Skip to main content

விடை 4161

இன்று காலை வெளியான வெடி:
நுரை கடைசியாக தோன்றுவதற்கு குடுமி மழி (3)
அதற்கான விடை: குமிழி
"தோன்றுவதற்கு குடுமி மழி", இவ்வார்த்தைகளின் கடைசி எழுத்துகள், கு, மி, ழி
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
_உதிரிவெடி 4161 வாஞ்சிநாதன்_ *************************
*நுரை கொண்ட காபி சிந்தாது !*

_குறைகுடம் கூத்தாடும், நிறைகுடம் தளும்பாது_ எனத் தமிழ் பழமொழி இருக்கிறது இல்லையா? அது பழமொழி யாகவே இருந்து விட்டது.

அதேபோன்றதுதான் *நுரை கொண்ட காபி சிந்தாது* என்பதும். ஆனால் அது ஆய்வகத்தில் நுணுக்கமாக ஆய்வு செய்யப்பட்டுவிட்டதால் விஞ்ஞான விதி ஆகிவிட்டது.
*************************
*University of Madras Lexicon*
**நுரை* -
Froth, foam, spume,lather; *நீர்க்குமிழிகளின் தொகுதி*
*************************
_நுரை கடைசியாக தோன்றுவதற்கு குடுமி மழி (3)_ 

_கடைசியாக_
= _Indicator to pick last letters in the words (தோன்றுவதற்கு குடுமி மழி)_

= *கு+ மி+ழி*
= *குமிழி*
= _நுரை_
*************************
*குமிழிகள் அழகானவை,* *வேடிக்கையானவை மற்றும் கவர்ச்சிகரமானவைகள்.*
சிறு வயதில் அம்மா துணி துவைக்கும்போது அருகில் அமர்ந்து சோப்பு நுரைகளில் வெளிப்படும் *குமிழிகளை* உடைத்து விளையாடி இருப்போம். அதே சோப்புநீரை புட்டியில் அடைத்து சிறிய குச்சியின் நடுவில் போட்ட ஓட்டையின் வழியாக அதில் முக்கியெடுத்து, ஊதி ஊதி *குமிழிகளை* நாமே உருவாக்கி
சிறு வயது விஞ்ஞானிகள் என்று பெருமை கொண்டிருப்போம்.
*************************
*நீர்க் குமிழிகள்*

நீர்க் குமிழிகள்.... அவை நம் மனதுள் ஏற்படுத்தும் குதூகலம் தான் என்னே !

காற்றில் அசைந்தோடும் *நீர்க்குமிழிகள்*
கைகளுள் சிறைப்படுத்திக் கொள்ளவே
துடிக்கும் மனமே சிறு கிள்ளையாய் !

விரல் நுனி பட்டாலே
நொடியில் காற்றில் சிதறி மறைந்திடும்
அதன் போக்கிலே விட்டாலோ
வர்ண ஜாலம் காட்டியே
உள்ளம் கொள்ளை கொள்ளும் !

(Tamizh muhil Prakasam)
*************************
*காற்றுக் குமிழி - (ஜான்சி)*

_உணர்ந்து ரசிக்குமுன் வெடித்து_
_உரு இல்லாது மாறிடும் காற்றுக் குமிழிப் போல்_

_வாழ்வில் வந்த நிலையில்லாத மகிழ்ச்சிகள்_
_எத்தனை எத்தனையோ!_
*************************
*_துக்கடா_*

_தஞ்சாவூர் டிகிரி காபி_

அந்த அதிகாலை வேளையில், தஞ்சாவூரின் வீதிகளில், 
நண்பர்களோடு அலைந்து கொண்டிருந்தேன் நான்.
தெற்கு வீதி வழியாக, பழைய காசுக்கடைத் தெருவை நோக்கி நடக்கும் போது, எங்கள் நாசிகளைத் துளைத்து, சுவாசத்தை சுறுசுறுப்பாக்கியது, காபி மணம்.
பக்கத்தில் இருந்த அந்த பழைய, *'காபி பேலஸ்'* நோக்கி, குதூகலமாய் வரிசை கட்டின எங்கள் கால்கள்!
உள்ளே நுழைந்ததும், பெரும் ஆச்சர்யம்.
*இந்த கடை காபிக்கு, மொத்த தஞ்சாவூரும் அடிமை.*

_*கமகமக்கும் 'டிகிரி' காபி:*_
வெந்நீரில் டிக்காஷன் தயாரித்து, அதனுடன், சுண்டக் காய்ச்சிய பசும் பாலும், கொஞ்சமாக சர்க்கரையும் சேர்த்து, *நுரை ததும்ப* ஆற்றினால், கமகமக்கும், 'டிகிரி' காபி தயார்!

*நுரை ததும்ப* வந்த காபியோட முதல் துளி நாக்குல பட்டதும், 'ஆஹா...
குடிச்சு முடிச்சதும் என்னா தெம்பு தெரியுமா? சென்னையில பகுமானமா இருக்கிற
நிறைய கடைகள்ல நானும் காபி குடிச்சிருக்கேன். வாயில நுழையாத பேரோட
இருக்கிற அந்த காபி ருசியை விட, இந்த 'டிகிரி காபி'யோட ருசி அற்புதம்! அண்ணே... நமக்கு இன்னொரு காபி!

இடம்: காபி பேலஸ், எல்லையம்மன் கோவில் தெரு, தஞ்சாவூர்.
**********************
💐🙏🏼💐

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்