Skip to main content

திரிவெடி 44 விடை



இவ்வாரத்திய திரிவெடிகளில்  புராணப் பெண்கள் ஐந்து பெயர் அளிக்கப்பட்டிருந்தது.

அதிதி, மேனகா, அகல்யா, ரேணுகா, அருந்ததி

 சப்த ரிஷிகளில் ஐவரிகளின் பத்தினிகள் அவர்கள்.
 மேனகா, விஸ்வாமித்திரரின் மனைவி (அவர்களுக்குத்தான் சகுந்தலை மகளாகப் பிறந்தாள்).
அகல்யா, கவுதமரின் மனைவி (கல்லாகிக் கிட என்று அருமைக் கணவனால் சபிக்கப்பட்டு ராமர் மூலம் மீண்டும் உயிர்த்தெழுந்தவள்)
ரேணுகா தேவி, ஜமதக்னி என்ற ரிஷியின் மனைவி, அதிதி கஸ்யபரின் மனைவி;  (அவர்களைப் பற்றிய கதை எதுவும் எனக்குத் தெரியாது).


அருந்ததி, வசிஷ்டரின் மனைவி.
இந்த சப்தரிஷிகளின் மனைவிமார்களோடு அக்னி பகவான்- ஸ்வாஹா தேவி எல்லோரையும் சேர்த்த கதை ஒன்று இருக்கிறது.
அதைத் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள். அக்கதை முடிவில் வசிஷ்டரின் மனைவி அருந்ததி மட்டும் கற்பில் உயர்ந்தவள் என்ற முடிவுக்கு வருகிறார்கள். வான மண்டலத்தில் அவள் மட்டும் கணவனுடன் இருக்கும் தகுதியைத் தக்க வைத்துக் கொள்கிறாள். அதனால் அருந்ததி பிற ரிஷி பத்தினிகளிலிருந்து வேறுபட்டவர்.

Ursa Major/Big Bear  என்று  ஆங்கிலத்தில் அழைக்கப்படும் சப்தரிஷி மண்டலத்தில் Alcor-Mizar என்ற இரட்டை(binary star)  நட்சத்திரமாகப் பார்க்கலாம்.

 அதனால்தான் கல்யாணத்தில் அருந்தததி நட்சத்திரத்தைப் பார்த்தால் தம்பதியர்கள் சேர்ந்தே இருப்பார்கள் என்று சொல்கிறார்கள். அதுசரி வட இந்தியக் கல்யாணத்தில் நடுராத்திரியில் பார்க்கலாம்.   நம் ஊரில் எப்படி?

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

Popular posts from this blog

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்

திருத்திய உதிரிவெடி 4306

   உதிரிவெடி 4306 (ஆகஸ்டு  11, 2024) வாஞ்சிநாதன் ************************* மூன்று பேர் அனுப்பிய விடைகளில், பத்மா, வானதி இருவரும் ஓரளவுக்கு நெருங்கி வந்திருக்கிறார்கள். சற்றே மாற்றிய வடிவத்தில் இப்புதிர் சிக்கும் என்று நினைக்கிறேன்.   கொடி மானம் பெருமையில்லாப்   பெருமையிழந்து  ப,க,ட்,டு,க்,கு  உதாரணங்கள் (5)    இன்று (திங்கள்) இரவு 9 மணிக்கு விடைகள் வெளிவரும்.   உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்

உதிரிவெடி 4294

உதிரிவெடி 4294 (மே 19, 2024) வாஞ்சிநாதன் ************************* வெளியூர் செல்வதால் யோசிக்க நேரமின்றி இந்த புளித்த‌ மாவை கருவேப்பிலை, நறுக்கிய வெங்காயத் துண்டுகள் போட்டு தோசையை வேறுவிதமாகச் சுட்டிருக்கிறேன்: தொண்டை பெரிதாகத் தோன்றும்படி மொட்டை தலையில் சூடு (5)   விடைகள் நாளை காலை 6 மணிக்கு வெளியிடப்படும் உங்கள் விடையை இடுவதற்கு இங்கே சொடுக்கி வேறிடம் செல்லவும்