Skip to main content

விடை 4117

இன்றைய வெடி: நிச்சயம் அடை தின்பதில் முந்தி (3)
இதற்கான விடை: உறுதி;
உறு + தி; அடை = உறு; தி = தின்பதில் முந்தி (முதலெழுத்து) என்று பலர் சரியாக விடையளித்துள்ளார்கள்.
ஆனாலும் விளக்கம் முழுமையெனக் கொள்ள வேண்டுமானால் ஏதேனும் ஒரு வாக்கியத்தில் "அடை" என்ற சொல்லை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக "உறு" என்று எழுதினாலும் அவ்வாக்கியம் பொருள் மாறாமல் இருக்க வேண்டும்.
மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்ஸில் அவியலுடன் அடை கிடைக்கும் --> மயிலாப்பூர் கற்பகாம்பாள் மெஸ்ஸில் அவியலுடன் உறு கிடைக்கும், ஊஹூம் சரியில்லை
சும்மா கத்திக் கொண்டேயிருக்கிறவன் வாயை எப்படி அடைப்பது --> சும்மா கத்திக் கொண்டேயிருக்கிறவன் வாயை எப்படி உறுவது, இதுவும் சரியில்லை.
இன்னமும் யோசிக்க வேண்டும், நல்ல உதாரணம் அகப்படவில்லை.

அடடா! இப்போது, எனது சொந்தக்காரர்களுக்கான வாட்சப் குழு, எனது மனைவி வழி சொந்தங்களுக்கான வாட்சப் குழு, பணியாற்றுமிடத்திற்கான மூன்று வாட்சப் குழுக்கள், பின்னர் நண்பர்கள் குழு என்று பல குழுக்களிலும் பல செய்திகள் பரிமாறுக்கொள்வது, அதைத் தவிர தனிப்பட்ட செய்திகள் அனுப்புவோர்க்கு பதிலெழுதுவது போன்ற கடமைகளை உடனே ஆற்ற வேண்டியிருப்பதால் இன்று இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.
உங்களில் இக்கடமைகளை முடித்தவர்கள், உங்கள் முயற்சியில் வசமாக அடை--> உறு உதாரணம் சிக்கினால் அதை இங்கே கருத்துரையில் இடலாம்.
இந்த மேட்டர்லாம் எதுக்குப்பா, நான் கரீட்ட ஆன்சர் போட்டுட்டேன் என் பேரை எங்கே போட்டிருக்க அதை சொல்லுப்பா என்று அவசரப்படும் மக்களுக்கு இதோ

Comments

Raghavan MK said…
A peek into today's riddle!
*************************
_நிச்சயம் அடை தின்பதில் முந்தி (3)_ 

_அடை_ = *உறு*

_தின்பதில் முந்தி_
= *தி*

_நிச்சயம்_
= *உறு+தி*
= *உறுதி*
**********************
மனதிலுறுதி வேண்டும்,
வாக்கினி லேயினிமை வேண்டும்;
நினைவு நல்லது வேண்டும்,
நெருங்கின பொருள் கைப்பட வேண்டும்;
கனவு மெய்ப்பட வேண்டும்,
கைவசமாவது விரைவில் வேண்டும்;
தனமும் இன்பமும் வேண்டும்,
தரணியிலே பெருமை வேண்டும்.
கண் திறந்திட வேண்டும்,
காரியத்தி லுறுதி வேண்டும்;
பெண் விடுதலை வேண்டும்,
பெரிய கடவுள் காக்க வேண்டும்,
மண் பயனுற வேண்டும்,
வானகமிங்கு தென்பட வேண்டும்;
உண்மை நின்றிட வேண்டும்.
ஓம் ஓம் ஓம் ஓம்
*(பாரதியார்)*
**********************
🙏🏼💐🙏🏼
Joseph said…
நிறைவடைகிறது

நிறைவுறுகிறது
GUNA said…
இன்பம் விழையான் இடும்பை இயல்பு என்பான்
துன்பம் உறுதல் இலன்

திருக்குறள்--இடுக்கண் அழியாமை-குறள் எண் 628


இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
துன்பம் உறுதல் இலன்

திருக்குறள்--இடுக்கண் அழியாமை-குறள் எண் 629
Muthu said…
"இன்பம் 'அடை'வாயாக" என்று வாழ்த்தினார் == "இன்பம் 'உறு'வாயாக" என்று வாழ்த்தினார்.
Ramki Krishnan said…
களிப்படைவது = களிப்புறுவது
Vanchinathan said…
மகிழ்ச்சியுறுகிறேன் மகிழ்ச்சிஅடைகிறேன்
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 04-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
கார்த்திகேயன் கதை சொல்லும் காவியம் இரண்டெழுத்து போய்ச் சிதைந்தாலும் ஒரு பரம்பரையின் காவியம் (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************


Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 04-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
_இந்திய இலக்கிய உலகத்திற்கு புதிய அழகியல் கோட்பாட்டை பெற்று தந்த *காளிதாசனை* அவன் பெயரை அறிந்த அளவிற்கு அவன் படைத்த இலக்கியத்தை நம்மில் எத்தனை பேர் அறிவோம். விரல்விட்டு எண்ணி விடலாம்._

*மகாகவி காளிதாசன்* ருது சம்மாரம், *குமார சம்பவம்,* மேக சந்தேசம், *ரகுவம்சம்* ஆகிய நான்கு காவியங்களையும் விக்கிரமோர்வசியம், மாளவிகாக்கினிமித்ரம், சாகுந்தலம் ஆகிய நாடகங்களையும் உள்ளத்தை கொள்ளை கொள்ளும் அழகிய மொழி நடையில் நமது சாதாரண அறிவால் நினைத்து பார்க்கவே முடியாத உயரிய கற்பனை வளத்தில் படைத்துள்ளார் 
🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
*குமாரசம்பவம்*

குமாரசம்பவம் என்ற காவியம் பதினேழு பகுதிகளை கொண்டதாகும். உலகை படைத்த ஈஸ்வரன்
இமயமலை சாரலில் தவம் புரியம் போது இமவான் என்ற அரசனுக்கு மகளாக பிரிந்த பார்வதி பணிவிடை செய்கிறாள். ஈசனின் மோன தவத்தால் தைரியம் பெற்ற தாரகாசூரன் என்ற அசுரன் தேவர்களை கொடுமை செய்கிறான். பார்வதியும் பரமேஸ்வரனும் இணைந்து கார்த்திகை குமாரனை பெற்றுயெடுத்தால் தான் அசுரனின் அராஜகம் முடிவுக்கு வரும் என்று தவத்தில் இருக்கும் சிவனை எழும்ப மன்மதன் மலர் அம்பு எய்துகிறான். சிவனின் கண்திறக்க காமன் எரிந்து சாம்பலாகிறான். காதல் கணவனின் பிரிவை எண்ணி ரதி புலம்புகிறாள். பார்வதியும், ஈசனும் இணைந்து குமார ஜனனத்திற்கு வழி ஏற்படுகிறது. இந்த காவியம் முழுவதும் ஆண் பெண்ணின் உறவு சுகமே பிரதானமாக பேசப்படுகிறது. உமை சிவனை அடையும் காட்சியும், ரதி தேவியின் சோகப் புலம்பலும், நாடக பாணியில் சுவைபட வர்ணிக்கப்பட்டுயிருக்கிறது.
_இணைப்பின் மகிழ்வும் பிரிவின் துயரமும் குமார சம்பவத்தன் சிறப்பு எனலாம்._
**********************
_கார்த்திகேயன் கதை சொல்லும் காவியம் இரண்டெழுத்து போய்ச் சிதைந்தாலும் ஒரு பரம்பரையின் காவியம் (6)_

_கார்த்திகேயன் கதை சொல்லும் காவியம்_
= *குமாரசம்பவம்*

_இரண்டெழுத்து போய்_
= _கு[மா]ரசம்[ப]வம்_
= *குரசம்வம்*

_சிதைந்தாலும்_
= anagram indicator for *குரசம்வம்*
= *ரகுவம்சம்*

= _ஒரு பரம்பரையின் காவியம்_
**********************
*ரகுவம்சம்*
ரகுவம்சம் என்ற இன்னொரு காவியம் திலிபன் தொடங்கி அக்னிவரன் வரையிலான ஸ்ரீராமனின் பரம்பரையை காட்டுகிறது பத்மபுராணத்தை அடிப்படையாக கொண்டு தான் காவியம் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றாலும் சரத்ருது, வசந்த ருது போன்ற வர்ணைகளில் காளிதாசனின் கைவண்ணத்தை அதிசயமாக பார்க்க முடிகிறது. ராமரின் காலத்தில் புகழின் உச்சியிலிருந்த ரகுவம்சம் அக்னிவரன் என்ற காம மன்னனின் காலத்தில் பூண்டற்று போனதை காட்டும் காளிதாசர் எவ்வளவு பெரிய பரம்பரையாக இருந்தாலும் பெண்ணாசையானது மன்னர்களை பிடித்து விட்டால் நிலைத்து வாழ முடியாது என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லுகிறார்.
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/4, 07:01] திரைக்கதம்பம் Ramarao: ரகுவம்சம்

[1/4, 07:06] Ramki Krishnan: ரகுவம்சம்

[1/4, 07:07] nagarajan: *ரகுவம்சம்*

[1/4, 07:16] பாலூ மீ.: ரகுவம்சம்
[
[1/4, 07:17] akila sridharan: ரகுவம்சம்.
குமாரசம்பவம் - மா, ப

[1/4, 07:18] Bhanu Sridhar: ரகுவம்சம் . Two Classics of Kalidasa ரகுவம்சம் and குமாரசம்பவம் 👏

[1/4, 07:18] A Balasubramanian: ரகுவம்சம்
A.Balasubramanian

[1/4, 07:23] Meenakshi: ரகு வம்சம்

[1/4, 07:28] மீ.கண்ணண்.: ரகுவம்சம்

[1/4, 07:37] sridharan: ரகுவம்சம்.
[
[1/4, 07:42] Dhayanandan: ரகுவம்சம்
[
[1/4, 07:52] Usha Chennai: ரகுவம்சம்

[1/4, 07:55] கு.கனகசபாபதி, மும்பை: ரகுவம்சம்
[
[1/4, 08:47] balakrishnan: ரகுவம்சம்🙏
[
[1/4, 09:09] V R Raman: குமாரசம்பவம் >> ரகுவம்சம்

[1/4, 09:27] Dr. Ramakrishna Easwaran: ரகுவம்சம்

_குமாரசம்பவம்_ minus _ம_ & _ப_ --> *குரசம்வம்*
கலைந்தால் anagram indicator
குரசம்வம்--> *ரகுவம்சம்*

[1/4, 10:02] Rohini Ramachandran:
Raghuvamsham
Derived from kumaarasambhavam

[1/4, 10:20] ஆர். நாராயணன்.: ரகுவம்சம்

[1/4, 12:05] மாலதி: ரகு வம்சம்
[
[1/4, 13:49] வானதி: *ரகுவம்சம்*

[1/4, 16:39] siddhan subramanian: ரகுவம்சம் (முருகன் - முன்) ருக ~ ரகுவம்சம்

***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 05-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
கட்டியவனே அடையாளமிடு (2)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************



Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 05-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*பதி பசு பாசம்*

முப்பொருள் என்பது சைவ சித்தாந்தத்தில்   *பதி பசு பாசம்* ஆகியவற்றைக் குறிப்பதாகும். 
இவற்றில் *பதி* என்பது இறைவனையும், பசு என்பது உயிர்களையும், பாசம் என்பது தளைகளையும் குறிக்கிறது.

முப்பொருள்களில் கடவுள் பேரறிவு உடையது என்றும், உயிர் சிற்றறிவுடையது என்றும் தளை உயிர் அற்றதாகவும் அறியப்படுகிறது.
*************************
*திருமூலர் பாடல்* 

_பதி பசு பாசம் எனப் பகர் மூன்றில்_
_பதியினைப் போல் பசு பாசம் அனாதி_
_பதியினைச் சென்று அணுகாப் பசு பாசம்_
_பதி அணுகில் பசு பாசம் நில்லாவே_

*_பாடலுக்கான விளக்கம்:_*

இறைவன், உயிர், உயிரின ஆசை எனபன பேரண்ட இயக்கத்தின் மூன்று பொருள்கள். இறைவனைப் போலவே உயிரினங்களும், ஆசையும் தாமே தோன்றுபவை. உயிரினங்களும் ஆசையும் உலகியல் வாழ்வில் இறைவனை அணுகுவதில்லை. அணுகினால் நீர் வேறு, நீர்க்குமிழி வேறு என்று இல்லாதது போல ஒன்றாய் இருக்கும்
*************************
_கட்டியவனே அடையாளமிடு (2)_

_கட்டியவனே_
= *பதி*
= _அடையாளமிடு_
*************************
*பதி* (பெ)

ஊர் (E.G : ஆரையம்பதி, பெருமாள்பதி ,குமட்டிபதி, ஒழலபதி, மவுதம்பதி)
தலைவன்
அரசன்
கணவன்
இடம்
இறைவன்
(வி)
ஊன்று, அழுந்து, படியெடு, உள்வாங்கு
*************************
*அகநானூறு 200*

_புலால் அம் சேரி, புல் வேய் குரம்பை,_
_ஊர் என உணராச் சிறுமையொடு, நீர் உடுத்து,_
_இன்னா உறையுட்டு ஆயினும், இன்பம்ஒரு நாள்_ _உறைந்திசினோர்க்கும், வழி நாள்,  5_
*_தம் பதி மறக்கும் பண்பின் எம் பதி_*
_வந்தனை சென்மோ வளை மேய் பரப்ப!_

*விளக்கம்:*

புலால் நாறும் தெருவில் இருப்பது துன்பந்தான். என்றாலும் ஒருநாள் தங்கியவருக்கு அது இன்பமாகிவிடும். மறுநாள் தன் ஊரை நினைக்க மாட்டார்கள். 

வளை (சங்குப் பூச்சிகள்) மேயும் நாட்டை உடையவனே! 

எம் ஊருக்கு வந்து செல். அலை மோத மரம் ஓங்கும் கானலில் ஒருநாள் எம்மோடு இருந்துவிட்டு அன்று மாலையே நீ தேரிலேறிச் செல்லலாம். அல்லது எம் ஊரிலேயே இருக்க விரும்பினாலும் நாங்கள் எங்களால் முடிந்ததைச் செய்வோம். 

உனக்கு விருப்பமா? 

_தலைமகள் குறிப்பு அறிந்த தோழி தலைமகனிடம் சொல்கிறாள்._

(நெய்தல்
உலோச்சனார் பாடல்
கி.மு. காலத்துப் பாடல்)
*************************
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[1/5, 07:00] திரைக்கதம்பம் Ramarao: பதி

[1/5, 07:01] nagarajan: *பதி*

[1/5, 07:01] balakrishnan: பதி🙏
[
[1/5, 07:02] மாலதி: பதி
[
[1/5, 07:02] thiru subramanian: பதி
[
[1/5, 07:03] Dhayanandan: *பதி*
[
[1/5, 07:05] பாலூ மீ.: பதி.

[1/5, 07:07] stat senthil: பதி
Gu
[1/5, 07:08] Dr. Ramakrishna Easwaran: பதி

[1/5, 07:09] மீ.கண்ணண்.: பதி

[1/5, 07:10] N T Nathan: பதி

[1/5, 07:11] siddhan subramanian: பதி
[
[1/5, 07:12] Sucharithra: பதி

[1/5, 07:15] A Balasubramanian: பதி
A.Balasubramanian

[1/5, 07:32] sathish: பதி

[1/5, 07:35] prasath venugopal: பதி
[
[1/5, 07:47] கு.கனகசபாபதி, மும்பை: பதி

[1/5, 07:49] Viji - Kovai: பதி

[1/5, 07:49] Meenakshi: இன்றைய விடை: பதி

[1/5, 07:51] V N Krishnan.: பதி

[1/5, 08:08] வானதி: *பதி*

[1/5, 08:21] A D வேதாந்தம்: விடை=பதி/ வேதாந்தம்

[1/5, 08:52] ஆர். நாராயணன்.: பதி
[
[1/5, 09:41] ஆர்.பத்மா: பதி
[
[1/5, 10:12] Revathi Natraj: பதி
[
[1/5, 11:00] V R Raman: பதி
[
[1/5, 12:36] shanthi narayanan: பதி

[1/5, 19:38] Rohini Ramachandran: Rohini Ramachandran
Indraiya udhiri vedi
Thaali
***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 06-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
சுற்றிவர வடமிட்ட குளறுபடி (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7
Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 06-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
எண்ண எண்ண இனிக்குதுஏதேதோ நினைக்குது
வண்ண வண்ண தோற்றங்கள் அஞ்சு ரூபா
_கண்ணை *வட்டமிட்டு* மயக்குது அஞ்சு ரூபா_

திரைப்படம்:பரிசு
**********************
மாமா மாமா மாமா......
மாமா மாமா மாமா......

ஏம்மா ஏம்மா ஏம்மா.... 
ஏம்மா ஏம்மா ஏம்மா....

சிட்டு போல பெண்ணிருந்தா *வட்டமிட்டு* சுத்தி சுத்தி கிட்ட கிட்ட ஓடிவந்து தொடலாமா?...

தாலி கட்டுமுன்னே கையி மேல படலாமா?..
மாமா மாமா மாமா...

திரைப்படம்: குமுதம்-1962
**********************
_சுற்றிவர வடமிட்ட குளறுபடி (5)_

_குளறுபடி_
= anagram indicator for *வடமிட்ட*
= *வட்டமிட*
= _சுற்றிவர_
**********************
மாலை மங்கும் நேரத்தில் மேகத்தின் கரு விழிகள் இந்த பூமியை நோக்கி *வட்டமிட* சீரிய காற்றுடன் கூடவே ஒய்யாரமாக சப்தம் எழுப்பும் இடி மின்னல்களின் இடையே விண்ணை பிளந்து மண்ணிற்கு உதயம் ஆகும் எங்கள் காக்கும் தெய்வம் மழைக்கு கோடான கோடி நன்றிகள்.
************************
*மகளுக்கு ஒரு மடல்*

ஒரு குறிஞ்சி மலராக 
இரண்டுமுறை எங்கள் தோட்டத்தின் 
அன்பில் விளைந்த செல்ல மகளே..! 

நீ எங்கள் நினைவுகளோடு 
மாற்றான் தோட்டத்து மலராக 
பூத்து மலர்வதை எண்ணி 
ஆனந்தக் கண்ணீரில் மிதக்கிறோம் 

புகுந்தயிடம் பூ மணக்க 
நீ பிறந்தயிடத்துப் பெருமைப் பேசாதே 

நீ பூக்கும் தோட்டமே
உனக்கான எழில் வனம்

உன் வசந்தக் காலம் 
உன் பூக்களில் காணும் புன்னகையாகும் 

உன் நிம்மதி 
உன் வனத்தில் வீசும் நறுமணம் 

_உன் சந்தோசம் உன் தோட்டத்தைச் சுற்றி *வட்டமிடும்*  தேனீக்களின் ரிங்காரம்_

உன் பொறுமை 
உன் வாழ்வைக் காக்கும் அன்பின் கவசம் 

உன்னை விரைவில் காணும் 
பெரும் கனவுகளை நெஞ்சில் சுமந்து 

உன் குறும்செய்தியைக் கைபேசியில் 
எதிர்பார்த்த வண்ணம் 

செய்திதாளைத் தலைகீழாக வாசிக்கும் 
உன் தந்தை தமிழன்பனும் 

*எரியாத அடுப்பில் இட்டலிச் சுடும் உன் அன்னை அபிராமி நானும்.*

- (கவிஞர் பி.மதியழகன்)
*************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/6, 07:02] திரைக்கதம்பம் Ramarao: வட்டமிட

[1/6, 07:02] balakrishnan: வட்டமிட👌🙏🤣
[
[1/6, 07:04] மீ.கண்ணண்.: வட்டமிட
[
[1/6, 07:06] பாலூ மீ.: வட்டமிட
[
[1/6, 07:08] Bhanu Sridhar: வட்டமிட

[1/6, 07:10] Meenakshi: விடை:வட்டமிட

[1/6, 07:11] A Balasubramanian: வட்டமிட
A.Balasubramanian
[
[1/6, 07:13] Dhayanandan: *வட்டமிட*

[1/6, 07:34] prasath venugopal: வட்டமிட
[1/6, 07:29] Dr. Ramakrishna Easwaran: வட்டமிட

[1/6, 07:35] Dr. Ramakrishna Easwaran: பட்டுப் பாவாடை எங்கே
கட்டி வைத்த கூந்தல் எங்கே
பொட்டெங்கே பூவும் எங்கே சொல்லம்மா... சொல்லம்மா...
(பட்டுப் பாவாடை)

கட்டழகை ஆடை கொண்டு
சுற்றி விட்ட கோலம் என்ன
*வட்டமிடும்* கண்கள் ரெண்டும்
கொட்டிவிட்ட பாவம் என்ன
பெண்மை ஒன்று ஆண் என்று
மாறி வந்த சேதி என்ன (பட்டுப் பாவாடை)

[1/6, 07:41] nagarajan: *வட்டமிட*

[1/6, 08:00] A D வேதாந்தம்: விடை= வட்டமிட/ வேதாந்தம்

[1/6, 08:15] G Venkataraman: வட்டமிட

[1/6, 08:32] Bharathi: வட்டமிட

[1/6, 08:40] Rohini Ramachandran: Vattamida... indraiya udhirivedi
Rohini Ramachandran

[1/6, 08:44] ஆர்.பத்மா: வட்டமிட
[
[1/6, 08:52] siddhan subramanian: வட்டமிட

[1/6, 07:06] sathish: வட்டமிட

[1/6, 09:08] N T Nathan: வட்டமிட

[1/6, 09:36] chithanandam: வட்டமிட

[1/6, 10:23] ஆர். நாராயணன்.: வட்டமிட

[1/6, 10:31] வானதி: *வட்டமிட*

[1/6, 11:40] shanthi narayanan: வட்டமிட

[1/6, 11:40] stat senthil: வட்டமிட

[1/6, 13:43] கு.கனகசபாபதி, மும்பை: வட்டமிட

[1/6, 14:46] மாலதி: வட்டமிட

***************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 07-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
நுழையா அம்பு காலுக்குள் பாய்ந்தது (2)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7
Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 07-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*பழமொழி:*

_அழையா வீட்டுக்கு *நுழையா* சம்பந்தி_

**********************
*ஏலாதி - பதினெண் கீழ்க்கணக்கு*

வணங்கி, வழி ஒழுகி, மாண்டார் சொல் கொண்டு,
நுணங்கிய நூல் நோக்கி, *நுழையா* , இணங்கிய
பால் நோக்கி வாழ்வான் - பழி இல்லா மன்னனாய்,
நூல் நோக்கி வாழ்வான், நுனித்து.59

*பொருள்*
பிறர்க்குப் பணிந்து, நெறியே யொழுகி, மாட்சிமைப்பட்டார் சொற்களை யுகந்துகொண்டு, நுண்ணிய நூல்களை யோதி, நுண்ணிதாக வறிந்து பொருந்திய பான்மையை நோக்கி யொழுகுவான், குற்றமில்லா வரசனாய் நுண்ணிய நூல்களை யறிந்து மறுமையின்கண் வாழ்வான். 

*கருத்து* : இம்மையில் வணக்கமும், ஒழுக்கமும், சான்றோர் மதிப்பும், ஆராய்ச்சியும் உடையவன், மறுமையில் இக்கல்வியுடன் பொருளும் ஒருங்கெய்தி வாழ்வான். 
**********************
_நுழையா அம்பு காலுக்குள் பாய்ந்தது (2)_

_அம்பு காலுக்குள் பாய்ந்தது_
= _பாய்ந்தது_ indicator for container clue in
_அம்(பு கா)லுக்குள்_
= *புகா*
= _நுழையா_
**********************
*தேவாரம்*
பதினொன்றாம் திருமுறை 

029 திருஏகம்பமுடையார் திருவந்தாதி
பாடல் எண் : 84

_இழையார் அரவணி ஏகம்பர் நெற்றி_
_விழியின்வந்த பிழையா அருள்நம் பிராட்டிய_ 
_தின்ன_ _பிறங்கலுன்னும் *நுழையா* வருதிரி_ _சூலத்தள் நோக்கரும்_ _பொன்கடுக்கைத்_
_தழையார் பொழில்உது பொன்னே_ 
    _நமக்குத் தளர்வில்லையே_
**********************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/7, 07:11] திரைக்கதம்பம் Ramarao: புகா
[
[1/7, 07:12] V N Krishnan.: புகா. நுழையா
[
[1/7, 07:16] பாலூ மீ.: புகா.
[
[1/7, 07:18] Meenakshi: விடை: புகா(அம் புகா லுக்குள்)=நுழையா.

[1/7, 07:20] மீ.கண்ணண்.: புகா

[1/7, 07:22] Sucharithra: புகா
[
[1/7, 07:22] Dhayanandan: *புகா*

[1/7, 07:24] stat senthil: புகா

[1/7, 07:25] balakrishnan: புகா🙏

[1/7, 07:30] akila sridharan: புகா

[1/7, 07:34] sathish: புகா

[1/7, 07:35] sankara subramaiam: புகா

[1/7, 07:39] Bhanu Sridhar: புகா

[1/7, 07:42] Dr. Ramakrishna Easwaran: *புகா*

[1/7, 07:43] Ramki Krishnan: புகா
[
[1/7, 07:52] nagarajan: *புகா*

[1/7, 08:09] A Balasubramanian: புகா
A.Balasubramanian

[1/7, 08:31] V R Raman: புகா

[1/7, 08:35] prasath venugopal: புகா
[
[1/7, 08:44] A D வேதாந்தம்: விடை= புகா/ வேதாந்தம்.

[1/7, 08:53] siddhan subramanian: புகா

[1/7, 08:56] Viji - Kovai: வாய்

[1/7, 08:58] மாலதி: புகா

[1/7, 09:10] ஆர். நாராயணன்.: புகா
[
[1/7, 09:29] கு.கனகசபாபதி, மும்பை: புகா

[1/7, 09:54] G Venkataraman: புகா

[1/7, 11:01] Revathi Natraj: புகா
[
[1/7, 11:06] shanthi narayanan: புகா
[
[1/7, 12:16] வானதி: *புகா*

[1/7, 17:47] ஆர்.பத்மா: புகா
[
[1/7, 19:53] Suba: Hello sir, புகா
[
[1/7, 19:59] Bharathi: *புகா*
**************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 08-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
அழகியின் தலைக்கருகில் தலையை வைத்த கவனக்குறைவு (5)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7

Raghavan MK said…
A peek into today's riddle !
*************************

*இன்றைய உதிரிவெடி!*( 08-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*_அனுபவத்தின் அறிவுரைகள்_*

உனை ஒதுக்கும் சமூகத்தை 
ஓரங்கட்டி வை... 
ஆழி அலை விரட்டும் படகு தான் 
கரை வந்து சேரும்!!! 
.................. 

நற்செயல் எச் செயலோ 
அச்செயலை இச்சையுடன் செய்... 
அடுத்தவன் ஆர்ப்பரிப்பான் என்று 
*அசிரத்தை* கொள்ளாதே!!! 
.................... 

இங்கெவரும் வீழாமல் எழுந்ததில்லை, 
நீ! தோற்கும் போதும் புன்னகை செய், 
அதைப் பார்த்து வெற்றிக்கும் 
உன் மீது பிரியம் பிற‌க்கட்டும்!!! 
...................... 
அறிவுரைகள் எல்லாம் 
அனுபவங்கள்... 
அகங்காரம் கொண்டு 
அதைக் கழித்து விடாதே!!!
(எழுதியவர் : ஹனாப்)
**********************
_அழகியின் தலைக்கருகில் தலையை வைத்த கவனக்குறைவு (5)_

_அழகியின் தலை_
= *அ(ழகி) = அ*

_தலை_ = *சிரம்*
_தலையை_
= *சிரத்தை*

_தலைக்கருகில் தலையை வைத்த_
= *அ + சிரத்தை*
= *அசிரத்தை*
= _கவனக்குறைவு_
**********************
*இனிமை கெடாத வாழ்வு :*

வாழ்க்கையில் என்றும் மகிழ்ச்சி நிலவ வேண்டும். அதற்கு ஏமாற்றமில்லாமல் வாழ வேண்டும். ஏமாற்றம் என்பது துன்பமும் சோர்வும் அளிக்கின்ற ஒரு மனநிலை. அது தன்னாலும் வரலாம். பிறராலும் வரலாம். இயற்கையாலும் கூட எழலாம்.
1) பேராசை,
2) அறியாமை,
3) தப்புக் கணக்கு,
4) விழிப்பின்மை,
5) பகை,
6) இயற்கைச் சீற்றம்,
ஆகிய ஆறு வகையில் ஏமாற்றங்கள் வருகின்றன.

பொதுவாக எல்லோரும் தங்கள் வாழ்வில் காணும் துன்பங்களுக்கு இந்த ஏமாற்றமே பெரும்பாலும் காரணமாக இருப்பதால், ஏமாற்றத்தைத் தவிர்க்கக் கூடிய சிந்தனையும், அந்தச் சிந்தனை தந்த விளக்கத்தைச் செயலுக்குக் கொண்டு வருகின்ற அறிவு மேன்மையும் வேண்டும். விழிப்பின்மையால் அலட்சியம், *அசிரத்தை* , சோம்பல் இவற்றுக்கு இடம் கொடுத்தால் செயல்திறன் குன்றிவிடும். அம்மாதிரியான மனநிலையில் செயலாற்றி, அதன் காரணமாக வெற்றி தவறிப் போகும் போது கவலை வரும்.

சிந்தனையோடு ஆராய்ந்து நல்ல முடிவு எடுக்க வேண்டும். நல்ல முடிவை செயலுக்கு கொண்டு வரும் திறமும், துணிச்சலும் வேண்டும். இத்தகைய சிந்தனையும், அதனால் ஏற்படும் விழிப்புணர்வும், வாழ்க்கை முறையும் மனிதனின் வாழ்வில் வெற்றியையும், அமைதியையும் தரும்."

(வேதாத்திரி மகரிஷி)
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************

[1/8, 07:07] sathish: அசிரத்தை
[
[1/8, 07:07] nagarajan: *அசிரத்தை*

[1/8, 07:07] Dr. Ramakrishna Easwaran: *அசிரத்தை*

[1/8, 07:07] மீ.கண்ணண்.: அசிரத்தை

[1/8, 07:09] திரைக்கதம்பம் Ramarao: அசிரத்தை

[1/8, 07:09] siddhan subramanian: அசிரத்தை (அ+சிரத்தை)
[1/7, 07:25] balakrishnan: புகா🙏
[1/8, 07:11] balakrishnan: அசிரத்தை🙏

[1/8, 07:12] V N Krishnan.: அசிரத்தை

[1/8, 07:24] Meenakshi: விடை:அசிரத்தை

[1/8, 07:25] Ramki Krishnan: அசிரத்தை
[
[1/8, 07:28] A D வேதாந்தம்: விடை=அசிரத்தை/ வேதாந்தம்

[1/8, 07:30] மாலதி: அசிரத்தை

[1/8, 07:34] N T Nathan: அசிரத்தை
[
[1/8, 07:40] G Venkataraman: அசிரத்தை
[1/
] Dhayanandan: *புகா*
[1/8, 07:45] Dhayanandan: *அசிரத்தை*
[
[1/8, 07:46] A Balasubramanian: அசிரத்தை
A.Balasubramanian

[1/8, 07:47] prasath venugopal: அசிரத்தை

[1/8, 07:54] Bhanu Sridhar: அசிரத்தை

[1/8, 07:58] ஆர். நாராயணன்.: அசிரத்தை

[1/8, 08:25] Bharathi: அசிரத்தை
[
[1/8, 08:28] கு.கனகசபாபதி, மும்பை: அசிரத்தை

[1/8, 08:50] Rohini Ramachandran: அசிரத்தை
ரோகிணி ராமச்சந்திரன்

[1/8, 08:56] akila sridharan: அசிரத்தை

[1/8, 09:34] ஆர்.பத்மா: அசிரத்தை
[
[1/8, 11:31] sankara subramaiam: அசிரத்தை

[1/8, 12:03] shanthi narayanan: அசிரத்தை

[1/8, 12:11] பாலூ மீ.: அ +சிரம் + தை = அசிரத்தை.

[1/8, 13:49] வானதி: *அசிரத்தை*

[1/8, 20:22] Viji - Kovai: அசிரத்தை
*************************
Raghavan MK said…
********************
*இன்றைய உதிரிவெடி!*( 09-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
உதாரணமாகச் சென்னையிலிருப்பவன் மார்கழி தொடங்கி அசைய வாத்தியத்தை 
இசை (6)
**********************
உங்கள் விடைகளை  
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல் 
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*********************7



Raghavan MK said…
A peek into today's riddle !
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 09-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
**********************
*மாதங்களில் நான் மார்கழி!*

ஆழ்வார்களும் ஆச்சாரியர்களும் நாயன்மார்களும் அவதரித்த தமிழகத்தில் தார்மீகம், தெய்விகம் சிறக்க வெளிப்படுவது *மார்கழி மாதம்* . இசை, இலக்கிய, ஆன்மிகச் சொற்பொழிவுகள் காலையிலும் மாலையிலும் இறை உணர்வுடன் நிகழ்வதும் மார்கழி மாதமே. பகவத் கீதையில் கிருஷ்ணர் திருவாய் மலர்ந்து அருளி மகிழ்ந்ததும், *‘மாதங்களில் நான் மார்கழி’* என்று அர்ஜுனனுக்குப் போர்க்களத்தில் உபதேசிக்கப்பட்டது மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி அன்றுதான்.

கடும் பனி பொழிகிற சூழ்நிலையிலும் விடியற் காலையில் நீராடி, கோலமிட்டு, ஆலயம் சென்று திருப்பாவை, திருவெம்பாவை பாடி, திருப்பள்ளி எழுச்சியை உற்சாகத்துடனும் அனுபவித்து உடல் புத்துணர்ச்சி பெறுவதும் மார்கழி மாதத் தருணத்தில்தான்!

(hindutamil.in)
**********************
_உதாரணமாகச் சென்னையிலிருப்பவன்மார்கழி தொடங்கி வாத்தியத்தை இசை (6)_

_மார்கழி தொடங்கி_
= *மா[ர்கழி] = மா*

_அசைய_ = *நகர*

_வாத்தியத்தை இசை_
= *வாசி*

_உதாரணமாகச் சென்னையிலிருப்பவன்_
= *மா+நகர+வாசி*
= *மாநகரவாசி*
**********************
_"மார்க் சீர்ஷம்"_ என்ற தொடர் _"மார்கழி"_ என்று மாறியது. மார்க் சீர்ஷம் என்றால், தலையான மார்க்கம் என்று அர்த்தம். இதன் வேறு பெயர் தனுர் மாதம் என்றும் அழைக்கலாம்

மார்கழி மாதத்தைப் பீடை மாதம் என்றும் சொல்லுவார்கள். வைத்திய நூல்கள் மார்கழியைப் பீடை என்று வழங்குகின்றது. மார்கழியின் பனிக் குளிச்சி சிலருக்கு நோய் துன்பங்களைத் தரும். அதனால்தான் இது பீடை மாதம் ஆனது. அகப்புறப் பீடைகளைப் பக்திப் பணிகளால் அறவே ஒழித்து, தூய்மையாக்கப் பொருத்தமான மாதமே மார்கழிதான். பீடு என்றால், பெருமை என்று பொருள். பன்னிரெண்டு மாதங்களில் மிக்க பெருமையுடைய மாதம் "பீடை மாதம்" என்று மற்றொரு பொருளும் கூறுகிறது. *பீடுடை மாதம் என்பதே மருவி பீடை என்றானது.*
*********
_காலங்களில் அவள் வசந்தம்_
_கலைகளிலே அவள் ஓவியம்_
*_மாதங்களில் அவள் மார்கழி_*
_மலர்களிலே அவள் மல்லிகை_

_பறவைகளில் அவள் மணிப்புறா_
_பாடல்களில் அவள் தாலாட்டு_
_கனிகளிலே அவள் மாங்கனி_
_காற்றினிலே அவள் தென்றல்_

_காலங்களில் அவள் வசந்தம்_
_கலைகளிலே அவள் ஓவியம்_
*_மாதங்களில் அவள் மார்கழி!_*

: பாவ மன்னிப்பு-1961
************************
💐🙏🏼💐
Raghavan MK said…
***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[1/9, 07:06] திரைக்கதம்பம் Ramarao: மாநகரவாசி

[1/9, 07:06] Suba: Hello sir
மாநகரவாசி
[
[1/9, 07:07] மீ.கண்ணண்.: மாநகரவாசி
[
[1/9, 07:08] Dr. Ramakrishna Easwaran: *நகரவாசி*

[1/9, 07:09] பாலூ மீ.: மாநகரவாசி.

[1/9, 07:09] balakrishnan: மாநகரவாசி🙏
[
[1/9, 07:10] Meenakshi: விடை:மாநகரவாசி

[1/9, 07:11] Bhanu Sridhar: மாம்பலவாசி

[1/9, 07:15] A Balasubramanian:
மாநகரவாசி
[
[1/9, 07:43] G Venkataraman: மாநகர வாசி
[
[1/9, 07:48] stat senthil: மாநகரத்தான்
[
[1/9, 07:49] siddhan subramanian: மாநகரவாசி [மா(ர்கழி) + நகர (அசைய) + வாசி (இசை)]

[1/9, 07:49] nagarajan: *மாநகரவாசி*

[1/9, 08:28] ஆர். நாராயணன்.: மாநகரவாசி

[1/9, 08:30] A D வேதாந்தம்: விடை= மாநகரவாசி / வேதாந்தம்.

[1/9, 09:19] Rohini Ramachandran: மாநகரவாசி

[1/9, 11:06] ஆர்.பத்மா: மாநகரவாசி

[1/9, 13:01] sankara subramaiam: மாநகரவாசி

[1/9, 13:47] Viji - Kovai: மாநகரவாசி
[
[1/9, 14:13] வானதி: மாநகரவாசி

[1/9, 16:25] Dr. Ramakrishna Easwaran:
மாநகரவாசி
[
[1/9, 17:14] akila sridharan: மாநகரவாசி
[
[1/9, 17:37] கு.கனகசபாபதி, மும்பை: மாநகரவாசி

[1/9, 18:43] N T Nathan: மாநகரவாசி

[1/9, 19:31] Sucharithra: மாநகர வாசி
[
[1/9, 20:19] V N Krishnan.: மாநகரவாசி
[
[1/9, 20:48] shanthi narayanan: மாநகரவாசி

**************************

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்