நேற்றைய திரிவெடியில் இடம்பெற்ற சொற்கள். சுண்டைக்காய், வாழைக்காய், கொத்தவரங்காய், முருங்கைக்காய், வெண்டைக்காய் இப்புதிருக்குப் பொருத்தமாய் பல விடைகள், வெவ்வேறு காரணங்களுக்காக ஏற்கப்படவேண்டியவை என்று தெரிந்து கொண்டேன் (1) வாழைக்காய் மட்டும் பழமாகவும் உண்ணப்படுவது, மற்றவை காய்களாகவே பயன்படும் என்று விடை கூறிய மீ கண்ணன், மீனாக்ஷி, அனிதா காந்தி, பானுமதி இவர்களுக்குப் பாராட்டுகள். (2) சுண்டைக்காய் மட்டும் அப்படியே முழுதாகச் சமைக்கப்படுவது, மற்றவையெல்லாம் நறுக்கிய துண்டுகளாகவே சமைக்கப்படும் என்ற ராம்கி கிருஷ்ணன் அளித்த விடை ஏற்கத்தக்கது. பாராட்டுகள். (3) அமாவாசையன்று வாழைக்காய் மட்டும் சமைக்கலாம் என்ற மரபை(பௌர்ணமியன்று!) சுட்டிகாட்டியிருக்கிறார் சொக்கலிங்கம். ஏற்றுக்கொள்ளலாம். (4) பத்மா, ஜோசப் அமிர்தராஜ் இருவரும் வாழைக்காய் மட்டும் தோலை நீக்கிச் சமைக்கப்படவேண்டிய காய் மற்றவை தோலோடு சமைக்கப்படுபவை என்ற பொருத்தமான விடையளித்திருக்கிறார்கள். பாராட்டுகள் (வாஞ்சிநாதனின் விடையும் இதுவே. தினம் காலையில் வீட்டில் சமையலுக்கு உதவுகிறேன் என்று கையில் கத்தியுடன் கிளம்பும்போது இன்று ...