Skip to main content

விடை 3883


இன்று காலை வெளியான வெடி:
எங்கேயென்று அலைந்து  நடு இரவு  வந்த இடம் கோவிலுக்கருகில் இருக்கும் (3)
அதற்கான விடை:  தேரடி = தேடி + ர







சென்ற வருடம்  ராஜேஷ் வைத்யாவின் வீணை இசைக் கச்சேரிக்குச் சென்றிருந்தேன். அன்றைய நிகழ்ச்சியில்  கர்நாடக இசையில் அமைந்த திரைப்படப் பாடல்களும் வாசிப்பார் என்று குறிப்பிட்டிருந்ததால்  கொஞ்சம் சங்கீத அறிவையும் வளர்த்துக் கொள்ளலாமென்று ஒரு நப்பாசை.  அன்று பல பாடல்கள் வாசித்தாலும்  ஒரு பாடலை வாசிக்கும் முன்னால்  தனக்குத் தெரிந்து  திரைப்படங்களில் அந்தப் பாடல் மட்டும்தான் அந்த ராகத்தில் அமைந்தது என்று குறிப்பிட்டு  "நிக்கட்டுமா, போகட்டுமா நீலக் கருங்குயிலே" என்று வாசித்தார்.
வீட்டிற்கு வந்ததும் அப்பாடலை  இணையத்தில் தோண்டிப் பார்த்துக் கேட்டேன்.  அது கிராமத்துப் பாட்டாகத்தான்  தெரிந்தது. நேற்றும் ஒருமுறை அதைக் கேட்டேன். ஒரு சங்கீதமும் ஒரு ராகமும் பிடிபடவில்லை. "தேரடி வீதியிலே..." என்ற வார்த்தை சிக்கி ஒரு புதிர் அகப்பட்டதுதான் மிச்சம். வாசஸ்பதியாவது, வனஸ்பதியாவது ஒன்றும் விளங்கவில்லை.

 இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.