Skip to main content

திரிவெடி 42 விடை


 நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்

கெண்டை, மண்டை, செண்டை,  தண்டை,  சுண்டை

1. எல்லா சொற்களும் "டை" கொண்டு முடிகின்றன. அதை "டு" என்று மாற்றினாலும் பொருள் தருபவை இதோ:
மண்டை:  மண்டு
செண்டை: செண்டு,  
தண்டை: தண்டு,  
சுண்டை: சுண்டு

கெண்டை இதனுடன் சேராத சொல். பானுமதிக்கு பாராட்டுகள்

திருத்தம்:
குணா எடுத்துக் காட்டிய ஆதாரத்தின் படி "
கெண்டு" என்றும் ஒரு சொல் இருக்கிறது. அந்த சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க அகராதியைத் தேடிப் போகிறேன்.



2. அல்லது "டி" என்று முடித்தாலும்பொருள் தரும் என்கிறார் அருள்.
கெண்டை: கெண்டி
மண்டை: மண்டி
தண்டை: தண்டி
சுண்டை: சுண்டி

இவ்வகையில் சேராத சொல், செண்டை

இதில் தண்டி என்றால் மிகுதி என்பதை இன்று தெரிந்துகொண்டேன். 

பாராட்டுகள்  அருள்.

3. இன்னொரு விடை "ண்டை" என்ற இரண்டு எழுத்துகளையும் நீக்கி  "டு" சேர்க்கவும் பொருள் கிடைக்கும் என்கிறது

கெண்டை: கெடு
மண்டை:  மடு
தண்டை: தடு,
சுண்டை: சுடு
 அதன்படி சேராத சொல் செண்டை. பாராட்டுகள் அம்பிகா.

 இப்புதிருக்கு விடையளித்தவர்கள் பட்டியலை இங்கே காணலாம். 

Comments

GUNA said…
இல்லை தமிழில் இதுவென 'கெண்டு'பற்றிச்
சொல்லியது கண்டு திகைப்புற்றேன் - சொல்லதனை
ஏற்ற புலவர்கள் ஏராளம், ஏற்றிடுவீர்
மாற்றுக் கருத்தை மதித்து
-----------------------------------------------------------------------------
-வில்லி பாரதம்

செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான்
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்
--------------------------------------------------------------------------------
-திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை

தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம்
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே
-----------------------------------------------------------------------------------------------------------
GUNA said…
மேலும் சில சான்றுகள்

 திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை

வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள்
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே

-----------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை

வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே
Vanchinathan said…
அப்படியா கெண்டு என்று ஒரு சொல் இருக்கிறதா? சான்றுகளை முழுமையாகக் காட்டியதற்கு நன்றி குணா.
தீர்ப்பை மாற்றியெழுத வேண்டியதுதான்.
GUNA said…
வழுவமைதி என்னும் விதியுண்டு  தானே
அழகுத் தமிழில், அதனால் - எழுதிய
தீர்ப்பினை மாற்றுதல் தேவை யிலாதது
யார்க்கும் பொருந்தும் இது.

Popular posts from this blog

வலையுலகில் ஒளிந்துள்ள புதிர்ப் பக்கங்கள்

வாட்ஸப்பிலிருந்து வலைப்பதிவுக்கு உதிரிவெடி குடி மாறி ஒரு மாதம் முடித்து விட்டது. வலையில் பல வருடங்களாகப் புதிர் அளிப்பவர்கள் பலர் இருக்கின்றனர்.  நான் அளிக்கும் இந்த சில்லறையெல்லாம் போதாது, கற்றை கற்றையாக இருந்தால் நல்லா இருக்குமே என்று நினைப்பவர்களுக்கு இப்பதிவு: 1. இலவசக் கொத்தனார்  2008ஆம் ஆண்டில் பல புதிர்கள் செய்திருக்கிறார். இந்த (cryptic clues)  வெடிகளைப் புதைபுதிர்  என்று அழகானப் பெயரை முன்மொழிந்தவர் அவரே. இங்கே தொடங்கித் தேடவும்: http://elavasam.blogspot.in/2008/08/blog-post.html பதம் பார்க்க ஒன்று:   வயதானால் தெரியும் தன் விலாசம் (4) 2. அபாகு‍ பார்த்தசாரதி நூற்றுக்கும் மேற்பட்ட புதிர்கள் செய்துள்ளார். ஆங்கிலப்புதிர்கள் குறித்தும் அவர் நிறைய எழுதியுள்ளார். அவருடைய வலை முகவரி: http://www.sparthasarathy.com/crosswords/indexcw_tamil.html#current அவருடைய கைவண்ணத்தில் உருவான மாதிரிகள் இரண்டு: கடை பாசந்தி விலை அதிகம் என்றாலும் சுவை குன்றாது (5) முதல் சாரணனுக்கு உதவித்தொகை கிடைப்பது எளிது (5) 3. முத்து சுப்ரமண்யம் சொல்கலை, கலைமொழி என்று பலவ...

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு

தீபாவளிக்காக ஒரு விநோத சொல் விளையாட்டு    வாஞ்சிநாதன் இன்றைய விசேஷப்புதிரில்  ஒற்றை  வாக்கியத்தைக் கண்டுபிடிப்பதுதான் உங்கள் வேலை. அதில் சில சொற்களை அப்படியே தந்திருக்கிறேன். மற்ற சொற்களுக்கு மாற்று தந்திருக்கிறேன். அவற்றை மாற்றி வாக்கியத்தை எழுதவேண்டும். எந்த வார்த்தைகள் மாற்ற வேண்டியவை என்பதை அவை பின்னே  ஆங்கில எழுத்துகள் A,B,C,D, E மூலம் காட்டியிருக்கிறேன். நீங்கள் மாற்றிக் கண்டு பிடிக்க வேண்டிய விடைச் சொற்கள் ஐந்துக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது. அதைக் கண்டுபிடிப்பதும் சுவாரசியமாக இருக்கும். உங்களால் அந்த ஒற்றுமையைக் காண முடியவில்லை என்றால் பெரும்பாலும் உங்கள் விடை தவறாக இருக்க வாய்ப்பிருக்கிறது.  அல்லது  இரண்டு கோடி பரிசை வென்ற பின்னும் இன்னமும் எனக்கு ஒரு கோடி கிடைக்கவில்லையே என்று எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்! விடைகள் ஒவ்வொன்றும் ஒற்றைச் சொல்லா என்று சந்தேகம் வந்தால் இதை மனதில் கொள்ளுங்கள்: "கொஞ்சங்கூட"  என்பது போல் சேர்த்தெழுதி  ஒற்றைச் சொல் போல எண்ணலாம். இதோ அந்த புதிர் விளையாட்டு:   ஒரு கணிதமேதைக்குத் தூண்டுதலான ...

விடை 3488

இன்று காலை வெளியான வெடி: வீட்டுப் பகுதி புலி விரட்டிய கருவியில் நாற்று நடு (4) இதற்கான விடை:  முற்றம் = முறம் + ற்