Skip to main content

விடை 4168

இன்று காலை வெளியான வெடி:
மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)
அதற்கான விடை: சித்தகத்தி = சித்தி + (பு) த்தக (ம்)

இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
அருமையான அமைப்புடன் கூடிய புதிர்.
சித்தகத்தி சித்தம் கலக்கியது.
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4168 வாஞ்சிநாதன்_ 
*************************
அகத்தியில் மூன்று வகைகள் உள்ளன. அவை *அகத்தி, சித்தகத்தி, சீமை அகத்தி* ஆகிய மூலிகைகள்.
*************************
*சித்தகத்தி என்ற சிற்றகத்தி*

சிறிய இலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் நீண்ட மெல்லிய தட்டையான காய்களையும் உடைய மென்மையான சிறுமரம். மஞ்சள் பயிருக்கு நிழல் தரும் வகையில் தமிழகமெங்கும் பயிரிடப்பெறுகிறது. செம்பை எனவும் பெயர் பெறும். கருஞ்சிவப்பு மலர்களை உடையவை. *கரும்செம்பை* எனப்படும். இலை பூ ஆகியவை மருத்துவப் பயனுடையவை.
*************************
_மாற்றாந்தாய் ஒளித்துவைத்த புத்தகம் நடுவே ஒரு தாவரம் (6)_

_மாற்றாந்தாய்_
= *சித்தி*

_புத்தகம் நடுவே_
= _[பு]த்தக[ம்]_
= *த்தக*

*சித்தி* _ஒளித்துவைத்த_ *த்தக*
= *சி(த்தக)த்தி*
= *சித்தகத்தி*
= _ஒரு தாவரம்_
*************************
_*சித்தகத்தி* பூக்களே சுத்தி வர பாக்குதே_

_அத்தி மர தோப்பிலே ஒத்திகைய கேக்குதே .._

_அத்த மகனே அத்த மகனே_
_சொத்து சுகம் யாவும் நீதான் ஹோய்_ 
(படம் : ராஜகுமாரன் )
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
1994ல் இளையராஜா இசையில் காற்றில் தவழ்ந்து வந்து நம் செவி மடல்களை வருடிய பாடல். இந்த பாடலை தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு இதில் வரும்  *சித்தகத்தி* பூக்களை பற்றி தெரிந்துவைத்துள்ளோமா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக வரும்.

உண்மையில் பாடல்களின் இசையை போலவே *சித்தகத்தி* பூக்களின் இதழ்களும் மென்மையானவை.

மென்மையானவை மட்டுமல்ல மருத்துவக்குணங்களும் கொண்டவை.

*சித்தகத்தி* பயிரிட்டு நான்கு மாதங்களில் பூ பூக்க ஆரம்பித்து விடும். இதன் பூக்கள் மருந்தாகப் பயன்படுகிறது. நாடி நடையை அதிகரிக்கவும், தாய்ப்பாலை குறைக்கவும், வயிற்றுப் பூச்சியை அழிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.
இலை வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைக்கவும் பயன்படும்.
************************
_பழமொழி_
-----------------------
*_‘வெந்து கெட்டது முருங்கை,_*
*_வேகாமல் கெட்டது அகத்தி’_*

என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதாவது, முருங்கைக் கீரையை அதிகமாக வேக வைத்துவிட்டால், அதன் பலன்கள் பாதிக்கப்படும். அகத்தியை நன்றாக வேக வைக்காவிட்டால் அகத்திக் கீரையின் சத்துகள் மனித உடலுக்கு கிடைக்காது என்பதுதான் இதன் பொருள்.
*************************
💐🙏🏼💐
balakrishnan said…
K
கடந்த இரண்டு‌முறையாக சிறிது கடினத்தை உணர்கிறேன்
வாழ்த்துக்கள்.
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்