இன்று காலை வெளியான வெடி:
மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)
அதற்கான விடை: சித்தகத்தி = சித்தி + (பு) த்தக (ம்)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)
அதற்கான விடை: சித்தகத்தி = சித்தி + (பு) த்தக (ம்)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
சித்தகத்தி சித்தம் கலக்கியது.
*************************
_உதிரிவெடி 4168 வாஞ்சிநாதன்_
*************************
அகத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை *அகத்தி, சித்தகத்தி, சீமை அகத்தி* ஆகிய மூலிகைகள்.
*************************
*சித்தகத்தி என்ற சிற்றகத்தி*
சிறிய இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். மஞ்சள் பயிருக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. செம்பை எனவும் பெயர் பெறும். கருஞ்சிவப்பு மலர்களை உடையவை. *கரும்செம்பை* எனப்படும். இலை பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
*************************
_மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)_
_மாற்றாந்தாய்_
= *சித்தி*
_புத்தகம் நடுவே_
= _[பு]த்தக[ம்]_
= *த்தக*
*சித்தி* _ஒளித்துவைத்த_ *த்தக*
= *சி(த்தக)த்தி*
= *சித்தகத்தி*
= _ஒரு தாவரம்_
*************************
_*சித்தகத்தி* பூக்களே சுத்தி வர பாக்குதே_
_அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே .._
_அத்த மகனே அத்த மகனே_
_சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்_
(படம் : ராஜகுமாரன் )
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
1994ல் இளையராஜா இசையில் காற்றில் தவழ்ந்து வந்து நம் செவி மடல்களை வருடிய பாடல். இந்த பாடலை தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இதில் வரும் *சித்தகத்தி* பூக்களை பற்றி தெரிந்துவைத்துள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.
உண்மையில் பாடல்களின் இசையை போலவே *சித்தகத்தி* பூக்களின் இதழ்களும் மென்மையானவை.
மென்மையானவை மட்டுமல்ல மருத்துவக்குணங்களும் கொண்டவை.
*சித்தகத்தி* பயிரிட்டு நான்கு மாதங்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும். இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. நாடி நடையை அதிகரிக்கவும், தாய்ப்பாலை குறைக்கவும், வயிற்றுப் பூச்சியை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும் பயன்படும்.
************************
_பழமொழி_
-----------------------
*_‘வெந்து கெட்டது முருங்கை,_*
*_வேகாமல் கெட்டது அகத்தி’_*
என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதாவது, முருங்கைக் கீரையை அதிகமாக வேக வைத்துவிட்டால், அதன் பலன்கள் பாதிக்கப்படும். அகத்தியை நன்றாக வேக வைக்காவிட்டால் அகத்திக் கீரையின் சத்துகள் மனித உடலுக்கு கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.
*************************
💐🙏🏼💐
கடந்த இரண்டுமுறையாக சிறிது கடினத்தை உணர்கிறேன்
வாழ்த்துக்கள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்