Skip to main content

விடை 4152

இன்று காலை வெளியான வெடி:
இறந்து நடு, காம்போடு சிறைப்பட்ட பறவையொன்று (5)
அதற்கான விடை: செம்போத்து = செத்து + ம்போ
செத்து = இறந்து
ம்போ = நடு காம்போடு
செம்போத்து = Crow pheasant
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*உதிரிவெடி 4152*
*************************
_இறந்து நடு, காம்போடு சிறைப்பட்ட பறவையொன்று (5)_ 

_இறந்து_ = *செத்து*

_நடு, காம்போடு_
= _middle letters in காம்போடு_
= _கா[ம்போ]டு_
= *ம்போ*

_சிறைப்பட்ட_
= _indicator to place *ம்போ* inside *செத்து*_

= *செம்போத்து*
= _பறவையொன்று_
************************
_செம்போத்து_

செம்போத்து, செண்பகம், செங்காகம்.. என்ற பல பெயர்களும் கொண்ட இந்த பறவை குயில் இனத்தை சேர்ந்ததாக இருந்தாலும் குயிலைப் போல் காகத்தின் கூடுகளில் முட்டையிடுவதில்லை. தானே கூடு கட்டி முட்டையிடும் பெரிய பறவை இனங்களில் ஒன்றாகும். புதரில் பந்து போன்று கூடு அமைக்கும்.

தமிழீழத்தின் தேசிய பறவை என்னும் சிறப்பை பெற்றது.

சங்க இலக்கியங்களில் செம்போத்து,செம்பூழ்ப் பறவை என அறியப்படுகிறது.

_பைந்திணை உணங்கல் செம்பூழ் கவரும் வன்புல நாடன்_

_ *ஐங்குநுறூறு 469*
************************
செம்போத்தின் தலை கருமையாகவும் உடலின் மேற்பகுதியும் கீழ்ப்பகுதியும் நாவல் நிறம் கலந்த கருமையாகவும் காணப்படும். காகம் போன்ற தோற்றத்திலும் விஜயகாந்தைப் போல் சிவந்த கண்களும், செந்நிற இறக்கைகளும் கொண்ட அழகிய பறவை. கருப்பு நிற உடலில் சிவப்பு நிற கண்கள் பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும். காடுகள், மலைகள், வயல் வெளிகள், நகர்ப் புறங்களெனப் பொதுவாக எல்லா வகையான இடங்களிலும் காணப்படுகின்றன
செம்போத்தின் ஒலி மிகத் தொலைவு வரை கேட்கக் கூடியதாகும்.
இதன் ஒலி தனித்துவம் வாய்ந்தது. பாடும் போது தலையை குனிந்து அதிர்ந்து அதிர்ந்து பாடும்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 06-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
குரங்கின் தலையை உள்ளிட்டு அளித்த காரணத்தால் ஏற்றுக் கொள்ளும்படியானது (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 06-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_குரங்கின் தலையை உள்ளிட்டு அளித்த காரணத்தால் ஏற்றுக் கொள்ளும்படியானது (4)_

_அளித்த_ = *தந்த*

_குரங்கின் தலை_
= *கு*

_உள்ளிட்டு_ = _indicator to place *கு* inside *தந்த*_

= *தகுந்த*

= _ஏற்றுக் கொள்ளும்படியானது_

* _(அளித்த காரணத்தால் --> Surface reading)_

*************************
*தகுந்தன தப்பிப் பிழைத்தல்*

தலைப்பைப் பார்த்து குழம்பிவிட வேண்டாம். சார்லஸ் டார்வினின் 'பரிணாமக் கோட்பாட்டினுடைய' (Theory of Evolution) ஒரு கூற்றான ' Survival of the fittest' என்பதன் தமிழாக்கமே இது. 

தற்போதைய அறிவியலார்கள், இதில் இருக்கும் 'fittest' என்று அவர்- டார்வின்- குறிப்பிடும் அந்தத் ' *தகுந்த இனம்* ' என்று எதுவும் இருக்க முடியாது; எல்லா இனங்களுக்கும் இந்த உலகில் வாழும் உரிமை இருக்கிறது என்பது போன்ற சில குறைகளை இந்தக் கோட்பாட்டில் கூறுகின்றனர்.

இந்த உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் மிதமிஞ்சிய இனப்பெருக்கத் திறனைக் கொண்டிருக்கின்றன. ஆனால் அதற்கேற்ற அளவு உணவு உற்பத்தி இருக்காது. எனவே அவை பிற உயிரினங்கோளோடு ( அதே இனம் அல்லது வேறு இனம்) ஒரு வாழ்க்கைப் போராட்டத்தை மேற்கொள்ள வேண்டி இருக்கிறது. இந்தப் போராட்டத்தில் தேவையான மாறுபாடுகளைக் கொள்ளும் இனம் தப்பித்துக் கொள்ளும். *இதுவே தகுந்தன தப்பிப் பிழைத்தல் என்பதாகும்* . இந்த மாற்றங்கள் மரபுப் பண்புகளின் வழியே கடத்தப் பட்டு அதன் சந்ததிகளும் அதன் பண்புகளைப் பெரும்.

இந்தத் 'தகுந்தன தப்பிப் பிழைத்தல்' என்பது நம்மால் எவ்வாறு புரிந்துகொள்ளப்பட்டது என்பது முக்கியமானது. பெரும்பாலும் தம்முடைய பலத்தை முன்னிலைப்படுத்தி எவரும் பிழைப்பதில்லை. மாறாக பிறரது பலவீனத்தை முன்னிலைப்படுத்தி பிழைத்துக் கொள்வதே எங்கும் நடக்கிறது.

 (நடைமேடை --
அசோக் குமார் )
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/6, 07:00] A Balasubramanian: தகுந்த
A.Balasubramanian

[9/6, 07:01] மீ.கண்ணண்.: தகுந்த
[
[9/6, 07:02] Meenakshi: விடை:தகுந்த
[
[9/6, 07:06] prasath venugopal: தகுந்த

[9/6, 07:08] stat senthil: தகுந்த

[9/6, 07:09] siddhan subramanian: தகுந்த
( தந்த + கு)

[9/6, 07:09] பாலூ மீ.: தகுந்த
[
[9/6, 07:10] திரைக்கதம்பம் Ramarao: தகுந்த

[9/6, 07:22] sridharan: தகுந்த. தந்த+கு
[
[9/6, 07:30] Bhanu Sridhar: தகுந்த

[9/6, 07:31] ஆர்.பத்மா: தகுந்த

[9/6, 07:40] மாலதி: தகுந்த

[9/6, 07:45] Rohini Ramachandran: தகுந்த
[
[9/6, 07:53] nagarajan: *தகுந்த*

[9/6, 08:00] joseph amirtharaj: தகுந்த

[9/6, 08:00] ஆர். நாராயணன்.: தகுந்த

[9/6, 08:35] Bharathi: தகுந்த
[
[9/6, 09:27] akila sridharan: தகுந்த
[
[9/6, 09:49] Dr. Ramakrishna Easwaran: *தகுந்த*

[9/6, 10:23] G Venkataraman: தகுந்த

[9/6, 11:27] N T Nathan: தகுந்த
[
[9/6, 13:53] shanthi narayanan: தகுந்த
[
[9/6, 15:55] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏தகுந்த🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/6, 19:09] Ramki Krishnan: தகுந்த
[
[9/6, 19:32] Dhayanandan: *தகுந்த*

[9/6, 19:35] sathish: தகுந்த

[9/6, 19:52] bala: தகுந்த
[
[9/6, 21:18] Venkat: தகுந்த 🙏🏾

[9/6, 22:10] sankara subramaiam: தகுந்த
****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 07-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
அதிக சக்தி கொண்டது துடுப்பு போடு எதிர்வரும் துயரம் பாதி ஓடிவிடும் (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*************************
_வலியதிலும் வாழ்வு  விதி எழுதிய தீர்ப்பு_
_வரண்டு பாேன நாவுக்கு_ 
_உப்பு நீர் தித்தி்ப்பு_

_மனிதம் வாழட்டும் மனிதராய் வாழ்வாேம்_ 
_வலியதும் வாழும்  வலியும் ஓர் நாள் சாகும்..._

( Roshni Abi )
*************************
_அதிக சக்தி கொண்டது துடுப்பு போடு எதிர்வரும் துயரம் பாதி ஓடிவிடும் (4)_

_துடுப்பு போடு_
= *வலி*

_துயரம் பாதி ஓடிவிடும்_ = *துய*

_எதிர்வரும்_
= *துய --> யது*

_அதிக சக்தி கொண்டது_
= *வலி+யது*
= *வலியது*
*************************
*விதி வலியது, விதியை மதியால் வெல்லலாம்..* *இந்த இரண்டில் எது சரியானது?*

இரண்டும் சரியே. நமது செயல்பாடுகளைப் பொறுத்து இது அமைகிறது. பாவம் நிறைய செய்திருந்தால் விதி வென்று விடுகிறது. கடமை என்னும் மதி நுட்பம் இருந்தால் அதை வெல்லவும் முடிந்திருக்கிறது. சத்தியவான் கதையில், மாமனார், மாமியார், கணவருக்கு மனம் கோணாமல் தொண்டு செய்த சாவித்திரி விதியை ஜெயித்திருக்கிறாள். இறை நம்பிக்கையுடன் செயல்பட்ட மார்க்கண்டேயனும் விதியை வென்றிருக்கிறார். கடமை, இறை நம்பிக்கை உள்ளவர்களுக்கு விதியை வெல்லும் சக்தி கிடைத்திருக்கிறது என்பது புராணங்கள் உணர்த்தும் உண்மை. 
*************************
_சொல்லாதே யாரும் கேட்டால் எல்லோரும் தாங்க மாட்டார்_
_செல்வாக்கு சேரும் காலம்_
_வீடு தேடி வந்தது_ 

_உரிமையோ உரிமை என்று_
_ஊரெங்கும் மேடை போட்டான்_
_கடமையோ கடமை என்று_
_காரியம் செய்தால் என்ன_

_விதியாகப் பட்டது *வலியது*_
_அதை யாரும் வெல்ல முடியாது_
_பாண்டவாளைப் பார்க்கலையோ_
_ஜானகியை விட்டு ஸ்ரீராமனையே பிரிக்கலையோ_
_பெரியவா சொன்ன வேதங்கள் பொய்யில்ல ஆகவே விதி *வலியது*_

_சொல்லாதே யாரும் கேட்டால்_

(சொர்கம்:1970)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/7, 07:12] திரைக்கதம்பம் Ramarao: வலியது

[9/7, 07:12] A Balasubramanian: வலியது
A.Balasubramanian

[9/7, 07:12] nagarajan: *வலியது*
[
[9/7, 07:15] மீ.கண்ணண்.: வலியது

[9/7, 07:19] Meenakshi: விடை:வலியது

[9/7, 07:45] sridharan: வலியது

[9/7, 07:54] Ramki Krishnan: வலியது

[9/7, 08:03] மாலதி: வலியது

[9/7, 08:04] stat senthil: வலியது

[9/7, 08:18] Venkat: வலியது 🙏🏾
[
[9/7, 08:24] joseph amirtharaj: வலியது

[9/7, 08:27] G Venkataraman: வலியது?

[9/7, 08:27] ஆர். நாராயணன்.: வலியது

[9/7, 08:55] ஆர்.பத்மா: வலியது
[
[9/7, 08:56] கு.கனகசபாபதி, மும்பை: வலியது

[9/7, 09:02] akila sridharan: வலியது

[9/7, 10:14] Bhanu Sridhar: வலியது

[9/7, 12:53] Viji - Kovai: வலியது

[9/7, 14:36] Dr. Ramakrishna Easwaran: *வலியது*

[9/7, 14:56] Rohini Ramachandran: வலியது

[9/7, 15:21] shanthi narayanan: வலியது
[
[9/7, 18:29] வானதி: *வலியது*

[9/7, 19:34] sathish: வலியது


[9/7, 19:41] *வீ.ஆர். பாலகிருஷ்ணன்: *
🙏வலியது🙏
[
[9/7, 20:37] sankara subramaiam: வலியது
****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 08-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*தன் வழியில்தான் கடவுளை அடைய முடியும் என்பவரின் முழுமையற்ற எதிர்வாதம் கொண்ட அறிவு? (4)*
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 08-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_தன் வழியில்தான் கடவுளை அடைய முடியும் என்பவரின் முழுமையற்ற எதிர்வாதம் கொண்ட அறிவு? (4)_

_முழுமையற்ற வாதம்_
= *வாத(ம்) = வாத*

_எதிர்_
= *வாத-->தவா*

_அறிவு_ = *மதி*
*கொண்ட அறிவு*
= *தவா* _inside_ *மதி*
= *மதவாதி*
= _தன் வழியில்தான் கடவுளை அடைய முடியும் என்பவர்_
*************************
*மதவாதிகள்*
 
மதங்களின் பெயரைச் சொல்லிக் கொடுமைகள் செய்பவரை *மதவாதிகள்* என்று *பாரதிதாசன்* சுட்டிக் காட்டியுள்ளார். அவர்கள், பணத்தைப் பறிப்பதிலேயே குறிக்கோளாய் இருப்பவர்கள் என்பதை, 
 
__வாதனை சொல்லி வணங்கி நின்றால் தெய்வ_     
_சோதனை என்று அவர் சொல்லுவார் - பணச்_     
_சாதனையால் உம்மை வெல்லுவார் - கெட்ட_     
_போதனையால் தினம் கொல்லுவார்__

(பாரதிதாசன் கவிதைகள், 59 பலிபீடம் - 5)
என்று பாடியுள்ளார். இந்த மதவாதிகள் ஏமாளிகளை ஏமாற்றுவார்கள்; இளைத்தவர்களை மிரட்டுவார்கள் என்னும் உண்மையை அறிந்தவர் பாரதிதாசன். எனவே, 

_மருட்டுகின்ற மதத்தலைவர் வாழ்கின்றாரே_

(பாண்டியன் பரிசு இயல் 56)
(மருட்டுகின்ற = மயக்குகின்ற)
என்று வருத்தப்பட்டுப் பாடியுள்ளார். இத்தகைய மதவாதிகள் உண்மையைப் பொய் என்று கூறுவார்கள்; திருடரைச் சாமி என்று கூறுவார்கள்; மூடத்தனத்தைப் பரப்புபவர்களைப் பாவலர் என்பார்கள் என்று தெரிவித்துள்ளார். 
 
__விழித்திருக்கும் போதிலேயே நாட்டில்_    
_விளையாடும் திருடரை ‘சாமி’ என்கின்றார்_ .     
_அழியாத மூடத்தனத்தை - ஏட்டில்_     
_அழகாய் வரைந்திடும் பழிகாரர் தம்மை_     
_முழுது ஆய்ந்த பாவலர் என்பார் - இவர்_     
_முதல் எழுத்து ஓதினும் மதி இருட்டாகும்__

(பாரதிதாசன் கவிதைகள், 49 மாண்டவன் மீண்டான் - 5) 
இத்தகைய மதவாதிகளிடம் விழிப்பாய் இருக்கவேண்டும் என்று பாரதிதாசன் உணர்த்தியுள்ளார்.

(tamilvu.org)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************
[9/8, 07:01] A Balasubramanian: மதவாதி
A.Balasubramanian

[9/8, 07:02] nagarajan: *மதவாதி*
[
[9/8, 07:06] பாலூ மீ.: மதவாதி

[9/8, 07:07] stat senthil: மதவாதி
[
[9/8, 07:08] திரைக்கதம்பம் Ramarao: மதவாதி

[9/8, 07:12] sridharan: மதவாதி
[
[9/8, 07:18] Meenakshi: விடை:மதவாதி

[9/8, 07:26] Dhayanandan: *த்வைதம்*

[9/8, 07:28] Ramki Krishnan: மதவாதி
[
[9/8, 07:31] Rohini Ramachandran: வெறித்த(னம்)?

[9/8, 07:40] Dr. Ramakrishna Easwaran: *மதவாதி*

[9/8, 07:55] prasath venugopal: மதவாதி

[9/8, 07:58] மாலதி: மதவாதி

[9/8, 08:19] ஆர். நாராயணன்.: மதவாதி

[9/8, 08:27] siddhan subramanian: மதவாதி (மதி +வாத)

[9/8, 08:50] கு.கனகசபாபதி, மும்பை: மதவாதி

[9/8, 09:12] joseph amirtharaj: மதவாதி

[9/8, 10:52] N T Nathan: மதவாதி

[9/8, 12:33] G Venkataraman: மதவாதி
( மதி + வாதம் =<)

[9/8, 14:27] ஆர்.பத்மா: மதவாதி

[9/8, 19:17] sathish: மதவாதி
[
[9/8, 19:17] chithanandam: மதவாதி?

[9/8, 21:59] Bhanu Sridhar: மதவாதி


****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 09-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வீடு கட்டத் தேவைப்படும் மரத்தை வெட்டிய தருமனை.... (2)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_வீடு கட்டத் தேவைப்படும் மரத்தை வெட்டிய தருமனை.... (2)_

_மரம்_ = *தரு*

_மரத்தை வெட்டிய தருமனை_
= _to remove *தரு* from *தருமனை*_
= *மனை*
= _வீடு கட்டத் தேவைப்படும்_
*************************
*மனை வாங்கப் போகிறீர்களா?*

பெரும்பாலான மக்கள் வாடகை வீட்டில் வசித்தாலும் விரைவிலேயே சொந்த வீடு கட்டி குடியேற வேண்டும் என்கிற இலட்சியத்தை கொண்டவர்களாக இருக்கிறார்கள். அப்படி சொந்த வீடு கட்டுவதற்கு காலி மனை வாங்க வேண்டியது அவசியம். 

மனை வாங்குவதற்கு முன்பு பல விஷயங்களை நாம் கவனிக்க வேண்டும்.

முதலில் நாம் வாங்கப் போகும் மனைக்கு உரிய பட்டாவின் நகலை வாங்கிப் பார்க்க வேண்டும். பட்டாவோடு நின்றுவிடக் கூடாது. சிட்டா, அடங்கல் ஆகியவற்றையும் கவனமாகப் பார்க்க வேண்டும். இதில் சிட்டா என்பது நிலத்தின் பரப்பளவு, அதன் பயன்பாடு யாருடைய கட்டுப்பாட்டில் நிலம் உள்ளது என்பதைக் காட்டும் ஆவணம். அடங்கல் என்பது நிலத்தின் பரப்பு, பயன், கிராமத்தில் குறிப்பிட்ட எந்த இடத்தில் உள்ளது என்பதைச் சொல்லும் ஆவணம். இந்த ஆவணங்களைக் கவனமாகப் பார்க்க வேண்டும்.

மனையை விற்பவர் பற்றிய விவரத்தை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும். விற்பவர் பெயரில்தான் மனை இருக்கிறது என்பதற்கு ஆதாரமாக வில்லங்கச் சான்றிதழ் வாங்கிப் பார்க்க வேண்டும். 

பட்டா உண்மையான பட்டாவா என்பதையும் சரி பார்க்க வேண்டும். இந்தப் பட்டாவோடு, மின் இணைப்பு ரசீது, வீட்டு வரி ரசீது ஆகியவையும் மனை விற்பரின் பெயரில் உள்ளனவா என்பதைப் பார்க்க வேண்டும். ஒரு வேளை இந்த ஆவணங்கள் இல்லாவிட்டால், மற்ற ஆவணங்கள் இருந்தும்கூடச் சொத்தை உங்கள் பெயருக்கு மாற்றுவதில் சிக்கல் வர வாய்ப்புள்ளது என்பதால் எல்லாவற்றையும் கவனமாகப் பார்த்து வாங்க வேண்டும்.

(முகேஷ் in hindu.com)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/9, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மனை

[9/9, 07:00] nagarajan: *மனை*

[9/9, 07:00] A Balasubramanian: மனை
A.Balasubramanian

[9/9, 07:01] V N Krishnan.: மனை (தருமனை-தரு)

[9/9, 07:02] stat senthil: மனை

[9/9, 07:02] மாலதி: மனை

[9/9, 07:02] prasath venugopal: மனை

[9/9, 07:04] Meenakshi: விடை:மனை
[
[9/9, 07:07] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏மனை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/9, 07:25] பாலூ மீ.: தரு
[
[9/9, 07:31] Rohini Ramachandran: தரு

[9/9, 07:35] A D வேதாந்தம்: விடை= மனை( வேதாந்தம்)

[9/9, 07:36] Ramki Krishnan: மனை
[
[9/9, 07:40] G Venkataraman: தரு
[
[9/9, 07:44] sathish: மனை

[9/9, 07:49] ஆர். நாராயணன்.: மனை
[
[9/9, 07:50] sridharan: மனை

[9/9, 07:53] chithanandam: மனை

[9/9, 08:00] akila sridharan: மனை

[9/9, 08:35] Dr. Ramakrishna Easwaran: *மனை*
மரம்= தரு
வெட்டிய= deletion indicator
~தரு~ மனை
வீடு கட்டத் தேவைப்படும்= மனை

[9/9, 08:41] கு.கனகசபாபதி, மும்பை: மனை

[9/9, 08:53] ஆர்.பத்மா: மனை


[9/9, 09:05] Bhanu Sridhar: மனை
[
[9/9, 09:06] N T Nathan: மனை
[
[9/9, 09:21] joseph amirtharaj: மனை

[9/9, 10:16] Revathi Natraj: மனை

[9/9, 12:10] Viji - Kovai: மனை

[9/9, 12:20] Usha Chennai: தரு

[9/9, 18:13] மீ.கண்ணண்.: மனை

[9/9, 19:40] siddhan subramanian: மனை

[9/9, 21:58] sankara subramaiam: மனை


****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 10-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
திட்டமிட்டு அடைய வேண்டிய இடம் மெய்மறப்பது எளிது (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 10-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
═════════════
_பகவன்_ :
*இலகு* , பகு என்று இரண்டு வடமொழிச் சொற்கள் உள்ளன.

*இலகு - என்றால், சிறிய, எளிய, என்று பொருள்.*

*பகு - என்றால், பெரிய, மதிப்புமிக்க, என்று பொருள்.*

பகு + அவன் = பகவன்
அதாவது பகவன் என்றால் பெரியவன் மதிப்பு மிக்கவன் என்று பொருள். பகவன் என்பது இறைவன் மிகப் பெரியவன் என்பதைக் குறிக்கிறது.
குடும்ப அளவில் பெரியவன் என்றால் எல்லோரையும் விட மூத்தவன் என்று பொருள்.
உலக அளவில் பெரியவன் என்றால் உலகில் உள்ள அனைத்திற்கும் மூத்தவன், மூலநிலை என்று பொருள்
அந்த மூலநிலையைத் தான் பகவன் என்ற சொல்லால் குறிப்பிடுகிறோம்.
══════════════
_திட்டமிட்டு அடைய வேண்டிய இடம் மெய்மறப்பது எளிது (3)_

_திட்டமிட்டு அடைய வேண்டிய இடம்_
= *இலக்கு*

_மெய் மறப்பது_
= *இலக்கு - க்* ( _மெய்யெழுத்து_ )

= *இலகு*
= _எளிது_
*************************
*திருமலைச் சிறப்பு*
*கயிலாயம்*
_சேக்கிழார் பெரியபுராணம்-13_

*பாடல்*

_நிலவும் எண்ணில் தலங்களும் நீடொளி_

_*இலகு* தண்தளிர் ஆக எழுந்ததோர்_

_உலகம் என்னும் ஒளிமணி வல்லிமேல்_

_மலரும் வெண்மலர் போல்வதம் மால்வரை._

*பொருளுரை:*

'இந்த உலகத்தில் இருந்து விளங்கும் கணக்கு இல்லாத சிவத்தலங்களும் பரவிய பிரகாசம் விளங்கும் குளிர்ச் சியைப் பெற்ற தளிர்கள் ஆகவும், எழுந்ததாகிய ஓர் உலகம் என்று வழங்கும் பிரகாசத்தைப் பெற்ற மாணிக்கக் கொடியின்மேல் மலர்கின்ற வெள்ளை நிறத்தை உடைய மலரைப்போல விளங்குவது அந்தப் பெரிய கைலாய மலை.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/10, 07:00] nagarajan: *இலகு*

[9/10, 07:00] A Balasubramanian: இலகு
A.Balasubramanian

[9/10, 07:01] Bhanu Sridhar: இலகு

[9/10, 07:03] திரைக்கதம்பம் Ramarao: இலகு
[
[9/10, 07:08] Meenakshi: விடை:இலகு
[
[9/10, 07:09] பாலூ மீ.: இல(க்)கு இலகு
[
[9/10, 07:16] மீ.கண்ணண்.: இலகு

[9/10, 07:17] sridharan: இலகு.

[9/10, 07:23] Ramki Krishnan: இலகு

[9/10, 07:24] V N Krishnan.: இலகு
திட்டமிட்டு அடைய வேண்டிய இடம்
இலக்கு -க்(மெய் மறப்பது) இலகு
எளிது

[9/10, 07:49] sathish: இலகு

[9/10, 07:56] ஆர்.பத்மா: இலகு

[9/10, 07:20] stat senthil: இல ~க்~ கு
[
[9/10, 08:10] G Venkataraman: இலகு

[9/10, 08:31] joseph amirtharaj: இலகு

[9/10, 09:01] Dhayanandan: *இலகு*

[9/10, 09:24] ஆர். நாராயணன்.: இலகு

[9/10, 10:09] A D வேதாந்தம்: விடை=இலகு(வேதாந்தம்)

[9/10, 11:31] akila sridharan: இலகு

[9/10, 12:19] siddhan subramanian: இலகு
[
[9/10, 12:24] மாலதி: இலகு

[9/10, 14:45] Rohini Ramachandran: இலகு

[9/10, 15:58] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏இலகு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[9/10, 19:24] chithanandam: இலகு
[
[9/10, 20:40] Dr. Ramakrishna Easwaran: *இலகு*
இல ~க்~ கு

[9/10, 20:55] *balagopal:* *இலகு.*

[9/10, 21:07] வானதி: இல(க்)கு
*இலகு*


****************************.
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 11-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தாய்நாடு பாரம் இறங்கிய குற்றம் தரையோடு செல் (3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
A peek into today's riddle!
************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*வழு*
(பிழை-தவறு- *குற்றம்* )
************
*வழு* என்பது பிழையைக் குறிக்கும் சொல்லாகும்.
இலக்கண முறையைப் பின்பற்றாமல் பேசுவதும் எழுதுவதும் வழு எனப்படும்.
 
*வழா நிலை*
பிழையின்றி எழுதவேண்டும் என்று வலியுறுத்துவது வழா நிலை ஆகும்.
இலக்கணமுறையுடன் பேசுவதும் எழுதுவதும் வழாநிலை எனப்படும்.

*வழு அமைதி*
பிழையிருந்தாலும் ஒரு காரணம் கருதி ஏற்றுக்கொள்வது வழு அமைதி ஆகும்.
இலக்கண முறையின்றிப் பேசினாலும் எழுதினாலும் கூட சில இடங்களில் இலக்கணமுடையதைப்போல வழாநிலையாக ஏற்றுக்கொள்ளும் முறைக்கு வழுவமைதி என்று பெயர்.
************************
_தாய்நாடு பாரம் இறங்கிய குற்றம் தரையோடு செல் (3)_

_தாய்நாடு_
= *பாரதம்*
_பாரம் இறங்கிய_
= *பாரதம் - பாரம்*
= *த*
_குற்றம்_
= *வழு*
_தரையோடு செல்_
= *தவழு*
*************************
_*தவழும்* குழந்தை தன்னைத்தானே  இழுத்துக்கொண்டு நகரும் தங்கத் தேர்_
(பவானி)
*************************
*தோல்வி சுகமானது*

_தோற்பது சுகமானது தன் குழந்தையிடம்._

_நாலுகாலால் *தவழும்* போதே_
_ஓட்டத்தில் ஆமையாவது_
_அம்மாக்களுக்கு தனி சுகம்._

_யார் முதலில் எனும் சாப்பாட்டு மேஜைகளில்_
_தோற்றுத் தொப்பியடிப்பது_
_அப்பாக்களுக்குச் சுகம்._

_தோற்பது சுகமானது தன் குழந்தையிடம்._

_இவன் தான் காதலன் என_
_பிடிக்காத ஒருவனை அவள்_
_அறிமுகப் படுத்தும் வரை !_

By சேவியர் 
*************************
*அகநானூறு 213*

வேங்கடத்தைக் கடந்து, 
வடுகர் தேசத்துக்குச் சென்றாலும் 
திரும்பி வரக் காலம் தாழ்த்த மாட்டார் 
என்று கூறித் தோழி தலைவியைத் தேற்றுகிறாள்.  
_வினை நவில் யானை விறற் போர்த்தொண்டையர்_
_இன மழை *தவழும்* ஏற்று அரு நெடுங்கோட்டு_
_ஓங்கு வெள் அருவி வேங்கடத்துஉம்பர்,_ _கொய்குழை அதிரல் வைகு புலர் அலரி_
_சுரி இரும் பித்தை சுரும்பு படச்சூடி,_      _இகல் முனைத் தரீஇய ஏறுடைப் பெருநிரை_
_நனை முதிர் நறவின் நாட் பலிகொடுக்கும்_ _வால் நிணப் புகவின் வடுகர் தேஎத்து,_
*******
தொண்டையர் ஆளும் நாடுவேங்கடம். 
அங்கு மேகக் கூட்டம் *தவழும்* மலைமுகடுகளில் அருவி கொட்டும்.
அதனைத் தாண்டிச் சென்றால்வடுகர் தேசசம். 
வடுகர்கள் விடியற்கால நேரத்தில் அதிரல் பூக்களைத் தம் தலையில் போட்டிருக்கும் பித்தை முடியில் சூடிக்கொண்டு பகைவர்களின் ஆனிரைகளைக் கவர்ந்து வருவர். 
அவ்வாறு அவர்கள் கவர்ந்துகொண்டு வருவதற்காக, பூவில் வடித்தெடுத்த நறவுக் கள்ளை அவர்களுக்கு ,வெண்ணிற அரிசிச் சோற்றுடன் தருவார்கள்.
*************************
*உன்னால் பறக்க முடியாவிட்டால் ஓடு. ஓட முடியாவிட்டால் நடந்து செல். நடக்க முடியாவிட்டால் தவழு.. ஆனால் நீ என்ன செய்வதாக இருந்தாலும் அது உன் லட்சியத்தை நோக்கிய பயணமாக இருக்க வேண்டும்...* 
- மார்ட்டின் லூதர் கிங்
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
****************************

[9/11, 07:01] A Balasubramanian: தவழு
A.Balasubramanian

[9/11, 07:04] stat senthil: தவழு
[
[9/11, 07:04] திரைக்கதம்பம் Ramarao: தவழு

[9/11, 07:09] Meenakshi: விடை:தவழு

[9/11, 07:10] மீ.கண்ணண்.: தவழு

[9/11, 07:13] மாலதி: தவழு
[
[9/11, 07:13] sathish: தவழு

[9/11, 07:15] Dhayanandan: *தவழு*
[
[9/11, 07:30] A D வேதாந்தம்: விடை= தவழு(வேதாந்தம்)

[9/11, 07:45] ஆர்.பத்மா: தவழு
[
[9/11, 07:52] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏தவழு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

9/11, 07:59] Rohini Ramachandran: தவழு

[9/11, 08:24] N T Nathan: தவழு

[9/11, 08:33] nagarajan: *தவழு*

[9/11, 10:08] ஆர். நாராயணன்.: தவழு

[9/11, 11:18] sankara subramaiam: தவழு
[
[9/11, 14:47] siddhan subramanian: தவழு (பாரதம் - பாரம் = த + வழு)
[
[9/11, 14:58] joseph amirtharaj: தவழு
[
[9/11, 18:58] கு.கனகசபாபதி, மும்பை: தவழு
[
[9/11, 19:25] Venkat: தவழு 🙏🏾


****************************.

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்