இன்று காலை வெளியான வெடி:
நீண்ட காலம் தொட்டுத் தடவ கூந்தலாலும் முடியும் (4)
அதற்கான விடை: வருடம் = வருட + ம்
வருட = தொட்டுத் தடவ
ம் = கூந்தலாலும் முடியும்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
நீண்ட காலம் தொட்டுத் தடவ கூந்தலாலும் முடியும் (4)
அதற்கான விடை: வருடம் = வருட + ம்
வருட = தொட்டுத் தடவ
ம் = கூந்தலாலும் முடியும்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
_நீண்ட காலம் தொட்டுத் தடவ கூந்தலாலும் முடியும் (4)_
_தொட்டுத் தடவ_
= *வருட*
_கூந்தலாலும் முடியும்_
= _last letter in கூந்தலாலும்_
= *ம்*
_நீண்ட காலம்_
= *வருட+ம்*
= *வருடம்*
*************************
*_மனதை வருடிய என்னவளே_*
ஒரு காதலன், காதலி மீதான காதலை, இத்தனை அழகாக, இத்தனை நயமாக கூற முடியுமா என்றால், அந்த அத்தனை தேன் சொட்டும் வார்த்தைக்கும் சொந்தக்காரர் *வைரமுத்து* அவர்கள் தான். தொலைந்த இதயத்தை கால் கொலுசில் தேடும் அபரிமிதமான கற்பனை வரிகளில், என்னவளே... அடி என்னவேளே என் இதயத்தை தொலைத்துவிட்டேன் என்ற வரிகளில் தொடங்கி
_" *வருட* வரும் பூங்காற்றையெல்லாம் கொஞ்சம் வடிகட்டி அனுப்பி வைப்பேன்"_ என்று இன்றும் இதயத்துக்கு இதமான பாடலாக மனதை வருடி வருகிறது.
என்னவளே அடி என்னவளே
எந்தன் இதயத்தை தொலைத்து விட்டேன்
எந்த இடம் அது தொலைந்த இடம்
அந்த இடத்தையும் மறந்து விட்டேன்
உந்தன் கால் கொலுசில் அது தொலைந்ததென்று
உந்தன் காலடி தேடி வந்தேன்
காதலென்றால் பெரும் அவஸ்தையென்று உனைக்
கண்டதும் கண்டு கொண்டேன் – இன்று
கழுத்து வரை இந்த காதல் வந்து இரு
கண்விழி பிதுங்கி நின்றேன்.......... (என்னவளே)
.............................. ...............
............... ...............
வெண்ணிலவே உனைத் தூங்கவைக்க
உந்தன் விரலுக்கு சொடுக்கெடுப்பேன்
*வருட* வரும் பூங்காற்றையெல்லாம்
கொஞ்சம் வடிகட்டி அனுப்பிவைப்பேன்
என் காதலின் தேவையை
காதுக்குள் ஓதிவைப்பேன்
உன் காலடி எழுதிய கோலங்கள் புதுக்
கவிதைகள் என்றுரைப்பேன்…
என்னவளே அடி என்னவளே.........
(காதலன்:1994)
*************************
💐🙏🏼💐
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
பத்திரம் கிழிந்த துணி சுண்டல் கடலை போன்றது (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*பட்டா* , பெயர்ச்சொல்.
நிலம், வீடு முதலியவைகளின் உடைமையாளர் ஆவணம்; *உரிமைப்பத்திரம்*
_வீட்டுமனைப் *பட்டா* - title for the house plot_
**************
ஒரு குறிப்பிட்ட சொத்தின் மீது உங்கள் உரிமையை எவ்வாறு நிறுவுவீர்கள்? தமிழ்நாட்டில், ஒரு சொத்து மீதான உங்கள் சட்ட உரிமையை நிரூபிக்க தேவையான அனைத்து ஆதாரங்களும் ஒரு ' *பட்டா* ' ஆகும். இது நிலத்திற்கு மட்டுமே பொருந்தும், அடுக்குமாடி குடியிருப்புகள் அல்ல என்பதை நினைவில் கொள்க.
************************
_பத்திரம் கிழிந்த துணி சுண்டல் கடலை போன்றது (4)_
_பத்திரம்_ = *பட்டா*
_கிழிந்த துணி_ = *ணி*
_சுண்டல் கடலை போன்றது_
= *பட்டா+ணி*
= *பட்டாணி*
*************************
*சுடச் சுட பட்டாணி சுண்டல்*
சுடச் சுட பட்டாணி சுண்டல்
ஒரு முழம் மல்லிகை
பீச்சிலே பிறக்குது
பிகு பண்ணும் காதல்
அடுத்த வேளை சாப்பாடு
அது அப்புறம் பார்க்கலாம்
அந்த நொடி சந்தோசம்
அழகுக் காதல் இதுதானோ ?
(ஹரி ஹர நாராயணன்)
*********************
*பட்டாணி பாட்டி*
வயசும் தான் கூடி போச்சு
நரம்பும் தான் தளர்ந்து போச்சு
நாத்து நட்டு களை பறிச்சு
பயிரும் தான் வெளஞ்சி போச்சு
_வெளஞ்ச *பட்டாணி* பருப்பும் கீரையும் விலைக்கு விக்க வந்தாளே_
சுருக்குப் பைய தேடாம
சுருங்க பேச சொன்னாளே
நியாய விலை சொல்வாளே
நியாய எடை போட்டாளே
உசுரு போகும் தன்னாலே
அது முட்டும் உழைச்சுக்கிறேன் என்றாளே
மூலையிலே முடங்காம- விதியோடு முட்டிமோதி முனகாம
*விடிஞ்சதுமே வருவாளே*
*விளைஞ்ச பயிறு தருவாளே*
(கவிதை By uma sundar)
*************************
💐🙏🏼💐
*****************************
[6/7, 07:04] திரைக்கதம்பம் Ramarao: பட்டாணி
[6/7, 07:04] stat senthil: பட்டாணி
[6/7, 07:10] Dhayanandan: *பட்டாணி*
[6/7, 07:11] பாலூ மீ.: பட்டா+ணி பட்டாணி
[6/7, 07:11] மீ.கண்ணண்.: பட்டாணி
[6/7, 07:21] Meenakshi: விடை:பட்டாணி.
[
[6/7, 07:41] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏பட்டாணி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/7, 07:48] prasath venugopal: பட்டா+ணி = பட்டாணி
[6/7, 08:00] மாலதி: பட்டாணி
[
[6/7, 08:01] nagarajan: *பட்டாணி*
[6/7, 08:09] siddhan subramanian: பட்டாணி
[6/7, 08:14] joseph amirtharaj: பட்டாணி
[6/7, 09:27] ஆர். நாராயணன்.: பட்டாணி
[6/7, 11:09] G Venkataraman: பட்டாணி
[
[6/7, 12:44] கு.கனகசபாபதி, மும்பை: பட்டாணி
[6/7, 13:04] வானதி: *பட்டாணி*
[6/7, 15:44] Dr. Ramakrishna Easwaran: *பட்டாணி*
பத்திரம்≈பட்டா
கிழிந்த துணி= ணி
[6/7, 19:40] sathish: பட்டாணி
[6/7, 19:40] Siva: பட்டாணி
[6/7, 19:48] Rohini Ramachandran: பட்டாணி
[6/7, 19:49] Bhanu Sridhar: பட்டாணி
[6/7, 19:51] sankara subramaiam: பட்டாணி
[6/7, 19:52] N T Nathan: பட்டாணி
[6/7, 19:57] Revathi Natraj: பட்டாணி
[6/7, 20:09] V N Krishnan.: பட்டாணி
[6/7, 20:37] Bharathi: பட்டாணி
[6/7, 22:29] akila sridharan: பட்டாணி.
பத்திரம் - பட்டா
கிழிந்த துணி - ணி
*****************************
.
*இன்றைய உதிரிவெடி!*( 08-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
காவலர்கள் வன்முறையால் சிறைப்பட்ட திருடன் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
என் காதலன் என்கிறாய் நீ
*கள்வன்* என்கிறேன் நான்
நான் காதலை உணரும் முன் இதயத்தை களவாடிச் சென்றவன் *கள்வன்* அல்லவா?
(ஆர்த்தி ரவி)
************************
*காகிதத்தை வீணடித்தவன்*
எனக்கு கவிதை எழுததெரியாது தெரியுமென்று வெள்ளை காகிதத்தை வீணடித்த *கள்வன்* நான்
(pavaresh)
************************
*_சிலம்பு கள்வன்_*
*வழக்குரை காதை*
பாண்டிய மன்னன் அவ்வாறு சிதறிய மாணிக்கப் பரல்களைக் கண்டவுடன் தனது வெண்கொற்றக் குடை ஒருபக்கம் விழவும், பிடிதளர்ந்து தனது செங்கோல் ஒருபக்கம் சாய்ந்து நிற்கவும், “பொற்கொல்லனின் சொல்லைக் கேட்டு அதனை உண்மையென்று துணிந்த அறிவிலியாகிய யானும் ஓர் அரசன் ஆவேனோ? இப்பொழுது யானே கோவலனின் சிலம்பைக் கவர்ந்த *கள்வன்* ஆகின்றேன். குடிமக்களைப் பேணிக் காத்து வருகின்ற இத்தென்னாட்டின் பாண்டியர் ஆட்சிச் சிறப்பு என்னால் பிழைபட்டு விட்டதே; ஆதலால் என் ஆயுள் அழிவதாக” என்று கூறி மயங்கி அரசு கட்டிலினின்றும் வீழ்ந்தான்.
_பொன்செய் கொல்லன் தன்சொல் கேட்ட_
_யானோ அரசன் யானே *கள்வன்*_
_மன்பதை காக்கும் தென்புலம் காவல்_
_என்முதல் பிழைத்தது கெடுகவென் ஆயுள்என_
(வழக்குரை காதை : 74-77)
இவ்வாறு அரசன் தன் தவற்றை உணர்ந்ததும், தன்னுயிர் நீத்து நீதியை நிலை நிறுத்தினான்.
************************
_காவலர்கள் வன்முறையால் சிறைப்பட்ட திருடன் (4)_
_சிறைப்பட்ட_ = _indicator for hidden clue in_
_காவலர்(கள் வன்)முறையால்_
= *கள்வன்*
= _திருடன்_
*************************
*தோடுடைய செவியன் பாடல் – வரலாறு*
திருஞானசம்பந்தர் பாடிய முதல் திருப்பதிகம் – திருப்பிரமபுரம் பதிகம்
திருஞானசம்பந்தர் சிறு குழந்தையாக இருந்த போது , ஒரு நாள் அவருடைய தந்தையார், ஞான சம்பந்தரை அழைத்துக் கொண்டு கோவிலுக்குச் சென்றார்.போகிற வழியில், கோவில் திருக் குளத்தில் நீராடி செல்லலாம் என்று குளத்தில் இறங்கி நீராடிக் கொண்டிருந்தார்.அப்போது, ஞான சம்பந்தருக்கு பசி எடுத்தது. குரலெடுத்து அழுதார்.அங்கு, பார்வதி , சிவனோடு தோன்றி தன் திருமுலைப் பாலை ஞான சம்பந்தருக்குத் தந்து அவரின் பசியைப் போக்கினார்.
நீராடி வந்த தந்தையார், பிள்ளையின் வாயில் பால் ஒழுகுவதை கண்டு, யார் தந்தார்கள் என்று வினவ , குழந்தை மேலே காட்டி கீழ்கண்ட பாடலைப் பாடியது…
_தோடுடைய செவியன் விடையேறியோர்_ _தூவெண்மதி சூடிக் காடுடையசுட_ _லைப்பொடிபூசிஎன் உள்ளங்கவர் *கள்வன்*_
_ஏடுடையமல ரான்முனைநாட்பணிந் தேத்தஅருள் செய்த_
_பீடுடையபிர மாபுரம்மேவிய பெம்மானிவ னன்றே. (1)_
தோடணிந்த திருச்செவியை உடைய உமையம்மையை இடப்பாகத்தே உடையவனாய், விடை மீது ஏறி, ஒப்பற்ற தூய வெண்மையான பிறையை
முடிமிசைச்சூடி, சுடுகாட்டில் விளைந்த சாம்பற் பொடியை உடல் முழுதும் பூசி வந்து என் *உள்ளத்தைக் கவர்ந்த கள்வன்,* இதழ்களை உடைய தாமரை மலரில் விளங்கும் நான்முகன், படைத்தல் தொழில் வேண்டி முன்னை நாளில் வழிபட அவனுக்கு அருள்புரிந்த பெருமை மிக்க பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பெருமானாகிய இவன் அல்லனோ!
*************************
💐😂💐
*****************************
[6/8, 07:05] திரைக்கதம்பம் Ramarao: கள்வன்
[6/8, 07:06] A Balasubramanian: கள்வன்
A.Balasubramanian
[6/8, 07:07] மீ.கண்ணண்.: கள்வன்
[
[6/8, 07:05] stat senthil: கள்வர்
[6/8, 07:12] Ramki Krishnan: கள்வன்
[6/8, 07:12] Dhayanandan: *கள்வன்*
[6/8, 07:13] பாலூ மீ.: கள்வன்.
[6/8, 07:14] V N Krishnan.: கள்வன்
[6/8, 07:17] மாலதி: கள்வன்
[6/8, 07:21] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கள்வன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/8, 07:28] Rohini Ramachandran: கள்வர்
[6/8, 07:30] Meenakshi: விடை:கள்வன்
[
[6/8, 07:31] கு.கனகசபாபதி, மும்பை: கள்வன்
[6/8, 07:33] akila sridharan: கள்வன்
[6/8, 07:38] chithanandam: கள்வன்
[6/8, 07:40] வானதி: *கள்வன்*
[
[6/8, 07:55] ஆர்.பத்மா: கள்வன்
[6/8, 08:00] prasath venugopal: கள்வன்
[6/8, 08:10] nagarajan: *கள்வன்*
[6/8, 08:30] ஆர். நாராயணன்.: கள்வன்
[6/8, 08:33] sankara subramaiam: கள்வன்
[6/8, 08:44] Bhanu Sridhar: கள்வன்
[
[6/8, 08:45] G Venkataraman: கள்வன்
[6/8, 08:50] Viji - Kovai: கள்வன்
[6/8, 08:53] siddhan subramanian: கள்வன்
[6/8, 09:58] Bharathi: கள் வன்
[
[6/8, 10:19] Revathi Natraj: கள்வன்
[6/8, 10:28] Dr. Ramakrishna Easwaran: *கள்வன்*
[6/8, 13:17] N T Nathan: கள்வன்
[6/8, 21:48] sathish: கள்வர்?
[6/8, 22:01] joseph amirtharaj: கள்வன்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
துவாரம் இட்டு வந்த குழப்பத்தில் நேர்மையிலாதது (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*ஆத்தி சூடி.*
_ஐயம் *இட்டு* உண்_
சொற்பொருள்:
ஐயம்; உணவு (உணவில்லாதோரின்) (ஐயம் வேறு பிச்சை வேறு;உணவில்லாதோர்க்கு *வழங்குவது* ஐயம்; பிச்சை எடுப்போருக்கு நாம் *இடுவது* பிச்சை;
காண்க:
ஆண்டாள் திருப்பாவை
_ஐயமும் பிச்சையும்ஆந்தனையும் கைகாட்டி-பாடல் 2)_
*கருத்து*
உணவு தேவைப் படுவோர் யாராவது இருப்பின் அவருக்கு *உணவு இட்ட* பின் உண்ணுதல் வேண்டும்.
*ஔவையார்*
************************
_துவாரம் இட்டு வந்த குழப்பத்தில் நேர்மையிலாதது (5)_
_துவாரம் =_ *வளை*
_இட்டு_ = *தந்து*
_வந்த குழப்பத்தில்_
= _indicator of anagram for வளை + தந்து_
= *வளைந்தது*
= _நேர்மையிலாதது_
*************************
*இட்டார் பெரியோர் இடாதார் இழிகுலத்தோர் –* _நல்வழி 2_
சாதி யிரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையின் - மேதினியில்
*இட்டார்* பெரியோர் *இடாதார்* இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி.
*பொருளுரை:*
சொல்லுமிடத்து, பூமியில் இரண்டு சாதியின்றி வேறில்லை,
அவ்விரண்டு சாதியாரும் யாவரெனின், நீதி தவறாத நல்வழியில் நின்று முறையோடு வறியர் முதலானவர்க்கு *ஈந்தவரே* உயர்வாகிய சாதியார்;
*ஈயாதவரே* இழிவாகிய சாதியார்; உண்மை நூலில் உள்ள இயற்கை இதுவேயாம்.
*கொடுத்தவர்* உயர்குலத்தினர்; *கொடாதவர்* இழிகுலத்தினர்; இவ்வகையன்றி வேறு சாதியில்லை
*************************
*நல்வழி 10 - இட்டு, உண்டு, இரும்*
பாடல்
ஆண்டாண்டு தோறும் அழுது புரண்டாலும்
மாண்டார் வருவரோ மாநிலத்தீர் – வேண்டா!
நமக்கும் அதுவழியே! நாம்போம் அளவும்
எமக்கென்? என்(று) *இட்டு* உண்டு இரும்.
நாம் மிகுந்த அன்பு வைத்தவர்கள் யாரவது இறந்து விட்டால் நாம் மிக வருந்தி அழுவோம். எத்தனை வருடம் அழுது புரண்டாலும், இறந்தவர் திரும்பி வரப் போவது இல்லை. அது மட்டும் அல்ல, நாமும் ஒரு நாள் அந்த வழியே போகத்தான் போகிறோம். அந்த நாள் வரும் வரை, வேண்டியவர்களுக்கு உணவு *தந்து* , நீங்களும் உண்டு, அமைதியாய் இருங்கள்.....
*ஔவையார்*
*************************
💐🙏🏼💐
*****************************
[6/9, 07:08] திரைக்கதம்பம் Ramarao: வளைந்தது
[6/9, 07:11] பாலூ மீ.: வளைந்தது
[6/9, 07:14] மீ.கண்ணண்.: வளைந்தது
[6/9, 07:17] chithanandam: வளைந்தது
[6/9, 07:17] A Balasubramanian: வளைந்தது
A.Balasubramanian
[6/9, 07:19] sridharan: வளைந்தது
[6/9, 07:19] ஆர். நாராயணன்.: வளைந்தது
[
[6/9, 07:22] akila sridharan: வளைந்தது
[6/9, 07:50] Meenakshi: விடை:வளைந்தது
[
[6/9, 08:02] nagarajan: *வளைந்தது*
[6/9, 08:08] Bhanu Sridhar: வளைந்தது
[6/9, 08:11] மாலதி: வளைந்தது
[6/9, 09:20] Dhayanandan: *வளைந்தது*
[6/9, 10:35] joseph amirtharaj: வளைந்தது
[6/9, 11:30] G Venkataraman: வளைந்தது
[
[6/9, 07:24] stat senthil: வளைந்தது
[
[6/9, 12:31] கு.கனகசபாபதி, மும்பை: வளைந்தது
[
[6/9, 17:58] ஆர்.பத்மா: வளைந்தது
[6/9, 20:17] Viji - Kovai: ஆதாரமிலா
[
[6/9, 22:48] sankara subramaiam: வளைந்தது
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அடங்காத காதணியா? தங்கத்திலிருக்கின்றது. (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அடங்காத காதணியா? தங்கத்திலிருக்கின்றது. (4)
Telescopic clue
காதணியா? தங்கத்திலிருக்கின்றது
= காதணியாதங்கத்தில் இருக்கின்றது
= கா [தணியாத] ங்கத்தில்
= தணியாத
= அடங்காத
*************************
கந்தர் அநுபூதி - தணியாத மோகம்
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
பணியா? என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே.
முருகனுக்கு வள்ளி மேல் அவ்வளவு மோகம்.
மோகம் எப்போதும் தணிந்து போகும். ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள் என்பார்களே அது போல. நாள் ஆக நாள் ஆக மனம் சலிக்கும், உடல் சலிக்கும்.
ஆனால் முருகனுக்கு வள்ளி மேல் "தணியாத மோகம்"
அதுவும் எப்படி பட்ட மோகம் ? அதி மோகம். அளவுக்கு அதிகமான தீராத மோகம்.
வள்ளியின் பாதத்தை பிடித்துக் கொள்கிறான். பிடித்துக் கொள்வது மட்டும் அல்ல, அவள் பாதங்களை பணிகிறான்.
பணிந்து, "சொல்லு, நான் என்ன செய்ய வேண்டும்" என்று கெஞ்சுகிறான்.
"நீ என்ன சொன்னாலும் செய்கிறேன், எனக்கு இட்ட கட்டளை என்ன " என்று அவள் பாதங்களை பணிந்து வேண்டுகிறான்.
அவன் கொண்டது காதல் மட்டும் அல்ல...மோகம் மட்டும் அல்ல...கருணையும் கூட. "தயாபரனே" என்கிறார் அருணகிரி.
காதலும் கருணையும் கலந்தது அவன் மனம்.
அவ்வளவு கருணை உள்ள நீ, உன் பாதத் தாமரையை கல் போன்ற என் மனத்திலும் பூக்க வைக்க மாட்டாயா என்று உருகுகிறார் அருணகிரி.
கல்லில் எங்காவது பூ பூக்குமா ?
பூக்காது, அதற்கு என்ன செய்ய முடியும். அவன் திருவடிகள் தாமரை போல மென்மையாக இருக்கிறது. என் மனமோ கல்லு போல கடினமாக இருக்கிறது.
நான் என் மனதை மாற்றுவது என்பது எளிதான காரியம் அல்ல. ஆனால், அவன் நினைத்தால் அவன் திருவடித் தாமரை என் மனத்திலும் பூக்கும்.
ஏன் என்றால் அவன் கருணை உள்ளவன்.
வள்ளிக்காக அவள் பாதத்தை பிடித்தவன்.
எனக்காக இதைச் செய்யக் கூடாதா என்று கேட்கிறார் அருணகிரி.
**************************
*****************************
[6/10, 07:00] திரைக்கதம்பம் Ramarao: தணியாத
[
[6/10, 07:01] stat senthil: தணியாத
[6/10, 07:06] மீ.கண்ணண்.: தங்காத
[6/10, 07:09] Meenakshi: விடை: தணியாத
[6/10, 07:14] A Balasubramanian: தணியாத
A.Balasubramanian
[6/10, 07:14] Ramki Krishnan: தணியாத
[6/10, 07:19] மாலதி: தணியாத
[6/10, 07:23] பாலூ மீ.: தணியாத.
[
[6/10, 07:25] chithanandam: தணியாத
[6/10, 07:29] sathish: தணியாத
[6/10, 07:33] G Venkataraman: தணியாத
[
[6/10, 07:40] ஆர்.பத்மா: தணியாத
[
[6/10, 08:10] nagarajan: *தணியாத*
[6/10, 08:24] siddhan subramanian: *தணியாத* *Telescopic*
[
[6/10, 09:12] ஆர். நாராயணன்.: தணியாத
[6/10, 09:44] joseph amirtharaj: தணியாத
[6/10, 09:58] Dhayanandan: *தணியாத*
[6/10, 12:19] shanthi narayanan: தணியாத
[6/10, 12:22] கு.கனகசபாபதி, மும்பை: தணியாத
[6/10, 12:45] A D வேதாந்தம்: விடை= லோலாக்கு(வேதாந்தம்)
[6/10, 13:55] Rohini Ramachandran: ஆடகம்
[6/10, 14:01] N T Nathan: குழையாத
[
[6/10, 15:22] வானதி: *தணியாத*
[6/10, 19:23] Viji - Kovai: தடங்கா
[6/10, 19:24] Dr. Ramakrishna Easwaran: *தணியாத*
திணியான மனோ சிலை மீது, உனதாள்
அணியார், அரவிந்தம் அரும்பு மதோ?
.. பணியா? .. என, வள்ளி பதம் பணியும்
தணியா அதிமோக தயா பரனே
[6/10, 19:24] N T Nathan: தணியாத
[
[6/10, 19:28] Rohini Ramachandran: தணியாத
[6/10, 19:34] sridharan: தடந்த
[6/10, 19:43] Bharathi: தணியாத
[6/10, 19:44] akila sridharan: தணியாத
[
[6/10, 19:46] sankara subramaiam: தணியாத
[6/10, 20:53] prasath venugopal: தணியாத
[6/10, 21:13] Bhanu Sridhar: தணியாத
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
ஆணை வேலை செய்யச் சொல்லும் சொல் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
****************************
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
உயிர் உள்ளவரை ஒரு துன்பமில்லை
அவர் கண்ணீர்க் கடலிலே விழமாட்டார்
நான் ஆணையிட்டால் அது நடந்து விட்டால்
இங்கு ஏழைகள் வேதனைப் பட மாட்டார்
(எங்க வீட்டுப் பிள்ளை:1965)
*****************************
தாய் மேல் ஆணை
தமிழ் மேல் ஆணை
குருடர்கள் கண்ணை திறந்து வைப்பேன்
தனியானாலும் தலை போனாலும்
தீமைகள் நடப்பதை தடுத்து நிற்பேன்
தாய் மேல் ஆணை...
தமிழ் மேல் ஆணை...
(நான் ஆணையிட்டால்:1966)
*****************************
_பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம்_
_கருமமே கட்டளைக் கல்_
( குறள் எண்:505)
பொழிப்பு (மு வரதராசன்):
_(மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும்._
*****************************
_ஆணை வேலை செய்யச் சொல்லும் சொல் (4)_
_ஆணை_
= *கட்டளை*
_வேலை செய்யச் சொல்லும் சொல்_
= *கட்டளை*
*************************
*****************************
[6/11, 07:01] *வீ.ஆர். பாலகிருஷ்ணன்:*
🙏*கட்டளை*🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/11, 07:01] Meenakshi: விடை:கட்டளை
[6/11, 07:01] stat senthil: கட்டளை
[6/11, 07:02] திரைக்கதம்பம் Ramarao: கட்டளை
[6/11, 07:04] மீ.கண்ணண்.: கட்டளை
[6/11, 07:06] பாலூ மீ.: அரசாணை.
[6/11, 07:09] A Balasubramanian: கட்டளை
A.Balasubramanian
[6/11, 07:17] sridharan: கட்டளை
[6/11, 07:45] A D வேதாந்தம்: விடை=கட்டளை(வேதாந்தம்)
[6/11, 07:52] prasath venugopal: கட்டளை
[6/11, 07:53] akila sridharan: கட்டளை
[6/11, 07:55] மாலதி: கட்டளை
[6/11, 07:58] nagarajan: *கட்டளை*
[6/11, 08:03] Dhayanandan: *கட்டளை*
[6/11, 08:19] ஆர்.பத்மா: கட்டளை
[6/11, 08:29] ஆர். நாராயணன்.: கட்டளை
[6/11, 08:43] Bharathi: கட்டளை
[6/11, 09:04] கு.கனகசபாபதி, மும்பை: கட்டளை
[6/11, 09:56] Revathi Natraj: கட்டளை
[6/11, 10:09] வானதி: *கட்டளை*
[6/11, 10:23] Viji - Kovai: கட்டளை
[6/11, 10:36] G Venkataraman: கட்டளை
[6/11, 10:43] joseph amirtharaj: கட்டளை
[6/11, 13:01] Rohini Ramachandran: கட்டளை
[
[6/11, 19:26] N T Nathan: கட்டளை
[
[6/11, 19:32] sathish: கட்டளை
[
[6/11, 19:35] shanthi narayanan: கட்டளை
[6/11, 19:38] sankara subramaiam: கட்டளை
[
[6/11, 19:48] Ramki Krishnan: கட்டளை
[6/11, 20:38] Bhanu Sridhar: கட்டளை
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
கனி உப்பு துளி குறைந்ததால் பெற்ற நிறம் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
நிறம் , கவிஞனை கவிதை எழுதத்தூண்டுகிறது. மலர்கள் ,தேனீக்களை ஈர்க்க வைக்கிறது. மனத்திற்கு உணர்வுகளைத் தூண்டவோ, அமைதிப்படுத்தவோ செய்கிறது. காதலை விதைக்கிறது, கலைகளை படைக்கிறது.
************************
ஓர் *இலை* யின் பருவங்கள ஏழாகும்!
அதை விவரிப்பதே இதன் நோக்கமாகும்!!
*குருத்து* என்பது முதல் நிலையாகும்!
*அரும்பு* அதன் அடுத்த நிலையாகும்!!
*துளிர்* என்பது மூன்றாம் நிலையாகும்!
*தளிர்* அதன் அடுத்த நிலையாகும்!!
*இலை*'யாக பரிணமிப்பது ஐந்தாம் நிலையாகும்!
*பழுப்பு* அதன் அடுத்த நிலையாகும்!!
*சருகு* என்பதே ஏழாம் நிலையாகும்!
இதுவே இலையின் இறுதி நிலையாகும்!!
(கலீல் பாகவீ)
************************
*பழுப்பு நிறப் பக்கங்களுக்களிடையில்*
பழைய புத்தகத்தின்
*பழுப்பு* நிறப் பக்கங்களுக்களிடையில்
நான் வைத்திருந்த மயிலிறகு
பச்சையாய் நீல வண்ணமாய் ....
பசுமை மாறாத நினைவுகள் நெஞ்சில் !
எழுதியவர் : கவின் சாரலன்
************************
கனி உப்பு துளி குறைந்ததால் பெற்ற நிறம் (4)
(கனிதல் = பழுத்தல்
கனிந்த = பழுத்த)
கனி = பழு
உப்பு துளி குறைந்ததால்
= [உ]ப்பு
= ப்பு
பெற்ற நிறம்
= பழு+ப்பு
= பழுப்பு
*************************
பழுப்பு (Brown) என்பது சிவப்பு, மஞ்சள் மற்றும் கருப்பு ஆகிய நிறங்களின் கலவையாகும்.
*************************
பழுப்பு அரிசி
பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும்.
பழுப்பு அரிசியானது சத்துக்கள் மிக்க தவிடு மற்றும் உள் அடுக்கை தக்கவைத்து கொண்டிருக்கும். வெள்ளை அரிசியை ஒப்பிடும்போது நன்கு மெல்லும் தன்மை கொண்டும், வாசனையையும் உடையது.
பழுப்பு அரிசி ஆரோக்கிய நன்மைகளை உள்ளடக்கியது.
இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆக்ஸிஜனேற்ற அமைப்பு, பல வகையான உபாதைகளான உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற கொழுப்பு, அழுத்தம், மன அழுத்தம் மற்றும் தோல் நோய்களிலிருந்து நிவாரணம் அடைய உதவுகிறது.
*************************
*****************************
[6/12, 07:01] *prasath venugopal:* *பழுப்பு*
[6/12, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பழுப்பு
[6/12, 07:03] Meenakshi: விடை:பழுப்பு
[6/12, 07:05] stat senthil: பழுப்பு
[6/12, 07:09] மீ.கண்ணண்.: கருப்பு
[6/12, 07:11] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பழுப்பு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[6/12, 07:20] A Balasubramanian: பழுப்பு
A.Balasubramanian
[
[6/12, 07:22] Ramki Krishnan: பழுப்பு
[6/12, 07:24] ஆர்.பத்மா: பழுப்பு
[
[6/12, 07:25] ஆர். நாராயணன்.: பழுப்பு
[
[6/12, 07:25] Dr. Ramakrishna Easwaran: *பழுப்பு*
[
[6/12, 07:31] Rohini Ramachandran: பழுப்பு
[
[6/12, 07:54] மாலதி: பழுப்பு
[6/12, 07:58] nagarajan: *பழுப்பு*
[
[6/12, 08:01] பாலூ மீ.: பழுப்பு.
[
[6/12, 08:02] akila sridharan: பழுப்பு
[6/12, 08:20] siddhan subramanian: பழுப்பு (பழு + ப்பு)
[6/12, 08:52] G Venkataraman: பழுப்பு
[
[6/12, 09:54] Revathi Natraj: பழுப்பு
[6/12, 09:49] Viji - Kovai: பழுப்பு
[6/12, 09:54] Revathi Natraj: பழுப்பு
[
[6/12, 10:21] கு.கனகசபாபதி, மும்பை: பழுப்பு
[6/12, 11:10] Dhayanandan: *பழுப்பு*
[
[6/12, 11:40] joseph amirtharaj: பழுப்பு
[6/12, 12:08] shanthi narayanan: பழுப்பு
[6/12, 13:18] வானதி: pazhuppu *பழுப்பு*
[6/12, 13:31] sankara subramaiam: *பழுப்பு*
கனி : பழு
உப்பு சிறிது குறைந்தால் : ப்பு
[6/12, 20:53] Bhanu Sridhar: பழுப்பு
[6/12, 21:37] V N Krishnan.: பழுப்பு
பழம்+உப்பு-
[6/12, 23:01] N T Nathan: பழுப்பு
*****************************