Skip to main content

விடை 4147

இன்று காலை வெளியான வெடி:
இஸ்லாமியப் பெண்கள் அணிவது முதல்வர் கலைஞர் சென்ற அடையாளம் (4)
அதற்கான விடை: முத்திரை = முகத்திரை - க
முத்திரை = அடையாளம்
க = முதல்வர் கலைஞர்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 02-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அந்தக் கொடுமையான காரியத்தைச் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டியவன் இல்லை (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
A peek into today's riddle!
*************************
*உதிரிவெடி 4147*
***********************
_*அடையாளம்*_

"தோல்வியின் அடையாளம் தயக்கம். 
வெற்றியின் அடையாளம் துணிச்சல். 
துணிந்தவர் தோற்றதில்லை. 
தயங்கியவர் வென்றதில்லை."
( அக்ரம் ஷா)
***********************
*_முகத்திரை :_*

_முகத்திரையால் உன் முகத்தை மறைத்தாலும்_
_உன் கண்களை நான் காதலிப்பேன்._

(RamKumar)
***********************
_இஸ்லாமியப் பெண்கள் அணிவது முதல்வர் கலைஞர் சென்ற அடையாளம் (4)_

_இஸ்லாமியப் பெண்கள் அணிவது_
= *முகத்திரை*

_முதல்வர் கலைஞர்_
= _first letter in கலைஞர்_
= *க*

_சென்ற_ = _indicator to delete க from முகத்திரை_
= *முகத்திரை-க*
= *முத்திரை*

= _அடையாளம்_
************************
*முத்திரை என்பது எளிய அழகிய தமிழ்ச் சொல் ஆகும்.*

*முத்துதல்* என்ற தமிழ்ச்சொல்லானது பதித்தல் என்ற வினையைக் குறிப்பதாகும். உதடுகளைக் கன்னத்தில் பதிப்பதனையே முத்தம் என்று அழைக்கிறோம்.

முத்துதல் என்பது முத்தமிடுதல் என்ற பொருளில் கீழ்க்காணும் சங்கப் பாடல்களில் பயின்று வந்துள்ளதைக் காணலாம்.

_புதல்வர் பூ கண் முத்தி மனையோட்கு - புறம் 41/14_ 

_முயங்கினள் முத்தினள் நோக்கி நினைந்தே - கலி 82/17_ 

*முத்தப்பட்டதே அதாவது பதிக்கப்பட்டதே முத்திரை என்று அழைக்கப்பட்டது.*

முத்து (=பதி) >>> முத்திரை (=பதிக்கப்பட்டது)
********************
' *முத்திரை'* ஒரு வரலாறே உடையது! 'முத்திரை' என்பது, முன் காலங்களில் பொருட்களைக் கையாடாமல் பாதுகாப்பாக வைக்கப் பயன்பட்டு வந்தது.

முத்திரை= மூன்று திரை (கள்) கீழ்வருமாறு:

1. பொருள் ஒரு துணியால் நன்கு சுற்றப்படும்.

2. சுற்றப்பட்ட துணி நுனிகள் சேரும் இடத்தில், காய்ச்சின அரக்கு ஊற்றப்பட்டு, துணி அவிழா வண்ணம் செய்யப்படும்.

3. அரக்கு உலர்வதற்குள், அதன் மேல் ஒரு *அடையாளம்* பொறிக்கப்படும்.

இவ்வாறு முத்திரைகளால் பாதுகாக்கப்பட்ட உறை ஒரு குறிப்பிட்ட பாதுகாவலரிடம் ஒப்படைக்கப் படும்.

பின்னர் முத்திரைகளில் எது கலைந்து இருந்தாலும், பொருள் தவறாகப் பயன்பட்டுள்ளது என்பது தெரிந்துவிடும்!
(quora.com)
*************************
💐🙏🏼💐

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_*இன்றைய உதிரிவெடி!*( 02-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_எட்டாத உயரத்தில்  இருக்கும் விண்மீனை_ 
_பார்த்து ஏங்கும் நான் *பாவியா* -இல்லை_
_எட்டாத உயரத்தில் அதனை வைத்த இறைவனா...!!! ._

(புதுபேட்டை கவிஞன்)
***********************
*பொறாமை என்னும் பாவியை வளர விட்டால், ஒருவனது செல்வத்தையும்* *கெடுத்து, அவனைத் தீய வழியிலும் செல்லும்படி செய்து, படுபாவியாக்கி விடும்...* *அந்த கொடும்பாவியை மனதில் தோன்றும் முன்னே* *எரித்து விட வேண்டும்...*

(திண்டுக்கல் தனபாலன்)
***********************
_அழுக்காறு எனஒரு *பாவி* திருச்செற்றுத்__

_தீயுழி உய்த்து விடும்_

(அதிகாரம்:அழுக்காறாமை 
குறள் எண்:168) 

பொழிப்பு
(மு வரதராசன்):: 
_பொறாமை என்று கூறப்படும் ஒப்பற்ற *பாவி* , _ஒருவனுடைய_ _செல்வத்தையும்__ _கெடுத்துத் தீய வழியில் அவனைச்_ _செலுத்திவிடும்._ 
***********************
__அந்தக்கொடுமையான காரியத்தைச் செய்தவன் தண்டிக்கப்பட வேண்டியவன் இல்லை(4)_
_
_கொடுமையான காரியத்தைச் செய்தவன்_
= *பாவி*

_அந்த பாவி_
= *அப்பாவி*

= _தண்டிக்கப்பட வேண்டியவன் இல்லை_
*************************
*நினைவில் நிற்கும் பாடல் வரிகள் !*
*************************
பாலக்காட்டு பக்கத்திலே ஒரு *அப்பாவி* ராஜா - அவர்
பழக்கத்திலே குழந்தையைப் போலொரு அம்மாஞ்சி ராஜா 
யாரம்மா
அது யாரம்மா

விட்நாம்வீடு(1970)
************************
கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை
இன்னார்க்கு இன்னாரென்று எழுதி வைத்தானே தேவன் அன்று

ஒரு கிளி கையோடு ஒருகிளி கைசேர்த்து உறவுக்குள் நுழையுதம்மா
உல்லாச வாழ்க்கையை உறவுக்குக் கொடுத்திட்ட ஒரு கிளி ஒதுங்குதம்மா
*அப்பாவி* ஆண் கிளி தப்பாக நினைத்தது அப்போது புரிந்ததம்மா- அது
எப்போதும் கிளியல்ல கிணற்றுத் தவளைதான் இப்போது தெரிந்ததம்மா

கடவுள் அமைத்து வைத்த மேடை இணைக்கும் கல்யாண மாலை

( அவள் ஒரு தொடர்கதை :1970)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[
[8/2, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அப்பாவி
[
[8/2, 07:01] A Balasubramanian: அப்பாவி
A.Balasubramanian
[
[8/2, 07:02] Dhayanandan: *அப்பாவி*
[
[8/2, 07:03] joseph amirtharaj: அப்பாவி
[
[8/2, 07:04] Bhanu Sridhar: அப்பாவி

[8/2, 07:09] Meenakshi: விடை:அப்பாவி
[
[8/2, 07:29] Dr. Ramakrishna Easwaran: *அப்பாவி*

[
[8/2, 07:31] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அப்பாவி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[8/2, 07:31] prasath venugopal: அப்பாவி

[8/2, 07:44] sridharan: அப்பாவி

[8/2, 07:51] nagarajan: *அப்பாவி* nga sir?

[8/2, 08:02] akila sridharan: அப்பாவி
[
[8/2, 08:04] பாலூ மீ.: அப்பாவி.

[8/2, 08:08] மாலதி: அப்பாவி

[8/2, 08:19] G Venkataraman: அப்பாவி
[
[8/2, 08:20] stat senthil: அப்பாவி

[8/2, 09:01] ஆர். நாராயணன்.: அப்பாவி

[8/2, 09:57] sankara subramaiam: அப்பாவி
[
[8/2, 11:04] Viji - Kovai: நீதிபதி

[8/2, 11:04] கு.கனகசபாபதி, மும்பை: அப்பாவி

[8/2, 19:23] Ramki Krishnan: - அப்பாவி

[8/2, 19:57] siddhan subramanian: அப்பாவி

[8/2, 20:52] shanthi narayanan: அப்பாவி

[8/2, 21:30] Revathi Natraj: அப்பாவி

[8/2, 21:40] வானதி: *அப்பாவி*

*****************************..,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 03-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அறிவுகெட்ட நட்சத்திரங்களே கூடிய இரவோ? (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*விவேகசிந்தாமணி மதியிலா மறையோன்*

_மதியிலா மறையோன் மன்னர் மடந்தையை வேட்கை யாமே_

_ருதுவது காலந் தன்னில் தோஷமென் றுரைத்தே யாற்றில்_

_புதுமையா யெடுத்த போது பெட்டியில் புலிவா யாலே_

_அதிருடன் தடியுண் டன்றே யருநர கடைந்தான் மாதோ. (115)_


புத்தி கெட்ட பிராமணன் ஒருவன் தான் பாடம் சொல்லித் தந்த அரசன் மகளை அடைய ஆசைப்பட்டான். அவள் பூப்படைந்த நேரம் தோசம் உடையது, எனவே பெட்டியில் வைத்துப் பூட்டி ஆற்றில் விட்டுவிடுவோம் என்று அரசனிடம் சொல்லி அரசன் ஒப்புதலுடன் தன் எண்ணப்படியே செய்து முடித்தான். ஆற்றில் மிதந்து வந்த பெட்டியை வேடன் ஒருவன் எடுத்து
அவளை மணந்து கொண்டான். அதே பெட்டியில் தான் பிடித்து வந்த புலி ஒன்றை அடைத்து நீரில் விட்டுவிட்டான். அரசன் மகளை அடையும் ஆசையுடன் பெட்டியை எடுத்துத் திறந்த பிராமணன் புலி வாயில் சிக்கி உயிர் இழந்தான்.

அடாது செய்தவன் பாடாது படுவான்
*************************_அறிவுகெட்ட நட்சத்திரங்களே கூடிய இரவோ? (4)_

_அறிவு_ = *மதி*
_அறிவுகெட்ட_
= *மதியிலா*

_நட்சத்திரங்களே கூடிய இரவோ?_
= _மதி இல்லாத (இரவு)_
= *மதியிலா*
*************************
*திருமாலை-9ஆம் பாசுரம்.*

_“மற்றுமோர் தெய்வ முண்டோ:_
_மதியிலா மானி டங்காள்,_
_உற்ற போதன்றி ஒருவனென் றுணர மாட்டீர்,_
_அற்றமே லொன்ற றீயீர் அவனெல்லால் தெய்வ மில்லை,_
_கற்றினம் மேய்த்த வெந்தை_
_கழலிணை பணி மினீரே.”_

*சிறு விளக்கம்.*

தெய்வம் என்றால் அது ஒன்று தானே.
ஒரு குழந்தைக்கு ஒரு தாய்-தகப்பன் தானே உண்டு. பிறரை தாய் போல் நினைக்கலாம் அது வேறு…. ஆனால் ஒருத்தி தானே ஈன்று அன்பைப் பொழிந்து எப்போதும் அலுப்பின்றி பேணி வளர்க்கிறாள்….

பகவானும் அப்படித்தானே….
அன்னை எப்படி உலகு உறவு சமூகமென அறிய எல்லோருடனும் பழக விடுவாளோ அப்படியே தானே தெய்வமும் அனுபவம் பெறுவதற்காக சுதந்திரமாக நம் விருப்பம் போல் எல்லாவற்றையும் பார்க்க…. அனுபவிக்க….. பேசாமல் வேடிக்கை பார்க்கிறது.
ஆனால் பிள்ளைகளுக்கு ஏதாவது ஒரு கஷ்டம் என்றால் அன்னையல்லவா முதலில் அன்போடு அரவணைத்து தைரியமும் நம்பிக்கையும் தருகிறாள்….. நம்பெருமாளும் இந்த குழந்தை எல்லா அனுபவமும் பெறட்டும் என்று நம் போக்கில் விட்டு……… பகவானை அவன் அருள் தேவைப்படும் காலம் அரவணைக்க காத்திருக்கிறார்……

மூட முட்டாள் மாந்தர்களுக்கு *புத்தி குறைவினால்* இது புரிவதில்லை….

இதைத்தான் ஆழ்வார்
முதல்வரியில் கூறுகிறார்
_” மற்றுமோர் தெய்வ முண்டோ *மதியிலா* மானிடங்காள்” …_

*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/3, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மதியிலா

[8/3, 07:12] மீ.கண்ணண்.: அமாவாசை

[8/3, 07:12] மீ.கண்ணண்.: மதிஇலா

[8/3, 07:17] Bhanu Sridhar: மதியிலா
[
[8/3, 07:21] பாலூ மீ.: விடை மதியிலா.
[
[8/3, 07:26] sridharan: அமாவாசை.

[8/3, 07:26] Rohini Ramachandran: மதியிலா

[8/3, 07:28] Meenakshi: விடை: மதியிலா

[8/3, 07:28] stat senthil: மதியிலா

[8/3, 07:35] Dhayanandan: *மதியிலா*
[
[8/3, 07:42] A Balasubramanian: மதியிலா
A.Balasubramanian
[
[8/3, 07:43] ஆர்.பத்மா: அமாவாசை
[
[8/3, 07:53] nagarajan: *மதியிலா*

[8/3, 07:59] மாலதி: மதியிலா

[8/3, 08:10] siddhan subramanian: மதியிலா
[
[8/3, 08:33] ஆர். நாராயணன்.: மதியிலா

[8/3, 09:43] joseph amirtharaj: மதியிலா
[
[8/3, 12:02] sankara subramaiam: அமாவாசை

[8/3, 12:21] வானதி: *அமாவாசை*

[8/3, 14:07] வானதி: *மதியிலா*

[8/3, 19:51] Revathi Natraj: மதியிலா

[8/3, 21:47] N T Nathan: மதியிலி




*****************************..,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 04-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

யார் போலி கனி என்ற குழப்பத்தில் ஒரு மாநிலம்(வெளிநாட்டில்) (6)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 04-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*கலிபோர்னியா* ஐக்கிய அமெரிக்கா நாட்டின் மேற்குப்பகுதியின் தென்பாதியைக் கொண்டு பசிபிக் மாக்கடலுக்கு அடுத்து இருக்கும் ஒரு பெரிய மாநிலமாகும். 
கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ், சான் பிரான்சிஸ்கோ போன்றவை இம்மாநிலத்தின் பெரிய நகரங்கள் ஆகும். *ஹாலிவுட்* எனப்படும் இடம்  லாஸ் ஏஞ்சலஸ் (Los Angeles) நகரின் ஒரு பகுதியாகும். இவ்விடத்தில் அமெரிக்காவின் பல முன்னணித் திரைப்பட நடிகர்கள் வாழ்வதாலும் பல திரைக்கூடங்கள் (studio) அமைந்துள்ளதாலும் அமெரிக்கத் திரைப்படத்துறை பொதுவாக ஹாலிவுட்  என்றழைக்கப்படுகிறது.
***********************
_யார் போலி கனி என்ற குழப்பத்தில் ஒரு மாநிலம்(வெளிநாட்டில்) (6)_

_குழப்பத்தில்_
= _anagram indicator for, யார் போலி கனி_
= *கலிபோர்னியா*

_ஒரு மாநிலம்(வெளிநாட்டில்)_
= *கலிபோர்னியா*
*************
*தானாய் நகரும் கற்கள்*

கற்கள் தானாய் நகர்கின்றன என்றால் ஆச்சரியமாக இருக்கிறதுதானே! இயற்கையின் அதிசயமான இந்த நிகழ்வு, அமெரிக்காவில் உள்ள *கலிபோர்னியா* மாகாணத்தின் தென் பகுதியில் நடக்கிறது. *மரணப் பள்ளத்தாக்கு (Death Valley)* பகுதியில், வறண்ட ஏரியின் நிலப்பரப்பான இந்தப் பகுதி 'ரேஸ்டிராக் பிளாயா' (Racetrack Playa) எனப்படுகிறது. விலங்குகளும், மனித நடமாட்டமும் இல்லாத இந்தப் பகுதியில்தான், கற்கள் தானாகவே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு நகர்கின்றன. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது, புதிரான விஷயமாக இருந்தது. 13 கிலோ முதல் 300 கிலோ எடை வரை உள்ள கற்கள் கூட நகர்கின்றன. 
ஜேம்ஸ் நோரிஸ் (James Norris) என்பவர், இந்த இடத்தில் தானியங்கிக் கேமராவைப் பொருத்தி ஆய்வு செய்தார். தனது ஆய்வின்போது, சுமார் 60 பாறைகள் தானாக நகர்வதைக் கண்டார். கற்பாறைகள் நகரும்போது, லேசான சத்தமும், அவை நகர்ந்த இடத்தில் தடயமும் தெரிந்தது. பாறைகளை நகர்த்தியது, நீரில் மிதக்கும் சிறிய பனிக்கட்டிகள்தான் என்று கண்டறிந்தார். 

குளிர்காலத்தில் மழை பெய்யும்போது, களிமண் பூமி என்பதால் 3 செ.மீ. அளவு மட்டுமே தண்ணீர் தேங்கும். அதிகக் குளிரில் தண்ணீர் பனிக்கட்டியாக மாறி, தேங்கிய நீரில் மிதக்கும். காற்று வீசும்போது பனிக்கட்டிகள் கற்பாறைகளின் மீது மோதி, அடிப்பகுதியில் உள்ள களிமண்ணை இளக்கிப் பாறைகளை நகரச் செய்கின்றன.

இதனால், கற்பாறைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்கின்றன. தண்ணீர் ஆவியான பின்னர் பாறைகள் நகர்ந்ததன் தடயம் தெரியும். நகரும் கற்கள் (Sailing stones) பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 
(தினமலர்)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/4, 07:03] திரைக்கதம்பம் Ramarao: கலிபோர்னியா

[8/4, 07:03] Dr. Ramakrishna Easwaran: கலிபோர்னியா

[8/4, 07:04] A Balasubramanian: கலிபோர்னியா
A.Balasubramanian

[8/4, 07:05] மீ.கண்ணண்.: கலிபோர்னியா

[8/4, 07:06] Rohini Ramachandran: கலிபோர்னியா

[8/4, 07:06] Bhanu Sridhar: கலிபோர்னியா

[8/4, 07:07] பாலூ மீ.: கலிபோர்னியா

[8/4, 07:10] Meenakshi: விடை:கலிபோர்னியா
[
[8/4, 07:10] Venkat: கலிபோர்னியா 🙏🏾
[
[8/4, 07:11] G Venkataraman: கலிபோர்னியா
[
[8/4, 07:22] stat senthil: கலிபோர்னியா

[8/4, 07:24] ஆர்.பத்மா: கலிபோர்னியா
[
[8/4, 07:29] ஆர். நாராயணன்.: கலிபோர்னியா

[8/4, 07:30] Viji - Kovai: கலிபோர்னியா
[
[8/4, 07:31] sridharan: கலிபோர்னியா

[8/4, 07:39] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கலிபோர்னியா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[8/4, 07:40] prasath venugopal: கலிபோர்னியா
[
[8/4, 07:42] Dhayanandan: *கலிபோர்னியா*

[8/4, 07:45] nagarajan: *கலிபோர்னியா*

[8/4, 08:06] siddhan subramanian: கலிபோர்னியர்

[8/4, 08:19] joseph amirtharaj: கலிபோர்னியா
[
[8/4, 08:42] கு.கனகசபாபதி, மும்பை: கலிபோர்னியா
[
[8/4, 10:49] V N Krishnan.: கலிபோர்னியா California C. A.

[8/4, 12:30] shanthi narayanan: கலிபோர்னியா

[8/4, 14:03] வானதி: *கலிபோர்னியா*

[8/4, 17:43] Usha Chennai: கலிபோர்னியா
[
[8/4, 19:25] chithanandam: கலிபோர்னியா

[8/4, 19:31] Ramki Krishnan: கலிபோர்னியா

[8/4, 19:32] sankara subramaiam: கலிபோர்னியா

[8/4, 19:39] sathish: கலிபோர்னியா

[8/4, 19:43] akila sridharan: கலிபோர்னியா

[8/4, 20:59] Revathi Natraj: கலிபோர்னியா
[
[8/4, 21:16] Bharathi: *கலிபோர்னியா*

*****************************..,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 05-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஒன்றாகப் பிணைப்பதில் பாதி போய் பெரும்பயம் (2)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 05-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*சங்கிலி* என்பது, பலவளையங்களை *ஒன்றுடன் ஒன்று* தொடர்ச்சியாகக் கொழுவி *இணைத்து* உருவாக்கப்படுவது ஆகும். சங்கிலிகள் பொதுவாக உலோக வளையங்களினால் ஆக்கப்படுகின்றன. சங்கிலிகள் கயிறுகளைப்போல் எல்லாப் பக்கங்களிலும் நெகிழ்ந்து கொடுக்கக்கூடியனவாதலால், கயிறுகள் பயன்படக்கூடிய பல இடங்களில் சங்கிலிகள் பயன்படுகின்றன.
***********************
_ஒன்றாகப் பிணைப்பதில் பாதி போய் பெரும்பயம் (2)_

_ஒன்றாகப் பிணைப்பதில்_
= *சங்கிலியில்*

_பாதி போய்_
= *[சங்]கிலி*
= *கிலி*
= _பெரும்பயம்_
***********************
*சங்கிலி புங்கிலி கதவ தொற*

சங்கிலி விளையாட்டு என்பது சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும்

சிறுவர் சிறுமியர் சேர்ந்து கைகளைக் கோத்துக்கொண்டு சங்கிலி வட்டம் அமைப்பர். வேறு இருவரும் உள்ளனர். இவர்களில் ஒருவர் வேங்கைப்புலி. மற்றொருவர் ஆடு. இலங்கையில் இதனைப் பசு என வைத்துக்கொண்டு விளையாடுவர். ஆடாக விளையாடுபவர் சங்கிலி வட்டத்துக்குள்ளேயும், வேங்கைப்புலியாக விளையாடுபவர் வெளியேயும் இருப்பார்கள். வேங்கைப்புலி ஆட்டைப் பிடிக்க வேண்டும். பிடித்துவிட்டால் அடுத்த ஆட்டம். 

இலங்கை விளையாட்டில் பாடும் பாடல்

_சங்கிலி புங்கிலி கதவைத் தொற_
(வேங்கைப்புலி கேட்கும்)

_நான் மாட்டேன்_ _வேங்கைப்புலி_ (சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)

_பசு நிற்குதோ?_ (வேங்கைப்புலி கேட்கும்)

_இல்லை_ (சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)

_பால்மணக்குதே...(_ வேங்கைப்புலி கேட்கும்)

_பக்கத்து வீட்ட...(_ சங்கிலித் தொடரில் உள்ளவர் சேர்ந்திசை)

_புல்லு போட்டு பாக்கட்டுமோ?_ (வேங்கைப்புலி கேட்கும்)

பாட்டு நிறைவுபெற புலி சங்கிலியை உடைத்து பசுவைப்பிடிக்க முயற்சி செய்யும்.😂
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[
[8/5, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கிலி

[8/5, 07:02] Rohini Ramachandran: பீதி

[8/5, 07:02] A Balasubramanian: கிலி
A.Balasubramanian

[8/5, 07:03] மீ.கண்ணண்.: கிலி

[8/5, 07:10] ஆர். நாராயணன்.: கிலி

[8/5, 07:12] Meenakshi: விடை:கிலி(சங்கிலி---சங்)

[8/5, 07:13] பாலூ மீ.: விடை கிலி

[8/5, 07:15] chithanandam: கிலி
[
[8/5, 07:41] joseph amirtharaj: கிலி

[8/5, 07:46] stat senthil: கிலி

[8/5, 07:47] Venkat: கிலி🙏🏾
[
[8/5, 07:47] nagarajan: *கிலி*

[8/5, 07:50] sathish: கிலி

[8/5, 08:05] Dhayanandan: *பீதி*

[8/5, 08:30] A D வேதாந்தம்: விடை= கிலி(வேதாந்தம்)
[
[8/5, 09:36] prasath venugopal: கிலி

[8/5, 12:06] shanthi narayanan: கிலி

[8/5, 15:17] N T Nathan: கிலி

[8/5, 16:37] கு.கனகசபாபதி, மும்பை: கிலி
[
[8/5, 16:39] Viji - Kovai: கிலி
[
[8/5, 19:18] akila sridharan: கிலி

[8/5, 20:00] Revathi Natraj: கிலி

[8/5, 20:37] G Venkataraman: பீதி

[8/5, 20:56] sankara subramaiam: கிலி
[
[8/5, 21:14] siddhan subramanian: கிலி

[8/5, 21:29] மாலதி: கிலி



*****************************..,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 06-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பாதிக் காலணிக்குப் பழங்காலத்தில் சண்டை (2)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 06-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
 - ValaiTamil
தமிழ் அகராதி
*செரு* .
Meaning:
*போர் ;*
*ஊடல்*
*************************
*திருமுருகாற்றுப்படை 1* *திருப்பரங்குன்றம்*
*************************
*பாடல்*
**********
_*செருப்* புகன்றுஎடுத்த சேண்உயர் நெடுங்கொடி - - - - - - 67_

_வரிப்புனை பந்தொடு_ _பாவை தூங்க_

_பொருநர்த் தேய்த்த போர் அருவாயில்_

_திருவீற்றிருந்த தீதுதீர் நியமத்து - - - - - - 70_

_மாடம் மலிமறுகின் கூடல் குடவயின்_

_இருஞ்சேற்று அகல்வயல்விரிந்து வாய்அவிழ்ந்த_

_முள்தாள் தாமரைத் துஞ்சி வைகறைக்_

_கள்கமழ் நெய்தல் ஊதி எல்படக்_

_கண்போல் மலர்ந்த காமரு சுனைமலர் - - - - - - 75_

_அஞ்சிறை வண்டின் அரிக்கணம் ஒலிக்கும்_

_குன்று அமர்ந்து உறைதலும் உரியன், அதான்று ... " - - - - - - 77_
***********************
_பாதிக் காலணிக்குப் பழங்காலத்தில் சண்டை (2)_

_காலணி_ = *செருப்பு*

_பாதிக் காலணி_
= _செரு[ப்பு]_
= *செரு*

= _பழங்காலத்தில் சண்டை_
*************************
*தெளிவுரை:*

"மதுரை மாநகரின் நுழை வாயிலில், *போரை* விரும்பி மிக உயரமான
நெடிய கொடிகளின் அருகில் வரிந்து கட்டப்பட்ட பந்தும் பாவையும்
அவற்றை அறுத்துப் போரிட முன்வருவோர் யாரும் இல்லாமையால்
தொங்கிய வண்ணம் உள்ளன; அம் மாநகரின் கடை வீதிகளில்
திருமகளே வீற்றிருப்பது போல செல்வம் கொழிக்கின்றது; மாளிகைகள்
அமைந்திருக்கும் வீதிகளும் அங்கு உள்ளன. அந் நகரின் மேற்குத்
திசையில் அமைந்திருக்கும் அகன்ற நெல் வயல்களில் முட்கள்
பொருந்திய தண்டுகளை உடைய தாமரை மலர்கள் மீது வண்டுகள்
இரவில் உறங்கிய பின்னர் வைகறையில் தேன் மணம் கமழும் நெய்தல்
மலர் மீது மொய்த்து ஊதி, கதிரவன் தோன்றிய பின்னர் மலையின்
சுனைகளில் கண்களைப் போல் பூத்துள்ள விருப்பம் தரும் மலர்களின்
அருகே சென்று ரீங்காரமிடும் அழகிய இடமாகிய திருப்பரங்குன்றத்தின்
மீது திருமுருகப்பெருமான் மனம் விரும்பி அமர்ந்துள்ளார்,
அதுமட்டுமன்று ..."

(அரும்பத அகராதி:
*செரு புகன்று*
 = போரினை விரும்பி;)
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/6, 07:00] திரைக்கதம்பம் Ramarao: செரு

[8/6, 07:00] Dr. Ramakrishna Easwaran: *_செரு_*

[8/6, 07:01] A Balasubramanian: செரு
A.Balasubramanian

[8/6, 07:01] Usha Chennai: செரு

[8/6, 07:01] மீ.கண்ணண்.: செரு
[
[8/6, 07:02] Rohini Ramachandran: காணி

[8/6, 07:04] V N Krishnan.: செரு. சண்டை

[8/6, 07:09] Meenakshi: விடை:செரு

[8/6, 07:12] G Venkataraman: செரு

[8/6, 07:14] chithanandam: செரு

[8/6, 07:21] akila sridharan: செரு

[8/6, 07:26] stat senthil: செரு

[8/6, 07:46] prasath venugopal: செரு

[8/6, 07:59] Ramki Krishnan: செரு

[8/6, 08:00] nagarajan: *செரு*

[8/6, 08:03] Venkat: செரு🙏🏾

[8/6, 08:10] மாலதி: செரு

[8/6, 08:38] Dhayanandan: *செரு*
[
[8/6, 08:38] ஆர். நாராயணன்.: செரு

[8/6, 08:46] siddhan subramanian: செரு (ப்பு )
[
[8/6, 09:46] Bhanu Sridhar: செரு
[
[8/6, 09:48] joseph amirtharaj: செரு

[8/6, 11:59] shanthi narayanan: செரு
[
[8/6, 12:15] sankara subramaiam: செரு

[8/6, 15:30] வானதி: *செரு*

[8/6, 18:37] Viji - Kovai: செரு
[
[8/6, 19:23] N T Nathan: செரு

[8/6, 19:35] sathish: செரு
ஒரு வினாடி காணிச்சண்டையோ என யோசித்தேன்!

[8/6, 21:33] Bharathi: *செரு*

[8/6, 23:01] Revathi Natraj: செரு

*****************************..,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 07-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
முருகா முதலில் கற்ற பாடம் குழப்புகிறதே (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-08-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*காங்கேயன், கடம்பன் என்று முருகப்பெருமானை அழைப்பது ஏன்..?* _முருகன் பெயர்களுக்கான விளக்கம் இதோ..._

_முருகனுக்கு கந்தன், குமரன், வேலன், சரவணபவன், ஆறுமுகம், விசாகன், குருநாதன் என்று எத்தனையோ பெயர்கள் இருக்கிறது._ முருகனுக்கு மட்டும் ஏன் இத்தனை பெயர்கள் வந்தது என்றும், ஒவ்வொரு பெயருக்கும் என்ன காரணங்கள் என்றும் இப்போது பார்க்கலாம்.

*முருகன்* : முருகு என்றால் அழகு என்பார்கள். இந்த சொல்லுக்கு இளமை, அழகு, மணம், கடவுள் தன்மை, தேன் என்று பல பொருள்களும் இருக்கிறது. ஆதலால் முருகன் மாறாத இளமையும், அழியாத அழகும், குறையாத நறுமணமும் நிறைந்த தெய்வத்தன்மையும், இனிமையும் உடையவன் என்று பொருள் கொள்ளப்படுகிறது.

*சரவணபவன் :* சரவணபவ என்கிற ஆறு அட்சரத்தையுடையவன். சரவணபவன் என்றால் நாணல் சூழ்ந்த பொய்கையில் தோன்றியவன் என்றும் பொருள்படும்.

*ஆறுமுகம்* : சிவபெருமானுக்குள் உள்ள ஐந்து முகங்களுடன், அதாவது ஒரு முக லிங்கத்தில் இருந்து ஐந்து முக லிங்கங்கள் வரை உடையவை ஆகும். ஒவ்வொரு முகமும் ஒவ்வொரு திசையைப் பார்த்துக் கொண்டு இருக்கும். ஆறாவது முகம் அதோ முகம் என்று சொல்லப்படும். அது பாதாளத்தைப் பார்த்துக் கொண்டு இருக்கும். திரு, புகழ், ஞானம், வைராக்கியம், வீரியம், ஐஸ்வர்யம் என்பவைதான் ஆறுமுகங்கள் என்றும் கூறுவார்கள்.
***********************
_முருகா முதலில் கற்ற பாடம் குழப்புகிறதே (4)_

_முதலில் கற்ற_
= _first letter in கற்ற_
= *க*

_குழப்புகிறதே_
= _anagram indicator for க+பாடம்_
= *கடம்பா*

_முருகா_
= *கடம்பா*
*************************
*கந்தன்* : கந்து என்றால் நடுவில் இருப்பது. சிவனுக்கும், உமையாளுக்கும் நடுவில் இருப்பதால் கந்தன் என்கிற பெயர் ஏற்பட்டது.

*குகன்* : குறுஞ்சி நிலத்தின் தெய்வமாம் முருகப் பெருமான் மலைக் குகைகளில் கோவில் கொண்டதால் குகன் என்றும் அழைக்கப்படுகிறார்.

*வேலன்* : வேலன் என்பது வெற்றியைத் தருகிற வேலைக் கையில் ஏந்தியதால் வந்த பெயர். முருகனுக்கு அடையாளமும் இந்த வேல்தான்.

*குமரன்* : இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரி ஆனவன், மிகவும் உயர்ந்தவன்.

*குருபரன்* : கு -அஞ்ஞான இருள், ரு - நீக்குபவன், ஆன்மாக்களின் அறியாமை என்ற அஞ்ஞான இருளை அகற்றுபவன். சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

*காங்கேயன்* : கங்கையில் தோன்றியதால் கங்கையின் மைந்தன் காங்கேயன் என்று முருகப் பெருமான் அழைக்கப்படுகிறான்.

*கடம்பன்* : *_கடம்ப மலர்களை அணிந்தவன் ஆதலால் கடம்பன் என்று அழைக்கப்படுகிறான்._*

*சோமஸ்கந்தன்:* சிவன் உமை முருகனின் வடிவம் சோமாஸ்கந்தன். உலக நாயகர்களாம் அம்மைக்கும், அப்பனுக்கும் இடையில் முருகன் அமர்ந்த திருக்கோலம். சோமாஸ்கந்தன் ஆனந்தத்தின் வடிவம்.

*மயில்வாகனன்:* ஆணவத்தின் வடிவமான மயிலினை அடக்கி வாகனமாகக் கொண்டதால் மயில்வாகனன் என்றழைக்கப்படுகிறார். முருகப் பெருமான் ஆணவத்தின் வடிவமான மயிலையும், கன்மத்தின் வடிவமான யானையையும், மாயையின் வடிவமாக ஆட்டினையும் அடக்கி வாகனமாக் கொண்டவர்.

*சுப்ரமணியம்* :
சு என்றால் ஆனந்தம். இன்பமும்... ஒளியும்... வடிவாக உடையவன் என்பது இதன் அர்த்தம். புருவ மத்திய (ஆக்ஞை) ஸ்தானத்தில் ஆறு பட்டையாக உருட்சி மணியாக, பிரகாசம் பொருந்திய ஜோதிமணியாக விளங்குவதால் சுப்ரமணியன் என்று அழைக்கப்பட்டார்.

கார்த்திகைப் பெண்கள் வளர்த்ததால் *கார்த்திகேயன்* என்றும், அப்பெண்களுக்கு வாகுலை என்ற மற்றொரு பெயர் உள்ளதால் *வாகுலேயன்* என்றும், ஆண்டிக் கோலத்தில் ஞானப்பழமாக விளங்குவதால் *பழநி* என்றும், தனது அடியவர்களை உற்ற வேளையில் வந்து காக்கும் சிறப்பால் *வேலைக்காரன்* என்றும் சிவன், சக்தி, திருமால் மூவரையும் இணைக்கும் தெய்வமாக இருப்பதால் *மால் முருகன்* என்றும் பெயர்கள் வழங்கப்படுகிறது.

*தமிழ்கடவுள்:* தமிழின் வடிவம் முருகன் ஆவான். தமிழ் மொழியின் 12 உயிரெழுத்துக்களும் முருகப்பெருமானின் 12 தோள்களைக் குறிப்பிடுகின்றன. 18 மெய்எழுத்துக்கள் முருகனின் 18 கண்களைக் குறிக்கின்றன. அதாவது முருகப் பெருமான் சிவனின் நெற்றிக் கண்ணிலிருந்து தோன்றியவர் ஆதலால் இவருக்கும் நெற்றியில் கண் உண்டு. ஆதலால் ஆறு முகங்களிலும் முகத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 18 கண்களை உடையவர். தமிழின் இனஎழுத்துக்கள் ஆறும் இவருடைய 6 முகங்களைக் குறிக்கின்றன. ஃ என்ற ஆயுத எழுத்து வேலினைக் குறிக்கிறது. இதனால் முருகன் தமிழ்தெய்வம் என்று போற்றப்படுகிறார்.

(dailyhunt.in)
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[8/7, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கடம்பா
[
[8/7, 07:00] stat senthil: கடம்பா

[8/7, 07:00] மீ.கண்ணண்.: கடம்பா

[8/7, 07:01] Meenakshi: விடை:கடம்பா

[8/7, 07:05] A Balasubramanian: கடம்பா
A.Balasubramanian

[8/7, 07:05] பாலூ மீ.: பாடம் +க விடை கடம்பா.
[
[8/7, 07:13] chithanandam: கடம்பா

[8/7, 07:16] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கடம்பா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[8/7, 07:17] Usha Chennai: கடம்பா

[8/7, 07:25] Dhayanandan: *கடம்பா*

[8/7, 07:27] Bhanu Sridhar: கடம்பா

[8/7, 07:32] ஆர். நாராயணன்.: கடம்பா

[8/7, 07:37] Ramki Krishnan: கடம்பா

[8/7, 07:39] ஆர்.பத்மா: கடம்பா

[8/7, 07:41] joseph amirtharaj: கடம்பா
[
[8/7, 07:44] Venkat: கடம்பா! 🙏🏾

[8/7, 07:50] nagarajan: *கடம்பா*
[
[8/7, 08:13] மாலதி: கடம்பா

[8/7, 08:15] sridharan: கடம்பா

[8/7, 08:49] Dr. Ramakrishna Easwaran: *கடம்பா*

[8/7, 08:58] G Venkataraman: கடம்பா
[
[8/7, 11:26] வானதி: *கடம்பா*
[
[8/7, 11:58] shanthi narayanan: கடம்பா

[8/7, 11:58] sankara subramaiam: கடம்பா
[
[8/7, 14:26] N T Nathan: கடம்பா

[8/7, 15:08] prasath venugopal: கடம்பா
[
[8/7, 18:59] கு.கனகசபாபதி, மும்பை: கடம்பா

[8/7, 19:23] V N Krishnan.: கடம்பா!

[8/7, 19:50] Revathi Natraj: கடம்பா


*****************************..,

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்