இன்று காலை வெளியான வெடி:
பிற விஷயங்களில் ஒரு ஸ்வரம் மாற்றிப் படித்தது (4)
அதற்கான விடை: கற்றவை = மற்றவை - ம + க
மற்றவை = பிற விஷயங்கள்
ம, க = ஸ்வரங்கள்
(படித்தது என்று இருப்பதால் "கற்றது" என்ற விடையும் பொருந்துகிறது)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
பிற விஷயங்களில் ஒரு ஸ்வரம் மாற்றிப் படித்தது (4)
அதற்கான விடை: கற்றவை = மற்றவை - ம + க
மற்றவை = பிற விஷயங்கள்
ம, க = ஸ்வரங்கள்
(படித்தது என்று இருப்பதால் "கற்றது" என்ற விடையும் பொருந்துகிறது)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
உதிரிவெடி 4165 (05-12-21)
வாஞ்சிநாதன்
*************************
*ஒளவையார் தனிப்பாடல் - கற்றது கைம்மண் அளவு*
தமிழ் கூறும் நல் உலகம் யாரை இழந்தாலும் ஒளவையை இழந்து விடக் கூடாது.
ஒளவையின் பாடல்கள் அத்தனை எளிமையானவை, இனிமையானவை, நடைமுறைக்கு, அன்றாட வாழ்க்கைக்கு வழி காட்டுபவை.
*கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு* என்ற பழமொழியானது கல்விச் செருக்குற்ற சிலரை, அவரின் செருக்கை அடக்குவதற்காக சொல்லப்பட்டது.
🌺🌺🌺🌺🌺🌺🌺
_*கற்றது* கைம் மண்ணளவு கல்லாதது உலகளவு_
_வெண்பற்றுள்ள கலை மடந்தை ஓதுகிறாள் – மெத்த_
_வெறம்பத் தயங்கூற வேண்டா புலவீர்!_
_எறும்புந்தன் கையால் எண்காண்!_
என்பதே இப்பாடல்.
கலைமகளே தான் *கற்றது* கைமண்ணளவே என்றும் இன்னும் கற்க வேண்டியது உலகளவு உள்ளது என்று தினமும் படித்துக் கொண்டு இருக்கிறாள். எறும்பும் தன்னுடைய கையால் எட்டுச் சாண் உயரம் இருக்கும்"
இவ்வாறு இருக்க நாமோ சிறிதளவு கல்வியைக் கற்றுவிட்டு இறுமாப்பு கொண்டு அலைவது பேதமை என்பதே இப்பாடலுக்கான பொருள் ஆகும்.
*************************
_பிற விஷயங்களில் ஒரு ஸ்வரம் மாற்றிப் படித்தது (4)_
_பிற விஷயங்கள்_
= *மற்றது*
_ஒரு ஸ்வரம் மாற்றி_
= *மற்றது -ம+க*
= *கற்றது*
= _படித்தது_
*************************
_தென்றல் *அசையக்* *கற்றது* யாரிடம்?_
பண்டைத் தமிழரால் காற்றுகளிலே மிகச்சிறந்த இடத்தில் புகழ்ந்து கூறப்படும் காற்று தென்றல் காற்றாகும். தம் முன்னோர் வாழ்ந்த தென்திசையிலிருந்து வீசுவதாலோ அன்றேல் என்றும் தென்கடலே தமிழருடைய கடலாக இருந்ததாலோ தென்றல் காற்றின் மேல் பற்று அதிகமாகவே இருந்திருக்கிறது.
தென்கடற்கரையில் நின்று மெத்தென எம் உடலை வருடித் தழுவிச் செல்லும் தென்றற்காற்றை நுகர்ந்தோருக்குத் தெரியும் அதன் இதமான சுகத்தின் உண்மை. அந்தத் தென்றல் வந்து எம்மைத் தொடும் போது தோணும் இன்பத்திற்கு ஈடேது? _மென்மையாக பய பக்தியோடு இயங்கத் தென்றல் யாரிடம் *கற்றது* ?_
தெற்கே இருந்து வந்து மதுரைக் ‘சோலையில் நுழைந்து, வாவிக்குள் புகுந்து, தாமரைமலரைத் தடவிப் பார்த்து, பசுமையான இருவாட்சி, முல்லை, மல்லிகைப் பந்தர்களில் எல்லாம் தாவிச் சென்று மகரந்தங்கள் விரிந்த மலர்களின் நறுமணத்தைச் சேகரித்து, குளிர்ச்சியோடு மென்மையாய் இயங்கும் தென்றலானது
அங்கங்கே பல இடங்களிலும் சென்று அந்தக்கலை என்ன சொல்கிறது? இது என்ன சொல்கின்றது? என கலைகளை ஆராய்ந்து கற்று அறியும் மாணவனைப் போல இயங்குமாம்’ என்கின்றது திருவிளையாடற் புராணம்.
_"பொங்கரில் நுழைந்து வாவி புகுந்து பங்கயம் துழாவிப்_
_பைங்கடி மயிலை முல்லை மல்லிகைப் பந்தர் தாவிக்_
_கொங்கலர் மணங்கூட்டு உண்டு குளிர்ந்து மெல்லென்று தென்றல்_
_அங்கங்கே கலைகள் தேரும் அறிவன் போல் இயங்கும் அன்றே”_
- *(திருவிளையாடற் புராண திருவாலவாய்க் காண்டம்: 19)*
கலைகள் பல கற்கும் மாணவர் பொறுமையோடு பாடசாலை, கல்லூரி, பல்கலைக்கழகம் நூலகம் என்று சென்று தேடி ஓடித் திரிந்து படித்து, ஒவ்வொன்றாய் ஆராய்ந்து குறிப்பெடுத்து நல்லனவற்றைச் சேகரித்து கற்று மகிழ்வோடு மென்மையாகத் திரிதல் போல தென்றலும் இயங்கித் திரிகிறதாம். *கற்கும் மாணாக்கர் போல் தென்றல் அசைகிறதாம்.*
*************************
💐🙏🏼💐
உதிரிவெடி
**************************
திரு வாஞ்சிநாதனின் புதிர்கள் மறுபதிப்பாக மீண்டும் புதிராடுகளம் புலனத்தில் (Whatsapp group)
தற்போது பதிவிட்டு வருகிறோம். ஆர்வமுள்ள நேயர்கள் இந்த Whatsapp group -ல் இணைந்து புதிர்களை விடுவித்து மகிழலாம்!
புதிராடுகளம் 2019 ஆண்டில் தமிழ் மற்றும் புதிர் ஆர்வலர்களால் அமைக்கபட்டப் புலனம்.
தினமும் பல வகை தமிழ் புதிர்களும், விடை சம்மந்தப்பட்ட விளக்கங்களும் , கண்ணோட்டமும்,புதிர் சார்ந்த கருத்துகளும், சிறு கவிதைகளும், தமிழ் சார்ந்த சுவையான தகவல்களையும் இந்த புலனத்தில் கண்டு மகிழலாம்.
தற்போது இந்தப் புலனத்தில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை, கும்பகோணம், ஐதராபாத், பெங்களூரு, பிலாய் போன்ற இந்திய நகரங்களிலிருந்து மட்டுமின்றி இலங்கை, அமெரிக்கா, கொரியா, சிங்கப்பூர் போன்ற உலகின் பல பகுதிகளிலிருந்தும் ஆர்வலர்கள் உள்ளனர்.
:
தங்களுக்கு இப்புலனத்தில் சேர ஆர்வமிருப்பின்,தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் : +919008746624
நன்றி, வணக்கம் 🙏
மு.க.இராகவன்.