நேற்றைய வெடி: கடைசியாக அழகிய முயல் பிரயாகையில் காணாமற்போனது (3)
பிரயாகையில்
நடக்கும் கும்பமேளாவில் கும்பல் கொஞ்சம் அதிகமாக இருப்பதால் அங்கே முயல்
குட்டியைக் காணாமற்போக்கியவர்கள் தேட வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறார்கள்.
சுஜாதாவின்
கதையொன்றில்(1978/'79) மேற்கோள் காட்டப்பட்ட புவியரசின் கவிதையில் கூறியது
போல் ஆகிவிடும். ("தேடாதே, தேடினால் நீயும் காணாமற்போய்விடுவாய், வழிகள்
மாற்றிவைக்கப்பட்டுள்ளன").
இதற்கான விடை:
யமுனை = ய + முனை
ய = 'அழகிய' என்ற சொல்லின் கடைசி எழுத்து
முனை = முயல் (முயற்சி திருவினையாக்கும்)
பிரயாகையில் கங்கையில் சங்கமித்து யமுனை தன் அடையாளத்தை இழந்தது.
விளக்கத்தையளித்த இரா.செகுவுக்குப் பாராட்டுகள்.
ஒரு பிழையைச் சுட்டிக்காட்டித் திருத்த உதவிய ராமகிருஷ்ண ஈஸ்வரனுக்கு நன்றி.
இப்புதிருக்கு வந்த விடைகளைக் காண இங்கே செல்லவும்.
Comments