உதிரிவெடி 4148 (ஆகஸ்டு 8, 2021)
வாஞ்சிநாதன்
*************************
அழகாக வெண்பாவடிவில் அதிசயிக்கும்படிப் பல புலவர்கள் இரு பொருள்களை ஒப்பிட்டு (பல முறை தொடர்பில்லாதவை) சிலேடைப் பாடல்களை எழுதியுள்ளார்கள். நானும் அது போல் முயன்றேன். முடிந்தது வெறும் குறள்தான். புதிரிலும் சேர்த்தியில்லை. கொஞ்சம் விடுகதை போல் என்று சொல்லிக்கொள்ளலாம். ஏதோ ஆடிக்கொருதடவை அமாவாசைக்கொருதடவை புதிரில் இப்படி வேறுவிதமாய் முயன்றால் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
வாஞ்சிநாதன்
*************************
விசிறிக் கிருப்பது வீசுமணப் பூவில்
பசிய நிறத்ததாம் பார் (3)
ஊஹூம். குறட்புதிரில் எனகு முழுத் திருப்தியில்லை. எனவே வழக்கமான வெடி இதோ:
திரையில் தோன்றுவது நடுவில் உண்ண விழுங்கப்பட்ட பொருள் (4)
Comments
காம்பே பதிலெனக் காண்!
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
பசிய நிறத்ததாய்ப் பார்ப்பாய் - பொசிந்துமிகப்
பால்தரும் ஆவுக்கும் பாக்குசேர் வெற்றிலைக்கும்
கால்பக்கம் கண்டிடுவாய் காம்பு.