருகிலும்
தயக்கம் உன்னருகிலும் தங்கிவிட்டது
மேலிருந்து கீழ்
கீழிருந்து மேல்
*இடமிருந்து வலம்*
*வலமிருந்து இடம்*
எப்படி வந்தாலும்
உன் தயக்கம் என்னை தள்ளி விடுகிறது
என்னை தவிக்கவிடுவது
நீ அல்ல உன் தயக்கம்
உன்னை சுமப்பது நான் அல்ல
என் காதல்
இந்த போட்டியில் யார்
ஜெயிப்பர்கள்
என் காதலா? உன் தயக்கமா ?
எழுதியவர் : சஜா
*************************
_ஒரு பக்கம் இடமில்லை (3)_
_இடமில்லை_
= _வலம்_
= *வலது*
_ஒரு பக்கம்_
= *வலது*
( _வலம்_ )
*************************
*சகுன சாஸ்திரம்* என்னும் நுட்பக்கலை ஒன்று உண்டு. அவற்றில் ஒரு துறை, பறவைகள் கத்துவது, குறுக்கேயோ அல்லது முன்னாலோ எதிராகவோ போவது போன்றவற்றை வைத்து நல்லது அல்லது கெட்டதை வகுத்துச்சொல்ல வழிகாட்டுகிறது.
செம்போத்து, ஆந்தை, கோட்டான், காகம் , கருடன் போன்ற சில பறவைகள் இந்தத் துறையில் அதிக முக்கியத்துவம் பெறுகின்றன.
_இடமிருந்து வலம் செல்லல், வலமிருந்து இடம் செல்லல் என்ற கணிப்பு இருக்கிறது._ அதுவும்கூட நேரத்துக்கு நேரம் மாறும்.
சகுன நூல் ஒன்றிலிருந்து இரண்டு பாடல்கள்
*வலமாகச் சென்றால் சுப சகுனம் -
*
_பசுவொடு புலியும் யானை பரிமளப் புனுகுப் பூனை_
_முசலொடு கோழி கள்ளிக் காக்கையும் மந்தி நாரை_
_விரையென நம்பும் புள்ளி மான் சுபமாது கொக்கு_
_நிஜமிது *வலமாய்* வந்தால் நினைத்தது ஜெயமாம் கண்டாய்_
*இடமாகச் சென்றால் சுப சகுனம் -_*
_காட்டில் வாழ் எருமை பன்றி கரடியும் குரங்கு மூஞ்சு_
_றோட்டமாம் நாயும் பூனை உடும்பொடு கீரிப்பிள்ளை_
_ஆட்டினற் கிடாவிமட்டை அரியவரெவரானாலும்_
_வாட்டமா மிடது பக்கம் வந்திடில் மிகவும் நன்றாம்_
*************************
💐🙏🏼🙏🏼
****************************
[
[8/18, 07:02] A Balasubramanian: வலம்
A.Balasubramanian
[8/18, 07:02] Bhanu Sridhar: வலது
This came as earlier puzzle I think by Mr Ramarao
[8/18, 07:03] திரைக்கதம்பம் Ramarao: வலது
[8/18, 07:04] stat senthil: வலது
[[8/18, 07:10] பாலூ மீ.: வலம்
*வலம்பக்கம் வராது. ஸோ விடை வலது.*
[8/18, 07:13] Meenakshi: விடை:வலது
[8/18, 07:15] மீ.கண்ணண்.: வலது
[8/18, 07:17] sridharan: வலது
[8/18, 07:17] G Venkataraman: வலது
[8/18, 07:17] joseph amirtharaj: வலம்
[8/18, 07:27] Dhayanandan: *வலம்*
[8/18, 07:40] akila sridharan: வலம்
[
[8/18, 07:40] prasath venugopal: வலம்
[8/18, 07:44] வானதி: *வலது*
[8/18, 07:46] nagarajan: *வலம்*
[
[8/18, 07:53] Dr. Ramakrishna Easwaran: வலது
[8/18, 07:58] மாலதி: வலது
[8/18, 08:15] ஆர். நாராயணன்.: வலம்
[8/18, 08:29] siddhan subramanian: வளம் / வலது
[8/18, 08:36] Bharathi: வலம்
[8/18, 10:06] Revathi Natraj: வலம்
[8/18, 10:23] N T Nathan: வலம்
[
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/18, 10:51] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏வலம்🙏
[
[8/18, 11:17] ஆர்.பத்மா: வலம்
[8/18, 11:44] Rohini Ramachandran: வலம்
[8/18, 11:57] sankara subramaiam: வலம்
[8/18, 19:07] கு.கனகசபாபதி, மும்பை: வலது
[
[8/18, 19:37] sathish: வலம்
[8/18, 19:49] V N Krishnan.: வலம்
[8/18, 19:50] chithanandam: வலம்
[
[8/18, 20:26] Viji - Kovai: வலம்
[
[8/19, 01:33] Venkat: வலது 🙏🏾
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பன்னிரண்டில் இரண்டாவதாக வந்த மாடு? (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வான்வெளி மண்டலத்தில், பூமி உள்பட எல்லா கிரகங்களும் சூரியனை சுற்றிவருகின்றன. ஆனால், பூமியிலிருந்து பார்க்கும்போது எல்லா கிரகங்களும் பூமியை சுற்றிவருவதுபோல் தோற்றம் அளிக்கிறது. நாமும், காலையில் சூரியன் கிழக்கில் உதயமாவார் என்றும், மாலையில் மேற்கே அஸ்தமனமாவார் என்றும் கூறுகிறோம். அதாவது, சூரியன் சுற்றுவதுபோல் கூறுகிறோம். இத்தகைய தோற்றத்துக்கு GEO CENTRIC POSITION என ஆங்கிலத்தில் குறிப்பிடுவர்.
பூமியை சூரியன் சுற்றும் பாதைக்கு இருபுறமும் 7½ பாகைகள் கொண்ட நீள்வட்டப் பாதைக்கு ZODIAC என்று பெயர். இந்த ZODIAC ஆனது 360 பாகைகள் கொண்டது. இது 12 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதிக்கும் ராசி என்று பெயர். 1. மேஷம், 2. *ரிஷபம்* , 3. மிதுனம், 4. கடகம், 5. சிம்மம், 6. கன்னி, 7. துலாம், 8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம், 12. மீனம் ஆகியவை அந்த ராசிகள்
***********************
*ரிஷபம்* ,
பெயர்ச்சொல்.
எருது
பன்னிரெண்டு ராசிகளுள் ஒன்று
***********************
_பன்னிரண்டில் இரண்டாவதாக வந்த மாடு? (4)_
_பன்னிரண்டில்_
_= 12 ராசிகளில்_
_இரண்டாவதாக வந்த_
= _2 வதாக வந்த ராசி_
= *ரிஷபம்*
= _மாடு_
***********************
இயற்கையாக ரஞ்சனையை, (இனிமையைக்) கொடுக்கும் தொனி ஸ்வரம் எனப்படும்.
சங்கீதத்திற்கு ஆதாரமான ஸ்வரங்கள் ஏழு ஆகும். இவை சப்த ஸ்வரங்கள் எனப்படும்.
தமிழிசையில்
ஸ்வரத்திற்கு கோவை எனப் பெயர் உண்டு.
ஏழு ஸ்வரங்களும் அவற்றின் பெயர்களும், தமிழ்ப் பெயர்களும் அவற்றிற்குரிய இயற்கையான விலங்கொலிகள் பின்வருமாறு அமையும்.
சட்ஜம் (ச) - குரல் - மயில்
*ரிஷபம்* (ரி) - துத்தம் - மாடு
காந்தாரம் (க) - கைக்கிளை - ஆடு
மத்யமம் (ம) - உழை - புறா
பஞ்சமம் (ப) - இளி - குயில்
தைவதம் (த) - விளரி - குதிரை
நிஷாதம் (நி) - தாரம் - யானை
*************************
*ரிஷபம்* : இதயத்திலிருந்து வெளிப்படுவதாலும், பசுக் கூட்டங்களில் *ரிஷபம்* பலமுடையதாக இருத்தல் போல், சுரக் கூட்டங்களில் இரண்டாமிடத்தில் கம்பீரமாக இருப்பதாலும், இரண்டாம் சுரம் ரிஷபம் எனப்பட்டது.
*************************
💐🙏🏼💐
****************************
[8/19, 07:02] திரைக்கதம்பம் Ramarao: ரிஷபம்
[8/19, 07:03] A Balasubramanian: ரிஷபம்
A.Balasubramanian
🙏
[8/19, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏ரிஷபம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/19, 07:05] மீ.கண்ணண்.: ரிஷபம்
[8/19, 07:08] மாலதி: ரிஷபம்
[8/19, 07:08] பாலூ மீ.: 12 ராசி விடை ரிஷபம்
[8/19, 07:09] Meenakshi: விடை:ரிஷபம்
[8/19, 07:28] G Venkataraman: இடபம்
[8/19, 07:32] akila sridharan: ரிஷபம்
[8/19, 07:32] stat senthil: ரிஷபம்
[8/19, 07:39] பானுமதி: ரிஷபம்
[8/19, 07:54] nagarajan: *ரிஷபம்*
[8/19, 08:21] கு.கனகசபாபதி, மும்பை: ரிஷபம்
[8/19, 09:41] ஆர். நாராயணன்.: ரிஷபம்
[
[8/19, 09:42] Dr. Ramakrishna Easwaran: *ரிஷபம்*
[8/19, 11:34] joseph amirtharaj: ரிஷபம்
[
[8/19, 13:41] ஆர்.பத்மா: ரிஷபம் அல்லது இடபம்
[8/19, 14:08] N T Nathan: ரிஷபம்
[8/19, 19:27] sankara subramaiam: ரிஷபம்
[8/19, 19:38] chithanandam: ரிஷபம்
[
[8/19, 20:29] Revathi Natraj: ரிஷபம்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 20-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 20-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*நோய் தீர்க்கும் ராகங்கள்! - கல்யாணி!*
_*கல்யாணி*_ ராகம் இருட்டிலிருக்கும் பயத்தை போக்கும் வல்லமை கொண்டது. ஒரு தாயின் அரவணைப்பிலே கிடைக்கும் சுகத்தினை பெறவும், மன தைரியத்தை அதிகரிக்க செய்யவும் இந்த ராகத்திற்கு குணமுண்டு. கல்யாணி என்றாலே மங்களம் என்று பொருள். எந்த ஒரு மங்களகரமான நிகழ்விற்கும் இந்த கல்யாணி தான் துணை நிற்பது. ஆகையால் கல்யாணி ராகத்தினை இசைத்திட்டால், திருமண சம்பந்தங்கள் கைகூடும் என்பது ஒரு ஐதீகம்! பயம் என்பது எத்தனை ரூபமெடுத்தாலும், அது ஏழ்மையின் பயமானாலும் சரி, காதலின் பயமானாலும் சரி, இல்லை பெரிய சக்திகளின் பயமானாலும் சரி, அல்லது ஆரோக்கிய வாழ்வற்ற பயமானாலும் சரி, ஏன் மரணபயமானாலும் சரி, இந்த ராகத்தில் அமைந்த இசையை கேட்டால் அத்தனை பயங்களும் நம்மை விட்டு அகன்றோடிவிடும் என்ற பெரிய நம்பிக்கையுண்டு!
by கார்த்திக் செயராம்
***********************
_மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4)_
_மத்யமம் இன்றி_
= _indicator to delete middle letter_
_மத்யமம் இன்றி கணினியால்_
= _கணி[னி]யால்_
= *கணியால்*
_அமைக்கப்பட்ட_
= _anagram indicator for கணியால்_
= *கல்யாணி*
= _சம்பூரண ராகம்!_
*************************
தியாகராஜர், தஞ்சை அரசனின் புகழ்பாட மறுத்து கடவுள் துதியாக 'நிதி சால சுகம்மா ரமணி சந்நிதி சேவ சுகம்மா' என்ற கீர்த்தனையை இந்த கல்யாணி ராகத்திலே பாடிய சரித்திரமுண்டு! இந்த ராகத்திலே எழும் பாவம் உணர்ச்சி பூர்வமாக பாடப்படும் அத்தனை பாடல்களும், கீர்த்தனைகளும் ஒரு அழகான சப்த வடிவத்தை கொடுக்கும்! *அதற்கும் மேலே இந்த ராகம் ஒரு பரிபூரண, இல்லை சம்பூரண ராகம்.* ஆக ஏழு ஸ்வரங்களும் கைகோர்த்து ஜதியாடும்! இந்த ராகம் ஆர்ப்பாட்டமாகவும் இசைந்து கொடுக்கும், அதே சமயத்தில் அமைதியாகவும் ஸ்வரம் பாடும்.
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
இந்த கல்யாணி ராகத்தினால் தேவி துதிபாடிய சியாமா சாஸ்திரிகளின் கீர்த்தனையான, 'ஹிமத்ரிஸ்தே பகிமம்' என்பது அனைத்து சக்தியையும் அன்னையிடமிருந்து பெற வழிகோணியதாம். அதே போல் இந்த ராகத்திலே, முத்து சாமி தீட்சதர் அவர்கள்
படைத்த சொர்க்க ராக கீர்த்தனையான 'கமலாம்பாள் நவவர்ணம்' என்ற கீர்த்தனையை கொண்டு, கிரகங்களின் இடமாற்றத்தால் உண்டாகும் துர்பாக்கியத்தை அகற்றி நல்வழிபிறக்க உதவ வழிசெய்யும் என்ற நம்பிக்கையுண்டு!
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
இப்படி பல குண நலன்களை கொண்ட இந்த ராகத்தால் அமைந்த சினிமா பாடல்கள் அநேகம். அதில் முக்கியமாக, காலத்தால் அழியாத பாடல்களை சொல்ல வேண்டுமென்றால் அம்பிகாபதி என்ற படத்தில் டிஎம்ஸ் பாடிய, *_'சிந்தனை செய் மனமே'_* என்ற பாடலும், கே வி மகாதேவன் இசை அமைத்த *_"மன்னவன் வந்தானடி"_* என்ற திருவருட்செல்வர் படத்திலே வந்த பாடலையும் குறிப்பிட வேண்டும்.
*************************
💐🙏🏼💐
*****************************
[8/20, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கல்யாணி
[
[8/20, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கல்யாணி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[8/20, 07:04] A Balasubramanian: கல்யாணி
A.Balasubramanian
[8/20, 07:04] sathish: கல்யாணி
[8/20, 07:06] Dhayanandan: *கல்யாணி*
[8/20, 07:07] chithanandam: கல்யாணி
[8/20, 07:08] Dr. Ramakrishna Easwaran: *கல்யாணி*
மத்யமம்= நடு எழுத்து
(கணி ~னி~ யால்)* --> கல்யாணி
கர்நாடக இசையில் 2
மத்யமம் உண்டு. கல்யாணியின் ஜீவனே அதன் பிரதி மத்யமம் தான். கல்யாணியில் சுத்த மத்யமம் கிடையாது. ஆகவே,
சுத்தமாக மத்யமம் இன்றி கணினியால் அமைக்கப்பட்ட சம்பூரண ராகம்! (4)
என்று இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
[8/20, 07:08] Meenakshi: விடை:கல்யாணி
[8/20, 07:26] G Venkataraman: கல்யாணி
[8/20, 07:28] sridharan: கல்யாணி
[
[8/20, 07:40] ஆர். நாராயணன்.: கல்யாணி
[
[8/20, 07:43] மீ.கண்ணண்.: கல்யாணி
[8/20, 07:54] stat senthil: கல்யாணி
[8/20, 07:54] A D வேதாந்தம்: விடை= கல்யாணி( வேதாந்தம்)
[8/20, 08:01] மாலதி: கல்யாணி
[8/20, 08:21] prasath venugopal: கல்யாணி
[8/20, 08:32] கு.கனகசபாபதி, மும்பை: கல்யாணி
[8/20, 09:01] joseph amirtharaj: கல்யாணி
[8/20, 10:22] Rohini Ramachandran: கல்யாணி?
[8/20, 10:27] Bharathi: கல்யாணி
[8/20, 10:31] nagarajan: *கல்யாணி*
[8/20, 11:11] siddhan subramanian: கல்யாணி (கணினியால் - னி = கணியால்)
[8/20, 11:42] ஆர்.பத்மா: கல்யாணி
[8/20, 11:59] sankara subramaiam: கல்யாணி
[8/20, 12:23] shanthi narayanan: கல்யாணி
[
[8/20, 12:33] N T Nathan: கல்யாணி
[8/20, 15:43] வானதி: *கல்யாணி*
[8/20, 20:18] Ramki Krishnan: கல்யாணி
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 21-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பாதி மஞ்சம் முன் குலுங்க வந்த இனிமை? (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*பலகாரங்களின் அரசன் "அதிரசம்"*
🍪🍪🍪🍪🍪🍪🍪
*அதிரசம்* அல்லது கன்னடத்தில் *கஜ்ஜயா* அல்லது தெலுங்கில் *அரிசெலு* அல்லது மராத்தியில் *அனர்சா* அல்லது ஒடியாவில் *அரிசா பிதா* என்பது தமிழ் , கன்னட , தெலுங்கு, மராத்தி, மற்றும் ஒடியா உணவு வகைகளில் ஒன்றாகும்.
************
தீபாவளி என்றாலே கண்டிப்பாக அதில் அதிரசம் இடம் பெற்றிருக்கும்! ஆனால், எத்தனை முயற்சித்தாலும்,
சரியான பதத்தில் அதிரசத்தை தயாரிப்பதுதான் பலருக்கும் மிகப்பெரிய சவால். கொஞ்சம் கடினமானதுதான். ஆனால், பழகிவிட்டால் எளிதாக கைவரக்கூடியதுதான் அதிரசம்.
************
_ஆண்டுதோறும் கும்பகோணம் அருகே உள்ள நல்லூரில் உள்ள *பஞ்சவர்னேசுவரர் கோயில்* திருவிழாவில் 6000 அதிரசம், 6000 வடைகளுடன் தெய்வத்திற்குக் காணிக்கையாகத் தயாரிக்கப்படுகிறது._
************
கரூர் மாவட்டம் *வெள்ளியணை அதிரசம்* புகழ் பெற்றதாகும்.
*************************
_பாதி மஞ்சம் முன் குலுங்க வந்த இனிமை? (5)_
_பாதி மஞ்சம்_
= _[மஞ்]சம்_
= *சம்*
_குலுங்க_
= *அதிர*
_முன்_ = _indicator to place *அதிர* before *சம்*_
= *அதிர+சம்*
= *அதிரசம்*
= _வந்த இனிமை?_
*************************
*அதிரச(ம்) கவிதை*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
பச்சரிசி ஊறவைத்து நீர் வடித்து
உரலில் இட்டு இடித்து எடுத்து
சுளவின் மேல் வெள்ளை துணி விரித்து
ஜல்லடையில் மாவை கொட்டி சலித்து
இடிபடாத அரிசியை மீண்டும் இடித்து
மீண்டும் சலித்து எடுத்து பாத்திரத்தில் இட்டு
ஒரு புறம் வைக்கிறாள் அம்மா
அடுப்பில் தண்ணீர் இட்டு அகல பாத்திரம் வைத்து
அச்சு வெல்லம் தட்டி உடைத்து தண்ணீரில் சேர்த்து
அடுப்பை பற்ற வைத்து பதமாக பாகு காய்ச்சி
ஏலம் சுக்கு பொடியுடன் எள்ளையும் மாவில் கலந்து
கொஞ்சம் கொஞ்சமாக மாவுடன் பாகு சேர்த்து கிளறி
தூக்கு சட்டியில் எடுத்து வைத்து மேலே நல்லெண்ணெய்
பரவலாக ஊற்றி விரலால் அங்கிங்கு குத்தி விட்டால்
எண்ணெய் அடி வரை சென்று மாவு பதம் காக்கும்
*_வாழை இலையில் ஒரு உருண்டை மாவு வைத்து_*
*_முழு நிலவு போல் வட்டமாக தட்டி_*
*_கொதிக்கும் எண்ணையில் விட்டு அதிரசம் செய்தாள் என் அருமை அன்னை_*
(ரம்யாகணேஷ்)
*************************
*யாருக்கும் தெரியாமல் அதிரசம் மாவை எடுத்து சாப்பிடுவது ஒரு தனி சுவை!* 😜😜😜
*************************
💐🙏🏼💐
*****************************
[8/21, 07:11] sathish: வசந்தம்
[8/21, 07:12] திரைக்கதம்பம் Ramarao: அதிரசம்
[8/21, 07:13] ஆர்.பத்மா: வசந்தம்
[8/21, 07:27] Venkat: அதிரசம் 🙏🏾
[8/21, 07:27] A Balasubramanian: வசந்தம்
A.Balasubramanian
[8/21, 07:27] மீ.கண்ணண்.: அதிரசம்
[8/21, 07:33] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வசந்தம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[8/21, 07:33] G Venkataraman: வசந்தம்
[8/21, 07:45] மாலதி: அதிரசம்
[8/21, 07:52] prasath venugopal: வசந்தம்
[8/21, 07:55] ஆர். நாராயணன்.: வசந்தம்
[8/21, 07:57] nagarajan: *அதிரசம்*
[8/21, 08:17] stat senthil: அதிரசம்
[8/21, 11:36] joseph amirtharaj: வசந்தம்
[8/21, 14:10] வானதி: *வசந்தம்*
[8/21, 20:26] Revathi Natraj: அதிரசம்
[8/21, 21:02] Bharathi: வசந்தம்
சம்+வந்த
[8/21, 23:35] V N Krishnan.: வசந்தம்=இனிமை
*****************************