இன்று காலை வெளியான வெடி:
அடுக்கடுக்காக யாகம் முடியும் முன்பே சாய், ரமாவைத் தழுவினான் (6)
அதற்கான விடை: சரமாரியாக = சரி + ரமா +
சாய் = சரி (சரித்துவிடு, வினைச்சொல்)
டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர், உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
அடுக்கடுக்காக யாகம் முடியும் முன்பே சாய், ரமாவைத் தழுவினான் (6)
அதற்கான விடை: சரமாரியாக = சரி + ரமா +
சாய் = சரி (சரித்துவிடு, வினைச்சொல்)
டாக்டர் ராமகிருஷ்ண ஈஸ்வர், உங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் நன்றி.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
*உதிரிவெடி 4155* ( செப்டம்பர் 26, 2021)
*************************
_அடுக்கடுக்காக யாகம் முடியும் முன்பே சாய், ரமாவைத் தழுவினான் (6)_
_[சாய்ந்து = சரிந்து]_
_சாய்_ = *சரி*
_சாய், ரமாவைத் தழுவினான்_
= *_சரி_* _encloses *ரமா*_
= *ச(ரமா)ரி = சரமாரி*
_யாகம் முடியும் முன்பே_
= *யாக(ம்) = யாக*
_யாக_ *முன்பே* _சரமாரி_
= *சரமாரி+யாக*
= *சரமாரியாக*
= _அடுக்கடுக்காக_
*************************
*"சரமாரியாக" என்பதன் தமிழ் விளக்கம்*
அடுக்கடுக்காக
ஒன்றன் பின் ஒன்றாக
விடாமல் தொடர்ந்து
*************************
*சரமாரி = சரம் + மாரி*
இந்தச்சொல்லில் சரம் என்றால் இழை அதாவது மெல்லிய நூலைப்போன்ற என்றும் மாரி என்றால் மழை என்றும் பொருள்...மழைநீர் வானிலிருந்து பலவித வடிவங்களில் நிலத்தை வந்தடையும்...சிறு,பெரு தூறலாக, சாரலாக, சிறு,பெரு மழையாக இன்னும் பல வகைகளில்...பெருத்த மழைப் பெய்யும்போது இழை இழையாக அடர்ந்து, தொடர்ந்து, ஒரேசீராக நீர் வானிலிருந்து கொட்டுவதைக் காணமுடியும்... இதுவே சர (இழை)மாரி (மழை) ஆகும்... இதைப்போலவே ஒரு நிகழ்வு வேகமாக, இடைவிடாது, ஒரே சீராக நடந்தால் அதை *சரமாரியாக* என முற்சொல்லிட்டுக் குறிப்பிடுவது வழக்கம்...
*************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*
(27-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
குளிர்ச்சியான கடனை முதலில்லாமல் தந்தால் அபராதம் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(27-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*தண்டனை*
காற்றினில்
கவி புனையும்
உன் விரல்களுக்கு
விடுமுறை அளிக்கவே
என் விரல்கள் கொண்டு
உன் விரல்களை
சிறை செய்கிறேன்..
விரல்களை
சிறை செய்தவனுக்கு
விழிச் சிறையில்
வினோத *தண்டனை* ..
- தென்றல் . G
***********************
உன்னை மறக்கலாம் என்று தான் நினைக்கிறேன். என் நினைவுகளில்
நிலைத்து நிற்கும் உன்னை மறக்கவும் முடியவில்லை. என் மனதை சிதைக்கவும் தெரியவில்லை. இப்படி என்னை தவிக்க வைக்கும் உனக்கு நான் கொடுக்கும் *தண்டனை* காதல். என்ன கொடுமை இது !!!
By Jano
***********************
_குளிர்ச்சியான கடனை முதலில்லாமல் தந்தால் அபராதம் (4)_
_குளிர்ச்சியான_
= *தண்*
_கடனை முதலில்லாமல்_
= *(க)டனை = டனை*
_தந்தால்_
= _indicator to join (தண்+டனை)_
= *தண்டனை*
= _அபராதம்_
*************************
*கவிதைத் தவறா காதையறு*
_காதையறுப் பார்களாம் எண்சீர் விருத்தம்_
_காய். காய். மா. மா அரையடிக்கு_
_குட்டுதற்குப் பிள்ளைப்பாண் டியனோ யில்லை_
_குரும்பியள வாக்காதைக் குடைந்து தோண்டி_
_எட்டினமட் டறுப்பதற்கோ வில்லை யில்லை_
_யிரண்டொன்றா முடித்துதலை யிறங்கப் போட்டு_
_வெட்டுதற்கோ கவியொட்டக் கூத்த னில்லை_
_விளையாட்டாய்க் கவிதைதனை விரைந்து பாடித்_
_தொட்டுதற்கோ வறிவில்லாத் துரைக ளுண்டு_
_தேசமெங்கும் பலவரெனத் திரிய லாமே_
**************
விளக்கம்:
அந்தக் காலத்தில் போட்டிகளில் இலக்கணம் தவறி பாடுபவர்களைத
தலையில் குட்டுவாராம் பிள்ளைப்பாண்டி என்னும் புலவர்.
வில்லிபுத்தூர் ஆழ்வார் காலத்தில் தவறுதலாக பாடுவரின் காதை
துறடுகோலால் இழுத்து அறுப்பார்களாம்
ஒட்டக் கூத்தன் காலத்தில் தவறாய் பாடுபவரை சிறையிலடைத்து
முடி வளர்ந்தபின் இருகுடுமிகளை முடித்து தலையை வெட்டிவிடுவார்களாம்
அந்த *தண்டனைகள்* இப்பொழுது மறைந்து போயின அதனால்
ஒட்டுதலிலா கவிதைகளை விரைவாக தப்பும் தவறுமாக பாடித்
தேசத்தில்திரிநது கொண்டிருக்கும் துரை மார்கள் இன்று உண்டு
என்று அக்காலத்திலேயே ஒரு புலவர் பாடியுள்ளார் பாருங்கள்.
***********************
💐🙏🏼💐
****************************
[9/27, 07:00] திரைக்கதம்பம் Ramarao: தண்டனை
[
[9/27, 07:00] A Balasubramanian: தண்டனை
A.Balasubramanian
[9/27, 07:03] akila sridharan: தண்டனை
[9/27, 07:04] Bhanu Sridhar: தண்டனை
[9/27, 07:07] V N Krishnan.: தண்டனை
[9/27, 07:08] sridharan: தண்டனை
[9/27, 07:09] பாலூ மீ.: தண்டனை
[
[9/27, 07:10] A D வேதாந்தம்: விடை=தண்டனை( வேதாந்தம்)
[9/27, 07:10] மீ.கண்ணண்.: தண்டனை
[9/27, 07:11] Meenakshi: விடை:தண்டனை
[9/27, 07:14] stat senthil: தண்டனை
[9/27, 07:18] Rohini Ramachandran: தண்டனை
[9/27, 07:18] ஆர். நாராயணன்.: தண்டனை
[9/27, 07:21] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏தண்டனை🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[9/27, 07:22] G Venkataraman: தண்டனை
[9/27, 07:30] மாலதி: தண்டனை
[
[9/27, 07:47] Dr. Ramakrishna Easwaran: தண்டனை
[9/27, 07:55] Ramki Krishnan: தண்டனை
[9/27, 08:05] chithanandam: தண்டனை
[
[9/27, 08:09] Dhayanandan: *தண்டனை*
[9/27, 08:11] prasath venugopal: தண்டனை
[9/27, 08:28] siddhan subramanian: தண்டனை
[9/27, 08:28] Venkat: தண்டனை 🙏🏾
[
[9/27, 08:32] ஆர்.பத்மா: தண்டனை
[9/27, 08:44] joseph amirtharaj: தண்டனை
[9/27, 09:29] Revathi Natraj: தண்டனை
[9/27, 10:10] nagarajan: *தண்டனை*
[9/27, 10:29] Viji - Kovai: தண்டனை
[9/27, 11:11] Bharathi: தண்டனை
[
[9/27, 11:36] வானதி: *தண்டனை*
[
[9/27, 11:51] shanthi narayanan: தண்டனை
[
[9/27, 13:11] கு.கனகசபாபதி, மும்பை: தண்டனை
[9/27, 19:11] sathish: தண்டனை
[9/27, 19:13] sankara subramaiam: தண்டனை
[9/27, 19:36] N T Nathan: தண்டனை
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(28-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
குண்டு வைப்பவன் நெருப்பு வைக்க விதி வசம் சிக்கிய உப்புமாவுக்குத் தேவையானது (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(28-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*அனைத்து பயங்கரவாதிகளும் தீவிரவாதிகள். ஆனால் அனைத்து தீவிரவாதிகளும் பயங்கரவாதிகள் அல்ல.*
***********************
*தீவிரவாத பதிலடி*
_தீவிரவாதத்திற்கு பதிலடி_
_தீவிர வாதம் அல்ல தீவிர வதம்._
_வாதம் செய்யாமல் வதம் செய்._
(பாலா)
***********************
_குண்டு வைப்பவன் நெருப்பு வைக்க விதி வசம் சிக்கிய உப்புமாவுக்குத் தேவையானது (5)_
_நெருப்பு_ = *தீ*
_உப்புமாவுக்குத் தேவையானது_
= *ரவா*
_விதி வசம் சிக்கிய (ரவா)_
= *வி(ரவா)தி*
= *விரவாதி*
_நெருப்பு வைக்க_
= *தீ + விரவாதி*
= *தீவிரவாதி*
= _குண்டு வைப்பவன்_
***********************
*பயங்கரவாதி - தீவிரவாதி - இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?*
இதற்கான எளியதொரு விளக்கம்:
ஒரு செயலை தீவிரமாக செய்பவர்கள் *தீவிரவாதி* என்று கொள்ளலாம் இதனை ஆங்கிலத்தில் Extremist என்று கூறுவார்கள்
அதேபோன்று பயங்கரமான, மற்றவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய செயல்களை செய்பவர்களை *பயங்கரவாதி* என்று கூறலாம். இதனை ஆங்கிலத்தில் Terrorist என்று கூறுவார்கள்.
நாம் பேச்சு வழக்கில் அதிகம் ஆக ஆங்கிலத்தில் 'Terrorist' என்ற வார்த்தைக்கு தமிழில் தவறாக 'தீவிரவாதி' என்று பல இடங்களில் குறிப்பிடுகிறோம் , அவன் பயங்கரவாதியாகவே இருந்தாலும் சரி, அவனை நாம் தீவிரவாதி என்று தான் குறிப்பிடுகிறோம்.
(நாக சூர்யா)
***********************
*அமெரிக்காவில் நடந்த தீவிரவாதிகள் தாக்குதல் குறித்து கலைஞர் மு. கருணாநிதி எழுதிய உருக்கமான கவிதையிலிருந்து சில வரிகள்.*
*************
தீமைகள் எனக் கருதும் செயல்கள் அகற்றிட
தீவிரவாதமெனும் மற்றொரு தீமை பயன்படுமா?
உலகத்தின் வல்லரசாய்த் திகழ்கின்ற
ஓங்கு புகழ் அமெரிக்க திருநாட்டின்
உயர்த்தனிப் பெருமைதனை ஓர் நொடிக்குள்
உடைத்தெறிந்த நிகழ்ச்சியினால் அதிர்ச்சியுற்றேன்.
............
............
பொருந்தாக் கொள்கையினால் சில பேரால்
பொல்லாங்கு விளைந்ததென்றும்
திருந்தார் அவர் என்ற திடமான முடிவினாலே
தீர்த்துக் கட்டினோம் எனத் *தீவிரவாதம்* கூறுமானால்
அதைக் கூட ஏற்றுக் கொள்ள அண்ணல் காந்தி வழி
அப்போதும் இப்போதும் எப்போதும் தயாராய் இல்லை.
...............
...............
பாராட்டுப் பெறத் தகுதியுண்டோ தீவிரவாதத்திற்கு?
பதிலுக்குப் பதில் அந்த தீவிரவாதத்தைப்
பழி வாங்குவோம் என்று பட்டாக்கத்தி தீட்டுவதால்
பலன்தான் ஏதுண்டோ?
பத்து மடங்கு மானுடர் அந்தப் போரில்
செத்து மடிவதல்லால் இந்த ஜெகத்துக்கு என்ன நன்மை?
தீவிரவாதச் செயல்களாலே
தித்திக்கும் ஒரு புத்துலகைக்
காண்போமென்று கனவு கண்டு
களம் அமைப்போர்க்கெல்லாம்
கனிவுடனே சொல்லிக் கொள்வேன்
உங்கள் புத்துலகில்;
தித்திப்பு இருக்கும்
எத்திக்கும் மனிதன் இருக்க மாட்டான்
***********************
💐🙏🏼💐
****************************
[
[9/28, 07:01] A Balasubramanian: தீவிரவாதி
A.Balasubramanian
[9/28, 07:01] திரைக்கதம்பம் Ramarao: தீவிரவாதி
[9/28, 07:02] stat senthil: தீவிரவாதி
[9/28, 07:04] மீ.கண்ணண்.: தீவிரவாதி
[9/28, 07:07] chithanandam: தீவிரவாதி
[9/28, 07:09] Meenakshi: விடை:தீவிரவாதி
[9/28, 07:10] prasath venugopal: தீவிரவாதி
[
[9/28, 07:12] Dhayanandan: *தீவிரவாதி*
[9/28, 07:14] sridharan: தீவிரவாதி
[
[9/28, 07:17] *பாலூ மீ.:* குண்டு வைப்பவன் = தீ வி ரவா தி *தீவிரவாதி-
[
[9/28, 07:22] மாலதி: தீவிரவாதி
[9/28, 07:24] வானதி: *தீவிரவாதி*
[9/28, 07:27] A D வேதாந்தம்: விடை= தீவிரவாதி( வேதாந்தம்)
[
[9/28, 07:27] joseph amirtharaj: தீவிரவாதி
[
[9/28, 07:27] akila sridharan: தீவிரவாதி
[9/28, 07:33] Dr. Ramakrishna Easwaran: *தீவிரவாதி*
[9/28, 07:44] பானுமதி: தீவிரவாதி
[9/28, 07:57] Bhanu Sridhar: தீவிரவாதி
[9/28, 08:09] ஆர். நாராயணன்.: தீவிரவாதி
[
[9/28, 09:49] Venkat: தீவிரவாதி 🙏🏾
[9/28, 11:37] G Venkataraman: தீவிரவாதி
[9/28, 14:32] ஆர்.பத்மா: தீவிரவாதி
[9/28, 18:11] shanthi narayanan: தீவிரவாதி
[9/28, 19:06] nagarajan: *தீவிரவாதி*
[9/28, 19:12] Revathi Natraj: தீவிரவாதி
[9/28, 19:13] sathish: தீவிரவாதி
[9/28, 21:26] sankara subramaiam: தீவிரவாதி
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(29-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தம்மை விட தஞ்சம் மாற இரு ஸ்வரங்களுடன் சுதந்திரமாகத் திரி (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(29-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*************************
*Definition of சஞ்சரி*
சஞ்சரி
வினைச்சொல்
Wordforms: சஞ்சரிக்க , சஞ்சரித்து
1.(சுதந்திரமாக) திரிதல்; சுற்றிவருதல்; wander; go around (freely in a large area)
புலி சஞ்சரிக்கும் காடு
*************************
_தம்மை விட தஞ்சம் மாற இரு ஸ்வரங்களுடன் சுதந்திரமாகத் திரி (4)_
_தம்மை விட தஞ்சம்_
= _தஞ்சம் minus தம்_
= *ஞ்ச*
_மாற_
= *ஞ்ச ---> சஞ்*
_இரு ஸ்வரங்களுடன்_
= _சஞ்+ 2 ஸ்வரம்_
= *சஞ்+சரி*
= *சஞ்சரி*
= _சுதந்திரமாகத் திரி_
*************************
*திருப்புகழ் - பாடல் 937 - சிங்கை - காங்கேயம் -*
_*சஞ்சரி* யு கந்து நின்றுமுரல் கின்ற_
தண்குவளை யுந்து ...... குழலாலுந்_
தண்டரள தங்க மங்கமணி கின்ற
சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை யொன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கை ...... யுடனாசை
நண்புறெனை யின்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்திகமழ் கின்ற ...... கழலோனே
கன்றிடுபி ணங்கள் தின்றிடுக ணங்கள்
கண்டுபொரு கின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல்புனை கின்ற எங்கள்குற மங்கை
திண்குயம ணைந்த ...... திருமார்பா
செண்பகமி லங்கு மின்பொழில்சி றந்த
சிங்கையில மர்ந்த ...... பெருமாளே.
*விளக்கம்* :
வண்டுகள் மகிழ்ந்து, நின்று ரீங்காரம் செய்யும்
குளிர்ச்சி பொருந்திய குவளை மலர் விளங்கும் கூந்தல் மூலமாகவும், குளிர்ந்த முத்து மாலை, பொன் மாலை ஆகியவற்றை தம்மீது அணிந்ததன்
மூலமாகவும், விஷம் கொண்ட செயலைப் பொருந்தி, (நீயே) அடைக்கலம் என்று சொல்லி வந்து நான் நம்பும்படி நடிக்கும் அத்தகைய மங்கையுடன் ஆசை கொண்டு, நட்பு வைக்கின்ற என்னைக் காத்தருள, நீ இந்த நாளே, தீய வினைகளை அழித்து, நன்மை தரும் மயிலில் பொருந்தி வந்தருள வேண்டும். தாமரை மலர், கொன்றை மலர், தும்பை மலர், மகிழம்பூ இவைகள் நிறைந்து நறுமணம் கமழும் திருவடியை உடையவனே, வாடி அழுகிய பிணங்களைத் தின்னும் (பேய், நாய், நரி, பருந்து முதலியவற்றின்) கூட்டங்கள் காணும்படி சண்டை செய்யும் ஒளி வீசும் வேலை உடையவனே. பண் நிறைந்த சொல்லை அமைந்துள்ள எங்கள் குறப்பெண்ணாகிய வள்ளியை அணைந்த அழகிய மார்பனே, செண்பக மலர்கள் விளங்கும் இனிய சோலைகள் சிறப்புடன் மிளிரும் சிங்கை எனப்படும் காங்கேயம் என்ற தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.
*************************
💐🙏🏼💐
****************************
[9/29, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சஞ்சரி
[9/29, 07:01] Venkat: சஞ்சரி 🙏🏾
[9/29, 07:01] A Balasubramanian: சஞ்சரி
A.Balasubramanian
[9/29, 07:01] Usha Chennai: சஞ்சரி
[
[9/29, 07:02] sathish: சஞ்சரி
[9/29, 07:03] மீ.கண்ணண்.: சஞ்சரி
[9/29, 07:06] பாலூ மீ.: சஞ்சரி.
[9/29, 07:07] Bhanu Sridhar: சஞ்சரி
[9/29, 07:08] Meenakshi: விடை:சஞ்சரி
[9/29, 07:10] G Venkataraman: சஞ்சரி
[9/29, 07:10] akila sridharan: சஞ்சரி
[
[9/29, 07:12] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏சஞ்சரி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[9/29, 07:13] chithanandam: சஞ்சரி
[
[9/29, 07:18] sridharan: சஞ்சரி
[
[9/29, 07:21] Dr. Ramakrishna Easwaran: *சஞ்சரி*
[9/29, 07:22] ஆர். நாராயணன்.: சஞ்சரி
[9/29, 07:25] Rohini Ramachandran: சஞ்சரி?
[9/29, 07:27] joseph amirtharaj: சஞ்சரி
[9/29, 07:28] prasath venugopal: சஞ்சரி
[9/29, 07:35] A D வேதாந்தம்: விடை= சஞ்சரி(வேதாந்தம்)
[9/29, 07:38] Ramki Krishnan: சஞ்சரி
[9/29, 07:48] stat senthil: சஞ்சரி
[9/29, 07:52] மாலதி: சஞ்சரி
[9/29, 08:01] ஆர்.பத்மா: சஞ்சரி
[
[9/29, 08:11] sankara subramaiam: சஞ்சரி
[9/29, 08:11] siddhan subramanian: சஞ்சரி
[9/29, 09:22] கு.கனகசபாபதி, மும்பை: சஞ்சரி
[9/29, 11:19] Bharathi: சஞ்சரி
[9/29, 11:45] shanthi narayanan: சஞ்சரி
[9/29, 13:04] வானதி: *சஞ்சரி*
[9/29, 14:28] nagarajan: *சஞ்சரி*
[9/29, 19:32] N T Nathan: சஞ்சரி
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(30-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஆம், உள்ளே வாய் குளற கட்டுப்படுத்தும் போக்கு (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(30-09-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சோகத்தின் ஆதிக்கம்
ஓடிவிட்டது,
மகிழ்ச்சி அலையாய்
வருகிறது!
***********************
ஆதிக்கம் செலுத்தா விட்டால்
ஆதிக்கத்திற்கு ஆளாகி விடுவோம் என்ற
ஆழ் மனதின் பயம் .....
பெண்ணால் இவ்வுலகில் பிரவேசித்து
பெண்ணால் அடுத்த தலை முறையை உருவாக்கி
பெண்ணால் உணவு உண்டு, ஊக்கம் பெற்று
பெண்ணால் உன்னதமான வாழ்க்கையையும் பெரும் ஆண்களே ...
அன்பான பெண்மையிடம் அன்பை ஆதிக்கம் செலுத்துங்கள்
அம்சமான வாழ்க்கை உங்களிடம் என்றென்றும் .....
எழுதியவர் : Kirupa Ganesh
***********************
_ஆம், உள்ளே வாய் குளற கட்டுப்படுத்தும் போக்கு (5)_
_வாய் குளற_
= *திக்க*
_*ஆம்* உள்ளே *திக்க*_
= *ஆதிக்கம்*
= _கட்டுப்படுத்தும் போக்கு_
*************************
மனதின் ஆதிக்கம் மடிந்துவிட்டது என்பதை நிரூபிக்கும் விதமாய் பணத்திற்காக, அதிக பணத்திற்காக ஓடும் வாழ்க்கையில் நல்ல குணங்களின் ஆதிக்கம் இல்லாமலேயே போய்விட்டது.
(மித்திரன்)
*************************
*பெண்- ஒரு, பெயர் அல்ல*
*உலகம் முன்னேறியும், ஆதிக்கம் குறையவில்லை*
**********
_*உலகம் பெண்ணை (என்னை) நடத்தும் முறை பற்றிய கவிதை*_
**********
சத்தமாக சிரித்தால், மரியாதை தெரியாதவள்
எதிர்த்து பேசினால், திமிர் பிடித்தவள்
சினம் கொண்டால், மென்மை அற்றவள்
மௌனமாய் இருந்தால், குழப்பம் நிறைந்தவள்
சுருக்கி பேசினால், தலை கணம் கொண்டவள்
வெளிப்படையாய் பேசினால், வெகுளியானவள்
நவீன ஆடைகள் உடுத்தினால், பாரம்பரியம் தெரியாதவள்
பிடித்த அணிகலன் வாங்கினால், சிக்கனம் இல்லாதவள்
நிமிர்ந்து நடந்தால், அகங்காரம் உடையவள்
துள்ளி திரிந்தேன், உலகம் வேலி போட்டது
சுய சிந்தனையை இழந்தேன், இவளே பெண்மை உடையவள் என்றது.
_*உலகம் முன்னேறியும், ஆதிக்கம் குறையவில்லை*_
(vaishuvee)
*************************
💐🙏🏼💐
****************************
9/30, 07:00] A Balasubramanian: ஆதிக்கம்
A.Balasubramanian
[9/30, 07:01] திரைக்கதம்பம் Ramarao: ஆதிக்கம்
[9/30, 07:01] sathish: ஆதிக்கம்
[
[9/30, 07:07] Meenakshi: விடை: ஆ திக்க ம்
[
[9/30, 07:07] stat senthil: ஆதிக்கம்
[
[9/30, 07:07] மீ.கண்ணண்.: ஆதிக்கம்
[9/30, 07:11] G Venkataraman: ஆதிக்கம்
[9/30, 07:12] Bhanu Sridhar: ஆதிக்கம்
[9/30, 07:17] sridharan: ஆதிக்கம்
[9/30, 07:22] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏ஆதிக்கம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[9/30, 07:22] V N Krishnan.: ஆதிக்கம்
[9/30, 07:22] பாலூ மீ.: ஆம் திக்க விடை ஆதிக்கம்
[9/30, 07:42] akila sridharan: ஆதிக்கம்
[
[9/30, 07:55] joseph amirtharaj: ஆதிக்கம்
[
[9/30, 08:07] ஆர். நாராயணன்.: ஆதிக்கம்
[9/30, 08:38] siddhan subramanian: ஆதிக்கம் (ஆம் +திக்க)
[9/30, 09:18] மாலதி: ஆதிக்கம்
[
[9/30, 09:36] Dr. Ramakrishna Easwaran: *ஆதிக்கம்*
[9/30, 10:55] shanthi narayanan: ஆதிக்கம்
[
[9/30, 11:01] ஆர்.பத்மா: ஆதிக்கம்
[9/30, 13:04] Dhayanandan: *ஆதிக்கம்*
[
[9/30, 14:07] nagarajan: ஆதிக்கம்
[9/30, 14:24] வானதி: *ஆதிக்கம்*
[9/30, 14:25] பானுமதி: ஆதிக்கம்
[9/30, 19:43] sankara subramaiam: ஆதிக்கம்
[9/30, 19:47] Rohini Ramachandran: ஆதிக்கம்
[9/30, 20:04] Revathi Natraj: ஆதிக்கம்
[
[9/30, 20:52] chithanandam: ஆதிக்கம்
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(01-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஸ்வரங்களின் எண்ணிக்கை முன்பு ஒரு ஸ்வரத்துடன் கடைசி ராகம் அமைதி அளிக்கும் (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(01-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*நிசப்தம்*
நிர்மலமான எண்ணங்களின்
உறைவிடம் !
நல் சிந்தனைகளின்
ஆழமான ஊற்று !
மனித உறவுகளுக்கு
அழகூட்டும் ஆபரணம் !!
ஆற்றலை அளிக்கும்
நிசப்தத்தை பேனுவோம்!!!
( kirupaganesh)
***********************
*நிசப்தம்*
துக்க வீட்டில்
உறவினர்கள் கதறலுக்கிடையே
உணரும் நிசப்தம்
கோவில் மணியோசை
நின்ற பிறகு
உணரும் நிசப்தம்
பள்ளிக்கு குழந்தைகள்
சென்ற பிறகு
வீதியில் நிலவும் நிசப்தம்
சுவாரஸியமான திரைப்படத்தில்
இடைவேளை தரும்
சுகமான நிசப்தம்
ரயில் கடந்த பிறகு
லெவல் கிராஸிங்கில்
காத்திருந்தவர்கள்
உணரும் நிசப்தம்
அறைந்தவனுக்கு
பதிலடியாய் திரும்ப
அறைதலுக்கிடையேயான
நிசப்தம்
உதவி கேட்டு
கையேந்தி நிற்கும் நிலையில்
என்ன பதில் வருமோவென்று
காத்திருப்பதில் கிடைக்கும்
பேரவஸ்தையானதொரு நிசப்தம்.
(ப.மதியழகன்)
***********************
_ஸ்வரங்களின் எண்ணிக்கை முன்பு ஒரு ஸ்வரத்துடன் கடைசி ராகம் அமைதி அளிக்கும் (5)_
_ஸ்வரங்களின் எண்ணிக்கை_
= _ஏழு_
= *சப்த*
_முன்பு ஒரு ஸ்வரத்துடன்_
= *நி+சப்த*
_கடைசி ராகம்_
= *ம்*
_அமைதி அளிக்கும்_
= *நி+சப்த+ம்*
= *நிசப்தம்*
*************************
*நல்லிணக்கம் என்பதே நிசப்தத்தின் பொருள்*
*சப்தத்தின் குறிக்கோள் நிசப்தமேயாகும்.* இது உங்களனைவருக்கும் தெரியுமா? சப்தம் நிசப்தத்திலிருந்து தோன்றி அதன் நோக்கமும் நிசப்தமேயாகிறது. நிசப்தம் என்பதன் பொருள் முழு நல்லிணக்கம் என்பதாகும். உங்களுக்குள் மிக ஆழத்தில் முழு நல்லிணக்கம் ஏற்படும்போது, சப்தம் கூட மிக கனமாகத் தோன்றும். ஆனால் சப்தம், இசை ஆகியவை பாதையேயாகும்.. இசையே ஓர் தனி மனிதனை பிரபஞ்சத்துடன் இணைக்கிறது. குறுகிய மனம் இசையின் மூலம் விரிவடைந்து அது ஏற்கனவே மிகப்பெரிய மனதின் அல்லது மெய்யுணர்வின் ஓர் பகுதியே என்று கண்டறிகின்றது.
(Sri Sri Ravishankar)
*************************
💐🙏🏼💐
****************************
[
[10/1, 07:00] திரைக்கதம்பம் Ramarao: நிசப்தம்
[10/1, 07:01] A Balasubramanian: நிசப்தம்
A.Balasubramanian
[10/1, 07:06] Meenakshi: விடை:நிசப்தம்
[10/1, 07:06] stat senthil: நிசப்தம்
[10/1, 07:06] joseph amirtharaj: நிசப்தம்
[
[10/1, 07:07] V N Krishnan.: நிசப்தம்
[10/1, 07:12] பாலூ மீ.:
நி சப்த ம்
[
[10/1, 07:20] ஆர். நாராயணன்.: நிசப்தம்
[10/1, 07:24] மீ.கண்ணண்.: நிசப்தம்
[10/1, 07:30] A D வேதாந்தம்: விடை= ஏகாந்தம்( வேதாந்தம்)
[
[10/1, 07:38] Rohini Ramachandran: நிசப்தம்
[10/1, 07:46] G Venkataraman: நிசப்தம்
[
[10/1, 07:51] akila sridharan: நிசப்தம்
[10/1, 07:56] sankara subramaiam: நிசப்தம்
[
[10/1, 07:59] sathish: நிசப்தம்
[10/1, 08:02] Ramki Krishnan: நிசப்தம்
[10/1, 08:17] கு.கனகசபாபதி, மும்பை: நிசப்தம்
[
[10/1, 08:20] மாலதி: நிசப்தம்
[
[10/1, 08:38] Dr. Ramakrishna Easwaran: *நிசப்தம்*
[
[10/1, 08:39] prasath venugopal: நிசப்தம்
[
[10/1, 08:46] siddhan subramanian: நிசப்தம் (சப்த +நி +ம்)
[10/1, 09:43] Revathi Natraj: நிசப்தம்
[10/1, 09:48] Bhanu Sridhar: நிசப்தம்
[10/1, 09:55] nagarajan: *நிசப்தம்*
[10/1, 10:36] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏நிசப்தம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[10/1, 12:10] ஆர்.பத்மா: நிசப்தம்
[10/1, 15:45] வானதி: *நிசப்தம்*
[10/1, 20:06] sridharan: நிசப்தம்
[10/1, 22:01] Viji - Kovai: நிசப்தம்
நி+சப்த+ம்
[
[10/1, 22:05] bala: நிசப்தம்
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(02-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
மீனைச் சிக்கவைப்பதில் பாதி கட்டிடத்தைத் தாங்கும் (2)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(02-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
*********************** _தூண்டிற் புழுவினை போல்_
_வெளியே சுடர் விளக்கினை_ _போல்நீண்ட பொழுதாக என்நெஞ்சம் துடித்ததடி (_ *பாரதியார்* )
***********************
பிறவி என்ற *தூண்டில்* முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
மரணம் என்ற வானம் ஒன்றில்
சிறகை சூடி ஏறும் முன்னே
கடைசி ஆசை ஒன்றை மட்டும்
நிறைவேற்றிட ஏங்குகிறோம்.
யார் விழியில் யார் வரைந்த
கனவோ
பாதியிலே கலைந்தால்
தொடராதோ
ஆழ் மனதில் யார் விதைத்த நினைவோ
காலமதை சிதைத்தும் மறக்காதோ
பிறவி என்ற தூண்டில் முள்ளில்
வாழ்க்கை என்ற புழுவைக் கண்டு
தானே வந்து சிக்கிக் கொண்டு
சில ஆசைகள் சேகரித்தோம்
(மாஸ் : 2015)
***********************
மீனைச் சிக்கவைப்பதில் பாதி கட்டிடத்தைத் தாங்கும் (2)
மீனைச் சிக்கவைப்பதில்
= தூண்டில்
பாதி
= தூண்[டில்]
=தூண்
=கட்டிடத்தைத் தாங்கும்
*************************
_வேண்டற்க வென்றிடினும் சூதினை_
_வென்றதூஉம்_
_தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று_
(அதிகாரம்:சூது குறள் எண்:931)
பொழிப்பு
(மு வரதராசன்):
_வெற்றியே பெறுவதானாலும் சூதாட்டத்தை விரும்பக் கூடாது. வென்ற வெற்றியும், தூண்டில் இரும்பை இரை என்று மயங்கி மீன் விழுங்கினாற் போன்றது._
*************************
****************************
[10/2, 07:01] A Balasubramanian: தூண்
A.Balasubramanian
[10/2, 07:01] திரைக்கதம்பம் Ramarao: தூண்
[10/2, 07:03] Bhanu Sridhar: தூண்
[10/2, 07:06] prasath venugopal: தூண்
[10/2, 07:07] மீ.கண்ணண்.: தூண்
[10/2, 07:08] Meenakshi: விடை:தூண்
[10/2, 07:09] chithanandam: தூண்
[10/2, 07:10] ஆர்.பத்மா: தூண்
[
[10/2, 07:15] பாலூ மீ.: தூண்.
[
[10/2, 07:16] ஆர். நாராயணன்.: தூண்
[10/2, 07:19] V N Krishnan.: தூண்
[10/2, 07:33] Rohini Ramachandran: தூண்
[
[10/2, 07:45] sridharan: தூண்.
[
[10/2, 07:47] Dhayanandan: *தூண்*
[
[10/2, 07:50] akila sridharan: தூண்
[10/2, 07:56] sankara subramaiam: தூண்
[
[10/2, 08:00] கு.கனகசபாபதி, மும்பை: தூண்
[[10/2, 08:01] A D வேதாந்தம்: விடை= தூண்( வேதாந்தம்)
[10/2, 08:03] பானுமதி: தூண்
[
[10/2, 08:32] stat senthil: தூண் ~டில்~
[10/2, 09:22] joseph amirtharaj: தூண்
[10/2, 09:23] G Venkataraman: தூண்
[10/2, 09:44] வானதி: *தூண்*
[
[10/2, 10:03] Revathi Natraj: தூண்
[
[10/2, 10:35] Viji - Kovai: தூண்
[
[10/2, 11:02] மாலதி: தூண்
[
[10/2, 12:39] shanthi narayanan: தூண்
[10/2, 14:23] Ramki Krishnan: தூண்
[
[10/2, 15:36] Usha Chennai: தூண்
[
[10/2, 19:07] sathish: தூண்
[10/2, 20:08] balagopal: தூண்
[10/2, 20:23] Venkat: தூண்(டில்) 🙏🏾
[10/2, 22:16] nagarajan: *தூண்*
********************************