இன்றுகாலை வெளியான வெடி:
ஒரு வகை அழும் முறையை விட்டு கோயிலில் வணங்குவது (6)
அதற்கான விடை: விக்கிரகம் = விக்கி (அழும் முறை ) + ரகம் (வகை)
விட்டு என்றால் நீக்குதல் என்ற பொருள் தவிர சேர்த்தல் என்ற (எதிரான) பொருளும் உண்டு! (பாலில் கொஞ்சம் தேன் விட்டுக் குடித்தால் உடம்புக்கு நல்லது) . வாக்கிய அமைப்பு சீராக இருக்க வேண்டுமென்று முதலைல் ரகம், பின்னர் அழும் முறை என்று மாற்றிச் சொன்னேன்.
(பக்தர்கள்) கோவிலில் வணங்குவது விக்கிரகத்தை.
இன்றைய புதிருக்கு விடைகளை இப்பக்கம் சென்று காணலாம்.
Comments
26 விடைகளில் 10 தவறானவை. "வேண்டுவது" என்பதற்குப் பதில் "வேண்டப்படுவது" என்று சொல்லியிருந்தால் ஒரு வேளை இன்னும் அதிகமான, பொருத்தமான விடைகள் வந்திருக்கலாம்.
புதிர்கள் மேன்மேலும் மெருகேற்றுச் சுவையும் சவாலும் கூடுதலாக அமைந்து வருகின்றன. நன்றியுடன் பாராட்டுகள்!