இன்று காலை வெளியான வெடி:
கால் பட்டால் இடையைக் கரம் தலை சீவும் பிரதேசம் (5)
அதற்கான விடை: வட்டாரம் = வ + ட்டா + ரம்
வ = 1/4
ட்டா = பட்டால் இடை
ரம் = தலை சீவிய கரம்
இந்த வெடி உருவாக மறைமுகமான காரணமாக இருந்த சங்கரசுப்ரமணியனுக்கு நன்றி.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
கால் பட்டால் இடையைக் கரம் தலை சீவும் பிரதேசம் (5)
அதற்கான விடை: வட்டாரம் = வ + ட்டா + ரம்
வ = 1/4
ட்டா = பட்டால் இடை
ரம் = தலை சீவிய கரம்
இந்த வெடி உருவாக மறைமுகமான காரணமாக இருந்த சங்கரசுப்ரமணியனுக்கு நன்றி.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
***************************
*நேற்றைய zoom meeting ல் வட்டாரவழக்கின் பிரதிபலிப்போ இன்றைய உதிரிவெடி!*
_அருமையான புதிர்!_
👍🏼👏🏼💐🙏🏼
***************************
*வட்டாரமொழி வழக்குகள்* என்பது ஒரு பொது மொழியிலிருந்து வேறுபட்டு ஒரு வட்டாரத்தில் அல்லது புவியியல் நிலப்பரப்பில் வசிக்கும் மக்களால் பேசப்படும் வழக்குகள் எனலாம். வட்டாரமொழி வழக்குகள் அந்தப் பொது மொழியின் ஒரு பகுதியே தவிர வேறு ஒரு மொழியாக கருதப்படுவதில்லை. பொதுவாக பல்வேறு வட்டாரமொழிகளைக் கொண்டுள்ள ஒரு மொழியினர் பேச்சிலும் எழுத்திலும் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்ளக்கூடியதாகவே இருக்கும். பொது மொழிக்கும் வட்டார மொழிக்கும் வேறுபாடுகள் மிகும் இடத்து ஒரு வட்டார மொழி ஒரு தனி மொழியாக மருவும். தமிழிலிருந்து மலையாளம் இப்படி மருவிய மொழியாகும்.
*************************
_கால் பட்டால் இடையைக் கரம் தலை சீவும் பிரதேசம் (5)_
_கால்_ = *வ*
_பட்டால் இடையை_
= *ட்டா*
_கரம் தலை சீவும்_
= *ரம்*
_பிரதேசம்_
= *வ+ட்டா+ரம்*
= *வட்டாரம்*
***************************
*கொங்கு வட்டார அகராதி*
வந்துட்டோமுங்க, வந்துட்டோமுங்க,
கொங்குத்தமிழோடு வந்துட்டோமுங்க…
குசும்பு புடுச்ச பசங்க நாங்க,
மருவாதெ தொரிஞ்ச மனுசர் நாங்க…
மல்லுவேட்டி கட்டுவோமுங்க,,
மாப்பளை என முறையோடு போசுறோமுங்க…
அறியாத பெண்னை கூட,
ஏங்க அம்மனி, என்னங்க அம்மனி என கூப்பிடுறோமுங்க..
மல்லுக்கட்டும் குழந்தையக் கூட,
ஏன்கண்ணு, என்ன கண்ணு என கொஞ்சுறோமுங்க..
தெரியாத ஆளைக் கூட,
வாங்கண்ண, வணகங்ண்ணா என உபசரிப்போமுங்க…
கூன் விழுந்த பாட்டியையும்,
ஏனுங்க அப்பத்தா, சௌக்கியமா என விசாரிப்போமுங்க…
எங்க ஊரு அம்மணிங்க,
மச்சான்டார், கொலுந்தனார் என முறைவைச்சு பேசுவாங்க..
வட்டலுன்னு சொல்லுவோமுங்க,
அதுல வவுறுறார விருந்தோம்பல் செய்றோமுங்க …
வேசக்காலத்துல உப்புசமுன்னு சொல்றோமுங்க,
எரவாரம் ஏரிபோய் ஏகமாக பேசுறோமுங்க ...
பொறந்தவளபாக்க போனா சீர்கொண்டு போறோமுங்க...
பொறந்தவன் சீர் தந்தான் என ஊர் புரா சொல்லுறோமுங்க …
வாழ்ந்தோமுங்க, வாழ்ந்தோமுங்க
கொங்குத் தமிழோடு வாழறோமுங்க !!!!
உங்கள்
தௌபீஃக்
*************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 14-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
பெண் கண்ணின் திறன் மெய்யைப் பொசுக்கியது (2)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
_பெண் கண்ணின் திறன் மெய்யைப் பொசுக்கியது (2)_
_கண்ணின் திறன்_
= *பார்வை*
_மெய்யைப் பொசுக்கியது_
= *பார்வை* _யில் மெய்யெழுத்தை நீக்க_
= *பா[ர்]வை*
= *பாவை*
= _பெண்_
************************
*பார்வையில் திளைத்த திரைப்பாடல்கள்*
*************************
_பார்வை ஒன்றே போதுமே_
_பல்லாயிரம் சொல் வேண்டுமா_
பேசாத கண்ணும் பேசுமா
பெண் வேண்டுமா பார்வை போதுமா
பார்வை ஒன்றே போதுமே !
(யார் நீ 1966)
*************************
_ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்_
கண் தேடுதே சொர்க்கம்
கை மூடுதே வெட்கம்
பொன் மாலை மயக்கம்
பொன் மாலை மயக்கம்
(அன்பே வா 1966)
************************
_நீ பார்க்கும் பார்வை கண்ணோடு_
நீ சொல்லும் வார்த்தை நெஞ்ஜோடு.
உன்னாலே நானும் முன் போல இல்லை
இதயத்தில் தைத்தாய் இதமாக முள்ளை
தடுமாறி போனேன் கொஞ்சமே.
( திருட்டுப்பயலே 2017)
************************
_தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க_
சொன்ன வார்த்தை
காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ
(மெல்ல திறந்தது கதவு
1986)
************************
*பார்வை... பாவையான கதை!*
_பேராசிரியர் கு.ஞானசம்பந்தன்_
ஒரு பாட்டு எழுதின கவிஞரே வியக்கும் அளவுக்கு அதன் உட்பொருளை ரசிகன், விமர்சகன் *தன் பார்வையில்* பார்த்து மகிழ்வான். அதுதான் உலக வழக்கம்'' என்று சொல்லிவிட்டு,
_"என்ன பார்வை உந்தன் பார்வை, இடை மெலிந்தாள் இந்தப் பாவை''_
எனும், காதலிக்க நேரமில்லை திரைப்படப் பாடலை, நான் கூற,
இந்தப் பாட்டைக் கேட்ட அந்தத் தமிழாசிரியர் கண்ணதாசனுக்கு மாலைபோட்டு, _'கவிஞரையா நாங்களும் எவ்வளவோ இலக்கணங்கள சொல்லித் தர்றோம், ஆனா உங்கள மாதிரி பாட்டுல சொல்லித் தந்தவங்க யாருமில்ல'_ என்றாராம்.
திகைத்துப்போன கவியரசு கண்ணதாசன்,
_"நான் இதுல என்ன இலக்கணம் சொல்லியிருக்கிறேன்?'_ என்று கேட்டாராம்.
_"என்ன பார்வை,உந்தன் பார்வை''_
_இந்த முதல் வரியில் *பார்வை* என்ற சொல்லில் இடையின ர கரம் இருக்கிறது._
_அடுத்தவரியில் இடைமெலிந்தாள் இந்தப்பாவை_ எனும்போது இடையின "ர' கரமாகிய ர கெட்டுப்போனால், அதாவது மெலிந்தாள் _*"பார்வை' - "பாவை' யாக மாறும்* எனும் இலக்கணம் என்னை வியப்பில் ஆழ்த்தியது._
_தோன்றல், திரிதல், கெடுதல் எனும் இலக்கண விதிப்படி நீங்கள் பாடியிருக்கிறீர்கள்''_
என்று அந்தத் தமிழாசிரியர் சொல்ல, கண்ணதாசனே அசந்து போனாராம். உண்மையில் அவர் அப்படி நினைத்து எழுதினாரா என்பது தெரியவில்லை. படைப்பாளியை மீறித் திறனாய்வாளன் சிந்திப்பதுதான் சிந்தனையின் வளர்ச்சி' என்று நான் முடித்தேன்.
**********************
_என்ன பார்வை உன்தன் *பார்வை*_
_இடை மெலிந்தாள் இந்தப் *பாவை*_
_மெல்ல மெல்லப் பக்கம் வந்து_
_தொட்ட சுகம் அம்மம்மா ஆ ஆ_
_என்ன பார்வை உன்தன் பார்வை_
_என்னை மறந்தேன் இந்த வேளை_
_வண்ண வண்ண சேலை தொட்டுக்_
_கண்ட சுகம் அம்மம்மா ஆ ஆ_
(காதலிக்க நேரமில்லை
1964)
*************************
💐🙏🏼💐
*****************************
[6/14, 07:03] திரைக்கதம்பம் Ramarao: பாவை
[6/14, 07:05] மீ.கண்ணண்.: பாவை
[6/14, 07:08] Rohini Ramachandran: பாவை
[6/14, 07:08] sathish: பாவை
[6/14, 07:08] prasath venugopal: பாவை
பார்வை - ர்
[6/14, 07:10] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏பாவை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/14, 07:11] Dr. Ramakrishna Easwaran: *பாவை*
பா ~ர்~ வை
[6/14, 07:12] Ramki Krishnan: *பாவை*
பா(-ர்)வை
[6/14, 07:13] Meenakshi: விடை:பாவை
[6/14, 07:13] A Balasubramanian: பாவை
A.Balasubramanian
[
[6/14, 07:13] A D வேதாந்தம்: விடை= பாவை(வேதாந்தம்)
[
[6/14, 07:15] chithanandam: பாவை
.
[6/14, 07:26] பாலூ மீ.: விடை பா (ர்) வை பாவை
[6/14, 07:43] கு.கனகசபாபதி, மும்பை: பாவை
[6/14, 07:44] Bhanu Sridhar:
[
[6/14, 07:48] Venkat: பாவை🙏🏾
[6/14, 07:53] Dhayanandan: *பாவை*
[
[6/14, 07:53] akila sridharan: பாவை. கண்ணின் திறன் - பார்வை. பார்வை- ர்.
[
[6/14, 08:03] மாலதி: பாவை
[
[6/14, 08:04] stat senthil: பாவை
[6/14, 08:09] nagarajan: *பாவை*
[6/14, 08:17] ஆர்.பத்மா: பாவை
[6/14, 08:20] வானதி: *பா(ர்)வை*
[6/14, 08:25] siddhan subramanian: பாவை (பார்வை - ர்)
[6/14, 08:29] V N Krishnan.: பார்வை-ர்=பாவை
[6/14, 07:19] G Venkataraman: *பாவை*
*ஹைக்கூ புதிர் !*
_பெண் கண்ணின்
திறன் மெய்யைப்
பொசுக்கியது_
*அருமையான சொற்கட்டு*
[6/14, 09:14] ஆர். நாராயணன்.: பாவை
[6/14, 11:51] joseph amirtharaj: பாவை
[6/14, 11:54] shanthi narayanan: பாவை
[6/14, 12:50] sankara subramaiam: பாவை
[6/14, 14:08] N T Nathan: பாவை
[6/14, 21:09] Revathi Natraj: பாவை
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
தண்ணீர் எடுத்துச் செல்ல கங்கை தொடங்குமிடம் நாற்பத்தெட்டு நாட்கள் வை (6)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
காவியை உடுத்தி டாமல்
*கமண்டலம்* எடுத்தி டாமல்
காட்டிடை அலைந்தி டாமல்
கனலிடை நலிந்தி டாமல்
பூவுல கதனைச் சுத்தப்
பொய்யென்றும் புகன்றி டாமல்
புறத்தொரு மதத்தி னோரைப்
புண்படப் பேசி டாமல்
சேவைகளை செய்தாற் போதும் ;
தெய்வத்தைத் தெரிவோம்', என்று
தெளிவுறக் காட்டி னாய்உன்
தினசரி வாழ்க்கை தன்னால் ;
தீவினை இருட்டைப் போக்கிச்
செகமெலாம் விளங்கும் ஞான
தீபமே! ராம கிருஷ்ண
தேவனே! போற்றி போற்றி!
*நாமக்கல் கவிஞர்*
*************************
_தண்ணீர் எடுத்துச் செல்ல கங்கை தொடங்குமிடம் நாற்பத்தெட்டு நாட்கள் வை (6)_
_கங்கை தொடங்குமிடம்_
= _கங்கையின் தொடக்க எழுத்து_
= *க*
_நாற்பத்தெட்டு நாட்கள்_
= *மண்டலம்*
_வை_ = _indicator to place_ *மண்டலம்* _after_ *க*
= *க+மண்டலம்*
= *கமண்டலம்*
= _தண்ணீர் எடுத்துச் செல்ல_
*************************
*கமண்டலம்*
முனிவர்கள் தங்களின் பூசைத் தேவைக்காக நீர் சேமித்து வைத்திருந்த பாத்திரம் *கமண்டலம்* எனப்படும். இது செம்பு உலோகத்தால் குழல் வடிவங்கொண்ட மூக்கினை உடையதாகவும், அதை தூக்கிச் செல்லும் வசதிக்காக கவிந்த அரை கோள வடிவக் கைப்பிடி கொண்டதாகவும் இருக்கும். இதைத்தான் நாம் அறிந்திருக்கிறோம்; பார்த்திருக்கிறோம்.
ஆனால், உலோக உபயோகம் வருவதற்கு முன்பு முனிவர்கள் தங்கள் கமண்டலத்தை புரச மரத்தின் பட்டைகளை உரித்து நீக்கிய மரத்தண்டில் செய்யப்பட்டதை உபயோகித்து வந்திருக்கின்றனர் என்ற விவரத்தை *குறுந்தொகை* 156ஆவது பாடலில் பாண்டியன் ஏனாதி நெடுங்கண்ணனார் பாடி வைத்துள்ளார்.
*_"செம்பூ முருக்கின் நல்நார் களைந்து_*
*_தண்டோடு பிடித்த தாழ் கமண்டலத்து'_*
""சிவந்த பூக்களையுடைய முருக்க மரத்தினது நல்ல பட்டையைக் களைந்து, அதன் தண்டோடு, ஏந்திய தாழ்கின்ற கமண்டலத்தையும்'' என்பது புலியூர் கேசிகன் உரை.
"முருக்கு' என்பதைப் புரசமரம் என்றும் கூறுவர். செம்பில் நீர் சேமித்து வைத்தால் அது கெடாது என்பதும், அதைப் பருகுவதால் உடல்நலம் மேம்படும், உயர் ரத்த அழுத்தம் குறையும் என்பதும் இன்றைய அறிவியல் கண்டுபிடிப்பாகும்.
உலோகப் பயன்பாடு உபயோக காலத்திற்கு முன்பிருந்தே தவசிகள் தம் பூசைக்கு நன்னீர் சேமிப்புக் கமண்டலமாக புரச மரத்தண்டை உபயோகித்துள்ளனர் என்பது குறுந்தொகைப் பாடல் வழி தெரிய வருகிறது.
(By -சி. செல்வராஜ் in Dinamani.com)
*************************
💐🙏🏼💐
*****************************
[6/15, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கமண்டலம்
[6/15, 07:01] A Balasubramanian: கமண்டலம்
A.Balasubramanian
[
[6/15, 07:02] மீ.கண்ணண்.: கமண்டலம்
[6/15, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கமண்டலம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/15, 07:04] Dhayanandan: *கமண்டலம்*
[
[6/15, 07:05] A D வேதாந்தம்: விடை= கமண்டலம்
(வேதாந்தம்)
[6/15, 07:09] பாலூ மீ.: க+மண்டலம் கமண்டலம்
[6/15, 07:11] Meenakshi: விடை: கமண்டலம்
[6/15, 07:15] Rohini Ramachandran: கமண்டலம்
[6/15, 07:23] V N Krishnan.: கமண்டலம்
[6/15, 07:26] Dr. Ramakrishna Easwaran: *கமண்டலம்*
[6/15, 07:33] Bhanu Sridhar: கமண்டலம்
[6/15, 07:34] prasath venugopal: கமண்டலம்
[6/15, 07:38] Usha Chennai: கமண்டலம்
[6/15, 07:43] chithanandam: கமண்டலம்
[6/15, 07:47] Venkat: கமண்டலம் 🙏🏾
[
[6/15, 07:50] Ramki Krishnan: *கமண்டலம்* (க + மண்டலம் = 48 நாட்கள்)
[6/15, 07:56] joseph amirtharaj: கமண்டலம்
[6/15, 08:09] sathish: கமண்டலம்
[6/15, 08:14] G Venkataraman: கமண்டலம்
[6/15, 08:16] Bharathi: கமண்டலம்
[6/15, 08:24] ஆர்.பத்மா: கமண்டலம்
[6/15, 08:31] nagarajan: *கமண்டலம்*
[6/15, 09:10] akila sridharan: கமண்டலம்
[
[6/15, 09:12] மாலதி: கமண்டலம்
[
[6/15, 09:21] ஆர். நாராயணன்.: கமண்டலம்
[6/15, 09:27] N T Nathan: கமண்டலம்
[
[6/15, 10:09] கு.கனகசபாபதி, மும்பை: கமண்டலம்
[6/15, 10:11] வானதி: *கமண்டலம்*
[
[6/15, 12:43] sankara subramaiam: கமண்டலம்
[6/15, 14:25] shanthi narayanan: கமண்டலம்
[
[6/15, 18:16] Viji - Kovai: கமண்டலம்
[6/15, 19:55] பானுமதி: கமண்டலம்
[6/15, 20:15] Revathi Natraj: கமண்டலம்
[
[6/15, 21:48] sridharan: கமண்டலம்
*****************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
வேற்றுருவில் மகான் ரதியோடு சேர்ந்தான் (3)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_வேற்றுருவில் மகான் ரதியோடு சேர்ந்தான் (3)_
_வேற்றுருவில் மகான்_
= _மகான் becomes_ *காமன்*
_ரதியோடு சேர்ந்தான்_
= *காமன்*
************************
*காமன் விழா:* *_தமிழர்கள் கொண்டாடிய காதலர்கள் தினம்_*
காதலர் தினம் என்றதும் இன்று பலருக்குப் பலவித ஒவ்வாமைகள் உண்டாகின்றன. நம் வரலாற்றைக் கொஞ்சம் புரட்டுங்கள், அதுவே ஒவ்வாமைக்கு மருந்து. சங்ககால சமுதாயத்தில் காதல் திருமணமே முறையாகும். இதற்கு, சங்க இலக்கியமான அகநானூற்றில் இடம்பெற்ற ‘காதல்’, ‘கற்பு’ ஆகிய அத்தியாயங்களை ஒரு சான்றாகக் கூறலாம்.
சாதிப் பிரிவுகள் இல்லாததால், இன்றைய மேற்கத்திய சமுதாயம்போல் காதல் திருமணங்கள் நடைபெற்றன. இதே காலத்தில்தான் காமனுக்கும் விழா எடுத்தனர். பங்குனி - சித்திரைக்கு இடையே வரும் பவுர்ணமியிலே இளவேனில் காலத்தில் இவ்விழா தொடங்கும். ஆட்சி செய்யும் மன்னனின் அரசு அறிவிப்பு கேட்டதும் மக்கள் தங்கள் வீட்டைச் சுத்தப்படுத்தி அலங்கரிப்பார்கள். பாட்டு, கூத்து, பட்டிமன்றம் எனத் திருவிழாவுக்கான அனைத்துக் கொண்டாட்டங்களும் தங்குதடையின்றி அரங்கேறும். இதில், பொதுமக்கள் தம்மிடையே எந்த வேறுபாடுகளும் இன்றி ஒன்றாக இணைந்து கொண்டாடினர்.
இருபத்தோராம் நூற்றாண்டிலும் இன்னமும் காமனை மறக்காமல் கொண்டாடுபவர்கள் உள்ளனர். இன்றும் தஞ்சை மாவட்டத்தின் சில கிராமங்களிலும், கொங்குப் பகுதியான சேலம், கோயம்புத்தூரின் கிராமப் பகுதிகளிலும் காமனை எரிக்கிறார்கள். அந்த நெருப்பிலே காமனின் வில்லாகிய கரும்பையும் எறிகிறார்கள். இரு நாட்களுக்குப் பின் காமன் உயிர்த்தெழுந்ததன் அடையாளமாக, இரு ஆண்கள் காமன் - ரதியாக வேடமிட்டு வீதி உலா வருவதுடன் விழா நிறைவடைகிறது!
(எஸ்.சாந்தினிபீ, அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக வரலாற்றுத் துறை உதவிப் பேராசிரியர்.)
***********************
💐🙏🏼💐
*****************************
[6/16, 07:00] திரைக்கதம்பம் Ramarao: காமன்
[6/16, 07:01] மீ.கண்ணண்.: காமன்
[
[6/16, 07:03] Dr. Ramakrishna Easwaran: *காமன்*
[6/16, 07:04] Meenakshi: விடை:காமன்
[
[6/16, 07:05] Rohini Ramachandran: காமன்
[6/16, 07:06] Dhayanandan: *காமன்*
[
[6/16, 07:07] பாலூ மீ.: காமன்.
[6/16, 07:07] N T Nathan: காமன்
[6/16, 07:09] stat senthil: காமன்
[6/16, 07:13] A Balasubramanian: காமன்
A.Balasubramanian
[6/16, 07:20] akila sridharan: காமன்
[6/16, 07:21] prasath venugopal: காமன்
[
[6/16, 07:28] மாலதி: காமன்
[
[6/16, 07:39] chithanandam: காமன்
[6/16, 07:41] ஆர். நாராயணன்.: காமன்
[
[6/16, 07:44] Ramki Krishnan: காமன்
[6/16, 07:52] nagarajan: *காமன்*
[6/16, 07:03] G Venkataraman: காமன்
காமன் (மகான் மாற்றம்)
[6/16, 08:36] siddhan subramanian: காமன்
[6/16, 08:55] கு.கனகசபாபதி, மும்பை: காமன்
[6/16, 09:17] joseph amirtharaj: காமன்
[6/16, 09:33] Revathi Natraj: காமன்
[
[6/16, 09:57] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏காமன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[6/16, 10:10] Viji - Kovai: காமன்
[6/16, 10:10] Bhanu Sridhar: காமன்
[
[6/16, 10:47] வானதி: *காமன்*
[6/16, 11:22] ஆர்.பத்மா: காமன்
[6/16, 13:02] shanthi narayanan: காமன்
[
[6/16, 13:11] A D வேதாந்தம்: விடை= காமன்( வேதாந்தம்)
[6/16, 16:52] Venkat: காமன் 🙏🏾
[
[6/16, 17:46] bala: காமன்
[6/16, 18:01] Usha Chennai: காமன்
[6/16, 19:41] sathish: நன்றி ஐயா!
👏🏻👏🏻👏🏻👏🏻
[6/16, 19:47] sathish: காமன்
[
[6/16, 20:14] sankara subramaiam: காமன்
[6/16, 21:01] V R Raman: காமன்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
ஈயத்தைப் பார்த்து இளிப்பதில் பாதி கட்டு (2)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*East meets West* 🙂
_Tamil proverb with english equivalent_
*ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை*
*The pot called the kettle black*
************************
*_ஈயம் பூசுதல்_*
பித்தளைப் பாத்திரத்தில் புளி முதலியவற்றால் ஆகும் இரசாயன மாற்றத்தைத் தடுக்க அவற்றின் உட்பகுதியில் தகரத்தை (Tin) உருக்கித் தடவுதல், *ஈயம் பூசுதல் அல்லது கலாய் பூசுதல்* எனப்படும்.
ஆனால் நாம் ஈயம் பூசுதல் என்று குறிப்பிடுவது *தகரம்* (Tin) என்ற உலோகப் பூச்சைத் தான். ஈயம் கொடிய விஷமுள்ளது. எனவே இவ்வுலோகத்தை செம்பு, பித்தளை மற்றும் வெண்கலப் பாத்திரங்களில் களிம்பு படிவதைத் தடுப்பதற்காக பூச இயலாது. மாற்றாக தகரம் உணவுப் பொருட்களைப் பாதுகாக்கும் குணநலனுடையது. எனவேதான் பழம்,
ஈரட்டி (பிஸ்கட்), பழரசம் போன்ற உணவுப் பொருட்கள் தகரத்தால் செய்த டப்பாக்களில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. எனினும் தகரத்தில் குறைந்த அளவு ஈயம் கலக்கப்படுவதுண்டாம்.
************************ *தளை* , பெயர்ச்சொல்.
*கட்டு*
கயிறு
விலங்கு
பாசம்
மலர் முறுக்கு
சிறை
தொடர்பு
காற்சிலம்பு
வயல்
வரம்பு
யாப்புறுப்பு
எட்டனுள் ஒன்றுl
*************************
_ஈயத்தைப் பார்த்து இளிப்பதில் பாதி கட்டு (2)_
_ஈயத்தைப் பார்த்து இளிப்பது_
= *பித்தளை*
_இளிப்பதில் பாதி_
= *பித்/தளை*
= *தளை*
= _கட்டு_
*************************
*தளை* *(யாப்பிலக்கணம்)*
*'தளைதல்’* என்பது தொழிற்பெயர். இதன் முதனிலை அல்லது பகுதி *`தளை’* ஆகும். இதன் பொருள் கட்டுதல், பிணைத்தல், யாத்தல் என்பனவாம்
செய்யுள்களில் அருகருகே வரும் சீர்களுக்கு இடையேயான தொடர்பு *தளை* எனப்படுகின்றது. தளை அமைவதற்கு இரண்டு சீர்கள் வேண்டும். செய்யுளில் முதலில் வரும் சீர் நிலைச்சீர் எனப்படுகின்றது. அதை அடுத்து வரும் சீர் வருஞ்சீர் என அழைக்கப்படுகின்றது.
*************************
💐🙏🏼💐
*****************************
[6/17, 07:04] திரைக்கதம்பம் Ramarao: தளை
[6/17, 07:04] Usha Chennai: தளை
[6/17, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏தளை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/17, 07:05] Bhanu Sridhar: பிளை
[6/17, 07:06] Meenakshi: விடை:தளை
[6/17, 07:06] மீ.கண்ணண்.: தளை
[
[6/17, 07:06] stat senthil: தளை
[
[6/17, 07:07] Viji - Kovai: தளை
பாதி பித்தளை
[
[6/17, 07:09] ஆர்.பத்மா: தளை
[6/17, 07:10] Dr. Ramakrishna Easwaran: *தளை*
~பித்~ தளை
[
[6/17, 07:11] Rohini Ramachandran: தளை
[6/17, 07:20] பாலூ மீ.: பித்தளை விடை தளை
[6/17, 07:29] prasath venugopal: தளை
[
[6/17, 07:34] A Balasubramanian: பித்தளை
A.Balasubramanian
[6/17, 07:36] Dhayanandan: *தளை*
[6/17, 07:43] வானதி: (பித்.) *தளை*
[
[6/17, 07:45] Ramki Krishnan: தளை
[6/17, 07:46] chithanandam: தளை
[6/17, 07:50] கு.கனகசபாபதி, மும்பை: தளை
[
[6/17, 07:51] nagarajan: *தளை*
[6/17, 07:53] Venkat: தளை🙏🏾
[6/17, 07:57] sathish: தளை
[6/17, 08:05] மாலதி: தளை
[
[6/17, 08:14] A D வேதாந்தம்: விடை= தளை(வேதாந்தம்)
[
[6/17, 08:44] V N Krishnan.: தளை
[6/17, 08:50] siddhan subramanian: தளை (பித்)தளை
[6/17, 09:53] Revathi Natraj: தளை
[6/17, 10:24] G Venkataraman: தளை
[6/17, 11:20] joseph amirtharaj: தளை
[6/17, 12:07] shanthi narayanan: தளை
[6/17, 17:22] sankara subramaiam: தளை
[6/17, 18:30] bala: தளை
[6/17, 19:15] N T Nathan: தளை
[6/17, 19:24] பானுமதி: தளை
[
[6/17, 19:29] Bharathi: தளை
[6/17, 20:16] akila sridharan: தளை.
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
சொத்து வைத்துள்ளவரிடையே துணியை இப்படி உடுத்திக் கொள்வதுதான் சரி (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
எதையும் தாங்கும் மனவலிமை ஒன்று உனக்குள் இருந்தால் தோல்விகளை துவைத்து காயப்போட்டு விடலாம்.
(By Jano )
************************
உடைகளை
துவைத்துக் காயப் போட்டு
உள்ளத்தை ஏன்
அழுக்கில்
ஊறப் போடுகிறாய் ?
(சேவியர்)
************************
சொத்து வைத்துள்ளவரிடையே துணியை இப்படி உடுத்திக் கொள்வதுதான் சரி (4)
சொத்து வைத்துள்ளவரிடையே
= (சொத்து வைத்துள்ளவர்) இடையே
= சொத்[து வைத்து]ள்ளவர்
= துவைத்து
= துணியை இப்படி உடுத்திக் கொள்வதுதான் சரி
*************************
கவிஞர் தேவதச்சனின் இயற்பெயர் ஆறுமுகம். தூத்துக்குடி மாவட்டத்தின் கோயில்பட்டியை சேர்ந்தவர். எழுபதுகளில் இருந்து கவிதை எழுத துவங்கிய தேவதச்சன் இன்றும் ஒரு படைப்பாளியாக உறையில் இருந்து உருவப்பட்ட பளபளப்பான வாளைப் போல ஜொலிக்கிறார்.
*தேவதச்சனின்* இந்த கவிதை வெகுபிரசித்தம்.
*”துணி துவைத்து''*
****
துணி துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுந்தது குருவிகள் போடுகிற சப்தம்
தொடர்ந்து துவைத்துக் கொண்டிருந்தேன்
காதில் விழுகிறது குருவிகள் போய்விட்ட நிசப்தம்
அடுத்த துணி எடுத்தேன்
காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற
குருவிகள் சப்தம்.
*****
சப்தங்கள் நம் மனதுக்குள் இருக்கிறதா வெளியே இருக்கிறதா? “முடியல” எனும் சொல்லைக் கேட்கும் போது வடிவேலுவின் குரல் உடனே நம் காதில் ஒலிப்பது ஏன்? தேவதச்சன் இது போல் நம் மனம் உருவாக்கும் பலவித சித்திரங்கள், ஒலிகள் பற்றி நுணுக்கமாய், மென்மையாய், எளிய அங்கதத்துடன் எழுதுகிறார்.
*************************
*****************************
[6/18, 07:01] திரைக்கதம்பம் Ramarao: துவைத்து
[6/18, 07:02] N T Nathan: துவைத்து
[6/18, 07:04] stat senthil: துவைத்து
[6/18, 07:04] மீ.கண்ணண்.: துவைத்து
[6/18, 07:04] A Balasubramanian: துவைத்து
A.Balasubramanian
[6/18, 07:05] Venkat: துவைத்து 🙏🏾
[6/18, 07:06] Dhayanandan: *துவைத்து*
[
[6/18, 07:07] பாலூ மீ.: துவைத்து
[6/18, 07:07] Dr. Ramakrishna Easwaran: *துவைத்து*
[
[6/18, 07:08] chithanandam: துவைத்து
[6/18, 07:13] akila sridharan: துவைத்து
[6/18, 07:14] Meenakshi: விடை:துவைத்து
[6/18, 07:17] sridharan: துவைத்து
[
[6/18, 07:24] prasath venugopal: துவைத்து
[6/18, 07:31] Bhanu Sridhar: துவைத்து
[
[6/18, 07:41] மாலதி: துவைத்து
[
[6/18, 07:42] Bharathi: துவைத்து
[
[6/18, 07:44] Rohini Ramachandran: துவைத்து
[
[6/18, 07:46] ஆர். நாராயணன்.: துவைத்து
[6/18, 07:49] nagarajan: *துவைத்து*
[6/18, 08:14] G Venkataraman: துவைத்து
[6/18, 08:26] Ramki Krishnan: துவைத்து
[6/18, 08:28] siddhan subramanian: துவைத்து
[6/18, 09:53] Usha Chennai: துவைத்து
[6/18, 10:41] Revathi Natraj: துவைத்து
[6/18, 11:51] Viji - Kovai: துவைத்து
[6/18, 11:58] joseph amirtharaj: துவைத்து
[6/18, 12:10] வானதி: *துவைத்து*
[6/18, 12:38] shanthi narayanan: துவைத்து
[6/18, 18:38] bala: துவைத்து
[6/18, 18:52] கு.கனகசபாபதி, மும்பை: துவைத்து
[6/18, 22:27] sankara subramaiam: துவைத்து
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
மெய்யில்லாமல் செல்ல ஒரு பாதை கையிருப்பைக் குறைக்கச் சொல் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*முரடன்*
கரடுமுரடாக வளர்ந்துகிடக்கும் காடு அவன்,
அவனை செப்பனிடவேண்டுமானால்,
கல்லும் முள்ளும் காயப்படுத்தவே செய்யும்,
கடந்துபோகும் துணிவும் பொறுமையும் இருந்தால்,
கண்டிப்பாய் நீ கடவுளாக்கப்படுவாய்!
மனிதனாகப்போகும் அவனால்!!
_*செலவழி* கொஞ்சம் அன்பு பாசத்தை,_
_நாகரீகம் தெரியா மிருக மனதுகளிடத்தும்..........._
(கண்ணன்)
************************
எளிய நடையில்,எளிய சொற்களில் தான் சொல்ல வரும் கருத்தை பாமரனுக்கு கூட புரியும் அளவு பாட்டு எழுதுபவர் கவிஞர் வாலி!
👇
_நல்ல நூல் வாங்க நாலு காசு *செலவழி*_
_அது காட்டும்_ _நல்லநிலைக்கு நீ *செல "வழி* "_
************************
_மெய்யில்லாமல் செல்ல ஒரு பாதை கையிருப்பைக் குறைக்கச் சொல் (4)_
_மெய்யில்லாமல் செல்ல_
= _செல்ல minus ல்(மெய்யெழுத்து)_
= *செல*
_ஒரு பாதை_ = *வழி*
_கையிருப்பைக் குறைக்கச் சொல்_
= *செலவழி*
*************************
*தண்ணீர் என்னும் உயிர் நீர்*
நம்மை காக்க
நாம் காக்க வேண்டியது தண்ணீர்
பணத்தை தண்ணீராக *செலவழி* என்று
சிலேடையாக சொல்ல முடியாது இன்று
தண்ணீரை பணம் போல் சிக்கனமாக *செலவழி*
என்னும் நிலைமைதான் உலகெங்கும்
தண்ணீர் இல்லாமல் மக்கள் படும் அவதிகளை
இருண்ட கண்டம் கண்டு புரிந்து கொள்வோம்
By Sutha
*************************
*_நேற்றை தாரை வார்த்தாய்!_*
*_நாளை எதிர்நோக்குகின்றாய்!_*
*_இன்றே உனக்கு சொந்தம்!_*
*_இனிமையாய் செலவழி தோழா!_*
(நச்வரி நாலுவரி)
*************************
💐🙏🏼💐
*****************************
[6/19, 07:06] திரைக்கதம்பம் Ramarao: செலவழி
[6/19, 07:07] மீ.கண்ணண்.: செலவழி
[6/19, 07:07] Meenakshi: விடை:செலவழி
[6/19, 07:09] பாலூ மீ.: செலவழி.
[6/19, 07:10] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏செலவழி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/19, 07:10] A D வேதாந்தம்: விடை= செலவழி( வேதாந்தம்)
[6/19, 07:16] கு.கனகசபாபதி, மும்பை: செலவழி
[6/19, 07:16] V N Krishnan.: செலவழி
(கையிருப்பை குறைக்க)
[6/19, 07:18] V R Raman: செலவழி
[
[6/19, 07:22] Dhayanandan: *செலவழி*
[
[6/19, 07:23] Dr. Ramakrishna Easwaran: *செலவழி*
[6/19, 07:24] sridharan: செலவழி
[6/19, 07:25] sathish: செலவழி!
[
[6/19, 07:25] akila sridharan: செலவழி
[6/19, 07:27] Bharathi: செலவழி
[6/19, 07:30] ஆர். நாராயணன்.: செலவழி
[6/19, 07:35] Rohini Ramachandran: செலவழி
[6/19, 07:35] மாலதி: செலவழி
[6/19, 07:39] ஆர்.பத்மா: செலவழி
[6/19, 07:44] G Venkataraman: செலவழி
Good one Sir 👍🌻
[6/19, 07:45] chithanandam: செலவழி
[
[6/19, 07:46] Bhanu Sridhar: செலவழி
[
[6/19, 08:06] nagarajan: *செலவழி*
[6/19, 08:16] Ramki Krishnan: செலவழி
[6/19, 08:27] sankara subramaiam: செலவழி
[6/19, 08:28] siddhan subramanian: செலவழி செ(ல்)ல + வழி
[6/19, 08:34] prasath venugopal: செலவழி
[6/19, 10:20] joseph amirtharaj: செலவழி
[6/19, 11:05] bala: செலவழி
[6/19, 12:15] shanthi narayanan: செலவழி
[6/19, 12:22] N T Nathan: செலவழி
[
[6/19, 18:47] வானதி: *செலவழி*
[6/19, 19:27] Venkat: செலவழி 🙏🏾
[6/19, 19:48] Revathi Natraj: செலவழி
[6/19, 20:06] A Balasubramanian: செலவழி
A.Balasubramanian
*****************************