இன்று காலை வெளியான வெடி:
கடைசித் திருவிழா சென்ற படி செய் (3)
இதற்கான விடை: ஆக்கு = ஆழாக்கு - ழா
படி என்றால் 8 ஆழாக்குதானே, இது எப்படி பொருந்தும் என்று கேள்வி எனக்குத் தனியாக வந்தது. அதற்கு நான் அளித்த அதே பதிலை இப்போது பொதுவில் சொல்லிவிடுகிறேன். வழக்கிலிருக்கும் இரண்டு உதாரணங்களைச் சொன்னாலே போதும்.
"ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு அவன் செய்யும் காரியத்தைப் பாரேன்".
"அவர்கள் வீட்டில் இருக்கும் முத்துகளைப் படியால் அளந்து பங்கு போட்டுக் கொண்டார்களாம்"
இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.
Comments
ஆழாக்கு என்றால் 8 படி அல்ல!
8 ஆழாக்கு 1 படி
ஆக்கு கூட ழ சேர்த்து ஆழாக்கு என புரிந்துகொண்டேன்