Skip to main content

விடை 3857


இன்று காலை வெளியான வெடி:
கடைசித் திருவிழா சென்ற படி செய் (3)
இதற்கான விடை: ஆக்கு = ஆழாக்கு ‍- ழா

படி என்றால் 8 ஆழாக்குதானே, இது எப்படி பொருந்தும் என்று கேள்வி எனக்குத் தனியாக வந்தது. அதற்கு நான் அளித்த அதே பதிலை இப்போது பொதுவில் சொல்லிவிடுகிறேன். வழக்கிலிருக்கும் இரண்டு உதாரண‌ங்களைச் சொன்னாலே போதும்.

 "ஆழாக்கு மாதிரி இருந்துகிட்டு அவன் செய்யும் காரியத்தைப் பாரேன்".
"அவர்கள் வீட்டில் இருக்கும் முத்துகளைப் படியால் அளந்து பங்கு போட்டுக் கொண்டார்களாம்"

இப்புதிருக்கு அனுப்பப்பட்ட விடைகளைக் காண இங்கே செல்லுங்கள்.

Comments

Raghavan MK said…
ஆழாக்கு என்றால் 8 படிதானே, இது எப்படி பொருந்தும் என்று கேள்வி எனக்குத் தனியாக வந்தது.

ஆழாக்கு என்றால் 8 படி அல்ல!
8 ஆழாக்கு 1 படி
Vanchinathan said…
@MKராகவன்: திருத்திவிட்டேன்.
Raghavan MK said…
படி என்றால் ஆழாக்கு எனும் பொருள் வராதே!
ஆக்கு கூட ழ சேர்த்து ஆழாக்கு என புரிந்துகொண்டேன்
Muthu said…
திருவிழாச்சந்தடியில் ஆழாக்கைப் படியா விற்றுவிடுவார்கள் என்று தெரியும். அதனால் ஊக்கமாகவே "அக்கு" போட்டேன் (3 நிமிடன்கள் யோசனைக்குப் பின்). விடைகள் மிகக் குறைவான எண்ணிக்கையில் (மொத்தம் 29 - 23 சரியானவை) வந்திருப்பதிலிருந்து தெரிகிறது புதிர் "சரியான பிடி" பபிடித்துவிட்டது என்று.

Popular posts from this blog

விடை 4090

இன்று காலை வெளியான வெடி: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் கலையும் முன்பே மெதுவாகத் தொடங்கிப் பூசு (3) அதற்கான விடை: ஒரு கருத்தால் உருவாக்கப்பட்ட  கூட்டம் =  குழு மெதுவாகத் தொடங்கி = மெ மெழுகு = மெ  + குழு இவ்வெடிக்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம். 

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 8ஆம் ஆண்டு தொடக்கப்புதிருக்கு (4342) விடையளித்தோர்

இத்தனை வருடங்களாக போட்டி,  பரிசு ஏதும் இல்லாத  இப்புதிர்களில் ஆ ர் வத்துடன் பங்கேற்றோர்க்கு நன்றி.   எட்டாம் வருடத்தில் எட்டுவைத்த இவ்வெடியை விட்டேனா பார்நான் விடையளிப்பேன் -- ‍ கட்டாய்ப் பரிசுப் பணம்வேண்டாம் சோதனை எங்கள் அறிவுக்குப் போதுமென்றார் ஆங்கு  நேற்றைய வெடி கொஞ்ச நேரம் கைவிட்டுப் படி (2) அதற்கான விடை :  நாழி = நாழி-கை  நாழிகை =  சிறிய (கொஞ்சம்) கால அளவு, 24 நிமிடங் நாழி = அளக்கும் படி ( 'உண்பது நாழி, உடுப்பது நான்கு முழம்') இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.