இன்று காலை வெளியான வெடி:
எதிர்க்கும் அழகியை அடக்க கதை கேட்கக் கொட்டுவது தியாகத்திற்கு சிந்துவது (4)
அதற்கான விடை: உதிரம் = உம் + திர
உம் = கதை கேட்பவர்கள் "உம்" கொட்டுவது.
திர = எதிர்ப்புறமாய வந்த ரதி, அழகி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
எதிர்க்கும் அழகியை அடக்க கதை கேட்கக் கொட்டுவது தியாகத்திற்கு சிந்துவது (4)
அதற்கான விடை: உதிரம் = உம் + திர
உம் = கதை கேட்பவர்கள் "உம்" கொட்டுவது.
திர = எதிர்ப்புறமாய வந்த ரதி, அழகி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
_எதிர்க்கும் அழகியை அடக்க கதை கேட்கக் கொட்டுவது தியாகத்திற்கு சிந்துவது (4)_
_அழகி_ = *ரதி*
_கதை கேட்கக் கொட்டுவது_
= *உம்* ( _கொட்டுவது_ )
_எதிர்க்கும் அழகி_
= *ரதி---> திர*
_அடக்க_ = _insertion indicator to put_ *திர* _inside_ *உம்*
= *உ(திர)ம்*
= *உதிரம்*
= _தியாகத்திற்கு சிந்துவது_
***********************
*பாரதியின் படைப்பு*
பாரதியின் படைப்பில் மிக சிறந்தபாடல்.
ஒரு குழந்தையைக்
கண்டால் என்ன இன்பம் உண்டாகும்
என்பதை அழகாக
கவிஞர் அவரது
நெஞ்சின் ஆழத்தில்
இருந்து வார்த்தை
களாக
வடித்துள்ளார். இந்த கண்ணம்மா யார் என்று வெகு நாள் குழப்பம் இருந்தது. அது பாரதியின் சிறு வயது தோழி என்று ஒருவர் சொல்ல தெரிந்து கொண்டேன். பாரதியின் நெற்றியில் சாகும் வரை திலகம் இருந்தது ... அது ஏன் தெரியுமா? கண்ணம்மா சிறு வயதில் பாரதிக்கு அவளது பிஞ்சு விரல்களால் பொட்டு வைக்கிறாள். அதன் பிறகு பாரதி எவ்வளவோ முறை பொட்டு வைத்து பார்த்தும் அந்த பிஞ்சு விரல் வைத்த நெற்றி திலகம் போல் வரவில்லை.
இதோ உங்களுக்காக என்னுடைய ஆசைக்குரிய பாடல்.
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
_சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா_
_செல்வக் களஞ்சியமே என்னைக் கலி தீர்த்தே_ _உலகில் ஏற்றம் புரிய வந்தாய்_
_சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா_
............ ............ ............
............ ............ ............
_கன்னத்தில் முத்தமிட்டால்_ _உள்ளந்தான் கள்வெறி கொள்ளுதடி_
_உன்னைத் தழுவிடிலோ கண்ணம்மா உன்மத்தமாகுதடி_
*_உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உதிரம் கொட்டுதடி_*
_என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா_
_என் கண்ணில் பாவையன்றோ கண்ணம்மா_
_என்னுயிர் நின்னதன்றோ?_
_சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா_
இந்த வரிகளை படித்த மாத்திரத்திலேயே பாரதி கண்ணம்மாவின் மீது கொண்ட காதலை புரிந்து கொள்ளலாம். காதலில் மூழ்கி திளைத்து முத்தெடுத்த ஒருவனால் தான் இதுப்போன்ற கவியை படைக்க முடியும்.
************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 28-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
எதிரான பதிவில் வாயிலிருப்பதைப் பிடுங்க வரைமுறை (2)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*வரைமுறை* இல்லா காதலுக்கு முன்னுரை முடிவுரை கிடையாது!
************************
வரையறுக்கப்பட்ட வார்த்தைகளில்
வரையப்படும் கவிதைகள்
வசீகரிக்க மட்டுமே செய்யும்.
*வரையறை* தேவையில்லை!
வரைமுறை போதும்.
**************************
மதங்கொண்ட யானைக்கு
பிணைக்கப்பட்ட சங்கிலி ஒரு பொருட்டே அல்ல,
அது போல்தான் பிரச்சனைகள் சூழ்ந்திருக்கும் மனிதனுக்கும் *வரைமுறைகள்* என்பது ஒரு பொருட்டே அல்ல!
************************
அன்பு காட்டுவது அறிவை பெறுவது இரண்டிற்கும் *வரைமுறை* இல்லை. இரண்டும் எல்லையற்றவை
*பெர்னாட்ஷா*
************************
_எதிரான பதிவில் வாயிலிருப்பதைப் பிடுங்க வரைமுறை (2)_
_வாயிலிருப்பது_
= *பல்*
_பிடுங்க_ = _deletion indicator_
_பதிவில் வாயிலிருப்பதைப் பிடுங்க_
= _பதிவில் -பல்_
= *திவி*
_எதிரான_ = *திவி* in reverse
= *விதி*
= _வரைமுறை_
*************************
*விதி என்றால் என்ன? அதனை மதியால் வெல்ல முடியுமா? சுவாமி விவேகானந்தர் சொன்ன பதில் இது!*
*****
விதி என்றால் என்ன? அதனை எப்படிவெல்வது? விதி எங்கே இருக்கிறது? எதைவிதைத்தோமோ அதைத்தான் அறுவடைசெய்கிறோம். நமது விதியை நாமே வகுத்துக்கொள்கிறோம். எனவே அதன் பொருட்டுத்தூற்றுவதற்கும்ஒருவருமில்லை,போற்றுவதற்கும்ஒருவருமில்லை. காற்று வீசியபடி இருக்கிறது.
பாய்மரங்களை விரித்துக் காற்றைத் தனக்குசாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும்கப்பல்கள், தங்கள் வழியே முன்னேறிச்செல்கின்றன. ஆனால் பாய்களைச் சுருட்டிவைத்துள்ள கப்பல்கள் காற்றை ஏற்றுப் பயன்பெறுவதில்லை.
இது காற்றினுடைய குற்றமாகுமா? அதனால் நீவகுத்துக்கொண்ட விதியின் வழியில் நீசெல்வதால், அதை வெல்வது என்ற பேச்சுக்கேஇடமில்லை.
*************************
💐🙏🏼💐
*****************************
[6/28, 07:00] திரைக்கதம்பம் Ramarao: விதி
[6/28, 07:01] Usha Chennai: விதி
[6/28, 07:02] Dr. Ramakrishna Easwaran: *விதி*
[6/28, 07:03] கு.கனகசபாபதி, மும்பை: விதி
[6/28, 07:04] Bhanu Sridhar: விதி
[6/28, 07:05] Rohini Ramachandran: விதி
[6/28, 07:05] பாலூ மீ.: விடை விதி
[
[6/28, 07:08] மீ.கண்ணண்.: விதி
[
[6/28, 07:10] prasath venugopal: விதி
[6/28, 07:10] akila sridharan: விதி
[
[6/28, 07:16] மாலதி: விதி
[6/28, 07:19] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏விதி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/28, 07:26] sridharan: விதி
[
[6/28, 07:27] Meenakshi: விடை:விதி
[6/28, 07:29] Dhayanandan: *விதி*
[6/28, 07:29] stat senthil: விதி
[
[6/28, 07:53] nagarajan: *விதி*
[6/28, 08:03] chithanandam: விதி
[6/28, 08:22] A D வேதாந்தம்: விடை= விதி(வேதாந்தம்)
[
[6/28, 08:23] sathish: விதி
[6/28, 08:31] ஆர்.பத்மா: விதி
[6/28, 08:37] ஆர். நாராயணன்.: விதி
[6/28, 08:42] siddhan subramanian: விதி
[
[6/28, 08:49] Bharathi: விதி
[
[6/28, 09:14] Ramki Krishnan: விதி
[
[6/28, 09:19] A Balasubramanian: பல்
[6/28, 09:44] வானதி: *விதி*
[6/28, 09:52] G Venkataraman: விதி
[
[6/28, 10:13] joseph amirtharaj: விதி
[6/28, 12:29] shanthi narayanan: விதி
[6/28, 17:52] N T Nathan: விதி
[6/28, 20:15] Viji - Kovai: பல்
[6/28, 20:30] Revathi Natraj: விதி
[
[6/28, 21:36] sankara subramaiam: விதி
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
பள்ளத்தில் மூன்றாம் கடுகம் குறைய விலையைக் கண்டுபிடி (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*கடுகம்* , பெயர்ச்சொல்.
கார்ப்பு
கடுகுரோகிணி
சுக்கு , மிளகு , *திப்பிலி* என்னும் திரிகடுங்களுள் ஒன்று
************************ *திரிகடுகம்* என்பது
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும். இந்நூல் *நல்லாதனார்* என்னும் புலவரால் இயற்றப்பட்டதாகும்.
*****
*திரிகடுகம்*
காரம், கார்ப்பு (உறைப்பு) என்று பொருள்படும். கடுக்கும் பொருளாகிய சுக்கு, மிளகு, திப்பிலிகளுள் ஒன்றையோ அல்லது இம்மூன்றையுமோ கடுகம் என்பது உணர்த்தும். சுக்கு, மிளகு, திப்பிலி ஆகிய மூன்றையும் குறிக்கும்போது இது திரிகடுகம் என்று சொல்லப்பெறும். (பிங்கல நிகண்டு, 352)
*****
சுக்கு, மிளகு, திப்பிலி
என்னும் மூலிகைகள் உடலுக்கு நன்மை செய்வது போல் இதிலுள்ள பாடல்கள் ஒவ்வொன்றிலும் கூறப்பட்டுள்ள *மூன்று நீதிகள்* மனிதனின் அறியாமையாகிய நோயைப் போக்கி, வாழ்க்கை செம்மை பெற உதவுமென்ற கருத்தமைந்தமையால் இந்நூல் *திரிகடுகம்* எனப்படுகிறது.
************************
*பள்ளத்தில் மூன்றாம் கடுகம் குறைய விலையைக் கண்டுபிடி (5)*
_பள்ளத்தில்_
= _*மடு* (வில்)_
_மூன்றாம் கடுகம்_
= *திப்பிலி*
_குறைய_
= *திப்பி[லி]* = *திப்பி*
_பள்ளத்தில் மூன்றாம் கடுகம் குறைய_
= _மடு (வில்) திப்பி_
= *ம(திப்பி)டு*
= *மதிப்பிடு*
_விலையைக் கண்டுபிடி_
= *மதிப்பிடு*
*************************
*நல்ல குடும்பப் பண்பு*
கணவன், மனைவி, மக்கள் அடங்கியது குடும்பம். நல்ல குடும்பம் பல்கலைக்கழகம் என்பார் பாரதிதாசன்.
குடும்ப உறுப்பினர்கள் எப்படி இருக்க வேண்டும் என்று *திரிகடுகம்* சொல்கிறது. ‘ஏவா மக்கள் மூவா மருந்து’ என்பது ஆன்றோர் வாக்கு. பெற்றோர் ஏவாமல் தாமாகச் செய்யும் இயல்பு மக்களுக்கு வேண்டும். அவர்கள் என்றும் கெடாத நல்ல மருந்தைப் போன்றவர்கள். ஏவியும் கேளாத மக்கள் பயனற்றவர். இல்லறத்தில் தனக்குரிய அறம் மறந்து மனைவியைப் போற்றாத கணவன் பயனற்றவன். செல்வத்தைப் பெருக்குபவளாக மனைவி இருக்க வேண்டும். வீட்டின் செல்வத்தைத் தேய்க்கின்ற மனைவி பயனற்றவள் என்று குறிப்பிடுகிறார் நல்லாதனார் *(திரி-49)*
தனி மனித நலம் - குடும்ப நலமாய் - சமுதாய நலமாய் விரிகிறது. எனவே, நல்ல சமுதாயம் உருவாக அடிப்படையாய் அமைவது நல்ல குடும்பங்களே. அவை
நலம் உடையதாய் இருக்க வேண்டும் என்ற கருத்தைக் குடும்ப உறுப்பினர் எப்படி இருக்கக் கூடாது என்பதைச் சொல்லி விளக்கும் பாடலைப் பாருங்கள்.
_ஏவாது மாற்றும் இளங்கிளையும் காவாது_
_வைதெள்ளிச் சொல்லும் தலைமகனும் -_ _பொய்தெள்ளி அம்மனை தேய்க்கும் மனையாளும்_ _இம்மூவர் இம்மைக் குறுதியில் லார்_
*(திரி - 49)*
(இளம்கிளை = மக்கள்; தலைமகன் = கணவன்; வைது = ஏசி; எள்ளி = இகழ்ந்து)
*************************
💐🙏🏼💐
*****************************
[6/29, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மதிப்பிடு
[6/29, 07:04] sankara subramaiam: மதிப்பிடு
[6/29, 07:05] Meenakshi: விடை: மதிப்பிடு
[6/29, 07:10] chithanandam: மதிப்பிடு
[6/29, 07:14] Dhayanandan: *மதிப்பிடு*
[6/29, 07:19] மீ.கண்ணண்.: மதிப்பிடு
[6/29, 07:51] sridharan: மதிப்பிடு.
மடு+ திப்பி
[6/29, 07:52] Rohini Ramachandran: மதிப்பீடு
[6/29, 07:53] stat senthil: மதிப்பிடு
[6/29, 08:03] akila sridharan: மதிப்பிடு
[6/29, 08:08] மாலதி: மதிப்பிடு
[6/29, 08:09] siddhan subramanian: மதிப்பிடு (மடு + திப்பி(லி))
[6/29, 08:23] Ramki Krishnan: மதிப்பிடு
[6/29, 08:27] ஆர்.பத்மா: மதிப்பிடு
[
[6/29, 09:42] ஆர். நாராயணன்.: மதிப்பிடு
[6/29, 09:55] joseph amirtharaj: மதிப்பிடு
[6/29, 07:36] nagarajan: *மதிப்பிடு*
[6/29, 12:58] shanthi narayanan: மதிப்பிடு
[
[6/29, 15:00] வானதி: *மதிப்பிடு*
[6/29, 19:18] கு.கனகசபாபதி, மும்பை: மதிப்பிடு
[6/29, 19:24] G Venkataraman: மதிப்பிடு
[6/29, 21:03] prasath venugopal: மதிப்பிடு
[6/29, 21:04] N T Nathan: மதிப்பிடு
[6/29, 22:04] Viji - Kovai: மதிப்பிடு
[6/29, 23:06] Revathi Natraj: மதிப்பிடு
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
ஐங்கரனின் ஐந்தாம் கரத்தில் கரமில்லை என்று போற்று (2)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*ஐங்கரன்*
*பொருள்*
பிள்ளையார், வினாயகர்(விநாயகர்)
*விளக்கம்*
ஐந்து கரங்களைக் (கைகளைக்) கொண்ட உருவம் என்பதால் ஐங்கரன். நான்கு கைகளையும், துதிக்கையும் சேர்த்து ஐந்து கரங்கள்.
************************
*ஐந்து ஐந்து ஐந்து :*
இறைவன் செய்யும் ஐந்தொழில்கள் *_"பஞ்சகிருத்யங்கள்'_* எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்பன. விநாயகர் நான்கு கரங்களுடன், தும்பிக்கை என்னும் ஐந்தாவது கரத்தையும் கொண்டிருக்கிறார். அதனால், *ஐங்கரன்* என்று அழைக்கப்படுகிறார். விநாயகர் தன் நான்கு கரங்களில் அங்குசம், பாசம், எழுத்தாணி, கொழுக்கட்டை ஆகியவையும், ஐந்தாவது கரமாகிய தும்பிக்கையில் அமுத கலசமும் வைத்திருப்பார். எழுத்தாணி உலகை சிருஷ்டி செய்வதையும், கொழுக்கட்டை காத்தல் தொழிலையும், அங்குசம் அழித்தலையும், பாசம் மறைத்தலையும், தும்பிக்கையில் ஏந்தியிருக்கும் அமுதகலசம் அருளையும் காட்டுகின்ற குறியீடுகளாகும்.
************************
_ஐங்கரனின் ஐந்தாம் கரத்தில் கரமில்லை என்று போற்று (2)_
_ஐங்கரனின் ஐந்தாம் கரம்_
= *துதிக்கை*
_ஐந்தாம் கரத்தில் கரமில்லை_
= *துதிக்கை - கை*
= *துதி*
= _போற்று_
*************************
*துதி என்றால் – ஒருவரின் தன்மையை / அவர் நமக்கு செய்தவற்றை சொல்லி போற்றுவது.*
*************************
*மனிதநேயம்*
அண்டை மாநிலம், அண்டை நாடுகள் என அடுத்தடுத்து இருப்பனகூட எல்லைக்கோடு, மண்ணுரிமை முதலான பல்வேறு காரணங்களாலும், தீவிரவாதங்களாலும், நாளும் நவீன ஆயுதம் கொண்டு போரிடும் இக்காலத்திற்கு மனிதநேயம் மிகமிகத் தேவையாகும்.
_போர்களை நிறுத்து_
_புன்னகையை உடுத்து_
_பூமியை நேசி_
_பூக்களை ரசி_
_மனிதரை மதி_
_மண்ணைத் *துதி*_
_இன்றாவது_
என வரும் *வைரமுத்து* வின் கவிதை மனிதநேயத்தை எடுத்துரைக்கின்றது.
*************************
💐🙏🏼💐
*****************************
[
[6/30, 07:00] திரைக்கதம்பம் Ramarao: துதி
[6/30, 07:01] V R Raman: துதி
[6/30, 07:02] A Balasubramanian: துதி
A.Balasubramanian
[6/30, 07:03] Meenakshi: விடை:துதி
[6/30, 07:04] மாலதி: துதி
[6/30, 07:05] பாலூ மீ.: விடை துதி
[6/30, 07:07] sridharan: துதி
[6/30, 07:07] sathish: துதி
[
[6/30, 07:08] Ramki Krishnan: துதி
[6/30, 07:09] thiru subramanian: துதி
[6/30, 07:12] stat senthil: துதி
[6/30, 07:15] akila sridharan: துதி
[6/30, 07:17] மீ.கண்ணண்.: துதி
[6/30, 07:40] Venkat: துதி 🙏🏾
[6/30, 07:42] Rohini Ramachandran: துதி
[6/30, 07:45] கு.கனகசபாபதி, மும்பை: துதி
[6/30, 07:49] A D வேதாந்தம்: விடை= துதி(வேதாந்தம்)
[6/30, 07:55] Bharathi: *துதி*
[6/30, 07:57] Viji - Kovai: துதி
[6/30, 08:12] nagarajan: *துதி*
[6/30, 08:20] Bhanu Sridhar: துதி
[6/30, 08:38] ஆர்.பத்மா: துதி
[6/30, 08:42] siddhan subramanian: துதி (க்கை)
[6/30, 09:31] joseph amirtharaj: துதி
[6/30, 09:36] ஆர். நாராயணன்.: துதி( -க்கை)
[
[6/30, 09:56] G Venkataraman: துதி
[6/30, 09:57] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏துதி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/30, 11:26] வானதி: *துதி*
[6/30, 12:19] shanthi narayanan: துதி
[6/30, 15:43] Dr. Ramakrishna Easwaran: *துதி*
துதி ~க்கை~
[6/30, 19:28] N T Nathan: துதி
[6/30, 19:28] chithanandam: துதி
[6/30, 19:30] V N Krishnan.: துதி
துதிக்கை-கை
[6/30, 20:01] Revathi Natraj: துதி
[6/30, 21:14] sankara subramaiam: துதி
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
நீதிக்கு முன்னேயிருப்பவரைத் தொடர்ந்தவர் வராமல் ஒழித்துவிடு (3)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு?*
ஐம்பெரும் இயற்கை சக்திகளாக நாம் போற்றுவது நிலம், நீர், காற்று, தீ மற்றும் ஆகாயம். இவற்றின் பௌதிக இயல்புகளையும் தாண்டி நமது செயல்கள் மற்றும் உணர்வுகளுடன் ஒப்பிட்டுப் பாடப்படுவது கவி மரபு. இந்த மரபை அடியொற்றிய ஒரு மழைப் பாடலைப் பார்ப்போம்.
சமூகத்தின் அவலங்களை எளிய வார்த்தைகள் மூலம் எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பாடல் எழுதியவர் மருதகாசி. மழையைப் பற்றி அவரின் அழகான உவமேயங்கள் கொண்ட இந்த மழைப் பாடலைப் பாடி நடித்த வசீகரமான குரல் வளம் கொண்டவர் டி.ஆர். மகாலிங்கம்.
******
படம்: ஆடவந்த தெய்வம்
பாடல்:
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே- மழை
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
கஷ்டப்படும் ஏழை சிந்தும் நெற்றி வேர்வை போலே-அவன்
கஞ்சிக்காகக் கலங்கிவிடும் கண்ணீர் துளி போலே
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
முட்டா பயலே மூளை இருக்கா என்று ஏழை மேலே
துட்டு படைச்ச சீமான் அள்ளி கொட்டுற வார்த்தை போலே
கொட்டு கொட்டுனு கொட்டுது பாரு அங்கே
_முழுக்க முழுக்க நனைஞ்ச பிறகு முக்காடு எதற்கு_
_உன் முக்காட்டை *நீக்கு* தலை ஈரத்தைப் போக்கு_
_இருக்க இடம் கொடுத்தா என்னையே நீ தாக்குறே_
மழை-
சொட்டு சொட்டுன்னு சொட்டுது பாரு இங்கே
(www.hindutamil.in)
************************
_நீதிக்கு முன்னேயிருப்பவரைத் தொடர்ந்தவர் வராமல் ஒழித்துவிடு (3)_
_நீதிக்கு முன்னேயிருப்பவர்_
= _first letter in நீதிக்கு_
= *நீ*
_தொடர்ந்தவர்_
= _next letter after நீ_
= *தி*
_வராமல்_
= _indicator to delete தி from நீதிக்கு_
= *நீக்கு*
= _ஒழித்துவிடு_
*************************
*திருநாவுக்கரசர் அருளிய தேவாரம்*
_வானத்தார் போற்றும் மருந்தே போற்றி_
_வந்தென்றன் சிந்தை புகுந்தாய் போற்றி_
_ஊனத்தை *நீக்கு* முடலே போற்றி_
_ஓங்கி அழலாய் நிமிர்ந்தாய் போற்றி_
_தேனத்தை வார்த்த தெளிவே போற்றி_
_தேவர்க்குந் தேவனாய் நின்றாய் போற்றி_
_கானத்தீ யாட லுகந்தாய் போற்றி_
_கயிலை மலையானே போற்றி போற்றி._
தேவர் போற்றும் அமுதமாய், வந்து என் உள்ளம் புகுந்தவனாய், உயிர்களின் குறையைப் போக்கும் அருள் உருவம் உடையவனாய், ஓங்கித் தீப்பிழம்பாய் உயர்ந்தவனாய், தேனை வடித்த தெளிவு போல்பவனாய், தேவர்களுக்கும் தேவனாய், சுடுகாட்டுத் தீயில் கூத்தாடுதலை விரும்பியவனாய் உள்ள கயிலை மலையானே! உனக்கு வணக்கங்கள் பல.
*************************
*வௌவுதல் நீக்கு*
_விளக்கம்_
திருடாதே, மற்றவரின் பொருளுக்கு ஆசைப் படாதே.
**************
அச்சம் தவிர்
நைய்யப் புடை
மானம் போற்று
ரௌத்திரம் பழகு
வெடிப் பர பேசு
நன்று கருது
*வௌவ்வுதல் நீக்கு*
தவத்தினை நிறம் புரி
*பாரதியார்*
*************************
💐🙏🏼💐
*****************************
[7/1, 07:00] திரைக்கதம்பம் Ramarao: நீக்கு
[7/1, 07:02] G Venkataraman: நீக்கு
[
[7/1, 07:02] வானதி: *நீக்கு*
[
[7/1, 07:02] மீ.கண்ணண்.: நீக்கு
[7/1, 07:06] Meenakshi: விடை:நீக்கு
[7/1, 07:07] Bhanu Sridhar: நீக்கு
[7/1, 07:09] stat senthil: நீக்கு
[7/1, 07:11] A Balasubramanian: நீக்கு
A.Balasubramanian
[
[7/1, 07:21] பாலூ மீ.: விடை நீக்கு
[
[7/1, 07:34] A D வேதாந்தம்: விடை=நீக்கு(வேதாந்தம்)
[7/1, 07:46] chithanandam: நீக்கு
[7/1, 07:46] Dhayanandan: *நீக்கு*
[
[7/1, 07:49] sridharan: நீக்கு
[
[7/1, 07:56] nagarajan: *நீக்கு*
[7/1, 07:58] மாலதி: நீக்கு
[
[7/1, 08:05] ஆர்.பத்மா: நீக்கு
[7/1, 08:08] prasath venugopal: நீக்கு
[
[7/1, 08:12] Ramki Krishnan: நீக்கு
[
[7/1, 08:25] கு.கனகசபாபதி, மும்பை: நீக்கு
[
[7/1, 08:36] Dr. Ramakrishna Easwaran: *நீக்கு*
[7/1, 08:46] siddhan subramanian: நீக்கு (நீதிக்கு-தி)
)
[7/1, 08:51] ஆர். நாராயணன்.: நீக்கு
[7/1, 09:38] joseph amirtharaj: நீக்கு
[7/1, 09:55] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏நீக்கு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[7/1, 18:02] sankara subramaiam: நீக்கு
[7/1, 19:40] Viji - Kovai: நீக்கு
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
தூங்காதே தோழி பாதி விருத்தி கலையும் (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*_நினைவில் நிற்கும் பாடல் வரிகள்._*
நாடோடி மன்னன் (1958)
இசை : S.M. சுப்பைய்யா நாயுடு
பாடல் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
குரல் : T.M. சௌந்தரராஜன்
******
*தூங்காதே* தம்பி தூங்காதே
தூங்காதே தம்பி தூங்காதே
நீயும் சோம்பேறி என்ற பெயர் வாங்காதே
நீ தாங்கிய உடையும் ஆயுதமும்
பல சரித்திர கதை சொல்லும் சிறைக் கதவும்
சக்தி இருந்தால் உன்னை கண்டு சிரிக்கும்
சத்திரம் தான் உனக்கு இடம் கொடுக்கும்
*தூங்காதே தம்பி தூங்காதே*
************************
உழைத்து நீ களைத்தபோதும்
சளைத்திடாதே வாழ்வை கண்டு மலைத்திடாதே
உன் வாழ்க்கை உன் கையில்
அதை நீதான் தழைத்திட செய்யவேண்டும்
*விழித்திரு* நாட்கள் உன்னோடு நடைபோடும்
(D'ARAVINT)
************************
_தூங்காதே தோழி பாதி விருத்தி கலையும் (5)_
_தோழி பாதி_
= *(தோ)ழி = ழி*
_கலையும்_
= _anagram indicator for_ *(விருத்தி+ழி)*
= *விழித்திரு*
= _தூங்காதே_
*************************
*விழித்திடு பெண்ணே!விடியலைப் படைத்திடு*
சமுத்திரம் ஒன்றே இலக்கெனக்கொண்ட ஆறுகள் சோர்வது உண்டா? சரித்திரம் படைத்திட புறப்பட்ட பின்னால் தடைகளால் உடைந்திடல் நன்றா? வெளுத்தது எல்லாம் பாலென நம்பிய மனத்துக்கு இது ஒரு பாடம்! நீ குழந்தையல்ல குமரி ஆனாய் இனி *விழித்திரு* பெண்ணே எப்போதும்!
இடையினில் தடை வரும் தடுக்கிடப் பார்த்திடும் தலைவலி உடன் வரும் கடு கடு சொல் வரும் களங்கமும் சேர்ந்திடும் நெருப்பென்று ஆனாய் பெண்ணே நெருப்பினை ஈக்கள் மொய்ப்பது இல்லை சளைக்காமல் நீ தொடு இலக்கினை!
இறைவனின் அருளொடு நல்லோர்கள் துணையொடு புறப்படு இன்றே நீயும் புதுயுகம் படைத்திட வேணும்! இலட்சியப்பாதையினில் இடையினில் வரும் தடை யாவையும் உடைத்திட வேணும்! புது வரலாறு படைத்திட வேணும்.
*_விழித்திடு பெண்ணே! விடியலைப் படைத்திடு_*
(By Thamilthangai)
*************************
💐🙏🏼💐
*****************************
[7/2, 07:03] prasath venugopal: விழித்திரு
[7/2, 07:03] chithanandam: விழித்திரு
[7/2, 07:03] திரைக்கதம்பம் Ramarao: விழித்திரு
[7/2, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏விழித்திரு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[7/2, 07:04] A Balasubramanian: விழித்திரு
A.Balasubramanian
[7/2, 07:05] Meenakshi: விடை:விழித்திரு
[7/2, 07:06] Rohini Ramachandran: விழித்திரு
[
[7/2, 07:06] Bhanu Sridhar: விழித்திரு
[7/2, 07:08] பாலூ மீ.: விழித்திரு.
[7/2, 07:11] G Venkataraman: விழித்திரு
[7/2, 07:14] Dhayanandan: *விழித்திரு*
[7/2, 07:15] ஆர். நாராயணன்.: விழித்திரு
[7/2, 07:22] வானதி: *விழித்திரு*
[7/2, 07:36] stat senthil: விழித்திரு
[
[7/2, 07:37] மீ.கண்ணண்.: விழித்திரு
[
[7/2, 07:50] A D வேதாந்தம்: விடை= விழித்திரு( வேதாந்தம்)
[7/2, 07:54] V R Raman: விழித்திரு
[7/2, 08:01] akila sridharan: விழித்திரு
[7/2, 08:02] nagarajan: *விழித்திரு*
[7/2, 08:06] மாலதி: விழித்திரு
[7/2, 08:13] joseph amirtharaj: விழித்திரு
[7/2, 08:17] siddhan subramanian: விழித்திரு
[7/2, 08:25] Ramki Krishnan: விழித்திரு
[7/2, 08:26] Dr. Ramakrishna Easwaran: *விழித்திரு*
[7/2, 09:16] கு.கனகசபாபதி, மும்பை: விழித்திரு
[7/2, 09:34] ஆர்.பத்மா: விழித்திரு
[
[7/2, 11:41] Viji - Kovai: விழித்திரு
[7/2, 13:11] shanthi narayanan: விழித்திரு
[7/2, 19:34] Usha Chennai: விழித்திரு
[
[7/2, 19:35] V N Krishnan.: விழித்திரு
[7/2, 19:36] sathish: விழித்திரு
[7/2, 19:37] N T Nathan: விழித்திரு
[7/2, 19:44] sankara subramaiam: விழித்திரு
[
[7/2, 20:38] Bharathi: விழித்திரு
[
[7/2, 21:00] Siva: விழித்திரு
[7/2, 21:15] bala: விழித்திரு
[7/3, 06:17] Venkat: விழித்திரு 🙏🏾
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
உரக்கச் சொல்லிக் கூந்தலையும் விடுதலையும் முதலில் பெறலாம் (2)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்*
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் (குமரன்) – பரம்
குன்றம் ஏறி நின்ற குமரா என்று
(கூவி)
பூவிதழ் மலர்ந்தருள் புன்னகை புரிவான்
புண்ணியம் செய்தோர்க்கு கண்ணெதிரில் தெரிவான்
(கூவி)
தேவியர் இருவர் மேவிய குகனே
திங்களை அணிந்த சங்கரன் மகனே
பாவையர் யாவரும் பாடிய வேந்தனே
பொன்மயிலேறிடும் ஷண்முக நாதனே
கூவி அழைத்தால் குரல் கொடுப்பான்
*************************
_உரக்கச் சொல்லிக் கூந்தலையும் விடுதலையும் முதலில் பெறலாம் (2)_
_கூந்தலையும் விடுதலையும் முதலில் பெறலாம்_
= _first letters in கூந்தலையும் விடுதலையும்_
= *கூ+வி*
= *கூவி*
= _உரக்கச் சொல்லி_
*************************
*கூவின பூங்குயில் கூவின கோழி*
கூவின பூங்குயில் கூவின கோழி என்று தொடங்கும் இப்பாடல் திருவாசகத்தில் வைக்கப்பட்டு உள்ள திருப்பள்ளியெழுச்சியின் மூன்றாவது பாடலாகும்.
******
_கூவின பூங்குயில் கூவின கோழி_
_குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்_
_ஓவின தாரகை ஒளிஒளி உதயத்து_
_ஒருப்படுகின்றது விருப்பொடு நமக்குத்_
_தேவ நற்செறி கழல் தாளிணைக் காட்டாய்_
_திருப்பெருந்துறை உறை சிவபெருமானே_
_யாவரும் அறிவரிறாய் எமக்கு எளியாய்_
_எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே_
*(மாணிக்கவாசகர்)*
********
*விளக்கம்*
திருப்பெருந்துறையில் உறைந்துள்ள சிவபெருமானே, காட்டில் வாழும் குயிலும், வீட்டில் வளரும் சேவலும் மற்றும் மற்ற சிறுபறவைகளும் சூரியனின் உதய காலத்தை தங்களின் குரலால் உணர்த்துகின்றன. கோவில்களில் சங்க நாதம் கேட்கிறது.
உதய காலத்து சூரிய ஒளியானது அதிகாலையில் உள்ள நட்சத்திரங்களின் ஒளியை தன்னுள் இணைத்துக் கொள்கிறது.
அதுபோல தேவர்களுக்கு எல்லாம் தேவனாகிய மகாதேவனே, உன்னுடன் அடியவர்களாகிய எங்களை உன்னுடன் இணைத்துக் கொள்வதற்கு ஏதுவாக உன்னுடைய கழல்கள் அணிந்த திருவடிகளை எங்களுக்கு அருள்வாயாக.
தேவர்கள் உள்ளிட்ட மற்றவர்களால் எளிதில் காண்பதற்கு அரியவனே, உன்னுடைய அடியவர்களின் மீது கருணை கொண்டு எளிமையாகக் காட்சி அளிப்பவனே , பள்ளியில் இருந்து எழுந்தருள்வாயாக.
*************************
��������
*****************************
[7/3, 07:01] *மாலதி: கூவி*
[7/3, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கூவி
[7/3, 07:01] A Balasubramanian: கூவி
A.Balasubramanian
[
[7/3, 07:03] Rohini Ramachandran: கூவி
[7/3, 07:04] sathish: கூவி
[7/3, 07:05] V N Krishnan.: கூவி
[
[7/3, 07:08] ஆர். நாராயணன்.: கூவி
[7/3, 07:09] G Venkataraman: கூவி
[7/3, 07:13] Meenakshi: விடை:கூவி
[
[7/3, 07:14] Bhanu Sridhar: கூவி
[
[7/3, 07:15] Venkat: கூவி 🙏🏾
[7/3, 07:23] A D வேதாந்தம்: விடை=கூவி(வேதாந்தம்)
[
[7/3, 07:23] Dr. Ramakrishna Easwaran: கூவி
[7/3, 07:25] மீ.கண்ணண்.: கூவி
[7/3, 07:30] chithanandam: கூவி
[7/3, 07:33] akila sridharan: கூவி
[7/3, 07:39] sridharan: கூவி
[7/3, 07:39] ஆர்.பத்மா: கூவி
[7/3, 07:44] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏கூவி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[7/3, 07:48] Viji - Kovai: கூவி
[7/3, 07:54] nagarajan: *கூவி*
[7/3, 07:57] joseph amirtharaj: கூவி
[7/3, 07:57] Dhayanandan: *கூவி*
[7/3, 08:06] Ramki Krishnan: கூவி
[7/3, 08:06] Ramki Krishnan: கூவி
[7/3, 08:28] stat senthil: கூவி
[
[7/3, 08:35] N T Nathan: கூவி
[7/3, 08:36] prasath venugopal: கூவி
[7/3, 08:51] Bharathi: கூவி
[7/3, 09:18] கு.கனகசபாபதி, மும்பை: கூவி
[7/3, 10:44] siddhan subramanian: கூவி
[7/3, 11:45] வானதி: *கூவி*
[7/3, 11:46] bala: கூவி
[7/3, 12:21] shanthi narayanan: கூவி
[7/3, 12:33] பானுமதி: கூவி
[
[7/3, 14:00] பாலூ மீ.: விடை கூவி
[
[7/3, 19:35] sankara subramaiam: கூவி
[7/3, 22:05] Revathi Natraj: கூவி
***************************