இன்று காலை வெளியான வெடி:
பொழுது போக்குக்கு உள்ளே அதுவின்றி அரைப்பது உறுதி (6)
அதற்கான விடை: திரைப்படம் = திடம் + ரைப்ப
திடம் = உறுதி
ரைப்ப = அரைப்பது - அது
இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
பொழுது போக்குக்கு உள்ளே அதுவின்றி அரைப்பது உறுதி (6)
அதற்கான விடை: திரைப்படம் = திடம் + ரைப்ப
திடம் = உறுதி
ரைப்ப = அரைப்பது - அது
இன்றைய புதிருக்கான விடையைக் கண்டவர்களின் பட்டியலை இங்கே காணலாம்.
Comments
*************************
1895–ம் வருடம், டிசம்பர் மாதம் 28–ந்தேதி முதன் முதலில் மாலை நேரத்தில் பாரீஸ் நகரில் உள்ள கிராண்ட் கபே என்ற ஓட்டலின் கீழ்தளத்தில் முதல் திரைப்படம் திரையிடப்பட்டது. அப்படத்திற்கு ஒரு பிராங்க் கட்டணம் வசூலிக்கப்பட்டது. முதல் திரைப்படத்தை அரங்கேற்றியவர்கள் லூமியேர் மற்றும் லூயி லூமியேர் என்ற பிரான்சு நாட்டை சேர்ந்த இரட்டையர்கள் .
************************
_பொழுது போக்குக்கு உள்ளே அதுவின்றி அரைப்பது உறுதி (6)_
_அதுவின்றி அரைப்பது_
= _அரைப்பது minus அது_
= *ரைப்ப*
_உறுதி_
= *திடம்*
_உள்ளே_ = indicator to put
*ரைப்ப* inside *திடம்*
= *தி[ரைப்ப ]டம்*
= *திரைப்படம்*
= _பொழுது போக்குக்கு_
************************
மனித வாழ்க்கையில் பொழுதுபோக்கு இன்றியமையாத இடம் வகிக்கிறது. பொழுதுபோக்கு என்பது மனிதர்க்கு மனிதர் மாறுபடும். இசையில் மிகுந்த ஈடுபாடு உள்ளோர்க்கு இசையே வாழ்க்கை. மற்றவர்க்கு அது பொழுதுபோக்காக இருக்கலாம். அதுபோலவே பிறவும். உடல்நலனில் அக்கறை உள்ளவர்க்கு விளையாட்டு பொழுதுபோக்கு. வெளியே சென்று விளையாட முடியாதவர்கள் கேரம், சதுரங்கம், சீட்டுக்கட்டு போன்ற உள்ளரங்க விளையாட்டுகளில் (Indoor Games) ஆர்வம் காட்டுவர். வேறு சிலர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விருப்பம் கொண்டிருப்பர். திரைப்படங்கள் பார்ப்பது, திரைப்படப் பாடல்களைக் கேட்பது பலரது பொழுதுபோக்காக இருப்பதைக் காண்கிறோம். இன்னும் சிலர் இருக்கிறார்கள். குறிக்கோளின்றி மனதில் தோன்றியபடி அரட்டை அடித்தே பொழுதைப் போக்குவர். இங்கே குறிப்பிடத்தக்க செய்தி என்னவெனில் இத்தகைய பொழுதுபோக்குகள் அனைத்துமே இணையத்தில் கிடைக்கின்றன. இன்னொரு நண்பர் இருக்க வேண்டிய தேவை இல்லை. கணிப்பொறியும் இணைய இணைப்பும் இருந்தால் போதும்.
*இன்றைய உதிரிவெடி!*( 18-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ஒரு கதவு உரச சாவைத் தவிர்த்த பல்லி (3)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 18-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_பழமொழி_
*ஊருக்கு எல்லாம் சாஸ்திரம் சொல்லுகிற பல்லி, கூழ்ப் பானையில் விழுந்தது போல.*
************************
*பழமொழி நானூறு - பதினெண் கீழ்க்கணக்கு*
_உரைந்தாரை மீதூரர் மீக்கூற்றம் *பல்லி*_
_நெரித்தசினை போலும் நீளிரும் புன்னைப் பொரிப்பூ_ _இதழுறைக்கும் பொங்குநீர்ச் சேர்ப்ப!_
_நரிக்கூஉக் கடற்கெய்தா வாறு._
*பொருள்:*
*பல்லி* நெரித்த சினை போலும் நீள் இரும் புன்னை - பல்லியது நெரிக்கப்பட்ட முட்டையைப்போல மலர்ந்திருக்கின்ற நீண்ட பெரிய புன்னை, பொரி பூ இதழ் உறைக்கும் பொங்குநீர் சேர்ப்ப - பொரியைப் போன்ற பூக்களினது இதழ்களைப் பரப்பும் நீர் மிகுந்த கடல் நாடனே!, உரைத்தாரை - தம்மை நலிய உரைத்தவர்களை, மீதூரா மீக்கூற்றம் - செயலால் மிக் கொழுகாது சொற்களால் தாமும் மிக்கொழுகல், நரி கூ கடற்கு எய்தா ஆறு - நரியின் கூவிளியால் கடல் ஒலியைத் தாழ்விக்கமாட்டாதவாறு போலும்.
' *நரிக் கூஉக் கடற்கெய்தா வாறு'* என்பது பழமொழி.
************************
_ஒரு கதவு உரச சாவைத் தவிர்த்த பல்லி (3)_
_உரச_
= *பட*
_சாவு_
= *பலி*
_சாவைத் தவிர்த்த பல்லி_
= *பல்லி -பலி*
= *ல்*
_ஒரு கதவு_
= *பட+ல்*
= *படல்*
************************
*படல்* என்பது வீட்டின் வெளிப்புற வாசலை மூடுவதற்காகப் பயன் படுத்தப்படும் *வாசல் அடைப்பு*. பொதுவாக இது மூங்கில், பனை ஓலை, தென்னை ஓலை, சிறு குச்சிகள் முதலியவற்றால் செய்யப் பட்டிருக்கும்.
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/18, 07:00] திரைக்கதம்பம் Ramarao: படல்
[
[1/18, 07:01] sankara subramaiam: படல்
[
[1/18, 07:04] balakrishnan: 🙏 படல்
[1/18, 07:07] மீ.கண்ணண்.: வாசல்
[1/18, 07:10] பாலூ மீ.:
உரச = பட + (ப)ல் (லி) = படல்
[
[1/18, 07:12] Meenakshi: விடை:படல்
உரச=பட+ப ல் லி--பலி=ஒருகதவு
[1/18, 07:13] prasath venugopal: படல்
[1/18, 07:43] siddhan subramanian: படல் (பட + (ப (ல்)லி)
[1/18, 07:53] chithanandam: படல்
[1/18, 08:03] nagarajan: *படல்*
[
[1/18, 08:44] ஆர். நாராயணன்.: படல்
சாவு = பலி, பல்லி - பலி = ல், உரச = பட :
பட+ல் = படல் = கதவு
[
[1/18, 11:08] மாலதி: படல்
[1/18, 14:53] வானதி: *படல்*
[1/18, 20:06] stat senthil: படல்
[1/18, 20:10] sathish: கவுளி
[1/18, 20:49] G Venkataraman: கவுளி
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
கங்கா கடைசி பல் காயச் சின்னம் சிதற கைதி பெற்றது (6)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 19-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*கடுங்காவல் தண்டனை என்றால் என்ன?*
பத்து ஆண்டுக்கு மேல் ஒரு குற்றத்திற்க்கு தண்டனை கொடுத்தால் அவற்றை கடுங்காவல் தண்டனை என்பார்கள் அதே ஆறுமாத சிறைதண்டனையை அதற்கு கீழ் உள்ளதை சாதாரண சிறை தண்டனை என்பார்கள் சுருங்க சொன்னனால் தண்டனை வருடங்களை பொறுத்து சாதா,கடும் என்று அழைக்கப்படும்.
************************
_கங்கா கடைசி பல் காயச் சின்னம் சிதற கைதி பெற்றது (6)_
_கங்கா_
= *கங்கா*
_கடைசி பல்_
= *ல்*
_காயச் சின்னம்_
= *வடு*
_சிதற_
= anagram indicator for *( கங்கா+ல்+வடு)*
= *கடுங்காவல்*
= _கைதி பெற்றது_
************************
*காதல் காவல் தண்டனை*
உன் வெட்க்கம்
தின்றது பாதி
என் தயக்கம்
தின்றது பாதி
காதல் தின்றது
நம் மீதியை
<<<<<<<<>>>>>>>>.
நீ குத்திய
காதல் அம்பு ஒன்று
ஏற்கனவே என்
இதயத்தில் குத்தியிருக்க
வார்த்தையால் வேறுஒன்றை
குத்திவிடதே ….
<<<<<<<<>>>>>>>
உனக்கு ஆயுள்தண்டனை
விதித்துள்ளேன்
*கடுங்காவல்* அல்ல
காதல் காவல் தண்டனை
என் மனசிறையில்
<<<<<<<<>>>>>>>>.
(இதயத்திருடன் – கவிதை)
<<<<<<<<>>>>>>>>.
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/19, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கடுங்காவல்
[1/19, 07:02] V N Krishnan.: கடுங்காவல்
[1/19, 07:03] Ramki Krishnan: கடுங்காவல்
[
[1/19, 07:06] sathish: படுகாவல்
[1/19, 07:09] பாலூ மீ.: கடுங்காவல்
[
[1/19, 07:13] balakrishnan: 🙏 கடுங்காவல்
[
[1/19, 07:15] Bharathi: கடுங்காவல்
[1/19, 07:16] Rohini Ramachandran: Kadunkaaval
[1/19, 07:17] Bhanu Sridhar: கடுங்காவல்
[1/19, 07:17] மீ.கண்ணண்.: கடுங்காவல்
[1/19, 07:29] sankara subramaiam: கடுங்காவல்
[
[1/19, 07:32] Meenakshi: விடை:,கடுங்காவல்
[1/19, 07:34] கு.கனகசபாபதி, மும்பை: கடுங்காவல்
[
[1/19, 07:47] Usha Chennai: கடுங்காவல்
[
[1/19, 07:51] nagarajan: *கடுங்காவல்*
[1/19, 08:13] Dhayanandan: *கடுங்காவல்*
[1/19, 08:38] siddhan subramanian: கடுங்காவல் (கங்கா + வடு + (ப)ல்
[
[1/19, 10:28] ஆர். நாராயணன்.: கடுங்காவல்
[
[1/19, 10:59] வானதி: கடுங்காவல்
[
[1/19, 14:10] G Venkataraman: கடுங்காவல்
[1/19, 20:12] sathish: கடுங்காவல்
**************************
*இன்றைய உதிரிவெடி!*( 20-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பழுத்த கந்தனின் முடிவைத் துறந்த மாற்றம் (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 20-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
*கனிந்த பாடல்கள்*
************************
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானமதில்
நிலைபெயராது சிலைபோலவே நின்று
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா - என் மனம்
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
*கனிந்த* உன் வேணுகானம் காற்றில் வருகுதே கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
************************
அன்பு மனம் *கனிந்த* பின்னே அச்சம் தேவையா...?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா..?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா..?
அஞ்சுவதில் அஞ்சி நின்றால் அச்சமாகுமா...?
அன்பு மனம் கனிந்ததும் புரியாமல் போகுமா..?
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா...?
திரைப்படம்:ஆளுக்கொரு வீடு:1960
************************
அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்
ஆற்றங்கரை மேட்டினிலே ஆடி நிற்கும் நாணலது
காற்றடித்தால் சாய்வதில்லை *கனிந்த* மனம் வீழ்வதில்லை
அமைதியான நதியினிலே ஓடும்
படம்: ஆண்டவன் கட்டளை1964
************************
_பழுத்த கந்தனின் முடிவைத் துறந்த மாற்றம் (4)_
கந்தனின் முடிவைத் துறந்த
= deleting last letter in கந்தனின்
= கந்தனி
மாற்றம்
= anagram of கந்தனி
= *கனிந்த*
= பழுத்த
************************
அம்பா மனம் *கனிந்து* உனது கடைக் கண்பார்
திருவடி இணை துணை என்
(அம்பா)
வெம்பவ நோய் அற அன்பர் தமக்கு அருள்
கதம்ப வனக்குயிலே – சங்கரி ஜகதம்பா(அம்பா)
பைந்தமிழ் மலர்ப் பாமாலை சூடி உன்
பாதமலர்ப் பணிந்து பாடவும் வேண்டும்
சிந்தையும் என் நாவும் எந்நேரமும் நின்
திருப்பெயர் புகழ் மறவாமையும் வேண்டும்
பந்த உலகில் மதி மயங்கி அறு பகைவர்
வசமாய் அழியாமல் அருள்பெற வேண்டும்
இந்த வரம் தருவாய் ஜகதீஸ்வரி
எந்தன் அன்னையே அகிலாண்ட நாயகி(அம்பா)
சாகித்யம் : பாபநாசம் சிவன்;
இசை: ஜி.இராமநாதன்;
*பாடியவர்:: எம்.கே.தியாகராஜ பாகவதர்*
************************
பழமொழி
*கனிந்த பழம் தானே விழும்.*
************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/20, 07:01] திரைக்கதம்பம் Ramarao: கனிந்த
[1/20, 07:02] Dhayanandan: *கனிந்த*
[1/20, 07:04] Ramki Krishnan: கனிந்த
[
[1/20, 07:05] மீ.கண்ணண்.: கனிந்த
[1/20, 07:05] Meenakshi: விடை:கனிந்ந
[1/20, 07:07] Rohini Ramachandran: Kanindha
[1/20, 07:08] sathish: கனிந்த
[1/20, 07:09] பாலூ மீ.: கந்தனி ன் மாற்றம் = விடை = கனிந்த
[1/20, 07:09] balakrishnan: 🙏கனிந்த
[1/20, 07:13] akila sridharan: கனிந்த
[
[1/20, 07:17] Suba: Hello sir
கனிந்த
[
[1/20, 07:19] Dr. Ramakrishna Easwaran: *கனிந்த*
[1/20, 07:21] Usha Chennai: கனிந்த
[
[1/20, 07:29] stat senthil: கனிந்த
[1/20, 07:36] siddhan subramanian: கனிந்த (கந்தனின் - ன் = கந்தனி சிதற விடை)
[1/20, 07:47] ஆர். நாராயணன்.: கனிந்த
[
[1/20, 07:48] sankara subramaiam: கனிந்த
[1/20, 07:55] nagarajan: *கனிந்த*
[
[1/20, 08:02] chithanandam: கனிந்த
[1/20, 08:06] prasath venugopal: கனிந்த
[1/20, 08:16] V N Krishnan.: கனிந்த
[
[1/20, 08:19] Viji - Kovai: கனிந்த
[
[1/20, 08:43] Bhanu Sridhar: கனிந்த
[1/20, 09:08] Bharathi: கனிந்த
[1/20, 10:02] A D வேதாந்தம்: விடை= கனிந்த/ வேதாந்தம்.
[1/20, 10:19] Revathi Natraj: *இன்றைய உதிரிவெடி!*( 20-01-2021): கனிந்த
[1/20, 10:28] கு.கனகசபாபதி, மும்பை: கனிந்த
[1/20, 10:32] G Venkataraman: கனிந்த
[1/20, 11:43] shanthi narayanan: கனிந்த
[1/20, 12:28] sridharan: கனிந்த
[
[1/20, 13:40] வானதி: *கனிந்த*
[
[1/20, 14:28] ஆர்.பத்மா: கனிந்த
[
[1/20, 17:46] A Balasubramanian: கனிந்த
A.Balasubramanian
[
[1/20, 18:29] Porchelvi: பழம்நீ
[
[1/20, 19:16] N T Nathan: கனிந்த
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 21-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
மீதமான வள்ளல் இல்லாமல் காஞ்சி எரிய சிதைந்தது (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 21-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
***********************
*எஞ்சிய சுகம்*
வேண்டிய சுகம்
வாடிய பின் கிடைப்பதில்
அர்த்தமில்லை..
தூண்டிய பின்
மீண்ட சுகம்
அலுப்பதில்லை..
*_எஞ்சிய சுகம் மிஞ்சிய பின் தொடர்வதில்லை.._*
வாழ்வின் சுவை
ருசிக்கும் வரை
தெரிவதில்லை..
ருசிக்கும் வாழ்க்கை
நிலைப்பதில்லை!!!
***********************
_மீதமான வள்ளல் இல்லாமல் காஞ்சி எரிய சிதைந்தது (4)_
_வள்ளல்_
= *காரி*
_வள்ளல் இல்லாமல் காஞ்சி எரிய_
= *காஞ்சிஎரிய - காரி*
= *ஞ்சிஎய*
_சிதைந்தது_
= anagram indicator for *ஞ்சிஎய*
= *எஞ்சிய*
= _மீதமான_
***********************
_கொஞ்சியது போதும்_
_எஞ்சியது_
_எனக்கும் தாயேன் என கெஞ்சியது_
_என் மனம் நீ எதிர் வீட்டு குழந்தையை கொஞ்சுகையில்..._
(கவி)
***********************
*முதல் தனிமை!*
வாழ்க்கை என்னும் வட்டத்தில் பொருள் தேடி புறப்பட்டான்!
உறவும், தோளும் ஊரிலே வழியனுப்பி நின்றது!
கடனும் கனவும் விடாமல் துரத்தின!
அயலூர் வீதிகளில் அல்லும் பகலுமாய் திரிந்து!
ஐந்தையும் பத்தையும் பார்த்து பார்த்து செலவு செய்து!
*எஞ்சியதில் மிஞ்சினால்* மாதக்கடைசியில் உணவு உண்டு!
கண்டு கண்டு பயணித்து கன்றுபோல் நடந்து!
வேலை என்னும் சிகரம் நோக்கி குன்றேறினான்!
பெற்றோர்களே பிள்ளைகளை உங்கள் கண்முன் சிறகடிக்க பழக்கிவிடுங்கள்!
ஒரு முறை விழுந்து பின்பு எழுவதை கற்றுக்கொடுங்கள்!
*அம்பாரியில் இருந்து இறக்கிவிட்டு!*
*நடந்து போக கற்றுக்கொடுங்கள்!*
*அவன் விழுவான் சற்று பொறுங்கள் எழுவான்!*
தனிமையே அவனை தனிமனிதனாக தேற்றும்!
-செல்வா
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/21, 07:04] prasath venugopal: எஞ்சிய
1/21, 07:04] திரைக்கதம்பம் Ramarao: எஞ்சிய
[1/21, 07:04] மீ.கண்ணண்.: எஞ்சிய
[1/21, 07:06] chithanandam: எஞ்சிய
[1/21, 07:06] balakrishnan: எஞ்சிய 🙏
[1/21, 07:06] sathish: எஞ்சிய
[
[1/21, 07:07] sankara subramaiam: எஞ்சிய
[1/21, 07:07] Bhanu Sridhar: எஞ்சிய
[1/21, 07:08] Meenakshi: விடை:எஞ்சிய
[1/21, 07:10] Dr. Ramakrishna Easwaran: எஞ்சிய
[1/21, 07:10] பாலூ மீ.:
காஞ்சி எரிய மைனஸ் காரி வள்ளல்
விடை எஞ்சிய
[1/21, 07:12] A Balasubramanian: எஞ்சிய
A.Balasubramanian
[
[1/21, 07:25] Ramki Krishnan: எஞ்சிய
[1/21, 07:39] Dhayanandan: *எஞ்சிய*
[
[1/21, 07:48] கு.கனகசபாபதி, மும்பை: எஞ்சிய
[1/21, 07:52] Usha Chennai: எஞ்சிய
[1/21, 07:52] nagarajan: *எஞ்சிய*
[1/21, 07:56] G Venkataraman: எஞ்சிய
1/21, 08:01] ஆர். நாராயணன்.: எஞ்சிய
[1/21, 08:20] Bharathi: எஞ்சிய
[1/21, 08:38] akila sridharan: எஞ்சிய
[1/21, 09:10] siddhan subramanian: எஞ்சிய
[1/21, 09:30] Rohini Ramachandran: Enchiya
[1/21, 09:38] ஆர்.பத்மா: எஞ்சிய
[1/21, 09:45] Revathi Natraj: எஞ்சிய
[
[1/21, 11:04] shanthi narayanan: எஞ்சிய
[1/21, 11:07] Viji - Kovai: எஞ்சிய
[
[1/21, 12:00] A D வேதாந்தம்: விடை= எஞ்சிய/ வேதாந்தம்
[
[1/21, 13:57] வானதி: *எஞ்சிய*
[1/21, 14:17] Rohini Ramachandran: எஞ்சிய
[1/21, 19:11] N T Nathan: எஞ்சிய
[1/21, 19:11] stat senthil: எஞ்சிய
*************************₹
*இன்றைய உதிரிவெடி!*( 22-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
ரணதுங்க முதலில் இருக்கும் இலங்கைநகர் மொண்டெடுக்க உதவும் (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 22-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
***********************
எண்டா உன் மனைவி *கரண்டி* , தட்டு எல்லாம் தூக்கி வீசரா ?"
"நான்தான் சொன்னேனே, அவளுக்கு 'வீசிங்' ப்ராப்ளம் இருக்குன்னு.!!" 😂
-----------------------------------
*கரண்டி ரொம்ப_ "வெயிட்டு*"
*என்பது, கடையில வாங்கும்*
**போது தெரியாது* !
*வீட்ல*
*"வாங்கும்"போது தான்*
*தெரியுது* *என்னா அடி*?
😂😂😂
***********************
_ரணதுங்க முதலில் இருக்கும் இலங்கைநகர் மொண்டெடுக்க உதவும் (4)_
ரணதுங்க முதலில்
= ர
இலங்கைநகர்
= கண்டி
இருக்கும்
= indicator to put ர inside கண்டி
= *கரண்டி*
= மொண்டெடுக்க உதவும்
************************
*அம்பிகாபதி காதல் காப்பியம்*
103. உண்டல், தின்றல், உறிஞ்சல், பருகல் என்னும் நால்வகை இயைந்தவூண் பொருள்கள் மன்னும் மலேயென மண்டி யிருந்தன. மிக்க நீளமும் மிகுந்த அகலமும் தக்கவா யமைந்த தலைவாழை இலைகள் பரப்பி உண்டிகள் படைக்கப் பட்டன; உண்டியோ டிலையில் ஒருநீள் *கரண்டியும்* கண்டவர் அதற்குக் காரணம் வினவ, _இலைகள் பெரிதா யிருத்தலின் எட்டி யிருக்கும் பொருள்கள் எட்டா வாதலின் *கரண்டியா லிழுத்துக்* களிப்பொ டுண்ணலாம் என்னும் நோக்கொடு இலையில் *கரண்டி* வைக்கப் பட்டதாய்_ வளவன் கூற, _எட்டா தாயின் எழுந்தெழுந் தேகி எடுத்துவந் துண்ணலாம்_ என்று கம்பர் அடுத்துக் கூற அனைவரும் நகைத்தனர். 118
😂😂
************************
[1/22, 20:46] M K Raghavan: ***********************
விடையளித்தோர் பட்டியல்
***********************
[
[1/22, 07:00] திரைக்கதம்பம் Ramarao: கரண்டி
[
[1/22, 07:01] sankara subramaiam: கரண்டி
[1/22, 07:02] Bhanu Sridhar: கரண்டி
[
[1/22, 07:03] balakrishnan: 🙏கரண்டி👌
[
[1/22, 07:05] மீ.கண்ணண்.: கரண்டி
[1/22, 07:06] பாலூ மீ.: கரண்டி.
[
[1/22, 07:13] sathish: கரண்டி
[
[1/22, 07:19] G Venkataraman: கரண்டி
[1/22, 07:21] stat senthil: கரண்டி
[1/22, 07:23] chithanandam: கரண்டி
A.Balasubramanian
[1/22, 07:31] A Balasubramanian: கரண்டி
[1/22, 07:33] Dr. Ramakrishna Easwaran: கரண்டி
க(ர)ண்டி
[1/22, 07:40] akila sridharan: கரண்டி.
ரணதுங்க முதலில் - ர
இலங்கை நகர்- கண்டி
கரண்டி - மொண்டெடுக்க உதவும்.
[
[1/22, 07:41] கு.கனகசபாபதி, மும்பை: கரண்டி
[
[1/22, 07:46] Meenakshi: விடை:கரண்டி
[1/22, 07:51] ஆர். நாராயணன்.: கரண்டி
[1/22, 07:52] nagarajan: *கரண்டி*
[1/22, 07:54] Dhayanandan: *கரண்டி*
[1/22, 08:01] prasath venugopal: கரண்டி
[1/22, 08:30] siddhan subramanian: கரண்டி (கண்டி + ர)
[1/22, 08:41] வானதி: *கரண்டி*
[
[1/22, 08:49] N T Nathan: கரண்டி
[1/22, 10:14] Bharathi: கரண்டி
[1/22, 10:53] ஆர்.பத்மா: கரண்டி
[1/22, 12:39] shanthi narayanan: கரண்டி
[1/22, 12:57] மாலதி: கரண்டி
[1/22, 16:21] Venkatesan M: விடை = கரண்டி
[
[1/22, 19:39] Viji - Kovai: கரண்டி
*************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
பேருந்து ரத்து தொடர்ந்து ஓடு (4)
************************
உங்கள் விடைகளை
புதிராடுகளம் - whatsapp ல் 9008746624 பதிவிடவும்.
இரவு 9.00 மணிக்குமேல்
இங்கு விடையை சரிபார்த்துக் கொள்ளவும்.!
*************************
************************
*இன்றைய உதிரிவெடி!*( 23-01-2021)
From *Vanchinathan's* archive-
( *தென்றல்-2011* )
************************
_பேருந்து ரத்து தொடர்ந்து ஓடு (4)_
_பேருந்து ரத்து_
= _விடை ரத்தான பேருந்தில் ஒளிந்துள்ளது_
= _[ *பேருந்*] *துரத்து*_
= *துரத்து*
_தொடர்ந்து ஓடு_
= *துரத்து*
************************
_துரத்து துரத்தென்று துரத்தும் அபிராமி பட்டரின் இந்த பாடலை நீங்களும் நிச்சயம் இரசிப்பீர்கள்!_ 🙏🏼
************************
*அபிராமி அம்மை பதிகம் - நம்மை துரத்துபவை*
_பிறந்தது முதல் ஓடிக் கொண்டே இருக்கிறோம். ஒவ்வொரு கால கட்டத்திலும் ஏதோ ஒன்று நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறது._
*அபிராமி பட்டர் பட்டியல் போடுகிறார்....*
*பாடல்*
_மிகையும் துரத்த, வெம்பிணி யும்துரத்த, வெகுளி ஆனதும் துரத்த,_
_மிடியும் துரத்த, நைரதிரை யும்துரத்த,_
_மிகுவேத னைகளும் துரத்தப்,_
_பைகயும்துரத்த,வஞ்சைனயும் துரத்தப்,_
_பசியென்பதும் துரத்தப், பாவம் துரத்தப், பதிமோகம் துரத்தப்,_
_பலகா யமும்துரத்த,_
_நைகயும்துரத்த, ஊழ்வினையும் துரத்தஎன்_
_நாளும் துரத்த, வெகுவாய்_
_நாவறண்டு ஓடிக்கால் தளர்ந்திடும் என்னை_
_நமனும் துரத்து வானோ?_
_அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே!_
_ஆதி கடவூரின் வாழ்வே!அமுதீசர் ஒருபாகம் அகலாத சுகபாணி!_
_அருள் வாமி! அபிராமியே!_
(11-வது பாடல், முதல் பதிகம்)
********
*பொருள்*
மிகையும் துரத்த = மிகையானவை துரத்த. அது என்ன மிகையும் துரத்த ? மிகை என்றால் அதிகம். நம்மை விட வயதில் அதிகமானவர்கள் (பெற்றோர், அண்ணன், அக்கா), அறிவில் மிகுந்தவர் (வாத்தியார்), பதவியில் பெரியவர்கள் (அலுவகலத்தில் உயர் அதிகாரிகள்)....இவர்கள் நம்மை துரத்திக் கொண்டே இருக்கிறார்கள்...இதை செய், அதை செய்யாதே என்று.
வெம் பிணியும் துரத்த = பிணி நம்மை விரட்டுகிறது. எங்க ஓடுற, நில்லு, வந்து உன்னை பிடிக்கிறேன்னு விரட்டி வருகிறது
வெகுளி ஆனதும் துரத்த = கோபம். பிறரின் கோபம் (கணவன், மனைவி, உயர் அதிகாரி ) இவர்களின் கோபம். சில சமயம் நம் கோபமே நம்மை துரத்தும்.
மிடியும் துரத்த = மிடி என்றால் ஏழ்மை, தரித்திரம். பணம் இல்லை என்றால் கடன் காரன் துரத்துவான்.
நரை திரையும் துரத்த = வயோதிகம் நம் பின்னே வந்து கொண்டே இருக்கிறது. நாமும் அதன் கையில் அகப்படாமல் ஓடி கொண்டே இருக்கிறோம். ஒரு நாள் வரும். காதோரம் நரை முடி எட்டிப் பார்க்கும். பல் விழும். கண்ணில் திரை விழும்...முன்னே இருப்பது தெரியாது - கண்ணாடி இல்லாமல்.
மிகு வேதனைகளும் துரத்தப் = வேதனைகள் எப்படா இவனை பிடிக்கலாம் என்று துரத்தும்.
பகையும் துரத்த = பகைவர்கள், நம்மோடு போட்டி போடுபவர்கள்
வஞ்சனையும் துரத்தப் = நாம் பிறருக்கு செய்த வஞ்சனை (பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின், தமக்கு இன்னா தாமே விளையும்), பிறர் நமக்கு செய்த வஞ்சனைகள்
பசி என்பதும் துரத்தப் = பசி துரத்த
பாவம் துரத்தப் = பாவம் துரத்த
பதி மோகம் துரத்தப் = பதவி மோகம்.
பல காரியமும் துரத்த = அதை செய்யலியே இதை செய்யலியே என்று பற்பல காரியங்களும் துரத்த. ஒவ்வொரு காரியமும் என்னை கவனி என்னை கவனி என்று நம்மை விரட்டுகின்றன
நகையும் துரத்த = கை கொட்டி மற்றவர்கள் சிரிப்பார்களே என்று பயந்து நாம் ஓடுகிறோம்..
ஊழ் வினையும் துரத்த = முன்பு செய்த வினை
என் நாளும் துரத்த = விடாமல் துரத்த
வெகுவாய் நா வறண்டு ஓடிக் = நாக்கு வறண்டு
கால் தளர்ந்திடும் என்னை = கால் தளர்ந்திடும் என்னை
நமனும் துரத்துவானோ? = எமனும் துரத்துவானோ ?
அகில உலகங்கட்கும் ஆதார தெய்வமே! = எல்லா உலகங்களுக்கும் ஆதாரமான தெய்வமே
ஆதி கடவூரின் வாழ்வே! = திருக் கடையூரின் வாழ்வே
அமுதீசர் ஒரு பாகம் அகலாத சுகபாணி! = அமுதீசர் பாகம் அகலாதவளே
அருள் வாமி! அபிராமியே! = அபிராமியே அருள்வாயே
🌺🌺🌺🌺🌺🌺🌺
அபிராமி அம்மைப் பதிகம் என்னும் நூல் அபிராமி அந்தாதி அருளிய
அபிராமி பட்டர்
(இயற்பெயர்: சுப்ரமணிய ஐயர்) இயற்றியது. இந்நூலில் அபிராமித்தாயைப் போற்றி இரு பதிகங்கள் உள்ளன.
*************************
💐🙏🏼💐
விடையளித்தோர் பட்டியல்
***********************
[1/23, 07:01] திரைக்கதம்பம் Ramarao: துரத்து
[1/23, 07:02] Bhanu Sridhar: துரத்து
[1/23, 07:03] balakrishnan: துரத்து. 🙏🤣
[1/23, 07:03] N T Nathan: துரத்து
[
[1/23, 07:06] மீ.கண்ணண்.: துரத்து
[1/23, 07:06] akila sridharan: துரத்து
[
[1/23, 07:07] V N Krishnan.: துரத்து!
[1/23, 07:09] பாலூ மீ.: துரத்து.
[1/23, 07:09] மாலதி: துரத்து
[1/23, 07:11] A Balasubramanian: துரத்து
[
[1/23, 07:13] Meenakshi: விடை:துரத்து
[
[1/23, 07:15] Dr. Ramakrishna Easwaran: துரத்து
[1/23, 07:16] Rohini Ramachandran: துரத்து
[1/23, 07:24] Usha Chennai: துரத்து
Ī
[1/23, 07:27] siddhan subramanian: துரத்து (மறைந்துள்ளது)
[
[1/23, 07:30] G Venkataraman: துரத்து
[1/23, 07:35] ஆர்.பத்மா: துரத்து
[1/23, 07:36] sankara subramaiam: துரத்து
[
[1/23, 07:37] A D வேதாந்தம்: விடை= துரத்து/ வேதாந்தம்.
[1/23, 07:01] sathish: துரத்து
[1/23, 08:03] nagarajan: *துரத்து*
[1/23, 08:17] Dhayanandan: *துரத்து*
[1/23, 08:34] கு.கனகசபாபதி, மும்பை: துரத்து
[1/23, 09:07] வானதி: *துரத்து*
[1/23, 09:29] ஆர். நாராயணன்.: துரத்து
[1/23, 09:44] shanthi narayanan: துரத்து
[1/23, 09:58] balagopal: Good morning sir.
விடை. துரத்து.
[1/23, 10:05] stat senthil: துரத்து
[
[1/23, 19:08] Porchelvi: துரத்து
[
[1/23, 19:11] V R Raman: துரத்து
[1/23, 19:29] Viji - Kovai: துரத்து
*************************