தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில் ஒற்றை வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது. அல்லது இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட" என்பது போல் சேர்த்தெழுதி ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு: ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...
Comments
*************************
*உதிரிவெடி 4160* (அக்டோபர் 31, 2021) வாஞ்சிநாதன் *************************
_சிவவாக்கியரின் பாடல்களில் புரட்சிகரமான சிந்தனைகள் பல நிறைந்துள்ளன. உருவ வழிபாடு, தலயாத்திரை, மத வாதம், வேதம் ஓதல், சாதியாசாரம் முதலானவற்றை எதிர்த்து ஒன்றே குலம் ஒருவனே தேவன்! உள்ளமே கோயில் என்னும் கொள்கையை அவர் உலகிற்கு உணர்த்துகிறார்.)_
*************************
*சிவவாக்கியம்-169*
_*கருத்தரிக்கும்* முன்னெலாம் காயம் நின்றது எவ்விடம்_
_உருத்தரிக்கும் முன்னெலாம் உயிர்ப்பு நின்றது எவ்விடம்_
_அருள்தரிக்கும் முன்னெலாம் ஆசை நின்றது எவ்விடம்_
_திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்!!!_
தாயின் வயிற்றில் கருவாக தரிப்பதற்கு முன்பு உடம்பு எங்கு எவ்வாறு இருந்தது. உருவாக்கி வளர்வதற்கு முன்பு உயிர் இருந்த இடம் எது. இறை அருள் கிடைப்பதற்கு முன்பு ஆசைகளின் மனம் நின்றது எவ்விடம் என்பதை, யாவும் சந்தேகங்கள் ஏதுமின்றி திருக்கமுடன் தெரிந்து கொண்டு ' *சிவாயநம* ' என்ற அஞ்செழுத்தாக இருப்பதை அறிந்து கொண்டு பஞ்சாட்சரத்தை சொல்லி தியானியுங்கள்.
🙏🏼
*************************
_இடை செருக செருக அலற ஒரு ஸ்வரத்துடன் உண்டாகு (5)_
இடை செருக = [செ]ரு[க] = ரு
அலற = கத்த
ஒரு ஸ்வரம் = ரி
செருக = insertion indicator to place ரு ibside கத்த
உண்டாகு = க(ரு)த்த+ரி
= *கருத்தரி*
***********************
*சிவவாக்கியம்-170*
_*கருத்தரிக்கு* முன்னெலாம் காயம் நின்றது தேயுவில்_
_உருத்தரிக்கு முன்னெலாம் உயிர்ப்பு நின்றது அப்புவில்_
_அருள் தரிக்கு முன்னெலாம் ஆசை நின்றது வாயுவில்_
_திருக்கறுத்துக் கொண்டதே சிவாயம் என்று கூறுவீர்._
ஆகாயத்திலிருந்து ஆன்மா கருத்தரிக்கும் முன்பு காயமான உடம்பு, தாய் தகப்பனின் உஷ்ணத்தில் தீயாக நின்றிருந்தது. உருவாக ஆவதற்கு முன்பு உயிர் சுக்கில சுரோனித நீராகி நின்றது. இறை அருளால் உயிர் உடம்பாகி வெளிவருவதற்கு முன்பு மனமானது ஆசையாக காற்றில் நின்றது. பின் தாயின் கருவறை என்ற மண்ணில் சிசுவாக வளர்ந்து உடலுயிராய் பிறவி வந்தது என்பதை திருத்தமாக தெரிந்துகொண்டு ' *சிவாயநம* ' என்ற பஞ்சாட்சரத்தை உணர்ந்து சொல்லி தியானம் செய்யுங்கள்.
************************
★ Blast from the past ★
************************
*உதிரிவெடி 3817*
[October 08, 2019]
_வெட்டு இரு பாதி கொண்டு உண்டாகு (5)_
விடை: கருத்தரி
வெட்டு= கத்தரி
இரு பாதி = 1/2 இரு = ரு
உண்டாகு = கத்தரி+ரு
= *கருத்தரி*
*************************
💐🙏🏼💐