இன்று காலை வெளியான வெடி:
பரப்பிய ஒரு தானியத்தின் இடையே பத்தடி வைத்துக் கட்டிய நூல் (5)
அதற்கான விடை: புத்தகம் = கம்பு + (ப)த்த(டி)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
பரப்பிய ஒரு தானியத்தின் இடையே பத்தடி வைத்துக் கட்டிய நூல் (5)
அதற்கான விடை: புத்தகம் = கம்பு + (ப)த்த(டி)
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.
Comments
*************************
*நான் இன்னும் வாசிக்காத நல்ல புத்தகம் ஒன்றை வாங்கி வந்து என்னைச் சந்திப்பவனே என் தலைசிறந்த நண்பன்.*
_-ஆபிரகாம் லிங்கன்_
******
_ஆயிரம் புத்தகங்களை வாசித்தவன் ஒருவன் இருந்தால் அவனைக் காட்டுங்கள்; அவனே எனது வழிகாட்டி!_
– *ஜூலியஸ் சீசர்*
******
*ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஊரில் ஒரு சிறைச்சாலை மூடப்படும். –*
_விவேகானந்தர்._
********
_வேறு எந்த சுதந்திரமும் வேண்டாம். சிறையில் புத்தக வாசிப்பை மட்டும் அனுமதிக்க வேண்டும். –_
*நெல்சன் மண்டேலா.*
*************************
_பரப்பிய ஒரு தானியத்தின் இடையே பத்தடி வைத்துக் கட்டிய நூல் (5)_
_ஒரு தானியம்_
= *கம்பு*
_இடையே பத்தடி_
= *[ப]த்த[டி] = த்த*
_பரப்பிய ஒரு தானியத்தின்_
= *கம்பு --->புகம்*
_இடையே பத்தடி வைத்துக் கட்டிய_ = *த்த* inside *புகம்*
= *புத்தகம்*
= _நூல்_
*************************l
*வாசிப்பை நேசிப்போம்*
உலகின் மிகச்சிறந்த அறிஞர்களுள் ஒருவரான *மாஜினி* ,''என்னை கடல் கடந்து கூட அனுப்பிவிடுங்கள்; ஆனால் கையில் எனக்கு பிடித்த புத்தகங்களை கொடுத்துவிடுங்கள்,'' என்றார்.வறுமையின் கோரப்பிடியில் சிக்கினாலும் வாசிப்பதை நிறுத்தாதவர் *காரல் மார்க்ஸ்.* லண்டன் நூலகத்தில் இவர் படிப்பார். பசி அதிகமாகி மயக்கமடைந்து விழுவார். முகத்தில் தண்ணீர் தெளித்து எழுப்பிவிடுவர். எழுந்ததும் உணவைக்கூட பார்க்காமல் மீண்டும் படிப்பார். அப்படி உருவானதே 'மூலதனம்' (தி கேப்பிடல்) எனும் அழியாத நூல்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த *உ.வே.சாமிநாத அய்யர்* பழந்தமிழ் பாட்டுகளையும், சுவடிகளையும் தேடித் தேடி கண்டுபிடித்து படித்தவர். முன்னாள் முதல்வர் *அண்ணாதுரையும்,* இளமையில் முதல் ஆளாக நூலகம் சென்று கடைசி ஆளாக திரும்பியவர்.வாசித்து வாசித்தே அறிஞரானவர் அவர்.
*************
இரண்டாம் உலகப் போரின்போது போரைப் பார்வையிடச் சென்ற இந்தாலிய அதிபர் *முசோலினி* கையில் குண்டு பட்டு காயம் ஏற்பட்டது. உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஆனால் மயக்க மருந்து இல்லை. அந்த இக்கட்டான சூழ்நிலையில் முசோலினி, ''நீங்கள் ஏன் தயங்குகிறீர்கள். என்னிடம் ஒரு புத்தகம் உள்ளது. நான் அதை வாசிக்கிறேன். நீங்கள் சிகிச்சையை துவக்குங்கள்; வாசிக்கும் போது எனக்கு வலி தெரியாது,'' என்றாராம்.
*******
*பகத்சிங்கை* தூக்கிலிட காவலர்கள் அழைக்க சென்ற போது, லெனின் எழுதிய 'அரசும் புரட்சியும்' என்ற நூலை படித்துக் கொண்டிருந்தாராம். ''கொஞ்சம் நேரம் கொடுத்தால் இதை முடித்துவிடுவேன்,'' என்று கூறி ஆச்சரியப் படுத்தினாராம்.
(dinamalar.com)
************************
💐🙏🏼💐
*இன்றைய உதிரிவெடி!*( 31-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
உயர்ந்தோங்க பவளக்கரம் தாள் கிழித்தது (3)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 31-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
_காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்_
_வாழ்வில் வசந்தம் தேடி வரும் ஓடி வரும்_
_தென்றல் வரும் பூங்கொடிகள் ஆடி வரும் _
_கவிதையின் போல் உந்தன் நடையிலே_
_பச்சைக் கிளியினைப் போல் உந்தன் குரலிலே_
_எண்ணங்கள் மயங்க மயங்க மயங்க_
*_இன்பங்கள் வளர வளர வளர_*
_காதல் வந்ததம்மா ஜோடி நீ சின்ன ராணி_
_காதல் தீபம் ஒன்று நெஞ்சிலே ஏற்றி வைத்தேன்_
( *கல்யாணராமன்* : 1979)
************************
_உயர்ந்தோங்க பவளக்கரம் தாள் கிழித்தது (3)_
_தாள்_ = *பக்கம்*
_கிழித்தது_ = _deletion indicator to remove_ *பக்கம்* _from_ _பவளக்கரம்_
= _பவளக்கரம் - பக்கம்_
= *வளர*
= _உயர்ந்தோங்க_
************************
*குழந்தைகள் நன்றாக வளர*
வளரும் வயதில் குழந்தைக்கு எந்தக் குறிப்பிட்ட நோக்கமும் தேவையில்லை. அதிலும் குறிப்பாக, அவர்களுக்கு பெற்றோரின் மீது கவனம் இருக்கத் தேவையில்லை. அவர்கள் இயல்பாக *வளர* வேண்டும். வளர்ச்சி என்பது உடலைப் பொறுத்தது மட்டுமல்ல. கட்டாயம் இன்றி, ஏதொன்றும் வலுக்கட்டாயமாக அவர்கள் மீது திணிக்கப் படாமல் அவர்கள் *வளர* வேண்டும். நீ நல்லவனாக *வளர* வேண்டும். தப்பான வழிகளில் போகாதே, போகாதே என்று சொல்லத் தேவையில்லை. நல்லவனாக *வளர* வேண்டும் என்று அறிவுறுத்துவதால் மட்டுமே அவர்கள் அப்படி வளர்ந்து விட முடியாது.
வளரும் குழந்தைகளுக்கு டாக்டராக வேண்டும், இன்ஜினியராக வேண்டும் என்றெல்லாம் ஐந்து வயதிலிருந்தே கனவு இருக்கத் தேவையில்லை. அவர்களுக்குத் தங்கள் வளர்ச்சி பற்றி கவனம் இருந்தால் போதும்.
************************
💐🙏🏼💐
*****************************
[5/31, 07:00] *stat senthil:* *வளர*
[5/31, 07:00] திரைக்கதம்பம் Ramarao: வளர
[
[5/31, 07:02] V N Krishnan.: வளர
[5/31, 07:03] வீ.ஆர். பாலகிருஷ்ணன்: 🙏வளர🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[5/31, 07:07] Meenakshi: விடை:வளர
[5/31, 07:07] Dr. Ramakrishna Easwaran: *வளர*
பவளக்கரம் minus பக்கம் (தாள்)
[5/31, 07:08] A Balasubramanian: வளர
A.Balasubramanian
[5/31, 07:12] பாலூ மீ.: வளர
[5/31, 07:13] மீ.கண்ணண்.: வளர
[
[5/31, 07:29] chithanandam: வளர
[5/31, 07:40] மாலதி: வளர
[5/31, 07:40] akila sridharan: வளர
[5/31, 07:54] Bhanu Sridhar: வளர
[5/31, 08:01] nagarajan: *வளர*
[5/31, 08:03] prasath venugopal: வளர
[
[5/31, 08:56] Bharathi: *வளர*
[5/31, 09:24] ஆர். நாராயணன்.: வளர
[5/31, 10:21] G Venkataraman: வளர
[
[5/31, 10:55] வானதி: *வளர*
[5/31, 12:17] shanthi narayanan: வளர
[5/31, 13:03] கு.கனகசபாபதி, மும்பை: வளர
[
[5/31, 14:16] ஆர்.பத்மா: வளர
[5/31, 14:59] Dhayanandan: *வளர*
[5/31, 19:26] Viji - Kovai: வளர
[5/31, 19:31] sathish: வளர
[
[5/31, 19:58] Ramki Krishnan: வளர (பவளக்கரம் - பக்கம்)
[5/31, 21:52] sankara subramaiam: வளர
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
உறையிலிருந்து எடுக்க முனையுடைந்த கம்பி அணி (5)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 01-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*உருவகம்*
உருவகம் என்பது ஒரு இலக்கிய நுட்பமாகும்.
உருவகம் என்ற சொல்லைப் பொதுவாக ஆங்கிலத்தில் Metaphor என்ற சொல்லின் மொழிபெயர்ப்பாகத் தமிழில் பயன்படுத்துதல் வழக்கம்.
உவமையாக உள்ள பொருளுக்கும் உவமிக்கப்படும் பொருளுக்கும் வேறுபாடு தோன்றாமல் இரண்டும் ஒன்று என்ற உணர்வு தோன்ற இரண்டையும் ஒற்றுமைப்படுத்துவது.
இதனை,
_உவமையும் பொருளும் வேற்றுமை ஒழிவித்து ஒன்று என_
_மாட்டின் அஃது உருவகம் ஆகும்_
(தண்டி. 35)
என்ற நூற்பாவால் அறியலாம்.
மலர்போன்ற கண், மலர்க்கண் - *உவமை*
கண் ஆகிய மலர், கண்மலர் - *உருவகம்*
மலர் போன்ற கண் என்ற உவமையில் மலரும் கண்ணும்வேறு வேறு எனும் உணர்வு தோன்றுவதையும், கண் ஆகியமலர் என்ற உருவகத்தில் கண்ணே மலர், கண்ணும் மலரும்வேறுவேறல்ல என்னும் உணர்வு தோன்றுவதையும் நீங்கள்காணலாம்.
_உருவகங்கள் நம் பேச்சை வளப்படுத்துகின்றன, மேலும் எதையாவது வெளிப்படையாக விவரிக்க அனுமதிக்கின்றன._ .
**********************
_உறையிலிருந்து எடுக்க முனையுடைந்த கம்பி அணி (5)_
_உறையிலிருந்து எடுக்க_
= *உருவ*
_முனையுடைந்த கம்பி_
= *கம்[பி] = கம்*
_அணி_
= *உருவ+கம்*
= *உருவகம்*
************************
_*திருக்குறளில் உருவகம்*_
*கடல்:* அளவற்று, மிகப்பெரியதாகவும், சிறியதாகவும் விளங்கும் பொருளைக் கூறுமிடத்து கடல் உருவகம் பொருத்தமாகப் பல குறட்பாக்களில் தோன்றுகிறது.
_கடவுள் அறவாழி. பயன் பாராது செய்த உதவி கடலிற்பெரிது. கடலலைகள் பேராரவாரத்துடன் கணத்திற்குக் கணம் மாறி மாறி வருகின்றன._
_ஊழிக்காலத்தில் அக்கடல் பொங்கியெழுந்து உலகனைத்தையும் அழித்து விடுமென்றும் சொல்வது மரபு. ._
இதை மனத்திற்கொண்ட திருவள்ளுவர்,
_‘‘ஊழி பெயரினும் தாம்பெயரார் சான்றாண்மைக்கு_
_ஆழி எனப்படு வார்’’_ (989)
என்கிறார்.
இங்கு நற்குணம், அளவற்றுப் பெருகி ஆரவாரமற்று, ஊழிக்காலத்திலும் தன்னிலை மாறாது நிற்கும்
_கற்பனைக் கடலை, *உருவகத்தின்* மூலம் நம் கண்முன்னே நிறுத்துகிறார் கவிஞர்._
ஊழி பெயரினும்' என்ற தொடர் உலகு நிலைமாறினாலும் என்ற பொருள் தரும்.
*சான்றாண்மைக்குக் கடல் என்று* கூறப்படுபவர்கள்
பேரிடர் காலத்தில் உலகம் நிலைமாறினாலும் தாம் நற்குணங்களிலிருந்து பிறழார் என்பது இக்குறட்கருத்து.
***********************
💐🙏🏼💐
*****************************
[6/1, 07:01] திரைக்கதம்பம் Ramarao: உருவகம்
[6/1, 07:01] stat senthil: உருவகம்
[6/1, 07:15] Bhanu Sridhar: உருவகம்?
[6/1, 07:17] ஆர்.பத்மா: உருவகம்
[6/1, 07:17] மீ.கண்ணண்.: உருவகம்
[6/1, 07:18] Meenakshi: விடை:உருவகம்
[6/1, 07:21] வானதி: *உருவகம்*
[6/1, 07:21] Venkat: உருவகம் 🙏🏾
[6/1, 07:21] Dr. Ramakrishna Easwaran: *உருவகம்*
உருவ+கம் ~பி~
[6/1, 07:23] G Venkataraman: உருவகம்
[
[6/1, 07:26] பாலூ மீ.: உருவ+கம்(பி)
விடை உருவகம்
[6/1, 07:43] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏உருவகம்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/1, 08:01] nagarajan: *உருவகம்*
[
[6/1, 09:22] siddhan subramanian: உருவகம்
[6/1, 09:47] Dhayanandan: *உருவகம்*
[6/1, 09:51] ஆர். நாராயணன்.: உருவகம்
[6/1, 13:57] shanthi narayanan: உருவகம்
[6/1, 15:23] *joseph amirtharaj:*
*இன்றைய உதிரிவெடி:*
*உருவகம்*
[6/1, 19:29] sathish: உருவகம்
[6/1, 19:41] Bharathi: உருவகம்
[6/1, 20:00] Ramki Krishnan: உருவகம்
[6/1, 20:15] akila sridharan: உருவகம்
[6/1, 20:19] N T Nathan: உருவகம்
[6/1, 20:26] கு.கனகசபாபதி, மும்பை: உருவகம்
[6/1, 22:37] sankara subramaiam: உருவகம்
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
தனி மூலை தலை சீவிப் படிய வாரினால் மார்கழிப் புல்லை விவரிக்கலாம் (2, 3)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 02-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*பனி மூடிய* காலை,
மனம் மயக்கும் நல் வேளை,
நீர் வற்றிய குட்டை,
பசுமை போர்த்திய சோளத் தட்டை,
துயில் கலைக்கும் சூரியன்,
தூங்கச் செல்லும் சந்திரன்,
பேருந்தில் ஜன்னலோர இருக்கை,
இவை யாவற்றையும் இரசிக்கமுடியாமல்,
*எனது கையில் smart phone!!*
(Devika Dhanapal)
************************
_தனி மூலை தலை சீவிப் படிய வாரினால் மார்கழிப் புல்லை விவரிக்கலாம் (2, 3)_
_தலை சீவி_ = _indicator to denote deletion of தலை in தனி மூலை_
= *னிமூ*
_வாரினால்_ = _Anagram indicator for படிய+னிமூ_
= *பனி மூடிய*
= _மார்கழிப் புல்லை விவரிக்கலாம்_
************************
சிற்றிலக்கியங்களில் குறிப்பிடத்தக்கது முத்தொள்ளாயிரம். இதன் பாடல்கள் சங்கஇலக்கியப் பாடல்களுடன் ஒப்புநோக்கத்தக்கனவாகத் திகழ்வது இதன் சிறப்புகளுள் ஒன்றாகும்.
*சுவைமிகு சிற்றிலக்கியப் பாடல் ஒன்று....*
சேரனின்மேல் தீராத காதல் கொண்ட பெண்ஒருத்தி சேரனைக் காணத்துடிக்கிறாள்.அதனால் இவள் தன் நெஞ்சையே தூதாக அனுப்புகிறாள்.
ஆனால், அவனைத் தேடிச் சென்ற நெஞ்சு, அவளிடம் திரும்பவில்லை. ஏன் ? என்றும் அவளுக்குப் புரியவில்லை !
'குளிர் வாட்டும் மார்கழி மாதம், ஊரெங்கும் பனி பெய்துகொண்டிருக்கிறது - இந்த நிலைமையில், என் காதலன் சேரன் கோதையைக் காணச் சென்ற என் நெஞ்சம், அங்கே எப்படிப் பாடுபடுகிறதோ, தெரியவில்லையே !', என்று மனம் கலங்கி நிற்கிறாள்.
ஆனால் தன் நெஞ்சமோ, சேரனைப் பார்க்காமல், அங்கிருந்து திரும்புவதில்லை என்கிற உறுதியோடு, குளிர் தாங்காமல், தன் கைகளையே போர்வையாய்ப் போர்த்திக்கொண்டு, அவனுடைய அரண்மனை வாசலில் பரிதவித்து நிற்கிறது !', என்கிறாள் அவள் !
இப்பாடலில் தலைவி தன் உடல் வேறு நெஞ்சம் வேறு என்று எண்ணிக் கொள்வது காதலின் ஆழத்தையும், கவிதையின் சுவையையும் கூட்டுவதாகவுள்ளது.
பாடல் இதோ..
_கடும்பனித்திங்கள் தன்கைபோர்வை ஆக,_
_நெடுங்கடை நின்றதுகொல்_
_தோழி நெடுஞ்சினவேல்_
_ஆய்மணிப் பைம்பூண் அலங்குதார்க் கோதையைக்_
_காணிய சென்றஎன் நெஞ்சு._
(பாடல்-17)
************************
💐🙏🏼💐
*****************************
[6/2, 07:01] திரைக்கதம்பம் Ramarao: பனி மூடிய
[6/2, 07:05] sathish: பனி மூடிய
[6/2, 07:10] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏பனி மூடிய🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/2, 07:10] மீ.கண்ணண்.: பனி மூடிய
[6/2, 07:10] Bhanu Sridhar: பனி தலை
கனைத்து இளங்கன்று பாசுரம்
[6/2, 07:12] பாலூ மீ.: பனி மூடிய.
[6/2, 07:15] stat senthil: பனி மூடிய
[6/2, 07:21] Meenakshi: விடை: பனி மூடிய
[6/2, 07:30] Rohini Ramachandran: பனி மூடிய
[
[6/2, 07:33] akila sridharan: பனி மூடிய
[6/2, 07:33] Venkat: பனி மூடிய 🙏🏾
[6/2, 07:36] மாலதி: பனி மூடிய
[6/2, 08:00] nagarajan: *பனி மூடிய*
[
[6/2, 08:09] Ramki Krishnan: பனி மூடிய
[6/2, 08:10] siddhan subramanian: பனி மூடிய
[6/2, 08:16] G Venkataraman: பனி மூடிய
[6/2, 08:26] Dr. Ramakrishna Easwaran: *பனி மூடிய*
[6/2, 08:39] Viji - Kovai: பனி மூடிய
[6/2, 08:42] ஆர். நாராயணன்.: பனி மூடிய
[6/2, 09:36] கு.கனகசபாபதி, மும்பை: பனி மூடிய
[
[6/2, 12:05] A Balasubramanian: பனி மூடிய
A.Balasubramanian
[6/2, 19:17] shanthi narayanan: பனிமூடிய
[6/2, 19:59] Revathi Natraj:
பனி மூடிய
[6/2, 22:22] sankara subramaiam: பனி மூடிய
[
[6/2, 22:40] Bharathi: பனி மூடிய
[6/2, 22:50] joseph amirtharaj: பனி மூடிய
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
அணைந்த தீனி யாருமே குழம்பும்படியான நாடு (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 03-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*நால்வர் துதி*
----------------------------
_பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி!_
_ஆழிமிசைக் கல்மிதப்பில் *அணைந்த* பிரான் அடிபோற்றி!_
_வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி!_
_ஊழிமலி திருவாத வூரர் திருத்தாள் போற்றி!_
----------------------------
இப்பாடலில், ஒவ்வொரு அடியும், சைவக்குரவர்களில், ஒவ்வொருவரைக் குறிக்கும். சைவத் திருமுறைகளைப் பாடத்துவங்குமுன், சைவக்குரவர், நால்வரையும், வாழ்த்துவது மரபாகும்.
1. பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல் போற்றி
இந்த அடி, சம்பந்த பெருமானைக் குறிப்பதாகும்.
பூமியை ஆளுகிற அரசன், (கூன் பாண்டியனின்), வெப்பு நோய் தீர்த்த, சம்பந்தரின் (சரண் புகுபவர்களின் காவலனின்), கழலடிகளைப் போற்றுவோம்.
2. ஆழிமிசைக் கல்மிதப்பில் அணைந்த பிரான் அடிபோற்றி
இந்த அடி அப்பர் பெருமானைக்குறிப்பதாகும்.
"கற்றுணைப் பூட்டி ஓர், கடலில், பாய்ச்சினும், நற்றுணையாவது நமசிவாயவே.." என்று உலகுக்கு விளங்க வைத்த திருநாவுக்கரசர் அடிகளைப் போற்றுவோம்.
3. வாழிதிரு நாவலூர் வன்தொண்டர் பதம் போற்றி
திருநாவலூரில் பிறந்த சுந்தரரின், (வன் தொண்டரின்), பாதங்களைப் போற்றுவோம்.
இறைவனைப் பாடும் போது, வசை மொழிகளால், (பித்தா!) எனப் பாடியதால், வன் தொண்டர், என்ற பெயரும், சுந்தரருக்கு உண்டு.
4. ஊழிமலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி
உலகம், உய்ய, தம், அன்பால், இறைவனைச் சிக்கெனப்பிடித்த, திருவாதவூரில் பிறந்த மாணிக்க வாசகரின், திருவடிகளைப் போற்றுவோம்.
************************
_அணைந்த தீனி யாருமே குழம்பும்படியான நாடு (4)_
_அணைந்த தீனி யாருமே_
= _தீனி யாருமே வில் அணைந்த தீ_
= _தீனி யாருமே- தீ_
= *னியாருமே*
_குழம்பும்படியான_
= _Anagram indicator for_ *னியாருமே*
= *ருமேனியா*
= _(ஒரு)நாடு_
************************
*ருமேனியா* அல்லது உருமானியா என்னும் நாடு தென்கிழக்கு ஐரோப்பாவில் கருங்கடலில் குறுகிய கடற்கரையுடன் ஒரு குடியரசு.
***********
தற்காலத்து ருமேனியாவில் *"எலும்புகளுடன் கூடிய குகை"* என்ற இடத்தில்தான் ஐரோப்பாவில் மிகவும் பழைமையான மனிதனின் அழிபாட்டு சின்னங்களை கண்டெடுத்தார்கள்.இந்த அழிபாட்டு சின்னங்கள் சுமார் 42000 வருடங்கள் பழமையானவை.
************************ *புக்கரெஸ்ட்* ருமேனியாவின் தலைநகரம், மற்றும் ருமேனியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும்.
************************
💐🙏🏼💐
*****************************
[6/3, 07:01] திரைக்கதம்பம் Ramarao: ருமேனியா
[6/3, 07:03] sathish: ரூமேனியா
[6/3, 07:07] Meenakshi: விடை:ருமேனியா
[6/3, 07:08] மீ.கண்ணண்.: ருமேனியா
[6/3, 07:09] Bhanu Sridhar: ருமேனியா
[6/3, 07:11] ஆர்.பத்மா: ருமேனியா
[6/3, 07:11] A Balasubramanian: ருமேனியா
A.Balasubramanian
[6/3, 07:12] V N Krishnan.: ருமேனியா!
[
[6/3, 07:13] Rohini Ramachandran: ருமேனியா
[6/3, 07:17] chithanandam: ருமேனியா
[
[6/3, 07:23] G Venkataraman: ருமேனியா
[6/3, 07:26] akila sridharan: ருமேனியா
[6/3, 07:28] sridharan: ருமேனியா
[
[6/3, 07:29] *Dr. Ramakrishna Easwaran:* *ருமேனியா*
*அணைந்த - very novel deletion indicator for தீ!!*
[
[6/3, 07:28] sridharan: ருமேனியா
[6/3, 07:32] Ramki Krishnan: ருமேனியா
[
[6/3, 07:35] stat senthil: ருமேனியா
[6/3, 07:45] Dhayanandan: *ருமேனியா*
[6/3, 08:02] siddhan subramanian: ருமேனியா (தீனி யாருமே - தீ)
[6/3, 08:03] மாலதி: ருமேனியா
[
[6/3, 08:08] nagarajan: *ருமேனியா*
[
[6/3, 08:12] பானுமதி: ருமேனியா
[
[6/3, 07:08] பாலூ மீ.: ருமேனியா.
[
[6/3, 09:16] ஆர். நாராயணன்.: ருமேனியா
[6/3, 10:24] joseph amirtharaj: ருமேனியா
[6/3, 11:11] கு.கனகசபாபதி, மும்பை: ருமேனியா
[
[6/3, 12:47] prasath venugopal: ருமேனியா
[6/3, 19:59] sankara subramaiam: ருமேனியா
[6/3, 20:12] N T Nathan: ருமேனியா
[6/3, 20:14] Revathi Natraj: ருமேனியா
[
[6/3, 20:41] Viji - Kovai: ருமேனியா
[6/3, 22:56] Bharathi: ருமேனியா
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 04-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
வழங்குவதால் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்ந்ததல்ல (6)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 04-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*தரக்குறைவு*
பொருள்:
தரத்தில் குறைவாக இருத்தல்.
************************
*நினைவில் மலர்ந்த பாடல் வரிகள்!!*
************************
_தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் *தரத்தினில் குறைவதுண்டோ*_
உங்கள் அங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
அன்பு குறைவதுண்டோ
சிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும்
சீற்றம் குறைவதுண்டோ
சிந்தையும் செயலும் ஒன்று பட்டாலே
மாற்றம் காண்பதுண்டோ...
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்
தரத்தினில் குறைவதுண்டோ
(பாகப்பிரிவினை 1959)
************************
_வழங்குவதால் எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி உயர்ந்ததல்ல (6)_
_வழங்குவதால்_
= *தர* ( _தருதல்_ )
_எண்ணிக்கையில் ஏற்பட்ட வீழ்ச்சி_
= *குறைவு*
_உயர்ந்ததல்ல_
= *தர+குறைவு*
= *தரக்குறைவு*
************************
உங்கள் வாழ்க்கையில் யாரையும் தரக்குறைவாக
எடைபோடாதீர்கள் ஒருவேளை; நீங்கள் தரக்குறைவாக
நினைத்தவர்களின் கரங்கள் தான் உங்கள்
வாழ்க்கை தரத்தை உயர்த்த பயன்படும் .....
(Posted by கவிதை அலைகள்)
************************
நீ என்னை அவமான படுத்தினாலும் ,
உன் மேலும் நான் அன்பாய் இருப்பேன் ..
நீ என்னை மட்டம் தட்டினாலும் ,
உனக்கும் ,நான் மரியாதை கொடுப்பேன் ...
நீ என்னை கேலி செய்தாலும் ,
உன்னையும் நான் நேசிப்பேன் ..
*நீ என்னை தரக்குறைவாக நினைத்தாலும் ,*
*உன்னை நான் ,யாரிடத்தும் தரம் தாழ்த்தமாட்டேன்..*
நீ என்னை ஏமாற்ற நினைத்தாலும் ,
உனக்கும் நான் உண்மை உள்ளவனாக இருப்பேன் ..
நீ எனக்கு எதிராக சூழ்ச்சிகள் செய்தாலும் ,
உனக்கும், நான் பாசக்கரம் நீட்டுவேன் ..
************************
💐🙏🏼💐
*****************************
[6/4, 07:01] திரைக்கதம்பம் Ramarao: தரக்குறைவு
[6/4, 07:04] stat senthil: தரக்குறைவு
[6/4, 07:06] மீ.கண்ணண்.: தரக்குறைவு
[6/4, 07:10] Meenakshi: விடை:தரக்குறைவு
[6/4, 07:13] பாலூ மீ.: தரக்குறைவு.
[
[6/4, 07:42] sridharan: தரக்குறைவு
[6/4, 07:43] prasath venugopal: தரக்குறைவு
[6/4, 07:47] ஆர். நாராயணன்.: தரக்குறைவு
[6/4, 08:03] nagarajan: *தரக்குறைவு*
[6/4, 10:15] A Balasubramanian: தரச்சரிவு
A.Balasubramanian
[6/4, 10:24] Joseph Amirtharaj: தரக்குறைவு
[6/4, 10:25] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏தரக்குறைவு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[6/4, 13:35] கு.கனகசபாபதி, மும்பை: தரக்குறைவு
[
[6/4, 18:54] ஆர்.பத்மா: தரக்குறைவு
[6/4, 19:44] Bharathi: தரக்குறைவு
[6/4, 20:04] akila sridharan: தரக்குறைவு?
[6/4, 20:20] Revathi Natraj: தரக்குறைவு
[6/4, 20:23] Viji - Kovai: தரக்குறைவு
[6/4, 20:35] Rohini Ramachandran: தரக்குறைவு
[6/4, 20:56] Bhanu Sridhar: தரகுறைந்த
[6/4, 21:34] N T Nathan: தரக்குறைவு?
[6/4, 21:44] siddhan subramanian: தரக்குறைவு
[6/5, 03:17] Venkat: தரமிழந்த 🙏🏾
*****************************
*இன்றைய உதிரிவெடி!*( 05-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
புகுந்த வீட்டில் இருப்பவன் ஏமாற்றுக்காரனிடம் முதலில்லாமல் வட்டி கொடுத்தவன் (6)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 05-06-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*விடுகதை!*
_கந்தல் துணி *கட்டியவன்* ; முத்துப் பிள்ளைகளைப் பெற்று மகிழ்ந்தான். அது என்ன?_
......... .........
************************
*கட்டியவன்* கட்டழகை
கடைக்கண்கள் அளவெடுக்க
மெட்டியவன் பூட்டிவிட
மெல்லியலாள் முகம் சிவக்க
இவள் பாதியிவன் பாதி
என்றிணைந்திட்ட மணவாழ்வில்
இல்லறத்தின் இலக்கணமாய்
இரு மனமும் வாழியவே!
(முகநூல்)
************************
_புகுந்த வீட்டில் இருப்பவன் ஏமாற்றுக்காரனிடம் முதலில்லாமல் வட்டி கொடுத்தவன் (6)_
_ஏமாற்றுக்காரன்_
= *கயவன்*
_முதலில்லாமல் வட்டி_
= *வட்டி- வ = ட்டி*
_ஏமாற்றுக்காரனிடம் முதலில்லாமல் வட்டி கொடுத்தவன்_
= *க(ட்டி)யவன்*
= *கட்டியவன்*
_புகுந்த வீட்டில் இருப்பவன்_
= _(தாலி) *கட்டியவன்*_
************************
*கண்ணீரில் கரைந்தது காதல்*
தாலி *கட்டியவன்*
கட்டிலில்
காத்திருந்து
கைச்சொம்பு பால்
அருந்தி
மீதம் தர
ஒரு மிடறு
தொண்டைக்குழி
நனைக்க
சிறிது வழி தவறி
சுவாசக்
குழாய் புக
புரையேறியதே
தலைத் தட்டி மெல்லத்
தழுவி
மெல்லக் காதில்
சொன்னான்
உன் வீட்டார்
உன்னை
நினைத்திருப்பர்
என்றே
கண்களில் நீர்
கோர்க்க
கட்டிக் கொண்டேன்
கடவுளை
நன்றியோடு
_கரைந்து போனது என் காதல் கண்ணீரில்._
(N Sekar)
************************
_விடுகதை விடை:_
🌽 *சோளக்கதிர்* 🌽
************************
💐🙏🏼💐
*****************************
[6/5, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கட்டியவன்
[
[6/5, 07:07] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏கட்டியவன்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[6/5, 07:19] Meenakshi: விடை: கட்டியவன்
[6/5, 07:21] மீ.கண்ணண்.: கட்டியவன்
[6/5, 07:25] chithanandam: கட்டியவன்
[
[6/5, 07:33] stat senthil: கட்டியவன்
[
[6/5, 07:41] ஆர். நாராயணன்.: கட்டியவன்
[6/5, 07:42] akila sridharan: கட்டியவன்
[6/5, 07:49] sridharan: கட்டியவன்.
[6/5, 07:53] மாலதி: கட்டியவன்
[6/5, 08:04] nagarajan: *கட்டியவன்*
[
[6/5, 08:58] prasath venugopal: கட்டியவன்
[6/5, 09:46] கு.கனகசபாபதி, மும்பை: கட்டியவன்
[6/5, 10:42] joseph amirtharaj: கட்டியவன்
[
[6/5, 10:49] G Venkataraman: கட்டியவன்
[6/5, 11:38] வானதி: *கட்டியவன்*
[6/5, 13:27] ஆர்.பத்மா: கட்டியவன்
[6/5, 14:27] Dhayanandan: *கட்டியவன்*
[6/5, 20:17] Viji - Kovai: கட்டியவன்
[
[6/5, 21:27] Rohini Ramachandran: கட்டியவன்
*****************************
.