Skip to main content

விடை 4144

இன்று காலை வெளியான வெடி:
அதிக அளவில் வாங்குவது ஒரு தானியம் கடைசியாக வராவிட்டாலும் ஆரம்பம் உண்டு (5)
அதற்கான விடை: கொள்முதல் = கொள்(ளு) + முதல்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
_அதிக அளவில் வாங்குவது ஒரு தானியம் கடைசியாக வராவிட்டாலும் ஆரம்பம் உண்டு (5)_

_ஒரு தானியம்_
= *கொள்ளு*
_கடைசியாக வராவிட்டாலும்_
= *கொள்[ளு] =கொள்*

_ஆரம்பம் உண்டு_
= *முதல்*

_அதிக அளவில் வாங்குவது_
= *கொள்முதல்*

**********************
*ஆசான்*

_அறிவை கொள்முதல் செய்யும் களஞ்சியம்  *ஆசான்* என்னும் பொக்கிஷம்!!_

_எங்களின் எழுச்சிப் பயணங்களின்_ 
_மைல் கல் ஆசானே!!!உம் நிழலில் தான் நாங்கள்_ 
_முகாமிட்டுள்ளோம்_ - _உம் மூச்சுக் காற்றுக்களில் கூட_ 
_எங்கள் முகவரிகள்!!_

_நாளைய வரலாறுகளில்_ 
_எங்களின் வாழ்க்கை உங்களைத்தான் உச்சரிக்கும்.._

*- அகீ...-*
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 12-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

*கட்டு பிரியாதபடி கொண்டாட்டத்தை அடக்க வெளியே அமல் (5)*

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*மொட்டொன்று அவிழாமல்*

மொட்டொன்று அவிழாமல் 
மூடிக் கிடந்தது மௌனமாய் 
பட்டுக் கரத்தால் அவள் தொட்டாள் 
சட்டென்று மலர்ந்து நன்றி நவின்றது !

எழுதியவர் : கவின் சாரலன்.
*************************
_கட்டு பிரியாதபடி கொண்டாட்டத்தை அடக்க வெளியே அமல் (5)_

_கொண்டாட்டத்தை_
= *விழா*
_அடக்க_ = _insertion indicator for விழா_

_வெளியே அமல்_
= *விழா* inside *அமல்*
= *அவிழாமல்*

= _கட்டு பிரியாதபடி_
*************************
*சிலப்பதிகாரம் 28-9*

_சாக்கையன் ஆடிய கொட்டிச்சேதம் என்னும் கூத்து_
🌸🌸🌸🌸🌸

_ஆங்கு, அவள்-தன்னுடன் அணி மணி அரங்கம்_
_வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி:_
_திரு நிலைச் சேவடிச் சிலம்பு வாய்புலம்பவும்,_
_பரிதரு செங் கையில் படு பறை ஆர்ப்பவும்,_
_செங் கண் ஆயிரம் திருக் குறிப்பு அருளவும்,_
_செஞ் சடை சென்று திசைமுகம் அலம்பவும்;_
_பாடகம் பதையாது, சூடகம் துளங்காது,_
_மேகலை ஒலியாது, வார் குழை ஆடாது,_ _மணிக்குழல் *அவிழாது,*_
_உமையவள் ஒரு திறன் ஆக, ஓங்கிய_
_இமையவன் ஆடிய கொட்டிச் சேதம்_
_பாத்து-அரு நால் வகை மறையோர் பறையூர்க்_
_கூத்தச் சாக்கையன் ஆடலின் மகிழ்ந்து; அவன்_
_ஏத்தி நீங்க- இரு நிலம் ஆள்வோன்_
🌸🌸🌸🌸🌸
இப்படி வந்த அரசியுடன் நிலம் ஆளும் செங்குட்டுவன் மணியரங்கத்தில் அமர்ந்தான். 
கூத்தாடும் சாக்கையன் கொட்டிச்சேதம் என்னும் கூத்து ஆடினான். இதனைக் கொடுகொட்டி என்று கலித்தொகை கடவாழ்த்துப் பாடல் குறிப்பிடுகிறது. 

கொட்டிச்சேதம் என்பது சிவன் தன் உமையவள் தனது உடம்பின் ஒரு பாகமாக விளங்க, 

காலில் சிலம்பு ஒலிக்க, 
கையில் உடுக்குப்பறை முழங்க, 
கண்கள் ஆயிரக்கணக்கான குறிப்புகளைக் காட்ட, 
சடை நாலாப்பக்கமும் சுழல, 

கால் பரப்பின் மேல்பக்கம் அணிந்திருக்கும் பாடகம், புறங்கையில் அணிந்திருக்கும் சூடகம் என்னும் அணிகலன்கள் ஆடாமல், 

இடையில் அணிந்திருக்கும் மேகலை ஒலிக்காமல், 
காதணி குழை, ஆகியவை ஆடாமல், 
முடித்த கூந்தல் அவிழாமல், 

நான்மறை பறையொலியாக முழங்க ஆடும் ஆட்டம். 
🌸🌸🌸🌸🌸

இந்தக் கூத்தை இருவரும் கண்டு களித்தனர். 
*******************
(இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம், வஞ்சிக் காண்டம், நடுகல் காதை)
*******************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அவிழாமல்

[7/12, 07:03] Bhanu Sridhar: அவிழாமல்

[7/12, 07:11] Meenakshi: விடை:அவிழாமல்
விழா+அமல்

[7/12, 07:14] A Balasubramanian: அவிழாமல்
A.Balasubramanian

[7/12, 07:15] sridharan: கட்டுபாடு
[
[7/12, 07:16] பாலூ மீ.: விடை அவிழாமல்

[7/12, 07:36] A D வேதாந்தம்: விடை= அவிழாமல்(வேதாந்தம்)

[7/12, 07:50] sankara subramaiam: அவிழாமல்

[7/12, 07:55] nagarajan: *அவிழாமல்*
[
[7/12, 07:59] மாலதி: அவிழாமல்

[7/12, 08:30] Dr. Ramakrishna Easwaran: *அவிழாமல்*
[
[7/12, 08:46] Viji - Kovai: கட்டுடல்

[7/12, 08:49] கு.கனகசபாபதி, மும்பை: அவிழாமல்

[7/12, 09:23] ஆர். நாராயணன்.: அவிழாமல்

[7/12, 09:41] siddhan subramanian: அவிழாமல்
[
[7/12, 09:59] Rohini Ramachandran: விரியாமல்

[7/12, 11:26] akila sridharan: அவிழாமல்

[7/12, 11:32] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அவிழாமல்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/12, 13:38] வானதி: *அவிழாமல்*

[7/12, 19:46] sathish: அவிழாமல்

[7/12, 19:51] Revathi Natraj: அவிழாமல்

[7/12, 19:55] chithanandam: அவிழாமல்

[7/12, 21:54] ஆர்.பத்மா: அவிழாமல்

***************************,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 13-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

ஈடுபாடில்லாத் தன்மை அன்றைய முதல்வர் தலையைப் பின் வைக்கச் செய்தது (5)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*ஈடுபாடில்லாத எந்த காரியத்திலும் ஜெயிக்க முடியாது.* *ஈடுபாடுடன் செய்யும் எந்த காரியமும் தோற்காது.*
************************
_ஈடுபாடில்லாத் தன்மை அன்றைய முதல்வர் தலையைப் பின் வைக்கச் செய்தது (5)_

_அன்றைய முதல்வர்_
= _first letter in அன்றைய_
= *அ*

_தலை_ = *சிரம்*
_தலையை_
= _சிரத்தை_

_பின் வைக்கச் செய்தது_
= _indicator to place_ *சிரத்தை*
_after_ *அ*
= *அ+ சிரத்தை*
= *அசிரத்தை*
= _ஈடுபாடில்லாத் தன்மை_
*************************
நற்செயல் எச் செயலோ 
அச்செயலை இச்சையுடன் செய்... 
அடுத்தவன் ஆர்ப்பரிப்பான் என்று 
*அசிரத்தை* கொள்ளாதே!!! 

(ஹனாப்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/13, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அசிரத்தை

[7/13, 07:07] stat senthil: அசிரத்தை

[7/13, 07:10] Bhanu Sridhar: அசிரத்தை
[7/12, 20:21] sathish: நன்றி ஐயா!
[7/13, 07:11] sathish: அசிரத்தைç
[7/13, 07:15] A Balasubramanian: அசிரத்தை
A.Balasubramanian

[7/13, 07:15] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அசிரத்தை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[7/13, 07:16] Rohini Ramachandran: அசிரத்தை

[7/13, 07:21] மீ.கண்ணண்.: அசிரத்தை

[7/13, 07:39] கு.கனகசபாபதி, மும்பை: அசிரத்தை
[
[7/13, 07:55] nagarajan: *அசிரத்தை*

[7/13, 07:56] prasath venugopal: அசிரத்தை

[7/13, 07:58] Meenakshi: விடை: அ சிரத்தை

[7/13, 08:18] பாலூ மீ.: (அ) தலையை = சிரத்தை விடை = அசிரத்தை.

[7/13, 08:33] G Venkataraman: அசிரத்தை
[
[7/13, 08:38] ஆர். நாராயணன்.: அசிரத்தை

[7/13, 08:46] மாலதி: அசிரத்தை

[7/13, 08:50] siddhan subramanian: அசிரத்தை (அ + சிரத்தை)

[7/13, 08:52] Dhayanandan: *அசிரத்தை*

[7/13, 10:06] Bharathi: அசிரத்தை

[7/13, 10:39] ஆர்.பத்மா: அசிரத்தை
[
[7/13, 11:50] A D வேதாந்தம்: விடை=அசிரத்தை (வேதாந்தம்)
[
[7/13, 12:18] shanthi narayanan: அசிரத்தை
[
[7/13, 13:33] வானதி: *அசிரத்தை*

[7/13, 15:28] sridharan: அசிரத்தை

[7/13, 16:38] joseph amirtharaj: அசிரத்தை

[7/13, 07:11] sathish: அசிரத்தை
[
[7/13, 19:40] sankara subramaiam: அசிரத்தை

[7/13, 20:34] chithanandam: அசிரத்தை

[7/13, 21:30] akila sridharan: அசிரத்தை
[
[7/13, 22:12] Revathi Natraj: அசிரத்தை

***************************,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 14-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

வாழ்த்திக் கும்பிடுபவரிடம் வார்த்தை முழுதாக வராது (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*தேடல்*

தேடலின் தேவை அறியாமல் 
தேடலில் தொலைப்பாய் உன்னை..! 

தேடி தேடி கிடைத்த பொருளும் 
தேவை இல்லாமல் போகும் ஒரு நாள்..! 

*திக்கு முக்காடி* திரியும் பொழுதில் 
தெளிவு பிறக்கும், 
தேடலே வாழ்வின் சாபம் என்று.!

(சக்தி)
********************
_வாழ்த்திக் கும்பிடுபவரிடம் வார்த்தை முழுதாக வராது (4)_

_வாழ்த்திக் கும்பிடுபவரிடம்_
= _வாழ்த்திக் கும்பிடுபவர் + இடம்_

_இடம்_
= _indicates hidden clue in வாழ்த்திக் கும்பிடுபவர்_

= _வாழ்த் [திக்கும்] பிடுபவர்_
= *திக்கும்*
= _வார்த்தை முழுதாக வராது_
*************************
*திக்கு(பெ)*
திசை
எட்டுத் திக்கு (eight directions)

*திக்கு(வி)*
சொற்களைக் குழறி உச்சரித்துப் பேசுதல்
*************************
_வெற்றி எட்டுத் *திக்கும்* எட்டக் கொட்டு முரசே!_
_வேதம் என்றும் வாழ்கஎன்று கொட்டு முரசே!_
_நெற்றி யொற்றைக் கண்ணனோடே_ _நிர்த்தனம் செய்தாள் நித்த சக்தி வாழ்க_ _வென்று கொட்டு முரசே!_

*பாரதியார்* 
*************************
_*திக்குத் தெரியாத* காட்டில்-உனைத் தேடித் தேடி இளைத்தேனே._

_மிக்க நலமுடைய மரங்கள்,-பல_
_விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்_
_பக்கத்தையும் மறைக்கும்_ _வரைகள்,-அங்கு பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு_                          _(திக்குத்)_

_நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்_
_நீளக் கிடக்குமலைக் கடல்கள்,-மதி_
_வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள் மண்டித்_ _துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு_                   _(திக்குத்)_

*பாரதியார்* 
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[
[7/14, 07:01] திரைக்கதம்பம் Ramarao: திக்கும்
[
[7/14, 07:02] Dhayanandan: *திக்கும்*
[
[7/14, 07:06] prasath venugopal: திக்கும்

[7/14, 07:07] joseph amirtharaj: திக்கும்

[7/14, 07:08] பாலூ மீ.: விடை திக்கும்
[7/14, 07:11] *Meenakshi:* விடை: திக்கும்
வாழ்த் *திக்கும்*பிடுபவரிடம்

[7/14, 07:19] A Balasubramanian: திக்கும்
A.Balasubramanian

[7/14, 07:20] மீ.கண்ணண்.: திக்கும்
[
[7/14, 07:25] sridharan: திக்கும்

[7/14, 07:25] sathish: திக்கும்

[7/14, 07:36] ஆர். நாராயணன்.: திக்கும்

[7/14, 07:38] chithanandam: திக்கும்

[7/14, 07:39] stat senthil: திக்கும்

[7/14, 07:55] nagarajan: *திக்கும்*

[7/14, 08:03] akila sridharan: திக்கும்

[7/14, 08:04] மாலதி: திக்கும்

[7/14, 08:05] Bhanu Sridhar: திக்கும்

[7/14, 08:26] siddhan subramanian: திக்கும்

[7/14, 08:32] கு.கனகசபாபதி, மும்பை: திக்கும்

[7/14, 08:41] ஆர்.பத்மா: திக்கும்
[
[7/14, 09:16] Revathi Natraj: திக்கும்
[
[7/14, 09:32] Dr. Ramakrishna Easwaran: *திக்கு*

[7/14, 09:39] G Venkataraman: திக்கும்
[
[7/14, 11:13] Rohini Ramachandran: குழையும்

[7/14, 11:17] வானதி: *திக்கும்*
[
[7/14, 11:35] shanthi narayanan: திக்கும்

[7/14, 14:47] Viji - Kovai: திக்கும்

[7/14, 18:56] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏திக்கும்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/14, 19:10] sankara subramaiam: திக்கும்

[7/14, 19:58] Bharathi: திக்கும்

[7/14, 22:25] பானுமதி: திக்கும்


***************************,
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 15-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*ஏழையின் நிலைக்கு எண்ணெயின்றி சட்டியில் புரட்டி பாதி பாரம் ஏற்று (3)*
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
திருடாதே... பாப்பா திருடாதே...
*வறுமை* நிலைக்கு பயந்துவிடாதே
திறமை இருக்கு மறந்துவிடாதே
திருடாதே... பாப்பா திருடாதே...

(திருடாதே: 1961)
************************
*வறுமை கவிதை வரிகள்*
(இனையத்தில் படித்தது)
************************
இத்துப்போன போன கூரையை 
கரையான்கள் அரிக்குது.. 
ஒட்டிப்போன என்னுடம்ப 
பசிவந்து மெல்ல கரைக்குது.. 
என் வீட்டு அடுப்படியும் 
பூனை தூங்கும் இடமாச்சு 
பசி மறந்து நான் தூங்கி 
வருஷம் பல ஆச்சு.. 
என் *வறுமைக்கும்* வாழ்வுக்கும் 
தூரம் ரொம்ப நீளுது 
என் எலும்புக்கும் தோலுக்கும் 
நெருக்கம் ரொம்ப கூடுது..!
************************
_நமது வீட்டில் *வறுமை*  கோலம் போட்டது.._ 
_அப்பாவின் வருமானம் சீனி கலக்காத தேனீரை பருக வைத்தது.._ 
_அம்மாவின் கண்ணீர் துளிகள்.._ 
_நம் உணவிற்கு உப்பாய் ருசித்தது.!_
************************
*கொடியது கொடியது முதுமை கொடியது!!* 
*அதனிலும் கொடியது* *முதுமையில் வறுமை!!!* 
*வறுமையில் தனிமை!!!* 
*வீட்டின் பெயரோ அன்னை இல்லம்* 
*அன்னை இருப்பதோ "அநாதை இல்லம்"* 
*முதுமை என்றால் ஏன் இத்தனை பாராமுகம்!!!* 
************************
_ஏழையின் நிலைக்கு எண்ணெயின்றி சட்டியில் புரட்டி பாதி பாரம் ஏற்று (3)_

_எண்ணெயின்றி சட்டியில் புரட்டி_
= *வறு(த்து)*
_பாரம்_ = *சுமை*
_பாதி பாரம்_ = *மை*
_ஏற்று_ = _indicator to club_ *வறு+மை*
= *வறுமை*
= _ஏழையின் நிலைக்கு_
*************************
*வறுமை* மனிதனுடன் நீங்காத தொடர்புடையது. இத்தொடர்பு மனிதன் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்க வேண்டும். சற்றுக் காலங்கடந்து மனிதன் பக்குவமடைந்து உயர்வு தாழ்வு பேணும்போதுதான் வறுமையின் முழுப்பொருளாழம் கடைநிலை மக்களைத் தாக்கி உணர வைத்தது. குறிப்பாகச் சங்க இலக்கியக் காலத்தில் வறுமையின் தாக்கத்தை இலக்கியங்களின் வழியாக வெளிப்படுத்திய மனிதக் குலம் இன்றுவரை வறுமையைத் தீர்க்கப் போராடியும் வருகின்றது.
*************************
*திருந்தா வாழ்க்கை*

 புலவனின் *வறுமையைப்* பற்றிக் கூறும்போது *பெருங்குன்றூர்க் கிழார்* நேர்த்தியாக எடுத்துக் கூறியுள்ளார். விருந்தோம்பல் என்பது தமிழர் பண்பாடு. தன்னுடைய வீட்டில் எவை இருந்தாலும் வீட்டைத் தேடி வரும் விருந்தினருக்குப் பகிர்ந்து கொடுத்து விருந்தோம்பல் செய்தல் சிறந்த பண்பாகப் பாதுகாத்து வந்தனர். விருந்தினர் வரும்போது அவர்களை எதிர்கொண்டு வரவேற்று விருந்து உபசரிக்க முடியாத வாழ்க்கையாகிப் போய்விட்டது என்று தன் வறுமையைக் காட்டி நிற்கின்றார் பெருங்குன்றூர்க் கிழார்.

_"விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்,_
_பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்_
_அறிவுகெட நின்ற நல்கூர் மையே!"_

 விருந்தினர்களைக் கண்டு ஒளிந்து கொண்டு வாழும் வாழ்க்கையைத் *திருந்தா வாழ்க்கை* என்று குறிப்பிடுகின்றார் பெருங்குன்றூர்க் கிழார். விருந்தினரை வரவேற்று உபசரிக்கும் மனப்பக்குவத்தையும் நாகரிகத்தையும் என்னுடைய *வறுமையினால்*? இழந்துவிட்டேன் என்று குறிப்பிடுவதைத் திருந்தா வாழ்க்கையாக அடையாளப்படுத்துகின்றார்.

(புறநானூறு - 266. அறிவுகெட நின்ற வறுமை.)
*************************
*"ஒரு எழையின் வறுமை கவிதை "*

*எதிர் வீடு ஜன்னலை பார்த்தேன் நிறைய சட்டைகள் ..!*

*என் சட்டையை பார்த்தேன் நிறைய ஜன்னல்கள் ..!"*

(by anandhishyam)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[
[7/15, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வறுமை
[
[7/15, 07:01] மீ.கண்ணண்.: வறுமை

[7/15, 07:03] ஆர். நாராயணன்.: வறுமை

[7/15, 07:04] joseph amirtharaj: வறுமை

[7/15, 07:07] மாலதி: வறுமை
[7/15, 07:06] பாலூ மீ.: விடை வறுமை
[
[7/15, 07:09] Meenakshi: விடை:வறுமை

[7/15, 07:14] stat senthil: வறுமை

[7/15, 07:15] prasath venugopal: வறுமை

[7/15, 07:22] A Balasubramanian: வறுமை
A.Balasubramanian
[
[7/15, 07:30] sathish: வறுமை

[7/15, 07:30] sridharan: வறுமை

[7/15, 07:48] A D வேதாந்தம்: விடை=வறுமை(வேதாந்தம்)

[7/15, 07:54] nagarajan: *வறுமை*
[
[7/15, 08:08] chithanandam: வறுமை
3
[7/15, 08:16] Rohini Ramachandran: வறுமை

[7/15, 08:19] Ramki Krishnan: வறுமை

[7/15, 08:24] akila sridharan: வறுமை

[7/15, 08:33] siddhan subramanian: வறுமை

[7/15, 08:43] ஆர்.பத்மா: வறுமை

[7/15, 08:44] Dr. Ramakrishna Easwaran: *வறுமை*

[7/15, 09:22] வானதி: *வறுமை*
வறு+ (சு) மை
[
[7/15, 10:57] Bhanu Sridhar: வறுமை

[7/15, 13:54] shanthi narayanan: வறுமை

[7/15, 16:25] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வறுமை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/15, 17:27] கு.கனகசபாபதி, மும்பை: வறுமை

[7/15, 19:21] Dhayanandan: *வறுமை*

[7/15, 19:36] sankara subramaiam: வறுமை

[7/15, 19:59] Revathi Natraj: வறுமை

[7/15, 20:43] G Venkataraman: வறுமை

***************************,i
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 16-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

*புரளும் வைர மின் வெட்டில் அச்சமின்மை கொண்ட ஆள்பவர் குழு (6)*

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 16-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*திருக்குறள்*
_அமைச்சு - அதிகார விளக்கம்_
**********
ஆட்சிக்கு இன்றியமையாத் துணையும் ஆட்சித்தலைவனுக்கு அடுத்தபடியாகச் சிறப்பு வாய்ந்தவனுமான, அமைச்சன் இலக்கணம், கூறப்படுகிறது. எந்தவகையான ஆட்சிமுறையாக இருந்தாலும் *அமைச்சரவை* இன்றியமையாதது. ஆட்சித்தலைவன் அறிவாலும் ஆற்றலாலும் சிறந்தவனாக இருந்தபோதிலும் தனியனாக அரசாட்சியைத் திறம்பட நடத்தமுடியாது என்பதால் அவனுக்குத் துணையாக அறிவுரை வழங்க *அமைச்சரவை* ஏற்பட்டது. அமைச்சர் தம் தகுதிகள், பண்புகள், ஆளுமைத் திறன்கள் ,செயற்பாடுகள் தொகுப்பாக இவ்வதிகாரத்தில் கூறப்படுகிறது.
************************
_புரளும் வைர மின் வெட்டில் அச்சமின்மை கொண்ட ஆள்பவர் குழு (6)_

_புரளும் வைர_
= *வைர---> ரவை*

_மின் வெட்டில் அச்சமின்மை_
= _அச்சமின்மை minus மின்_
= *அச்சமை*

_கொண்ட_
= _anagram indicator for_ *ரவை+அச்சமை*
= *அமைச்சரவை*

= _ஆள்பவர் குழு_
*************************
*குறள் #632*

_வன்கண் குடிகாத்தல் கற்றறிதல் ஆள்வினையோடு_ 

_ஐந்துடன் மாண்டது அமைச்சு._

*பொருள்*
*அமைச்சரவை* என்பது, துணிவுடன் செயல்படுதல், குடிகளைப் பாதுகாத்தல், அறநூல்களைக் கற்றல், ஆவன செய்திட அறிதல், அயராத முயற்சி ஆகிய ஐந்தும் கொண்டதாக விளங்க வேண்டும்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/16, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அமைச்சரவை
[
[7/16, 07:01] A Balasubramanian: அமைச்சரவை
A.Balasubramanian

[7/16, 07:01] மீ.கண்ணண்.: அமைச்சரவை

[7/16, 07:04] sathish: அமைச்சரவை

[7/16, 07:04] prasath venugopal: அமைச்சரவை

[7/16, 07:06] stat senthil: அமைச்சரவை
[
[7/16, 07:12] Dhayanandan: *அமைச்சரவை*
[
[7/16, 07:18] Rohini Ramachandran: அமைச்சரவை
[
[7/16, 07:04] bala: அமைச்சரவை - பாலா

[7/16, 07:20] Meenakshi: விடை:அமைச்சரவை
[
[7/16, 07:22] Bhanu Sridhar: அமைச்சரவை

[7/16, 07:24] sridharan: அமைச்சரவை

[7/16, 07:29] chithanandam: அமைச்சரவை

[7/16, 07:30] G Venkataraman: அமைச்சரவை
👏👏🌹
[7/16, 07:37] பாலூ மீ.: அமைச்சரவை.

[7/16, 07:45] Dr. Ramakrishna Easwaran: *அமைச்சரவை*

[7/16, 07:51] nagarajan: *அமைச்சரவை*

[7/16, 07:59] கு.கனகசபாபதி, மும்பை: அமைச்சரவை
[
[7/16, 08:02] Ramki Krishnan: அமைச்சரவை
[
[7/16, 08:12] akila sridharan: அமைச்சரவை
[
[7/16, 08:15] ஆர். நாராயணன்.: அமைச்சரவை

[7/16, 08:56] joseph amirtharaj: அமைச்சரவை

[7/16, 09:50] Usha Chennai: அமைச்சரவை

[7/16, 10:57] shanthi narayanan: அமைச்சரவை

[7/16, 11:13] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏அமைச்சரவை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/16, 18:59] ஆர்.பத்மா: அமைச்சரவை

[7/16, 22:23] sankara subramaiam: அமைச்சரவை


***************************,i
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 17-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

*வையாது மனசு சுரம் விட்ட பின்னர் கலந்தது நாவுக்குப் பிடித்தது (5)*

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 17-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அமுதே தமிழே அழகிய 
மொழியே எனதுயிரே
சுகம் பல தரும் தமிழ்ப் பா
*சுவையொடு* கவிதைகள் தா
தமிழே நாளும் நீ பாடு
************************
_வையாது மனசு சுரம் விட்ட பின்னர் கலந்தது நாவுக்குப் பிடித்தது (5)_

_சுரம்_ = *ம*
_சுரம் விட்ட "வையாது மனசு"_
= _வையாது மனசு --ம_
= *வையாதுனசு*

_பின்னர் கலந்தது_
= _Anagram *indicator for வையாதுனசு_
= *சுவையானது*
= _நாவுக்குப் பிடித்தது_
*************************
*சுவை என்பது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதருக்கும் வேறுபடும்.* ஒரு குடும்பத்தில் இருப்பவர்களுக்கு ஒத்த சுவை கிடையாது,
****************
*உலகின் சுவையான உணவு எது ?*

என்னைப் பொறுத்தவரை, ஆற்காட்டுக் கிச்சிலிச் சம்பா, கைக்குத்தல் அரிசியில், மிக மெலிதாகப் புளித்த பசுந்தயிர் ஊற்றிப் பிசையப்பட்ட, பச்சைமிளகாய், கொத்துமல்லி சிறுதுண்டுகள் கலந்த, இனிய, விதையில்லா பச்சை ஐதராபாத்து சிறு திராட்சைகள், மங்களூரு அன்னாசித் துண்டுகளுடன், இடப்பட்டு, கடுகு தாளிக்கப்பட்ட, தயிர் சாதம், தொட்டுக்கொள்ள திருவரங்கம்எலுமிச்சை ஊறுகாயுடன் தான் உலகிலேயே சுவையான உணவு என்பேன்!
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[
[7/17, 07:04] stat senthil: சுவையானது

[7/17, 07:05] மீ.கண்ணண்.: சுவையானது

[7/17, 07:05] G Venkataraman: சுவையானது

[7/17, 07:07] Bhanu Sridhar: சுவையானது
.
[7/17, 07:10] பாலூ மீ.: சுவையானது.
[
[7/17, 07:10] Meenakshi: விடை:சுவையானது

[7/17, 07:12] Dr. Ramakrishna Easwaran: சுவையானது

[7/17, 07:17] prasath venugopal: சுவையானது

[7/17, 07:20] sridharan: சுவையானது.

[7/17, 07:27] திரைக்கதம்பம் Ramarao: சுவையானது

[7/17, 07:30] chithanandam: சுவையானது

[7/17, 07:33] மாலதி: சுவையானது

[7/17, 07:35] வானதி:
திட்டாது=வையாது
*திகட்டாது*

[7/17, 07:04] A Balasubramanian: சுவையானது
A.Balasubramanian

[7/17, 07:25] sathish: சுவையானது

[7/17, 07:47] Ramki Krishnan: சுவையானது

[7/17, 07:53] nagarajan: *சுவையானது*

[7/17, 07:58] joseph amirtharaj: சுவையானது

[7/17, 08:03] கு.கனகசபாபதி, மும்பை: சுவையானது

[7/17, 08:10] ஆர். நாராயணன்.: சுவையானது

[7/17, 08:15] Rohini Ramachandran: சுவையானது

[7/17, 08:23] siddhan subramanian: சுவையானது - வையாது + (ம)னசு

[7/17, 08:29] akila sridharan: சுவையானது

[7/17, 08:34] Bharathi: சுவையானது

[7/17, 08:49] ஆர்.பத்மா: சுவையானது

[7/17, 13:17] shanthi narayanan: சுவையானது

[7/17, 14:25] N T Nathan: சுவையானது
[
[7/17, 14:46] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சுவையானது🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/17, 15:19] Dhayanandan: *சுவையானது*

[7/17, 16:17] balagopal: சுவையானது
[
[7/17, 17:25] sankara subramaiam: சுவையானது

[7/17, 18:32] Viji - Kovai: சுவையானது

[7/17, 20:00] Venkat: சுவையானது🙏🏾

[7/17, 20:03] Usha Chennai: சுவையானது
J
***************************

Popular posts from this blog

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்