திரிவெடி 46 விடைகள்
நேற்று திரிவெடியில் இடம் பெற்ற ஐந்து சொற்கள்:
மணி, குழி, பலம், மேடு, காதம்
சேராத சொல் "மேடு". மற்றவற்றை இணைக்கும் திரி: அவையெல்லாம் அளக்கும் அலகைக் குறிக்கும் சொற்கள்.
மணி (60 நிமிடங்கள் கொண்ட) கால அளவையும்,
குழி 144 சதுர அடி கொண்ட நிலத்தின் பரப்பளவையும்,
காதம் சுமார் 17 கிலோமீட்டர் தூர அளவையும், பலம் ஏலக்காய் வாங்குமளவிற்கு சிறிய எடையளவையும் குறிக்கும்.
அது ஏன் ஏலக்காய்? மீனாக்ஷி அம்மாளின் சமைத்துப்பார் புத்தகத்தில் அக்காலத்திய எடையளவுகள் கொடுக்கப்படும். படித்துப்பாருங்கள். எனக்கு யூடியூப் பாடம் தான் சமையல் தெரிந்து கொள்ள என்பவர்கள் ரோசாப்பூ ரவிக்கைக்காரி (1979) என்ற படத்தில் வரும் "வெத்தலை வெத்தலை வெத்தலையோ" பாடலைத் தேடிக் கேட்கவும். அதில் ஒரு பாட்டி, பாட்டின் நடுவே எஸ்பிபியிடம் ஆப்பத்துக்கு மூணு பலம் ஏலக்காய் வாங்கிவரச் சொல்வார்.
இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம்.
Comments