Skip to main content

விடை 4137

நேற்று காலை வெளியான வெடி:
மாலை அணிந்து பார்ப்பதற்கு மாலை மாற்றிய பின் மரத்தைக் கோத்திடு (5)
அதற்கான விடை: அருந்ததி = அந்தி + ருத
அந்தி = மாலை
ருத = தரு (மரம்)
திருமணமாகும் தம்பதியர் (மாலை அணிந்து) பார்ப்பது, அருந்ததி எனும் நட்சத்திரம்
இதற்கு அனுப்பப்பட்ட விடைகளை இங்கே காணலாம்.

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
(4137)
***********************
_மாலை அணிந்து பார்ப்பதற்கு மாலை மாற்றிய பின் மரத்தைக் கோத்திடு (5)_

மாலை = அந்தி
மரத்தை = தரு
மாற்றிய பின் மரத்தை
= தரு-->ருத
கோத்திடு
= அந்தி+ ருத
= *அருந்ததி*
(மண)மாலை அணிந்து பார்ப்பதற்கு
= *அருந்ததி*
****************************
*அருந்ததியின் கதை*
அருந்ததி என்ற சொல்லுக்கு ‘சிவந்த மாலைப் பொழுது’ என்று பொருள்.
நிஜமாகவே வானில் ‘சாயம் சந்த்யா’வின் ஒளியையே அருந்ததி நட்சத்திர ஒளியில் காணலாம்.

அருந்ததியைப் பற்றிய சுவையான வரலாறு ஒன்றை காலிகா புராணம் இவ்வாறு கூறுகிறது :-
“சந்த்யா பிரம்மாவின் புதல்வி. சப்தரிஷிகளின் சகோதரி. அவளது எல்லையற்ற அழகால் பிரம்மாவும் சப்தரிஷிகளுமே மயங்கிய காரணத்தால் அவள் தன் உடலை உகுத்து விட்டாள்.பிறகு அருந்ததியாக உருவெடுத்து வசிஷ்டரை மணம் புரிந்து கொண்டாள்.”

ஆக அழகிலும் கற்பிலும் கணவனைப் பேணுவதிலும் பெண்மையின்  லட்சியமாகவும் இலக்கணமாகவும் திகழும் அருந்ததியை பெண்கள் வழிபடுவதில் வியப்பில்லை.
***********************
💐🙏🏼💐
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 25-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
சாலையில் வழி சொல்லும் ஏசி, காசை உள்ளிறைக்கும் (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 25-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*ஊரடங்கு காதல்*

_ஊரடங்கு உத்தரவால் உடைந்து போனது என் மனம்!_ 

_ஊர்வசி உன்னை காண உண்ணாமல் ஏங்கி கிடக்கிறேன்!_ 

_கடிகார முள் போல உன்னை சுற்றும் என் நினைவு!_ 

_காந்தமில்லா *திசைகாட்டி* போல குழம்பி போனது என் இதயம்!_ 

_உணவு தேடும் பறவை போல உன்னை தேடி அலைகிறேன்!_ 

_பார்த்து பார்த்து ரசித்த நொடிகளை பட்டா போட்டு பத்திரமாக்கினேன்!_ 

_பேசாமல் போன நிமிடங்களை பேச எண்ணி காத்திருக்கிறேன்!_ 

_பதினைந்து நாளும் தவமாய் கழியும் பாதகத்தி உன்னை பார்க்காமல்!_
(சுதாவி)
************************
_சாலையில் வழி சொல்லும் ஏசி, காசை உள்ளிறைக்கும் (5)_

_ஏசி_ = *திட்டி*

_உள்ளிறைக்கும்_ = Anagram indicator to put *காசை* inside *திட்டி*
= *திசைகாட்டி*
= _சாலையில் வழி சொல்லும்_
************************
*திசைகாட்டும்* கருவி இல்லாத காலத்தில் எச்சரிக்கைகளை மீறிக் கடலில் நெடுந்துரம் பயணம் செய்தான் கொலம்பஸ்; பின்னர் அமெரிக்காவுக்குச் செல்ல வழிவகுத்தான். 
************************
*திசைகாட்டி தாவரம்*

தென் ஆப்பிரிக்க பாலைவனங்களில் காணப்படும் ஒரு தாவர இனம் பாட்சிபோடியம் நாமகுவானம் (Pachypodium Namaquanum). இந்த செடியில் நீளமான ஒரு கிளை மட்டுமே காணப்படுகிறது. மேலும் தண்டு எப்போதும் வடக்கு திசை நோக்கியே சாய்ந்து நிற்க்கும் இயல்புடையது. பாலைவனங்களில் பயணம் மேற்கொள்பவர்கள் இந்த செடியை திசைகாட்டும் கருவியாக பயன்படுத்துகின்றனர்.
************************
*நிறமாற்றங்களின் திசைகாட்டி*

மாறிப் போகிற நிறம் 
மாற்றி அமைக்கிறது 
மாற்றத்துக்கு உள்ளான காலத்தை

உணர்வலைகள் மேலெழும்பும் 
தனிமை நோக்கி நீள்கிற கடலொன்றில் 
விரிகிற நீலம் 
நிறமாவதில்லை 

மாற்றத்துக்கு உள்ளாகும் போது
மாறுகிற *திசைகாட்டி*
உன் சொல்லின் நிறம்

தூரிகை தொடங்கி வைப்பதில்லை
வளைவதற்கான வண்ணங்களை
அது மாறும்

-ரேவா
*******************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/25, 07:04] *prasath venugopal:* *திசைகாட்டி*

[5/25, 07:05] திரைக்கதம்பம் Ramarao: திசைகாட்டி

[5/25, 07:07] V N Krishnan.: திசைகாட்டி

[5/25, 07:07] Bhanu Sridhar: திசைகாட்டி

[5/25, 07:07] sridharan: திசைகாட்டி.
ஏசி=திட்டி, காசை-சைகா

[5/25, 07:10] பாலூ மீ.: ஏசுதல் திட்டுதல் விடை திசைகாட்டி.
[
[5/25, 07:12] Meenakshi: விடை:திசைகாட்டி
[
[5/25, 07:13] மீ.கண்ணண்.: திசைகாட்டி
[
[5/25, 07:23] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏திசைகாட்டி👌
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/25, 07:32] stat senthil: திசைகாட்டி

[5/25, 07:35] A Balasubramanian: திசைகாட்டி
A.Balasubramanian


[5/25, 07:43] A D வேதாந்தம்: விடை=திசைகாட்டி(வேதாந்தம்)

[5/25, 07:53] Ramki Krishnan: திசைகாட்டி

[5/25, 08:05] nagarajan: *திசைகாட்டி*

[5/25, 08:10] மாலதி: திசைகாட்டி

[5/25, 08:12] siddhan subramanian: திசைகாட்டி

[5/25, 08:30] *G Venkataraman: * *திசைகாட்டி*
*அருமையான புதிர்*

[5/25, 09:06] Dhayanandan: *திசைகாட்டி*

[5/25, 10:39] கு.கனகசபாபதி, மும்பை: திசைகாட்டி

[5/25, 11:15] ஆர்.பத்மா: திசைகாட்டி

[5/25, 12:49] chithanandam: திசைகாட்டி

[5/25, 18:04] N T Nathan: திசைகாட்டி

[5/25, 18:45] ஆர். நாராயணன்.: திசைகாட்டி

[5/25, 19:23] Dr. Ramakrishna Easwaran: திசைகாட்டி

[5/25, 20:14] Revathi Natraj: திசைகாட்டி
[
[5/25, 20:22] akila sridharan: திசைகாட்டி


*******************************l
Raghavan MK said…
**********************
*இன்றைய உதிரிவெடி!*( 26-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
துஷ்யந்தனுக்கு மறதி உண்டாக்கிய‌வர் பல் தேய்க்காதவரோ? (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 26-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
துர்வாசர் இந்து தொன்மவியலில் அத்திரி முனிவருக்கும் அனுசூயாவிற்கும் பிறந்த மாமுனிவர். உருத்திரனின் மறு அவதாரமோவென்ற அளவு முன்கோபமுடையவர். மற்ற முனிவர்களைப் போலன்றி அவர் சாபமிடும்போதெல்லாம் அவரது தவவலிமை கூடும். அவரது சாபங்களால் பாதிப்படைந்தோர் பலர்.இதனால் அவர் எங்கு சென்றாலும் மிகுந்த பயம் கலந்த மதிப்புடன் நடத்தப்பட்டார்.
காளிதாசரின் சாகுந்தலத்தில் சகுந்தலையை அவளது காதலன் துஷ்யந்தன் மறக்க சபித்தவர் இவர்.
**********************
_துஷ்யந்தனுக்கு மறதி உண்டாக்கிய‌வர் பல் தேய்க்காதவரோ? (5)_


_துஷ்யந்தனுக்கு மறதி உண்டாக்கிய‌வர்_

= *துர்வாசர்*

= _பல் தேய்க்காதவரோ *?*_
************************
_*இந்திரனை சபித்தமை*_

இந்திரன் தன் செல்வச் செழிப்பில் 
ஐராவதத்தில் வலம் வந்து கொண்டிருக்கையில்,
 இலக்குமிக்கு பூசை செய்த பிரசாதமாக ஒரு மாலையை கொண்டுவந்து கொடுத்தார் துர்வாசர். தன்னிலை மறந்து இருந்த இந்திரன் மாலையை ஐராவதத்தின் தலையில் வைத்தான். மாலையின் நறுமணத்தில் பல வண்டுகள் கவரப்பட்டு மாலையை மொய்த்தன. இதனால் எரிச்சல் அடைந்த ஐராவதம் சினமுற்று மாலையைச் சுழற்றி, காலில் உழக்கிச் சிதைத்து விட்டது. கோபம் உச்சத்துக்கேறிய *துர்வாசர்* இந்திரனை சபித்தார். *அமரர் தலைவன் ஆண்டியானான்.* 😡
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*******************************

[5/26, 07:00] திரைக்கதம்பம் Ramarao: துர்வாசர்

[5/26, 07:00] Rohini Ramachandran: துர்வாசர்
[
[5/26, 07:00] stat senthil: துர்வாசர்

[5/26, 07:01] மீ.கண்ணண்.: துர்வாசர்

[5/26, 07:01] rangarajan: Dhurvasar
[
[5/26, 07:01] Bhanu Sridhar: துர்வாசர்

[5/26, 07:03] A Balasubramanian: துர்வாசர்
A.Balasubramanian
[
[5/26, 07:08] Meenakshi: விடை:துர்வாசர்

[5/26, 07:09] G Venkataraman: துர்வாசர்
[
[5/26, 07:10] பாலூ மீ.: துர்வாசர்

[5/26, 07:12] sridharan: துர்வாசர்

[5/26, 07:19] chithanandam: துர்வாசர்

[5/26, 07:24] Dhayanandan: *துர்வாசர்*

[5/26, 07:25] கு.கனகசபாபதி, மும்பை: துர்வாசர்
[
[5/26, 07:33] Dr. Ramakrishna Easwaran: துர்வாசர்

[5/26, 07:49] akila sridharan: துர்வாசர்

[5/26, 07:56] Ramki Krishnan: துர்வாசர்
[
[5/26, 07:56] prasath venugopal: துர்வாசர்

[5/26, 07:58] nagarajan: *துர்வாசர்*

[5/26, 08:01] ஆர்.பத்மா: துர்வாசர்

[5/26, 08:12] ஆர். நாராயணன்.: துர்வாசர்

[5/26, 08:13] மாலதி: துர்வாசர்

[5/26, 08:29] வானதி: *துர்வாசர்*

[5/26, 08:39] Viji - Kovai: துர்வாசர்

[5/26, 08:40] Porchelvi: துர்வாசர்

[5/26, 08:46] siddhan subramanian: துர்வாசர்
[
[5/26, 08:53] Revathi Natraj: துர்வாசர்

[5/26, 09:22] பானுமதி: துர்வாசர்
[
[5/26, 10:33] Usha Chennai: துர்வாசர்

[5/26, 10:40] A D வேதாந்தம்: விடை= துர்வாசர்( வேதாந்தம்)

[5/26, 12:30] shanthi narayanan: துர்வாசர்

[5/26, 17:36] bala: துர்வாசர்

[5/26, 19:40] sathish: துர்வாசர்

[5/26, 19:40] sankara subramaiam: துர்வாசர்

[5/26, 20:03] Bharathi: துர்வாசரோ

[
[5/26, 20:31] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏துர்வாசர்🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/26, 21:36] Venkat: துர்வாசர் 🙏🏾

*******************************l
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 27-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
நீர்மேல் நின்றாட மிக்க தளர்ச்சியுடன் தலையிட்டான் (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 27-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
சின்னவளை முகம் சிவந்தவளை
நான் சேர்த்துக்கொள்வேன் கரம் தொட்டு
என்னவளை காதல் சொன்னவளை
நான் ஏற்றுக்கொண்டேன் வளை இட்டு
........ ......... ........ .........
மின்னும் கைவளை *மிதக்கும்* தென்றலை
அசைத்தால் அசையாதோ
அது இன்னும் கொஞ்சம் என்று பெண்ணை கெஞ்சும்
வரை சுவைத்தால் சுவைக்காதோ
(வந்தவளை..)
(படம்: புதிய பூமி)
************************
தரை மேல் பிறக்க வைத்தான் எங்களை 
தண்ணீரில் பிழைக்க வைத்தான் கரை 
மேல் இருக்க வைத்தான் பெண்களை 

கண்ணீரில் *மிதக்க* வைத்தான் 
கரை மேல் பிறக்க வைத்தான் ..........

(படகோட்டி : 1964)
************************
_நீர்மேல் நின்றாட மிக்க தளர்ச்சியுடன் தலையிட்டான் (4)_

_மிக்க_ = *மிக்க*
_தளர்ச்சியுடன் தலையிட்டான்_
= first letter in the word _தளர்ச்சியுடன்_
= *த*
_நீர்மேல் நின்றாட_
= *மிக்க+த*
= *மிதக்க*
************************
*தண்ணீரில் மிதக்கும் சிலை!*
தண்ணீரில் கல் மிதக்குமா? அதுவும் 7 கிலோ எடையுடைய சிலை மிதக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? தங்களின் நல்லது, கெட்டதை தண்ணீரில் சிலை மிதப்பதை வைத்து கிராம மக்கள் தீர்மானிக்கிறார்கள் என்றால் அதிசயமாக இருக்கிறதா? 

மத்திய பிரதேச மாநிலம் தேவாஸில் ( Dewas) இருந்து 45 கி.மீ. தொலைவில் உள்ளது ஹத்பிப்லியா ( Hatpipliya) கிராமம். இங்குள்ள கோயிலில் இருக்கும் நரசிம்மர் சிலை தான் தண்ணீரில் மிதக்கிறது. 
ஆண்டுதோரும் பாதவா ( Bhadava) மாதத்தின் 11-வது நாளில் நடைபெறும் டோல் கியாராஸ் ( Dol Gyaras) பண்டிகையின்போது, சுவாமி வழிபாட்டுக்குப்பின் நரசிம்மர் சிலை ஆற்றில் விடப்படுகிறது. அப்போது தான் விக்ரஹம் தண்ணீரில் *மிதக்கும்* அதிசயம் நடக்கிறது. 
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[
[5/27, 07:23] மீ.கண்ணண்.: மிதக்க
[
[5/27, 07:24] திரைக்கதம்பம் Ramarao: மிதக்க

[5/27, 07:25] prasath venugopal: மிதக்க

[5/27, 07:28] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏மிதக்க🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/27, 07:29] Dhayanandan: *மிதக்க*

[5/27, 07:32] V N Krishnan.: மிதக்க

[5/27, 07:36] sridharan: மிதக்க

[5/27, 07:43] பாலூ மீ.: மி தக்க

[5/27, 07:44] Dr. Ramakrishna Easwaran: *மிதக்க*

[5/27, 07:46] G Venkataraman: மிதக்க
( அபாரமாக அமைந்த சொல்லாடல் " நீர்மேல் நின்றாட" ஐயா)

[5/27, 07:47] A Balasubramanian: மிதக்க
A.Balasubramanian

[5/27, 07:48] stat senthil: மிதக்க

[5/27, 07:52] கு.கனகசபாபதி, மும்பை: மிதக்க

[5/27, 07:58] ஆர்.பத்மா: மிதக்க

[5/27, 08:01] மாலதி: மிதக்க

[5/27, 08:05] nagarajan: *மிதக்க*

[5/27, 08:12] Meenakshi: விடை:மிதக்க

[5/27, 08:31] ஆர். நாராயணன்.: மிதக்க

[5/27, 08:38] siddhan subramanian: மிதக்க (மிக்க + த)

[5/27, 08:41] akila sridharan: மிதக்க

[5/27, 08:44] Bharathi: மிதக்க

[5/27, 09:10] Revathi Natraj: மிதக்க

[5/27, 09:47] A D வேதாந்தம்: விடை= மிதக்க(வேதாந்தம்)
[
[5/27, 09:56] Ramki Krishnan: மிதக்க

[5/27, 12:18] shanthi narayanan: மிதக்க

[5/27, 17:16] N T Nathan: மிதக்க

[5/27, 17:35] Venkat: மிதக்க 🙏🏽

[5/27, 17:44] bala: மிதக்க

[5/27, 19:13] Usha Chennai: மிதக்க
[
[5/27, 19:25] sankara subramaiam: மிதக்க

[5/27, 19:48] sathish: மிதக்க

[5/28, 04:29] Bhanu Sridhar: மிதக்க

*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 28-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
தாவரப்புத்தகத்தைப் பிரிக்கும் பாத்தி (4)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 28-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*நினைவில் நிற்கும் மருதகாசியின் பாடல் வரிகள்*
***********
_ஆத்திலே தண்ணி வர அதிலொருவன் மீன் பிடிக்க_
_காத்திருந்த கொக்கு அதைக்_ 
_கவ்விக்கொண்டு போவதும் ஏன்? கண்ணம்மா_
_கண்ணம்மா அதைப் பாத்து அவன்_ _ஏங்குவதேன் சொல்லம்மா_

_*பாத்தி* கட்டி நாத்து நட்டுப் பலனெடுக்கும் நாளையிலே_
_பூத்ததெல்லாம் வேறொருவன்_ _பாத்தியமாப் போவதும் ஏன் கண்ணம்மா_
_கண்ணம்மா கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா_
_கலப்பை புடிச்சவனும் தவிப்பதும் ஏன் சொல்லம்மா_

_காத்திருக்கும் அத்தை மவன் கண்கலங்கி நிற்கையிலே_
_நேத்து வந்த ஒருவனுக்கு_ _மாத்துமாலை போடுவதேன் கண்ணம்மா கண்ணம்மா அவள்_
_நேத்திரத்தைப் பறிப்பதும் ஏன் சொல்லம்மா_

_ஏற்றத் தாழ்வும் ஏமாற்றும் இவ்வுலகில்_ _இருப்பதுதான் இத்தனைக்கும் காரணமாம்_ _கண்ணம்மா - இதை எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா_ _கண்ணம்மா எல்லோர்க்கும் நீ எடுத்து சொல்லம்மா _ _(ஆத்திலே_ )

(வண்ணக்கிளி : 1959
இசை : KV மகாதேவன்)
************************
*பாத்தி* (பெ)
தோட்டத்தில்  *வரப்புக்* கட்டிய சிறு பகுதி
************************
_தாவரப்புத்தகத்தைப் பிரிக்கும் பாத்தி (4)_

_பிரிக்கும்_ = indicator for hidden answer inside the word _தாவரப்புத்தகத்தை_

= _தா *வரப்பு* த்தகத்தை_

= *வரப்பு*
= _பாத்தி_
************************
*வரப்புயர*

குலோத்துங்க சோழ மன்னன் முடிசூட்டும் நாள். அமைச்சர்களும் பல புலவர்களும் அரசரை வாயார வாழ்த்தி பாடல்களைப் பாடி மன்னரை மகிழ்வித்து தாங்களும் மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

அப்போது ஒளவையார் மன்னனை வாழ்த்திப்பாட எழுந்தார். மன்னரும் அவையோரும் ஒளவையார் என்ன பாடப்போகிறார் என்று மிகவும் ஆவலுடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒளவையார் ‘ *வரப்புயர* ’ எனச் சொல்லி, அமர்ந்துவிட்டார்.

இதைனைக் கேட்டோர் யாருக்கும் என்னவென்று புரியவில்லை. பின்னர் ஒளவையாரே இத்தொடரைப் பின்வருமாறு விளக்கியதாகக் கூறுவர்.

*வரப்புயர நீர் உயரும்*

*நீர் உயர நெல் உயரும்*

*நெல் உயரக் குடி உயரும்*

*குடி உயரக் கோல் உயரும்*

*கோல் உயரக் கோன் உயர்வான்*

என்று பாடி மன்னனை வாழ்த்தி முடித்தார் ஒளவையார்.
மன்னரும் அவையோரும் பெரு மகிழ்ச்சியடைந்து ஒளவையாரை பாராட்டினார்கள்.


அது சரி *'வரப்புயர'* என்ற வார்த்தை மூலம் மன்னனை எப்படி வாழ்த்தினார்? இப்படித்தான்..

" *வரப்பு* உயர உயர நீர் உயருமாம்.

நீர் உயர உயர ...

நெற்பயிர்கள் வளர்ந்து

நெல் விளைச்சல் உயருமாம்.

நெல்விளைச்சல் உயர உயர ....

குடிமக்கள் வாழ்வு உயருமாம்.

குடிமக்கள் வாழ்வு உயர்ந்தால்...

நாட்டில் செங்கோல் வழுவாத நல்லாட்சி

நடக்குமாம்.

நல்லாட்சி நடந்துவிட்டால்....

நல்லாட்சி புரியும்  மன்னன் புகழ் எப்போதும்

எங்கும் உயர்ந்து  நிற்குமாம்..

ஆதலால் மன்னா !

நீர்நிலைகளைப் பெருக்கி...

நெற்களஞ்சியங்களை நிரப்பி...

குடிமக்கள் வாழ்வை வளமாக்கி...

நல்லாட்சி நடத்தி...

நற்புகழ் அடைந்திடுக!"

என்று வாழ்த்தினார்.   

         

*புதுமையான வாழ்த்தாக இருக்குதுல்ல...*    
************************
     💐🙏🏼💐        
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************

[5/28, 07:01] *ஆர். நாராயணன்.:* *வரப்பு*

[5/28, 07:01] stat senthil: வரப்பு

[5/28, 07:01] A Balasubramanian: வரப்பு
A.Balasubramanian

[5/28, 07:01] திரைக்கதம்பம் Ramarao: வரப்பு

[5/28, 07:02] V N Krishnan.: வரப்பு

[5/28, 07:03] Meenakshi: விடை:வரப்பு

[5/28, 07:04] sathish: வரப்பு
[
[5/28, 07:05] வீ.ஆர். பாலகிருஷ்ணன்:
🙏வரப்பு🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்
[
[5/28, 07:05] மீ.கண்ணண்.: வரப்பு

[5/28, 07:07] sridharan: வரப்பு
[
[5/28, 07:11] Rohini Ramachandran: வரப்பு

[5/28, 07:14] raji: பாத்தி
[
[5/28, 07:15] கு.கனகசபாபதி, மும்பை: வரப்பு

[5/28, 07:15] பாலூ மீ.: வரப்பு

[5/28, 07:23] Ramki Krishnan: வரப்பு

[5/28, 07:25] A D வேதாந்தம்: விடை= வரப்பு( வேதாந்தம்)

[5/28, 07:27] G Venkataraman: #வரப்பு

[5/28, 07:37] Dr. Ramakrishna Easwaran: *வரப்பு*

[5/28, 07:41] Usha Chennai: வரப்பு

[5/28, 07:44] ஆர்.பத்மா: வரப்பு

[5/28, 08:03] nagarajan: *வரப்பு*

[5/28, 08:05] மாலதி: வரப்பு

[5/28, 08:16] prasath venugopal: வரப்பு
[
[5/28, 09:08] Bhanu Sridhar: வரப்பு

[5/28, 09:15] வானதி: *வரப்பு*

[5/28, 09:16] N T Nathan: வரப்பு

[5/28, 10:21] Revathi Natraj: வரப்பு

[5/28, 11:03] shanthi narayanan: வரப்பு

[5/28, 15:39] Venkat: வரப்பு 🙏🏾

[5/28, 16:17] Viji - Kovai: வரப்பு

[5/28, 19:45] Siva: வரப்பு

[5/28, 20:10] பானுமதி: வரப்பு
[
[5/28, 20:22] akila sridharan: வரப்பு

[5/28, 22:48] sankara subramaiam: 👍🙏



*****************************
Raghavan MK said…
********************** 
*இன்றைய உதிரிவெடி!*( 29-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
சாட்டைத் தாக்குதலுக்குள்ளாகும் விறகுமரத்தின் வேர்ப்பாகம் ? (5)
************************
உங்கள் விடைகளை 
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும். 
நாளை காலை 06:00 மணிக்கு மேல் இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!!
*************************
Raghavan MK said…
A peek into today's riddle!
***************************
*இன்றைய உதிரிவெடி!*( 29-05-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2012* )
************************
*மகாகவி பாரதியார் நினைவு தின கவிதை-*

_சகாக்களிடம் ஈர மனம் காட்டாத_
_மானுடம் மத்தியில் சிட்டுக்குருவிக்கும் நிழல் தந்தாய்._

_காக்கை குருவி பசி விருந்தாய்_
_தன் பசி மறந்தாய்._
_தன் இனம் தமிழ் இனம் என்றாய்!_

_உன்னிடம் வீண்  சம்பிரதாயங்கள்_
_*சவுக்கடி* வாங்கியது !_
_மீசை வீரத்தின் அடையாளம் பேசியது.__

_பெண் இனம் பெருமை கொண்டது,_
_புதுமைப்பெண் அவதரித்தாள்._

_வரிகளில் வீரத்தை விதைத்தாய்,_
_நின் பாட்டில் பாரதம் திரண்டது._

_நின்றன் கவிதை தொகுப்பு_
_இக்கால பாடல்களின் கருவாகியது._

_தமிழ் உள்ளவரை வீரம் உள்ளவரை_
_மனித மனதில் ஈரம் உள்ளவரை_
_நின் புகழ் நிலைக்கும் – நீடிக்கும்._

– (நீரோடை மகேஷ்)
************************

_சாட்டைத் தாக்குதலுக்குள்ளாகும் விறகுமரத்தின் வேர்ப்பாகம் ? (5)_

_விறகுமரம்_ = *சவுக்கு*

_வேர்ப்பாகம்_ = *அடி*

_சாட்டைத் தாக்குதலுக்குள்ளாகும்_
= *சவுக்கு+அடி*
= *சவுக்கடி*

************************
*பெர்னார்ட்ஷா உதிர்த்த முத்துக்கள்*

_மாணவனுக்குத் தண்டனை_

ஷா எழுதியுள்ள நாடகம் ஒன்றில், ஒருவன் தன்னைப்பற்றி ஓர் இடத்தில் “ *நான் பெர்னார்ட்ஷாவின் மாணவன்* ” எனச் சொல்லிக்கொள்கிறான்.

இப்படியாக தம்முடைய நாடகத்தில், தம்மைப் புகழ்ந்து கொள்ளலாமா? என்று ஷாவிடம் ஒருவர் கேட்டார்.

“நான் வேண்டும் என்றேதான் அவ்வாறு எழுதினேன். கிரிமினல் நீதிமன்றம் ஒன்றில், இளைஞன் ஒருவனுடைய வழக்கு நடந்தபோது, அவன் தன்னைப்பற்றி இவ்வாறு சொல்லிக்கொண்டு ஆறுமாதம் தண்டிக்கப்பட்டான்” என்று காரணம் காட்டினார் ஷா.😂

*பேசுவது வேறு*

ஒரு கூட்டத்தில், *‘சவுக்கடி தண்டனை’* பற்றி ஷா பேசிக்கொண்டிருக்கையில், “நீங்கள் *சவுக்கடியைக்* கண்டிருக்கிறீர்களே, இராணுவத்தில் தவறு செய்கிறவர்கள், அதை விரும்பிக் *கேட்கிறார்களே,* அதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?” என்று கூட்டத்திலிருந்து ஒருவர் கேட்டார்.

“நான் பேசுவதற்கு எடுத்துக்கொண்ட பொருள் *சவுக்கடி* *தண்டனையைப்* பற்றியதே அன்றி, *சவுக்கடி* *கேட்கப்படுவதைப்* பற்றி அல்ல” என்று பதில் கூறினார் ஷா.
******************
💐🙏🏼💐
Raghavan MK said…
விடையளித்தோர் பட்டியல்
*****************************
[5/29, 07:00] திரைக்கதம்பம் Ramarao: சவுக்கடி

[5/29, 07:01] sankara subramaiam: சவுக்கடி

[5/29, 07:01] stat senthil: சவுக்கடி

[5/29, 07:03] மீ.கண்ணண்.: சவுக்கடி

[5/29, 07:07] Venkat: சவுக்கடி 🙏🏾

[5/29, 07:08] பாலூ மீ.: சவுக்கடி

[5/29, 07:09] Meenakshi: விடை:சவுக்கடி

[5/29, 07:11] A Balasubramanian: சவுக்கடி
A.Balasubramanian

[5/29, 07:21] Rohini Ramachandran: சவுக்கடி
[
[5/29, 07:26] A D வேதாந்தம்: விடை= அடிமரமா(வேதாந்தம்)
[
[5/29, 07:30] ஆர். நாராயணன்.: அடிமரம்


[5/29, 07:36] Dr. Ramakrishna Easwaran: *சவுக்கடி*

[5/29, 07:48] sridharan: சவுக்கடி
[
[5/29, 07:53] வீ.ஆர். பாலகிருஷ்ணன்
🙏சவுக்கடி🙏
வீ.ஆர். பாலகிருஷ்ணன்

[5/29, 07:53] Ramki Krishnan: சவுக்கடி

[5/29, 07:55] மாலதி: சவுக்கடி

[5/29, 08:02] nagarajan: *சவுக்கடி*

[5/29, 08:36] siddhan subramanian: சவுக்கடிhh

[5/29, 08:55] Dhayanandan: *சவுக்கடி*

[5/29, 09:45] கு.கனகசபாபதி, மும்பை: சவுக்கடி

[5/29, 11:46] G Venkataraman: அடிமரம்

[5/29, 12:00] வானதி: *சவுக்கடி*

5/29, 12:18] ஆர்.பத்மா: சவுக்கடி

[5/29, 13:06] Viji - Kovai: சவுக்கடி

[5/29, 19:43] N T Nathan: சவுக்கடி

[5/29, 21:18] prasath venugopal: சவுக்கடி

[5/29, 21:23] V N Krishnan.: சவுக்கும்

[5/29, 22:40] Bhanu Sridhar: பம்பரம் ?

*****************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்