Skip to main content

விடை 4136

காலை வெளியான வெடி:
கடைசிநாளுக்குப் பின் யானை வர விதிகளில் கட்டுப்பாடு (4)
அதற்கான விடை: கெடுபிடி = கெடு + பிடி
கெடு = கடைசி நாள்
பிடி = (பெண்) யானை
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
**********************
உயிரும் மெய்யும் சேர்ந்துன்னை பாடுதடி

கண்மணியே உன்னை பற்றி எழுத 
காகிதங்கள் எடுத்தேனடி 
கிறுக்கல்கள் போதாது என் காதலை சொல்ல 
கீர்த்தனைகள் வடிக்கும் பக்தனாய் ஆவேனடி 
குருவியாய் நீயும் பறந்து இங்கு வந்தால் 
கூடாய் நான் இருப்பேனடி 
*கெடுபிடி* ஏதும் உன்னிடத்தில் இல்லை 
கேட்டது அனைத்தையும் தருவேனடி 
கை பிடித்து நடந்திடும் வரம் மட்டும் தந்தால் 
கொண்டவனாய் நான் இருந்து கிடப்பேன் 
கோலமயிலே உன் காவலனாக.......!!!!!!

தண்டபாணி
**********************
_கடைசிநாளுக்குப் பின் யானை வர விதிகளில் கட்டுப்பாடு (4)_

_கடைசிநாளுக்குப் பின்_
= *கெடு* (இதற்குப் பின்)

_யானை_
= *பிடி*

_வர_ = *கெடு+பிடி*
= *கெடுபிடி*

= _விதிகளில் கட்டுப்பாடு_
**********************
எங்கே 
போனாலும் 
ஹெல்மெட் 
போட்டுக்கிட்டுத்தான்
போக வேண்டியதிருக்கு...’’
‘‘போலீஸ்காரங்க *கெடுபிடியா..?’’*
‘‘இல்லை... கடன்காரங்க 
*கெடுபிடி!’*
😂
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 17-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
அத்தி, கோழி, ஆடு தலைகளை வெட்டிக் குலைத்து நீக்கிவிடு (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 17-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் இந்த ஜகத்தினை அழித்திடுவோம்” என்றார் பாரதி.

ஆனால் இன்றும் ஒருவேளை உணவுக்கு வகையின்றி வறுமையில் வாடும் ஏழைகள் அதிகம். குடியிருக்க வீடுகளின்றி நடைபாதையில் வசிக்கும் அவலங்கள் இன்றும் உலகளாவிய நிலையில் தொடர்ந்து வருவதுதான் இன்றைய நூற்றாண்டின் காலக்கொடுமை!
************************
அத்தி, கோழி, ஆடு தலைகளை வெட்டிக் குலைத்து நீக்கிவிடு (5)

கோழி, ஆடு தலைகளை வெட்டி
= [கோ]ழி, [ஆ]டு = ழிடு

குலைத்து = anagram indicator for அத்தி+ழிடு
= அழித்திடு

= நீக்கிவிடு
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/17, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அழித்திடு

[5/17, 07:02] stat senthil: அழித்திடு

[5/17, 07:03] Dhayanandan: *அழித்திடு*

[5/17, 07:03] V N Krishnan.: அழித்திடு

[5/17, 07:04] A Balasubramanian: அழித்திடு
A.Balasubramanian

[5/17, 07:04] மீ.கண்ணண்.: அழித்திடு

[5/17, 07:04] பாலூ மீ.: கழித்திடு.

[5/17, 07:12] Dr. Ramakrishna Easwaran: *அழித்திடு*

[5/17, 07:12] Meenakshi: விடை:அழித்திடு

[
[5/17, 07:18] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏அழித்திடு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/17, 07:20] akila sridharan: அழித்திடு

[5/17, 07:34] Rohini Ramachandran: கிழித்திடு

[5/17, 07:35] கு.கனகசபாபதி, மும்பை: அழித்திடு

[5/17, 07:36] ஆர். நாராயணன்.: அழித்திடு

[5/17, 07:38] chithanandam: அழித்திடு
[
[5/17, 07:39] V R Raman: அழித்திடு

[5/17, 07:46] Venkat: அழித்திடு 🙏🏾

[5/17, 07:53] sankara subramaiam: அழித்திடு

[5/17, 07:56] வானதி: *அழித்திடு*

[5/17, 07:57] nagarajan: *கழித்திடு*

[5/17, 08:00] G Venkataraman: கழித்திடு

[5/17, 08:09] மாலதி: அழித்திடு

[5/17, 08:25] Ramki Krishnan: அழித்திடு
[
[5/17, 08:26] Bhanu Sridhar: அழித்திடு

[5/17, 08:51] prasath venugopal: அழித்திடு

[5/17, 09:16] siddhan subramanian: அழித்திடு
[
[5/17, 10:05] sathish: அழித்திடு

[5/17, 12:15] ஆர்.பத்மா: அழித்திடு

[5/17, 12:23] Viji - Kovai: அழித்திடு

[5/17, 19:58] பானுமதி: அழித்திடு

*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 18-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மடிப்பு கலையாத புனித நதி சங்கமத்தில் மெய் நீக்கிய சத்தம் (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கசங்காத பார்வை
என் உரிமை நீ என சொல்லாமல் சொல்லும் பார்வை!
************************
மடிப்பு கலையாத புனித நதி சங்கமத்தில் மெய் நீக்கிய சத்தம் (5)

புனித நதி = கங்கா

மெய் நீக்கிய சத்தம்
= சத்தம்- த்ம் = சத

சங்கமத்தில் = Anagram indicator for (கங்கா+சத)
= கசங்காத

= மடிப்பு கலையாத
************************
கசங்காத காக்கிச் சட்டையில்
கசங்கிப்போன ஒரு போலீஸ்காரி
லத்தியால் கூட்டம் கிழித்துப்
பொத்தென்று சிறகில் குதித்தாள்

லத்தியை வீசியெறிந்தாள் - ஒரு
புல்லாங்குழல் வாங்கிக் கொண்டாள்


கவிஞர் : வைரமுத்து
************************
கசங்காமல் வலிக்கிறது.... 

கசங்காமல் வலிக்கிறது.... 
இதயத்தில் 
அவள் நினைவுகள்..,...


**** balavisu**** 
************************

Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/18, 07:03] திரைக்கதம்பம் Ramarao: கசங்காத

[5/18, 07:04] stat senthil: கசங்காத

[5/18, 07:08] Meenakshi: விடை:கசங்காத

[5/18, 07:19] மீ.கண்ணண்.: கசங்காத

[5/18, 07:23] பாலூ மீ.: கசங்காத.

[5/18, 07:25] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கசங்காத🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/18, 07:30] Bhanu Sridhar: கசங்காத

[5/18, 07:33] Dhayanandan: *கசங்காத*

[5/18, 07:42] வானதி: *கசங்காத*

[5/18, 07:44] sankara subramaiam: கசங்காத

[5/18, 08:04] prasath venugopal: கசங்காத
[
[5/18, 08:06] nagarajan: *கசங்காத*

[5/18, 08:09] மாலதி: கசங்காத

[5/18, 08:16] siddhan subramanian: கசங்காத

[5/18, 08:43] ஆர். நாராயணன்.: கசங்காத

[5/18, 09:00] Bharathi: கசங்காத

[5/18, 09:04] ஆர்.பத்மா: கசங்காத

[5/18, 09:07] கு.கனகசபாபதி, மும்பை: கசங்காத
[
[5/18, 09:17] Ramki Krishnan: கசங்காத

[5/18, 10:49] A D வேதாந்தம்: விடை= கசங்காத( வேதாந்தம்)

[5/18, 12:45] shanthi narayanan: கசங்காத

[5/18, 17:42] G Venkataraman: கசங்காத

[5/18, 19:20] chithanandam: கசங்காத

[5/18, 19:34] N T Nathan: கசங்காத

[5/18, 19:51] Revathi Natraj: கசங்காத

[5/18, 19:56] balagopal: விடை
கசங்காத

[5/18, 19:56] sridharan: கசங்காத

[5/18, 20:09] *Viji - Kovai:* *கசங்காத*
*கங்கா+சத*

[5/18, 22:39] *V N Krishnan.:* *கசங்காத. (கங்கா+சத)*

*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 19-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

கொம்பில் படர்ந்து சமைக்கப்படுவது, சங்ககாலப் பெண்மேல் படர்ந்து வாட்டும் (3)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************



************************
இரத்த சோகை நீக்கும் பசலை கீரை

பசலைக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளது, இதில் உள்ள இரும்புச் சத்து மிகவும் சுலபமாக ஜீரணமாகி உடம்பில் ஒட்டுகின்றது. எனவே ரத்த சோகை நோயாளிகளுக்கு அது மிகவும் பயன் தருகின்றது. இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் சிவப்புச்சத்து (ஹிமொகுளோபின்) உள்ளது. புரதங்களைப் பலப்படுத்தும் அமிலங்கள் உள்ளன. இரத்த விருத்தி உண்டாக்கும்.
************************
கொம்பில் படர்ந்து சமைக்கப்படுவது, சங்ககாலப் பெண்மேல் படர்ந்து வாட்டும் (3)
சங்ககாலப் பெண்மேல் படர்ந்து வாட்டும் = பசலை

கொம்பில் படர்ந்து சமைக்கப்படுவது = பசலை

************************
பசலை நோய் என்பது சங்க இலக்கியங்களில் சொல்லப்பட்ட ஒரு காதல் நோய் , அது தலைவனின் பிரிவுத்துயர் காரணமாக தலைவிக்கு ஏற்படும் உளவியல் சார்ந்த ஒரு வித சோகை நோய்.
************************
பசலை , இந்நோய் பற்றி தேவநேயப் பாவணர் பின்வருமாறு கூறுகின்றார்:

"பிரிவாற்றாமையால் தலைமகளின் மேனியிற் பசலை எனும் நிறவேறுபாடு தோன்றற் கேதுவாகிய வருத்தம். இது தலைமகனை நீண்ட நாளாக காணப்பெறாவிடத்து நிகழ்வதாகலின், கண்விதுப்பழிதலின் பின் வைக்கப்பட்டது. பசப்பு அல்லது பசலை என்பது பைம்பொன்னையொத்த பசுமஞ்சள் நிறம் கொண்டது. அது சுணங்கு, தேமல் எனவும் பெயர் பெறும். (மேனியழகினாலும் தேமல் படர்வதுண்டு. அது அழகுத் தேமல் எனப்படும்)".
************************
பசலை என்பது பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய காதல் நோய் என சொல்லப்படுகினறது. காதலன் பிரிவால் உணவு, உறக்கம் செல்லாது அவனையே நினைத்துக் கொண்டிருக்கும் தலைவிக்கு ஏற்படுவது பசலை நோய் என்பதாகும். பிரிவுத்துன்பத்தை தாங்க முடியாது உடல் மெலிந்து, அழுது அழுது கண் சோர்ந்து போயுள்ள தலைவியினது தோலின் இயற்கை நிறம் திரிபடைதல் பசலை நோய் எனப்படும். 

விடுவழி விடுவழிச் சென்றாங்கு, அவர் 

தொடுவழித் தொடுவழி நீங்கினால் பசப்பே 

என்று கலித்தொகை (130) கூறுகின்றது.
இதன் பொருள் 'படை செல்லச் செல்ல பகைவர் நீங்குவது போல் பிரிந்தவர் வந்து தீண்டத் தீண்ட பசப்பும் நீங்கும்' என்பதாகும்.
************************
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/19, 07:02] திரைக்கதம்பம் Ramarao: பசலை

[5/19, 07:02] stat senthil: பசலை
[
[5/19, 07:03] A Balasubramanian: பசலை
A.Balasubramanian

[5/19, 07:03] sankara subramaiam: பசலை

[5/19, 07:04] Meenakshi: விடை:பசலை
[
[5/19, 07:04] V R Raman: பசலை

[5/19, 07:05] ஆர்.பத்மா: பசலை

[5/19, 07:05] மீ.கண்ணண்.: பசலை

[5/19, 07:09] பாலூ மீ.: பசலை.

[5/19, 07:10] V N Krishnan.: பசலை (கீரை)

[5/19, 07:22] Venkat: பசலை 🙏🏾

[5/19, 07:26] Rohini Ramachandran: பாகல்

[5/19, 07:27] ஆர். நாராயணன்.: பசலை

[5/19, 07:45] akila sridharan: பசலை

[5/19, 07:49] A D வேதாந்தம்: விடை= பசலை(வேதாந்தம்)
[
[5/19, 08:01] nagarajan: *பசலை*

[5/19, 08:11] prasath venugopal: பசலை

[5/19, 08:11] Ramki Krishnan: பசலை

[5/19, 08:11] Bhanu Sridhar: பசலை

[5/19, 08:17] Bharathi: பசலை

[5/19, 08:20] மாலதி: பசலை
[
[5/19, 08:31] siddhan subramanian: பசலை

[5/19, 08:33] கு.கனகசபாபதி, மும்பை: பசலை

[5/19, 08:34] பானுமதி: பசலை

[5/19, 08:55] Dr. Ramakrishna Easwaran: *பசலை*

[5/19, 08:56] Dhayanandan: *பசலை*
[
[5/19, 10:27] balagopal: Good morning sirm விடை.பசலை.

[5/19, 10:55] வானதி: *பசலை*

[5/19, 11:21] Usha Chennai: பசலை
[
[5/19, 12:27] sridharan: பசலை
[
[5/19, 16:02] G Venkataraman: பசலை

[5/19, 19:08] Viji - Kovai: பசலை

[5/19, 19:37] Revathi Natraj: பசலை
[
[5/19, 20:25] shanthi narayanan: பசலை

*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 20-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

பெரிய துரைக்குத் தலை காட்டிய‌ பெண் (2)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************

*இன்றைய உதிரிவெடி!*( 20-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************

மயங்குகிறாள் ஒரு மாது
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
திருவாய் மொழியாலே திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா
திருவாய் மொழியாலே
அத்தான் அத்தான் என்றால் நெஞ்சம் உருகாதா

மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது

(பாசமலர்:1961)
************************
பெரிய துரைக்குத் தலை காட்டிய‌ பெண் (2)

பெரிய = மா

துரைக்குத் தலை காட்டிய‌
= து[ரைக்குத்] = து

பெண் = மா+து =மாது

************************
*என்றும் நினைவில் நிற்கும் ‘எதிர்நீச்சல்’ மாடிப்படி மாது.*


வாழ்வில் எத்தனை கஷ்டங்கள் இருந்தாலும் தடைகள் இருந்தாலும் எதிர்நீச்சல் போட்டு மேலே வரவேண்டும் என்பதுதான் வாழ்க்கை நியதி. தடைகளைக் கண்டு தவித்து மருகுபவர்கள்தான் நிறையபேர். இத்தனைப் பெருங்கூட்டத்துக்கு மத்தியில் இருந்தபடி, எதிர்நீச்சல் போட்டு முன்னுக்கு வரும் ஓர் அனாதை இளைஞனின் கதைதான் ‘எதிர்நீச்சல்’.
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/20, 06:59] திரைக்கதம்பம் Ramarao: மாது

[5/20, 06:59] மீ.கண்ணண்.: மாது

[5/20, 07:01] stat senthil: மாது

[5/20, 07:02] Meenakshi: விடை:மாது

[5/20, 07:02] chithanandam: மாது

[5/20, 07:08] Rohini Ramachandran: மாது

[5/20, 07:09] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏மாது🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[5/20, 07:09] A Balasubramanian: மாது
A.Balasubramanian
[
[5/20, 07:10] பாலூ மீ.: மாது

[5/20, 07:11] sridharan: மாது
[
[5/20, 07:12] V N Krishnan.: மாது
[
[5/20, 07:18] Bhanu Sridhar: யது
[
[5/20, 07:23] G Venkataraman: மாது

[5/20, 07:29] கு.கனகசபாபதி, மும்பை: மாது

[5/20, 07:29] sankara subramaiam: மாது

[5/20, 07:31] Ramki Krishnan: மாது
மா (பெரிய) + து (துரைக்கு தலை)
[
[5/20, 07:31] prasath venugopal: மாது

[5/20, 07:45] Dr. Ramakrishna Easwaran: *மாது*

[5/20, 07:47] ஆர்.பத்மா: மாது
[
[5/20, 07:57] nagarajan: *மாது*

[5/20, 08:00] siddhan subramanian: மாது

[5/20, 08:01] மாலதி: மாது
[
[5/20, 08:13] sathish: மாது

[5/20, 08:39] ஆர். நாராயணன்.: மாது

[5/20, 08:40] Bharathi: *மாது*

[5/20, 09:09] Viji - Kovai: மாது
[
[5/20, 09:42] Dhayanandan: *மாது*

[5/20, 10:22] வானதி: *மாது*

[5/20, 12:49] shanthi narayanan: மாது

[5/20, 19:24] akila sridharan: மாது

[5/20, 20:01] Revathi Natraj: மாது

[5/20, 20:42] N T Nathan: மாது

[5/20, 22:22] balagopal: மா து.
*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 21-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஏதிலார் மெய்துறந்தார் கெட்டபின் ஈந்ததுவோர் தீதிலா நீதிநூலாம் தேர் (3)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 21-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஏலம் ஆதியான ஆறு பொருள்கள் சேர்ந்த ஒரு வகைச் சூர்ணம் ' *ஏலாதி* ' என மருத்துவ நூல்களில் கூறப்பெறும். ஏலம் ஒரு பங்கு, இலவங்கப்பட்டை இரண்டு பங்கு, நாககேசரம் மூன்று பங்கு, மிளகு நாலு பங்கு, திப்பிலி ஐந்து பங்கு, சுக்கு ஆறு பங்கு என்ற அளவுப்படி சேர்த்து இம் மருந்தை ஆக்குவர்.

ஏலாதி நூலும் ஒவ்வொரு பாடலிலும் ஆறு பொருள்களைப் பெற்று, உயிருக்கு உறு துணையாக அற நெறியை விளக்கி உரைக்கும் ஒப்புமை பெற்றமையால் இப் பெயரைப் பெற்றுள்ளது.

ஆறு பொருள்களை நான்கு அடிப் பாடலில் அடக்கும்
இந் நூலின் ஆசிரியர் கணிமேதாவியார். கணிமேதை என்றும் இவர் வழங்கப் பெறுவர்.
இந் நூலில் கடவுள் வாழ்த்து நீங்கலாக எண்பது பாடல்கள் உள்ளன.
************************
_ஏதிலார் மெய்துறந்தார் கெட்டபின் ஈந்ததுவோர்_

_தீதிலா நீதிநூலாம் தேர் (_ 3)

_ஏதிலார் மெய்துறந்தார்_
= _மெய்யெழுத்து துறந்த ஏதிலார்_
= *ஏதிலா*

_கெட்டபின்_ = Anagram indicator for *ஏதிலா*
= *ஏலாதி*

= _ஈந்ததுவோர் தீதிலா நீதிநூலாம் தேர்_
************************
*ஏலாதியில் ஒரு பாடல் ....*

_சென்ற புகழ், செல்வம், மீக்கூற்றம், சேவகம்_

_நின்ற நிலை, கல்வி, வள்ளன்மை, - என்றும்_

_அளி வந்து ஆர் பூங் கோதாய்!-ஆறும் மறையின்_

_வழிவந்தார்கண்ணே வனப்பு._ (1)

*பொருள்:*
தேன் சிந்தும் பூவையணிந்த கூந்தலையுடையவளே! கொலைத் தொழிலை விரும்பாதவனும், பிற உயிர்களைக் கொல்லாதவனும், புலால் உண்ணாதவனும், மிகுந்து வருந்தும் தொழிலை செய்யாதவனும், பொய் பேசாதவனும், எந்த நிலையிலும் தன் நிலையிலிருந்து விலகாதவனும் பூமியில் மட்டுமல்லாமல் தேவலோகத்திலும் போற்றப்படுவான்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/21, 07:00] *prasath venugopal:* *ஏலாதி*
[
[5/21, 07:00] திரைக்கதம்பம் Ramarao: ஏலாதி
[
[5/21, 07:02] stat senthil: ஏலாதி

[5/21, 07:02] A Balasubramanian: ஏலாதி
A.Balasubramanian

[5/21, 07:02] stat senthil: ஏலாதி

[5/21, 07:03] Ravi Subramanian: ஏலாதி

[5/21, 07:05] Meenakshi: விடை:ஏலாதி
[
[5/21, 07:06] பாலூ மீ.: ஏலாதி.
[
[5/21, 07:09] Rohini Ramachandran: ஏ லாதி

[5/21, 07:30] sridharan: ஏலாதி

[5/21, 07:38] Dhayanandan: *ஏலாதி*

[5/21, 07:41] மீ.கண்ணண்.: ஏலாதி

[5/21, 07:45] Dr. Ramakrishna Easwaran: Poetic, literary clue!!👏👏👏

[5/21, 07:58] nagarajan: *ஏலாதி*

[5/21, 08:13] மாலதி: ஏலாதி
T
[5/21, 08:22] கு.கனகசபாபதி, மும்பை: ஏலாதி

[5/21, 08:55] Bharathi: *ஏலாதி*
[
[5/21, 08:55] Viji - Kovai: ஏலாதி

[5/21, 09:20] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏ஏலாதி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/21, 10:06] Usha Chennai: ஏலாதி
[
[5/21, 11:05] வானதி: *ஏலாதி*

[5/21, 11:32] G Venkataraman: ஏலாதி
[
[5/21, 12:41] balagopal: ஏலாதி.

[5/21, 13:03] shanthi narayanan: ஏலாதி

[5/21, 14:00] ஆர்.பத்மா: ஏலாதி

[5/21, 14:05] N T Nathan: ஏலாதி

[5/21, 18:51] sankara subramaiam: ஏலாதி

[5/21, 20:00] Revathi Natraj: ஏலாதி

[5/21, 20:46] akila sridharan: ஏலாதி
*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 22-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
ஒன்றில் சிறு பகுதி, விழுந்தால் பற்றாக்குறை (3)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************

Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 22-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*துண்டு* , 
பெயர்ச்சொல்.

கூறு

உடலைத் துடைக்கப் பயன்படும் துணி

கையொப்பச் சீட்டு

பாக்கி

இழப்பு

கூறு(பகுதி)

புகையிலைக்கட்டு

வெற்றிலைக்கட்டு

மொத்த விளைவில் நிலக்கிழாருக்குரிய பகுதி

தனியானது
***********************
_ஒன்றில் சிறு பகுதி, விழுந்தால் பற்றாக்குறை (3)_

_ஒன்றில் சிறு பகுதி_
= _முழு பகுதியில் சிறு பகுதி_
= *துண்டு*

_விழுந்தால் பற்றாக்குறை_
= *துண்டு* (விழுந்தால் பற்றாக்குறை)
************************
*துண்டுப் பிரசுரம்*

துண்டுப் பிரசுரம் என்பது ஒரு குறிப்பிட்ட தகவல்களை சுருக்கமாக விளக்கி, மேலதிக தகவல்களுக்கான மூலங்களையும் சுட்டி வழங்கப்படும் ஒரு தகவல் வெளியீடு ஆகும். பொதுவாக ஒரு தாளில் இரண்டு பக்கமும் அச்சடிக்கப்பட்டு, மடித்து வழங்கப்படும். இது ஒரு அடிப்படை பரப்புரை கருவி ஆகும். இது ஒவ்வொரு தனிமனிதனையும் இலக்கு வைத்து செய்தியைப் பரப்புவதற்கான வழியாகும். தற்காலத்தில் துண்டுப் பிரசுரங்கள் நாளிதழ்கள் வினியோகிக்கப்படும் போது அதன் மடிப்பினூடே வைத்தும் வினியோகிக்கப்படுகின்றன. அரசு, அரசியல் கட்சிகள், அரசு சாரா அமைப்புகள் தங்களது கருத்துகளை மக்களிடத்தில் நேரடியாகச் சேர்ப்பதற்கு இதைக் கையாளுகின்றனர். வணிகர்கள் தங்களது உறபத்திப் பொருளை சந்தைப்படுத்த விளம்பரங்கள் அச்சடித்து துண்டுப் பிரசுரமாகவும் வினியோகம் செய்கிறனர்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/22, 07:08] திரைக்கதம்பம் Ramarao: துண்டு

[5/22, 07:10] stat senthil: துண்டு

[5/22, 07:11] Dr. Ramakrishna Easwaran: *துண்டு*

[5/22, 07:16] மீ.கண்ணண்.: துண்டு

[5/22, 07:17] பாலூ மீ.: துண்டு

[5/22, 07:25] akila sridharan: துண்டு

[5/22, 07:25] Meenakshi: விடை:துண்டு

[5/22, 07:48] Ramki Krishnan: துண்டு

[5/22, 07:51] ஆர். நாராயணன்.: துண்டு

[5/22, 08:01] nagarajan: *துண்டு*

[5/22, 08:02] siddhan subramanian: துண்டு

[5/22, 08:34] A D வேதாந்தம்: விடை=துண்டு(வேதாந்தம்)

[5/22, 09:02] மாலதி: துண்டு

[5/22, 09:07] கு.கனகசபாபதி, மும்பை: துண்டு

[5/22, 10:28] வானதி: *துண்டு*

[5/22, 17:33] Dhayanandan: *துண்டு*

[5/22, 18:26] Viji - Kovai: குன்று
[
[5/22, 19:40] V N Krishnan.: துண்டு

[5/22, 19:40] N T Nathan: துண்டு

[5/22, 20:13] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏துண்டு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[5/22, 20:25] Revathi Natraj: துண்டு

[5/22, 22:18] prasath venugopal: துண்டு

[5/22, 22:19] sankara subramaiam: துண்டு

[5/22, 22:19] G Venkataraman: துண்டு

[5/22, 22:20] Rohini Ramachandran: துண்டு

[5/22, 22:20] Bhanu Sridhar: துண்டு

[5/22, 22:23] Usha Chennai: துண்டு
[
[5/22, 22:25] sridharan: துண்டு

[5/22, 22:43] பானுமதி: துண்டு

[5/22, 23:01] sathish: துண்டு

[5/22, 23:42] Venkat: துண்டு 🙏🏾

*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 24-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************

அம்பில் வைத்த தமிழ் முக்தி கடலினும் பெரிது (6)

************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 24-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அம்பு
பெயர்ச்சொல்

வில் ஏய்துவதற்கு பயனாகும் பகுதி.பயன்பாடு
நீர்பயன்பாடு
அம்பு = அப்பு, எந்தப் பொருளோடும் அப்பிக்கொள்வது, அதனை வடசொல் என்பது தகாது.
மூங்கில்பயன்பாடு
திப்பிலி
அத்திரம்
கணை
சரம்
பாணம்
வாளி
அஸ்த்திரம்
***********************
இராமாயணம் - அங்கதன் தூது - அம்பு விடு தூது 

போருக்கு முன் தூது விடுவோம் என்று இராமன் சொன்ன பின், அவனுடன் இருந்தவர்கள் அவர்கள் எண்ணத்தை கூறுகிறார்கள்.

வீடணன் "அது மிக அழகானது"  என்றான்.

சுக்ரீவன் "அரசர்களுக்கு ஏற்றது" என்றான்

இலக்குவன் "அவனிடம் அனுப்ப வேண்டியது சொல் அல்ல, அம்புகள்" என்றான்.

பாடல்
அரக்கர் கோன் அதனைக் கேட்டான், 'அழகிற்றே 
ஆகும்' என்றான்;

குரக்கினத்து இறைவன் நின்றான், 'கொற்றவர்க்கு
உற்றது' என்றான்;

'இரக்கமது இழுக்கம்' என்றான், இளையவன்; 'இனி,
நாம் அம்பு

துரக்குவது அல்லால், வேறு ஓர் சொல் உண்டோ?
என்னச் சொன்னான்.

************************
அம்பில் வைத்த தமிழ் முக்தி கடலினும் பெரிது (6)

அம்பு = சரம்

தமிழ் முக்தி = முத்தி

கடலினும் பெரிது
= சரம் + முத்தி
= சமுத்திரம்
************************
முக்தி:

முக்தி என்ற சொல்லை எடுத்துக்கொண்டால், அது முத்தி என்ற தமிழ்ச் சொல்லில் இருந்து உருவான சமஸ்கிருதச் சொல்லே ஆகும்.

முழுமையான வடிவமும் வலிமையும் கொண்டதே முத்து எனப்படும். அதைப்போல, ஒருவர் தனது இறைபத்தியில் முழுமையும் வலிமையும் பெற்றுவிட்டால் அதைப்பார்த்து, “அவருக்குப் பத்தி முத்தி விட்டது” என்று கூறுவதும் வழக்கமே. இவ்வாறு முழுமை / முதிர்ச்சி அடைந்த நிலையே முத்தி எனப்படும்.
************************!
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/24, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சமுத்திரம்

[5/24, 07:11] பாலூ மீ.: முத்தி+சரம் விடை சமுத்திரம்

[5/24, 07:13] மாலதி: சமுத்திரம்
[
[5/24, 07:14] Ramki Krishnan: சமுத்திரம்

[5/24, 07:15] stat senthil: சரம்+முத்தி = சமுத்திரம்
[
[5/24, 07:15] மீ.கண்ணண்.: சமுத்திரம்

[5/24, 07:17] Meenakshi: விடை:சமுத்திரம்
சரம்+முத்தி
[
[5/24, 07:31] sridharan: சமுத்திரம்
[
[5/24, 07:33] Dhayanandan: *சமுத்திரம்*
[
[5/24, 07:37] chithanandam: சமுத்திரம்
[
[5/24, 07:49] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏சமுத்திரம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்,

[5/24, 07:51] ஆர். நாராயணன்.: சமுத்திரம்

[5/24, 07:53] Dr. Ramakrishna Easwaran: *சமுத்திரம்*
அம்பு= சரம்
முக்தி= முத்தி
[
[5/24, 08:01] nagarajan: *சமுத்திரம்*

[5/24, 08:15] கு.கனகசபாபதி, மும்பை: சமுத்திரம்

[5/24, 08:26] siddhan subramanian: சமுத்திரம் (சரம் + முத்தி)

[5/24, 09:33] Bhanu Sridhar: சமுத்திரம்
[
[5/24, 09:56] Revathi Natraj: சமுத்திரம்
[
[5/24, 12:12] ஆர்.பத்மா: சமுத்திரம்

[5/24, 13:41] வானதி: *சமுத்திரம்*
[
[5/24, 19:25] Viji - Kovai: அமிழ்தினும்
[
[5/24, 19:26] sathish: சமுத்திரம்
[
[5/24, 19:28] balagopal: அம்பு.சரம்
தமிழில் வைத்த முக்தி.முத்தி
சரம்+ முத்தி .சமுத்திரம்

[5/24, 19:32] N T Nathan: சமுத்திரம்


*******************************l

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்