Skip to main content

விடை 4157

இன்று காலை வெளியான வெடி:
காலைச் சுற்றியிருக்கும் மறைப்பு மூடிய இடை கண்டது (5)
அதற்கான விடை: தண்டட்டி = தட்டி + ண்ட
தட்டி = மறைப்பு
ண்ட = இடை கண்டது
தண்டட்டி என்றால் காதணியா, இல்லை காலில் அணியப்படுவதா?
கருவேலம்பூ காட்டுவழி கணக்கெழுத போறவரே
கருவேலம்பூ வாசத்திலே கணக்க நீயும் மறந்திடாதே
என்று ஒரு பெண்பாட அதற்கு எசப்பாட்டாக ஆண்
தண்டட்டி போட்ட புள்ள தானாக வந்த புள்ள
என்று செல்லும் ஒரு நாட்டுப்புறப்பாடலை எப்போதோ படித்திருக்கிறேன். (சுஜாதா கணையாழியின் கடைசிப்பக்கங்களில்? அல்லது நா. வானமமலையின் தொகுப்பில்??) அப்போது தண்டட்டி என்றால் காலில் அணியப்படும் தண்டை என்பதன் கிராமிய மரூஉ என்று நினைத்திருந்தேன். அதையே க்ரியாவின் அகராதியிலும், தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் அகராதியிலும் காண்கிறேன்.
ஆனால் இன்று விடையளித்தவர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதைக் கண்டவுடன் வலையில் தேடினேன். பல வலைப் பக்கங்கள் படங்களுடன் காதில் அணியப்படுவது என்கின்றன! குழப்பம்தான்.
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Joseph Amirtharaj Arulanandham said…
https://books.google.co.in/books?id=3aoQtBVins8C&pg=PA370&lpg=PA370&dq=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF+%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&source=bl&ots=GCMq7QkQJO&sig=ACfU3U0UCLzlegq_L_ETa7CzgoRkRJMEhQ&hl=en&sa=X&ved=2ahUKEwiIo-WWm8DzAhWnxDgGHRqUBmUQ6AF6BAgtEAM#v=onepage&q=%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%20%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D&f=false

எனக்கும் அந்த சந்தேகம் இருந்தது. ஒர் அகராதியில் மட்டும் காலில் அணியும் ஒரு வகை வளையம் என்று இருந்தது. அதற்குப் பின் தான் என் விடையை பதிவிட்டேன்.
Joseph Amirtharaj Arulanandham said…
PALS TAMIL TAMIL English Dictionary - PAGE 370
திண்டாடியதுதான் மிச்சம்
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(11-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
இரு ஸ்வரங்களைச் சேர்த்து ஒரு வெண்பா பாடி தினைப்புனம் காத்தவள்?(5)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************

Raghavan MK said…
A peek into today's riddle! 
**********************  
*இன்றைய உதிரிவெடி!*
(11-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*திருப்புகழ் 228 பாதி மதிநதி (சுவாமிமலை)*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*பாடல்:*
தான தனதன தான தனதன 
தான தனதன ...... தனதான 

பாதி மதிநதி போது மணிசடை 
நாத ரருளிய குமரேசா 
*பாகு கனிமொழி மாது குறமகள்* 
*பாதம் வருடிய மணவாளா*

காது மொருவிழி காக முற அருள் 
மாய னரிதிரு மருகோனே 
கால னெனையணு காம லுனதிரு 
காலில் வழிபட அருள்வாயே 

ஆதி அயனொடு தேவர் சுரருல 
காளும் வகையுறு சிறைமீளா 
ஆடு மயிலினி லேறி யமரர்கள் 
சூழ வரவரு மிளையோனே 

சூத மிகவளர் சோலை மருவுசு 
வாமி மலைதனி லுறைவோனே 
சூரனுடலற வாரி சுவறிட 
வேலை விடவல பெருமாளே. 

*உரை:*

பிறை, கங்கை, பூக்கள் இவைகளை அணியும் சிவபெருமான் அருளிய குமரனே. சர்க்கரை, கனி ஆகியவற்றைப் போல் இனிக்கும் மொழியை உடைய *குறமகளாகிய* வள்ளியின் பாதங்களை வருடிய மணவாளனே. பிரிவு செய்யப் பட்ட ஒரு கண்ணைக் காகாசுரன் அடையும்படி அருளிய இராமனின் மருகனே. யமன் என்னை அணுகாமல் இருக்கும்படி உன் இரண்டு திருவடிகளில் நான் வழிபடும் புத்தியைத் தருவாயாக.

பிரமனும் தேவர்களும் விண்ணுலகத்தை ஆளும் படி அவர்களைச் சிறையிலிருந்து மீட்டு, ஆடும் மயிலின் மேல் ஏறி வரும் இளையவனே. மா மரங்கள் வளர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்துள்ள சுவாமி மலையில் வீற்றிருப்பவனே.
சூரனுடைய உடல் துணி படவும், கடல் வற்றிப் போகவும் வேலைச் செலுத்திய பெருமாளே. யமன் என்னை அணுகாதபடி என்னை உனது காலில் வழிபடும்படி அருள் புரிவாயாக.🙏🏼
*************************
_இரு ஸ்வரங்களைச் சேர்த்து ஒரு வெண்பா பாடி தினைப்புனம் காத்தவள்?(5)_

_ஒரு வெண்பா_
= *குறள்*
_இரு ஸ்வரங்கள்_
= *ம,க*
_சேர்த்து_
= *குற(மக)ள்*
= *குறமகள்*

= _தினைப்புனம் காத்தவள்_
*************************
_*பாகு கனிமொழி மாது குறமகள் வருடிய*_ 
_*மணவாளா*_

தேனினும் இனியவள் *தினைப்புனம்* *காத்தவள்*
வள்ளியெனும் குற நல்லாள் - அவள் வடிவும் தேனே
குணமும் தேனே
குரலும் தேனின் இனிமையொக்கும்

குரலின் இனிமையைக் கேட்டிட்ட குமரன் குமரியின் பாதம் வருடுகிறான் - அவள்
சிலிர்த்திடும் சிரிப்பினில் சிந்திடும் தேனைக்
காதால் கேட்டு மகிழுகிறான்

கன்னியொருத்தியின் பாதம் எவரும் பற்றுவதில்லை
மகளிர் ஆடவர் காலில் விழுந்து பணிவது உண்டு
திருமணநாளில் மிஞ்சி அணிந்திட மெல்லக் குனிந்து
கணவன் ஒருவனே கால்களைப் பற்றுவான்

*குமரியின் பாதம் தொட்டிடும் உரிமை கணவர்க்கு மட்டுமே உரியதெனும் சீரிய கருத்தினை இங்கே சொன்னார்*
*மணவாளன் எனும் சொல்லின் மூலம்!*
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************
[[
[10/11, 07:02] திரைக்கதம்பம் Ramarao: குறமகள்

[10/11, 07:02] Bhanu Sridhar: குறமகள்

[10/11, 07:10] A Balasubramanian: குறமகள்
A.Balasubramanian
[
[10/11, 07:10] Meenakshi: விடை:குறமகள்

[10/11, 07:11] joseph amirtharaj: குறமகள்

[10/11, 07:12] Venkat: குறவள்ளி 🤔🙏🏾

[10/11, 07:13] G Venkataraman: குறமகள் ( குறள் + ம க)
வள்ளி
[
[10/11, 07:13] மீ.கண்ணண்.: குறமகள்

10/11, 07:29] Dr. Ramakrishna Easwaran: *குறமகள்*
ஒரு வெண்பா= குறள்
இரு ஸ்வரம்= ம, க

[10/11, 07:58] chithanandam: குறமகள்
[
[10/11, 08:05] sridharan: குறவள்ளி
[
[10/11, 08:17] ஆர். நாராயணன்.: குறமகள்
[
[10/11, 11:38] Dhayanandan: *குறமகள்*
[
[10/11, 12:31] shanthi narayanan: குறமகள்

[10/11, 18:38] பாலூ மீ.: குறமகள்.

[10/11, 07:06] stat senthil: குறமகள்
[
[10/11, 19:35] V R Raman: தெய்வயானை

[10/11, 19:37] nagarajan: *குறமகள்*

[10/11, 19:41] akila sridharan: குறமகள்
[
[10/11, 19:56] siddhan subramanian: குறமகள்

[10/11, 20:15] கு.கனகசபாபதி, மும்பை: குறமகள்

[10/11, 20:35] Rohini Ramachandran: குறமகள்

********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(12-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
வயதானவர் தாவத் தாவ மயங்கிய கிரேக்க மாந்தர் (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
*A peek into today's riddle! *
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(12-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*யவனர்கள்*

சங்க இலக்கியங்களிலும் தமிழக வரலாற்றிலும் *யவனர்கள்* என்ற பெயர் இடம்பெற்று இருப்பதை அறிவோம். யவனர்கள் என்பவர்கள் *கிரேக்கர்கள்* என்று ஒரு சாராரும், ரோமானியர் என்று மற்றொரு பிரிவினரும், இரண்டுமே அல்ல கிரேக்கர், இந்தோ கிரேக்கர் மற்றும் ரோமானியர் ஆகிய மூவரையும் குறிக்கும் பொதுப் பெயர்தான் யவனர்கள் என்ற கருத்துக்கள் வரலாற்று ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கின்றன. *யோனா* என்ற பிராகிருத சொல்லில் இருந்தே *யவன* என்ற சொல் தோன்றியது. பாரசீக மொழியில் யவன் என்ற சொல், பழைய கிரேக்கர்களைக் குறிக்கிறது. ஆகவே, கிரேக்கர்களைக் குறிக்க தமிழில் யவனர் என்ற சொல் பயன்படுத்தப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர் கே.கே.பிள்ளை கூறுகிறார்.
************************
_வயதானவர் தாவத் தாவ மயங்கிய கிரேக்க மாந்தர் (4)_

_தாவ_ = deletion ndicator

_தாவத் தாவ_
= _to delete the letters தாவ from வயதானவர்_
= *வய[தா]ன[வ]ர்*
= *வயனர்*

_மயங்கிய_
= _anagram indicator for வயனர்_
= *யவனர்*

= _கிரேக்க மாந்தர்_
*************************
*யவனத் தச்சர்*

_யவனர்கள்_ சிற்பக் கலையில் மிகவும் சிறந்தவர்கள். சங்க காலத்தில் யவனச் சிற்பிகளைத் தமிழகம் பெரிதும் போற்றியுள்ளது. *யவனத் தச்சர்* என்று இவர்கள் பண்டைய தமிழ் நூல்களில் குறிக்கப்பட்டுள்ளனர்.

*_''மகத வினைஞரும் மராட்டக் கம்மரும்_*

*_அவந்திக் கொல்லரும் யவனத் தச்சரும்_*

*_தண்டமிழ் வினைஞர் தம்மொடு கூடி_*

*_கொண்டினி தியற்றிய கண்கவர் செய்வினை''_*

என *மணிமேகலை* கூறுவது யவனத் தச்சர்களின் சிறப்பை வெளிக்காட்டுகிறது.
*************************
*சிலப்பதிகாரத்தில்* இந்திர விழாவைப் பாடும் இளங்கோவடிகள் அங்கிருந்த யவனக் குடியிருப்பு பற்றியும் குறிப்பிட்டுள்ளார். 
****
பாண்டி நாட்டு மன்னர்கள் தங்களது படைப் பிரிவில் யவனர்களையும் சேர்த்திருந்தனர். பாண்டியன் நெடுஞ்செழியனின் அரண்மனையை யவன வீரர்கள் காவல் காத்துவந்ததை,

*_'கடிமதில் வாயில் காவலிற் சிறந்து_*

*_அடல்வாள் யவனர்க்கு அயிராது புக்கு’_*

என, *சிலப்பதிகாரம்* சுட்டிக்காட்டுகிறது.
*********************
*யவனர்கள்* கப்பல்களில் முசிறிக்கு வந்து தாங்கள் கொண்டுவந்த பொன்னைக் கொடுத்துவிட்டு மிளகு வாங்கிச் சென்றுள்ளனர்.


*_'சேரலர் சுள்ளியம் பேரியாற்று வெண்ணுரை கலங்க_*

*_யவனர் தந்த வினைமாண் நன்கலம்_*

*_பொன்னொடு வந்து கறியடு பெயரும்_*

*_வளம்கெழு முசிறி’_* 

என, *அகநானூறு* கூறுவதை யவனர்களைப் பற்றிய சான்றாக சுட்டிக்காட்டுகிறார் வரலாற்று அறிஞர் இராசு.

(www. heritagevembaru.in)
**********************
*துக்கடா*
*************
*_யவன ராணி_*
யவன ராணி என்பது தமிழக எழுத்தாளர் 
சாண்டில்யன் எழுதிய ஒரு வரலாற்றுப் புதினம். 1960களில் 
குமுதம்வார இதழில் இத்தொடர் வெளிவந்தது. 
இந்தக் கதை சங்ககாலத்தில் வாழ்ந்த சோழர் வரலாற்றை ஒட்டி கற்பனைகளையும் சேர்த்து எழுதப்பட்டுள்ளது.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************
[
[10/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: யவனர்
[
[10/12, 07:00] A Balasubramanian: யவனர்
A.Balasubramanian
[
[10/12, 07:03] Dr. Ramakrishna Easwaran: *யவனர்*

[10/12, 07:03] Meenakshi: விடை:யவனர்
[
[10/12, 07:07] மீ.கண்ணண்.: யவனர்
[
[10/12, 07:14] பாலூ மீ.: யவனர்.

[10/12, 07:27] *G Venkataraman:* *யவனர்*
*அருமையான புதிர்*

[[10/12, 07:30] chithanandam: வயதானவர். 6 எழுத்துகள்.

[10/12, 07:33] sridharan: யவனர்

[10/12, 07:33] *V N Krishnan.:* *யவனர்*
*வயதானவர்-தாவ*

[10/12, 07:49] nagarajan: *யவனர்*

[10/12, 07:51] akila sridharan: யவனர்

[10/12, 07:52] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏யவனர்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[10/12, 07:52] stat senthil: யவனர்

[10/12, 08:23] Bharathi: *யவனர்*

[10/12, 08:24] ஆர். நாராயணன்.: யவனர்

[10/12, 08:28] ஆர்.பத்மா: யவனர்
[
[10/12, 09:05] joseph amirtharaj: யவனர்
[
[10/12, 09:37] Ramki Krishnan: யவனர்
[
[10/12, 10:18] Viji - Kovai: யவனர்

[10/12, 11:22] Bhanu Sridhar: யவனர்

[10/12, 11:29] வானதி: *யவனர்*
*கிரேக்கப் போர்ப் படையினரின் வழித்தோன்றல்களே யவனர்கள் ஆவார்.*

[10/12, 12:32] shanthi narayanan: யவனர்

[10/12, 13:46] Rohini Ramachandran: கிழவர்?

[10/12, 15:38] Dhayanandan: *யவனர்*

[10/12, 19:14] sathish: யவனர்

[10/12, 19:30] balagopal: யவனர்

[10/12, 20:27] Venkat:
யவனர் 🙏🏾

[10/12, 21:16] chithanandam: யவனர்


********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(13-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
முதியவரா கன்னியிடம் பொற்காசை வைத்தார்? (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
*A peek into today's riddle!* 
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(13-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*வராகன்* (பெ)
பழங்காலத்தில் மூன்றரை ரூபாய் மதிப்புள்ள
பன்றி முத்திரை கொண்ட பொன் நாணயம்
***********************
_முதியவரா கன்னியிடம் பொற்காசை வைத்தார்? (4)_

_பொற்காசு_
= *வராகன்*

_முதியவரா கன்னியிடம் வைத்தார்?_
= _முதிய [ *வரா கன்* ]னியிடம்_

= *வராகன்*
************************
*காசு..பணம்..துட்டு..*
*மணி..மணி*

ஒரு *தம்பிடி* கூடத் தர மாட்டேன், அவன் ஒரு *சல்லிப்* பயல் இப்படின்னு எல்லாம் பேச்சு வழக்குல, இன்றும் மக்கள் பேசுகிறார்கள்.

‘சல்லிப் பய', ‘ *சல்லித்தனம்'ங்றது* எல்லாம், சின்னத்தனம் அல்லது *சில்லறைத்தனத்தைக்* குறிக்குது. இதுல இருந்தே நாம தெரிஞ்சி கிடலாம் ‘ *சல்லி'* ங்றது ஒரு சிறு *நாணயம்ன்னு* .

*வராகன்*
ஒரு த‌ம்பிடிகூட‌க் குடுக்க‌ மாட்டேன்னா, ஒரு கைப்பிடி அல்ல‌து கொஞ்ச‌மும் த‌ர‌ மாட்டேன்னு இப்போ புரிஞ்சுக்கிறோம். ஆனா, த‌ம்பிடிங்ற‌தும் ஒரு சிறு நாண‌ய‌ம்தான்.

ப‌ழ‌ங்கால‌த்துல‌ ந‌ம்ம‌ பெரிய‌வ‌ங்க‌ செப்புக் காசு, வெள்ளிக்காசு, பொற்காசுன்னும் பொழ‌ங்கிட்டு வ‌ந்து இருக்காங்க‌. *வராகன், மோஹர்ங்ற மொஹரா, பகோடா* எல்லாம் த‌ங்க‌க் காசுக‌ தான். இதுல வராகன்ங்றது தமிழ் மொழில, மத்தது வட மொழில

*டப்பு*
ப‌ல‌ பேர‌ர‌சு, சிற்ற‌ர‌சு கொண்ட‌து தானே இந்தியா. அங்க‌ங்க‌ ஒவ்வொரு வ‌கையான‌ நாண‌ய‌ப் பொழ‌க்க‌ம் இருந்து இருக்கு. பின்னாடி வ‌ந்த‌வ‌ங்க‌, அதை எல்லாம் ஒருங்கிணைச்சாங்க‌. அப்ப‌டித்தான், *செப்புக் காசை, ட‌ப்பு (dubbu)* ன்னு சொன்னான் ட‌ச்சுக்கார‌ன்.
இப்படி ஏற்கனவே புழங்கிட்டு இருந்த ‘ *பணம்', 'துட்டு', ‘காசு', ‘தம்பிடி', ‘சல்லி'ங்ற* சிறு நாணயங்கள் காலப்போக்கில் வட இந்திய அரசர் ஷெர்ஷா சூரி 1540-ல் அறிவித்த அந்தக் கால ரூபாயோடு இணைந்தன.

இன்று நாம் கையாளும் ரூபாய் கணக்கு 1957 முதல் நடைமுறைக்கு வந்தது.

(By ராஜன்
www.hindutamil.in)
*********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************

[10/13, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வராகன்

[10/13, 07:00] A Balasubramanian: வராகன்
A.Balasubramanian
[
[10/13, 07:02] Dr. Ramakrishna Easwaran: *வராகன்*

[10/13, 07:04] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வராகன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[10/13, 07:03] joseph amirtharaj: வராகன்
Anagram of your name, Sir😊

[10/13, 07:06] மீ.கண்ணண்.: வராகன்

[10/13, 07:07] chithanandam: வராகன்

[10/13, 07:10] Dhayanandan: *வராகன்*

[10/13, 07:10] Meenakshi: விடை:வராகன்

[10/12, 07:14] பாலூ மீ.: யவனர்.

[10/13, 07:14] prasath venugopal: வராகன்

[10/13, 07:18] V N Krishnan.: வராகன். பொற்காசு

[10/13, 07:24] கு.கனகசபாபதி, மும்பை: வராகன்
[
[10/13, 07:28] sridharan: வராகன்

[10/13, 07:28] மாலதி: வராகன்

[10/13, 07:36] stat senthil: வராகன்

[10/13, 07:39] Ramki Krishnan: வராகன்

[10/13, 07:45] ஆர். நாராயணன்.: வராகன்

[10/13, 07:53] nagarajan: *வராகன்*
[
[10/13, 07:57] akila sridharan: வராகன்

[10/13, 09:28] ஆர்.பத்மா: வராகன்
[
[10/13, 10:41] Bhanu Sridhar: வராகன்

[10/13, 12:07] sankara subramaiam: வராகன்

[10/13, 12:19] balagopal: வராகன்.

[10/13, 12:41] shanthi narayanan: வராகன்

[10/13, 13:04] Bharathi: வராகன்
[
[10/13, 19:12] Viji - Kovai: வராகன்
[
[10/13, 19:15] Usha Chennai: வராகன்

[10/13, 19:17] V R Raman: 13/10/2021 உதிரி வெடி
விடை: வராகன்

[10/13, 19:24] siddhan subramanian: வராகன்

[10/13, 19:36] Venkat: வராகன் 🙏🏾

[10/13, 21:06] வானதி: *வராகன்*

[10/13, 21:34] G Venkataraman: வராகன்




********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(14-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
நலிவுற்ற நதி சிந்தனை தினையை இழந்தது (4)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
*A peek into today's riddle!*
****************************
*இன்றைய உதிரிவெடி!*
(14-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*பாரதிதாசன் பாடல்கள் -* _மாண்டவன் மீண்டான்!_

மிகஇரக்கங்கொண்டார்
இறப்பவனைத் தேற்றவெண்ணி ஏதேதோ சொன்னார்
இதுதேதி உன்கடனைத் தீர்க்கின்றோம் என்றார்.
இருந்தநிலை மாறவில்லை மற்றொருவன் வந்து
மதிவந்து விட்டதண்ணே நமதுசர்க் காருக்கு!
'மக்களுக்குப் புவிப்பொருள்கள் பொது' வென்று சர்க்கார்
பதிந்து விட்டார் இனிப்பெண்டு பிள்ளைகளைப் பற்றிப்
பயமில்லை! கவலையில்லை! மெய்யண்ணே, மெய்மெய்!!

என்று சொன்னான் தேற்று மொழி, _இறக்கின்றமனிதன் இறக்குங்கால் கவலையின்றி_ _இறக்கட்டும் என்று!_
_நன்றிந்த வார்த்தை, அவன் காதினிலே பாய்ந்து_
_*நலிவுற்ற* *உள்ளத்தைப்* புலியுளமாய்ச் செய்து_
_சென்ற உயிர் செல்லாமல்_ _செய்ததனால் அங்குச் செத்துவிட்ட_ _அம்மனிதன் பொத்தெனவே குந்தி,_
*_இன்றுநான் சாவதற்கே அஞ்சவில்லை என்றான்!_*
*_இறப்பதனில் இனியெனக்குக் கற்கண்டென்றானே!_*

***********************
நலிவுற்ற நதி சிந்தனை தினையை இழந்தது (4)l

இழந்தது
= deletion indicator to remove திணை

(நதி சிந்தனை) தினையை இழந்தது
= [நதி சிந்தனை] - [திணை]
= நசிந்த

= நலிவுற்ற
*************************
மனம் நசிந்து கிடக்கும்போது மழையை எப்படி ரசிக்க முடியும்?...

மெளனமாகப் பார்த்துக் கொண்டிருந்தால்
நசிந்த மனம் மெல்ல மெல்ல மலர்ந்துவிடும்

by Aathira
*************************
சூல் கொண்ட 
வெண் மேகம் 
பிரசவிக்காத் தருணம் 
பூமிப் புல்வெளி 
தாலாட்ட ஏங்குகிறது . . . . . 

நாள் திண்ணும் 
பகலவன் 
நகர்ந்து நடந்திட 
நாள் முழுதும் நிலவு 
நசிந்து உருகுகிறது . . . . . 

( மல்லி மணியன்)
*************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************
[
[10/14, 07:05] திரைக்கதம்பம் Ramarao: நசிந்த
[[
[10/14, 07:06] stat senthil: நசிந்த

[10/14, 07:06] Meenakshi: விடை:நசிந்த
[
[10/14, 07:06] A Balasubramanian: நசிந்த
A.Balasubramanian

[10/14, 07:08] V R Raman: 14/10/21 உதிரி வெடி
விடை: நலிந்த
[
[10/14, 07:08] மீ.கண்ணண்.: நசிந்த

[10/14, 07:09] Dr. Ramakrishna Easwaran: நசிந்த
[
[10/14, 07:13] sathish: நசிந்த

[10/14, 07:15] பாலூ மீ.: நசிந்து.
[
[10/14, 07:19] ஆர். நாராயணன்.: நசிந்த
[
[10/14, 07:20] akila sridharan: நசிந்த
[
[10/14, 07:25] V N Krishnan.: நசிந்த
[
[10/14, 07:29] Venkat: நசிந்த 🙏🏾
[
[10/14, 07:35] மாலதி: நசிந்த

[10/14, 07:38] G Venkataraman: நசிந்த

[10/14, 07:44] Ramki Krishnan: நசிந்த
[
[10/14, 07:44] nagarajan: *நசிந்த*
[
[10/14, 07:52] Dhayanandan: *நசிந்த*

[10/14, 08:16] sankara subramaiam: நசிந்த

[10/14, 08:30] Bhanu Sridhar: நசிந்த
[
[10/14, 08:44] siddhan subramanian: நசிந்த

[10/14, 08:53] sridharan: நசிந்த
[
[10/14, 09:25] *Padmashri:* *நசிந்த*
[
[10/14, 09:47] joseph amirtharaj: நசிந்த
[
[10/14, 10:24] prasath venugopal: நசிந்த

[10/14, 13:03] shanthi narayanan: நசிந்த
[
[10/14, 14:09] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏நசிந்த🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[10/14, 14:20] N T Nathan: நசிந்த
[
[10/14, 14:24] Viji - Kovai: நசிந்த
[
[10/14, 14:26] வானதி: *நசிந்த*
[
[10/14, 16:25] Usha Chennai: நசிந்த

[10/14, 18:41] bala: நசிந்த


********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(15-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
கந்தரால் கபடன் சமுத்திரத்தை விழுங்கிக் குலுக்கிய சோழன் (6)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(15-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*பராந்தகன்,*
 பெயர்ச்சொல்.
புறமொழிச்சொல்-
சமசுகிருதம்---( *परान्तक* ---பராந்தக மூலச்சொல் )
பிறரை,அயலாரை (எதிரிகளை) முடித்துவிடுபவன் என்றுப் பொருள்.
( *எதிரிகளுக்குக் கூற்றுவன்* )
***********************
_கந்தரால் கபடன் சமுத்திரத்தை விழுங்கிக் குலுக்கிய சோழன் (6)_

_சமுத்திரத்தை_
= _கடல்_

_விழுங்கி_
= _indicator to delete the word கடல் from (கந்தரால் கபடன்)_

= *[க]ந்தரா[ல்] கப[ட]ன்*
= *ந்தராகபன்*

_குலுக்கிய_
= _anagram indicator for. " *ந்தராகபன்* "_
= *பராந்தகன்*

_சோழன்_
= *பராந்தகன்*
*************************
*பராந்தக சோழன்*

முதலாம் பராந்தக சோழன் (கி.பி 907-953) ஆதித்த சோழனின் மகனாவான். களப்பிரரை முறியடித்து கிபி 575 இல் ஏற்படுத்தப்பட்ட பாண்டிய அரசு இவன் காலத்தில் 915 இல் முறியடிக்கப்பட்டது . அச் சமயத்தில் பாண்டி நாட்டை ஆண்டவன் 2ம் இராசசிம்மன் ஆவான்.பல ஆண்டுகள் இடம் பெற்ற இப்போரில் இலங்கை மன்னன் 5ம் காசியப்பன்(913-923) பாண்டியனுக்கு ஆதரவாக போரிட்டான் .முடிவில் பராந்தகன் மதுரையை கைக்கொண்டான்.போர் முடிவில் பாண்டி மன்னன் இலங்கை தப்பினான். பாண்டிய அரசை கைப்பற்றியதே இவன் காலத்தில் நிகழ்த்த முக்கிய சம்பவமாகும்.தன் தந்தை கட்டாது விட்ட பல கோயில்களை கட்டினான்.
***************
*பராந்தக சோழர்* 
கல்கி எழுதிய
*பொன்னியின் செல்வன்* 
புதினத்தில் வருகின்ற சோழப் பேரரசர் ஆவார். வரலாற்றில் இடம்பெற்ற முதலாம் பராந்தக சோழரைச் சற்று புனைவுடன் இணைத்து கதாப்பாத்திரமாக வடிவமைத்துள்ளார் கல்கி.
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************
[
[10/15, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பராந்தகன்
[
[10/15, 07:01] A Balasubramanian: பராந்தகன்
A.Balasubramanian

[10/15, 07:03] Dhayanandan: *பராந்தகன்*

[10/15, 07:04] மீ.கண்ணண்.: பராந்தகன்
[
[10/15, 07:05] Meenakshi: விடை:பராந்தகன்
[
[10/15, 07:15] பாலூ மீ.: பராந்தகன்.
[
[10/15, 07:17] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏பராந்தகன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[10/15, 07:18] sridharan: பராந்தகன்

10/15, 07:35] மாலதி: பராந்தகன்

[10/15, 07:38] Ramki Krishnan: பராந்தகன்
[
[10/15, 07:42] G Venkataraman: பராந்தகன்
[
[10/15, 07:42] joseph amirtharaj: பராந்தகன்
[
[10/15, 07:46] stat senthil: பராந்தகன்

[10/15, 07:46] nagarajan: *பராந்தகன்*

[10/15, 07:51] Padmashri: பராந்தகன்

[10/15, 08:06] Bhanu Sridhar: பராந்தகன்
[
[10/15, 08:42] ஆர்.பத்மா: பராந்தகன்

[10/15, 08:42] ஆர். நாராயணன்.: பராந்தகன்
[
[10/15, 13:48] shanthi narayanan: பராந்தகன்
[
[10/15, 14:55] வானதி: *பராந்தகன்*

[10/15, 18:55] கு.கனகசபாபதி, மும்பை: பராந்தகன்
[
[10/15, 21:09] Viji - Kovai: பராந்தகன்

[10/15, 21:38] sathish: பராந்தகன்

********************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*
(16-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ஆமாம் தடி தாண்டவத்தால் சுப முகூர்த்தம் இல்லாக் காலம் (2,3)
*************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
Raghavan MK said…
*A peek into today's riddle!*
*************************
*இன்றைய உதிரிவெடி!*
(16-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*ஆடி மாத பழமொழிகள்*
ஆடி மாதப் பழமொழிகள் பல.

_ஆடிப் பட்டம் தேடி விதை,_

_ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை வரும்_ ,

_ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்,_

_ஆடிச் செவ்வாய் தேடிக் குளி,அரைத்த மஞ்சள் பூசிக் குளி,_

_ஆடிக் கூழ் அமிர்தமாகும்._

என்பன *ஆடி குறித்த பழமொழிகளாக* மக்கள் மத்தியில் வழங்கப்படுகின்றன.
*********************
தமிழ் நாட்காட்டியின்படி ஆண்டின் *நான்காவது மாதம் ஆடி* ஆகும். 
********
*ஆடி மாதத்தின் சிறப்புகள்*
*******
பொதுவாக ஒவ்வொரு மாதமும் சிறப்பு வாய்ந்த மாதங்கள் தான். எல்லா மாதங்களும் இறைவனுக்கு உகந்த மாதங்கள், விசேஷமான மாதங்கள் தான். அதில் சில மாதங்கள் மட்டும் இறைவனுக்கு அதி விசேஷமான மாதங்கள். அதில் ஒன்றுதான் இந்த ஆடி மாதம். அப்படி இருக்க சிலர் ஆடி மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என கூறுகின்றனரே என கேட்பது வழக்கம்.

ஆடி மாதம் தேவர்களுக்கு உரிய மாதம். இறைவனை வழிபடுவதற்காகவே ஒதுக்கப்பட்ட மாதம் என்பதாலும், இறைவனை வழிபடுவதில் கவனம் சிதிலம் அடையும் என்பதாலும் *திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகள் இந்த மாதத்தில் நடத்தப்படுவதில்லை*
அதனால் இந்த மாதம் பீடை மாதம் என கூறுவது தவறு.
***********************
_ஆமாம் தடி தாண்டவத்தால் சுப முகூர்த்தம் இல்லாக் காலம் (2,3)_

_தாண்டவத்தால்_
= _anagram indicator for (ஆமாம் தடி)_
= *ஆடி மாதம்*

_சுப முகூர்த்தம் இல்லாக் காலம்_
= *ஆடி மாதம்*
*************************
*பெண்மை எனும் சக்திக்கு பெருமை சேர்க்கும் மாதம் ஆடி மாதம்.* ஆடி மாதத்தில் சிவனின் சக்தியைவிட அம்மனின் சக்தி அதிகமாக இருக்கும். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மனின் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். எனவேதான் இந்த மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம்.
*************
*ஆடி அமாவாசை:*
ஆடி மாதத்தில் வரும் அமாவாசை நாள் முன்னோர் வழிபாட்டிற்கு ஏற்ற நாள்.
*****
*ஆடி கிருத்திகை:*
ஆடி மாதத்தின் கிருத்திகை நாள் முருகனுக்கு உகந்த நாள். இந்த நாட்களில் அறுபடை கோவில்களிலும் முருக பெருமானுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெறும். 
*****
*ஆடி பூரம்:*
பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான ஆண்டாளுக்கு உகந்த நாள். இந்நாளில் பெருமாள் கோவில்களில் கன்னி பெண்கள் ஆண்டாள் பாசுரம் பாடினால் விரைவில்திருமணம் கைக்கூடும் என்பது ஐதீகம்.
****
*ஆடிப்பெருக்கு*
ஆறுகளில் புனல் பொங்கிவந்து ஆடிப்பட்டம் தேடி விதை விதைக்கும் திருநாளான ஆடி மாத பதினெட்டாம் நாள், ஆடிப்பெருக்கு எனக் கொண்டாடப்படுகிறது.
**********
*ஆடி வெள்ளி*
ஆடி வெள்ளிக் கிழமையன்று சுமங்கலிப் பெண்கள் கணவனின் ஆயுள் அதிகரிக்கவும், திருமணமாகாத பெண்கள் விரைவில் திருமணம் கூடி வரவும் விரதம் மேற்கொள்கின்றனர்.
***
*ஆடி ஞாயிறு*
ஆடி ஞாயிறன்று அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வணங்குவார்கள். நோய்கள் நீங்கவும் ஆரோக்கியம் அதிகரிக்கவும் கூழ் வார்த்து வழிபடுகின்றனர்.
*************************
*_ஆடி மாதம் சூறை காற்றோடு அம்மனின் அருட்காற்று அரவணைக்கும் மாதம்தான் ஆடி மாதம்._*
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
********************************
[
[10/16, 07:00] A Balasubramanian: ஆடி மாதம்
A.Balasubramanian
[
[10/16, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ஆடி மாதம்
[
[10/16, 07:01] மீ.கண்ணண்.: ஆடி மாதம்
[
[10/16, 07:01] V N Krishnan.: ஆடி மாதம்

[10/16, 07:02] chithanandam: ஆடி மாதம்

[10/16, 07:02] joseph amirtharaj: ஆடி மாதம்
[
[10/16, 07:02] stat senthil: ஆடி மாதம்

[10/16, 07:03] akila sridharan: ஆடி மாதம்

[10/16, 07:04] Meenakshi: விடை:ஆடிமாதம்
[
[10/16, 07:09] பாலூ மீ.: ஆடி மாதம்

[10/16, 07:10] மாலதி: ஆடி மாதம்
[
[10/16, 07:25] Dr. Ramakrishna Easwaran: ஆடி மாதம்

[10/16, 07:25] sridharan: ஆடி மாதம்

[10/16, 07:27] ஆர். நாராயணன்.: ஆடி மாதம்

[10/16, 07:27] Bhanu Sridhar: ஆடி மாதம்

[10/16, 07:38] nagarajan: *ஆடி மாதம்*

[10/16, 07:49] sankara subramaiam: ஆடி மாதம்
[
[10/16, 07:51] Rohini Ramachandran: ஆடி மாதம்

[10/16, 07:51] G Venkataraman: ஆடி மாதம்

[10/16, 07:57] ஆர்.பத்மா: ஆடி மாதம்

[10/16, 08:19] Dhayanandan: *ஆடி மாதம்*

[10/16, 08:25] prasath venugopal: ஆடி மாதம்
[
[10/16, 08:28] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏ஆடி மாதம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[10/16, 11:31] Padmashri: ஆடி மாதம்

********************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்