Skip to main content

விடை 4145

இன்று காலை வெளியான வெடி:
கண்ணாளா இடை ஒடுங்கியது கதவிலிருக்கும் (4)
அதற்கான விடை: கண்ணாளா=நாதா+ங்கி(ஒடுங்கியது இடை)

ஆனாலும் இன்றைய புதிரில் ஒரு பிழை. கதவிலிருப்பது தாழ்ப்பாள்தான். கதவை ஒட்டியிருக்கும் நிலையில்தான் நாதாங்கி இருக்கும். ஏதோ ஒரு சில இடத்தில் அது மாறியிருக்கலாம். எப்படியோ வழக்கம்போல் பலரும் விடையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
உதிரிவெடி 4145
********************** 
Definition of நாதாங்கி

*நாதாங்கி*

பெயர்ச்சொல் 
(வட்டார வழக்கு)

நிலைச் சட்டத்தில் உள்ள கொக்கியில் பிணைப்பதற்காகக் கதவில் பொருத்தப்பட்டுள்ள வளையம்;
latch in the form of a chain (attached to a door to fasten)
**************************
கண்ணாளா இடை ஒடுங்கியது கதவிலிருக்கும் (4) 

கண்ணாளா = நாதா

இடை ஒடுங்கியது
= ஒடு[ங்கி]யது
= ங்கி

கதவிலிருக்கும்
= நாதா+ங்கி

= *நாதாங்கி*
**************************
_நாதாங்கி_

தாளிடப்பட்ட கதவின் பின்

பயந்து ஒளிந்திருக்கும் ஒருவரை

எத்தனை முறைதான் அழைப்பது ?

*தட்டத் தட்ட அதிர்கிறது*

*நாதாங்கி.*

உள் அலையும் சுவாசம்

வெப்பமாக்குகிறது அறைக்கதவை

சண்டையிட அல்ல

சமாதானத்துக்கே அந்த அழைப்பென்பதை

கதவு திறவாத ஒருவரிடம்

கத்தாமல் தெரிவிப்பதெப்படி

மீன்முள்ளாய் மாட்டிய செய்தியை

துப்பவும் விழுங்கவுமியலாது

தினம் வாசல் வரை வந்து திரும்பும்

சூரியனைப் போல மீள்கிறேன்.

புறத்திருந்து உழிந்த எச்சிலாய்

முதுகில் குளிர்கிறது காற்று

சாளரங்கள் திறந்திருக்கக்கூடும்

சுதந்திரமாய்.

திரும்பிப்பார்க்க விழையும்மனதை

இழுத்து விரைகிறேன்.

கவிழ்கிறது இரவு என்பின்

எழும்புகிறது நிலவு
எதையும் உயிர்ப்பிக்காது என்னுள்

(எழுதியது: thenammai)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 19-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

உன்னதமான தன்மை மாசி பௌர்ணமியில் வடித்து இரண்டறக் கலந்தது (6)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
_*A peek into today's riddle!*_
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 19-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
ஓடி ஓடி உழைக்கணும் ஊருக்கெல்லாம் கொடுக்கணும்
ஆடி பாடி நடக்கணும் அன்பை நாளும் வளர்கணும்
................
................
வலிமை உள்ளவன் வச்சது எல்லாம் சட்டம் ஆகாது தம்பி
பிறர் வாழ உழைப்பவர் சொல்லுவதெல்லாம்
சட்டம் ஆகணும் தம்பி
*_நல்ல சமத்துவம் உண்டாகணும்_*
_*அதிலே மகத்துவம் உண்டாகணும்*_
(நல்ல நேரம் :1972)
************************
_உன்னதமான தன்மை மாசி பௌர்ணமியில் வடித்து இரண்டறக் கலந்தது (6)_
************************
*திரு இராம கிருஷ்ண ஈஸ்வரன் அவர்களின் விளக்கம்.*👇🏽
🌸🌸🌸🌸🌸🌸🌸🌸

*மகத்துவம்*

_மாசி பௌர்ணமி_
= *மகம்*

_இரண்டற_
= _2வது எழுத்து இல்லாது_

_இரண்டற வடித்து_
= *வத்து*

_கலந்தது_
= _anagram indicator_
*மக{(வத்து)}ம்-->*
= *மகத்துவம்*

= _உன்னதமான தன்மை_
= _definition_
*************************
*நடுச்சந்தியிலும் மூலை முடுக்குகளிலும் கூட அழகைக் கூடை கூடையாக வாரலாம். ஆனால், அன்பு அப்படியா? அதன் மகத்துவம் எவ்வளவு மேலானது!*
(மன நிழல், புதுமைப்பித்தன் )
*************************
*ராமன் மேல் காதல் கொண்டவளாயினும் சீதையின் மகத்துவம் அவளது கற்பிலேயேஉள்ளது.* (இணைவைத்தல், ஜெயமோகன்)
*************************
*தமிழனின் மகத்துவம்-*

பூக்களில் படும் காற்றுக்கு தெரியாது
அன்பின் வாசம்…!

புண்ணிய பூமியில் வாழும் யாருக்கும் புரியாது
தமிழனின் நேசம்…!

கடல் கடந்து வாழ்ந்தாலும் குறையாது
இவன் அன்பு வெள்ளம்…!

ஆதரவற்றோர்க்கு அடைக்கலம் தான்
தமிழனின் உள்ளம்…!

சமரசமாக வாழும் இவன்
சகோதரத்துவம்…!

_ஒருமைபாட்டுணர்வே தமிழனின் *மகத்துவம்* …!_

அன்பு என்றால் தலைவணங்குவோம்
தரம் கெடமாட்டோம்…!

அதிகாரம் ஆண்டால் அடிபணியவைப்போம்
வீரத்தை விடமாட்டோம்…!

அனைவரையும் கவரும் தமிழனின் ஒற்றுமை…!

ஆண்டவனிடம் என்றுமே இல்லை
தமிழனின் வேற்றுமை…!

சாதிகளை ஒழிப்பது தான் எங்களின் பேச்சு…!
தமிழனின் நல்லுணர்வே இந்தியாவின் மூச்சு…!

(Tamil Kavithai Theevu - )
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/19, 07:05] A Balasubramanian: மகத்துவம்
A.Balasubramanian

[7/19, 07:05] திரைக்கதம்பம் Ramarao: மகத்துவம்

[7/19, 07:11] பாலூ மீ.: மகத்துவம்

[7/19, 07:16] மாலதி: மகத்துவம்

[7/19, 07:17] Meenakshi: விடை:மகத்துவம்
[
[7/19, 07:25] கு.கனகசபாபதி, மும்பை: மகத்துவம்

[7/19, 07:31] ஆர்.பத்மா: மகத்துவம்
[
[7/19, 07:32] stat senthil: மகத்துவம்

[7/19, 07:45] Rohini Ramachandran: மகத்துவம்
[
[7/19, 07:54] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏மகத்துவம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/19, 07:55] sridharan: மகத்துவம்

[7/19, 07:56] nagarajan: *மகத்துவம்*

[7/19, 08:36] ஆர். நாராயணன்.: மகம் + வத்து = மகத்துவம்

[7/19, 08:44] Viji - Kovai: மகத்தானது
[
[7/19, 09:05] Dr. Ramakrishna Easwaran: *மகத்துவம்*
மாசி பௌர்ணமி= *மகம்*
இரண்டற= 2வது எழுத்து இல்லாது
இரண்டற வடித்து= *வத்து*
கலந்தது= anagram indicator
மக{(வத்து)*}ம்--> மகத்துவம்
உன்னதமான தன்மை= definition

[7/19, 09:12] siddhan subramanian: மகத்துவம் (மகம் + வத்து)

[7/19, 10:22] G Venkataraman: மகத்துவம் ( மகம் - மாசி பௌர்ணமி + த்துவ(டி)

[7/19, 11:06] joseph amirtharaj: மகத்துவம்

[7/19, 12:13] shanthi narayanan: மகோத்தமம்

[7/19, 13:48] வானதி: *மகத்துவம்*

[7/19, 20:00] chithanandam: மாசில்லாதது?

[7/19, 20:01] Revathi Natraj: மகத்துவம்

[7/19, 21:40] Bhanu Sridhar: மகத்தானது
Took some time thinking masi also needed.

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 20-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

கல் நீக்கிய விநாயகருக்குரியது இன்னும் மலரவில்லை (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 20-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*அருகம் புல்* என்றாலே நினைவிற்கு வருவது *விநாயகர்* . பசுமையான மெல்லிய நீண்ட கூர்மையான இலைகள். ஈரப்பாங்கான வயல் வரப்புகள், தரிசு நிலங்கள், சாலை ஓரங்கள் என தென்படும் இடங்களில் வளர்ந்து காணப்படும் இந்த அருகம் புல்லில் பல்வேறு நன்மைகள் உள்ளன.
************************
_கல் நீக்கிய விநாயகருக்குரியது இன்னும் மலரவில்லை (4)_

_விநாயகருக்குரியது_
= *அருகம்புல்*

_கல் நீக்கிய விநாயகருக்குரியது_
= _கல் நீக்கிய அருகம்புல்_
= *அருகம்புல் - கல்*
= *அரும்பு*

= _இன்னும் மலரவில்லை_
************************* *மலர் தொடர்பான சொற்கள்*

ஆணுக்கும் பெண்ணுக்கும் மட்டும் அல்லாது, சங்க இலக்கியத்தில் மலருக்கும் பருவங்களை வகுத்துள்ளனர். *அரும்பு* , நனை, முகை, மொக்குள், முகில், மொட்டு, போது, மலர்,  பூ, வீ, பொதும்பர், பொம்மல், செம்மல் போன்ற பதின்மூன்று சொற்களை மலர்களின்பல்வேறு நிலையினைச் சுட்டப் பயன்படுத்தியுள்ளனர். அவற்றுள் அரும்பு, நனை, முகை, மொக்குள், முகிழ், மொட்டு ஆகியவற்றை மலரின் இளமைப்பருவமாகச் சுட்டுகின்றனர். மலர், வீ, செம்மல் இவற்றை மலரின் முதுமைப் பருவமாகக் குறிப்பிடுகின்றனர்.

_அரும்பின் மூன்று நிலைகள்: நனை, முகை, மொக்குள்._

🌹🌷🌹🌷🌻🌷🌹🌷
*அரும்பு* – அரும்பும் (தோன்றும்) நிலை
*நனை* – அரும்பு வெளியில் நனையும் நிலை
*முகை* – நனை முத்தாகும் நிலை
*மொக்குள்* – நாற்றத்தின் உள்ளடக்க நிலை
*முகிழ்* – மணத்துடன் முகிழ்த்தல்
*மொட்டு* – கண்ணுக்குத் தெரியும் மொட்டு
*போது* – மொட்டு மலரும்பொழுது காணப்படும் புடைநிலை
*மலர்* – மலரும் பூ
*பூ* – பூத்த மலர்
*வீ* – உதிரும் பூ
*பொதும்பர்* – பூக்கள் பலவாகக் குலுங்கும் நிலை
*பொம்மல்* – உதிர்ந்து கிடக்கும் புதுப்பூக்கள்
*செம்மல்* – உதிர்ந்த பூ பழம்பூவாய்ச் செந்நிறம் பெற்று அழுகும் நிலை.
************************
_பட்டுச்சேலை காத்தாட பருவமேனி கூத்தாட_
_கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்_
_காதல் வலையில் அடைத்தவளே_

_*அரும்பு* மீசை துள்ளி வர அழகுப் புன்னகை அள்ளி வர_
_குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்_
_கூட்டுக் கிளியாய் அடைத்தவரே_
( தாய் சொல்லைத் தட்டாதே 1961)
************************
*அரும்பு மீசை*

*நேற்று வரைத் தரிசாய்க் கிடந்த நிலத்தில்*

*இன்று முளைத்த இளம் பயிர்கள்..!*

(பாலாஜி)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/20, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அரும்பு

[7/20, 07:03] G Venkataraman: அரும்பு
(அருகம் புல் - கல்)
*Excellent one*

[7/20, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அரும்பு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/20, 07:05] sathish: அரும்பு
[
[7/20, 07:10] A Balasubramanian: அரும்பு
A.Balasubramanian

[7/20, 07:11] Meenakshi: விடை:அரும்பு

[7/20, 07:11] மீ.கண்ணண்.: அரும்பு

[7/20, 07:13] பாலூ மீ.: அரும்பு.

[7/20, 07:17] Dr. Ramakrishna Easwaran: *அரும்பு*
அரு ~க~ ம்பு ~ல்~

[7/20, 07:20] sridharan: அரும்பு

[7/20, 07:23] A D வேதாந்தம்: விடை=அரும்பு(வேதாந்தம்)

[7/20, 07:24] கு.கனகசபாபதி, மும்பை: அரும்பு

[7/20, 07:39] prasath venugopal: அரும்பு
அருகம்புல்-கல்

[7/20, 07:41] V N Krishnan.: எருக்கு!

[7/20, 07:42] stat senthil: அரும்பு

[7/20, 07:55] nagarajan: *அரும்பு*

[7/20, 08:01] மாலதி: அரும்பு

[7/20, 08:02] ஆர்.பத்மா: அரும்பு

[7/20, 08:17] Bharathi: அரும்பு

[7/20, 08:21] Bhanu Sridhar: அரும்பு

[7/20, 08:29] ஆர். நாராயணன்.: அரும்பு

[7/20, 08:30] akila sridharan: அரும்பு
[
[7/20, 10:47] பானுமதி: அரும்பு

[7/20, 13:02] Viji - Kovai: எருக்கு

[7/20, 13:03] வானதி: அரு(க)ம்பு(ல்)
*அரும்பு*

[7/20, 13:56] shanthi narayanan: அரும்பு

[7/20, 14:57] Usha Chennai: அரும்பு

[7/20, 08:52] joseph amirtharaj: அரும்பு
[
[7/20, 16:30] Venkat: அரும்பு 🙏🏾

[7/20, 20:34] sankara subramaiam: அரும்பு


*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 21-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

இசையில் நுணுக்கமான செய்தி (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 21-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*நினைவில் நிற்கும் பாடல் வரிகள்.*
************************
பம்பரக்கண்ணாலே காதல் *சங்கதி* சொன்னாளே
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே

கட்டான முத்தழகி காணாத கட்டழகி
தொட்டாலும் கை மணக்கும் சிங்காரி
கட்டுபடி ஆகலே காதல் தரும் வேதனை
தங்க சிலை போல் வந்து மனதை தவிக்க விட்டாளே..

……….. பம்பர கண்ணாலே…

MOVIE : MANAMAGAN THEVAI 1957
SINGER : CHANDRABABU JP
************************
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா
தானே வந்து தழுவிக் கொண்டு
*சங்கதி* சொன்னது யாரம்மா..
சங்கதி சொன்னது யாரம்மா..
மீனே மீனே மீனம்மா
விழியைத் தொட்டது யாரம்மா

(என் கடமை1964)
************************
*இசையில் நுணுக்கமான செய்தி (4)*

_இசையில் நுணுக்கமான_
= *சங்கதி*

_செய்தி_
= *சங்கதி*
*************************
*சங்கதி*
கருநாடக இசையில் *_சங்கதி_* என்பது, ஒரு வகை இசை அணி. இது பாடல்களில் பல்லவி, 
அனுபல்லவி, சரணம் ஆகிய பகுதிகளில் குறிப்பிட்ட சில ஆவர்த்தனங்களை எடுத்துக்கொண்டு இராகத்தின் வடிவத்தையும், பாடலின் சொல் நயத்தையும் விளங்க வைப்பதற்காகத் திரும்பத் திரும்ப வெவ்வேறு விதமாகப் பாடுவதாகும்.
*************************
*சங்கதி*

தத்தித் தத்தியே நடந்து வந்திடும் 
தங்கப் பாப்பாத் தளிர்க்கால் கொலுசே, 
சத்தம் போட்டே உறவுக் கெல்லாம் 
*சங்கதி* யென்ன சொல்லு கின்றாய், 
பத்தரை மாற்றுத் தங்க மிவளின் 
பாதம் தொட்டதும் போதை வந்ததோ, 
நித்தமும் ஒன்றை நினைவில் கொள்வாய் 
நித்திரை வேளையில் சத்த மிடாதே...!

(செண்பக ஜெகதீசன்...)
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/21, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சங்கதி

[7/21, 07:01] stat senthil: சங்கதி

[7/21, 07:02] sathish: சங்கதி

[7/21, 07:04] A Balasubramanian: சங்கதி
A.Balasubramanian
[
[7/21, 07:06] Rohini Ramachandran: சங்கதி

[7/21, 07:06] Meenakshi: விடை:சங்கதி

[7/21, 07:06] Venkat: சங்கதி 🙏🏾

[7/21, 07:10] sridharan: சங்கதி.

[7/21, 07:13] Bhanu Sridhar: சங்கதி

[7/21, 07:18] பாலூ மீ.: சங்கதி

[7/21, 07:26] ஆர். நாராயணன்.: சங்கதி

[7/21, 07:42] மாலதி: சங்கதி

[7/21, 07:53] nagarajan: *சங்கதி*

[7/21, 07:56] chithanandam: சங்கதி

[7/21, 07:59] Dhayanandan: *சங்கதி*

[7/21, 08:10] ஆர்.பத்மா: சங்கதி

[7/21, 08:25] Dr. Ramakrishna Easwaran: *சங்கதி*

[7/21, 09:10] siddhan subramanian: சங்கதி

[7/21, 10:15] V N Krishnan.: சங்கதி

[7/21, 10:43] கு.கனகசபாபதி, மும்பை: சங்கதி

[7/21, 10:46] joseph amirtharaj: சங்கதி

[7/21, 10:48] sankara subramaiam: சங்கதி

[7/21, 11:06] வானதி: *சங்கதி*

[7/21, 11:21] G Venkataraman: #சங்கதி

[7/21, 11:48] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சங்கதி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/21, 18:16] Viji - Kovai: சங்கதி

[7/21, 19:35] Revathi Natraj: சங்கதி

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 22-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

சரியாகச் சமைத்த சொல்லா? புல்லில்லாத நீர் (4)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 22-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
பதம் என்னும் சொல் பல பொருள்களை உணர்த்தும். அவை பதம் செழ்தலோடு தொடர்புடையவை.

பதம் செய்த உணவு

பதம் என்னும் சொல் சங்ககாலத்தில் சமைத்த தானிய உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படுத்தப்படும் குழம்பு, பொறியல் முதலான கூட்டுப் பொருள்களை உணர்த்தப் பயன்படுத்தப்பட்டது. இதனை இக்காலத்தில் பதார்த்தம் என வழங்குகிறோம். அர்த்தம் எனும் சொல் பாதி என்னும் பொருளைத் தரும். பதம் பாதி, அதனோடு சேரும் அர்த்தம் பாதி என அமைவது பதார்த்தம்.
நெல்லைப் பதப்படுத்தி ஆக்கும் சோறும் பதம் எனப்படும்.
***********************
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட எழுத்துக்கள் சேர்ந்து, ஒரு பொருள்தந்தால் அது பதம் எனப்படும்

சரியாகச் சமைத்த சொல்லா? புல்லில்லாத நீர் (4)

சொல் = பதம்
சொல்லா = பதமா

நீர் = புனல்
புல்லில்லாத நீர்
= புனல்-புல்
= ன

சரியாகச் சமைத்த
= பதமா+ன
= பதமான

*************************
தமிழ்ச்சொல்லைப் பகுதி, விகுதி என்றெல்லாம் பதப்படுத்திக் காட்டுவது நன்னூலிலுள்ள பதவியல்.
*************************

லாலி லாலி லாலி லாலி
வரம் தந்த சாமிக்குப் பதமான லாலி
ராஜாதி ராஜனுக்கு
இதமான லாலி
குறும்பான கண்ணனுக்குச் சுகமான லாலி
ஜெகம் போற்றும் தேவனுக்கு வகையான லாலி
(வரம் தந்த சாமிக்கு)
ஆரிராரோ ஆரிராரோ

கல்யாண ராமனுக்கு கௌசல்யை நானே
யது வம்ச வீரனுக்கு யசோதை நானே
கரு யானை முகனுக்கு மலையன்னை நானே
பார் போற்றும் முருகனுக்குப் பார்வதியும் நானே
(வரம் தந்த சாமிக்கு)

படம்: சிப்பிக்குள் முத்து
வரிகள்: வைரமுத்து
இசை: இளையராஜா
குரல்: பி.சுசீலா
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[
[7/22, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பதமான

[7/22, 07:07] stat senthil: பதமான

[7/22, 07:13] sathish: பதமான

[7/22, 07:16] பாலூ மீ.: பதமான
(அல்லது) பதமாக

[7/22, 07:28] Meenakshi: விடை:பதமான

[7/22, 07:29] மீ.கண்ணண்.: பதமான
[
[7/22, 07:32] sridharan: பதமான
[
[7/22, 07:41] A Balasubramanian: பதமான
A.Balasubramanian
[
[7/22, 07:42] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வசனமா🙏
வீ ஆர். பாலகிருஷ்ணன்

[7/22, 07:45] prasath venugopal: பதமான

[7/22, 07:47] *Dr. Ramakrishna Easwaran:* *பதமான*
சொல்லா= *பதமா*
நீர்= புனல்
புல்லில்லாத நீர்= ~பு~ *ன* ~ல்~= *ன*
பதமா+ன = சரியாக சமைக்கப்பட்ட

[7/22, 07:52] மாலதி: பதமான

[7/22, 07:55] nagarajan: பதமான

[7/22, 09:21] siddhan subramanian: பதமான (பதமா = சொல்லா

[7/22, 09:27] ஆர். நாராயணன்.: பதமான

[7/22, 10:04] Dhayanandan: *பதமான*

[7/22, 11:21] ஆர்.பத்மா: பதமான

[7/22, 14:09] வானதி: *பதமான*

[7/22, 15:21] கு.கனகசபாபதி, மும்பை: பதமான

[7/22, 16:50] sankara subramaiam: பதமான
[
[7/22, 21:11] Viji - Kovai: பதமான

[7/22, 21:43] Bhanu Sridhar: பதமான






*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 23-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அறிவுள்ள பெண் மாணவர்க்கும் தேர்வில் அளிக்கப்படும் (5)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 23-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*மதிப்பெண்*

_மதியுடைய பெண்களை_ 
_மதிப்பெண் இடாதே..._ 
_ஏனென்றால்  மதிப்பெண்ணே பெண்களை_ 
_"மதி"ப்"பெண்"_ _"மதிப்"பெண்"_ 

_என்று தான் கூறுகிறது..._

 (தாரா)
***********************
_அறிவுள்ள பெண் மாணவர்க்கும் தேர்வில் அளிக்கப்படும் (5)_

_அறிவு_ = *மதி*
_அறிவுள்ள பெண்_
= *மதி+ பெண்*
= *மதிப்பெண்*

_மாணவர்க்கும் தேர்வில் அளிக்கப்படும்_
= *_மதிப்பெண்_*
***********************
*முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம், மகளே!*

என் அன்பு மகளுக்கு, உன் அப்பா எழுதுவது. நானும் உன் அம்மாவும் இங்கு நலம். அங்கு உன்னோடு விடுதியிலிருக்கும் உன் தோழியரும், உன் வகுப்பு நண்பர்களும், உன் மதிப்பிற்குரிய பேராசிரியர்களும் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.    
..........
........
*முதல்வகுப்பில் சேர்ந்தது முதல், “முதல் மதிப்பெண்“ மயக்கத்தை மண்டையில் ஏற்றி, மதிப்பெண் வாங்குவதையே லட்சியமாக நினைக் கவைத்த பாவம் நமது கல்விமுறை தந்த சாபமன்றி வேறென்ன? எழுத்துகளை மேய்ந்த அஜீரணத்திற்கு மருந்து தேடி, இவர்கள் தொலைத்தது கருத்துகளை என்பது புரிவதற்குள் படிப்பே முடிந்து விடுகிறதே!*

நல்ல கவிதை தேமா, புளிமா, பண்புத்தொகை, வினைத் தொகைகளுடன் இருக்கலாம். ஆனால், இந்த இலக்கணக் குறிப்புகளை அறிந்து மதிப்பெண் பெறும் பதட்டத்தில், அனுபவிக்க மறந்தது உயிர்க் கவிதைகளின் அழகை, ஆழமான அர்த்த்த்தை என்பதை அறிந்து கொள்வதற்குள் படிப்பே முடிந்து விட்டதே! 

இதைத்தான் நமது மகாகவி பாரதி – 

*“அணிசெய் காவியம் ஆயிரம் கற்கினும் ஆழ்ந்திருக்கும் கவியுளம் காண்கிலார்”* என்று சொன்னான். 

கடந்த பருவத்தேர்வுகளில் நீ நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தாலும்,ஒருபாடத்தில் மட்டும்தான் முதல்மதிப்பெண் எடுக்கமுடிந்தது என்று வருத்தப்பட்டதாக உன் அம்மா கூறினார். அதுபோதும் மகளே! முதல் மதிப்பெண் எடுக்கவேண்டும் என்பதற்காக உனது நேரத்தை யெல்லாம் வீணாக்காதே!

*சாதாரணமான மதிப்பெண்களோடும், அசாதாரணமான புரிதல்களோடும் உனது கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு வா மகளே!*

அவ்வளவுதான் மகளே! 
அன்புடன் 
உன் அப்பா.    
🌸🌸🌸🌸🌸🌸
- கவிஞர் நா.முத்துநிலவன் -
(கடிதஇலக்கியம்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[7/23, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மதிப்பெண்

[7/23, 07:01] A Balasubramanian: மதிப்பெண்
A.Balasubramanian

[7/23, 07:01] *V N Krishnan.:* *மதிப்பெண்*
*மதி. அறிவு.*

[7/23, 07:01] Meenakshi: விடை:மதிப்பெண்

[7/23, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏மதிப்பெண்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/23, 07:04] மீ.கண்ணண்.: மதிப்பெண்
[
[7/23, 07:06] stat senthil: மதிப்பெண்

[7/23, 07:10] G Venkataraman: மதிப்பெண்

[7/23, 07:11] Dhayanandan: *மதிப்பெண்*

[7/23, 07:13] sathish: மதிப்பெண்

[7/23, 07:21] A D வேதாந்தம்: விடை=மதிப்பெண்(வேதாந்தம்)

[7/23, 07:23] Viji - Kovai: மதிப்பெண்
[
[7/23, 07:29] பாலூ மீ.: மதிப்பெண்

[7/23, 07:36] *Dr. Ramakrishna Easwaran:* *மதிப்பெண்*
*அறிவுள்ள பெண் /* *நிலாப்பெண்* 😂

[7/23, 07:40] chithanandam: மதிப்பெண்

[7/23, 07:41] Bhanu Sridhar: மதிப்பெண்
[
[7/23, 07:45] akila sridharan: மதிப்பெண் .
[
[7/23, 07:48] மாலதி: மதிப்பெண்

[7/23, 07:52] sridharan: மதிப்பெண்.

[7/23, 07:52] nagarajan: *மதிப்பெண்*

[7/23, 07:56] prasath venugopal: மதிப்பெண்

[7/23, 08:01] ஆர். நாராயணன்.: மதிப்பெண்

[7/23, 08:17] Bharathi: மதிப்பெண்

[7/23, 08:19] Ramki Krishnan: மதிப்பெண்

[7/23, 08:36] siddhan subramanian: மதிப்பெண்

[7/23, 08:56] கு.கனகசபாபதி, மும்பை: மதிப்பெண்
[
[7/23, 09:06] ஆர்.பத்மா: மதிப்பெண்
[
[7/23, 09:44] Revathi Natraj: மதிப்பெண்

[7/23, 10:12] sankara subramaiam: மதிப்பெண்

[7/23, 10:58] joseph amirtharaj: மதிப்பெண்

[7/23, 11:06] வானதி: *மதிப்பெண்*

[7/23, 12:01] shanthi narayanan: மதிப்பெண்

[7/23, 12:29] balagopal: மதிப்பெண்

[7/23, 15:28] Rohini Ramachandran: மதிப்பெண்

[7/23, 19:49] bala: மதிப்பெண்

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 24-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************

முதலில் விற்பனையான சித்திரம் விநோதம் (6)

*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-07-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*நினைவில் நிற்கும் பாடல் வரிகள்*
***********************
*சித்திரம் பேசுதடி* உன் சித்திரம் பேசுதடி – எந்தன்
சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி –

முத்துச் சரங்களைப் போல் மோகனப் புன்னகை மின்னுதடி
தாவும் கொடி மேலே ஒளிர் தங்கக்குடம் போலே
பாவையுன் பேரெழிலே எந்தன் ஆவலைத் தூண்டுதடி

*சித்திரம் பேசுதடி* – எந்தன் சிந்தை மயங்குதடி சித்திரம் பேசுதடி

(சபாஷ் மீனா: 1958)
***********************
ஒரு நாளும் உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்
உறவாலும் உடல் உயிராலும்
பிரியாத வரம் வேண்டும்

உன்னை ஒரு சேய் போலே என் மடியில்
தாங்கவா
என்னுடைய தாலாட்டில் கண்மயங்கித் தூங்கவா

ஆரீராரோ
நீ பாட ஆசை உண்டு மானே
ஆறு ஏழு கேட்டாலும்
பெற்றெடுப்பேன் நானே

முத்தினம் வரும்
முத்து தினம் என்று
*சித்திரம் வரும்*
*விசித்திரம் என்று*

ஒரு நாளும்
உனை மறவாத
இனிதான வரம் வேண்டும்

( எஜமான் :1993)
***********************
_முதலில் விற்பனையான சித்திரம் விநோதம் (6)_

_முதலில் விற்பனையான_
= *வி*

_விநோதம்_
= *வி + சித்திரம்*
= *விசித்திரம்*
*************************
*விசித்திரம்*

_பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது *விசித்திரம்* ,_ 

_பல முறை தோற்றவன்_ 
_ஒருமுறை ஜெயித்தால்_ 
_அது சரித்திரம்.!_
*************************
*விசித்திர கவிதை!!*

விசித்திர பழக்கங்கள்
விளக்கிட கேட்க,
இதோ என்
விசித்திர கவிதை!!

சில பழக்கங்கள்
பழகிவிடுவதால்
வழக்கமாகின்றன;
சில பழக்கங்கள்
வழக்கமாய்
இல்லா காரணத்தால்
விசித்திரமாகின்றன!!

விசித்திர ஆசைகள்
விளைந்திடும் என்
மனதே விசித்திரம்!!

விசித்திர ஆசைகள் பல!!
அனைத்து கலையினையும்
அறிந்து கொள்ள ஆசை!!
அறிவியலை புரிந்துகொள்ள ஆசை!!
ஒன்றினை அறிந்த பின்
கவி போலவே மனம்
தாவியே மற்ற விடையத்தில்
சென்றிடும் விசித்திர மனம்
என் மனம்!!

எப்பொழுதும் மகிழ்ச்சியாய்
இருப்பினும் காரணம்
இல்லா வெறுமை கொள்ளும்
மனதின் விசித்திர பண்பு!!

(கனி)
*************************
_சிறகடிக்கும் பறவைக்கு கால் நீண்ட_ _மனிதன் விசித்திரம்_

_நடந்து களைத்த மனிதனுக்கோ_ _காற்றில் மிதக்கும்_ _பறவை விசித்திரம்_

_நிரந்தரமில்லா உலகில்_ _விசித்திரத்திற்கு பஞ்சமில்லை.._
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[7/24, 07:00] திரைக்கதம்பம் Ramarao: விசித்திரம்

[7/24, 07:00] A Balasubramanian: விசித்திரம்
A.Balasubramanian

[7/24, 07:01] Rohini Ramachandran: விசித்திரம்

[7/24, 07:01] V N Krishnan.: விசித்திரம்=விநோதம்

[7/24, 07:02] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏விசித்திரம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[7/24, 07:03] மீ.கண்ணண்.: விசித்திரம்

[7/24, 07:01] *stat senthil:* *விசித்திரம்*
*விசித்திரத்திற்கான எனது 74வது புதிர்*
*முதலில் விற்ற ஓவியம் பேரழகு*

[7/24, 07:05] Meenakshi: விடை:விசித்திரம்

[7/24, 07:05] பாலூ மீ.: விசித்திரம்.

[7/24, 07:05] prasath venugopal: விசித்திரம்

[7/24, 07:08] joseph amirtharaj: விசித்திரம்

[7/24, 07:08] sathish: விசித்திரம்

[7/24, 07:10] chithanandam: விசித்திரம்

[7/24, 07:13] Bhanu Sridhar: விசித்திரம்

[7/24, 07:17] மாலதி: விசித்திரம்

[7/24, 07:17] Dr. Ramakrishna Easwaran: விசித்திரம்

[7/24, 07:24] கு.கனகசபாபதி, மும்பை: விசித்திரம்

[7/24, 07:30] A D வேதாந்தம்: விடை=விசித்திரம்
(வேதாந்தம்)

[7/24, 07:46] akila sridharan: விசித்திரம்
!
[7/24, 07:47] G Venkataraman: விசித்திரம்
[
[7/24, 07:48] sridharan: விசித்திரம்
[
[7/24, 07:53] nagarajan: *விசித்திரம்*

[7/24, 07:55] ஆர்.பத்மா: விசித்திரம்

[7/24, 07:55] Dhayanandan: *விசித்திரம்*

[7/24, 07:56] ஆர். நாராயணன்.: விசித்திரம்

[7/24, 08:03] Viji - Kovai: விசித்திரம்
[
[7/24, 08:53] siddhan subramanian: விசித்திரம்
[
[7/24, 09:26] பானுமதி: விசித்திரம்

[7/24, 10:00] Usha Chennai: விசித்திரம்

[7/24, 10:48] shanthi narayanan: விசித்திரம்

[7/24, 12:52] Ramki Krishnan: விசித்திரம்

[7/24, 16:32] balagopal: விசித்திரம்

[7/24, 19:35] Bharathi: விசித்திரம்

[7/24, 19:54] Revathi Natraj: விசித்திரம்

[7/24, 20:30] Venkat: விசித்திரம் 🙏🏾

[7/24, 21:06] sankara subramaiam: விசித்திரம்

[7/24, 21:31] வானதி: *விசித்திரம்*


*****************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்