இன்று காலை வெளியான வெடி:
முன் புத்தி இருந்தாலும் பெண் முன்னே வந்தால் மண்ணுக்குள்தான் காணலாம் (4)
அதற்கான விடை: புதையல் = பு + தையல்
பு = முன் புத்தி
தையல் = பெண்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
முன் புத்தி இருந்தாலும் பெண் முன்னே வந்தால் மண்ணுக்குள்தான் காணலாம் (4)
அதற்கான விடை: புதையல் = பு + தையல்
பு = முன் புத்தி
தையல் = பெண்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
**********************
*உதிரிவெடி 4156 !*
**********************
இந்திய புதையல் சட்டத்தின்படி மதிப்புடைய எந்தவொரு பொருளும் பூமிக்குள் புதைந்திருந்து அது கண்டுபிடிக்கப்பட்டால் அது “ *புதையல்* ” எனப்படும். இச்சட்டத்தின்படி ரூ.10/-க்கு மேற்பட்ட மதிப்புடைய எந்தவொரு புதை பொருளும் கண்டறிப்பட்டால், அதைக் கண்டுபிடித்தவர் இது குறித்து முதலில் வட்டாட்சியர் அல்லது கிராம நிர்வாக அதிகாரிக்கு தெரிவிக்க வேண்டும்
**********************
_முன் புத்தி இருந்தாலும் பெண் முன்னே வந்தால் மண்ணுக்குள்தான் காணலாம் (4)_
_முன் புத்தி_
= _first letter in புத்தி_
= *பு*
_பெண்_ = *தையல்*
_பெண் முன்னே முன் புத்தி வந்தால்_
= *பு+தையல்*
= *புதையல்*
= _மண்ணுக்குள்தான் காணலாம்_
**********************
*சித்தர்களின் குரல்.*
{ உண்மையான மிக பெரிய *புதையல்*
எங்கே இருக்கிறது ...? அதை அடையுங்கள் .}
தன்னுள் தேடாமல் எப்பொருளைவெளியே
தேடினாலும் அது முடிவாகாது.
தன்னுள் சேர்க்காத எப்பொருளும் நம்மிடம்
சேராது.
உங்கள் உள்ளே இருக்கும் ”உருபொருளை”
*புதையலாக* நினைத்து தோன்டி எடுங்கள்,
புதைபொருளாக மாற்றி புதைத்துவிடாதிர்கள்.
**********************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*
(04-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
விலையதிகமற்றதாய்க் கமலி வானத்தில் கண்டது (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(04-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
“ _உலகில் மலிவான பொருள் அன்புதான் , உலகில் மிக விலை உயர்ந்த பொருளும் அன்புதான் ..."_
-- *இங்கர்சால்*
***********************
*மலிவு - என்றால் என்ன அர்த்தம்?*
*மலிவு* என்ற சொல்லை 'விலை குறைவு' (Cheap) என்ற பொருளில் தற்போது பயன்படுத்தி வருகிறோம்.
(உதா: மலிவு விலை உணவகம்). ஆனால்… ஒரு பொருள் மலிவாய் கிடைக்கிறது என்பதன் உண்மையான பொருள், அவை எவ்வித தடையுமின்றி பரவலாகக் கிடைப்பதையே குறித்தது.
மலிந்த - என்றால் நிறைந்த, மிகுந்த,
விலையில் சகாயமான , விலை குறைந்த எனப் பொருள்.
_ஏன் இப்பொருள் கொண்டது?_
அதன் வேர்ச்சொல்லிலிருந்து ஆராய்வோம்.
மல் - என்ற மூலத்திலிருந்து பிறந்த சொல் மலிவு.
* மல் > மல்கு என்றால் பெருகு என்று பொருள்.
* மல்குதல் - என்றால் மிகுதல் , பெருகுதல் , அதிகரித்தல்.
* மல்குதல் = பொலிதல், அதிகப் படுதல்.
* மல் > மலிகு > மலிவு .
ஊழல் / குற்றங்கள் 'மலிந்து' விட்டது என்றால் அவை 'பெருகி' விட்டது என்று பொருள்.
ஒரு பொருளானது நிறைந்த வரத்துடன் - தட்டுப்பாடின்றி - மலிந்து கிடைக்கையில், அதன் விலை குறைவாகவே இருக்கும் என்ற பொருளாதார நடைமுறையை அறிவு பூர்வமாக உள்ளடக்கிய சொல்லே - மலிவு.
( மல்குதல் = அதிகப்படுதல் / பெருகுதல்.
இதே அதிகப்படுதல் என்ற பொருளில் தான் MULTIPLE என்ற ஆங்கிலச்சொல் அமைந்தது.
மல் > மல்கி என்ற தமிழ் மூலத்தின் திரிபே 'Multi' என்ற ஆங்கில முன்னொட்டு ஆகும்.)
(இரவிசிவன்
வாகன உதிரிபாகங்கள் தயாரிப்பு-இல் தலைமை பொறுப்பாளர்)
***********************
_விலையதிகமற்றதாய்க் கமலி வானத்தில் கண்டது (4)_
_கண்டது_ = _indicates hidden clue_
_கமலி வானத்தில் கண்டது_
= _answer hidden in கமலி வானத்தில்_
= _க[ *மலிவான* ]த்தில்_
= *மலிவான*
= _விலையதிகமற்றதாய்_
*************************
*துக்கடா :*
தமிழர்களின் வணிக நுண்ணறிவிற்கு சிறந்த உதாரணமாக ' *மலிவு* ' என்ற சொல் ஒன்றே போதும்.மலிவின் பொருள் 'பெருகுதல்' - என்றிருக்க விலை குறைந்த என்ற பொருளில் ஏன் பயன்படுத்தப்படுகிறது? இங்கே தான் 'demand supply theory'யை தமிழர்கள் நுண்மையாக கையாண்டுள்ளார்கள். பொருளியலில் (economics) 'demand supply theory' படி ஒரு பொருளின் உற்பத்தியும் வரத்தும் (supply) அதிகமாக இருந்து தேவை (demand) குறைவாக இருந்தால் அதன் விலை குறைவாக இருக்கும். *ஆக, மலிவாக (அதிகமாக) ஒரு பொருளின் வரத்து இருந்தால் அதன் விலை குறைவாக இருக்கும்* . இதன் பொருட்டே வணிகம், விலை தொடர்பான
சொற்றொடர்களில் ' *மலிவு' என்பதன் பொருள் 'cheap' என்ற மருவிய உணர்வோடு பயன்பட்டு வருகிறது.* அங்கே உள்ளார்ந்த பொருள், அந்த பொருளின் வரத்து பெருகி உள்ளது என்பதே.
*ஒரு சிறிய சொல்லில் ஒரு பொருளாதார தத்துவமே மறைந்துள்ள நம் தமிழ் மொழி பழமை வாய்ந்தது மட்டும் அல்ல, அறிவியல் பூர்வமானதும் கூட என்பதற்கு இதைவிட வேறு எடுத்துக்காட்டு தேவை இல்லை"*
*************************
💐🙏🏼💐
****************************
[10/4, 07:00] திரைக்கதம்பம் Ramarao: மலிவாக
[10/4, 07:01] A Balasubramanian: மலிவான
A.Balasubramanian
[
[10/4, 07:01] sankara subramaiam: மலிவாக
[10/4, 07:02] A D வேதாந்தம்: விடை= மலிவான ( வேதாந்தம்)
[10/4, 07:04] மீ.கண்ணண்.: மலிவான
[10/4, 07:04] sathish: மலிவாக
[10/4, 07:05] stat senthil: மலிவான
[10/4, 07:06] nagarajan: *மலிவான*
[10/4, 07:07] ஆர். நாராயணன்.: மலிவான
[10/4, 07:06] nagarajan: *மலிவான*
[10/4, 07:10] பாலூ மீ.: மலிவான
[10/4, 07:10] Meenakshi: விடை:மலிவான
[10/4, 07:10] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏மலிவான🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[10/4, 07:15] வானதி: *மலிவான*
[10/4, 07:17] Bharathi: மலிவான
[10/4, 07:26] siddhan subramanian: மலிவான hidden
[10/4, 07:39] Ramki Krishnan: Sorry it is மலிவான
[10/4, 07:43] Dhayanandan: *மலிவான*
[10/4, 07:45] sridharan: மலிவான.
[
[10/4, 07:45] bala: மலிவான
[
[10/4, 07:56] மாலதி: மலிவான
[10/4, 07:57] Bhanu Sridhar: மலிவான
[
[10/4, 08:00] Venkat:
மலிவான 🙏🏾
[
[10/4, 08:02] prasath venugopal: மலிவான
[10/4, 08:05] ஆர்.பத்மா: மலிவாக
[10/4, 08:05] chithanandam: மலிவான
[10/4, 08:55] joseph amirtharaj: மலிவாக
[
[10/4, 09:23] Usha Chennai: மலிவான
[10/4, 09:25] balagopal: மலிவு.
[10/4, 09:35] Rohini Ramachandran: மலிவான
[10/4, 09:54] Dr. Ramakrishna Easwaran: *மலிவான*
[
[10/4, 11:41] Viji - Kovai: மலிவாய்
மலிவாக
[10/4, 12:04] akila sridharan: மலிவான
[10/4, 12:20] shanthi narayanan: மலிவான
[10/4, 12:23] N T Nathan: மலிவான
[10/4, 14:47] கு.கனகசபாபதி, மும்பை: மலிவான
[10/4, 20:18] V N Krishnan.: மலிவான. க. மலி வான. த்தில்
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(05-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
முக்கால்வாசி அருகில் வந்து நறுமணம் தரும் (3)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(05-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*அகில்*
(பெயர்ச்சொல்)
வாசனைப் பொருட்கள் தயாரிக்க உதவும் ஒரு வகை மரம். இதன் இன்னொரு பெயர் *காழ்வை* .
***********************
தமிழில் " *அகில்* " இன் அர்த்தம் என்ன?
*காழ்வை*
காழ்வை என்னும் மலர் சங்க காலத்தில் மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று. *காழ்* என்னும் சொல் தமிழில் வயிரத்தைக் குறிக்கும். வயிரம் என்பது ஓரரவுப் பயிரினத்தில் காணப்படும் கெட்டித் தன்மை. அகக் காழ் கொண்டவற்றை மரம் என்றும், புறக் காழ் கொண்டவற்றைப் புல் என்றும் பழந்தமிழர் பாகுபடுத்துகின்றனர். பொதுவாகப் பூக்கள் மென்மையானவை. காழ்வை என்னும் பூவோ வன்மையானது. வளைந்துகொடுக்காதது.
_காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும்._
***********************
_முக்கால்வாசி அருகில் வந்து நறுமணம் தரும் (3)_
_முக்கால்வாசி அருகில்_
= _3/4 of the word "அருகில்"_
= *அ(ரு)கில்*
_வந்து நறுமணம் தரும்_
= *அகில்*
*************************
*அகில்*
*திருக்காறாயில் திருத்தலத்தில் தலமரமாக விளங்குவது அகில் மரமாகும்.* இது அகருமரம் என்றும் குறிக்கப்படுகின்றது. சிறகுக் கூட்டிலைகளையும், சமமற்ற சிற்றிலைகளையும் உடையது;
*இதன் கட்டை மணமுடையது;*
சந்தனம் போல் மணப்பொருளாய் பயன்பாட்டில் உள்ளது. இதன் தூளை தணலில் இட்டால் எழும்புகையானது மிகவும் நறுமணம் கொண்டதாக இருக்கும்
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
அகில் சந்தனமர வகையைச் சேர்ந்த மர வகைகளில் ஒன்று. காடுகளில் பல இடங்களில் சந்தன மரத்தை ஒட்டியே அகில் மரங்களும் வளர்ந்திருப்பதைக் காணலாம்.
🌸🌸🌸🌸🌸🌸🌸
அகில் மரத்தின் கட்டைமட்டும்தான் மருத்துவச் சிறப்பு பெற்றுத் திகழ்கிறது. ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, அருசி ஆகிய குறைபாடுகளை அகற்றும் ஆற்றல் பெற்றதாகத் திகழ்கிறது அகில்.
*************************
*விளம்பிநாகனார்:* *நான்மணிக்கடிகை*
********
_கள்ளி வயிற்றின் *அகில்* பிறக்கும், மான் வயிற்று_
_ஒள் அரிதாரம் பிறக்கும், பெருங் கடலுள்_
_பல் விலைய முத்தம் பிறக்கும், அறிவார் யார்,_
_நல்ஆள் பிறக்கும் குடி?_ (பாடல்-4)
**********
கள்ளியின் வயிற்றில் மணம் தரும் *அகில்* பிறக்கும். மானின் வயிற்றில் சிறந்த அரிதாரம் பிறக்கும். பெருங்கடலுள் உள்ள சிப்பியில் முத்து பிறக்கும். ஆனால், நல்லவர் பிறக்கும் குடியை யார் அறிவார்?
(நல்லவரா? கெட்டவரா? என்பதைப் பிறப்பு தீர்மானிப்பதில்லை என்பதை, "நல்ஆள் பிறக்கும் குடி' என்னும் தொடர் விளக்குகிறது).
*************************
💐🙏🏼💐
****************************
[
[10/5, 06:59] திரைக்கதம்பம் Ramarao: அகில்
[10/5, 07:00] மீ.கண்ணண்.: அகில்
[10/5, 07:00] A Balasubramanian: அகில்
A.Balasubramanian
[10/5, 07:00] Venkat: அகில் 🙏🏾
[[10/5, 07:01] V N Krishnan.: அகில். மணம் தரும்
[10/5, 07:02] Meenakshi: விடை:அகில்
[
[10/5, 07:02] sankara subramaiam: அகில்
[
[10/5, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏அகில்🙏
வீ ஆர். பாலகிருஷ்ணன்
[10/5, 07:08] மாலதி: அகில்
[10/5, 07:08] sridharan: அகில்
[10/5, 07:09] பாலூ மீ.: அ(ரு)கில் விடை அகில்
[10/5, 07:10] Rohini Ramachandran: அகில்
[
[10/5, 07:25] G Venkataraman: அகில்
[10/5, 07:28] Bharathi: அகில்
*[10/5, 07:29]* *Padmashri:* *அகில்*
[10/5, 07:29] A D வேதாந்தம்: விடை= அகில்( வேதாந்தம்)
[
[10/5, 07:32] stat senthil: அ ~ரு~ கில்
[10/5, 07:34] nagarajan: *அகில்*
[10/5, 07:39] Dr. Ramakrishna Easwaran: *அகில்*
அருகில் என்பதன் 3/4 பகுதி
[10/5, 07:46] ஆர்.பத்மா: அகில்
[10/5, 07:54] prasath venugopal: அகில்
[
[10/5, 07:57] ஆர். நாராயணன்.: அகில்
[10/5, 07:58] chithanandam: அகில்
[10/5, 08:09] Bhanu Sridhar: அகில்
[10/5, 08:24] Viji - Kovai: அகில்
[10/5, 08:58] கு.கனகசபாபதி, மும்பை: அகில்
[10/5, 09:06] joseph amirtharaj: அகில்
[
[10/5, 09:08] N T Nathan: அகில்
[
[10/5, 12:22] shanthi narayanan: அகில்
[10/5, 12:25] வானதி: *அகில்*
[10/5, 18:08] sathish: அகில்
[10/5, 19:38] Revathi Natraj: அகில்
[10/5, 20:41] Ramki Krishnan: அகில்
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(06-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தேவையான அளவு இளம்பெண் குழம்ப வெளியே போனது (5)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(06-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
_மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மந்திரங்கள் தேவையில்லை_
_சில மறதிகள் *போதுமானது* !_
***********************
காலைநேர
தேன்சிட்டுகளின்
செல்லமான
சிணுங்களும்
காற்றில்
மிதந்துவரும்
வேப்பம்பூ வாடையும்
ஒரு கவிதையின்
பிரசவத்திற்குப்
*போதுமானது.*
(சுடலைமணி)
***********************
உண்மையான காதலை
உணர்ந்துக் கொள்ள
பூங்கொத்துகளைவிட
ஒரு முள் *போதுமானது* .
- இசாக்
*************************
“ஒரு சொல் கொல்வதற்குப் போதுமானதெனில், நல்லதொரு கவிதை வாழ்வதற்குப் *போதுமானது* ” -
தமிழ் நதி
*************************
_தேவையான அளவு இளம்பெண் குழம்ப வெளியே போனது (5)_
_இளம்பெண்_
= *மாது*
_குழம்ப_
= *மாது-->துமா*
_வெளியே போனது_
= *துமா* _inside_ *போனது*
= *போதுமானது*
= _தேவையான அளவு_
*************************
_கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை சொன்னாலே *போதுமானது*_
🌸🌺🌸🌺🌸🌺🌺
பகவானுக்கு ஆயிரம் திருநாமங்கள் உண்டு. அப்படியெனில் அந்த ஆயிரம் திருநாமங்களையும் சொன்னால்தான், பாபம் தீருமா?’ என்று கேட்கின்றனர் பக்தர்கள். ‘தேவையில்லை. கேசவா எனும் திருநாமத்தை ஒருமுறை, ஒரேயொரு முறை சொன்னாலே, நம் அத்தனைப் பாபங்களும் விலகிவிடும்’ என்கிறது கீதை.
அதற்காக ஒரேயொரு திருநாமத்தை மட்டும், ஒரேயொரு முறை சொன்னாலே *போதுமானது* என்று தப்பாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு, செயல்படக்கூடாது. ‘கேசவா’எனும் திருநாமத்தை மனதார ஒருமுறை சொன்னாலே, நாம் சேர்த்து வைத்திருக்கிற பாபங்கள் அனைத்தும் தொலைந்து விடும் என்றால், அவனுடைய நாமங்கள் அனைத்தையும் சொல்லி வந்தால்… அதுவும் அனுதினமும் சொல்லி வந்தால்… பகவான் நமக்கு எவ்வளவு பலன்களைத் தருவார், எத்தனை புண்ணியங்கள் நம்மை வந்தடையும் என்று யோசிக்க வேண்டும்; பகவானின் திவ்விய நாமங்களைச் சொல்லத் துவங்கினால், நாமும் நம்மைச் சேர்ந்தவர்களும் வளமுடன் வாழ்வோம்!
*************************
💐🙏🏼💐
****************************
[10/6, 07:00] திரைக்கதம்பம் Ramarao: போதுமானது
[10/6, 07:01] A Balasubramanian: போதுமானது
A.Balasubramanian
[10/6, 07:01] Ramki Krishnan: போதுமானது
[10/6, 07:03] மீ.கண்ணண்.: போதுமானது
[10/6, 07:06] Meenakshi: விடை:போதுமானது
[10/6, 07:07] stat senthil: போதுமானது
[10/6, 07:07] பாலூ மீ.: போதுமானது.
[10/6, 07:07] மாலதி: போதுமானது
[10/6, 07:13] sathish: போதுமானது!
[10/6, 07:30] ஆர். நாராயணன்.: போதுமானது
[10/6, 07:38] V N Krishnan.: போதுமானது
[
[10/6, 07:38] nagarajan: *போதுமானது*
[10/6, 07:47] G Venkataraman: போதுமானது
[10/6, 07:53] Bhanu Sridhar: போதுமானது
[10/6, 07:56] chithanandam: போதுமானது
[
[10/6, 07:59] sankara subramaiam: போதுமானது
[10/6, 08:05] siddhan subramanian: போதுமானது (போனது + மாது)
[10/6, 08:20] prasath venugopal: போதுமானது
[
[10/6, 08:29] ஆர்.பத்மா: போதுமானது
[10/6, 08:43] sridharan: போதுமானது
[
[10/6, 10:00] கு.கனகசபாபதி, மும்பை: போதுமானது
[10/6, 10:47] joseph amirtharaj: போதுமானது
[10/6, 11:16] Dhayanandan: *போதுமானது*
[10/6, 11:37] வானதி: *போதுமானது*
[10/6, 11:51] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏போதுமானது🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[10/6, 12:04] shanthi narayanan: போதுமானது
[10/6, 13:04] N T Nathan: போதுமானது
[10/6, 19:49] Bharathi: போதுமானது
[10/6, 20:07] akila sridharan: போதுமானது
[10/6, 20:10] Revathi Natraj: போதுமானது
[
[10/6, 20:14] Viji - Kovai: போதுமானது
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(07-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சீதாராமன் இருக்குமிடம் கோவா பாதிப்பாதி அமெரிக்க மாநிலம் (3)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(07-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
ராமன் எத்தனை ராமனடி அவன்
நல்லவர் வணங்கும் தேவனடி தேவன்
ராமன் எத்தனை ராமனடி
கல்யாணக் கோலம் கொண்ட கல்யாண ராமன்
_காதலுக்கு தெய்வம் அந்த *சீதாராமன்*_
அரசாள வந்த மன்னன் ராஜா ராமன்
அலங்கார ரூபன் அந்த சுந்தர ராமன் ராமன்
ராமன் எத்தனை ராமனடி
ராமன் எத்தனை ராமனடி
(படம்: லக்ஷ்மி கல்யாணம்:1968)
***********************
_சீதாராமன் இருக்குமிடம் கோவா பாதிப்பாதி அமெரிக்க மாநிலம் (3)_
_சீதாராமன் இருக்குமிடம்_
= *அயோத்தி*
_பாதிப்பாதி அயோத்தி,கோவா_
= *அயோ+வா*
= *அயோவா*
= _அமெரிக்க மாநிலம்_
***********************
*அயோவா* (Iowa) ஐக்கிய *அமெரிக்க மாநிலங்களுள்* ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் வடமத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் டெஸ் மொய்ன்ஸ்.
************************
********************************
[10/7, 07:00] A Balasubramanian: அயோவா
A.Balasubramanian
[
[10/7, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அயோவா
[10/7, 07:02] stat senthil: அயோவா
[
[10/7, 07:04] Bhanu Sridhar: அயோதி
[
[10/7, 07:06] Usha Chennai: அயோவா
[10/7, 07:06] V N Krishnan.: அயோவா
[10/7, 07:08] A D வேதாந்தம்: விடை= அயோவா( வேதாந்தம்)
[10/7, 07:08] Dhayanandan: *சிகாகோ*
[10/7, 07:10] பாலூ மீ.: அயோ(த்தி)வா. விடை அயோவா
[10/7, 07:14] மீ.கண்ணண்.: கோசலை
[
[10/7, 07:14] Venkat: அயோவா 🙏🏾👌🏾
[10/7, 07:32] கு.கனகசபாபதி, மும்பை: அயோவா
[10/7, 07:32] G Venkataraman: அயோவா
[
[10/7, 07:32] ஆர். நாராயணன்.: அயோவா
[
[10/7, 07:34] prasath venugopal: சிகாகோ
[10/7, 07:37] Meenakshi: விடை:அயோவா
[10/7, 07:47] nagarajan: *அயோவா*
[10/7, 07:59] chithanandam: அயோவா
[10/7, 08:49] sridharan: அயோவா
[
[10/7, 10:02] Dr. Ramakrishna Easwaran: *அயோவா*
[10/7, 10:14] கிருஷ்ணா ஶ்ரீதரன்: மாநிலம் - அயோவா
[10/7, 11:19] ஆர்.பத்மா: அயோவா
[10/7, 11:30] Rohini Ramachandran: அயோவா
[10/7, 13:18] shanthi narayanan: அயோவா
[10/7, 19:38] sathish: அயோவா
[
[10/7, 19:38] sankara subramaiam: அயோவா
[10/7, 20:14] Viji - Kovai: வாகால்
[10/7, 21:40] வானதி: *அயோவா*
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(08-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
சொந்தத்துடன் வந்து பற்றிக் கொண்டு எரியும் (4)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(08-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
காட்டுக்குயிலு
மனசுக்குள்ள பாட்டுக்
கென்றும் பஞ்சமில்ல
பாடத்தான் தவிலைத்
தட்டு துள்ளிக்கிட்டு
கவலை விட்டு கச்சைக்
கட்டு ஆடத்தான்
*பந்தம் என்ன சொந்தம் என்ன* போனா
என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம்
கவலைப்பட்ட ஜென்மம்
நான் இல்லை ஹாஹா
(தளபதி)
**********
*பந்தம் பாச பந்தம்*
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பிறக்கும் போதே
கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்
பந்தம் பாச பந்தம்
(பந்தம்)
**********
*சொந்தம் இல்லை பந்தம் இல்லை*
வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய்
யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலில்
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
(அன்னக்கிளி)
***********************
_சொந்தத்துடன் வந்து பற்றிக் கொண்டு எரியும் (4)_
_சொந்தத்துடன் வந்து_
= *பந்தம்*
_பற்றிக் கொண்டு எரியும்_
= *பந்தம்*
*************************
*விநாயகர் காரியசித்தி மாலை*
விநாயகர் பெருமான் முதன்மையான கடவுள். நாம் செய்யும் காரியங்கள் வெற்றி பெற தினமும் காரிய சித்தி மாலை படித்து பயன் பெறுவோம்.
இந்த கார்ய சித்தி மாலையை காஷ்யப மஹரிஷி வட மொழியில் இயற்றி கச்சியப்ப முனிவர் தமிழில் மொழி பெயர்த்து நமக்கு வழங்கி உள்ளார்கள்.
_பாடல் 1 _:_
_*பந்தம்* அகற்றும்_ அநந்தகுணப் பரப்பும்_ _எவன்பால் உதிக்குமோ எந்த உலகும்_ _எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ_
_சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும்_ _எவன்பால் தகவருமோ அந்த இறையாம்_ _கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்._
*பாடல் விளக்கம்:*
எல்லாவிதமான பற்றுகளை அறுத்தும், நற்குணங்களின் உற்பத்தியிடமாகவும், இவ்வுலகையே உண்டாக்கியும், காத்தும், மறைத்தும், லீலைகள் செய்பவனும், வேதங்களுக்கும் ஆகமங்களுக்கும் அறுபதுநான்கு கலைகளுக்கும் தலைவனாக இருக்கும் முழு முதற்கடவுளாம் விநாயகப்பெருமானை அன்புடன் தொழுகின்றோம்.
***********************
💐🙏🏼💐
********************************
[
[10/8, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பந்தம்
[10/8, 07:01] V N Krishnan.: பந்தம்
[10/8, 07:01] A Balasubramanian: பந்தம்
A.Balasubramanian
[10/8, 07:02] chithanandam: பந்தம்
[
[10/8, 07:03] கு.கனகசபாபதி, மும்பை: பந்தம்
[10/8, 07:04] மீ.கண்ணண்.: பந்தம்
[10/8, 07:07] sridharan: பந்தம்
[10/8, 07:07] Meenakshi: விடை: பந்தம்
[10/8, 07:12] பாலூ மீ.: பந்தம்.
[
[10/8, 07:16] A D வேதாந்தம்: விடை= பந்தம்( வேதாந்தம்)
[10/8, 07:21] மாலதி: பந்தம்
[10/8, 07:33] prasath venugopal: பந்தம்
[10/8, 07:37] Padmashri: பந்தம்
[10/8, 07:37] joseph amirtharaj: பந்தம்
[10/8, 07:45] nagarajan: *பந்தம்*
10/8, 07:55] akila sridharan: பந்தம்
[10/8, 07:56] ஆர். நாராயணன்.: பந்தம்
[10/8, 07:58] sankara subramaiam: பந்தம்
!
[10/8, 08:02] ஆர்.பத்மா: பந்தம்
[10/8, 07:17] Dr. Ramakrishna Easwaran: *பந்தம் (bandam - pandam homograph)*
[10/8, 08:47] G Venkataraman: பந்தம்
[
[10/8, 12:26] shanthi narayanan: பந்தம்
[
[10/8, 12:37] balagopal: பந்தம்
[
[10/8, 13:03] Ramki Krishnan: பந்தம்
[
[10/8, 14:05] வானதி: *பந்தம்*
[
[10/8, 15:58] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏பந்தம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[10/8, 19:48] sathish: பந்தம்
[10/8, 20:26] Viji - Kovai: பந்தம்
********************************
*இன்றைய உதிரிவெடி!*
(09-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
தொட முடியாத தக்கை கெட்டா குளறுபடியானது? (6)
*************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
***************************
**********************
*இன்றைய உதிரிவெடி!*
(09-10-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
***********************
*தொட முடியாத* தூரத்தில் உன் கனவு இருந்தாலும்..
தொட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் நீ!
இரு...
(தளபதி)
***********************
_தொட முடியாத தக்கை கெட்டா குளறுபடியானது? (6)_
_குளறுபடியானது_
= _anagram indicator for தக்கை கெட்டா_
= *கைக்கெட்டாத*
= _தொட முடியாத_
*************************
*கவித்துளி*
***********
*கைக்கெட்டாத*
தூரத்தில்
நின்றாலும்
என்னை
கிள்ளிவிடுகின்றன
உன் விழிகள்…
(யாழ்_அகத்தியன் கவிதைகள்)
*************************
💐🙏🏼💐
********************************
[
[10/9, 07:03] chithanandam: கைக்கெட்டாத
[
[10/9, 07:04] Usha Chennai: கைக்கெட்டாத
[10/9, 07:04] V N Krishnan.: கைக்கெட்டாத
[10/9, 07:04] திரைக்கதம்பம் Ramarao: கைக்கெட்டாத
[10/9, 07:05] Meenakshi: விடை:கைக்கெட்டாத
[
[10/9, 07:06] பானுமதி: கைக்கெட்டாத
[
[10/9, 07:07] பாலூ மீ.: தக்கை கெட்டா Anagram கைக்கெட்டாத.
[10/9, 07:08] மாலதி: கைக்கெட்டாத
[
[10/9, 07:09] A Balasubramanian: கைக்கெட்டாத
A.Balasubramanian
[10/9, 07:11] stat senthil: கைக்கெட்டாத
[10/9, 07:13] ஆர். நாராயணன்.: கைக்கெட்டாத
[
[10/9, 07:13] மீ.கண்ணண்.: கைக்கெட்டாத
[
[10/9, 07:19] akila sridharan: கைக்கெட்டாத
[
[10/9, 07:24] joseph amirtharaj: கைக்கெட்டாத
[
[10/9, 07:27] Ramki Krishnan: கைக்கெட்டாத
[10/9, 07:36] Dr. Ramakrishna Easwaran: *கைக்கெட்டாத*
:
[10/9, 07:38] sankara subramaiam: கைக்கெட்டாத
[10/9, 07:45] G Venkataraman: கைக்கெட்டாத
[10/9, 07:47] nagarajan: *கைக்கெட்டாத*
[
[10/9, 07:48] ஆர்.பத்மா: கைக்கெட்டாத
[10/9, 07:48] Bhanu Sridhar: கைக்கெட்டாத
[10/9, 08:00] prasath venugopal: கைக்கெட்டாத
[10/9, 08:08] sridharan: கைக்கெட்டாத
[
[10/9, 08:40] Bharathi: கைக்கெட்டாத
[10/9, 08:54] Viji - Kovai: கைக்கெட்டாத
[10/9, 09:12] A D வேதாந்தம்: விடை= கைக்கெட்டாத
(வேதாந்தம்)
[10/9, 07:48] Bhanu Sridhar: கைக்கெட்டாத
[
[10/9, 10:30] கு.கனகசபாபதி, மும்பை: கைக்கெட்டாத
[
[10/9, 11:08] Rohini Ramachandran: கைக்கெட்டாத
[
[10/9, 12:37] shanthi narayanan: கைக்கெட்டாத
[10/9, 13:55] வானதி: *கைக்கெட்டாத*
[10/9, 15:27] Dhayanandan: *கைக்கெட்டாத*
[
[10/9, 16:49] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கைக்கெட்டாத🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[10/9, 19:10] sathish: கைக்கெட்டாத
[
[10/9, 19:11] N T Nathan: கைக்கெட்டாத
[10/9, 19:39] balagopal: கைக்கெட்டாத
********************************