நேற்றைய புதிரில் இடம் பெற்ற சொற்கள்
கெண்டை, மண்டை, செண்டை, தண்டை, சுண்டை
1. எல்லா சொற்களும் "டை" கொண்டு முடிகின்றன. அதை "டு" என்று மாற்றினாலும் பொருள் தருபவை இதோ:
மண்டை: மண்டு
செண்டை: செண்டு,
தண்டை: தண்டு,
சுண்டை: சுண்டுகெண்டை இதனுடன் சேராத சொல். பானுமதிக்கு பாராட்டுகள்
திருத்தம்:
குணா எடுத்துக் காட்டிய ஆதாரத்தின் படி "கெண்டு" என்றும் ஒரு சொல் இருக்கிறது. அந்த சொல்லின் பொருளைக் கண்டுபிடிக்க அகராதியைத் தேடிப் போகிறேன்.
2. அல்லது "டி" என்று முடித்தாலும்பொருள் தரும் என்கிறார் அருள்.
கெண்டை: கெண்டி
மண்டை: மண்டி
தண்டை: தண்டி
சுண்டை: சுண்டி
இவ்வகையில் சேராத சொல், செண்டை
இதில் தண்டி என்றால் மிகுதி என்பதை இன்று தெரிந்துகொண்டேன்.
பாராட்டுகள் அருள்.
3. இன்னொரு விடை "ண்டை" என்ற இரண்டு எழுத்துகளையும் நீக்கி "டு" சேர்க்கவும் பொருள் கிடைக்கும் என்கிறது
கெண்டை: கெடு
மண்டை: மடு
தண்டை: தடு,
சுண்டை: சுடு
அதன்படி சேராத சொல் செண்டை. பாராட்டுகள் அம்பிகா.
Comments
சொல்லியது கண்டு திகைப்புற்றேன் - சொல்லதனை
ஏற்ற புலவர்கள் ஏராளம், ஏற்றிடுவீர்
மாற்றுக் கருத்தை மதித்து
-----------------------------------------------------------------------------
-வில்லி பாரதம்
செண்டினால் வசுகிரி திரித்திடு செழியன் என்ன எடுத்த கை
தண்டினால் எதிர் சென்று தேர் அணி திரிய வன்பொடு சாடினான்
மண்டினார் மணி முடியும் வேழமும் வாசியும் பல துணிபட
கெண்டினான் முனை நின்ற பன்னககேதுவோடு அமர் மோதினான்
--------------------------------------------------------------------------------
-திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை
தொண்டர் மிண்டி புகை விம்மு சாந்தும் கமழ் துணையலும்
கொண்டு கண்டார் குறிப்பு உணர நின்ற குழகன் இடம்
தெண் திரை பூம் புனல் அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கெண்டுற்று இசை பயிலும் சோலை மதிமுத்தமே
-----------------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை
வம்பு அலரும் மலர் கோதை பாகம் மகிழ் மைந்தனும்
செம்பவள திரு மேனி வெண் நீறு அணி செல்வனும்
கொம்பு அமரும் மலர் வண்டு கெண்டும் திரு கோட்டாற்றுள்
நம்பன் என பணிவார்க்கு அருள்செய் எங்கள் நாதனே
-----------------------------------------------------------------------------------------------------
திருஞானசம்பந்தர் - தேவாரம் - 3. மூன்றாம் திருமுறை
வெம் சின வாள் அரக்கன் வரையை விறலால் எடுத்தான் தோள்
அஞ்சும் ஒரு ஆறு இரு_நான்கும் ஒன்றும் அடர்த்தார் அழகு ஆய
நஞ்சு இருள் கண்டத்து நாதர் என்றும் நணுகும் இடம்-போலும்
மஞ்சு உலவும் பொழில் வண்டு கெண்டும் வலஞ்சுழி மா நகரே
தீர்ப்பை மாற்றியெழுத வேண்டியதுதான்.
அழகுத் தமிழில், அதனால் - எழுதிய
தீர்ப்பினை மாற்றுதல் தேவை யிலாதது
யார்க்கும் பொருந்தும் இது.