Skip to main content

விடை 4146

இன்று காலை வெளியான வெடி:
நாற்றை ஊன்ற நீரை வெளியேற்று பாக்கை முனை வெட்டிச் செயல்பாடு (6)
அதற்கான விடை: நடவடிக்கை = நட (நாற்றை நடுவதற்கு) + வடி (நீரை வெளியேற்று + பாக்கை - பா
காலையில் புதிரைவெளியிட்ட 20 நிமிடங் கழித்து இன்னமும் சுருக்கமாகப் பண்ணியிருக்கலாம் என்று தோன்றியது. அதற்குள் பத்து பேருக்கு மேல் வந்து விட்டதால் அப்படியே விட்டுவிட்டேன். மாற்ற நினைத்த வடிவம்:
நாற்றை ஊன்ற நீரை வெளியேற்று பொக்கை வாயில்லாமல் போக்கு (6)

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
உதிரிவெடி 4146
********************
_சிந்தித்தலின் ஊடாக சிந்தனைகள் அல்லது எண்ணங்கள்பெறப்படுகின்றன._ _இந்த எண்ணங்கள் மொழி, கணிதம், ஓவியம், இசை, கலைப்பொருட்கள், மனித *செயற்பாடுகள்* என பல வடிவங்களில் வெளிப்படுகின்றன._
********************
_நாற்றை ஊன்ற நீரை வெளியேற்று பாக்கை முனை வெட்டிச் செயல்பாடு (6)_ 

_நாற்றை ஊன்ற_
= *நட*

_நீரை வெளியேற்று_
= *வடி*

_பாக்கை முனை வெட்டி_
= *க்கை*

_செயல்பாடு_
= *நட +வடி +க்கை*
= *நடவடிக்கை*

*************************
*கவிதை செயல்பாடு*

_கவிதை என்பது மொழியின் *செயல்பாடு* மட்டுமன்று; அது மனத்தின் செயல்பாடு._ மொழியின் வாயிலாக நிகழ்த்திக்காட்டும் மனத்தின் செயல்பாடு. தன்னை தன்கருத்தை, தன்எண்ணத்தை எழுதிப்பார்க்கிற ஏற்பாடு. அதில் ஒரு கவிஞன் வெளிப்படுவது என்பது தான் அவனின் தனித்துவம். அது,அவன் சார்ந்தது. அவனின் திறன், மொழிவளம் சார்ந்தது. கவிதைப் போக்கின் எண் திசைக் கோணத்தில் எதில் பொருத்திக் கொள்வதென்பது அவனின் உரிமை. கவிதையாக்கத்தின் வாயிலாக சிலர் கொண்டாடக்கூடும். சிலர் நகர்ந்து செல்லக்கூடும். அவரவரின் எதிர்பார்ப்பும் அவாவும் கவிதை பற்றிய முன்முடிவுகளும் அவற்றின் காரணிகளாம். 

( தமிழ்மணவாளன்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 26-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

எண்ணம் தொடங்கி முடியும் உறுப்பு (2)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 26-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_சிந்தனை செய் மனமே..._
_சிந்தனை செய் மனமே தினமே...._
_செய்தால் தீவினை அகன்றிடுமே_
_சிவகாமி மகனை ஷண்முகனை_

_சிந்தனை செய் மனமே செய்தால் தீவினை அகன்றிடுமே_

(அம்பிகாபதி:1957)
***********************
*சிந்தனை' பொன்மொழிகள்*

*சிந்தனை என்பது உள்ளத்தின் விளக்கு.
-  மலேயா

* தொடங்கும்போது முடிவைச் சிந்தனை செய்.  
- பல்கேரியா

* முதலில் சிந்தனை செய்யாதவன் முடிவில் கொட்டாவி  விடுகிறான்.  
- இத்தாலி

* உயர்ந்த சிந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவந்தால் அவை பெருஞ்செயல்களாகும்! 
- இங்கிலாந்து

* நிறையச் சிந்தியுங்கள்!...., குறைவாகப் பேசுங்கள். -  பிரான்சு

* வாழ்வு என்பதே சிந்தனை!  
-  கிரேக்கம்

* தனக்குத் தானே ஒருவன் பேசிக்கொள்வதே சிந்தனை!  
- ஸ்பெயின்.

(dinamani.com)
*************************
_எண்ணம் தொடங்கி முடியும் உறுப்பு (2)_

_எண்ணம்_
= *சிந்தனை*

_தொடங்கி முடியும்_
= _indicator for first and last letters_
= *சி[ந்த]னை*
= *சினை*

_உறுப்பு_ = *சினை*
*************************
*சினை* (பெ)
பொருள்:
விலங்கு முதலியவற்றின் 
சூல்
முட்டை
பூமொட்டு
மரக்கிளை
*உறுப்பு*
மூங்கில்
***********************
*சினை* என்றால் *உறுப்பு* என்றுபொருள். ... அதுபோல ஒரு பொருளின் பகுதியாக மற்றோருபொருள் இருப்பதைச் *சினைப்பெயர்* என்கிறோம். கருவைத் தன்னகத்தே கொண்டுள்ள முட்டையைச்  *சினை* என்கிறோம்.
***********************
*சிறுபஞ்சமூலம் (09)*

_சிலம்பிக்குத் தன்சினை கூற்றம் !_

வாழ்வின் இறுதியும்  அதனுடன் இணைந்தே வருகிறது !

பதினெண்கீழ்க் கணக்கு நூல்களுள் சிறுபஞ்ச மூலமும் ஒன்று. 102 பாடல்களைக்    கொண்ட    இந்நூலை   இயற்றியவர்  காரியாசான் என்னும் புலவர்.
************
பாடல்.09.

_சிலம்பிக்குத் தன்சினை கூற்றம்; நீள்கோடு_

_விலங்கிற்குக் கூற்றம்; மயிர்தான் வலம்படா_

_மாவிற்குக் கூற்றமாம்; ஞெண்டிற்குத் தன்பார்ப்பு;_

_நாவிற்கு நன்றுஅல் வசை._

*பொருளுரை:*
சிலந்திப் பூச்சிக்கு அழிவைத் தருவது அதன் முட்டை. முட்டை பொரித்து குஞ்சு வெளிவரும் நிலையில் தாய்ச் சிலந்தி இறந்துவிடும்; நீண்ட கொம்பினை உடைய கலைமான் போன்றவை காட்டில் மரங்களுக்கு இடையே ஓடுகையில் அதன் கொம்புகள் மரக் கிளைகளில் சிக்கிக் கொண்டு, அதன் விளைவாக மான் இறந்து போக நேரும். ஆகையால் மான் போன்ற விலங்குகளுக்கு அதன்
கொம்புகளே அழிவைத் தரும். கவரி மானின் வாலில் உள்ள முடி மகளிருக்குப் பொய்முடியாகப் பயன்படுவதால், அதை வேட்டையாடி வாலைத் துண்டித்து விடுகின்றனர். இந்த வகையில் கவரி மானுக்கு அதன் வால் முடியே கூற்றமாக அமைகிறது. நீரில் வாழும் நண்டு குஞ்சு பொரித்தவுடன் இறந்துவிடும். எனவே நண்டுக்கு அதன் குஞ்சுகளே கூற்றமாக அமைந்து விடுகிறது. நல்லனவற்றையே பேசவேண்டிய நாக்கு, எப்பொழுது தீயனவற்றைப் பேசத் தொடங்குகிறதோ,அந்த நொடியே அம்மனிதனுக்கு கேடுகாலம் தொடங்கிவிடுகிறது. எனவே வசை மொழிகளே நாவிற்குக் கூற்றமாக அமைகிறது !

( ”தமிழ்ப் பணி மன்றம்” )
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[7/26, 07:08] திரைக்கதம்பம் Ramarao: சினை
[
[7/26, 07:09] A Balasubramanian: சினை
A.Balasubramanian
[
[7/26, 07:18] Venkat: சினை🙏🏾

[7/26, 07:26] மாலதி: சினை

[7/26, 07:27] Meenakshi: விடை:சினை
எண்ணம்=சிந்தனை. தொடங்கி முடியும்=சினை

[7/26, 07:28] மீ.கண்ணண்.: சினை
[
[7/26, 07:38] sridharan: சினை.
எண்ணம்=சிந்தனை
உறுப்பு=சினை

[7/26, 07:54] nagarajan: *சினை*

[7/26, 08:04] stat senthil: சினை

[7/26, 08:10] ஆர். நாராயணன்.: சினை
[
[7/26, 08:14] Bhanu Sridhar: மூளை
[7/25, 07:47] joseph amirtharaj: ✅🙏
[7/26, 08:26] joseph amirtharaj: சினை
[7/26, 08:40] கு.கனகசபாபதி, மும்பை: சினை
[
[7/26, 09:51] siddhan subramanian: சினை (சிந்தனை - முதலும் முடிவும்

[7/26, 10:03] Revathi Natraj: சினை

[7/26, 12:35] ஆர்.பத்மா: சினை

[7/26, 13:21] வானதி: *சினை*
சிந்தனை

[7/26, 08:26] joseph amirtharaj: சினை

[7/26, 19:52] Usha Chennai: சினை

[7/26, 20:13] G Venkataraman: மதி ( மனஉறுதி)

[7/26, 20:36] shanthi narayanan: சினை

[7/26, 22:34] sankara subramaiam: சினை

[7/27, 04:09] G Venkataraman: சினை

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 27-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

கண்டு கொள்ளாமல் ராமு குடியிருக்கும் நாய் வால் வைத்த பாகமா? (6)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 27-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
மன்மத லீலையை வென்றார் உண்டோ
மன்மத லீலையை வென்றார் உண்டோ
என் மேல் உனக்கேனோ *_பாராமுகம்_* (மன்மத) 

நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
ரம்பா! ஸ்வாமி!
நின் மதி வதனமும் நீள் விழியும் கண்டு
என் மதி மயங்கினேன் நான்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும்
என் மதி மயங்கினேன் மூன்று உலகிலும் (மன்மத) 
( ஹரிதாஸ் :1944)
***********************
இன்னமும் *பாராமுகம்* ஏனம்மா, ஏழை 
இடர் தவிர்ப்பது பாரம்மா – அம்மா (இன்னமும்)

கண்ணில்லையோ உனது காதென்ன செவிடோ 
என் குறையை என்னிலையை நீ அறியாயோ (இன்னமும்)

பெற்ற 
தாயிருக்க பிள்ளை ஏங்கலாமோ 
நீ இருக்க நானும் நோகலாமோ
 
இன்னமும் *பாராமுகம்* ஏனம்மா.....

Velaikkari (1949)
***********************
_கண்டு கொள்ளாமல் ராமு குடியிருக்கும் நாய் வால் வைத்த பாகமா? (6)_

_நாய் வால்_
= _last letter in நாய்_
= *ய்*
_நாய் வால் வைத்த பாகமா_
= *பாகமாய்*
_ராமு குடியிருக்கும்_
= _ராமு inside பாகமாய்_

= *பா(ராமு)கமாய்*
= *பாராமுகமாய்*
= _கண்டு கொள்ளாமல்_
*************************
*மீராவின் கண்ணன்!*

தீராமல் விளையாடி ஓயாத உன்னை
சேராமல் எங்ஙனம் நான்வாடி நிற்பேன்?
ஓராயிரம் முறை உன் நாமம் சொல்வேன்
*பாராமுகம் ஏனோ* பார்த்திடு கண்ணா!

பூதகி மார்பில் பூவிதழ் பதித்தாய் 
சாதலின் மூலம் சாபமும் தீர்த்தாய் 
ஓதிட ஓதிட உன்நாமம் இனிக்கும்
வேதத்தின் மூலனே வெல்எனை கண்ணா!

(கலைவேந்தன்)
***********************
*பாராமுகம் என்பதற்கு எதிரான முதல்படி, உற்று நோக்குதல்*

உற்றுநோக்குவது என்பது அன்பின் செயல்பாடு,
ஏனெனில், பெற்றோர் தங்கள் குழந்தையை அன்புடன் உற்றுநோக்குகின்றனர், காதலர்கள் ஒருவரையொருவர் பாசமுடன் நோக்குகின்றனர், மருத்துவர், நோயாளியை அக்கறையுடன் நோக்குகிறார்.

*பாராமுகம்* என்பதற்கு எதிரான முதல்படி, உற்று நோக்குதலேயாகும், துயர்களையும் துன்பங்களையும் எதிர்கொள்ளும்போது அதிலிருந்து முகத்தைத் திருப்பிக்கொண்டு விலகி ஓடும் சோதனைக்கு எதிரானது இந்த உற்று நோக்கல்.

(திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்.)
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[7/27, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பாராமுகமாய்

[7/27, 07:01] V N Krishnan.: பராமுகமாய்

[7/27, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பாராமுகமாக🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/27, 07:05] மீ.கண்ணண்.: பாராமுகமாய்

[7/27, 07:11] Meenakshi: விடை:பாராமுகமாய்

[7/27, 07:16] sathish: பாராமுகமாய்

[7/27, 07:18] A Balasubramanian: பாராமுகமாய்
A.Balasubramanian
[
[7/27, 07:19] பாலூ மீ.: பாராமுகமாய்.

[7/27, 07:30] chithanandam: பாராமுகமாய்

[7/27, 07:33] Dr. Ramakrishna Easwaran: பாராமுகமாய்

[7/27, 07:45] sridharan: பாராமுகமாய்

[7/27, 07:46] prasath venugopal: பாராமுகமாய்

[7/27, 07:50] stat senthil: பாராமுகமாய்
[
[7/27, 07:50] joseph amirtharaj: பாராமுகமாய்
[
[7/27, 07:52] nagarajan: *பாராமுகமாக*
[
[7/27, 07:55] மாலதி: பாராமுகமாய்

[7/27, 08:11] Ramki Krishnan: பாராமுகமாய்
[
[7/27, 08:16] akila sridharan: பாராமுகமாய்
[
[7/27, 08:17] siddhan subramanian: பாராமுகமாய்  (ராமு + பாகமா + ய்)

[7/27, 08:37] ஆர். நாராயணன்.: பாராமுகமாய்
[
[7/27, 09:04] Bharathi: பாராமுகமாய்

[7/27, 09:40] ஆர்.பத்மா: பாராமுகமாய்
[
[7/27, 10:31] G Venkataraman: *பாராமுகமாய்*

[7/27, 11:58] Bhanu Sridhar: பாராமுகமாய்
*Puzzle sounded so* *complicated round about.*

[7/27, 12:14] shanthi narayanan: பாராமுகமா

[7/27, 12:37] கு.கனகசபாபதி, மும்பை: பாராமுகமாய்
[
[7/27, 13:43] வானதி: *பாராமுகமாய்*

[7/27, 19:15] sankara subramaiam: பாராமுகமாய்
[.
[7/27, 19:16] Venkat: பாராமுகமாய்🙏🏾☺️
[
[7/27, 19:42] Rohini Ramachandran: *Paaraamukamaai*

[7/27, 19:59] balagopal: பாராமுகம்.
[
[7/27, 22:35] Revathi Natraj: பாராமுகமாய்

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 28-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

வள்ளி தலைதூக்கும் முன் புரட்ட வணக்கத்துக்குரியவர் படுத்திருப்பது (6)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************

Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 28-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*********************** *திருப்பள்ளியெழுச்சி* என்பது இறைவனைத் துயில் எழுப்புவதாகவும் நம்மில் ஆன்மீக விழிப்பின்றி உறங்கிக் கொண்டிருக்கும் ஆத்மாவைத் துயிலெழுப்பி இறைவனின் கருணையை உணரச் செய்வதாகவும் பாடப்படும் பாடல்கள் ஆகும். 'சுப்ரபாதம்' என்பது இதன் இணையான சமஸ்கிருதச் சொல்லாகும்.
***********************
_வள்ளி தலைதூக்கும் முன் புரட்ட வணக்கத்துக்குரியவர் படுத்திருப்பது (6)_

_வள்ளி தலைதூக்கும்_
= _வள்ளி தலை தூக்கும்_
= _To remove first letter from வள்ளி_
= *ள்ளி*

_புரட்ட_ = *திருப்ப*
_வள்ளி தலைதூக்கும் முன் புரட்ட_
= *திருப்ப+ள்ளி*
= *திருப்பள்ளி*
= _வணக்கத்துக்குரியவர் படுத்திருப்பது_
***********************
பக்தி இலக்கியங்களில் ஓர் அழகான, நேசவடிவான உட்பிரிவு, திருப்பள்ளியெழுச்சி. பள்ளி என்றால் படுக்கை என்பது பொருள். துயின்றுகொண்டிருக்கும் இறைவனை விழித்தெழுமாறு வேண்டிப் பாடும் பாடல்கள் இவை. திருமாலுக்குத் தொண்டரடிப்பொடியாழ்வாரும், சிவபெருமானுக்கு மாணிக்கவாசகரும் ‘திருப்பள்ளியெழுச்சி பாடியிருக்கிறார்கள்.
***********************
தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பள்ளியெழுச்சிவகை படைப்புகளுக்கு முன்னோடியாக திகழ்கிறது. மார்கழியில் மட்டும் திருமலை உட்பட அனைத்து வைணவ ஆலயங்களிலும் தொண்டரடிப்பொடியாழ்வார் தமிழில் இயற்றிய அரங்கநாதன் மீது பாடப்பட்ட திருப்பள்ளியெழுச்சியே பாடப்பெற்று வருகிறது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[7/28, 07:00] திரைக்கதம்பம் Ramarao: திருப்பள்ளி

[7/28, 07:06] Meenakshi: விடை:திருப்பள்ளி

[7/28, 07:07] A Balasubramanian: திருப்பள்ளி
A.Balasubramanian

[7/28, 07:10] V N Krishnan.: திருப்பள்ளி

[7/28, 07:13] பாலூ மீ.: திருப்பள்ளி.

[7/28, 07:18] Dhayanandan: *திருப்பள்ளி*
[
[7/28, 07:19] மீ.கண்ணண்.: திருப்பள்ளி

[7/28, 07:24] Dr. Ramakrishna Easwaran:
*திருப்பள்ளி*
வள்ளி தலை தூக்கு= ~வ~ *ள்ளி*
வணக்கத்துக்குரியவர்= *திரு*
முன்= திரு என்பதை ள்ளி என்பதற்கு முன்னால் இடும் குறியீடு
திரு+பள்ளி= திருப்பள்ளி= படுத்திருப்பது (definition)

[7/28, 07:34] stat senthil: திருப்பள்ளி

[7/28, 07:39] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏திருப்பள்ளி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/28, 07:45] மாலதி: திருப்பள்ளி
[
[7/28, 07:46] கு.கனகசபாபதி, மும்பை: திருப்பள்ளி
[
[7/28, 07:53] nagarajan: *திருப்பள்ளி*
[
[7/28, 08:12] siddhan subramanian: *திருப்பள்ளி + முன் புரட்ட = திருப்ப)*
[
[7/28, 08:13] akila sridharan: திருப்பள்ளி

[7/28, 09:16] ஆர். நாராயணன்.: திருப்ப ள்ளி

[7/28, 10:44] joseph amirtharaj: திருப்பள்ளி

7/28, 11:39] Bhanu Sridhar: திருப்பள்ளி

[7/28, 19:20] N T Nathan: திருப்பள்ளி

[7/28, 19:24] sridharan: திருப்பள்ளி

[7/28, 20:16] shanthi narayanan: திருப்பள்ளி

[7/28, 21:51] வானதி: *திருப்பள்ளி*

[7/28, 21:54] sankara subramaiam: திருப்பள்ளி

[7/28, 22:16] Revathi Natraj: திருப்பள்ளி

[7/28, 19:28] Bharathi: *திருப்பள்ளி*

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 29-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

முடிவில்லா நியதி மாயா மாற்றியது நேர்மையானதா? (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
**********************
_நெஞ்சம் உண்டு *நேர்மை* உண்டு ஓடு ராஜா_
_நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா_

_அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா_
_நீ ஆற்று வெள்ளம் போலெழுந்து_
_ஓடு ராஜா_
_நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு_
_ஓடு ராஜா_
_நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா_

( என் அண்ணன்:1970)
**********************
*நேர்மையே பெரும் சொத்து!*
நேர்மை என்பது உண்மையான உண்மை; அது மனித வாழ்வின் உன்னதம்; உயரிய வாழ்க்கையின் குறியீடு; மனிதனின் மிகப் பெரிய சொத்து.
*****
தனக்கு *நேர்மையாக* இருப்பது உன்னதம், தன்னை நேசிப்பவர்களிடத்தில் நேர்மையாக இருப்பது மகத்துவம்.
*****
 "எல்லா செயல்பாடுகளிலும், *நேர்மையாக* இரு. உனது தொழிலில் நேர்மையாய் இரு. இல்லையெனில் நேர்மையுள்ள தொழிலுக்கு மாற்றிக்கொள்'" என்றார் அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் *ஆப்ரகாம் லிங்கன்.* 
*****
நேர்மையாக வாழ்வதில் சிரமம் இருக்கதான் செய்யும். இருப்பினும் மனதில் துணிவுடன் இருந்தால் நேர்மையாக வாழ்ந்து முன்னேற்றத்திற்கு வழி காணலாம்.
***********************
_முடிவில்லா நியதி மாயா மாற்றியது நேர்மையானதா? (4)_

_முடிவில்லா நியதி_
= _நியதி without last letter_
= *நிய*

_மாற்றியது_ = _anagram indicator for நிய+ மாயா_
= *நியாயமா*

_நேர்மையானதா_
= *நியாயமா*
*************************
_சந்தனத் தென்றலை ஜன்னல்கள்_ _தண்டித்தல் நியாயமா நியாயமா?_
_காதலின் கேள்விக்குக் கண்களின் பதில் என்ன மௌனமா மௌனமா?_

படம்: கண்டுகொண்டேன்
(1999)
*************************
*ஒரு நீதி நியாயம் கேட்கிறது*

உலகிற்கு வெளிச்சம் தரும் 
காரணத்தால் மட்டும் 
சூரியனின் வாதம் கேட்டு 
சந்திரனை தண்டித்தல் *நியாயமே ?*

பூமிக்கும் மேகத்திற்கும் 
நடக்கும் சண்டையில் 
மழையைத் தண்டித்தல் *நியாயமே ?*

பூவின் வாதம் கேட்டு 
தேன் திருடுவதாய் 
வண்டை தண்டித்தால் 
மகரந்த சேர்கை ஏது ?

உள்ளம் திருடியதாய் 
காதலர்களைத் தண்டித்தால் 
காதல் தான் ஏது ?

விதை திருடியதாய் 
நிலத்தை தண்டித்தால் 
மண்ணில் மரங்கள்தான் ஏது ?

மழைத்துளிகளைத் திருடுவதாய் 
கடலைத் தண்டித்தால் 
விலை உயர்ந்த முத்துக்கள் ஏது ?

வாயைத் திறந்து 
உலகத்தைக் காட்ட 
வெண்ணை திருடும் 
மாயக் கண்ணனல்ல நான் !

கொடை வள்ளல் கர்ணனின் 
புண்ணியத்தையும் திருட 
பரந்தாமனல்ல நான் !

ஏவல் மட்டும் அல்ல 
இடமும், பொருளும் 
அறியாது பேசும் 
பேச்சாளன் நான் !

*நியாயம்* பேசும் இடத்தில் 
மெனமாய் நிற்கும் 
நிராயுதபானி நான் !

*_என் நியாயத்தையும்  ஒரு முறை கேளுங்கள்_* 
*_முடிவுகள் எடுக்கப்படும் முன்னர்..._*

- ஆனந்தன்
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[
[7/29, 07:00] திரைக்கதம்பம் Ramarao: நியாயமா
[
[7/29, 07:00] Dr. Ramakrishna Easwaran: *நியாயமா*
[
[7/29, 07:03] sathish: நியாயமா

[7/29, 07:03] A Balasubramanian: நியாயமா
A.Balasubramanian

[7/29, 07:04] sridharan: நியாயமா

[7/29, 07:05] மாலதி: நியாயமா

[7/29, 07:05] Rohini Ramachandran: நியாயமா

[7/29, 07:05] மீ.கண்ணண்.: நியாயமா

[7/29, 07:06] Meenakshi: விடை:நியாயமா
[
[7/29, 07:09] பாலூ மீ.: நியாயமா.

[7/29, 07:09] Usha Chennai: நியாயமா

[7/29, 07:11] பானுமதி: நியாயமா?

[7/29, 07:12] chithanandam: நியாயமா

[7/29, 07:15] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏நியாயமா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/29, 07:40] G Venkataraman: நியாயமா?

[7/29, 07:42] akila sridharan: நியாயமா

[7/29, 07:45] stat senthil: நியாயமா

[7/29, 07:47] N T Nathan: நியாயமா
[
[7/29, 07:50] nagarajan: *நியாயமா*
[
[7/29, 07:51] prasath venugopal: நியாயமா
[
[7/29, 07:57] sankara subramaiam: நியாயமா
[
[7/29, 08:25] joseph amirtharaj: நியாயமா?

[7/29, 08:31] V R Raman: நியாயமா

[7/29, 08:36] ஆர். நாராயணன்.: நியாயமா
[
[7/29, 08:37] கு.கனகசபாபதி, மும்பை: நியாயமா

[7/29, 08:26] Bharathi: நியாயமா
[
[7/29, 08:51] ஆர்.பத்மா: நியாயமா

[7/29, 09:06] Dhayanandan: *நியாயமா*

[7/29, 09:09] Viji - Kovai: நியாயமா

[7/29, 09:11] வானதி: *நியாயமா*

[7/29, 09:33] Bhanu Sridhar: நியாயமா

[7/29, 09:48] Revathi Natraj: நியாயமா

[7/29, 10:06] A D வேதாந்தம்: விடை=நியாயமா( வேதாந்தம்)

[
[7/29, 10:15] *balagopal:* *நியாயம்*
[
[7/29, 11:43] siddhan subramanian: நியாயமா

[7/29, 12:20] shanthi narayanan: நியாயமா

[7/29, 19:21] Venkat: நியாயமா? 🙏🏾

[7/29, 22:25] V N Krishnan.: நியாயமா?


*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 30-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

அலுப்பு காட்டாத சோழர் இடையொடித்து உடலின் பக்கவாட்டுப் பகுதியை ஒட்டவைத்தார் (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 30-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
கல்வியில் பெருக்கம் வேண்டும்
கலைகளில் புதுமை வேண்டும்
சொல்லிலே உண்மை வேண்டும்
*சோர்விலா உள்ளம் வேண்டும்*
கல்லிணுள் தேரை போல
உலகினை எட்டிக் காணாப்
புல்லியநிலையை ஞானத்
தீயினாற் புகைத்தல் வேண்டும்

( *அறிஞர் அண்ணாவின் கவிதை* )
***********************

*ஸ்ரீ அனுமன், ஆஞ்சநேயர் துதி.*

_சொல்லுரம் பெற்ற *சோர்விலா* தூயவீரன்_

_வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்_ 

_அல்லலைப் போக்கிக் காக்கும் அநுமனைப் பாடும் காலை_ 

_கல்லினைப் பெண்ணாய்ச்_ _செய்தான் கழலிணைப் போற்றுவோமே_

🙏🙏🙏

*(கம்பராமாயணப் பாடல்)*
**********************
_அலுப்பு காட்டாத சோழர் இடையொடித்து உடலின் பக்கவாட்டுப் பகுதியை ஒட்டவைத்தார் (4)_

_சோழர் இடையொடித்து_
= _சோ[ழ]ர்_
= *சோர்*

_உடலின் பக்கவாட்டுப் பகுதி_
= *விலா*

_ஒட்டவைத்தார்_
= _indicator for joining *சோர்+ விலா*_
= *சோர்விலா*

= _அலுப்பு காட்டாத_
*************************
_தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற_

_சொற்காத்துச் சோர்விலாள் பெண்_

(அதிகாரம்:வாழ்க்கைத்துணை நலம்:
குறள் எண்:56) 

பொழிப்பு
(மு வரதராசன்): 
கற்புநெறியில் தன்னையும் காத்துக்கொண்டு, தன் கணவனையும் காப்பாற்றி, தகுதியமைந்த புகழையும் காத்து, உறுதி தளராமல் வாழ்கின்றவளே பெண். 
******
*சோர்விலாள்:*
_சோர்வு இலாள்_ என்பது தளர்ச்சி அல்லது அயர்வு அடையாதவள் என்ற பொருள் தருவது. 
சோர்வு என்பதற்கு மறத்தல் என்றும் கடைப்பிடி யுடையாள்- அதாவது மறவாது உறுதியாகப் பற்றி நிற்பவள் என்றும் பொருள் கொள்வர். மனைவியானவள் மேற்சொன்ன மூன்று காத்தல் கடன்களையும், உடலுரமும் உள்ள உரமும் கொண்டு, வாட்டம் இல்லாமல் செய்து சுறுசுறுப்பாக இருப்பாள்.

தற்காக்கும் மறம் கொண்டு, தற்கொண்டானிடம் அன்பூட்டியும், இன்பூட்டியும், உணவூட்டியும் அக்கறை காட்டி, பெருமை மிக்க தம் இருவரது நற்பெயரை என்றும் நிலைநிறுத்தப் பாடுபட்டு, இப்பெரும் சுமையை விருப்புடன் ஏற்றுச் சுறுசுறுப்புடன் செயல்படுவாள் மனைவி என்கிறது பாடல்.

(இக்குறள் பெண்ணடிமை பேசுகிறதா?🤔)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[7/30, 06:59] திரைக்கதம்பம் Ramarao: சோர்விலா

[7/30, 07:01] sridharan: சோர்விலா

[7/30, 07:01] stat senthil: சோர்விலா

[7/30, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சோர்விலா🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[7/30, 07:02] Venkat: சோர்விலா 🙏🏾
[
[7/30, 07:02] A Balasubramanian: சோர்விலா
A.Balasubramanian

[7/30, 07:03] மீ.கண்ணண்.: சோர்விலா
[
[7/30, 07:04] Dhayanandan: *சோர்விலா*
[
[7/30, 07:08] V N Krishnan.: சோர்விலா. அலுப்பு காட்டாத

[7/30, 07:11] பாலூ மீ.: இடுப்பு.

[7/30, 07:14] Bhanu Sridhar: சோர்விலா

[7/30, 07:16] G Venkataraman: சோர்விலா - அலுப்பு காட்டாத

[7/30, 07:17] Meenakshi: விடை:சோர்விலா

[7/30, 07:22] akila sridharan: சோர்விலா

[7/30, 07:26] ஆர். நாராயணன்.: சோர்விலா

[7/30, 07:26] Dr. Ramakrishna Easwaran: *சோர்விலா*
[
[7/30, 07:38] prasath venugopal: சோர்விலா

[7/30, 07:39] nagarajan: *சோர்விலா*

[7/30, 08:15] கு.கனகசபாபதி, மும்பை: சோர்விலா

[7/30, 08:23] ஆர்.பத்மா: சோர்விலா

[7/30, 08:35] joseph amirtharaj: சோர்விலா
[
[7/30, 08:41] siddhan subramanian: சோர்விலா

[7/30, 08:46] மாலதி: சோர்விலா

[7/30, 08:53] Usha Chennai: சோர்விலா

[7/30, 09:17] வானதி: *சோர்விலா*

[7/30, 12:15] shanthi narayanan: சோர்விலா

[7/30, 12:44] Viji - Kovai: சோர்விலா

[7/30, 14:16] Rohini Ramachandran: சோர்விலா

[7/30, 19:26] sankara subramaiam: சோர்விலா

[7/30, 19:32] Bharathi: *சோர்விலா*

[7/30, 19:34] Ramki Krishnan: சோர்விலா
[
[7/30, 19:57] Revathi Natraj: சோர்விலா

*****************************..
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 31-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

கடித்துத் துப்புவதை எறிந்து நரகம் வந்து வம்பில் சிக்க எல்லை (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 31-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_கடித்துத் துப்புவதை எறிந்து நரகம் வந்து வம்பில் சிக்க எல்லை (4)_

_கடித்துத் துப்புவது_
= *நகம்*

_எறிந்து_ = _deletion indicator to delete நகம் from நரகம்_
= *ர*

_வந்து வம்பில் சிக்க_
= *ர* _வந்து_ *வம்பில்* _சிக்க_
= *ர ---> வம்பு*
= *வரம்பு*

= _எல்லை_
*************************
*வரம்பு என்றால் என்ன:*

வரம்பு என்பது உண்மையான அல்லது கற்பனையானதாக இருந்தாலும், இரு நிறுவனங்கள் அல்லது பிரதேசங்களுக்கு இடையேயான பிளவு கோடு என்று புரிந்து கொள்ளப்படுகிறது. இந்த சொல் லத்தீன் _லிமிஸிலிருந்து வந்தது ,_ அதாவது 'எல்லை' அல்லது 'விளிம்பு'. 

இரண்டாவது அர்த்தத்தில்,  _வரம்பு_ என்பது எதையாவது காலத்தை அடைய வேண்டும் அல்லது அதன் அதிகபட்ச வளர்ச்சி புள்ளியை எட்டிய புள்ளியைக் குறிக்கிறது. உதாரணமாக: "தடகள வீரர் தனது வேகத்தின் வரம்பை எட்டியுள்ளார்"

ஏதேனும் அவசியமான அல்லது கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதைக் குறிக்க அல்லது அவசர கவனம் தேவைப்படும் ஒரு தீவிர சூழ்நிலையை விவரிக்கவும் இது அடையாளப்பூர்வமாகப் பயன்படுத்தப்படுகிறது.
எ.கா.
"உலகில் பசி ஒரு வரம்பு நிலையை அடைந்துள்ளது."
******
*கணிதத்தில் வரம்புகள்*

கணிதத்தில்,  _வரம்பு_ என்பது ஒரு வரிசையின் விதிமுறைகள் ஒருவருக்கொருவர் அணுகும் நிலையான அளவைக் குறிக்கிறது. இது உண்மையான மற்றும் சிக்கலான பகுப்பாய்வில் பயன்படுத்தப்படுகிறது.
************************
*கவிதை*

_கவிதை வரையறையற்றது._
_*வரம்புகளை* உடைப்பதே கவிதையின் சிறப்பம்சம்._

ஒரு கவிதை எப்பொழுது கட்டுக்களை தகர்த்துக்கொண்டு முகிழ்கிறதோ, அப்பொழுதே அது பூரணத்துவம் பெறுகிறது. ஒரு சிறந்த கவிதை அதை வாசிக்கின்ற வாசகனை தன்னுள் முழுமையாக ஈர்த்துக்கொள்ள வேண்டும்

(மித்திரன்.காம் )
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[7/31, 07:01] stat senthil: வரம்பு

[7/31, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வரம்பு

[7/31, 07:02] Dr. Ramakrishna Easwaran: *வரம்பு*

[7/31, 07:02] மீ.கண்ணண்.: வரம்பு

7/31, 07:04] chithanandam: வரம்பு

[7/31, 07:05] Ramki Krishnan: வரம்பு

[7/31, 07:07] ஆர்.பத்மா: வரம்பு

[7/31, 07:08] Meenakshi: விடை:வரம்பு

[7/31, 07:14] பாலூ மீ.: வரம்பு.

[7/31, 07:19] A Balasubramanian: வரம்பு
A.Balasubramanian
[
[7/31, 07:24] Rohini Ramachandran: வரம்பு
[7/31, 07:31] G Venkataraman: வரம்புa
[7/31, 07:36] V N Krishnan.: வரம்பு. எல்லை
[
[7/31, 07:41] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏வரம்பு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[7/31, 07:48] joseph amirtharaj: வரம்பு
[
[7/31, 07:49] கு.கனகசபாபதி, மும்பை: வரம்பு

[7/31, 07:58] nagarajan: *வரம்பு*

[7/31, 08:11] Bhanu Sridhar: வரம்பு

[7/31, 08:14] prasath venugopal: வரம்பு
[
[7/31, 08:14] sridharan: வரம்பு
நரகம்-நகம்+வம்பு.
[
[7/31, 08:16] Dhayanandan: *வரம்பு*
[
[7/31, 08:47] மாலதி: வரைமுறை

[7/31, 10:39] Revathi Natraj: வரம்பு

[7/31, 10:52] வானதி: *வரம்பு*

[7/31, 12:27] shanthi narayanan: வரம்பு

[7/31, 14:23] siddhan subramanian: *வரம்பு* *துப்புவது- நகம் -நரகம் -* *நகம்* = *ர - வம்பு + ர* = *வரம்பு*

[7/31, 16:42] Viji - Kovai: வரம்பு

[7/31, 19:34] sankara subramaiam: வரம்பு



*****************************..

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்