Skip to main content

விடை 4118

இன்று காலை வெளியான வெடி:
வாகனம் கனம் குறைந்திடப் பூக்களிடையே அவை பறந்து செல்லும் (5)
அதற்கான விடை: வண்டினம் = வண்டி + கனம் - க
வண்டின மென்றுரைத்த வல்லவர் வாகனத்தில்
கண்டிட்டார் தக்க விடை.
பறக்கும் பறவைகள் பட்டியலில் தேடினோர்
வெறுத்திடுவார் இன்று விடை

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_வாகனம் கனம் குறைந்திடப் பூக்களிடையே அவை பறந்து செல்லும் (5)_ 

_வாகனம்_
= *வண்டி*
_கனம் குறைந்திட_
= *னம்*
_பூக்களிடையே அவை பறந்து செல்லும்_
= *வண்டினம்*
*************************
*வண்டினம் முரலும் சோலை -*

*திருமாலை பாசுரம்-14*

_*வண்டினம்* முரலும் சோலை,_
_மயிலினம் ஆலும் சோலை.._
_குயிலினம் கூவும் சோலை_
_அண்டர்கோன் அமரும் சோலை…._
_அணிதிருவரங்கம் என்னாம்_
_மிண்டர் பாய்ந்துண்ணும்_ _சோற்றை விலக்கி நாய்க்கு இடுமின் நீரே_

மலர்களில்
இருக்கும் தேனை உண்ண ரீங்காரமிட்டுக் கொண்டு மலர்களை நாடி *வண்டினங்கள்* முரல்கின்ற
அழகிய சோலைகள் நிறைந்த ஊர் இந்த திருவரங்கம்.

இனிமையான சோலைகளில் மயில்கள் மகிழ்ச்சியுடன் தோகை விரித்து ஆடி மகிழும்.
குயிலினங்களும் இனிமையான கீதமிசைத்து மகிழும் ஆனந்தமான சோலைகளை உடைய ஊரான திருவரங்கத்தில் அண்டர்கோன் திருவரங்கன் சயனித்திருக்கிறார் ஆனால் ஆழ்வாரோ அமரும் சோலை திருவரங்கம்
என்றருளியுள்ளார்.
சயனித்திருந்தாலும் திருவரங்கன் ராஜாதி ராஜன். அவர் அமர்ந்து ராஜ்ய பரிபாலனம் செய்கிறாரல்லவா?

அழகிய சோலையாகிய அந்தத் திருவரங்கம் என்னும் பெரியவர்கள் மிக விரும்பி உண்ணும் உணவை இந்த சிறிய நாயேனுக்கும் நீங்கள் இடவேண்டும்.

(திவ்யபிரபந்தம்- தொண்டரடிப்பொடியாழ்வார்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 11-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
அறிவைக் கேட்பதற்குக் காலம் கடத்து? (3)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7



Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 11-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*காலதாமதம் காதலில்*

_காதலில்  காலதாமதம் என்பது_ 
_மழை மேகம் போன்று மின்னலும் இருக்கும்_ 
_இடியும் இருக்கும் மழையும் இருக்கும்_ 
_ஆகா மொத்தம் அழகாய் இருக்கும் !_

_அப்படியா ?  *தாமதி* ஆனால் தவறாமல் வந்துவிடு_ 
 
(சூரியன்வேதா)
**********************
_அறிவைக் கேட்பதற்குக் காலம் கடத்து? (3)_

_அறிவு_
= *மதி*
_அறிவைக் கேட்பதற்கு_
= *தா... மதி*
_காலம் கடத்து?_
= *தாமதி*
**********************
_அன்னை தெரேசாவின் அற்புதமான வரிகள்_
 
*தண்டனைத் தர தாமதி;*
*மன்னிக்க மறுசிந்தனை வேண்டாம்.*
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/11, 07:01] திரைக்கதம்பம் Ramarao: தாமதி

[1/11, 07:01] akila sridharan: தாமதி

[1/11, 07:02] Rohini Ramachandran: Thaamadhi
[
[1/11, 07:03] balakrishnan: தாமதி🙏

[1/11, 07:07] sathish: தாமதி

[1/11, 07:11] Dhayanandan: *தாமதி*

[1/11, 07:12] A D வேதாந்தம்: விடை= தாமதி/ வேதாந்தம்.
[
[1/11, 07:15] மீ.கண்ணண்.: தாமதி
[
[1/11, 07:15] பாலூ மீ.: தா+மதி விடை தாமதி

[1/11, 07:30] sankara subramaiam: தாமதி

[1/11, 07:30] கு.கனகசபாபதி, மும்பை: தாமதி

[1/11, 07:44] Meenakshi: விடை:தாமதி

[1/11, 07:45] prasath venugopal: தாமதி
[
[1/11, 07:52] nagarajan: *தாமதி*

[1/11, 08:25] siddhan subramanian: தாமதி (அறிவு = மதி / அறிவு தா = மதி தா - தாமதி)

[1/11, 09:15] ஆர். நாராயணன்.: தாமதி
[
[1/11, 10:28] Bhanu Sridhar: தாமதி
[
[1/11, 11:53] shanthi narayanan: தாமதி

[1/11, 12:40] G Venkataraman: தாமதி
[
[1/11, 18:03] வானதி: *தாமதி*
[
[1/11, 19:24] Viji - Kovai: தாமதி

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 12-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
களைப்பில் ஆழ்ந்து அந்தி முடியாமல் துயர் உலுக்கியது (5)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 12-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
*************************
*சொல்லாட்சி*

புலவன் எடுத்தாளும் சொற்களே ஒரு பாடலை என்றும் நெஞ்சில் நிலை நிறுத்துவன.

கார்ப்பருவம் வந்தது; தலைவன் வரவில்லை; வருந்துகிறாள் தலைவி. தோழி, தலைவியைத் தேற்றுகிறாள்.
‘இது கார்ப் பருவம் அன்று மயங்காதே’ என்கிறாள்.
தோழி கூறுவதைப் பாருங்கள் :

*தோழியே! வினைமுடிக்கச் சென்ற தலைவன் வருவதாகச் சொன்ன பருவம் இதுதானே என்று என்னை வினவுகின்றாய்! இது அன்று! அறிவில்லாமல், பருவ காலத்தை மறந்து கடல் நீரை உண்டது மேகம். நீரை உண்டதால் சுமை தாங்க மாட்டாமல் அது மழையைப் பெய்தது. பிடவும், கொன்றையும், காந்தளும் இன்னும் பலவும் மலர்ந்து விட்டன. காரணம் அவற்றின் அறிவின்மை!*

இவ்வாறு தலைவியைத் தேற்றும் தோழி
*, ‘நீயும் அறிவற்றுக் கார்காலம் என மயங்காதே’* என்ற குறிப்புரையைத் தருகிறாள்.

_மதியின்று மறந்து கடல்முகந்த_
_கமஞ்சூல் மாமழை,_
_பொறுத்தல் செல்லாது இறுத்த வண்பெயல்_
_காரென்று *அயர்ந்த* உள்ளமொடு தேர்வில_
_பிடவமும் கொன்றையும் கோடலும்_
_மடவ வாகலின், மலர்ந்தன பலவே._ 

*(நற்றிணை : 99)*

(மதிஇன்று = அறிவில்லாது; கமம் = நிறைந்த; மாமழை = மேகம்; இறுத்த = பெய்தொழித்தல்; *அயர்ந்த* = மறதி உற்ற; தேர்வில = அறியாதன; மடவ = அறிவில்லாதவை)

தலைவியைத் தேற்றக் கார்கால அறிகுறிகளாகிய மழையையும் மலர்களையும் குறைசொல்லும் தோழி, மதிஇன்று, மடவ என்ற கடும் சொற்களால் அவற்றைக் கடிந்து கொள்கிறாள். 

_*இளந்திரையனார்* என்னும் புலவரின் இச்சொல்லாட்சிகள் கவிதையின் உணர்ச்சிக்குப் பொருத்தமாக அமைந்துள்ளதைக் காணலாம்._
***********************
_களைப்பில் ஆழ்ந்து அந்தி முடியாமல் துயர் உலுக்கியது (5)_

_அந்தி முடியாமல்_
= *அந் [தி]*
= *அந்*

_உலுக்கியது_
= anagram indicator for
*( அந்+துயர் )*

= *அயர்ந்து*

= _களைப்பில் ஆழ்ந்து_
************************
*குறிஞ்சிப் பாட்டு*

*அவன் யானை முகத்தில் அம்பு எய்தான்*

_உடு உறும் பகழி வாங்கி, கடு விசை,_  
_அண்ணல் யானை அணி முகத்துஅழுத்தலின்,_      
_புண் உமிழ் குருதி முகம் பாய்ந்துஇழிதர,_      
_புள்ளி வரி நுதல் சிதைய, நில்லாது,_   
_*அயர்ந்து* புறங்கொடுத்த பின்னர் நெடுவேள்_              
_அணங்கு உறு மகளிர் ஆடுகளம்கடுப்ப,          175_

நீண்ட கோலில் விண்மீன்போல் முனையுள்ள அம்பைக் கடுவிசையோடு அவன் எய்தான்.

களிற்றின் அழகிய முகத்தில் அது பாய்ந்தது.

அப்புண்ணிலிருந்து குருதி பாய்ந்து ஒழுகியது.

அதன் நெற்றியிலிருந்த புள்ளிகளும், வரிக்கோடுகளும் சிதைந்தன.

*அயர்ந்து* போன அந்த ஆண்யானை அங்கே நிற்காமல் திரும்பி ஓடிவிட்டது.

உடனே நாங்கள் முருகனுக்கு வெறியாடும் களத்தில் மகளிர் கைகோத்துக் கொண்டு ஆடுவதுபோல் கைகோத்துக் கொண்டோம்.
******
ஆரிய அரசன் பிரகத்தனைத்
தமிழ் அறிவித்தற்குக்
*கபிலர்* பாடியது
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/12, 07:00] மீ.கண்ணண்.: அயர்ந்து

[1/12, 07:00] திரைக்கதம்பம் Ramarao: அயர்ந்து
[
[1/12, 07:02] balakrishnan: அயர்ந்து🙏
[
[1/12, 07:04] sankara subramaiam: அயர்ந்து
[
[1/12, 07:05] stat senthil: அயர்ந்து
[
[1/12, 07:06] Ramki Krishnan: அயர்ந்து

[1/12, 07:08] akila sridharan: அயர்ந்து

[1/12, 07:12] V N Krishnan.: அயரந்து

[1/12, 07:34] Meenakshi: விடை:அயர்ந்து
துயர்+அந்

[1/12, 07:36] chithanandam: அயர்ந்து

[1/12, 07:45] prasath venugopal: அயர்ந்து
[
[1/12, 07:55] nagarajan: *அயர்ந்து*

[1/12, 08:06] N T Nathan: அயர்ந்து

[1/12, 08:07] Bhanu Sridhar: அயர்ந்து

[1/12, 08:14] Bharathi: அயர்ந்து

[1/12, 08:16] மாலதி: அயர்ந்து
[
[1/12, 08:17] பாலூ மீ.: அயர்ந்து.

[1/12, 08:26] கு.கனகசபாபதி, மும்பை: அயர்ந்து

[1/12, 08:31] Dhayanandan: *அயர்ந்து*
[
[1/12, 08:35] ஆர். நாராயணன்.: அயர்ந்து

[1/12, 10:10] siddhan subramanian: அயர்ந்து

[1/12, 10:59] ஆர்.பத்மா: அயர்ந்து
[
[1/12, 11:10] Revathi Natraj: அயர்ந்து

[1/12, 11:28] வானதி: அயர்ந்து

[1/12, 12:41] shanthi narayanan: அயர்ந்து
[
[1/12, 16:57] Dr. Ramakrishna Easwaran: அயர்ந்து

[1/12, 20:32] sathish: அயர்ந்து
**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 13-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
முடியாததெனினும் ஒரு நதியை ரிஷி விரும்புவார் (2)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7



Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய7 உதிரிவெடி!*( 13-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
*************************
*"நடந்தாய் வாழி காவேரி”*

பாயும் இடமெல்லாம் பசுஞ்சோலை விரித்துச் செல்வதால் *காவிரி* என்று அதற்குப் பெயர். நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், *பொன்னி* என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம். கர்நாடகத்தில் உள்ள குடகு மலைதான் காவிரிப் பெண்ணின் பிறந்தகம்.
*************************
_முடியாததெனினும் ஒரு நதியை ரிஷி விரும்புவார் (2)_

_ஒரு நதி_
= *காவிரி*

_முடியாததெனினும்_
= *காவி [ரி]*
= *காவி*

= _ரிஷி விரும்புவார்_
*************************
*_காவிரி சிறப்பு பற்றி பட்டினப்பாலையில் வரும் பாடல் இது:_*

“வசையில்புகழ் வயங்குவெண்மீன்
திசைதிரிந்து தெற்கேகினும்
தற்பாடிய தளியுணவிற்
புட்டேம்பப் புயன்மாறி 
வான்பொய்ப்பினும் தான்பொய்யா    
மலைத்தலைய கடற்காவிரி 
புனல்பரந்து பொன்கொழிக்கும்”

என்ன அழகான வரிகள்.
அதாவது வான் பொய்த்தாலு கூட தான் பொழிக்கமாட்டாளாம். அந்தளவுக்கு வற்றாத அன்னை அவள் என்கிறார் *கடியலூர் உருத்திரங்கண்ணனார்* . மழை இல்லாவிட்டாலும் காவிரியில் நீர் வரும். வந்து வயலில் பொன்போல் விளைச்சல் கொழிக்குமாம். சூரியன் திசை மாறி சென்றாலும் வானம் மழைத்தரத் தவறினாலும். காவிரியில் புனல்
புனல் பாய்ந்து விளைச்சல் வீடு வந்து குவியும் என்கிறது இப்பாடல். 
************************
அதேபோல் *சிலப்பதிகார காதை* கருக் கொண்ட கடல் காவிரிப்பூம்பட்டினம். நாட்டின் வளம், மக்களின் பண்பாடு என பலவும் பேசப்படும் காப்பியம். அதில் வரும் பாடல் இது: 

*_பூவார் சோலை மயில் ஆடப் புரிந்து_*
*_குயில்கள் இசைபாடக் காமர் மாலை அருகு_*
*_அசைய நடந்தாய் வாழி காவேரி”_*

அதாவது பூக்கள் மலிந்த சோலையில் மயில்கள் ஆடும்; குயில்கள் விரும்பி இனிதாக இசை பாடும்: விருப்பம் விளைவிக்கும் மாலைகள் அருகிலே அசையும்;
இவற்றினூடே காவிரியும் நடந்ததாகவும், காவிரி நெடுநாள் வாழ வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. 
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/13, 07:07] திரைக்கதம்பம் Ramarao: காவி

[1/13, 07:12] பாலூ மீ.: காவி (ரி)

[1/13, 07:16] மீ.கண்ணண்.: காவி

[1/13, 07:21] Meenakshi: விடை:காவி
[
[1/13, 07:27] sridharan: காவி

[1/13, 07:30] chithanandam: காவி

[1/13, 07:31] balakrishnan: காவி🙏
[
[1/13, 07:37] A Balasubramanian: காவி
A.Balasubramanian
[
[1/13, 07:38] prasath venugopal: காவி

[1/13, 07:50] Dhayanandan: *காவி*
[
[1/13, 07:56] siddhan subramanian: காவி (காவி(ரி)
[
[1/13, 08:05] ஆர். நாராயணன்.: காவி

[1/13, 08:42] nagarajan: *காவி*

[1/13, 09:02] வானதி: காவி

[1/13, 09:10] Rohini Ramachandran: Kaavi+ri

[1/13, 10:09] கு.கனகசபாபதி, மும்பை: காவி

[1/13, 10:49] Bhanu Sridhar: காவி
காவிரி or காவேரி correct ?
For puzzle it is first one as rishi like kavi et. But generally ?

[1/13, 12:32] V N Krishnan.: காவி

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 14-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
எதிர் மழை வரும் முன் அரங்கத்தில் முதல்வனாய் ஏறு (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7
Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 14-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*ஏறு* -
(வினைச்சொல்)
மலை போன்ற ஏதாவது உயரமான இடத்திற்கு ஏகுதல்

(பெயர்ச்சொல்)
ஆண் *அரிமா*  அல்லது  சிங்கம்
காளை
ஆண் சுறா
ஆண் எருமை
************************
*ஏறு தழுவல்* , மஞ்சு விரட்டு அல்லது சல்லிக்கட்டு (ஜல்லிக்கட்டு) என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.புதுக்கோட்டை மாவட்டம் ஐல்லிக்கட்டின் "சொர்க்க பூமியாக " இன்னும் திகழ்ந்து வருகிறது.
************************
*ஏறுதழுவுதலும் ஜல்லிக்கட்டும்*

ஏறு தழுவுவதற்கும் சல்லிக்கட்டுக்கும் சில வேறுபாடுகளே உள்ளன. முல்லை நிலத்து மக்களாகிய ஆயரிடம் மட்டுமே ஏறுதழுவுதல் இடம்பெற்றது. தற்போது சல்லிக்கட்டில் ஆயர் மட்டுமின்றிப் பல திறத்தவரும் பங்கேற்கிறார்கள். இருப்பினும் சல்லிக்கட்டில் வென்றவர் பணமுடிப்பினைப் பரிசாகப் பெறுதல் ஆயரிடம் பெரும்பான்மையாக உள்ளது. சல்லிக்கட்டு தைப்பொங்கலுக்கு மறுநாள் மாட்டுப்பொங்கல் நாளன்று விழா போல் கொண்டாடப்படுகிறது. ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது
************************
_எதிர் மழை வரும் முன் அரங்கத்தில் முதல்வனாய் ஏறு (3)_

_மழை_ = *மாரி*
_அரங்கத்தில் முதல்வனாய்_
= *அ*
_எதிர் மழை வரும்_
= *மாரி --> ரிமா*

_ஏறு_ = *அ+ரிமா*
= *அரிமா*
***********************
*_அரிமா_*

எமது பிடரி முடி சிலிர்த்து பறக்கிறது காற்றில்...நிதானமான எமது நடையும் பார்வையின் தீர்க்கமும் அறியப்பெறுதல் சாமானியர்களுக்கு சாத்தியமற்றது. எமது கண்களின் தீர்க்கம் பற்றிய கணிப்புகளைப் பற்றி எமக்கு இரையாகிப் போன ஜீவன்களிடம் யாரும் விசாரித்திருக்க வாய்ப்பே இல்லை.

ஆமாம் ஒற்றை பாய்ச்சலில் குரல்வளைகளில் கடிபட்டுப் போகும் உயிர்கள் என்ன ஊர்வலங்களா நடத்தும் எமது பற்களின் கூர்மை பற்றி..... 

துவம்சமாகப் போவது நீயா நானா என்ற பயம் கொள்ளா ஜீவன்களும் உண்டோ...? எமது ஒட்டிய வயிறும்....ஓடும் ஓட்டமும்....பிடறி பிடித்து குரல்வளை கடிக்கும் தீரமும்....சலனமற்ற ஓய்வும்..... *தீராக்காதலும் கூடி எமக்கு கொடுத்த பெயர் என்னவென்று சொல்லவும் வேண்டுமோ....?* 

எமது காதுகள் கூர்மையாகின்றன...சப்தங்கள் எமைச்சுற்றி நகர்கின்றன....வருவது தோழனாய் இருந்தால் எம்மை கடந்து போகும்...வாய்ப்பிருக்கிறது. எதிரியாய் இருந்தால்...அவர்களின் வாழ்க்கையை கடத்தி விட எமக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது.... 

பிடறிகள் சிலிர்க்க.. 
எமது கர்ஜனைகளின் 
சப்தத்தில் அறுந்து போகும் 
எமது பகைவர்களின் 
உயிர் தொடர்ச்சி...! 

*தேவைகளே எமது எதிரிகளை சில நேரங்களில் தீர்மானித்தாலும், பல நேரங்களில் எமது எதிரிகளே எமது வீரத்தை செப்பனிட்டு கூர்மையாக்க்குகிறார்கள்...!*

_இவ்வளவும் கூறும் நான் யாரென்றா கேட்கிறீர்கள்...._ 

*மானிடர் எமக்கு வைத்த பெயர்...சிங்கம்...!*

(எழுதியவர் : Dheva.)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/14, 07:01] திரைக்கதம்பம் Ramarao: அரிமா

[1/14, 07:09] Dhayanandan: *அரிமா*

[1/14, 07:30] பாலூ மீ.: அரிமா.

[1/14, 07:41] மீ.கண்ணண்.: அரிமா

[1/14, 07:49] Meenakshi: விடை:அரிமா(எதிர்மழை :மாரி+அ)

[1/14, 08:22] ஆர். நாராயணன்.: அரிமா

[1/14, 08:33] மாலதி: அரிமா

1/14, 08:22] nagarajan: *அரிமா*

[1/14, 08:53] Dr. Ramakrishna Easwaran: *அரிமா*
மழை = மாரி
எதிர் மழை = மாரி <--= ரிமா
அரங்கத்தில் முதல்வன்= அ
முன்= அ முன்னால் வருவதைக் குறிப்பது
அ+ ரிமா
ஏறு = definition of அரிமா

இதுகாறும் ஏறு என்றால் காளை என்று தான் நினைத்திருந்தேன். இன்று தான் ஆண் சிங்கம் என்ற பொருளும் உண்டு என அறிந்தேன். நன்றி

[1/14, 09:35] chithanandam: அரிமா

[1/14, 10:15] வானதி :அரிமா

[1/14, 10:56] siddhan subramanian: அரிமா (மாரி +அ)

[1/14, 11:18] G Venkataraman: எருது
[
[1/14, 11:48] கு.கனகசபாபதி, மும்பை: அரிமா

[1/14, 12:00] shanthi narayanan: அரிமா

[1/14, 12:15] akila sridharan: அரிமா

[1/14, 14:25] Rohini Ramachandran: arimA

[1/14, 19:06] ஆர்.பத்மா: அரிமா

[1/14, 20:35] sathish: அரிமா

[1/14, 20:43] sankara subramaiam: அரிமா

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 15-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கலை எண்ணம் இடையொடிந்தது (2)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7
Raghavan MK said…

*A peek into today's riddle !*
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 15-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*கலை*
பொருள் (வி)(verb)
நீக்கு
_சிதை_
அழி
************************
*சிதை(பெ)*
ஈம விறகு
*சிதை(வி)*
கெடு , குலைத்தல் , அழித்தல் , சிரைத்தல் ,களைதல்
தேய்த்தல், _கலைதல்_
************************
*கலைகள்*

உள்ளத்துணர்வுகளைத் தெள்ளிதின் வெளிப்படுத்தி 
உவகைப் பேரின்பம் நல்கும் ஊற்றுநீர் கலைகள் 
பைய நடைபயின்று, பற்பல சுவை நல்கி, 
பாங்குடன் மிளிர்வது கலைகள் 
பாரெங்கும் மணம் பரப்புவது கலைகள் 
தெவிட்டாத இன்பமாய்த் தேமதுரச் சுவையாய் 
இன்னிசை விருந்தளிப்பது கலைகள் 
சிந்தனை அரும்பாகி, செம்மையாய்ப் பூத்துக்குலுங்கி, 
செம்பவள வாய்மொழிவது கலைகள் 
வெள்ளிப் பிழம்பெனவே வெள்ளப் பெருக்கெடுத்து 
தாவியும் தவழ்ந்தும் தளிர்நடைப் பயின்றும் 
எங்கும் பிராகசிப்பது ஆயக்கலைகள் அறுபத்துநான்கே! 

அன்புடன் ஸ்ரீ. விஜயலஷ்மி, 
தமிழாசிரியை, 
கோவை 22.
************************
_கலை எண்ணம் இடையொடிந்தது (2)_

_எண்ணம்_
= *சிந்தை*
_இடையொடிந்தது_
= *சி [ந்] தை*
= *சிதை*

_கலை_
= *சிதை*
************************
*சிதையும், சிந்தையும்; சுவையான பாடல்*

நம் எல்லோருக்கும் தெரிந்த சொற்கள் *சிதை, சிந்தை;* இரண்டும் சம்ஸ்கிருதச் சொற்கள்; இவைகளை வைத்து ஒரு கவிஞன் அழகான பாடல் யாத்துள்ளான்.

_சிதைத் தீ, ஒருவர் இறந்த பின்னர் வெறும் உடலை மட்டும்தான் எரிக்கும்;_
_சிந்தனையில் சோகமிருந்தால் அது நீங்கள் உயிருடன் இருக்கும்போதே உங்களை எரித்துக் கொன்றுவிடும்!_

*பொருள்:–*
*சிதை, சிந்தனை* பற்றி அறிந்துகொள்ளுங்கள்; இரண்டும் அழிக்கக்கூடியதே. ஆனால் சிதைத் தீயைவிட, சிந்தனை ஒரு சொட்டு (கொஞ்சம்) அதிகம்தான். ஏனெனில் சிதைத் தீ, செத்த பிறகு நம்மை எரிக்கும்; சிந்தனையோ/ கவலையோ 
உயிருள்ளபோதே நம்மை அழிக்கும்!

_கொன்றழிக்கும் கவலை:_
*பாரதி*

இப்போது இதை பாரதி பாடலுடன் ஒப்பிடுவோம்:–

_சென்றது இனி மீளாது மூடரே! நீர்_

_எப்போதும் சென்றதையே *சிந்தை* செய்து_

_கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து_

_குமையாதீர்! சென்றதனைக் குறித்தல் வேண்டாம்_

_இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவீர்_

_எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு_

_தின்று விளையாடி இன்புற்று இருந்து வாழ்வீர்_

_தீமை எல்லாம் அழிந்து போம், திரும்பி வாரா._

இதற்குப் பொருள் எழுதத் தேவையே இல்லை; தூய தமிழ்; எளிய தமிழ்; போனதைப் பற்றி கவலைப் படாதே; ஒவ்வொரு நாளும் புதிதாகப் பிறந்தது போல எண்ணி அனுபவி!
(பழைய கஷ்டங்களை எண்ணி கவலைப் படாதே; பயப்படாதே)

(London swaminathan)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/15, 07:01] balakrishnan: சிதை🙏

[1/15, 07:01] திரைக்கதம்பம் Ramarao: சிதை

[1/15, 07:23] Dhayanandan: *சிதை*

[1/15, 07:54] nagarajan: *சிதை*

[1/15, 08:03] மாலதி: சிதை

[1/15, 08:05] Meenakshi: விடை :சிதை

[1/15, 08:09] prasath venugopal: சிதை

[1/15, 08:37] ஆர். நாராயணன்.: சிதை
[
[1/15, 09:00] கு.கனகசபாபதி, மும்பை: சிதை
[
[1/15, 09:04] மீ.கண்ணண்.: சிதை
[
[1/15, 09:07] siddhan subramanian: சிதை (சி (ந்)தை
[
[1/15, 09:32] akila sridharan: சிதை

[1/15, 09:51] sankara subramaiam: சிதை
[
[1/15, 11:29] G Venkataraman: கூறு

[1/15, 12:42] shanthi narayanan: சிதை

[1/15, 15:21] வானதி: *சிதை*

[1/15, 16:58] N T Nathan: சிதை

[1/15, 19:25] A Balasubramanian: இசை
A.Balasubramanian

[1/15, 20:21] Ramki Krishnan: சிதை?

[1/15, 20:48] A D வேதாந்தம்: விடை= சிதை/ வேதாந்தம்.

**************************
Raghavan MK said…
***********************
*இன்றைய உதிரிவெடி!*( 16-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு ராகம் தொடங்கு, ... ம் வேண்டாம் (3)
************************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************
Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 16-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_*ஒரு ராகம்* பாடலோடு காதில் கேட்டதோ மனதோடு ஊஞ்சல் ஆடுதோ_

_மாலை நேரக் காற்றில் மகிழ்ந்தாடும் தென்னங்கீற்றே_
_மாலை சூடினாலும் என்னை ஆளும் தெய்வம் நீயே_

_*ஒரு ராகம்* பாடலோடு காதில் கேட்டதோ_
_மனதோடு ஊஞ்சல் ஆடுதோ_

படம்: ஆனந்த ராகம்
************************
_ஒரு ராகம் தொடங்கு, ... ம் வேண்டாம் (3)_

_தொடங்கு_
= *ஆரம்பி*
_... ம் வேண்டாம்_
= *ஆரம்பி* minus *ம்*
= *ஆரபி*
= _ஒரு ராகம்_
************************
_"ஆரபி”_

  *‘ஆரபி’* என்ற சமஸ்கிருதச் சொல்லுக்கு பயிரிடுதல் என்று பொருள். மங்களகரமான இந்த ராகத்தை இசைக்கும் போது நல்லெண்ணங்கள் விதைக்கப்படுகின்றன.

மங்களகரமான இந்த ராகம் வீர உணர்வையும் வெளிப்படுத்துவதில் சிறப்பு வாய்ந்தது.
************************
_‘ *ஆரபி* ’ ராகத்தில் அமைந்த சில திரைப்படப் பாடல்கள் :_ 

1.பாடல்
_பிருந்தாவனமும் நந்தக்குமாரனும் யாவருக்கும்_ 
படம் மிஸ்ஸியம்மா(1955) 
பாடியவர் A.M.ராஜா, P.சுசீலா 
இசையமைப்பாளர் S. ராஜேஸ்வரராவ் 
இயற்றியவர் தஞ்சை ராமையாதாஸ் 

2. பாடல்
_ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே_
படம் முதலாளி(1957) 
பாடியவர் T.M.சவுந்தர ராஜன் 
இசையமைப்பாளர் K.V.மகா தேவன் 
இயற்றியவர் கா.மு.ஷெரீப் 

ஆரபி ராகத்தில் வெளிவந்த பாடல்களில் புகழின் உச்சியில் நிற்கின்ற பாடல். பாடல் வரிகள் நாட்டுப்புறபாங்கில் அமைந்தாலும் இசையோ செவ்வியல் இசை பாணியில் ஜீவகளையுடன் , ராகத்தின் ஆழ்ந்த செறிவாற்றலையும் காண்பிக்கும் வண்ணம் அமைக்கப்பட்ட பாடல். டி.எம்.சௌந்தரராஜன் தனது பாணியில் பாடி பெரும் புகழ் பெற்றார்.ஆரபி ராகம் என்றால் இன்று வரை எடுத்துக்காட்டாக விளங்கும் பாடல்.
3. பாடல் 
_தென்றலில் ஆடும் கூந்தலைக் கண்டேன்_ 
படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன்(1978) 
பாடியவர் K.J.யேசுதாஸ், வாணி ஜெயராம் 
இசையமைப்பாளர் M.S. விஸ்வநாதன்

 4. பாடல்
_ஆடியிலே பெருக்கெடுத்து ஓடி வரும் காவேரி_
 படம்“ராதா” (1973) 
பாடியவர்P.சுசீலா குழுவினர் 
இசையமைப்பாளர் சங்கர்கணேஷ்

5. _இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே –_
படம்: தங்கப்பதுமை [1959 ] – பாடியவர் : டி.எம்.சௌந்தரராஜன் + ஜிக்கி –
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுதிய பாடல்.

_நேற்று நம்மை கண்ட நிலா_
_நெஞ்சுருகிச் சென்ற நிலா_
_வாழ்த்துகள் சொல்லுமே_
_மனந்தனைக் கிள்ளுமே!_

கேட்கும் போது மகிழ்ச்சிகள் துள்ளி நம் நெஞ்சங்களை நிறைக்கின்ற பாடல்.இனிமையை முதன்மைப்படுத்தி எப்போதும் நெஞ்சங்களை கனிய வைத்த மெல்லிசை மன்னர்களின் என்றென்றும் வியக்க வைக்கும் பாடல்.
டி.எம்.சௌந்தரராஜன் ,ஜிக்கி என்கிற அருமையான ஜோடி குரலில் ஒலித்த சாகாவரம் பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.
என்ன பாடல் ! எப்படிப்பட்ட இசை ! இசையா , பாடலா என்று வியக்க வைக்கும் அற்புதம் தரும் பாடல்.
நமது வாழ்க்கையின் தடங்களில் சுவடுகளை பதித்த முதன்மையான பாடல்களில் என்றும் நீங்காத ஒன்று இந்த புதுவெள்ளப்பாடல்.
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/16, 07:31] மீ.கண்ணண்.: ஆரபி
[
[1/16, 07:31] திரைக்கதம்பம் Ramarao: ஆரபி

[1/16, 07:31] Dr. Ramakrishna Easwaran: ஆரபி
[
[1/16, 07:31] bala: ஆரபி?
- பாலா

[1/16, 07:32] A Balasubramanian: ஆரபி
A.Balasubramanian

[1/16, 07:33] balakrishnan: ஆரபி🙏
[
[1/16, 07:33] Meenakshi: விடை :ஆரபி
[
[1/16, 07:34] sankara subramaiam: ஆரபி

[1/16, 07:35] V N Krishnan.: ஆரபி

[1/16, 07:40] மாலதி: ஆரபி

[1/16, 07:40] A D வேதாந்தம்: விடை= ஆரபி / வேதாந்தம்.

[1/16, 07:45] Ramki Krishnan: ஆரபி

[1/16, 07:47] akila sridharan: ஆரபி
[
[1/16, 07:47] siddhan subramanian: ஆரபி (ஆரம்பி -ம்)

[1/16, 07:55] Bhanu Sridhar: ஆரபி
[
[1/16, 07:59] nagarajan: *ஆரபி*

[1/16, 08:00] Dhayanandan: *ஆரபி*

[1/16, 08:07] stat senthil: ஆரபி
[
[1/16, 08:11] Viji - Kovai: ஆரபி

[1/16, 08:18] ஆர். நாராயணன்.: ஆரபி
[
[1/16, 08:22] பாலூ மீ.: ஆரபி.
[
[1/16, 08:28] Bharathi: ஆரபி

[1/16, 08:41] Revathi Natraj: ஆரபி

[1/16, 08:56] chithanandam: ஆரபி

[1/16, 09:15] ஆர்.பத்மா: ஆரபி

[1/16, 09:29] G Venkataraman: ஆரபி

[1/16, 09:32] வானதி: *ஆரபி*
[
[1/16, 09:56] கு.கனகசபாபதி, மும்பை: ஆரபி

[1/16, 10:54] V R Raman: ஆரபி

[1/16, 11:49] shanthi narayanan: ஆரபி

[1/16, 16:49] N T Nathan: ஆரபி

[1/16, 19:39] sridharan: ஆரபி

[1/16, 20:08] sathish: ஆரபி

**************************

Popular posts from this blog

உதிரிவெடி 4265

உதிரிவெடி 4264 (நவம்பர் 12, 2023) வாஞ்சிநாதன் ************************ அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் தீபாவளியில் அமவாசைக்கு நன்றாகத் தேய்ந்து இல்லாமற் போன நிலவு நாளில் யோசிக்க இன்றைய புதிர்: வெற்றியிழந்து மெய் தேயத் தொடக்கம் (5) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4281

உதிரிவெடி 4281 (பிப்ரவரி 18, 2024) வாஞ்சிநாதன் ************************ வேழத்தால் எருமையிடமிருந்து பெறப்பட்டது என்பது சரியில்லை (5) விடைகள் தாமதமாக நாளை இரவு 9 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்  

உதிரிவெடி 4277

உதிரிவெடி 4277 (ஜனவரி 21, 2024) வாஞ்சிநாதன் ************************ ஊரில் ஊரின் மையத்தைச் சுற்றி வரும் கோடு (3) விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும். உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்