Skip to main content

விடை 4143

இன்று காலை வெளியான வெடி:
ஒரு ஸ்வரம் குறைந்த கடம் குறையுடன் உருட்டி அடக்கமானவர் (5)
அதற்கான விடை: நிறைகுடம் = நி + குறை + டம்
நி = ஒரு ஸ்வரம்
றைகு = குறை (உருட்டி )
டம் = குறைந்த கடம்
தன்னடக்கத்துடன் இருப்பவர் நிறைகுடம் (அது தளும்பாது)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*****************
*உதிரிவெடி 4143* (ஜூலை 4, 2021) 
************************
*_நினைவில் நிற்கும் பாடல் வரிகள்._*

ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி
ஆயிரம் இருக்குது சுபதினம்
அடுத்தவர் நலத்தை நினைப்பவர் தமக்கு
ஆயுள் முழுவதும் சுபதினம் (ஆண்டுக்கு)

*நிறைகுடம்* போல் ஒரு திரைப்படம் வந்தால்
ரசிகனுக்கதுதான் சுபதினம்
உழுதுண்டு வாழும் மக்களுக்கு எல்லாம்
அறுவடை நாளே சுபதினம்
(ஆண்டுக்கு)

(சுபதினம்:1969)
*************************
_ஒரு ஸ்வரம் குறைந்த கடம் குறையுடன் உருட்டி அடக்கமானவர் (5)_ 

_ஒரு ஸ்வரம்_
= *நி*
_குறைந்த கடம்_
= *[க]டம் = டம்*

_குறையுடன் உருட்டி_
= _anagram of_ *(நி+குறை+ டம்)*
= *நிறைகுடம்*

= _அடக்கமானவர்_
*************************
*நிறைகுடத்தில் உள்ள நீர் தளும்பாது*
*********
_கற்று அறிந்தார் கண்ட அடக்கம் அறியாதார்_

_பொச்சாந்து தம்மைப் புகழ்ந்துரைப்பார்; - தெற்ற_

_அறைகல் அருவி அணிமலை நாட!_

_நிறைகுடம் நீர்தளும்பல் இல்._

*_பழமொழி நானூறு_*
**************
இதன் பொருள் ---

 அறைகல் அருவி அணிமலை நாட --- பாறைக் கற்களினின்றும் இழிகின்ற அருவிகளை (மாலையாக) அணிந்த மலைநாட்டை உடையவனே!, 

நிறைகுடம் நீர் தளும்பல் இல் --- நீர் நிறைந்த குடம் ஆரவாரித் தலைதல் இல்லை,

(அதுபோல) கற்று அறிந்தார் கண்ட அடக்கம் --- நூல்களைக் கற்று அவைகளின் உண்மைகளை அறிந்தவர்கள் தமது வாழ்வில் அமைத்துக் கண்டனவே அடக்கத்திற்குரிய செயல்களாம்.

அறியாதார் --- கற்றதோடு அமைந்து நூல் உண்மையையும் அநுபவ உண்மையையும் அறியாதார்,

பொச்சாந்து தம்மைத் தெற்றப் புகழ்ந்து உரைப்பர் --- மறந்து தங்களைத் தெளிவாக வாயாரப் புகழ்ந்து பேசுவர்
*********
கற்றறந்தார் கண்டவையெல்லாம் அடக்கம் ஒன்றுதான். 
கற்றறியாதவர் மறதியிலும் தம்மைத் தாமே புகழ்ந்துகொள்வர். 
தெளிவாகப் பாறையில் முழக்கத்துடன் நீர் கொட்டும் அருவியை உடைய நாட்டு வேந்தனே!
நிறை குடத்தில் உள்ள நீர் தளும்பாது. சான்றோரும் அப்படித்தான். 

_முன்றுறை அரையனார்'இயற்றிய பழமொழி_
(பழமொழி நானூறு)
பழமைப் பேச்சு 
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 05-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
பொழுதுக்கு மாறும் அரசியல் கட்சிகளின் அமைப்பு (5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*****************
*இன்றைய உதிரிவெடி!*( 05-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
_நம்மூரை பொறுத்தவரை……._
_பொதுவில் பேச_ _இயலாததை_ _பேச…. *பொதுக்குழு* ._

_பொதுவில் செய்யக் கூடாததை செய்ய *செயற்குழு* ._
😂😂
************************
_பொழுதுக்கு மாறும் அரசியல் கட்சிகளின் அமைப்பு (5)_

_மாறும்_ = _anagram indicator for பொழுதுக்கு_
= *பொதுக்குழு*

= _அரசியல் கட்சிகளின் அமைப்பு_
*************************
*பொதுக்குழு என்றால் என்ன?*

பொதுக்குழுவை ஆங்கிலத்தில் ஜெனரல் பாடி (General Body), என்பார்கள்.

ஒரு அமைப்பின் அல்லது சங்கத்தின் பொதுக்குழுவில் எல்லா நிரந்தர உறுப்பினர்களும் அடக்கம். அவர்களுக்கு ஓட்டு உரிமை உண்டு.

எல்லா உறுப்பினர்களும் முதல் கூட்டத்தில் தலைவர், செயலர், காசாளர், செயற்குழு உறுப்பினர்கள் என்று யாவரையும் தேர்ந்தெடுப்பார்கள்.

*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/5, 06:59] Meenakshi: விடை:பொதுக்குழு

[7/5, 07:03] திரைக்கதம்பம் Ramarao: பொதுக்குழு

[7/5, 07:03] Dr. Ramakrishna Easwaran: பொதுக்குழு

[7/5, 07:03] sankara subramaiam: பொதுக்குழு
[
[7/5, 07:05] stat senthil: பொதுக்குழு

[7/5, 07:05] A Balasubramanian: பொதுக்குழு
A.Balasubramanian

[7/5, 07:07] மீ.கண்ணண்.: பொதுக்குழு

[7/5, 07:07] பாலூ மீ.: விடை பொதுக்குழு

[7/5, 07:11] மாலதி: பொதுக்குழு

[7/5, 07:18] Venkat: பொதுக்குழு 🙏🏾

[7/5, 07:16] Bhanu Sridhar: பொதுக்குழு
onriyam pothukuzhu ellam ippo romba prabalam..

[7/5, 07:19] chithanandam: பொதுக்குழு

[7/5, 07:23] prasath venugopal: பொதுக்குழு

[7/5, 07:26] ஆர். நாராயணன்.: பொதுக்குழு

[7/5, 07:55] nagarajan: *பொதுக்குழு*

[7/5, 08:02] கு.கனகசபாபதி, மும்பை: பொதுக்குழு
[
[7/5, 09:01] joseph amirtharaj: பொதுக்குழு

[7/5, 09:07] sridharan: பொதுக்குழு

[7/5, 09:11] Ramki Krishnan: பொதுக்குழு

[7/5, 09:13] G Venkataraman: பொதுக்குழு.
ஆகா! சிறப்பு. புதிரில் கட்சித் தோலை உரித்து விட்டீர்கள்; கட்சி மாறுவது ஒவ்வொரு வேளையும் நடக்கிறது...

[7/5, 10:49] ஆர்.பத்மா: பொதுக்குழு
[
[7/5, 13:06] வானதி: *பொதுக்குழு*

[7/5, 13:08] Rohini Ramachandran: பொதுக்குழு

[7/5, 19:42] N T Nathan: பொதுக்குழு

[7/5, 19:54] Revathi Natraj: பொதுக்குழு

[7/5, 20:21] Viji - Kovai: காட்சிகள்
***************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 06-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அருள்மிகு தியானகுருவிடம் தேவைக்கதிகமாக இருப்பது (5)
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 06-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*காதல் கவிதைகள்*
*செய்யத் தேவையான பொருட்கள்:*

ஒன்றிரண்டு இதயம்
மூன்று நான்கு வேதனை

ஒரு சிட்டிகை விழிகள்
ஒரு தேக்கரண்டி அழகு
ஒரு தேக்கரண்டி உயிர்

_உளறல் - *தேவைக்கதிகமான* அளவு_

இது இருந்தால் போதும்.
சுவையான
காதல் கவிதைகள் தயார்

அவ்வளவு எளிது
இந்தக் காதல் கவிதைக்ள்.
நீங்களும் ஒருமுறை முயற்சி
செஞ்சு பாருங்க..

(Yarl.com)
************************
_அருள்மிகு தியானகுருவிடம் தேவைக்கதிகமாக இருப்பது (5)_

_அருள்மிகு தியானகுருவிடம் இருப்பது_ = அருள்[மிகுதியான]குரு
= *மிகுதியான*

= _தேவைக்கதிகமாக இருப்பது_
*************************
_விலங்குகள்_ 
_*தேவைக்கதிகமாக* எதையும் எடுப்பதில்லை..._  _*தேவைக்கதிகமாக*_ _எடுக்காமல்  மனிதனில்லை.!_ 

பாசத்தில் கூட 
விலங்குகளை 
மனிதன் 
மிஞ்ச முடிவதில்லை.! 

விலங்குகளின் 
செய்கைகள் எல்லாம் 
மனிதனின் 
படிப்பினைக்கே..! 

மனிதன் 
விலங்கை பார்த்து 
விலங்கு என்கிறான் 
விளங்காமல்.... 

விலங்குகளோ 
மனிதனைப் பார்த்து 
விலங்கென்று சொல்லுமோ..? 
விளங்கி.... 

(அஹமது அலி)
*************************
_அதிகமான அன்பு வேண்டாம்_ 
_*மிகுதியான* புரிதல் போதும்.._ 
_அக்கறை கூட வேண்டாம்_ 
_புறக்கணிப்பை புறந்தள்ளினால் போதும்.._ 
_உங்களுக்கு என்ன பிடிக்கும்_ 
_என்பதை விட என்னவெல்லாம்_ 
_பிடிக்காது என்பதை பகிர்ந்து_ 
_கொள்ளுங்கள்.._ 
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/6, 07:01] Bhanu Sridhar: மிகுதியான
[
[7/6, 07:02] chithanandam: மிகுதியான

[7/6, 07:03] Dr. Ramakrishna Easwaran: *மிகுதியான*

[7/6, 07:03] Rohini Ramachandran: மிகுதியான

[7/6, 07:03] Meenakshi: விடை:மிகுதியான

[7/6, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏மிகுதியான🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[7/6, 07:06] பாலூ மீ.: விடை மிகுதியான

[7/6, 07:06] A Balasubramanian: மிகுதியான
A.Balasubramanian

[7/6, 07:11] Dhayanandan: *மிகுதியான*

[7/6, 07:12] மாலதி: மிகுதியான

[7/6, 07:17] மீ.கண்ணண்.: மிகுதியான

[7/6, 07:18] V R Raman: மிகுதியான

[7/6, 07:18] stat senthil: மிகுதியான

[7/6, 07:19] G Venkataraman: மிகுதியான

[7/6, 07:27] prasath venugopal: மிகுதியான

[7/6, 07:40] sridharan: மிகுதியான
[
[7/6, 07:41] A D வேதாந்தம்: விடை=மிகுதியான
(வேதாந்தம்)

[7/6, 07:44] Viji - Kovai: மிகுதியான
[
[7/6, 07:53] nagarajan: *மிகுதியான*

[7/6, 08:26] Bharathi: மிகுதியான
[
[7/6, 08:30] ஆர்.பத்மா: மிகுதியான

[7/6, 08:34] Ramki Krishnan: மிகுதியாக

[7/6, 08:37] ஆர். நாராயணன்.: மிகுதியான

[[7/6, 08:37] siddhan subramanian: மிகுதியான

[7/6, 08:41] கு.கனகசபாபதி, மும்பை: மகுதியான

[7/6, 08:43] akila sridharan: மிகுதியான
[
[7/6, 09:33] வானதி: *மிகுதியான*

[7/6, 10:53] joseph amirtharaj: மிகுதியான

[7/6, 11:53] N T Nathan: மிகுதியான

[7/6, 11:53] shanthi narayanan: மிகுதியான

[7/6, 15:44] * BALAGOPAL* *மீகுததியான.*

[7/6, 16:38] Venkat: மிகுதியான 🙏🏾
[
[7/6, 20:19] Revathi Natraj: மிகுதியான

[7/6, 20:38] sathish: மிகுதியான

[7/6, 22:37] sankara subramaiam: மிகுதியான

***************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 07-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

முடிவான விடை (3)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*****************
*இன்றைய உதிரிவெடி!*( 07-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*முடிவைக் குறித்த பிற சொற்கள்…*
அந்தம், கோடி, அற்றம், எல்லை, முற்று, திகை, *தீர்வு* ,
கடை, இறுதி, அறுதி, நிறைவு, ஈறு,கடைசி.
************************
*முடிவுகளை சிந்தித்து எடு!*

அவரவர் எடுக்கும் முடிவுகளே,
அவர் வாழ்வையும் அழிவையும்
தீர்மானிக்கின்றன.

– கவிதை குழல்
************************
_நான் எடுக்கும் முடிவு சரியா என்று எனக்கு தெரியாது ஆனால் எடுத்த முடிவை சரியாக்குவேன் -_

*மாவீரன் அலெக்ஸ்சாண்டர்*
************************
*முடிந்துபோன பாதை...*

காலத்தின் கிறுக்கல்கள்
வாழ்வின் தேடல்கள்
தவிர்க்கமுடியா அழிவுகள்
மறக்கமுடியா நினைவுகள்
பிரியமுடியா சொந்தங்கள்
பிரிக்கமுடியா சொத்துக்கள்
சிதைந்துபோன இதயங்கள்
தொலைந்துபோன காதல்கள்
எல்லாமே ஒன்றாய் சங்கமித்தது
முடிந்துபோன பாதையாய்...

ப்ரியா கனடா
************************
*நீயே என் முடிவு*

நான் எதில் தொடங்கினேன் என தெரியவில்லை!!! ஆனால் நீயே என் *முடிவு* !!! எங்கிருந்தாலும் என்னை ஈர்த்திழுக்கும் அந்த வசீகரம்!!! உன் வண்ணத்தால் என் எண்ணத்தை சிதறச் செய்கிறாயே!!!
************************
_முடிவான விடை (3)_

_முடிவான விடை_
= _முடிவு ஆன விடை_

_முடிவு_ = *தீர்வு*
_விடை_ = *தீர்வு*
[Double definition ]
*************************
*தீவிரமான தேடல்களில்தான் தீர்வுகள் கிடைக்கிறது...!*
*************************
*தீர்வு*

எல்லா பிரச்சனைகளுக்கும் மூன்று தீர்வுகள் உள்ளன.

1. ஏற்றுக் கொள்வது
2. மாற்றிக் கொள்வது.
3. விட்டு விடுவது

ஏற்றுக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்களை மாற்றிக் கொள்ளுங்கள், மாற்ற இயலாதவற்றை விட்டுத் தள்ளுங்கள்.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/7, 07:00] sankara subramaiam: தீர்வு

[7/7, 07:01] திரைக்கதம்பம் Ramarao: தீர்வு

[7/7, 07:11] chithanandam: தீர்வு

[7/7, 07:12] akila sridharan: தீர்வு

[7/7, 07:15] பாலூ மீ.: விடை தீர்வு

[7/7, 07:22] மீ.கண்ணண்.: தீர்வு
[
[7/7, 07:23] வானதி: *தீர்வு*

[7/7, 07:24] Dr. Ramakrishna Easwaran: *தீர்வு*

[7/7, 07:25] Meenakshi: விடை:தீர்வு
[
[7/7, 07:29] மாலதி: தீர்வு
[[
[7/7, 07:41] prasath venugopal: தீர்வு

[7/7, 08:02] nagarajan: *தீர்வு*

[7/7, 08:34] ஆர். நாராயணன்.: தீர்வு

[7/7, 08:52] siddhan subramanian: தீர்வு

[7/7, 09:11] Revathi Natraj: தீர்வு
[
[7/7, 10:20] கு.கனகசபாபதி, மும்பை: தீர்வு
[
[7/7, 10:48] A D வேதாந்தம்: விடை=முடிவு(வேதாந்தம்)

[7/7, 10:58] G Venkataraman: அறுதி

[7/7, 11:04] Viji - Kovai: அறுதி

[7/7, 16:48] ஆர்.பத்மா: தீர்வு

[7/7, 17:50] Venkat: தீர்வு 🙏🏾

[7/7, 22:31] N T Nathan: தீர்வு



***************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 08-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

தலை போகும்படி விவாதம் செய்து ஏச்சுதான் கிடைக்கும் (3)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 08-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*விவாதம் செய்வது எப்படி?*

எப்படி வேண்டுமானாலும் விவாதிக்கலாம் ஆனால் ஒரு விவாதத்தில் வெற்றி பெறுவது சுலபமில்லை. தர்க்கரீதியான வாதங்களை வைப்பதன் மூலம், வாதப்பிழைகளை தவிர்ப்பதன் மூலம், அல்லது பிழைகளை அடையாளம் கானும் மூலம் எந்த ஒரு விவாதத்திலும் எளிதாக வெற்றி பெறலாம்.
************************
*_நினைவில் நிற்கும் பாடல் வரிகள்._*

*ஏச்சு* ப் பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப் பாருங்க 
ஐயா எண்ணிப் பாருங்க

நாச்சியப்பா சங்கிலிக் கருப்பா பூச்சி காட்டும் போக்கிரி சுப்பா
மூட்டையடிச்சா உன்னையே விடுவானா? நெனச்சுப் பாருங்க
நல்லா நெனச்சுப் பாருங்க

(திரைப்படம்: மதுரை வீரன்)
*************************
_தலை போகும்படி விவாதம் செய்து ஏச்சுதான் கிடைக்கும் (3)_

_விவாதம் செய்து_
= *வாதிட்டு*

_தலை போகும்படி_
= *[வா]திட்டு*
= *திட்டு*

_ஏச்சுதான் கிடைக்கும்_
= *திட்டு*
*************************
*மனைவியிடம் திட்டு வாங்காமல் இருப்பது எப்படி?*

_சோ சிம்பிள்._ பெண்களிடம் திட்டு வாங்காமல் தப்பிக்க அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டு அதை சரியாக செய்தாலே போதும்.

மனைவியாக இருந்தால் அவர் ஆலோசனை படி நடந்தாலே போதும்.
**********************
*மனைவியிடம் திட்டு வாங்காமல் இருப்பது எப்படி?"* *=* *"மனைவியை திருப்திப்படுத்துவது எப்படி?"*

ஆகையால்,
மனைவியை திருப்திப்படுத்துவது எப்படி?

நூத்துக்கு பரிட்சை எழுதினால் எத்தனை மார்க் வாங்குனா பாஸ்ன்னு தெரியும். ஆயிரத்துக்கு பரிட்சை எழுதினால் எத்தனை மார்க் வாங்குனா பாஸ்ன்னு தெரியும்.

_Infinity (முடிவிலி)க்கு பரிட்சை எழுதினா எத்தனை மார்க்_ _வாங்குறதுன்னு எப்படி தெரியும்? ஒரு கோடி மார்க் வாங்கினாலும்_ _*"பெயிலு" தான்.*_ 😢
**********************
_மனைவியின் திட்டிலிருந்து தப்பிக்க நீங்கள் சொல்ல வேண்டிய மந்திரங்கள் :_

*மனைவி சொல் மிக்க மந்திரமில்லை !*
*ஜெய்! என் பொண்டாட்டி !*

*யாதும் என் மனைவியே யாவரும் கேட்டுக்கோங்க !*
என்பது போன்ற சில பல புதுமொழிகள் கற்றுக் கொண்டால் அந்த வசையிலிருந்து ஈஸியாக தப்பிக்கலாம்.

பாவம். ஐடியா இல்லாத ஆண்கள் !!!
*************************
*திட்டு* வாங்கினாலும் அதை எளிதாக எடுத்துக்கொள்வதற்காகவே பள்ளிப்பருவம் முதல் நம்மை ஆசிரியர்கள் தயார் படுத்துகிறார்கள். புரியவில்லையா? அது தான் *"என்னத்த சொன்னாலும் எருமை மாடு மாதிரி நிக்குது பாரு"* என்ற வசவைத்தான் குறிப்பிடுகிறேன்.

_ஆக எப்படி *திட்டு* வாங்காமல் இருப்பது என்று யோசிப்பதை விட, உலகமே இடிந்து விழுந்தாலும் சற்றும் அசராத ஒரு துறவியின் மனநிலையை அடைவது எப்படி என்று வேண்டுமானாலும் தேடுங்கள், எளிதாக அந்த இலக்கை உங்களால் அடைய முடியும். வாழ்த்துக்கள்._

_*அனுபவமா என்று மட்டும் கேள்வி கேட்காதீர்கள்*_ .😂
*************************
*ஒரு பெண்ணிடம் திட்டு வாங்காத ஆண்மகன் இன்னும் பிறக்க வில்லை*
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/8, 07:08] திரைக்கதம்பம் Ramarao: திட்டு

[7/8, 07:08] பானுமதி: வாதம்

[7/8, 07:08] Rohini Ramachandran: வாதம்

[7/8, 07:13] பாலூ மீ.: விடை வம்பு.(🤔)

[7/8, 07:14] Meenakshi: விடை:திட்டு

[7/8, 07:24] A D வேதாந்தம்: விடை=வாதம்(வேதாந்தம்)

[7/8, 07:25] G Venkataraman: திட்டு ( வாதிட்டு - வா)

[7/8, 07:27] Ramki Krishnan: திட்டு

[7/8, 07:32] stat senthil: வாதம்

[7/8, 07:35] மீ.கண்ணண்.: திட்டு

[7/8, 07:54] nagarajan: *திட்டு*

[7/8, 08:05] மாலதி: திட்டு

[7/8, 08:13] siddhan subramanian: திட்டு

[7/8, 08:19] கு.கனகசபாபதி, மும்பை: திட்டு
[
[7/8, 09:44] Dhayanandan: *திட்டு*

[7/8, 10:39] Bhanu Sridhar: திட்டு

[7/8, 18:37] Viji - Kovai: வாதம்

[7/8, 19:52] Usha Chennai: வாதம்

[7/8, 19:55] sathish: திட்டு

[7/8, 19:59] Bharathi: வாதிட்டு−வா=திட்டு
[
[7/8, 20:00] Rohini Ramachandran: திட்டு

[7/8, 20:02] Revathi Natraj: திட்டு

[7/8, 20:05] Usha Chennai: திட்டு

[7/8, 20:08] பாலூ மீ.: (வா) திட்டு விடை திட்டு🙏

[7/8, 20:19] stat senthil: திட்டு

[7/8, 20:36] chithanandam: திட்டு
[வாதிட்டு - வா

[7/8, 21:39] akila sridharan: திட்டு. வாதிட்டு - வா

[7/8, 22:04] வானதி: *வாதம்*


[7/8, 23:15] Dr. Ramakrishna Easwaran: *திட்டு* ( ~வா~ திட்டு)


***************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 09-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

கரையான் அரிக்காததைத் தடு (3)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 09-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*தேக்கு* :
பெயர்ச்சொல்

கட்டிட வேலைகளுக்கு அதிகம் பயன்படும் மர வகைகளுள் ஒன்று

*தேக்கு* :
வினைச்சொல்

தேக்கும் செயல்
உதாரணம் - மழைக்காலத்தில் *நீரைத் தேக்கு.* வறட்சி காலத்தில் உதவும்.
************************
*_நினைவில் நிற்கும் பாடல் வரிகள்._*

மானல்லவோ கண்கள் தந்தது
ஆஹா
மயில் அல்லவோ சாயல் தந்தது

_*தேக்கு* மரம் உடலைத் தந்தது_
_சின்ன யானை நடையைத் தந்தது_

பூக்களெல்லாம் சிரிப்பைத் தந்தது
பொன்னல்லவோ நிறத்தைத் தந்தது

(நீதிக்கு பின் பாசம்:1963)
*************************
நல்ல ஆரோக்கியமான தேகம் வைத்திருப்பவர்களைப் பார்த்து *தேக்கு மரம் போன்ற தேகம்* என்று சொல்லுவதிலிருந்தே தேக்கு மரத்தின் வலிமையும் உறுதியும் நமக்கு விளங்குகிறது.
*************************
*கரையான் அரிக்காததைத் தடு (3)*

_கரையான் அரிக்காதது_
= *தேக்கு*

_தடு_
= *தேக்கு*
(double definition)

*************************
நம் கவிஞர்கள் தேக்கு மரத்தின் பண்புகளை சுட்டிக்காட்டி பாடல்களை இயற்றுவது வழக்கமானதுதான். பண்பலைகளில் கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் வரிகளான “அடி *தேக்கு* மரக்காடு பெருசுதான்! சின்ன தீக்குச்சி ஒசரம் சிறுசுதான்!” என்ற அழகியல் நிறைந்த பாடல் காற்றில் தவழும் அதே வேளையில், ஒரு விவசாயி “ஆத்தோரம் *தேக்கு* மரம் ...” என தெம்மாங்கு பாடல் ஒன்றை இட்டுக்கட்டி பாடிக்கொண்டிருப்பதையும் பார்க்கமுடிகிறது.
*************
_அடி தேக்கு மர காடு பெருசுதான்_
_சின்ன தீக்குச்சி உசரம் சிறுசுதான்_
_ஒரு தீக்குச்சி விழுந்து புடிக்குதடி_
_கருந்தேக்கு மரக்காடு வெடிக்குதடி_

படம் : ராவணன்
பாடலாசிரியர்: வைரமுத்து
****************
*நாட்டுப்பாடல்*

கரையில் தேக்குமரங்கள் குடைபிடிக்க ஓடி வரும் காவேரி ஒரு நெற்கதிரில் அரைக்கால்படி நெல்லும், ஒரு கட்டு கதிரில் அரைமூட்டை நெல்லும், விளைவிப்பாள். அதனால் சோழ தேசம் பஞ்சமின்றி இருந்தது.

இதை

_'ஆத்தோரம் *தேக்குமரம்* அலைமோதும் காவேரியாம்_ _பாத்திருக்க நெல்விளையும் பஞ்சம் தீர்க்கும் காவேரியாம்_ _கட்டு கலம் காணும் கதிர் உழக்கு நெல்_ _காணும் சொன்ன பொதி காணும் சோழராஜா சீமையிலே!'_

என்கிறது நாட்டுப்பாடல்.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/9, 07:00] திரைக்கதம்பம் Ramarao: தேக்கு
[
[7/9, 07:12] Meenakshi: விடை: தேக்கு

[7/9, 07:12] Dhayanandan: *தேக்கு*

[7/9, 07:15] ஆர். நாராயணன்.: தேக்கு

[7/9, 07:20] கு.கனகசபாபதி, மும்பை: தேக்கு

[7/9, 07:34] chithanandam: தேக்கு

[7/9, 07:55] siddhan subramanian: தேக்கு (மரம்) = தடு

[7/9, 07:55] nagarajan: *தேக்கு*

[7/9, 08:08] stat senthil: தேக்கு

[7/9, 08:38] Bharathi: *தேக்கு*

[7/9, 13:44] வானதி: *தேக்கு*

[7/9, 20:18] G Venkataraman: தேக்கு

[7/9, 20:20] Revathi Natraj: தேக்கு
[
[7/9, 20:22] Viji - Kovai: தேக்கு

[7/9, 20:24] Dr. Ramakrishna Easwaran: *தேக்கு*

***************************,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 10-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

*மேலோங்கிய காஞ்சி தயவில் காதல் இல்லாமலே மயக்கம் (4)*

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 10-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*காலத்தின் பரிமாணத்தை விஞ்சிய*

நினைவுத் தோட்டத்தில் 
தொடத் தொட மலரும் 
மன மலர்கள் 
தொலைவில் உள்ளதை 
அருகாமையில் காட்டும் 
இந்த அந்தரங்க டெலிஸ்கோப் ! 
என்றோ நடந்ததை 
நேற்று நடந்ததோ என்று வியக்கச் செய்யும் 
காலத்தின் பரிமாணத்தை *விஞ்சிய* 
இந்த மனம் !

(கவின் சாரலன்)
************************
உன்னை ....
காதலித்ததால் ....
எனக்கு *விஞ்சியது* ....
ஒன்றே ஒன்றுதான் ....
கவிதை ....!!!

பூக்களால் கவிதை ....
எழுதுகிறேன் ....
சோகத்துடன் வாசிக்காதே ....
பூக்கள் அழுதுவிடும் ....!!!

நீ 
எதை பேசினாலும் ....
அதில் அர்த்தமில்லை ....
அர்த்தமாக்கவே ....
கவிதை எழுதுகிறேன் ....!!!

(கவிப்புயல் இனியவன்
ஈழக்கவிஞன் )
*************************
_மேலோங்கிய காஞ்சி தயவில் காதல் இல்லாமலே மயக்கம் (4)_

_காதல் இல்லாமலே_
= _deletion indicator to delete "காதல்" from "காஞ்சி தயவில்"_
= _(கா)ஞ்சி +த)யவி(ல்)_
= *ஞ்சியவி*

_மயக்கம்_ = _anagram indicator for_ *ஞ்சியவி*
= *விஞ்சிய*

= _மேலோங்கிய_
*************************
*பிரபஞ்ச தேடல்* 
பால்வழி அண்டம் 
காற்றில்லா விண்வெளி
கசடில்லா கருநிலா.....

இயக்கம் தொலைத்த கோள் 
ஈரமில்லா சந்திரன்
வண்ணம் தொலைத்த வானம்
வறண்டு போன வானிலை.....

பயிரே காணாப் பனிமலை
வறட்சி காணா கங்கை
மாசற்ற தலைநகரம்
மனசாட்சியில்லா மனிதம்.....

யுகங்களைத் தாண்டிய
நினைவுகள்....
உயிரை *விஞ்சிய* 
உணர்வுகள்.....
எல்லாமே
நீயாக.....
எனக்கு
எல்லாமே
நீயாக......

வார்த்தைகளை தொலைத்து விட்டு
வாய் மூடி அழும் 
எனைக்
கடக்கும் பொழுது
கடைசிரிப்பு காட்டிப் போ......
அந்த சின்னக்கீற்று தான்
என் 
தற்போதைய வசிப்பிடம்.....

எழில் சுலோ......
*************************
💐🙏🏼💐

Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/10, 07:01] திரைக்கதம்பம் Ramarao: விஞ்சிய
[
[7/10, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏விஞ்சிய🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/10, 07:02] Dr. Ramakrishna Easwaran: *விஞ்சிய*

[7/10, 07:03] A Balasubramanian: விஞ்சிய
A.Balasubramanian

[7/10, 07:07] N T Nathan: விஞ்சிய
[
[7/10, 07:08] Meenakshi: விடை:விஞ்சிய

[7/10, 07:13] chithanandam: விஞ்சிய

[7/10, 07:17] sridharan: விஞ்சிய

[7/10, 07:24] Venkat: விஞ்சிய 🙏🏾

[7/10, 07:36] akila sridharan: விஞ்சிய
[
[7/10, 07:37] Dhayanandan: *விஞ்சிய*

[7/10, 07:39] Siva: விஞ்சிய

[7/10, 07:39] stat senthil: விஞ்சிய

[7/10, 07:42] Ramki Krishnan: விஞ்சிய

[7/10, 07:55] nagarajan: *விஞ்சிய*
[
[7/10, 08:05] ஆர்.பத்மா: விஞ்சிய
[
[7/10, 08:08] ஆர். நாராயணன்.: விஞ்சிய

[7/10, 08:21] siddhan subramanian: விஞ்சிய (விய + ஞ்சி)

[7/10, 08:26] prasath venugopal: விஞ்சிய

[7/10, 08:43] மாலதி: வின்ஜிய

[7/10, 08:44] Bharathi: *விஞ்சிய*
[
[7/10, 08:59] கு.கனகசபாபதி, மும்பை: விஞ்சிய

[7/10, 09:39] Bhanu Sridhar: விஞ்சிய
[
[7/10, 11:26] வானதி: காஞ்சிதயவில்
ஞ்சியவி
*விஞ்சிய*

[7/10, 12:50] shanthi narayanan: விஞ்சிய

[7/10, 15:52] மீ.கண்ணண்.: விஞ்ஞிய

[7/10, 15:56] Viji - Kovai: விஞ்சிய

[7/10, 19:24] sankara subramaiam: விஞ்சிய

[7/10, 19:27] Revathi Natraj: விஞ்சிய
[
[7/10, 19:37] sathish: விஞ்சிய

***************************,

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்