இன்று காலை வெளியான வெடி:
தமிழ் சுரத்துடன் சுரமில்லாக்கனி ஒன்றைக் கொணர்ந்தவன் வியர்வை சிந்துபவன் (5)
அதற்கான விடை: உழைப்பாளி = உழை + பப்பாளி - ப
உழை = இசையில் மத்யம சுரத்திற்கு தமிழில் முன்பு வழங்கப்பட்ட பெயர்.
பப்பாளி = ஒரு கனி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
தமிழ் சுரத்துடன் சுரமில்லாக்கனி ஒன்றைக் கொணர்ந்தவன் வியர்வை சிந்துபவன் (5)
அதற்கான விடை: உழைப்பாளி = உழை + பப்பாளி - ப
உழை = இசையில் மத்யம சுரத்திற்கு தமிழில் முன்பு வழங்கப்பட்ட பெயர்.
பப்பாளி = ஒரு கனி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
பப்பாளி நல்ல சொல்லாடல்
அருமையான புதிர்!
வாழ்த்துகள்.
*************************
_உதிரிவெடி 4167 வாஞ்சிநாதன்_
*************************
_*நெற்றி வேர்வை சிந்தினோமே* முத்து முத்தாக அது_
_நெல்மணியாய் வெளஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக_
_பக்குவமாய் அறுத்து அதைக் கட்டுக் கட்டாக_
_அடிச்சுப் பதரை நீக்கிக் குவிச்சி வைப்போம் முத்து முத்தாக_
_ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லே_
_என்றும் நம்ம வாழ்விலே பஞ்சமே இல்லே_
திரைப்படம்: பிள்ளைக் கனியமுது
*************************
*உழை*
( பெயர்ச்சொல் )
இடம், பக்கம், அண்மை
மான், கலைமான்
(ஆண்மான்)
உப்புமண், உவர்மண்
யாழின் ஒரு நரம்பு
_ஏழிசைச் சுரங்களில்_
_ஒன்று உழை._
பூவிதழ்
*************************
_தமிழ் சுரத்துடன் சுரமில்லாக்கனி ஒன்றைக் கொணர்ந்தவன் வியர்வை சிந்துபவன் (5)_
_தமிழ் சுரத்துடன்_
= *உழை*
_சுரமில்லாக்கனி ஒன்றை_
= *பப்பாளி minus ப*
= *ப்பாளி*
_கொணர்ந்தவன்_
= *உழை+ ப்பாளி*
= *உழைப்பாளி*
= _வியர்வை சிந்துபவன்_
*************************
_*உழை*_ _என்பது ஏழிசைச் சுரங்களில் நான்காவதாக வரும் சுரம் ._
_ஏழிசைச் சுரங்கள் ஆவன முறையே குரல், துத்தம், கைக்கிளை, *உழை* , இளி, விளரி, தாரம்;_
_இவை முறையே ச.ரி,க, ம, ப, த, நி என்றும் வழங்கும்._
*************************
*உழைப்பாளி*
வயிற்றில் வரிக்கோடு!
வாழ்க்கை வறுமையோடு!
வியர்வை உடம்போடு!
கஷ்டத்தில் *உழைப்பாளி!!*
*************************
நிற்கதியாய் வாழ்கிறான்
*உழைப்பாளி!*
எத்தனையோ
சிலைகளை
செதுக்கிய உளிக்கு
இதுவரை எவரும்
சிலை வைத்ததில்லை;
அப்படித்தான் நிற்கதியாய்
வாழ்கிறான் *உழைப்பாளி!*
*************************
💐🙏🏼💐
எனக்கு புது சொல்.
உழைப்பாளி ஊகித்தேன். பொருத்த முடியவில்லை. அருமையான சொல் கட்டமைப்பு
வீ.ஆர். பாலகிருஷ்ணன்