Skip to main content

விடை 3867


இன்றுகாலை வெளியான வெடி:

ஒரு வகை  அழும் முறையை விட்டு கோயிலில் வணங்குவது (6)

அதற்கான விடை: விக்கிரகம் = விக்கி (அழும் முறை )  + ரகம் (வகை)

விட்டு என்றால் நீக்குதல் என்ற பொருள் தவிர சேர்த்தல் என்ற  (எதிரான) பொருளும் உண்டு!   (பாலில் கொஞ்சம் தேன் விட்டுக் குடித்தால் உடம்புக்கு நல்லது) . வாக்கிய அமைப்பு சீராக இருக்க வேண்டுமென்று  முதலைல் ரகம், பின்னர் அழும் முறை என்று மாற்றிச் சொன்னேன்.

(பக்தர்கள்) கோவிலில் வணங்குவது விக்கிரகத்தை.

இன்றைய புதிருக்கு விடைகளை இப்பக்கம் சென்று காணலாம்.

Comments

Muthu said…
அழும் முறை என்றால் ஒப்பாரி, பிலாக்கணம் என்றுதான் தோன்றியது. "வகை"க்கு விதம், மாதிரி, தினுசு என்றெல்லாம் யோசித்துப் பின் அகராதிகளைப் புரட்டிய போது "ரகம்" தெரிந்தது.

26 விடைகளில் 10 தவறானவை. "வேண்டுவது" என்பதற்குப் பதில் "வேண்டப்படுவது" என்று சொல்லியிருந்தால் ஒரு வேளை இன்னும் அதிகமான, பொருத்தமான விடைகள் வந்திருக்கலாம்.

புதிர்கள் மேன்மேலும் மெருகேற்றுச் சுவையும் சவாலும் கூடுதலாக அமைந்து வருகின்றன. நன்றியுடன் பாராட்டுகள்!
Vanchinathan said…
கேரளத்தினர் சாப்பிடுவது நேந்திரம்பழம்; கேரளத்தினரால் சாப்பிடப்படுவது நேந்திரம்பழம். அதனால் இரரண்டு விதமாகவும் பயன்படுத்துவதும் சரியே. (பக்தர்கள்) கோயிலில் வணங்குவது விக்கிரகம். (பக்தர்களால்) கோவிலில் வணங்கப்படுவது விக்கிரகம்.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.