ஒரு பழைய சொல் விளையாட்டு இருக்கிறது.
முக்காலைக் கையிலெடுத்து மூவிரண்டு போகையிலே
இக்காலை ஐந்துதலை நாகமொன்றழுந்தக் கடித்தது காண்!
ஆற்றுப் பக்கம் சென்ற போது ஐந்து முட்கள் கொண்ட நெருஞ்சியின் காய் குத்தியது என்பதைத்தான் ஒரு புலவர் அப்படிச் சொன்னாராம்.
அதைக் கேட்ட மற்றொரு புலவர் கூறிய பதில்:
"பத்துரதன் புத்திரனின் சத்துருவின் பத்தினியின்
பெயரில் கால் நீக்கித் தேய் "
தசரதனின் மகனான ராமனின் எதிரியான வாலியின் மனைவியின் தாரை என்ற பெயரில் காலை எடுத்து, தரையில், தேய்த்தால் முள் குத்திய இடம் சரியாகி விடும்!
அப்படிப்பட்ட பிரபலமான நெருஞ்சி உதிரிவெடியில் முதன்முதலாக இடம்பெற்றதைப் பலரும் திரளாக வந்து கலந்து கொண்டு சரியான விடையளித்துள்ளீர்கள்.
இம்முள்ளின் படம்:
செடியில் இருக்கும் படம்:
இன்றைய வெடி:
நெருஞ்சியில் இருப்பதை அருளில்லாத வட்டாரத்திற்கு வெளியே வைத்த அறிவில்லாதவன்(4)
இதற்கான விடை: முட்டாள் = முள் (நெருஞ்சிச் செடியில் இருப்பது)
+ வட்டாரம் - வரம் (அருள்)
ஒருவரும் தவறான விடையளிக்கவில்லை. அனைவருக்கும் பாராட்டுகள்! விவரங்களைக் காண இங்கே செல்லவும்.
Comments
பத்துரதன் புத்திரனின் *மித்திரனின்* சத்துருவின்
பத்தினியின் *காலுடைத்துக் காலைத் தேய் "
இன்று அனைவருமே முட்டாள்
.............
.............
............
..............
.............
.............
............
..............
.............
.............
............
..............
என்று சரியான விடையை
அனுப்பி விட்டார்கள்.