Skip to main content

கொஞ்சம் முணுமுணுப்பு

"அவித்து" என்ற விடை குறித்து ரோஹிணி ராமசந்திரன், சித்தானந்தம், நாகராஜன், சதீஷ், என் டி.நாதன் இவர்களின் சுருக்கமான கருத்துகளை வாங்கி எம்.கே. ராகவன் இங்கே வெளியிட்டுள்ளதைப் படித்தேன்.
(1) புதிரை "உதிரிவெடி" என்னும் இப்பக்கத்தில் ஒரு புதிராளி வெளியிடுகிறார்.
(2) புதிராளியின் "உதிரிவெடி" பக்கத்தில் பலர் அதை வந்து படித்து அங்கேயுள்ள கூகிள் படிவத்தில் விடையை எழுதி அனுப்புகிறார்கள்.
(3) புதிராளி இரவில் 9 மணிக்கு விடையை "உதிரிவெடி" பக்கத்தில் வெளியிடுகிறார்.
(4) புதிராளி விடையளித்தோர் பட்டியலை யும் "உதிரிவெடி" பக்கத்தில் வெளியிடுகிறார்.
இதையும் வாசகர்கள் "உதிரிவெடி" பக்கத்திற்கு வந்து பார்த்துச் செல்கின்றனர்.
எம்கே ராகவன் தவிர யாரும் புதிரைப் பற்றி இங்கே கருத்து எழுதுவது என்று ஒரு மூச்சு விடுவதில்லை. அவரைப் போல் ஆர்வமுள்ளவர்கள் அரிது. அவருக்கு நன்றி. ஒரு கல்யாண வீட்டில் விருந்தைச் சாப்பிட்டுவிட்டு அதே வீட்டிலேயே சரியாக மொழி எழுதும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி.

ஏன் வாட்சப்பில் உதிரிவெடி வருவதில்லை?
மூன்று வருடங்களுக்கு முன்பு இப்புதிர்களை தினமும் வாட்சப் குழிவில் தொடர்ந்து சுமார் எட்டு மாதங்களுக்கு வெளியிட்டு வந்தேன். முதலில் எனகுத்தெரிந்த 20 பேருடன் தொடங்கியது, அவர்கள் சிபாரிசாலும் ஆர்வத்தாலும் எனக்குத் தெரியாத மேலும் பலரைச் சேர்த்தேன்.
அதில் ஒரு பெண்மணி அப்புதிர்களை தினமும் வேறு சில வாட்சப் குழுக்களில் வெளியிட்டு வந்தார். அதை நான் தற்செயலாகக் கண்டு பிடித்தேன். அவர் ஒரு முறை தவறாக என்னுடைய குழுவிலேயே அதை இட்டார். திருப்பதிக்கே லட்டு கொடுத்த பிந்தான் தெரிந்தது. ஏனம்மா அப்படிச் செய்கிறீர்கள், அட் லீஸ்ட் வாஞ்சிநாதனின் புதிர் என்றாவது நீங்கள் தெரிவித்திருகலாமே என்றேன். அவர் பின்னர் ஒரு விளக்கம் அளித்தார். உண்மையில் அந்த விளக்கம் சற்று யோசித்தபின் ஏற்றுக் கொள்ளும்படியாக இருந்தது, இதுதான் வாட்சப் பண்பாடு. ஒன்றைப் படித்தால் அப்படியே இன்னொரு குழுவுக்குத் தள்ளிவிடுவது. நான் ஏதோ புதிர்கள் அடங்கிய அபூர்வ புத்தகம் வைத்திருப்பதாகவும் அதிலிருந்து நான் தினம் ஒன்றை வெளியிடுவதாகவும் தவறாக எண்ணி அவ்வாறு செய்தாராம். ஆனாலும் அடுத்த நாள் அழுகையும் விசும்பலுமாக மன்னிப்பை ஒலிப்பதிவு செய்து அனுப்பினார். இணையத்தில் நான் புதிர்களை வெளியிட அந்த நிகழ்ச்சியும் ஒரு காரணம்.

Comments

Sundar said…
வாட்சப் வழியே எல்லோரும் எல்லோருக்கும் கண்டதையும் ஃபார்வார்டு செய்யும் பழக்கம் மலிந்து கிடப்பதால், சமீபத்தில் நான் எழுதிய கட்டுரைகளை மின்னஞ்சல் வழியே அனுப்பியபோது கூட, ஓரிரு நண்பர்கள் "இதெல்லாம் நீயேயா எழுதினாய்? இல்லை உனக்கு வந்ததை ஃபார்வார்டு செய்திருக்கிறாயா?" என்று கேட்டார்கள்! "மண்டபத்தில் யாரோ எழுதிக்கொடுத்த கட்டுரையை ஃபார்வார்டு செய்தேன் என்று நினைத்தீர்களா? நான்தான், நான்தான், நானேதான் எழுதினேன், கட்டுரை என்னுடையதுதான் ஐயா", என்று சத்தியம் செய்ய வேண்டி இருந்தது! இந்தக் கலாச்சாரத்திலிருந்து எல்லாம் சுத்தமாக தப்பிவிட முடியாது என்றாலும், இன்னும் ஓரிரு வாரங்களுக்குள் வாட்சப்பைத் தலைமுழுகிவிட்டு, கொஞ்சம் ப்ரைவசிக்கு மரியாதை கொடுக்கும் சிக்னலுக்கு தாவி விடலாம் என்று இருக்கிறேன்.
Vanchinathan said…
நமக்கு மூன்றாம் கண் இல்லை, குற்றம் சொல்பவர்களை கவனித்துக் கொள்ள. அதனால் தப்பில்லாமல் செய்ய வேண்டியதுதான்.

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்